உயிரோடு விளையாடு அசுரா..!!

This entry is part 14 of 40 in the series உயிரோடு விளையாடு அசுரா

உயிரோடு விளையாடு அசுரா

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!



உயிர் – 15 
 
பீமாவோ இன்று நடந்த சம்பவத்தில் இருந்து அவள் சற்றே தேறி வந்ததும் அவளைச் சென்னைக்கு அழைத்து வந்திருந்தான்.

இத்துடன் மூன்றாவது வீட்டுக்கு அவளை அழைத்து வந்து விட்டான். அவன் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அவளையும் அழைத்துச் செல்ல, முகிலாஷிக்கோ சோர்வே மிஞ்சியது.

தன் உடலில் இன்னும் பெட்ரோல் மணம் வீசுவதைப் போல இருக்க, மீண்டும் ஒரு முறை குளித்துவிட்டு வந்த பின்பே தன் உடலில் இருந்த பெட்ரோலின் மனம் நீங்கியதைப் போல உணர்ந்தாள் அவள்.

பீமா தனக்காக வாங்கி வைத்திருந்த ஆடைகளை எடுத்து ஒரு புறம் மடித்து வைத்தவள் அடுத்து என்ன என்ற வகையில் சிந்திக்கத் தொடங்கினாள்.

வாழும் வாழ்க்கை இவனுடனேயே கழிந்து விடுமோ என்ற பயம் அவளை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது.

அவன் அறையில் இல்லாதது நிம்மதியாக இருக்க, மெல்ல அந்த படுக்கை அறையை ஒட்டியிருந்த பால்கனி பக்கம் வந்து நின்றாள் அவள். 

அவள் நின்ற பால்கனிக்கு எதிரே இன்னொரு பெரிய வீடும் இருப்பதை கண்டவளுக்கு விழிகள் வியப்பில் விரிந்தன. 

இது யாருடைய வீடாக இருக்கக்கூடும் என் எண்ணியவாறு கூர்ந்து பார்த்தவள் அங்கே அந்த வீட்டின் மொட்டை மாடியில் நின்று தன்னையே வெறித்துக் கொண்டிருந்த ருத்ராவைக் கண்டு அதிர்ந்து போனாள் முகி. 

அவளுடைய உடலோ நொடி நேரத்தில் படபடத்துப் போக,  சட்டென அறைக்குள் வந்து பால்கனிக் கதவை சாத்திக்கொண்டாள் அவள். 

“ஐயோ கடவுளே…” என புலம்பியவளுக்கு இதயம் வேகமாகத் துடித்தது.

சில நொடி நேரமே ருத்ராவின் பார்வையை பார்த்திருந்தாலும் அந்தப் பார்வையில் இருந்த வெறுப்பிலும் சினத்திலும் விக்கித்துப் போனாள் முகிலாஷி.

தன் கணவனைத் தட்டி பறித்து விட்டாள் என்ற பார்வையோ..?

இல்லை நீ எல்லாம் ஒரு பெண்ணா என்ற ஏளனமான பார்வையோ…? 

என்ன விதமான பார்வை இது என எண்ணித் தவிக்க தொடங்கியது அவளுடைய மனம்.

அவளும் என்னதான் செய்வாள்..? அவள் என்ன விரும்பியா பீமாவின் தாலியை ஏற்றுக் கொண்டாள்.? இது அவளையும் மீறி நடந்த வன்முறை அல்லவா..? 

ருத்ராவைப் போலத்தான் அவளும் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்பதை அறியாது அன்று அவர்கள் பேசிய பேச்சை எண்ணி மீண்டும் கண்ணீர் வழிந்தது அவளுக்கு.

அதிலும் ருத்ரா பார்வையால் தன்னைக் கொன்றாள் என்றால் ராஜேஸ்வரி எத்தனை கொடுமையான வார்த்தைகளை அவள் மீது அள்ளி தெளித்து விட்டார்.

பீமாவுடன் இருந்தால் இறுதிவரை அவள் இத்தகைய அவமானங்களை எதிர் கொள்ள வேண்டி வரும் என்பது அவளுக்குத் தெள்ளெனப் புரிந்தது.

இந்த அரக்கனிடமிருந்து தப்பிச் செல்வது இயலாத காரியம் அல்லவா.? 

அவன் எதற்காகத் தன்னை இப்படி கடத்தி வந்து வதைக்கிறான்.? இதற்கான காரணம் என்னவெனத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுத்தாள் அவள்.  

‘ஏன் இப்படி எல்லாம் பண்றான்னு எப்படியாவது கண்டுபிடிக்கணும். உண்மை தெரிஞ்சா மட்டும்தான் என்னால இங்கே இருந்து தப்பிக்க முடியும். எந்த காரணமும் இல்லாமல் ஒருத்தன் கடத்தி வந்து இவ்வளவு கொடுமை பண்ணுவானா.? சான்ஸ்ஸே இல்ல.. பட் நான்தான் இவனுக்கு எதுவுமே பண்ணலையே.. எதுக்காக என்னை இவ்ளோ வதைக்கிறான்.? என்ன பிரச்சனைன்னு இப்போ வரைக்கும் எனக்கு புரியலையே.’ என சிந்தித்துச் சோர்த்து போனாள்.

அதே கணம் இந்த வீட்டுக்கு எதிர் வீட்டில் தான் ராஜேஸ்வரியும் ருத்ராவும் இருக்கின்றனர் என தெரிந்ததும் அவளுக்கு அந்த அறையை விட்டு வெளியே செல்லவே பயமாக இருந்தது.

எங்கே அவர்களுடைய கண்ணில் பட்டால் மீண்டும் தன்னை வார்த்தைகளால் கொன்று புதைத்து விடுவார்களோ என அஞ்சினாள் அவள்.

அதே நேரம் பீமாவோ காலையில் சென்றவன் இருள் சூழ்ந்த பின்பு கூட வீட்டுக்கு வராததை எண்ணி மகிழ்ந்தும் போனாள். 

அவளுடைய மனமோ இங்கிருந்து தப்பிக்க முயன்றால்தான் என்ன.? என மீண்டும் முட்டாள்தனமாக சிந்திக்கத் தொடங்கியது.

‘அவன்தான் வீட்டில் இல்லையே எப்படியாவது அவன் வருவதற்குள் தப்பிச் சென்றால் என்ன.?’ என்ற எண்ணம் தோன்ற, சட்டென படிகளில் இருந்து கீழே இறங்கியவள் ஹாலுக்குச் சென்று அங்கிருந்த கதவின் வழியாக எட்டிப் பார்த்தாள்.

வெளியே படுத்து உறங்கிக் கொண்டிருந்த நான்கு உயர் ரக நாய்களைக் கண்டதும் அவளுக்கோ உடல் அதிர்ந்து அடங்கியது.

அந்த நாய்களுக்கும் மேலாக வாயிலின் அருகே நின்ற காவலாளிகளையும் மதிலுக்கு அருகே துப்பாக்கியோடு நின்றவர்களையும் கண்டு உடல் வியர்த்துப் போனாள் அவள்.

முதல் தங்கியிருந்த வீட்டிலாவது தப்பிச் செல்ல பத்து வீதமாவது வாய்ப்பு இருந்தது. ஆனால் தற்போது இருக்கும் வீட்டில் தப்பிச் செல்வதற்கு வாய்ப்பே இல்லை என்பது தெளிவாகப் புரிய மீண்டும் தன்னுடைய அறைக்குள் வந்து அமர்ந்து கொண்டாள் அவள். 

இரவு வெகு நேரத்தின் பின்னே வீட்டிற்கு வந்தான் பீமா.

பால்கனிக் கதவை பூட்டிவிட்டு அறையின் இருளில் அமர்ந்திருந்த முகியைக் கண்டவன் அந்த அறையின் மின் விளக்கை ஒளிரச் செய்தான்.

“ஹேய் லைட் கூட போடாம என்ன பண்ற.?” என்ன கேட்டவாறு அவளை நெருங்கியவன் அமர்ந்த வாக்கிலேயே உறங்கிப் போயிருந்த முகியைக் கண்டதும் சட்டென அமைதியாகினான். 

தூக்கத்தில் அவளுடைய இதழ்கள் சற்றே பிரிந்தாற் போல இருக்க, அவளைப் பார்த்தவனின் முகமோ சற்றே கனியத் தொடங்கியது.

“உன்னைப் பார்த்தாலும் பாவமாத்தான் இருக்கு முகி. பட் என்ன பண்றது அனுபவிக்கனும்னு இருந்தா அனுபவிச்சுத் தானே ஆகணும்.
 மன்னிப்பு என்கிற ஒத்த வார்த்தையை கொடுத்துட்டு போற அளவுக்கு நான் ஒன்னும் அவ்ளோ நல்லவன் கிடையாது.
 என்கூட இருக்கும் வரைக்கும் உனக்கு வலிக்கத்தான் செய்யும். இந்த வீடு நரகம் மாதிரிதான் இருக்கும். இருக்க வைப்பேன். அதை நீ அனுபவிச்சுத்தான் ஆகணும்.” என மென்மையான குரலில் தொடங்கி வன்மையான குரலில் கூறி முடித்தவன் அவளுடைய முகத்தின் மீது விழுந்த முடிக்கற்றைகளை கண்டு மௌனித்தான்.

எங்கே அவள் தூக்கம் கலைந்து எழுந்து விடப் போகிறாளோ என எண்ணியவன், தன்னுடைய நுனி விரலால் அவளுடைய சிறு முடிக்கற்றைகளை காதோரமாக ஒதுக்கி விட்டான்.

“எ…. என்னைக் கொல்லப் போறீங்களா..? அப்போ ப்ளீஸ் வலிக்காம கொன்னுடுங்க..” என நடுக்கத்தோடு கூறியவளின் குரல் அப்போதும் தன் காதில் ஒலிப்பதைப் போல இருக்க தன் விழிகளை மூடித் திறந்தான் பீமா.

எந்த வஞ்சகமும் இல்லாத அவளுடைய பால் வதனத்தை பார்த்தவனுக்கு தவறு செய்கின்றோமோ என்ற எண்ணமும் நொடி நேரத்தில் இதயம் முழுக்க வியாபிக்கத் தொடங்கியது.

இருக்கையின் ஒரு பக்கமாக சாய்ந்து கிடந்தவளை மெல்ல தன் கரங்களில் ஏந்திக் கொண்டவன் அவளைத் தூக்கிக்கொண்டு தன்னுடைய படுக்கையின் அருகே வந்தான். 

அவளுடைய குழந்தைத்தனமான முகம் அவனை சற்றே அசைத்துப் பார்த்தது.
அவளைப் படுக்கையில் படுக்க வைக்க முயன்றவனின் கரம் அவளை கீழே விட மறுக்க மீண்டும் அவளுடைய வதனத்தையே இமைக்காது பார்க்கத் தொடங்கினான் பீமா.

சட்டென சில நினைவுகள் அவனுடைய மனக்கண்ணில் தோன்ற இளகிப் போயிருந்த அவனுடைய தேகம் கொஞ்சம் கொஞ்சமாக இறுகி விறைத்தது.

தாங்க முடியாத வெறுப்பும் கோபமும் ஒரு சேரத் தோன்ற இத்தனை நேரமும் மென்மையாக அவளை தன் கரங்களில் ஏந்தியிருந்தவன் அடுத்த நொடியே தொப்பென அவளைப் படுக்கையில் போட்டான்.

அவன் படுக்கையில் போட்ட வேகத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளோ திடுக்கிட்டு எழுந்து பதறி விழித்தாள்.

 தனக்கு அருகே நின்ற பீமாவின் கோப முகத்தை கண்டு அவளுக்கு உள்ளம் பதறத் தொடங்கியது.

“ரொம்ப நிம்மதியா தூங்குற போல.?” என விசமத்துடன் கேட்டான் அவன்.

“நிம்மதியா தூங்கக் கூட எனக்கு உரிமை இல்லையா.?” என கலக்கமான குரலில் கேட்டாள் அவள்.

“ஓஹ்…!! மேடமுக்கு நிம்மதியான தூக்கம் தேவைப்படுதோ.?” என சிரித்தவன் அடுத்த கணமே அவளை அழுத்தமாக பார்த்தான்.

அந்தப் பார்வையில்  மூச்சடைத்துப் போனாற் போல இருந்தது அவளுக்கு.
சட்டென விழி நீர் கண்களில் இருந்து வடிய விழிகளை மூடிக் கொண்டவள் அதன் பின் அசையவும் இல்லை.
 விழிகளைத் திறந்து அவனைப் பார்க்கவும் இல்லை.

அவனைப் பார்த்தால் தானே அவனுடைய பார்வையை பார்த்து அஞ்சி நடுங்க வேண்டும்.? ஆகவே தன் விழிகளை இறுக மூடிக்கொண்டு அமைதியாக படுத்து விட்டாள் முகி.

அவள் இனி எக்காரணம் கொண்டும் தன் விழிகளைத் திறக்க மாட்டாள் என்பது புரிய, அவனோ அதன் பின்பு எதுவும் கூறாது அவளுக்கு அருகே படுத்துக் கொண்டான்.

அவளுக்கு அன்று முழுவதும் உடல் வலித்ததால் படுத்த சற்று நேரத்திலேயே உறக்கத்தை தழுவி இருந்தாள். பீமாவோ வெகு நேரத்தின் பின்னரே உறக்கத்தை தழுவியவன் நள்ளிரவில் கேட்ட முகிலாஷியின் விசும்பலில் தூக்கம் கலைந்து எழுந்தான்.

‘இந்த மிட்நைட்ல இன்னும் தூங்காம இவ என்ன பண்றா…?’ என்றவாறு நைட் லேம்ப்பை ஒளிரச் செய்தவன் அந்த நீல நிற ஒளியில் அவளுடைய முகத்தைக் கூர்ந்து பார்த்தான். 

அவளோ இன்னும் தூக்கத்தில் இருப்பதை பார்த்தவனுக்கு புருவங்கள் கேள்வியாய் உயர்ந்தன.

அவள் தன் இதழ்களுக்குள் எதையோ முணுமுணுத்து அழுது கொண்டிருப்பதை உணர்ந்தவன் மெல்ல அவளுடைய முகத்தின் அருகே நெருங்கி அவள் முணுமுணுப்பதை செவி மடுக்கத் தொடங்கினான்.

“என்ன விட்ருங்க ப்ளீஸ்… என்ன எதுவும் பண்ணிடாதீங்க.. ஐயோ எரிச்சிடாதீங்க. உடம்பெல்லாம் எரியுது அம்மா.. ஐயோ என்னால தாங்க முடியலையே.
 தண்ணீஈஈ..” என முனகியவாறு தூக்கத்திலேயே தேம்பிக் கொண்டிருந்தாள் அவள்.

அவனோ அதிர்ந்து போனான்.
 அவனுடைய செயல் அவளை மிகவும் பாதித்திருப்பது அவனுக்குப் புரிந்தது.

அவளோ தன் உடலை கரங்களால் தடவியவாறு “ஐயோ எரியுதே… எரியுதே… அம்மா…” என அலறத் தொடங்கினாள்.

விசும்பலாக இருந்த அவளுடைய குரலோ கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் கூடி ஒலிக்கத் தொடங்கியது.

ஒரு கட்டத்தில் அவளுடைய உடல் தூக்கி வாரிப்போட அடுத்த கணம் அவளுடைய தோளைப் பற்றி உலுக்கி எழுப்பினான் பீமா.

“முகி எழுந்திரு..” என்ற அவனுடைய சத்தமான குரலில் விழிகளைத் திறந்தவள் அவனுடைய முகத்தை அருகில் கண்டதும் தன்னை எரித்துக் கொண்டிருக்கிறான் என எண்ணி வீறிட்டு அலறத் தொடங்கினாள்.

படுக்கையில் துடித்து கதறியவளை உடனே இறுக அணைத்துக் கொண்டான் பீமா.

“சாரி முகி…” என்றவாறு அவளுடைய முதுகை வருடத் தொடங்கின அவனுடைய பலம் பொருந்திய கைகள்.

அவளோ வாய்விட்டு அழுதவாறு எதைஎதையோ புலம்ப, அடுத்த கணம் அவளுடைய இதழ்களை தன் அதரங்களால் சிறை எடுத்திருந்தான் அவன்.

ஆழமான முத்தம்…!!

அந்த முத்தத்தில் அவளுடைய புலம்பலும் நின்றுதான் போனது.

ஆண் மகனது இதயமோ தடம்மாறி தடுமாறத் தொடங்கியது.

💜💙💙💜

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *