உயிரோடு விளையாடு அசுரா..!!

This entry is part 38 of 40 in the series உயிரோடு விளையாடு அசுரா

உயிரோடு விளையாடு அசுரா

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!



 
உயிர் – 43 
 
“நா.. நான் சாகக் கூடாது.. நோ… நான் சாகக் கூடாது.. நான் சாக மாட்டேன்.. நான் சாகக் கூடாது.” என மறுபடியும் மறுபடியும் உயிர் பயத்தில் உருப்போடத் தொடங்கினான் சித்தார்த்.

“உயிர் மேல அவ்ளோ ஆசையா கண்ணா..?” என எள்ளலாகக் கேட்டான் பீமா. அவனுக்கோ அவர்களைப் பார்க்க அத்தனை திருப்தியாக இருந்தது.

“உன்னோட சொத்து முழுக்க இப்ப என்னோட கண்ட்ரோல்ல இருக்கு.  உன்னோட வீடு, கெஸ்ட் ஹவுஸ், கார் உனக்கு சொந்தமான எல்லாத்தையுமே உங்க அப்பாகிட்ட இருந்து எழுதி வாங்கிக்கிட்டேன். உங்க கம்பெனியை லாஸாக வச்சதே நான்தான். ஹெல்ப் பண்ற மாதிரி உங்களுடைய எல்லா ஷேர்ஸையும் வாங்கினதும் நான்தான்.
 டேக்ஓவர் பண்ற மாதிரி மொத்த பணத்தையும் சுருட்டினதும் நான்தான்.” என்ற பீமாவின் வார்த்தைகளில் ஏமாற்றமும் ஆத்திரமும் தாங்காது எழுந்த சித்தார்த்தோ அவனை அடிக்கப் பாய, 
அவனுடைய தலையை தன் ஒற்றைக் கரத்தால் பற்றி ஓங்கி அங்கிருந்த மேஜையில் அடித்தான் பீமா.  

“டேய் ×××××× ××××××× கை ஓங்குற வேலையை என்கிட்ட வச்சுக்காத அடிச்சே கொன்னுடுவேன்.” என பற்களை கடித்தவாறு அவன் அளவற்ற சீற்றத்தில் உறும, சித்தார்த்தின் கபாலமோ பிளந்து உதிரம் வழியத் தொடங்கியது. 

“ஆஆஆஆ ஐயோஓஓ…” என அலறினான் அவன்.

சித்தார்த்தின் நிலையைப் பார்த்த தீபக்கோ பசை போட்டு ஒட்டியதைப் போல அந்த இருக்கையுடன் ஒன்றிக் கொண்டான். 

சித்தார்த்தைப் போல எழுந்து அடி வாங்குவதற்கு அவன் உடலில் சற்றும் தைரியம் இல்லை. எதற்கு வம்பு என எண்ணியவன் சித்தார்த் அடி வாங்கும் போது கூட அசையவே இல்லை. வேடிக்கை பார்ப்பவனை போல அமைதியாக இருந்து கொண்டான்.

அதே நேரம் பீமாவின் கரத்தை சுரண்டினாள் முகி.

“என்னடி…?”

தீபக்கை நோக்கி கை காட்டியவள், “இவனுக்கும் அடிங்களேன் பீமா. இவன் மட்டும் கம்மியா அடி வாங்கிட்டு கமுக்கமா இருக்கான்.” என போட்டுக் கொடுக்க, தீபக்கோ “அடிப்பாவி…” என உள்ளுக்குள் அலறினான்.

அடுத்த கணம் “தேவியின் ஆசையே என்னுடைய செயல்.” என மன்னர் பாணியில் கூறியவன் தீபக் சுதாரிக்கும் முன் அவனுடைய தலையைப் பற்றி  அந்த மேஜை மீது ஓங்கி அடிக்க, படார் என்ற சத்தத்தோடு அந்த மேஜை உடைந்து நொறுங்கியது.

இப்போது சித்தார்த்திற்குப் போட்டியாக தீபக்கும் வலியால் அலறினான்.
 திருப்தியாக புன்னகைத்தாள் முகி.

தரையில் வலி தாங்காது துடித்தவாறு கிடந்த சித்தார்த்தைப் பார்த்தவன், “கமான் சித்தார்த் எழுந்து உட்காரு. நாம பேச வேண்டியது இன்னும் நிறைய இருக்கு. இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ உனக்குத் தெரியனுமே. அதை எல்லாம் எப்படித் தாங்கப் போற..?” என எள்ளல் குரலில் நகையாடினான் பீமா.

‘இன்னும் எவ்வளவோ இருக்கு..’ என்ற வார்த்தைகளில் சித்தார்த்தின் முதுகுத்தண்டோ சில்லிட்டுப் போனது.
தீபக்கோ பீமாவை பயத்துடன் பார்த்தவன், “எ… எங்களை கொல்லப் போறியா..?” எனக் கேட்டான். 

“நோ…..” என உடனடியாக மறுத்தான் பீமா. 

“நான் உங்களை கொல்ல மாட்டேன். இந்த இடத்தை விட்டு நீங்க ரெண்டு பேரும் தாராளமா உயிரோட போகலாம்.” என்றான் பீமா. 

பீமாவின் வார்த்தைகளில் முகியின் முகமோ மாறிப்போனது. கோபமாக எதையோ கூற வந்தவளின் கரத்தை அழுத்தமாக பற்றித் தடுத்தவன் சித்தார்த்தையும் தீபக்கையும் கூர்மையாகப் பார்த்தான்.

“இல்ல நீ பொய் சொல்ற… எங்களை கொலை பண்றதுக்காகத்தானே வந்திருக்க. ஆல்ரெடி கிஷோரையும் ரவியையும் கொண்டவன் தானே நீ.” என்றான் தீபக்.

“அவங்க அவங்க செஞ்சதை பொறுத்து ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாக தண்டனை கொடுத்தேன். என் அம்முவோட கொலை விஷயத்துல கிஷோரோட பங்கு ரொம்ப கம்மிதான். அதனாலதான் அவனை ஷூட் பண்ணி கொன்னேன். ரவி என் அம்முவோட உடம்புல கண்ணாடிப் போத்தலை உடைச்சு அவ உடம்புல காயத்தை வர வெச்சான். அதனாலதான் அவனை ஒவ்வொரு இடத்திலையும் வெட்டி வெட்டித் துண்டாக்கிக் கொன்னேன். ருத்ராக்கு ஸ்பெஷலா ஒரு தண்டனை வெச்சிருந்தேன். பட் நீயே அவளைக் கொன்னு என்னோட பாதி வேலையை குறைச்சிட்ட.

பட் இவனுங்க ரெண்டு பேரையும் விட ரொம்ப அதிகமா கொடுமைப்படுத்தின உங்களை கொல்றதுக்கு எனக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லைடா.” என்றதும் சித்தார்த்தும் தீபக்கும் அதிர்ந்து விழித்தனர்.

சித்தார்த்தோ நடுங்கிய குரலில் “புரியலை…” என்றான்.

“புரியலையா….? நோ ப்ராப்ளம்… இன்னும் கொஞ்ச நேரத்துல தெளிவா புரிஞ்சிடும். என்னைப் பொறுத்த வரைக்கும் மரணம் ஒரு விடுதலைதான். அந்த விடுதலையைக் கொடுத்து உங்களை அவ்ளோ ஈஸியா இந்த உலகத்துல இருந்து அனுப்பி வைக்க நான் என்ன முட்டாளா..? ஹாங்…? நான் என்ன முட்டாளா ஆஆ…?” எனக் கர்ஜித்தான் அவன்.

பயத்தில் எச்சில் விழுங்கினான் தீபக்.

“நீங்க ரெண்டு பேரும் உயிரோட இருக்கணும். உயிரோட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் நரகம்னா என்னன்னு அனுபவிக்கணும். அடுத்த வேலை சாப்பாட்டுக்கு கூட பிச்சை எடுத்து ரோட் ரோட்டா திரியணும். அடுத்தவங்க பார்வைக்கு ஈனப்பிறவி மாதிரி நீங்க தெரியணும்.” என பீமா கூறிக் கொண்டே போக, தீபக் ஒரு கட்டத்தில் தாங்க முடியாது “உன் கனவுல கூட இதெல்லாம் நடக்காது..” எனக் கத்தினான்.

“வாட்…? கனவுல கூட நடக்காதா…? ஹா… ஹா… ஹா… நான் சொன்ன அவ்வளவும் நடக்கத்தான் போகுது.” எனச் சிரித்தான் பீமா. 

சித்தார்த்தோ தீபக்கை கிலியுடன் பார்த்தவன், “இ.. இல்ல மச்சான் இவன் என்னவோ பண்ணிட்டான்.. எதையோ பண்ணிட்டான்.” என கூறியதையே மறுபடியும் மறுபடியும் கூறத் தொடங்கினான். அவன் குரலோ பயத்தில் நடுங்கத் தொடங்கியது.

“எ.. என்னடா பண்ணின..? சொல்லுடா… என்னடா பண்ணின..? நீ என்னவோ பண்ணிட்ட.. எனக்கு தெரியும்… என்னவோ பண்ணிட்ட..” என பயத்தில் உடல் வெடவெடத்தவனைப் பார்த்து சிரித்த பீமாவோ ஆம் என தலையசைத்தான். 

அந்த ஒற்றைத் தலை அசைப்பில் அந்தக் கயவர்களுக்கோ உயிர் வரை ஆட்டம் கண்டது.

“பெருசா ஒன்னும் பண்ணலடா. ஜஸ்ட் சின்ன வைரஸ்ஸை உங்க உடம்புக்குள்ள அனுப்பிட்டேன். அவ்வளவுதான். வேற ஒன்னும் பெருசா பண்ணல.” எனத் தன் தலையை கோதியவாறு இதழ்கள் சிரிப்பில் துடிக்கக் கூறினான் பீமா. 

அவர்களோ வைரஸ் என்றதும் அதிர்ந்து விழித்தனர். 

தீபக்கோ குரல் கமர விழிகள் அச்சத்தில் சிவக்க, “எ… என்ன வைரஸ்..?” என நடுக்கத்தோடு கேட்டான்.

“சிம்பிள்… எல்லாருக்கும் தெரிஞ்ச வைரஸ்தான். எச்.ஐ.வி வைரஸ்.” என்றதும் அலறியே விட்டான் சித்தார்த். தீபக்கோ இருக்கையில் இருந்து நடுக்கத்தோடு எழுந்தவன்,

“இ… இல்ல இல்ல… நீ எங்களை பயமுறுத்திப் பார்க்குற. அப்படியெல்லாம் எச்.ஐ.வி வைரஸ்ஸை பரப்ப முடியாது. சித்து இவன் நம்மள குழப்புறான். நீ நம்பாத.” எனக் கத்தினான் தீபக்.

“அடடா இந்த மாதிரி நேரத்துல யாராவது பொய் சொல்லுவாங்களா மிஸ்டர் தீபக்..? சரி விடுங்க. முகியோட கல்யாணத்துக்கு முதல் நாள் நீங்க ரெண்டு பேரும் ஜாக்கிங் போனப்போ உங்களை ஒரு பிளாக் கலர் நாய் துரத்தித் துரத்தி கடிச்சுதே ஞாபகம் இருக்கா..?” எனக் கேட்க, அந்த கேள்வியில் அதிர்ந்தவர்கள் ஆமெனத் தலையசைக்க, “அது என்னோட நாய் தான்.” என்றான் பீமா.

அவர்களோ கண்ணில் கலவரத்தோடு புரியாது விழிக்க,

“இன்னும் புரியலையா…? கிஷோர் ரவிக்கு முன்னாடியே நான் உங்களை தண்டிக்க ஆரம்பிச்சிட்டேன். என்னோட முதல் டார்கெட்டே நீங்கதான்டா. முதல் தண்டனையை உங்களுக்குத்தான் கொடுத்தேன். இப்ப வரைக்கும் நீங்க அதை அனுபவிச்சுக்கிட்டுதான் இருக்கீங்க. என்ன அது உங்களுக்கே தெரியல.” என்றவன் அவர்களுடைய அச்சப் பார்வையைக் கண்டு ரசித்தான்.

“நாய் கடிச்சதுக்காக நீங்க ஒவ்வொரு முறையும் போட்ட இன்ஜெக்ஷன், எய்ட்ஸ் நோயால பாதிக்கப்பட்ட ஒருத்தருக்கு போட்ட இன்ஜெக்ஷன்தான். எச்.ஐ.வி வைரஸால பாதிக்கப்பட்ட நோயாளிக்கு போட்ட ஊசியை எடுத்து உங்களுக்கு இன்ஜெக்ட் பண்ண வச்சேன். ஒரு தடவையோ ரெண்டு தடவையோ இல்லை. மொத்தமா நாலு தடவை நீயும் தீபக்கும் அந்த இன்ஜெக்ஷனைத்தான் போட்டுக்கிட்டீங்க.” என்றதும் பேச்சு மூச்சின்றி உறைந்து போனார்கள் அவர்கள்.

அந்த நேரத்தில் அவர்களுடைய மூளையோ செயலற்று போனதைப் போல இருந்தது. இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது..? எப்படிக் கோபப்படுவது.?  எனத் தெரியாது உறைந்து போய் இருந்தார்கள். 
 அவர்களால் சுண்டு விரலைக் கூட பீமாவுக்கு எதிராக உயர்த்த முடியாது ஸ்தம்பித்து போய் இருந்தனர்.

முகியோ வாயில் தன் கரத்தை பதித்தவாறு அதிர்ந்து போய் இருந்தாள். அவள் இதை சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. இதை விட சிறந்த தண்டனை இல்லை என்பதும் அவளுக்குப் புரிந்தது.

“எச்.ஐ.வி தொற்றுள்ள ஒருத்தரோட இன்ஜெக்ஷனை மத்தவங்க யூஸ் பண்ணா அவங்களுக்கு கண்டிப்பா அந்த வைரஸ் தொத்திக்கும். அதுவும் நீங்க ஒரு தடவை இல்ல நாலு தடவை அதை யூஸ் பண்ணிருக்கீங்க. சோ உங்களுக்கு 99% கண்டிப்பா இந்த வைரஸ் உங்க உடம்புக்குள்ள வந்திருக்கும். பட் அந்த ஒரு வீதம் இதுல வராம மிஸ் ஆயிடக்கூடாதில்ல அதுக்காக நான் அனுப்பி வச்சவதான் மதுரா.” என்றதும் தீபக்கின் விழிகளோ பிதுங்கிப் போனது. 

சித்தார்த்திற்கோ மாரடைப்பு வந்தாற் போல நெஞ்சமெல்லாம் வலி எடுக்க, தன்  மார்பை அழுத்தமாக வருடியவன், கை கால் உடைந்து ஊனமானவனைப் போல பீமாவை மிரட்சியாகப் பார்த்தான்.

“இப்போ நீங்க சரியா கெஸ் பண்ணி இருப்பீங்கன்னு நினைக்கிறேன். நீங்க நினைக்கிறது சரிதான். மதுரா நான் அனுப்பி வெச்சவ பொண்ணுதான். இந்த மூணு நாளும் அவ கூட ரொம்ப சந்தோஷமா இருந்தீங்க போல கிரேட் கிரேட். அவளும் ஒரு எய்ட்ஸ் நோயாளி தான். உங்களுக்காகவே ரொம்ப சிரமப்பட்டு தேடிக் கண்டுபிடிச்சேன். 

ஒரு சின்ன பொண்ணைக் கொஞ்சம் கூட பாவம் பார்க்காம அவளை சிதைச்சு வதைச்சு கொலை பண்ண உங்களுக்கு ஈஸியா சாவைக் கொடுத்துருவேன்னு எப்படி நினைச்சீங்க? நீங்க வாழ்ற ஒவ்வொரு நொடியையும் நரகத்தில் வாழனும்டா. உங்க உயிர் மேல உங்களுக்கு அவ்வளவு ஆசைன்னு எனக்கு நல்லாவே தெரியும். 

ஒன்னு நீங்களே சூசைட் பண்ணிக்கணும். இல்லன்னா கடைசி வரைக்கும் இந்த நோயால சீரழிஞ்சு செத்துப் போகணும். சாய்ஸ் இஸ் யுவர்ஸ். சாகறதுக்கு கூட ஒரு தைரியம் வேணும்ல. அந்த தைரியம் உங்ககிட்ட சுத்தமா கிடையாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். சோ கடைசி வரைக்கும் இந்த வைரஸ் கூடவே வாழ்ந்து சீரழிஞ்சி அழுகிப்போய் அநாதையா செத்துப் போங்கடா.” என்றான் பீமா.

சித்தார்த்தோ இடிந்து போய் உலகமே அழிந்தாற் போல அமர்ந்திருக்க, தீபக்கோ முகத்தை மூடிக்கொண்டு கதறிக் கதறி அழத் தொடங்கினான்.

“இந்த வைரஸ் உங்க உடம்புக்குள்ள போய் கொஞ்சம் கொஞ்சமா உங்களோட இம்யூனிட்டி பவரை அழிக்க ஆரம்பிக்கும். அதுக்கப்புறம் சளி பிடிக்கும், வெயிட் லாஸ் ஆகும். மூச்சு விடக்கூட சிரமமா இருக்கும். அடிக்கடி காய்ச்சல் வந்து குணமாகாம பாடாப் படுத்தும். உடம்புல சொல்ல முடியாத இடத்துல எல்லாம் கட்டி கட்டியா வரும். 

வாயில புண் வரும், நாக்கெல்லாம் எரிச்சலா இருக்கும். சாப்பிடக் கூட கஷ்டமா இருக்கும். கண்ட நேரத்துல இருமல் வந்து பாடா படுத்தும்,  பசிக்காது. வயிற்றுப்போக்குல உயிரே போகும். வாமிட் வரும். டயர்டா இருப்பீங்க. அரிப்பு ஏற்படும். பால் உண்ணி வரும். தீராத தலைவலி வந்து தொல்லையா இருக்கும். கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமா மங்கிப் போகும். கழுத்து வலிக்கும். இடுப்பு வலிக்கும். கை காலெல்லாம் கழண்டு போன மாதிரி வலி எடுக்கும். 

வலிப்புக் காய்ச்சல் கூட வரும். இன்னும் கொஞ்சம் போச்சுன்னா சுயநினைவு கூட இல்லாமப் போகும். இதெல்லாம் ஜஸ்ட் ஆரம்ப கட்டம்தான். சந்தர்ப்பவாத நோய்கள்னு சொல்லுவாங்க. இதுக்கப்புறம்தான் உண்மையான ஆப்பே ஆரம்பமாகும்.

இந்த எச்.ஐ.வி வைரஸ் போகப் போக எய்ட்ஸ்ஸா மாறும். சொல்ல முடியாத அளவுக்கு தொடர்ந்து எல்லா நோய்களும் நம்ம உடம்புல சாரி உங்க உடம்புல வரும். 

அந்த நோயை எதிர்த்து போராடுறதுக்கு  உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி இல்லாம துவண்டு கிழிஞ்சு போனா நாரா சீழ் வடிஞ்சு ரொம்ப கேவலமா சாகப் போறீங்கடா… ப்பாஆஆஆஆ சொல்லும் போதே என்னோட நாக்கெல்லாம் தித்திக்குதே.” என்றான் பீமா.

முகியோ எழுந்து நின்று விசிலே அடித்தாள்.

💜💙💙💜

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *