உயிரோடு விளையாடு அசுரா
உயிர் – 30
ஆபிஸில் இருந்து தன்னுடைய வீட்டிற்குச் சென்ற சித்தார்த்தோ தந்தையைக் கண்டும் பேசாது அமைதியாக தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்டான்.
அவனுடைய எண்ணங்கள் முழுவதும் எப்படியாவது பீமாவை கொன்று விட வேண்டும் என்பதிலேயே நிலைத்து நின்றன.
அதே நேரம் தன்னுடைய கரத்தில் இருந்த பென்ட்ரைவை புருவம் சுருங்கப் பார்த்தவன், ‘இதை யார் நமக்கு அனுப்பி வெச்சிருப்பாங்கன்னு தெரியலையே.’ என்றவாறு தன்னுடைய லேப்டாப்பில் அந்த பென்ட்ரைவை சொருகினான் அவன்.
அதனுள் ஒரே ஒரு காணொளி மாத்திரம் பதிவு செய்யப்பட்டு இருப்பதைக் கண்டு புருவம் சுருக்கியவாறு அந்த காணொளியைப் பார்க்கத் தொடங்கியவனுக்கு தேகம் விறைத்து நடுக்கமுறத் தொடங்கியது.
அந்தக் காணொளியில் முகி கதறக் கதற, அவளை மரத்தில் கட்டி வைத்து பெட்ரோலை ஊற்றி அவளின் மீது நெருப்பை பற்ற வைத்து அவள் பற்றி எரிவதை அந்த வீடியோவில் கண்டவனுக்கு இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.
கரங்கள் நடுங்கி அவனுடைய கரத்தில் இருந்த அலைபேசியோ தரையில் நழுவி விழ, திக்பிரமை பிடித்தாற் போல அசைவற்று அவனுடைய லேப்டாப்பின் திரையையே வெறித்தவாறு நின்றான் சித்தார்த்.
முகியின் கதறல் அவனை முற்றிலுமாக உடைத்து நொறுக்கியது. என்னதான் தன்னுடைய உயிர் அவனுக்கு முக்கியமாக இருந்தாலும் சிறுவயதிலிருந்து தன்னுடன் வளர்ந்தவள் இப்படி தீக்கு இரையாவதைக் கண்டு அவனால் தாங்க முடியாது போனது.
தன்னை ஒரு தாய் போல வளர்த்து பார்த்துக் கொண்டவள் இப்படி துடி துடித்துக் கண் முன்னே எரிந்து கருகிச் சாம்பலானதை காணக் காண நொறுங்கிப் போனான் சித்தார்த்.
இப்படித்தானே அமுதாவும் அன்று துடித்தாள் என்ற எண்ணம் அந்த நொடியில் கூட அவனுக்குத் தோன்றவே இல்லை.
அடுத்த கனமே கோபம் கொதித்தெழ தந்தையிடம் கூட இதனைக் கூறாது மறைத்தவன் ருத்ராவை அலைபேசியில் அழைக்கத் தொடங்கினான்.
தீபக்கோ ருத்ராவின் போனை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்திருக்க மீண்டும் மீண்டும் அழைத்து கொலை வெறியாகிப் போனான் சித்தார்த்.
இரண்டு மணி நேரமாக ருத்ராவை தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போனவனுக்குள் இருந்த மிருகமோ வெளியே வந்திருந்தது.
அவன் உதிரமோ கொதிக்க தொடங்கியது. எல்லாம் இவளால்தான் இவள் திருமணம் செய்து கொள்வதற்காக எல்லோருடைய வாழ்க்கையும் நாசம் செய்து விட்டாள் என எண்ணி சீற்றத்தில் வெகுண்டெழுந்தவன் தீபக்கைத் தேடிச் செல்லத் தொடங்கினான்.
இதற்குக் காரணமான பீமாவையும் இன்றே கொன்று புதைக்க வேண்டும் என்ற வெறி அவனுள் வியாபித்திருந்தது.
*************
பீமாவோ சற்று நேரத்திலேயே படுக்கையில் படுத்து உறக்கத்தை தழுவி விட, அழுது அழுது சோர்ந்து போனவள் வேறு வழியின்றி பீமாவின் அலைபேசியை அவனுக்குத் தெரியாது கைப்பற்றிக் கொண்டாள்.
கரங்கள் நடுங்கியது..!!
இதயம் மிக மிக வேகமாக துடித்தது..!!
உடலோ அருவி போல வியர்வையை பொழியத் தொடங்கியது..!!
கண்களும் கண்ணீரை குளம் கட்டத் தொடங்கின…!!
உணர்வுகளோ அவளுக்கு எதிர்மறையாக செயற்பட வேறு வழி இன்றி பால்கனிக்குச் சென்று காவல்துறை அதிகாரிக்கு அழைப்பெடுத்தாள் முகிலாஷி.
அவர்கள் அழைப்பை ஏற்றதும் பீமா கிஷோரை சுட்டுக் கொலை செய்ததைக் கூறி, தன்னைக் கட்டாயத் தாலி கட்டி இங்கே வைத்திருப்பதாக கம்ப்ளைன்ட் கொடுத்தவள், அழைப்பைத் துண்டித்த மறுகணமே தரையில் மடங்கி அமர்ந்து கதறத் தொடங்கினாள்.
தன்னுடைய கரங்களில் முகம் புதைத்து கதறி அழுது கொண்டிருந்தவளின் சத்தத்தில் தூக்கம் கலைந்து எழுந்தான் பீமா.
பால்கனியிலிருந்து அவளுடைய அழுகைக் குரல் கேட்பதை உணர்ந்தவன் அவளை நோக்கி விரைந்து சென்றான்.
ஆற்றுவார் தேற்றுவார் இன்றி தரையில் மடிந்து அமர்ந்து அழுது கதறிக் கொண்டிருப்பவளைக் கண்டதும் அவன் உள்ளமோ ஒரு கணம் பாகாய் உருகிப் போனது.
‘கோபத்துல அதிகமா வார்த்தையை விட்டு அவளைக் காயப்படுத்திட்டேனா..?’ என எண்ணிக் கலங்கிப் போனான் அவன்.
அடுத்த நொடியே அவளை நெருங்கி கீழே அமர்ந்தவளை தன் கரங்களில் ஏந்தி கொண்டான் அவன்.
“டோன்ட் க்ரை பேபி.. நான் இனி உன்ன இப்படி ஹர்ட் பண்ண மாட்டேன். அழாதடி.” என்றவாறு அவளுடன் வந்து சோபாவில் அமர்ந்து தன்னுடைய மடியில் அவளை அமர்த்திக் கொண்டவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
அவனுடைய பரிவான வார்த்தைகளில் மேலும் கதறத் தொடங்கினாள் அவள்.
“ப்ச் இன்னும் எவ்வளவு நேரமாதான் அழுதுகிட்டு இருக்கப் போற..?” எனக் கேட்டவாறு அவளுடைய கண்ணீரைத் துடைக்க, அவளோ குற்ற உணர்ச்சியில் துடித்துப் போனாள்.
“சாரி பீமா…. ரொம்ப ரொம்ப சாரி….” என மீண்டும் அவள் பெருங் குரல் எடுத்துக் கதற, அவனுக்கோ விழிகள் பெரிதாக விரிந்தன.
“என்னாச்சு முகி…? எதுக்கு சாரி…” எனக் கேட்டவாறே மீண்டும் அவளுடைய விழிகளைத் துடைத்து விட்டான் அவன்.
அவளோ கூறியதையே திரும்பத் திரும்பக் கூறும் கிளிப்பிள்ளை போல மறுபடியும் மறுபடியும் அவனிடம் மன்னிப்பு கேட்ட வண்ணமே இருந்தாள்.
“சாரி முகி ஏதோ கோபத்துல அப்படி பேசிட்டேன். நீ அழாத…” என்றவனை கலக்கமாக பார்த்தவள், அடுத்த கணம் அவனைப் பாய்ந்து இறுக அணைத்துக் கொண்டாள்.
அவளுடைய இறுகிய அணைப்பில் அவனோ திகைத்துப் போனவன் அடுத்த கணமே தானும் அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
“சாரி பேபி நான் உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்ல….?” எனக் கேட்டவனுடைய இதழ்கள் அவளுடைய கழுத்தின் ஓரத்தில் அழுத்தமாக புதைந்தது..
“நான் பண்ணது தப்புதான். சித்தார்த் பண்ண தப்புக்கு உன்ன தூக்கிட்டு வந்தது ரொம்ப பெரிய தப்புதான். ரொம்ப படுத்தி எடுத்திட்டேனா பேபி?” என கவலையோடு கேட்டவாறு அவளுடைய முகத்தை பார்த்தவனை இதழ்கள் துடிக்கப் பார்த்தாள் முகி.
“என்னடி….?”
“உ… உங்களை கி… கிஸ் பண்ணட்டுமா…?” என அழுதவாறே கேட்டவளை திகைப்பாய் பார்த்தவன் சட்டென சிரித்தான்.
“இன்னைக்கு உனக்கு என்னாச்சு..?” எனக் கேட்டான் அவன்.
அவளுடைய மாறாத பார்வையில் நெகிழ்ந்து போனவன், “கிஸ் மீ முகி.” என்றவாறு தன்னுடைய கன்னத்தைக் காட்ட,
அடுத்த கணம் “சாரி பீமா…” என்ற கதறலோடு அவனுடைய இதழ்களில் தன்னுடைய இதழ்களை புதைத்துக் கொண்டாள் அவள்.
அவளுடைய இதழ் முத்தத்தில் இன்பமாய் அதிர்ந்தவன் அவளுடைய இடையை வளைத்து விழிகளை மூடி நிம்மதியாய் காதலாய் களிப்பாய் அவளுடைய முத்தத்தை ஏற்கத் தொடங்கினான்.
இறுகிப் போயிருந்த அவனுடைய உடலோ இளகி நெகிழ்ந்து அவளுடைய தொடுகையில் சீனிப் பாகாய் கரைந்துருகத் தொடங்கியது.
சற்று நேரத்திலேயே விம்மலோடு விலக முயன்றவளை மீண்டும் இழுத்து அவளுடைய இதழ்களை கவ்விச் சுவைக்கத் தொடங்கினான் அவன்.
நீண்ட நெடிய அந்த முத்தத்தில் பீமா தன்னை மறந்தான்.
தன் மடியில் அமர்ந்திருந்தவளை சோபாவில் சரிந்து அவளுடைய இடையில் முகம் புதைக்க, அவளிடம் இருந்து விசும்பல் வெளிப்படத் தொடங்கியது.
அதே கணம் செக்யூரிட்டியிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வர, அவளை ஆழ்ந்து முத்தமிட்டு விலகியவன் தன்னுடைய அலைபேசியை எடுத்து காதில் வைத்தான்.
அடுத்த கணமே “வாட்….?” என அலறியவாறு அவன் விரைந்து அறையை விட்டு வெளியே செல்ல வாய் விட்டு கதறி அழத் தொடங்கினாள் முகிலாஷி.
அந்த நொடி அவளுடைய நெஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்து போனான் பீமா.
*****************
தீபக்கின் வீட்டில் தீபக்கோடு கூடிக் களித்துவிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் ருத்ரா.
அதே கணம் அவனுடைய வீட்டின் ஹாலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்க யாரென எண்ணியவாறே எழுந்து சென்று கதவைத் திறந்தவன் வெளியே நின்ற சித்தார்த்தைக் கண்டதும் திகைத்தான்.
“ என்ன மச்சான் இந்த நேரத்துல வந்திருக்க..? உள்ள வா…” என்றவாறு அவனை உள்ளே அழைக்க, அவனோ முகம் முழுவதும் சீற்றத்தோடு உள்ளே வந்தான்.
“டேய் ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்க..? என்னாச்சு..?” எனக் கேட்டான் தீபக்.
“அந்த ××××××× பீமா என்னை பழிவாங்கிட்டான்டா…”
“என்னடா சொல்ற…?”
“நாம எப்படி அமுதாவை மரத்தில் கட்டி வெச்சு எரிச்சு கொன்னமோ அதே மாதிரி என்னோட தங்கச்சி முகியை அந்த பீமா மரத்துல கட்டி வெச்சு பெட்ரோல் ஊத்தி எரிச்சு கொன்னுட்டான்டா. அவ கதறக் கதற அதை வீடியோ எடுத்து எனக்கு அனுப்பி வெச்சிருக்கான் அந்த பரதேசி நாய். என்னால இதுக்கு மேலயும் பொறுத்துக்க முடியாதுடா. அவனை குடும்பத்தோட போட்டு தள்ளினாத்தான் என் மனசு ஆறும்.” என அந்த வீடு அதிர கர்ஜித்தான் சித்தார்த்.
அதே நேரம் சித்தார்த்தின் குரலைக் கேட்டு வெளியே வந்தாள் ருத்ரா.
அங்கே வந்த ருத்ராவைக் கண்ட சித்தார்த்தின் விழிகளோ அவளை சீற்றத்தோடு பார்த்தன.
“ஏய் எல்லாம் உன்னாலதான்டி. உன்னாலதான் என் தங்கச்சி செத்துட்டா.” என வெறி கொண்ட வேங்கையாக அவளை அடிக்கப் பாய்ந்தான் சித்தார்த்.
அவர்களுக்கு இடையே புகுந்து சித்தார்த்தை தடுத்துப் பிடித்தான் தீபக்.
ருத்ராவோ சித்தார்த்தின் ஆக்ரோஷம் கண்டு மிரண்டு போனாள்.
“என்னது முகி செத்துட்டாளா…?” என நம்ப முடியாது கேட்டவளுக்கு அந்த வீடியோவை காட்டினான் சித்தார்த்.
அதைப் பார்த்த ருத்ராவும் தீபக்கும் அதிர்ந்து போயினர்.
“நான் யாருன்னு இப்பவே அந்த பீமாக்கு நிரூபிக்கணும். என் தங்கச்சியை கொன்னவனை நான் சும்மா விட போறதில்லைடா.” என்றவாறு ருத்ராவை கூர்ந்து பார்த்தான் சித்தார்த்.
அவனுடைய பார்வையில் பதறிப் போனாள் ருத்ரா.
“இப்போ எதுக்காக என்ன நீ இப்படி பார்க்கிற..? நான் உன்னோட ஃப்ரெண்ட். இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லடா. நான் எப்பவோ வீட்டை விட்டு வந்துட்டேன். பீமா இப்படி பண்ணி இருப்பான்னு இப்ப கூட என்னால நம்ப முடியல. இதுல வேற ஏதோ இருக்கு. நீ இந்த வீடியோவை நம்பாத..” என கலக்கத்தோடு கூறினாள் ருத்ரா.
அவளை அலட்சியமான பார்வையால் எரித்தவன், தீபக்கை பார்த்து “உனக்கு நான் முக்கியமா..? இல்ல இந்த பீமாவோட பொண்டாட்டி முக்கியமா…?” என அழுத்தமாகக் கேட்டான்.
அந்தக் கேள்வியில் ருத்ராவுக்கோ உள்ளுக்குள் குளிர் எடுக்கத் தொடங்கியது. தீபக்கை நடுக்கத்தோடு பார்த்தாள் அவள்.
தீபக்கோ சற்றும் சிந்தியாது “எனக்கு நீதான் மச்சான் முக்கியம்.” எனக் கூற, ருத்ராவின் முகமோ நொடியில் வெளிறிப் போனது.
“ஏன்டா இப்படியெல்லாம் பேசுறீங்க..? நான் உங்க பிரண்ட்டுடா.” என நடுக்கத்தோடு கூறினாள் ருத்ரா.
அவளுடைய உடலோ அவளுடைய கட்டுப்பாட்டை மீறி கிடுகிடுவென நடுங்கத் தொடங்கியது.
“குட்…. உனக்கு நான்தானே முக்கியம் அப்போ இவ இந்த இடத்திலேயே சாகனும். அதை வீடியோ எடுத்து இவளோட புருஷன் பீமனுக்கு நான் அனுப்பனும்.” என்றான் சித்தார்த்.
சித்தார்த்தின் வார்த்தைகளைக் கேட்டுப் பயந்தவளுக்கோ இதயம் நின்று துடித்தது.
அடுத்த கணமே அங்கிருந்து தப்பி ஓட முயன்றவளை எட்டிப் பிடித்த சித்தார்த்தோ அவளுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
“வ்… வ்வேணாம்டா…. இதெல்லாம் ரொம்ப பெரிய பாவம்டா.. என்ன விட்டுருங்கடா.. என்ன இருந்தாலும் நான் உன் பிரண்டு டா..” எனக் கதறத் தொடங்கினாள் ருத்ரா.
“ஏய் ச்சீஈஈ… நிறுத்து… இவ்வளவு பிரச்சனையும் வந்ததே உன்னாலதான். இனி உன்னோட பிரண்ட்ஷிப் எங்களுக்கு தேவையே இல்லை.” என விகாரமாக சிரிக்கத் தொடங்கினான் சித்தார்த்.
மிரண்டு போனாள் ருத்ரா.
தீபக்கின் பார்வையோ கேலியோடு அவளை ஏறிட்டது.
“தீபக் நீயுமா…? ப்ளீஸ்… என்ன ஒன்னும் பண்ணிட வேணாம்னு சொல்லு… உனக்கு என்ன பிடிக்கும்ல.. ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணு.” என அழுகையோடு கூறினாள் ருத்ரா.
“சாரி பேபி எனக்கு உன்னைப் பிடிக்காது உன்னோட உடம்ப மட்டும்தான் பிடிக்கும்..” என்றான் தீபக்.
“ச்சே….!!! துரோகிங்களா… உங்களை எல்லாம் பிரண்ட்ஸ்னு நம்பினேன்ல எனக்கு இது தேவைதான்..” எனக் கதறத் தொடங்கினாள் அவள்.
“ஏய் பெரிய உத்தமி மாதிரி நடிக்கிறதை நிறுத்துடி..” என்றவன் தீபக்கைப் பார்த்து,
“கமான் தீபக் வீடியோ எடு…” என்றவாறு தன்னுடைய பாக்கெட்டினுள் வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்தவன் அடுத்த நொடியே கதறிக் கொண்டிருந்த ருத்ராவின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கித் தோட்டாவை இறக்கினான்.
கூடாத நட்போடு சேர்ந்ததன் விளைவு ருத்ராவின் உயிர் அக்கணமே அவளுடைய உடலை விட்டு பிரிந்து போனது.
அந்த வீடியோவை ஃபோனில் சேமித்தவன் “இதை நான் சொல்லும் போது பீமாக்கு அனுப்பு…” எனக் கூறிச் சிரித்தான்.
செய்த தவறை உணராது மேலும் மேலும் பாவம் எனும் சுமையை தீபக்கும் சித்தார்த்தும் சேமித்துக் கொண்டே வந்தனர்.
💜💙💙💜
