உயிரோடு விளையாடு அசுரா..!!

This entry is part 23 of 40 in the series உயிரோடு விளையாடு அசுரா

உயிரோடு விளையாடு அசுரா

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!



உயிர் – 24
 
“உன்ன எப்போ பார்ப்பேன்னு தெரியல. இனி பார்ப்பேனான்னும் தெரியல முகி. ஆனா இந்த நிமிஷம் உன்கூட நான் இருக்கணும்னு ஆசைப் படுறேன். ஒவ்வொரு நொடியும் உன்னை நான் உணர்ந்துகிட்டே இருக்கணும் போல இருக்குடி. ஏன் எதுக்குன்னு சத்தியமா எனக்கே தெரியல.” என்ற பீமாவின் வார்த்தைகளில் அவளுடைய மறுப்பு நின்று போனது.

“இங்க இருக்க எல்லாரும் என்னை ஏமாத்திட்டாங்க..” என அவன் அன்று கூறிய வார்த்தைகள் மீண்டும் அவளுடைய ஞாபக அடுக்கில் தோன்றி செவிதனில் நுழைய, அமைதியாகிப் போனாள் அவள்.

உண்மைதானே எல்லோரும் சேர்ந்து திட்டம் போட்டு பீமாவை வஞ்சித்து விட்டார்களே என எண்ணியவள் தனக்குள் மருகினாள்.

விளைவு அவளுடைய மறுப்பு சுத்தமாக நின்று போனது.

மங்கையவளின் மறுப்போ நின்றுவிட,  பீமாவின் வருடல்களோ அதிகமாகிப் போயின. அவளின் மீது முழுதாகப் படர்ந்தவன் அவளை முத்தத்தால் குளிப்பாட்டினான்.

அவனுடைய  தடித்த அதரங்களோ அவளுடைய உச்சியில் தொடங்கி, கழுத்தை வருடி, மார்புக் குழியில் இளைப்பாறி இடையில் தஞ்சம் புக, அவளுடைய மூடிய விழிகள் மாத்திரம் கண்ணீரை உகுத்துக் கொண்டே இருந்தன.

அவனுடைய இதழ்களோ இளையவளின் இடையில் முத்தாடிவிட்டு மீண்டும் அவளுடைய மார்பில் புதைந்தன.
அவளுக்கோ உடல் வெடவெடக்கத் தொடங்கியது. 

தன்னுடைய தீண்டலில் வெடவெடத்து போன அவளுடைய உடலை உணர்ந்து கொண்டவன் அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான். 

“சாரி முகி….” என்றவனின் உதடுகள் அவளுடைய கன்னத்தில் பதிந்தன.
 அக்கணம் அவனுடைய உதடுகள்  கண்ணீர்ச் சுவையை உணர,
சட்டென அவனுடைய விழிகள் உயர்ந்து அவளுடைய வதனத்தை மீண்டும் நோக்கின. 

விழிகள் கலங்கி கண்ணீர் சிந்திய வண்ணம் படுத்திருந்தவளைக் கண்டதும் சட்டென விலகினான் அவன். 

அவன் விலகியது கூடத் தெரியாமல் கண்ணீர் வடிய அமைதியாக தரையில் படுத்து இருந்தளைப் பார்க்கப் பார்க்க அவனுக்குள் ஏதோ ஒன்று உடைந்து நொறுங்குவதைப் போல இருந்தது.

அவளுடைய அழுகையை அக்கணமே நிறுத்த வேண்டும் என அவனுடைய இதயம் அவனுக்கு கட்டளையிட அவளை கரம் பிடித்து எழுப்பி நிறுத்தினான்.

“இட்ஸ் ஓகே முகி. நீ உன்னோட ரூமுக்குப் போ.” என்றவன் அந்த மாடியின் கதவைத் திறந்து விட்டான். 

தன் விழிகளைத் துடைத்துக் கொண்டு எழுந்தவள் தன்னுடைய கலைந்த ஆடைகளை மளமளவென சரிபடுத்திக் கொண்டாள்.

அவனைத் தாண்டி படிகளில் இறங்கி நடக்க முற்பட்டவளுக்கு அங்கே பரவியிருந்த கும்மிருட்டைக் கண்டதும் உள்ளம் விதிர்விதிர்த்தது.

அவள் பாதி வழியிலேயே நிற்பதைப் பார்த்தவன் “போய்த் தூங்கு…” என மீண்டும் கூறினான்.

“ரூம் வரைக்கும் என் கூட நீங்களும் வர்றீங்களா…?” எனத் தயக்கமாகக் கேட்டவளை பெருமூச்சோடு பார்த்தவன் அவளை அழைத்துக் கொண்டு படிகளில் இறங்கத் தொடங்கினான். 

இருவருக்கும் இடையே பெருத்த அமைதியே நிலவியது.

அறைக்குள் நுழைந்த முகிலாஷியின் மனம் முழுவதும் பீமா தன்னுடைய சகோதரனையும் கொன்று விடுவானோ என்ற பயமே பரவியிருந்தது.

அவனோ அவள் மீது திடீரென பொங்கிப் பெருகிய உணர்வுகளை அடக்க முடியாது தன் தலையை அழுந்தக் கோதியவன் அவளுடைய முகத்தைக் கூடப் பார்க்காது அமைதியாக தன்னுடைய படுக்கையில் சென்று படுத்துக் கொண்டான்.

சற்று நேரம் தயங்கி நின்ற முகிலும் சிறிது நேரம் கழித்து அவன் அருகே வந்து படுத்துக்கொண்டாள்.

அவளுடைய உள்ளம் ஒவ்வொரு நொடியும் பதறிக் கொண்டே இருந்தது. ருத்ராவுடன் பேசியது தன்னுடைய சகோதரன் சித்தார்த்தன் என்பது புரிய, அவளுடைய மனமோ மிகுந்த வேதனையில் தத்தளித்தது.

‘அடுத்தது நீயா கூட இருக்கலாம்.’ என ருத்ரா கூறிய வார்த்தைகள் அவளை வதைக்க பீமாவின் முகத்தை திரும்பிப் பார்த்தாள் அவள்.

அவளையே இமை சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தவன் “என்னடி தூங்கலையா….?” எனக் கேட்டான்.

“தூ… தூக்கம் வரலை.” என மெல்லிய குரலில் கூறினாள் அவள். 

“ம்ம்….” என்றவனின் பார்வை மெல்லிய வெளிச்சத்தில் வரி வடிவமாகத் தெரிந்த முகியை வருடியது.

“பீ… பீமா….?”

“சொல்லு….”

“த…. தப்பு பண்ணவங்கள மன்னிக்க மாட்டீங்களா…?” என குரல் நடுங்கக் கேட்டாள் அவள். 

அவளுடைய கேள்வியில் அவனுடைய புருவங்கள் வில்லாய் வளைந்து உயர்ந்தன.

“ஏன் மன்னிக்கணும்..?” எனக் கேட்டான் அவன்.

சட்டென தன் வாயை இறுக மூடிக்கொண்டாள் அவள்.

“ஓவரா திங்க் பண்ணாம தூங்கு. நாளைக்கே நீ உன் வீட்டுக்குப் போகலாம்.” என்றான் பீமா.

“ம்ம்…. ஏன் உங்களுக்கு ருத்ராவை பிடிக்கல…?” எனத் தயங்கியவாறே அடுத்த கேள்வியைக் கேட்டாள் அவள்.

“எனக்கு துரோகியைப் பிடிக்காது.” என்றான் அவன்.

“அப்போ என்னைப் பிடிக்குமா…?” என அவள் கேட்டதும் சற்றும் சிந்தியாது “பிடிக்கும்….” எனக் கூறினான் பீமா.

அவன் பிடிக்கும் என்றதும் அதிர்ந்து விழித்தவள் “ஏன்…?” எனக் கேட்டாள்.
“ஏன்னா நீ என்னோட மனைவி..” என்றான் அவன்.

அந்த வார்த்தைகள் அவளுள் பெரும் தாக்கத்தை உண்டாக்கின.

விழிகள் கலங்கிப் போயின அவளுக்கு.
அவனோ அதன் பிறகு எதுவும் கூறாது அமைதியாக படுத்து விட, அவள்தான் பலவிதமான எண்ணங்களில் குழம்பித் தவித்துக் கொண்டிருந்தாள்.

“உனக்கு இன்னைக்கு என்னாச்சு..?” எனக் கேட்டான் அவன். 

வழமையாக படுத்ததும் சற்று நேரத்தில் உறங்கி விடுபவள் இன்று புரண்டு புரண்டு படுப்பதைக் கண்டு புருவம் சுருங்கக் கேட்டான் பீமா.

அவளோ அவனுடைய முகத்தைப் பார்த்து தயங்கியவாறே “நான் ஒன்னு கேட்பேன் உண்மைய சொல்லுவீங்களா…?” எனக் கேட்டாள்.

“ஹ்ம்ம்… சரி கேளு.” என்றான் அவன். 

“அ… அது வந்துஉ ரவி அண்ணாவை கொ.. கொலை ப.. ப்பண்ணது நீங்களா..?” எனத் திக்கித் திணறி கேட்டு முடித்தாள் அவள். 

அவளை ஒரு தரம் அழுத்தமாகப் பார்த்தவன் ஆம் எனத் தலையசைக்க அவளுக்கோ உடல் சட்டென வியர்த்துப் போனது.

பீமா தான் அத்தனை கொலைகளையும் செய்து கொண்டு வருகிறான் என்பதை அறிந்தவளுக்கு அடுத்து தன்னுடைய சகோதரன் தான் பலியாகப் போகிறான் என்பது புரிந்து போக, நடுங்கிப் போனாள் அவள். 

என்னதான் தவறு செய்திருந்தாலும் அது அவளுடைய சகோதரன் ஆயிற்றே.
 எங்கே தன்னுடைய சகோதரனுக்கு எதுவும் ஆகிவிடுமோ என அஞ்சி நடுங்கியவள் அவனைக் கெஞ்சும் பார்வை பார்த்தாள்.

சினத்திலும் பழி வெறியிலும் எரிமலையாக வெடித்துக் கொண்டிருக்கும் அவனை எப்படியாவது மாற்ற வேண்டும் என எண்ணியவள் தான் எடுத்த முடிவில் ஒரு கணம் தானே அதிர்ந்து போனாள்.

“என்ன…?” என மீண்டும் கேட்டான் அவன். 

“எ… என்கூட இருக்கணும்னு ஆசைப்பட்டீங்கதானே..?”

அவனோ அவளுடைய கேள்விக்கு பதில் கூறாது அவளையே அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க, மெல்ல நெருங்கி அவனுடைய மார்பில் முகம் புதைத்தவள், 

“எ… என்னை எடுத்துக்கோங்க பீமா… நீ… நீங்க ஆசைப் பட்டதை நா… நானே உங்களுக்குத் தர்றேன்.” என்க, அவனோ அதிர்ந்து போனான்.

அவனால் சற்றும் நம்பவே முடியவில்லை. தான் தொட்டாலே கண்ணீர் சிந்தி திமிறி விலகி விடத் துடிப்பவள் இன்று தானே வந்து அணைத்துக் கொள்ளவும் அவனுக்கோ பேரதிர்ச்சியாக இருந்தது.

“நீ என்ன பேசுறன்னு புரிஞ்சுதான் பேசுறியா…?” எனத் திகைப்பாக கேட்டவனின் மார்பில் அவளுடைய சிவந்த உதடுகள் நடுக்கத்தோடு பதிய, உறைந்து போனான் பீமா.

சிறு இதழ்கள் அவனைத் தீண்டி சிதறடித்தன.

உடல் முழுவதும் புது உதிரம் பாய்ந்தாற் போல புத்துணர்ச்சி பெருக, அவனுடைய கரங்களோ தானாகவே எழுந்து அவளை தன்னோடு இறுக அணைத்துக் கொண்டன.

“முகி… நீ இப்படிலாம் பண்ணினா ஐ கான்ட் கன்ட்ரோல் மை செல்ப்டி..” என்றவனின் கரங்கள் அவளை மேலும் தன்னோடு இறுக்கிக் கொள்ள,
 அவனுடைய கரங்களுக்குள் மொத்தமாக அடங்கினாள் அவள்.

அவனுடைய மூளையோ அவளுடைய திடீர் நெருக்கத்திற்கு ஏதாவது காரணம் இருக்கும் என அடித்துக் கூற,
 அவனுடைய மனமோ மூளையின் சொல்லை புறக்கணித்துவிட்டு அவனுடைய ஆசையை நிறைவேற்றும்படி கட்டளையிட்டது.

முகிலின் மீது இருந்த ஆசை அவனுடைய மூளையை வெல்ல, அவளை புரட்டிப் படுக்கையில் போட்டவன் அவள் மீது படரத் தொடங்கினான்.

அவனுடைய நெருக்கத்தில் அவளுடைய மனமோ ரணமாய் வலித்தது. இருந்தும் அதனை அழகாக மறைத்தவள் அமைதியாக அவனுடைய ஆளுகையினுள் சிக்குண்டு போனாள்.

அவனுடைய கரங்களோ அவளுடைய கன்னத்தை தாங்கி அவளுடைய இதழ் தேனைப் பருகத் தொடங்க, அவளுக்கோ மூச்சு முட்டிப் போயிற்று.

அவனுடைய இதழ் முத்தம் மிக மிக ஆழமான தேடலாக நீண்டு கொண்டே போக,  அவனுடைய ஆளுமையின் கீழ் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிப் போகத் தொடங்கினாள் முகிலாஷி.

“பேபிஇஇஇஇஇ…” என்றவனின் உதடுகள் அவளைத் தீண்டிய வண்ணமே இருக்க, அவனுடைய கரங்களோ மீண்டும் அவளுடைய ஆடையை விலக்கி அவளுடைய வெற்று உடலில் தன் புதிய பயணத்தை தொடங்கின.

மங்கையின் உடலோ இசைக் கருவியாக மாறிவிட, அதனை மீட்டும் இசை வித்துவானாக மாறிப் போனான் பீமா.

அவளை மொத்தமாக வன்மையாக உரிமையாக ஆளத் தொடங்கினான் அவன். அவளோ,

நடுங்கினாள்…!!

தவித்தாள்…!!

தகித்தாள்…!!

துடித்தாள்…!!

திகைத்தாள்…!!

மருகினாள்…!!

மடிந்தும் போனாள்…!!

அவளை முழுவதும் தன்னவளாக மாற்றிவிட்டு, அவளுடைய நெற்றியில் சிறு முத்தம் பதித்தவன் அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.

அவளோ விலகி எழுந்து தன்னுடைய உடலை போர்வையால் மூடியவள் பொலபொலவென கண்ணீர் வடித்தாள்.

“ஹேய் ஏன்டி…? ஏன் அழற.?” எனப் பதறிய பீமாவின் கரங்களை கெஞ்சலாக பிடித்துக் கொண்டவள்,

“நீ.. நீங்க ஆசைப் பட்டதை நான் கொடுத்தேன்ல..? நான் ஆசைப் படுறதை நீங்க கொடுப்பீங்களா பீமா..?” என உதடு துடிக்கக் கேட்டாள் அவள்.

“ஓஹ் பண்ட மாற்று முறை போல…? படுக்..*** மாற்று முறையா..? இதுக்குத்தான் உன்னை எடுத்துக்கோன்னு சொன்னியா.?” எனக் கேட்டவனின் குரல் உணர்வுகளைத் தொலைத்திருந்தது.

“நீங்க கேட்டதை நான் கொடுத்துட்டேன். நா… நான் கேட்டதை கொடுத்திருங்க பீமா… ப்ளீஸ்…” எனக் கதறி அழுதாள் முகில்.

உடல் இறுகி விறைக்க, தன்னுடைய கரத்தை உருவி எடுத்தவன்,
 “உனக்கென்ன வேணும்…?” எனக் கேட்டான்.

“எ… எங்க அ.. அண்ணாவை மன்னிச்சு விட்ருங்க… அ.. அவன கொன்னுடாதீங்க ப்ளீஸ்..” எனக் கதறியவளை புழுவைப் போலப் பார்த்தான் பீமா.


💜💙💙💜

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *