உயிரோடு விளையாடு அசுரா..!!

This entry is part 20 of 40 in the series உயிரோடு விளையாடு அசுரா

உயிரோடு விளையாடு அசுரா

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!



உயிர் – 21 
 
அன்றைய இரவு யாருமற்ற அந்த வனாந்தரப் பகுதியில் கையில் இரும்புக் கம்பியுடன் அமர்ந்திருந்தான் பீமா. 

அவனுடைய விழிகள் ரசனையை நொடிக்கு நொடி வெளிப்படுத்திய வண்ணமே இருந்தன. 

பின்னே அவன் எதிர்பார்த்த அற்புத நேரம் அல்லவா இது.?

தன் எதிரே துடிதுடித்து கதறிக் கொண்டிருந்த இளைஞனின் கதறல் பீமாவின் செவிகளுக்கு சாம கானமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.

கதறிக் கதறி ஓய்ந்து போன ரவியோ ஒரு கட்டத்தில் தன்னுடைய கதறலை நிறுத்திவிட்டு தரையில் புரள, மீண்டும் தன்னுடைய கரத்தில் இருந்த இரும்புக் கம்பியால் அவனை ஓங்கி அடித்தான் பீமா.

அந்த அடியில் நின்று போன அவனுடைய கதறல் மீண்டும் அந்தக் காடே அதிரும் வண்ணம் ஒலிக்கத் தொடங்கியது.

“ஐயோ என்னைக் கொன்னுடு ப்ளீஸ். இப்படி சித்ரவதை பண்றதுக்கு என்ன ஒரேடியா அடிச்சு கொன்னுடு.” எனக் கதறி அழுதான் ரவி.

“ஆஹாங்…!! இவ்வளவு பெரிய பேராசை எல்லாம் இருக்கக் கூடாது மிஸ்டர் ரவி.” என்றவன் மீண்டும் அந்த இரும்புக் கம்பியால் அவனைத் தாக்க உச்சஸ்தாயியில் அலறினான் அவன்.

அலறி அலறி அவனுடைய தொண்டை வரண்டு நாக்கு உலர்ந்து போக, விழிகளில் இருந்தோ இடைவிடாது வழிந்தது கண்ணீர் அருவி.

“ஏதோ ஆசைல தெரியாம பண்ணிட்டேன்… ப்ளீஸ் விட்ரு.. இனி எந்தத் தப்புமே பண்ண மாட்டேன். நான் வேணும்னா போலீஸ்ல போய் சரண்டர் ஆகிக்கிறேன். இப்படி என்னை சித்திரவதை பண்றதை நிறுத்து பீமா.
 என்னால தாங்க முடியலை.” எனக் கதறி அழுதான் அவன்.

பீமாவின் ரசனைப் பார்வையோ மீண்டும் முகிழ்த்தது.

“ப்பாஆஆ நீ கத்தும்போது அப்படியே காதுல தேன் பாயுற மாதிரியே இருக்குடா. ம்ம் அப்படித்தான் இன்னும் நல்லா கத்திக் கதறு.” எனச் சிரித்தான் பீமா.

இரும்புக் கம்பியால் அடி வாங்கி அவனுடைய மொத்த உடலும் வலியில் துவண்டு போக, இனி அவன் தன்னை மன்னித்து விட மாட்டான் என்பதை உணர்ந்து கொண்ட ரவியோ, ஆக்ரோஷமாக கத்தத் தொடங்கினான்.

“டேய் நாயே என்னைத் தண்டிக்க நீ யாருடா.?” என்றவாறு எழ முயன்ற ரவியின் பின்னந் தலையில் ஓங்கி அடித்தான் பீமா. 

அவன் வலியில் முனகி விழிகளைத் திறந்து பார்த்த கணம் அடுத்தடுத்த விழுந்தது அதிரும் இடி போன்ற அடிகள்.

கபாலம் உடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தவனின் உயிரோ அக்கணமே ரவியின் உடலை விட்டு நீங்கிச் செல்லத் தொடங்கியது.

உயிரற்ற பிணமாகக் கிடந்த ரவியின் உடலை அந்த இரும்பு கம்பியால் சிதைத்தவன் அடுத்த கணம் அங்கிருந்த அத்தனை ஆதாரங்களையும் அவன் வந்த தடங்களையும் முற்று முழுதாக அழிக்கத் தொடங்கினான். 

அடுத்த சில நொடிகளில் அவன் அங்கிருந்து மாயமாக மறைந்து விட, அநாதைப் பிணமாக உடல் சிதைந்த நிலையில் கிடந்தான் ரவி.

************ 
இரவு முழுவதும் தூக்கம் இன்றி விடியற் காலையிலேயே உறக்கத்தை தழுவிய ருத்ராவோ, காலை வெகு நேரம் கழித்தே துயில் நீங்கி எழுந்தாள்.

எழுந்த கணமே முகிலாஷியின் கதையை முடிப்பதற்காக ரவியுடன் தொடர்பு கொள்ள மறுபடியும் முயன்றாள் ருத்ரா. 

ரவியின் அலைபேசி ஸ்விட்ச் ஆஃப் என்று வர அவளுக்கோ அலுத்துப் போனது.

‘ஓ காட் இவனுக்கு என்னதான் ஆச்சு.?’ எனக் குழம்பித் தவித்தவள், ரவியைப் பற்றி யாரிடம் விசாரிப்பது எனத் தெரியாது வேறு வழியின்றி மீண்டும் தீபக்கை தன்னுடைய ஃபோனில் தொடர்பு கொண்டாள் ருத்ரா.

“ஹேய் பேபி வாட் அ சர்ப்ரைஸ். எத்தனையோ மாசத்துக்குப் பிறகு நீயே என்னைக் கூப்பிட்டு இருக்க. வாட்ஸ் த மேட்டர்.?” எனக் குதூகலமாய்க் கேட்டான் தீபக்.

“ஸ்டாப் இட் தீபக். நான் ஒன்னும் உன்கூட கடலை போடுறதுக்கு கால் பண்ணல. நம்ம ரவி பத்தி கேட்கத்தான் கால் பண்ணேன். அவன் எங்கேன்னு தெரியுமா.? எத்தனையோ முறை கால் பண்ணியும் அவன்கிட்ட இருந்து எந்த ரிப்ளையுமே கிடைக்கல. நேத்துல இருந்து கால் பண்ணி கால் பண்ணியே டயர்ட் ஆகிட்டேன்.” எனச் சலிப்போடு கூறினாள் ருத்ரா.

“ஏய் என்னடி சொல்ற? அவன்தான் நேத்து நைட்டே இறந்துட்டானே. உனக்கு தெரியாதா.?” எனக் கேட்டான் தீபக்.

“வாட்….!!!??” என அதிர்ச்சியில் அலறியே விட்டாள் ருத்ரா.

“ஏன் இவ்வளவு ஷாக் ஆகுற.? உனக்கு விஷயமே தெரியாதா.?” எனக் கேட்டான்  தீபக்.

“என்னடா சொல்ற.?  எனக்கு எதுவுமே தெரியாதே. இப்ப கூட நான் அவனுக்குத்தான் கால் பண்ணிக்கிட்டு இருந்தேன். என்னாச்சு அவனுக்கு.?” எனப் பதறினாள் ருத்ரா.

“மர்டர்னு சொல்றாங்க. பட் யார் பண்ணதுன்னு இதுவரைக்குமே கண்டுபிடிக்க முடியல. ஏதோ இரும்பால அடிச்சு உடம்ப சிதைச்ச மாதிரி இருக்கு. எந்த ஆதாரமுமே கிடைக்கலை. ஒரு சின்னத் துரும்பு கூட கிடைக்கல ருத்ரா.” என்றதும் ருத்ராவின் தொண்டையோ உலர்ந்தது.

“நம்ம பிரண்ட் லிஸ்ட்ல இருக்கவன் எல்லாம் இப்டி திடீர் திடீர்னு செத்துப் போறாங்கன்னு நினைச்சா ரொம்ப ஷாக்கா இருக்கு ருத்ரா.” என்றான் தீபக்.

தீபத்தின் வார்த்தைகளில் அவளுடைய உடலோ தூக்கி வாரிப் போட்டது.

ஆம் அவன் சொல்வது சரிதான். 

முதலில் கிஷோர்….!!

இப்போது ரவி….!!

அடையாளமே தெரியாத ஒருவனால் கிஷோர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்ததைப் போல, இப்போது ரவியும் இரும்பு கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதை கேள்வியுற்றதும் அவளுடைய உடலோ அதிர்ச்சியில் படபடத்துப் போனது.

“தீ… தீபக்…?”

“சொல்லு பேபி…”

“நம்மளுடைய எனிமி யாரோதான் இதெல்லாம் பண்ணுறாங்களோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு தீபக்.” எனக் கூறினாள் ருத்ரா.

“பட் நமக்கு அப்படி யாருமே எதிரி இல்லையே. நம்ம கிஷோர் கூட அவனோட கல்யாணம் அன்னைக்குத்தானே இறந்து போனான். அவனை கொன்னுட்டு கல்யாணம் பொண்ண வேற தூக்கிட்டு போய் இருக்காங்க” என்றதும் ருத்ராவோ ஒரு கணம் உறைந்து போனாள்.

“ஹேய் அந்தக் கல்யாணப் பொண்ணோட போட்டோ இருந்தா எனக்கு சென்ட் பண்ணு.” என்றாள் ருத்ரா.

“ஏன் பேபி….?”

“ப்ச் முதல்ல நீ அந்தப் பொண்ணோட போட்டோவை அனுப்பு.”

“ஹேய் அவளை உனக்குத் தெரியாதா.? நம்ம சித்தார்த்தோட தங்கச்சிதானே  கல்யாணப் பொண்ணு.” என்றான் தீபக்.

“டேய் நான் எப்படா சித்தோட தங்கச்சியை பார்த்திருக்கேன் எனக்கு அது யாருன்னு கூடத் தெரியாது. அவளோட போட்டோ இருந்தா உடனே அனுப்பு.” என தீபக்கை அவசரப்படுத்தினாள் ருத்ரா.

“ஓகே பேபி. பட் அவளோட போட்டோ என்கிட்ட இல்ல. வெயிட் பண்ணு டூ மினிட்ஸ்ல உனக்கு சென்ட் பண்றேன்.” என்றவாறு அழைப்பைத் துண்டித்தான் தீபக்.

சொன்னதைப் போலவே சில நிமிடங்களில் சித்தார்த்தின் தங்கையின் புகைப்படத்தை ருத்ராவிற்கு அனுப்பி வைத்தான் தீபக்.

அவனுடைய குறுஞ்செய்திக்காகவே காத்திருந்தவள் அது வந்ததும் சட்டென திறந்து அந்த புகைப்படத்தை பார்க்க அவளுடைய முகமோ பேய் அறைந்தாற் போல மாறிப் போனது.

அந்த புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்த முகிலாஷியைப் பார்த்தவளுக்கு இதயம் பந்தயக் குதிரையைப் போலத் தடதடக்கத் தொடங்கியது.

அடுத்த கணமே தீபக்கை அலைபேசியில்  அழைத்தவள், 
“ஓ மை காட் இதெல்லாம் பீமாவோட வேலையா இருக்குமோ….? எனக்கு பயமா இருக்குடா.” எனப் படபடத்தாள் ருத்ரா.

“பீமாவா நீ ஏன்டி அவனை சந்தேகப்படுற.?” எனக் கேட்டான் தீபக்.

சித்தார்த்தின் தங்கை தங்களுடைய வீட்டில்தான் இருக்கிறாள் எனக் கூற வந்தவள் பின் சட்டென தன் இதழ்களைக் கடித்து வெளியே வரவிருந்த வார்த்தைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

இப்போது இந்த உண்மையை தீபக்கிடம் கூறுவது முட்டாள்தனம் என அறிந்து கொண்டவள் பேச்சை மாற்ற முற்பட்டாள்.

“இ… இல்லடா. எனக்கு என்னமோ நாம எங்கேயோ மிஸ் பண்ணிட்டோமோனு தோணுது.” 

“நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல. முட்டாள்தனமா நீயே ஏதாவது செஞ்சு வச்சு மாட்டிக்காத.” என எச்சரித்தான் தீபக்.

“சரி…” என மெல்லிய குரலில் முனகினாள் ருத்ரா.

“ஹ்ம்ம்… ஓகே பேபி எனக்கு ஒரு பத்து லட்சம் அனுப்பி விடு.” என்றான் தீபக்.

“ஐயோ இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு நீ வேற ஏன்டா என்னைப் படுத்துற.? இப்போ என்கிட்ட சுத்தமா பணம் கிடையாது. கிடைச்சதும் கண்டிப்பா உனக்கு அனுப்புறேன்.” என்றாள் அவள்.

“பணம் கிடைக்கலைன்னா பரவால்ல பேபி. நீ ஒரு தடவை வந்துட்டு போயேன். உன் கூட இருந்து ரொம்ப நாளாச்சு.” எனக் குரலில் தாபம் வழிய கேட்டான் தீபக்.

“முட்டாள் உன்னை எல்லாம் திருத்தவே முடியாது. ஏற்கனவே நடந்துகிட்டு இருக்க பிரச்சனைல எனக்கு தலை வெடிக்கிற மாதிரி இருக்கு.  என்ன டென்ஷன் பண்ணாம தயவு செஞ்சு போன வை தீபக்.”

“உனக்குத் திரும்பத் திரும்ப சொல்ல மாட்டேன் ருத்ரா. என்ன எதிர்த்து பேசறதுக்கு முதல் ஒரு தடவைக்கு பத்து தடவை யோசிச்சு பேசு. நீ என்னென்ன பண்ணியிருக்கேன்னு எல்லாமே எனக்குத் தெரியும். மறந்துட்டியா என்ன.?” என்றான் தீபக்.

அவனுடைய கேள்வியில் பதறியவள் “சரி நானே உன்னைத் தேடி வரேன். இப்போ ஃபோனை வை.” என்றாள் அவள்.

“குட் பேபி. நாளைக்கே என்னோட அப்பார்ட்மென்டுக்கு வந்துரு பேபி.” என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.
அவளுக்கு எல்லா பிரச்சனையும் வந்து தன்னுடைய தலையில் விழுந்ததைப் போல இருந்தது. 

தனக்கொரு ஆபத்து என்றதும் ஓடி வந்து உதவி செய்யும் நெருங்கிய நண்பர்களான கிஷோரும் ரவியும் இப்போது உயிரோடு இல்லை என்பது அவளை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியது. 

இருக்கும் பிரச்சினைகளில் தீபக்கை வேறு சமாளிக்க வேண்டும் என எண்ணியவள் சோர்ந்து தான் போனாள்.

கிஷோரைக் கொன்றது பீமா தானோ..? 

அவனைக் கொன்று விட்டுத்தான் முகிலாஷியை தூக்கி வந்திருக்கிறானோ.? 

அவன் எதற்காக கிஷோரைக் கொல்ல வேண்டும்…? 

முகியை திருமணம் செய்து கொள்வதற்காக கிஷோரை கொன்றானா.? இல்லை வேறு ஏதாவது காரணம் இருக்குமோ..? 

ரவியின் கொலை விஷயத்திலும் பீமாவுக்கு எதேனும் சம்பந்தம் இருக்குமோ…? 

ஐயோ என்னைப் பற்றி எதுவும் தெரிந்து கொண்டிருப்பானோ…? என எண்ணி நடுங்கிப் போனாள் ருத்ரா.

ஆயிரம் விடை தெரியாத கேள்விகள் அவளுடைய மூளையினுள் புகுந்து அவளைப் பேதலிக்கச் செய்தன.

********* 

பீமாவின் அறையில் இருந்த தொலைக்காட்சியில் சேனலை மாற்றிக் கொண்டிருந்தவளை நெருங்கினான் பீமா.

அவளுடைய கரத்தில் இருந்த ரிமோட்டைத் தான் கைப்பற்றியவன் அவளுக்கு அருகே அமர்ந்தவாறு நியூஸ் சேனலை மாற்றினான்.

‘ஐயோ வந்துட்டான்…’ என மனதுக்குள் அலறியவள் வெளியே அமைதியாக இருந்தாள்.

நியூஸ் சேனலில் ரவி எனும் இளைஞனின் படுகொலை பற்றிய செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, முகிலாஷியின் முகமோ அதிர்ச்சியில் மாறிப்போனது.

“ஐயோ இது ரவி அண்ணா தானே.? இவருக்கு என்னாச்சு..?” எனப் பதறிப் போனாள் அவள்‌.

அவளுடைய  பதற்றம் அழுகையாக மாறத் தொடங்கியது. உடல் சிதைந்த நிலையில் இருப்பதைக் கண்டவள் விம்மி அழத் தொடங்கினாள்.

“உனக்கு இவனைத் தெரியுமா.?” என சற்றே மாறுபட்ட குரலில் கேட்டான் பீமா.

“தெ… தெரியும். இவர் என் அண்ணாவோட ஃப்ரண்டுதான்.” என்றாள் முகி.

“ஓஹோ…” என்றவன் தொலைக் காட்சியில் மூழ்கிப் போனான்.

செய்தியை பார்த்துக் கொண்டிருந்த முகிலாவுக்கோ மனம் வலிக்கத் தொடங்கியது.  ரவியின் சிதைந்த உடலை மீடியா செய்தியில் காட்டியிருக்க பயந்தே போனாள் அவள்.

“ச்சே…. ஏன் இப்படி எல்லாம் பண்றாங்க.? வரவர மனிதாபிமானமே இல்லாம போயிடுச்சு. கொலை எல்லாம் எவ்ளோ ஈஸியா பண்ணிட்டு போயிடுறாங்க இதனால  அவங்க குடும்பம் எவ்வளவு பாதிக்கப்படும்னு யோசிக்கிறதே இல்லைல்ல” என வருத்தம் மிகுந்த குரலில் கூறினாள் அவள்.

“யாரும் யாரையும் சும்மா கொலை பண்ண மாட்டாங்க முகி. இவன் என்ன தப்பு பண்ணினானோ.? யாருக்குத் தெரியும்.? எனக்கென்னவோ பாதிக்கப்பட்டவன் சிறப்பா சம்பவம் பண்ணி இருக்கான்னு தோணுது. “ எனச் சிரித்தான் பீமா.

“உங்களால எப்படி இந்த டைம்ல கூட சிரிக்க முடியுது.? இதுவே உங்களோட சொந்தத்தில் யாராவது இறந்திருந்தா இப்படி சிரிச்சிருப்பீங்களா.? யாரோ ஒரு உயிர்னா இளக்காரமா போச்சா.? ச்சே…” என சீறினாள் முகிலாஷி.

“ஷட் அப் டியர்…” கர்ஜித்தான் பீமா.

“ஓஹ்… ஒரு கொலைகாரனை திட்டினா இந்தக் கொலைகாரனுக்கு கோபம் வருதோ.? உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது. ச்சே.” என சீறியவளின் கன்னத்தை உடைக்கும் அளவுக்கு அழுந்தப் பற்றினான் பீமா.

 அவனுடைய முகமோ நொடியில் ரௌத்திரமாக மாறிப் போனது.

💜💜💙💙

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *