கோபக்கார கிளியே
அத்தியாயம் – 07
இருவரும் பாதை வழியே பேசி கொண்டு செல்ல விஷாலினியின் மனமோ அனைத்தையும் மறந்து இயற்கையில் லயித்து இருப்பதை அறிந்து கொண்டான் அரசு.
அரசின் விருப்பமும் அதுவே, எவ்வாறாயினும் விஷாலினி தன்னோடு முன்னர் இருந்ததைப் போல மாற வேண்டும் அத்தோடு அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதாகும்.
பகலவனும் மறைந்து கொண்டு செல்ல இருளும் சூழ ஆரம்பிக்கும் நேரத்தில் வனாந்தரத்தின் நுழைவாயிலை இருவரும் அடைந்தனர்.
வாயிலில் உள்ள பாதுகாப்பு படையினரிடம் உள்ளே செல்வதற்காக பெற்று கொண்ட அனுமதி பத்திரத்தை காட்டி அவர்களின் அனுமதியுடன் வண்டியை உள்ளே செலுத்தினான் அரசு.
இருளும் அல்லாது வெளிச்சமும் அல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட நேரத்தில் அடர் காட்டின் நடுவில் இதமான தென்றலின் குளிர்ச்சியுடன் உள்ள இடத்தில் இருவரும் சென்றனர்.
பாதையின் இரு மருங்கிலும் பறவைகளின் சத்தமும் தூரத்தில் யானைகள் கூட்டமும் அதன் அருகே அழகிய மான்களும் என செல்லும் அனைவரையும் ஒரு கணம் நின்று பார்க்க வேண்டும் என மனம் சொல்ல கூடிய அழகிய காட்சியாகும்.
விஷாலினியோ அனைத்தையும் தனது கையடக்கத் தொலைபேசியில் போட்டோ மற்றும் காணொளிகளாக பதிவேற்றி கொண்டாள்.
அரசோ மெதுவாக வண்டியை செலுத்தியபடி தன் அருகில் இருந்த மங்கையை இரசித்து கொண்டே வந்தான்.
இருவரும் மலை போன்ற பகுதியில் வண்டியை நிறுத்தி அதில் இரவினை கழிப்பதற்காக கூடாரம் அமைக்க தயாராகி கொண்டிருந்தனர்.
இதற்கு முன்னர் தனது நண்பர்களுடன் வந்த அனுபவம் உள்ளதால் அரசோ விஷாலினியை பார்த்து,
“விஷாலி இது ரொம்ப உயரமான இடம் கீழே மணல் போல தரையில் தான் மரங்கள் இருக்கு சோ நடக்கும் போது கவனமா இரு கால் ஷிலிப் ஆகும்” என எச்சரித்தான்.
“ம்ம்ம் ஓகே ஓகே நான் கவனமா வர்றேன்” என கூறினாள் அவள்.
சிறிது நேரம் சுற்றிச் சுற்றி அங்கிருந்தவற்றை ரசித்தவள் இயற்கையின் அழகை எண்ணி சிலிர்த்துச் சிரித்தாள்.
அரசு கூடாரத்தை தயார் படுத்தி கொண்டிருக்கையில் தூரத்தில் முயல் குட்டி ஒன்றை கண்ட விஷாலினி அதை அருகில் சென்று பார்ப்பதற்கு ஓடினாள்.
விஷாலினி ஓடுவதை பார்த்த அரசு,
“விஷாலி அந்த பக்கம் போகாத” என அவளை பின் தொடர்ந்தான்.
துள்ளி குதித்து ஓடிய விஷாலினியின் பாதம் சற்று தடம் புரள அங்கிருந்து கீழே சறுக்கினாள் விஷாலினி.
“மாமாஆஆஆஆ……..!” எனும் அலறல் சத்தத்துடன் அங்கிருந்து உருண்டு சென்றாள் விஷாலினி.
அவளின் உள்ளத்தில் அரசு எங்கோ ஓர் பக்கம் உள்ளான் என்பதை அவளது ஒற்றை வார்த்தை நிருபித்தது.
விஷாலினி விழுவதை பார்த்து அரசும் சறுக்கி கொண்டே செல்ல இருவரும் ஒன்றாக கீழே விழுந்தனர்.
உயரம் குறைவு என்பதாலும் பாரியளவான பாறைகள் இல்லை என்பதாலும் இருவரும் சிறு சிறு காயங்களுடன் தப்பி கொண்டனர்.
விஷாலியின் அருகே ஓடி சென்ற அரசு அவளது தோல்களை பிடித்து,
“உனக்கு ஒன்னும் ஆகலை தானே…?, எங்கேயும் அடிப்பட்டுச்சா.?” என பதறியவாறு கேட்டான்.
உடலில் சில கீறல்களுடன் கண்ணீர் சிந்தி கொண்டிருந்தாள் விஷாலினி.
அவள் அணிந்திருந்த சல்வாரில் ஒரு பகுதி, தொடைபகுதியில் உள்ள பேன்ட் என்பன கிழிந்து அவளது உடலில் சிறு சிறு கீறல்கள் என காயங்கள் காணப்பட்டது.
அவளின் முழங்கை மற்றும் முதுகின் பக்கமும் காயங்கள் காணப்பட்டது.
விஷாலினி கண்ணீர் சிந்துவதை பார்த்து துடிதுடித்த அரசு கூடாரத்திற்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தவன் அவளை எழுப்ப முயன்றான் ஆனால் அவளின் இடுப்பில் ஏற்பட்ட அடியின் வலியால் எழுந்து நின்றவள் நடக்க முடியாது இடுப்பை பிடித்து கொண்டு அவ்வாறே அமர்ந்தாள்.
விஷாலினியின் வலியை அறிந்த அரசு அவளை இலாவகமாக தூக்கி மேலே நடக்க தொடங்கினான்.
அவனது தொடுகை அவளை பெரிதும் சிந்திக்க விடவில்லை ஏனெனில் அதனை விட அவளின் வலி அதிகமாக இருந்தது.
மேலே தூக்கி சென்றவன் இருக்கையில் அமர வைத்து அவளின் காயங்களை பார்த்து மருந்து போடத் தொடங்கினான்.
விஷாலினியின் முழங்கை மற்றும் முதுகு என்பவற்றிக்கு மருந்தை போட்ட பின் அவளது தொடையில் இரத்தம் கசிந்திருப்பதை பார்த்தவன் அதன் மீது தன் கையை வைத்தான்.
“ஷ்ஷ்ஷ் வலிக்குது….” என அரசின் கையை விலக்கினாள் விஷாலினி.
அவளின் முழங்கால் வரை உள்ள ஆடையை உயர்த்தி மருந்து போட்டபின் அவளது ஆடை கிழிந்திருப்பதை பார்த்து மாற்றுவதற்காக இன்னொரு ஆடையையும் எடுத்து கொடுத்தான் அரசு.
“நான் உன்கிட்ட ஆல்ரெடி சொன்னேன் தானே நீ ஏன் அந்த பக்கம் போன..?”
“இல்லை ஒரு முயல் குட்டி ஒடியதைப் பார்த்தேன் அதனாலதான் அந்தப் பக்கம் போனேன்” என கூறிக்கொண்டே அரசை பார்த்தவள் அவனது கையில் இருந்து குருதி வருவதை பார்த்தாள்.
“அச்சோ உங்க கையில இருந்து ரத்தம் வருது” என கூறினாள்.
“எஸ் அது சின்ன கீறல்தான் பிரச்சினையில்லை”
“சின்னதா…?, இவ்வளவு ரத்தம் வருதே” என கூறி அவனது கையை பிடித்து அதற்கு மருந்து போட்டாள் விஷாலினி.
அதன் பின்னர் கொண்டு வந்த உணவை எடுத்த உண்ண தயாரான போது நிகழியின் கையில் கட்டு போட்டிருந்ததால் அவளுக்கு உணவை ஊட்ட தயாரானான் அரசு.
“இல்லை எனக்கு பசியில்லை நீங்க சாப்பிடுங்க” என கூறி அதனை நிராகரித்தாள் விஷாலினி.
“ஓகே நான் சாப்பிடுறேன் உனக்கு தேவைன்னா என்கிட்ட சொல்லு” என உணவை உண்ட பின்னர் அவளுக்கான படுக்கையையும் விரித்து விட்டு சற்று ஓய்வெடுக்க நினைத்து படுத்திருந்தான்.
நேரம் செல்லச் செல்ல விஷாலினியின் அடிவயிற்றில் பசி வந்து கூச்சலிட,
‘ரொம்ப பசிக்குது இப்போ என்ன பண்ணலாம்..?, என்னால சாப்பிட முடியாதே அவர்கிட்ட எப்படி நான் ஊட்டி விட சொல்ல முடியும்’ என நினைத்து கொண்டு இருந்தாள்.
ஆனால் அவளது பசி அவளை தூண்ட அருகில் இருந்த அரசை தட்டி,
“எனக்கு லைட்டா பசிக்குது” என கூறினாள்.
அரசோ எழுந்து அவளின் அருகே சென்று உணவை ஊட்டி விட தொடங்கினான்.
விஷாலினியோ தனது பசி தீரும் வரை உணவருந்த அவளது சிறு சிறு அசைவுகளையும் இரசித்த அரசு அவளின் மீது தன்னை அறியாமல் காதல் வசப்பட்டான்.
‘விஷாலினியை எனக்கு ஏற்கனவே ரொம்ப பிடிக்கும் அன்ட் இப்போ இவ என்னோட மனைவி இவகூடவே வாழ்க்கையை கொண்டு போனா ரொம்ப நல்லா இருக்கும்’ என அவனது மனமோ விஷாலினியை மனைவியாக ஏற்க தயாராகி கொண்டு இருந்தது.
“விஷாலி……..”
“ம்ம்ம் சொல்லுங்க……”
“ஐ அம் வெரி சாரி…..”
“ஏன்….?”
“நான் உன்கிட்ட அப்படி நடந்ததுக்கு என்னை மன்னிச்சுடு” என கூற விஷாலினியின் முகத்தில் சிறு மாற்றம் உண்டாகியது.
எதுவுமே பேசாது தலையை கீழே வைத்து அமர்ந்திருந்த விஷாலினியின் நாடியில் கை வைத்து உயர்த்தி தன்னை பார்க்க வைத்த அரசு,
“நான் வேணும்னு பண்ணலை சொன்னா புரிஞ்சுக்கோ என்னை மன்னிச்சுடு ப்ளீஸ் எதாவது பேசு” என மனம் திறந்து மன்னிப்பை கேட்டு நின்றான்.
அவளது மனம் அவனை மன்னிக்க மறுத்தாலும் அவன் மீது கொண்ட கோபம் சற்றே குறைந்திருந்தது.
“நடந்ததை பத்தி பேச வேணாம் என்னோட வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாள் அது,
நான் உங்க மேலே எவ்வளவு பாசம் வச்சிருந்தேன் தெரியுமா..?” என கூறினாள் விஷாலினி.
“இப்போ என் மேலே பாசம் இல்லையா விஷாலி….” என கேட்க,
சற்றும் சிந்திக்காமல் விஷாலினி அரசை பார்த்து,
“இப்பவும் உங்க மேலே பாசம் இருக்கு பட் கோபமும் இருக்கு” என உண்மையை கூறினாள்.
தன் மீது கொண்ட அன்பு இன்னும் உள்ளது என அறிந்த அரசு,
“நான் உன்கூட சேர்ந்து வாழணும்னு ஆசைப்படுறேன் விஷாலினி. இனி மேல் என் வாழ்க்கையிலே உள்ள பொண்ணு நீ மட்டும் தான் என்னோட சேர்ந்து வாழ உனக்கு இஷ்டம்.?” என கேட்டான்.
அரசு கூறியதை கேட்டு உறைந்து நின்றாள் விஷாலினி. அவனது காதலுக்கு அவளது பதில் என்னவாகதான் இருக்கும்..?
