உயிரோடு விளையாடு அசுரா..!!

This entry is part 37 of 40 in the series உயிரோடு விளையாடு அசுரா

உயிரோடு விளையாடு அசுரா

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!


உயிர் – 42 
 
இசையை ரசித்த வண்ணம் மதுராவிற்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் அந்த தளத்தின் கதவு திறக்கவும் ஆர்வத்தோடு அவள்தான் வருகிறாள் என கதவை நோக்கித் தம் பார்வையை செலுத்தினர். 

ஆனால் அந்த மெழுகுவர்த்தியின் மெல்லிய வெளிச்சத்தில் கம்பீரமான நடையுடன் திடகாத்திரமான ஆண்மகனின் உடல் உள்ளே நுழைவதைக் கண்டதும் அந்த கயவர்களின் விழிகளோ யார் வருவதென கேள்வியாய் விரிந்தன.

பீமா உள்ளே நுழைந்த கணம் பட்டென அங்கிருந்த விளக்குகள் அனைத்தும் பிரகாசமாய் ஒளிர, அட்டகாசமான எள்ளல் சிரிப்போடு நடந்து வந்தவனைக் கண்டதும் உயிரே உறைந்து போனாற் போல இருந்தது அவர்களுக்கு. 

பீமாவுக்கு பின்னே முகியும் வருவதைக் கண்டவர்கள் அக்கணமே அந்த இடத்தை விட்டுத் தப்பிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு விரைந்து எழுந்தனர்.

சித்தார்த்தோ தன் பாக்கெட்டினுள் வைத்திருந்த துப்பாக்கியை சட்டென வெளியே எடுத்தான்.

அடுத்த நொடியே இதுவரை பியானோ மற்றும் வயலின் வாசித்துக் கொண்டிருந்த அந்த ஹோட்டலின் பணியாளர்களோ சட்டென துப்பாக்கியை எடுத்து தீபக்கையும் சித்தார்த்தையும் நோக்கிக் குறி வைக்க, அந்தக் கயவர்களோ இப்படி ஒரு திருப்பத்தை சற்றும் எதிர்பார்க்காது அசைவற்றுப் போயினர். 

சுற்றி உள்ள அனைவரும் பீமாவின் கையாட்கள் என்பது புரிய, அவர்களின் உடலோ வெளிப்படையாக அதிர்ந்து அடங்கியது.

அக் கணம் பீமாவோ பலமாகச் சிரிக்கத் தொடங்கினான். அவன் சிரித்த சிரிப்பினில் உயிர் கூடே காலியானது போல் இருந்தது அவர்களுக்கு
“இன்னும் ஒரு ஸ்டெப், ஒரே ஒரு ஸ்டெப் எடுத்து வச்சா கூட உங்களோட உயிர் உங்க உடம்புல தங்காது. பயப்படாதீங்க பாய்ஸ்.  நான் எதுவுமே பண்ண மாட்டேன்.  பட் என்னோட பசங்க ரொம்ப ரொம்ப கோபக்காரனுங்க. சுட்டுப் பொசுக்கிருவானுங்க. பார்த்து நடந்துக்கோங்க.” என இகழ்ச்சியாக கூறினான் பீமா.

சுற்றி நின்றவர்களோ எந்நேரமும் அவர்களைச் சுட்டுவிடக் கூடும் என்ற உண்மை புரிய வேறு வழியின்றி இருவரும் பீமாவின் முன்னே வந்து நின்றனர். சித்தார்த்தின் முகமோ சினத்தில் விகாரமாக மாறியது.

“என்ன பீமா என்னைப் பத்தி தெரிஞ்சும் இவ்ளோ தூரம் என்னத் தேடி வந்துட்டியா..? நீ என்னைத் தேடி வரல. உன்னோட மரணத்தை தேடி வந்திருக்க.” எனக் கூறினான் சித்தார்த். 

இவ்வளவு நேரமும் பீமாவின் பின்னே உடல் இறுகிப்போய் நின்றிருந்த முகியோ அடுத்த கணம் புயல் போல பொங்கி எழுந்து சித்தார்த்தை தாக்கத் தொடங்கினாள். 

முகி தள்ளிய வேகத்தில் சித்தார்த்தின் கரத்தில் இருந்த துப்பாக்கி கீழே விழுந்தது.

அங்கிருந்த அனைவரும் முகியின் ஆக்ரோஷத்தில் அதிர்ந்து போக, பீமா கூட ஒரு நொடி திகைத்துப்போய் நின்றான். 

முகிலாஷியோ அவர்கள் நின்ற மேஜைக்கு முன்னே இருந்த கண்ணாடிப் பிளேட்டை தன்னுடைய கரத்தில் எடுத்துக் கொண்டவள் வெறி கொண்டவள் போல கதறியவாறே அதைத் தூக்கி சித்தார்த்தின் தலையில் ஓங்கி அடிக்க, அந்த கண்ணாடிப் பிளேட்டோ உடைந்து சித்தார்த்தின் தலையில் இருந்து கொடகொடவென குருதி கொட்டத் தொடங்கியது. 

“பொண்ணுன்னா உங்களுக்கு அவ்ளோ கேவலமா போ… போச்சாடா…? நீயெல்லாம் உயிரோட வாழவே தகுதி இல்லாதவன்டா.. சாவுடா… செத்துப் போது… பரதேசிஇஇ…. ச்சீஈஈ” என்றவள் கண்மண் தெரியாது சித்தார்த்தை தாக்கினாள்.

தன்னைத் தடுக்க முயன்ற தீபக்கை தன் கையில் இருந்த உடைந்த கண்ணாடி பிளேட்டால் முகம் முழுக்க கீறி விட்டவள் அவர்கள் சுதாரித்து விலகும் முன்னே அவர்களின் முகம் முழுவதும் அந்தக் கண்ணாடித் துண்டுகளால் கீறி கிழிக்கத் தொடங்கினாள். 

சித்தார்த்தோ அலறி அவளை தள்ளிவிட முயல, அவனுடைய ஒற்றைக் கண்ணில் கண்ணாடித் துண்டை  ஆழமாக இறக்கியவள், வலியில் அலறியவனின் முகத்தில் காறி  உமிழ்ந்தாள்.

“த்தூஊஊஊ த்தூஊஊஊ…”

“உன்னையெல்லாம் ரோட்ல அம்மணமா ஓடவிட்டு கல்லால அடிச்சுக் கொல்லணும்டா.” எனக் கத்திய முகியை சித்தார்த்தோ எட்டி உதைக்க முயல,
 அடுத்த கணம் அவனுடைய மார்பில் எட்டி உதைத்த பீமாவோ, “என்னோட பொண்டாட்டி மேல இவனுங்க கை பட்டாலே ஷூட் பண்ணிருங்க.” என அவனுடைய ஆட்களுக்கு உத்தரவிட, தீபக்கோ ஸ்தம்பித்துப் போனான். 

இருவரின் முகமோ முகியின் செயலில் அகோரமான காயங்களோடு சிதைந்து போயிருந்தது.

அவளுக்கோ அது போதவில்லை போலும். அப்படியே அந்த இடத்திலேயே அவர்களை அடித்துக் கொல்ல வேண்டும் போல இருக்க, தான் அணிந்திருந்த செருப்பைக் கழட்டி பளார் பளார் என இருவரையும் ஓங்கி அடிக்கத் தொடங்கினாள் அவள். 

அவளுடைய ஹீல்ஸ்ஸோ அந்த முரடர்களைத் தாக்கி பிய்ந்து போனது.
 அதை எரிச்சலுடன் கீழே போட்டவள் அங்கிருந்த நாற்காலியைத் தூக்கி அவர்களின் மீது எறிந்தாள்.

அவளுடைய கையில் கிடைத்த பொருட்கள் யாவும் அந்தக் கயவர்களின் தலையை பதம் பார்த்தன. அவளைத் தடுக்க முடியாது அலறித் துடித்தனர் அவர்கள். 

முகியோ தன் கால் அருகே கிடந்த துப்பாக்கியை சட்டென குனிந்து எடுத்து சித்தார்த்தை நோக்கி குறி வைக்க, சித்தார்த்தோ அலறினான்.

“முகிஇஇஇ விட்ருடி ப்ளீஸ்… ஐ..ஐயோ என்னைக் கொன்னுராதா ப்ளீஸ்.” எனக் கதறினான் அவன்.

இவ்வளவு ஆக்ரோஷமாக முகி மாறக் கூடும் என அங்கிருந்தவர்களில் யாருமே  கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. 

துப்பாக்கியை எடுத்து அவர்களை சுட முயன்றவளின் கரத்தை எட்டிப் பிடித்தவன் அவளை இழுத்து தன்னோடு அனைத்து கொண்டான். 

அவளுடைய உடல்  சீற்றத்தில் நடுங்குவதை உணர்ந்தவனுக்கு அவளுடைய உணர்வுகள் தெள்ளெனப் புரிந்தது.

“முகி ரிலாக்ஸ் ரிலாக்ஸ்மா… நான் பார்த்துக்கிறேன்.” என்றவன் முகியின் கரங்களை அவசர அவசரமாக ஆராய்ந்தான். அவளுடைய கரத்தில் அவர்களின் உதிரம் ஏதும் பட்டிருக்கிறதா என ஆராய்ந்தவன் பின் அவளுக்கு ஏதும் அடி பட்டிருக்கிறதா என ஒரு இடம் விடாமல் அவசர அவசரமாக பரிசோதித்தான்.

அவளுக்கு சிறு காயம் கூட இல்லை என்றதன் பின்னரே நிம்மதிப் பெருமூச்சு விட்டவன் அவளை மீண்டும் அணைத்துக் கொண்டான். 

முகியோ அவனுடைய அணைப்பிலிருந்து விலகியவள், சித்தார்த்தை கொல்லும் முயற்சியில் துப்பாக்கியை உயர்த்த, “நோ வேணாம் முகி விட்ரு.” என்றான் பீமா. உடைந்து போனாள் முகி.

“மன்னிக்கவே முடியாத தப்பை செஞ்ச இவனுங்களை கொல்லாம விடக்கூடாது. இவனுங்களை கொன்னுட்டு நீங்க ஜெயிலுக்கு போறதை என்னால தாங்கவும் முடியாது. அதைவிட இந்த பாவிங்கள நானே கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடுறேன். தெரிஞ்சோ தெரியாமலோ இவன் பேச்சைக் கேட்டு உங்களை ஏமாத்தினேன்ல அதுக்குத் தண்டனையா இது இருக்கட்டும்.” என உதடுகள் துடிக்க அழுகையோடு கூறினாள் அவள்.

அவனுக்கோ முகியைக் கண்டு உள்ளம் உருகிப் போனது. அவளுடைய செயலில் தனக்கான நேசமும்  பொருந்தி இருப்பதை உணர்ந்து கொண்டவன் அவளுடைய காதல் உணர்ந்து சிலிர்த்துப் போனான்.

தீபக்கின் உடலோ வியர்வையில் குளிக்கத் தொடங்கியது. இப்படி வந்து சிக்கிக் கொண்டோமே என எண்ணி நொந்து கொண்டவன் இங்கிருந்து எப்படி தப்பிப்பது என சிந்திக்கத் தொடங்கினான்.  அவனுடைய சிந்தனைகள் மிக மிக வேகமாக தப்பிக்கும் திட்டங்களை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

சித்தார்த்தோ முகியின் எதிர்பார்க்காத தாக்குதலில் துவண்டு போயிருந்தான். சாது மிரண்டால் காடு கொள்ளாது.
 என்பதை அக்கணம் தெளிவாக உணர்ந்து கொண்டான் அவன். 

அவனுடைய கண்களில் இருந்தும் தலையில் இருந்தும் உதிரம் நில்லாது வழியத் தொடங்கியது.‌ உடல் முழுவதும் அளவற்ற வலியை முகியால் உணர்ந்தான் சித்தார்த்.

பீமாவோ முகியின் கரத்தில் இருந்த துப்பாக்கியை வலுக்கட்டாயமாக பிடுங்கி வைத்தவன், “இவனுங்களை இப்போ நாம கொல்லப் போறது இல்லை முகி.” என அழுத்தமாகக் கூறினான். 

பீமாவின் வார்த்தைகளில் முகியோ திகைத்து அவனைப் புரியாது பார்த்தாள். 

“ஆ… ஆனா இவனுங்களை சும்மா விடக்கூடாது பீமா..” என மெல்ல முனகியவளை தட்டிக் கொடுத்தவன் “வெயிட் பேபி…” என்றான்.

அவள் உடலோ சீற்றத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது. வழமையாக கோபத்தில் கொந்தளிக்கும் பீமாவோ இன்று அமைதியாக இருக்க,
 மென்மையின் சொரூபமாக விளங்கும் முகியோ காளியின் அவதாரத்தை எடுத்திருந்தாள்.

ஒற்றைக் கண்ணாடிப் பிளேட்டை வைத்து அவர்களை கொஞ்ச நேரத்துக்குள் உருக்குலைத்திருந்தாள் அவள். தலையில் உதிரம் சொட்ட, கண்களில் இருந்து உதிரம் வழிய, வலி தாங்க முடியாது தடுமாறினான் சித்தார்த்.

தீபக்கோ முகம் முழுவதும் ஏற்பட்ட கண்ணாடிக் கீறல் காயங்களிலும், அவள் செருப்பால் அடித்த அவமானத்தையும் தாங்க முடியாது சினத்தில் நின்றிருந்தான். முகியை அடித்தே கொல்ல வேண்டும் என்ற வெறி அவனுள் முகிழ்த்தது.

சிந்தனையில் மூழ்கிய தீபக்கின் முகத்தின் முன்பு சொடக்கிட்டு அழைத்த பீமாவோ, “ஓவரா திங்க் பண்ணாத தீபக்.. இங்கே என்னோட பர்மிஷன் இல்லாம எதுவும் நடக்காது. இப்போ நாம  பேசலாம். சிட்.” என நிதானமாக கூற, அவனுடைய நிதானம் கண்டு திகைத்தாள் முகிலாஷி.

தீபக்கும் சித்தார்த்தும் வேறு வழியின்றி அவன் காட்டிய இடத்தில் அமர்ந்தனர்.
 இந்த இடத்தில் இருந்து வெளியே செல்லும் வரைக்கும் பீமாவின் பேச்சுக்கு அடி பணிவது போல பாவ்லா காட்டி அவனுடைய கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு இங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டுமென எண்ணிக் கொண்டனர். 

“எ… எங்களை விட்ரு பீமா…” என்றான் தீபக்.

“ஆஹாங்…?” சிரித்தான் பீமா. அவன் அருகே இருந்த முகியோ இறுகிப் போயிருக்க, அவளுடைய கூந்தலை வருடி விட்டான் அவன்.

“உனக்கு எவ்ளோ பணம் வேணும்னாலும் தர்றேன்.” என்றான் சித்தார்த்.

“ஓஹ்…? எவ்ளோ தருவ..?” எனக் கேட்டான் பீமா.

“எத்தனை கோடி வேணும்னாலும் தரேன்.” என்றான் அவன். 

“வெல் எத்தனை கோடி தருவ..?” என மீண்டும் அழுத்தமாகக கேட்டான் பீமா. 
சித்தார்த்தோ தன்னுடைய உயிரின் மீது இருந்த ஆசையில் “இருபது கோடி போதுமா..?” எனக் கேட்டான். 

பீமாவின் அலட்சியப் பார்வையில் சட்டென குரலை உயர்த்தி “40 கோடி தர்றேன் எங்களை விட்ரு.” என்றான் சித்தார்த்.

“டீல் ஓகே.” என்றான் பீமா. 
பீமாவின் வார்த்தைகளைக் கேட்ட அந்த  நொடியே அக் கயவர்கள் இருவருடைய முகத்திலும் இருந்த மரண பீதி சட்டென விலகியது. 

“இப்பவே என் அக்கவுண்டுக்கு அந்த பணத்தை ட்ரான்ஸ்ஃபர் பண்ணு..” என்றான் பீமா. 

தன்னுடைய ஃபோனை எடுத்த சித்தார்த்தோ “இப்பவே ஆன்லைன்ல ட்ரான்ஸ்பர் பண்றேன். இல்லைன்னா அப்பாகிட்ட சொல்லி பணத்தை போடச் சொல்றேன்.” என்றவன் தன்னுடைய அக்கவுண்ட் பேலன்ஸ்ஸைப் பார்த்தவன் தன்னுடைய தலையில் இடி விழுந்தாற் போல திகைத்தான். 

எத்தனையோ கோடிகளை நிறைத்து வைத்திருந்த அவனுடைய வங்கிக் கணக்கோ துடைத்து வைத்த வெண்கலப் பாத்திரம் போல வெறுமையாக இருந்தது.

ஒற்றை பைசா கூட இல்லாத தன்னுடைய கணக்கைக் கண்டு அதிர்ந்து  விழித்தவன் பீமாவை பயத்தோடு பார்த்தான். 

“அப்பாக்கு கால் பண்ணட்டுமா..?” எனக் கேட்டான் சித்தார்த்.  

“தாராளமா பண்ணு. உன்கிட்ட இல்லன்னா கூட பரவாயில்லை. உங்க அப்பாவை அனுப்பச் சொல்லு.” என்றான் பீமா. 

பீமாவின் முன்னரே தன்னுடைய தந்தைக்கு அழைப்பெடுத்தான் சித்தார்த்.

அழைப்பை எடுத்த அடுத்த கணமே இவன் ‘அப்பா…’ என அழைக்க, தன் மகனின் குரலைக் கேட்ட சித்தார்த்தின் தந்தையோ, “எங்கடா போய்த் தொலைஞ்ச..? அப்படி என்னதான் பன்றியோ தெரியல. எத்தனை தடவை தான் உனக்கு கால் ட்ரை பண்றது..? நம்பர் வேற மாத்திட்ட. உன்னை இங்கே போலீஸ் தேடுறாங்க. உனக்கு அதாவது தெரியுமா இல்லையா..?” எனப் பொரிந்து தள்ளத் தொடங்கினார் அவர்.

“ப்ச் கொஞ்சம் வாயை மூடு கிழவா. எனக்கு அர்ஜெண்டா நாற்பது கோடி பணம் வேணும். உடனே என் அக்கவுண்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணு.” என கட்டளையாக கூறினான் சித்தார்த். 

“என்ன விளையாடுறியா பணம் என்ன மரத்துலையா காய்க்குது..” என்றார் சிம்மன்.

“டேய் பணம் வரலைன்னா உன்னை அப்பான்னு கூட பார்க்க மாட்டேன். அடுத்த டெட் பாடி நீதான்.” என்றான் சித்தார்த்.

அவனுடைய வார்த்தைகளில் அதிர்ந்து போனார் சிம்மன். மனமோ சட்டென வலித்தது அவருக்கு.

“சித்து நிஜமாவே அப்பாகிட்ட பணம் இல்லைடா. ஆல்ரெடி நம்ம பிஸ்னஸ் எல்லாம் லாஸ்ல போய்கிட்டு இருக்கு. நம்மளோட ஷேர் எல்லாம் வித்துதான் கம்பெனியை நடத்திக்கிட்டு இருக்கேன்.
 அதுக்கு கூட பணம் இல்லாம சக்கரவர்த்தி சார்தான் நம்ம கம்பெனியை டேக் ஓவர் பண்ணி நமக்கு ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருக்காரு. இப்போ என்கிட்ட சுத்தமா எந்த பணமும் கிடையாதுடா.” என்றார் சிம்மன்.

“வாட்…!! ஷேர்ஸ் எல்லாம் வித்திட்டீங்களா.? இது என் உயிர் பிரச்சனை தயவுசெஞ்சு விளையாடாதீங்க. எப்படியாவது பணத்தை அனுப்பப் பாருங்க.” எனப் பதறினான் சித்தார்த்.

“ஹேய் புரிஞ்சிக்கோடா. என்னால எதுவுமே பண்ண முடியாதுடா. நமக்கு பணம் வேணும்னா நம்ம கம்பெனியை டேக் ஓவர் பண்ணிய சக்கரவர்த்தி சார்கிட்டதான் கேக்கணும். அவர்கிட்ட கேட்டா கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவாரு. கம்பெனி லாஸ்ல போகும்போது அவர்தான் நிறைய உதவி பண்ணாரு. நான் அவர்கிட்ட கேட்டுட்டு உனக்கு கால் பண்றேன்.” என அழைப்பை துண்டித்தார் சிம்மன். 

சித்தார்த்தோ வியர்த்து விறுவிறுத்துப் போனான். அவனுடைய மூளையோ தெளிவாக யோசிக்கும் திறனை இழந்திருந்தது. 

பயம் எனும் சோர்வு அவனை ஆட்கொள்ள தீபக்கை திரும்பிப் பார்த்தான் அவன். அவனை விட மிரண்டு போயிருந்தான் தீபக். 

பெருமூச்சோடு பீமாவைப் பார்த்தவன் “எங்க அப்பாவோட ஃப்ரெண்ட் சக்கரவர்த்தி சார்கிட்ட கேட்டு எப்படியாவது நீ கேட்ட பணத்தை கொடுத்துர்றேன் எங்களை விட்ரு ப்ளீஸ்… நாங்க வாழணும்…”  என்றான் சித்தார்த்.

பீமாவோ அடுத்த கணம் அடக்க மாட்டாமல் அந்த தளமே அதிரும் வண்ணம் சிரித்தவன், “அந்த சக்கரவர்த்தியே நான்தான்டா. பீமச் சக்கரவர்த்திடா.” எனக் கம்பீரமாக மார்தட்டிக் கூறினான்.

அதைக் கேட்ட சித்தார்த்திற்கும் தீபக்கிற்கும் தலை சுற்றுவதைப் போல இருந்தது.

தப்பிக்க இருந்த ஒற்றை வழியும் இருளடைந்து மூடிக்கொண்டாற் போலத் தோன்ற, முதன்முறையாக உயிர் பயத்தில் நடுங்கத் தொடங்கினர் அவர்கள்.

“நா… நான் சா.. சாகக் கூடாது… நான் சாகவே கூடாது.. நான் சாக மாட்டேன்..” என உயிர் பயத்தில் உருப்போடத் தொடங்கினான் சித்தார்த்.

💜💙💙💜

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *