உயிரோடு விளையாடு அசுரா
உயிர் – 40
பீமாவின் அருகே விமானத்தினுள் அமர்ந்திருந்தவளின் முகமோ கலங்கிச் சிவந்திருந்தது. நடந்து முடிந்ததை ஏற்க முடியாது வேதனையில் இதழ்கள் துடிக்க அமர்ந்திருந்தாள் அவள்.
“ப்ச் ஏன்டி…?” என நூறாவது தடவையாக சலித்துக் கொண்டான் அவன்.
“ப… பயமா இருக்கு பீமா. நம்ம வீட்டுக்குள்ளேயே வ… வந்து பாம் வெச்சிருக்காங்கன்னா அவங்க எல்லாத்துக்குமே ரெடியா இருக்காங்கன்னு அர்த்தம்.” என்றவளின் குரலோ நடுங்கியது.
“லிசின் பேபி… இதெல்லாம் நான் ஆல்ரெடி எதிர்பார்த்ததுதான். அந்த வீட்ல யாருமே இல்லைடி. என்னை ஜெயில்ல இருந்து ரிலீஸ் பண்ணுறதுக்காக டாடி வந்தாருல்ல. அடுத்த நாளே அம்மாவை அவர்கூட அனுப்பி வெச்சிட்டேன். வெடிச்சது வெறும் வீடுதானே.? இதுக்காக ஏன் இவ்ளோ டென்ஷன்.” என்றவன் அவளுடைய கூந்தலை காதோரம் ஒதுக்கி விட்டான்.
“தெ… தெரியல பீமா.. ப.. பயமா இருக்கு…” என்றவளை கனிவாகப் பார்த்தவன் அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.
“நாம எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும் முகி. சாவைக் கண்டு பயப்படுறவன் கோழை. எதையும் தைரியமா ஏத்துக்கணும்.” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் அவள்.
“உளறாதீங்க பீமா. இந்த பழிவாங்குற படலம் எல்லாம் போதும். உங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா எ… என்னால தாங்க முடியாது. நான் கோழைதான் பீமா. எனக்கு சாவைக் கண்டா பயம்தான்.” என்றவள் கலங்கிய விழிகளுடன் திரும்பிக் கொண்டாள்.
“ப்ச் பேபி… நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துறாது. கூல்… என்ன நடக்கணுமோ அது கண்டிப்பா நடக்கும்.” என்றான் அவன்.
“அவனுங்களை கொல்றேன்னு நீங்க ஆபத்துல போய் மாட்டிக்காதீங்க பீமா…”
“ஹூஊம்ம்… தெரியல முகி. பட் அவனுங்களை கொல்லாம நான் ஓய மாட்டேன். அவனுங்களைக் கொன்ன பிறகு எனக்கு சாவு வருமா இருந்தா சந்தோஷமா அதை ஏத்துக்குவேன்.” என்றவனை வெறித்துப் பார்த்தாள் அவள்.
“ஓஹ்….????” என்றவள் அவனை விட்டு விலகி அமர்ந்தாள்.
அவள் மனமோ உள்ளுக்குள் தவிக்கத் தொடங்கியது. ‘என்கூட வாழணும்னு உங்களுக்கு ஒரு துளி கூட ஆசையே இல்லையா பீமா…? உங்க அம்முக்காக அவனுங்களை கொன்னுட்டு செத்தா கூட பரவால்லைன்னு சொல்றீங்க… என்னைப் பத்தி ஏன் யோசிக்கலை.? நீங்க இல்லைன்னா நான் எப்படி இருப்பேன்..?’ என தனக்குள் மருகியவள் மௌனமாகிப் போனாள்.
அவனுடைய குறிக்கோள் இலட்சியம் அனைத்துமே பழிவெறியாக மாறிப் போனதை உணர்ந்து கொண்டவள் தன்னைத் தானே தேற்றிக் கொள்ள முயன்றாள்.
விமானம் தரை இறங்கியதும் கோவாவில் இருந்த மிகப்பெரிய ஹோட்டல் ஒன்றிற்கு அவளை அழைத்துச் சென்றான் பீமா.
அந்த ஹோட்டலின் முன் பக்கம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வண்ண விளக்குகளின் இடையிடையே அழகான பூக்களை ஏந்திய தாவரங்கள் வரிசையில் இருக்க, இவை அனைத்தையும் ரசிக்கும் மனம் சற்றுமின்றி வெறித்த பார்வையுடன் ஹோட்டலினுள் அவனோடு நுழைந்தாள் முகி.
கோவா வந்திறங்கியது முதல் அவளுடைய மனமோ பதறிக் கொண்டே இருந்தது. ஏன் எதற்கு எனக் காரணம் புரியாது அடிக்கடி தன்னைத்தானே கடிந்து கொண்டவள் பீமாவின் செயல்களை ஒரக் கண்ணால் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையினுள் இருந்த படுக்கையில் அமர்ந்தவாறு தன்னுடைய ஷூவை கழற்றிய பீமாவின் பார்வையோ முகியின் அலைபாயும் விழிகளைக் கண்டு கொண்டன.
“பேபி ஆர் யு ஓக்கே…?”
“ம்ம்…” என்றாள் அவள்.
அதே கணம் அவர்களுடைய அறைக்கு அவர்களுக்கான உணவு வந்துவிட எழுந்து சென்ற கதவைத் திறந்து அதைப் பெற்றுக் கொண்டவன் மேஜை மீது வைத்தான்.
“நீ போய் பிரஷ்ஷாகிட்டு வா பேபி.” என்றவனை பார்த்து சரியென தலையசைத்தவள் தன் ஆடைகளை எடுத்துக்கொண்டு அந்த அறையில் இருந்த பாத்ரூமை நோக்கி நடந்தாள்.
உள்ளே சென்றவளுக்கு தான் துவாலையை எடுத்து வர வரவில்லையே என்ற எண்ணம் தோன்ற மீண்டும் அறைக்குள் வந்தவள், உணவு தட்டைத் திறந்து வைத்திருந்த பீமாவைக் கண்டு கேள்வியாகப் பார்த்தாள்.
அந்த உணவுத் தட்டில் உணவுக்குப் பதிலாக துப்பாக்கியும் புல்லட்டுகளும் இருப்பதைக் கண்டவளுக்கு உடல் தூக்கி வாரிப் போட்டது.
இலாவகமாக அந்த துப்பாக்கியை எடுத்து அதனுள் தோட்டாக்களை உட்செலுத்திக் கொண்டிருந்தவன் தன் பின்னே வந்து அதிர்ந்து நின்ற முகியைக் கண்டு சற்றே சீற்றத்தில் புருவத்தை உயர்த்தியவாறு, “நான் உன்னை பிரஷ்ஷாகத்தானே சொன்னேன். நீ இங்க என்ன பண்ற..?” என்ற அவனுடைய கர்ஜனையில் திகைத்து விழித்தவள் அவனைப் புரியாத பார்வை பார்த்தாள்.
“இங்கே எதுக்காக கன்..?” எனக் கேட்டவளின் குரலிலோ ஆயிரம் கவலைகள் தொக்கி நின்றன.
“சில கேள்விகளை அவாய்ட் பண்றது நல்லது டியர்ர்”. என முடித்துக் கொண்டான் அவன்.
அவனுடைய டியர் என்ற வார்த்தைகளில் அவளுக்கோ சட்டென உள்ளுக்குள் அச்சம் பிறந்தது.
அவள் கரத்தில் வைத்திருந்த ஆடைகளோ நழுவி தரையில் விழ, மிரண்டு விழித்தவாறு, “எ… என்னை டியர்னு கூப்பிடாதீங்க பீ.. பீமா… ப.. பயமா இருக்கு.” என உதடு துடிக்க கூறியவளை சட்டென நெருங்கியவன்,
“பேபிஇஇஇ என்னடி நீ…? இப்போ எதுக்காக என்கிட்ட பயம்..? என்னோட காதல் நீன்னு தெரிஞ்சப்புறமும் நீ என்னைப் பார்த்து பயப்பிடலாமா..?” என்றவன் அவளுடைய நெற்றியில் முத்தம் பதித்தான்.
“ம்ம்…”
“மை ஸ்வீட் கொத்தமல்லி..” என அவளுடைய கன்னம் கிள்ளிக் கொஞ்சியவன், விலகி நடக்க, வேகமாக அவன் முன்னே வந்து நின்றவள்,
“இங்கே எதுக்கு துப்பாக்கியை வர வெச்சீங்க..? எனக்கு காரணம் தெரியனும்.” என மீண்டும் தன்னுடைய குரலை சற்றே உயர்த்தி பரிதவிப்பு கலந்த கோபத்தோடு கேட்டாள் அவள்.
“முகி சில விஷயங்கள்ல நீ தலையிடாம இருக்கிறதுதான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது. உன்ன நான் பிரஷ் ஆயிட்டு வான்னு சொன்னேன். போ.. போய் ப்ரஷ் ஆகிட்டு வா. நாம் ஒன்னா சேர்ந்து சாப்பிடலாம்.” என்றவனை பதில் கூறாது மௌனமாக ஏறிட்டவள் அவனுடைய கரத்தில் இருந்த தோட்டாக்களையும் துப்பாக்கியையும் வெறித்துவிட்டு அமைதியாக பாத்ரூமினுள் நுழைந்து கொண்டாள்.
அவளுடைய மனதின் பதற்றமோ மேலும் அதிகரித்தது.
அவளுடைய உடலில் கொட்டிய நீரோடு விழிகளில் இருந்தும் உவநீர் வழிய, பல சிந்தனைகள் அவளுள் முட்டி மோதி எழுந்தன. அவன் கோவாவிற்கு ஹனிமூன் வரவில்லை என்பது வந்த முதல் நாளே அவளுக்குப் புரிந்து விட உள்ளே வலித்தது அவளுக்கு.
கலங்கிய விழிகளோடு குளித்து முடித்து வெளியே வந்தவள் இன்னொரு மேஜை மீது இருந்த உணவைப் பார்த்து பெருமூச்சு விட்டாள்.
பீமாவும் சற்று நேரத்தில் குளித்துவிட்டு வர, உணவை எடுத்து பரிமாறத் தொடங்கியவளை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான் அவன்.
அவனுடைய அணைப்பில் உடல் சிலிர்த்தாலும் தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டவள், உணவை அமைதியாக பரிமாற அவளுடைய பின் கழுத்தில் குட்டி குட்டி முத்தம் வைத்தவன், “என்னாச்சு என் பேபிக்கு…?” எனக் கொஞ்சலாக கேட்டான்.
அவனுடைய கொஞ்சும் மொழியில் சட்டென கண்கள் கலங்கிவிட வெளியே நீர் வழிந்து விடாது சிரமப்பட்டு உள்ளே இழுத்துக் கொண்டவள் ஒன்றுமில்லை என தலை அசைத்தாள்.
பரிமாறிய உணவுத் தட்டை தன் கரத்தில் எடுத்துக் கொண்டவள் அதனைப் பிசைந்து அவனுக்கு ஊட்டி விட, அதில் இன்பமாக அதிர்ந்து போனான் பீமா. அவள் கொடுத்த உணவுக் கவளத்தை நெகிழ்வோடு வாங்கிக் கொண்டவனுக்கு விழிகள் பணித்தன.
அவன் உண்டு முடித்ததும் கையை கழுவி விட்டு வந்தவளைப் பார்த்தவன், “நீ சாப்பிடலையா..?” எனக் கேட்டான்.
“இல்ல பீமா. எனக்கு பசிக்கல.” என்றவளுக்கு தானே உணவைப் பிசைந்து ஊட்டி விட்டவன் அவள் உண்டு முடித்ததன் பின்னரேயே அவளை விடுவித்தான்.
சற்று நேரத்தில் அவனுடைய அலைபேசிக்கு புது எண்ணில் இருந்து அழைப்பு வர அதனை ஏற்றவனின் கழுத்து நரம்புகள் புடைக்கத் தொடங்கின.
“இன்னும் த்ரீ மினிட்ஸ்ல நான் அங்க இருப்பேன்.” எனக் கூறியவன் தன்னுடைய பையைத் திறந்து டி-ஷர்ட் ஒன்றை எடுத்து அணிந்தவாறு வெளியே கிளம்பத் தயாராகினான்.
அதே நேரம் வலியில் அலறினாள் முகி. வெளியே கிளம்பத் தொடங்கியவன் அவளுடைய அலறலில் பதறியவாறு அவளை நோக்கி ஓடி வந்தான்.
“என்னாச்சு பேபி..?” என்றவனின் பார்வை பதற்றத்தோடு அவளை ஆராய தன்னுடைய கரத்தில் சிந்திய உதிரத்தை அவனிடம் காட்டினாள் அவள்.
அவளுடைய கரத்தில் இருந்த காயத்தை பார்த்து அதிர்ந்தவன், “ஓ காட்… பார்த்து பழத்தை கட் பண்ண மாட்டியா..?” என்றவாறு அவளுடைய கையில் இருந்த ஆப்பிளை எடுத்து மேஜை மீது வைத்துவிட்டு அவளுடைய கரத்தை மென்மையாக ஏந்திக் கொண்டான் அவன்.
அவளுடைய கரத்தில் இருந்த உதிரத்தை சுத்தப்படுத்தி அவளுடைய காயத்திற்கு மருந்திட்டு முடித்தவன், “இவ்வளவு ஆழமா எப்படி கட்டாச்சு..?” எனக் கேட்டான்.
“அது வந்துஉஉ…” என அவள் திகைத்து விழிக்க, அவனுடைய பார்வையோ கூர்மையாக மாறி அவளைத் துளைக்கத் தொடங்கியது.
சட்டென அவனிடமிருந்து தன் கையை உருவிக் கொண்டவள் விலகி நடக்கத் தொடங்க, காயம் படாத அவளுடைய மற்றைய கரத்தை இறுக்கமாக பிடித்து அவளை இழுத்தவன், “ஓ மை காட்…!!! வாட் இஸ் திஸ் முகி..? வேணும்னே பண்ணியா..?” என அதிர்ந்து கேட்க, தன் தலையைக் குனிந்து கொண்டாள் அவள்.
அவனுடைய முகமோ நொடியில் இறுகிப் போனது.
“ஏய் முட்டாளாடி நீ..? எதுக்காக இப்போ இப்படி பண்ண..? என்னதான் பிரச்சனை உனக்கு..? உன்னை நீயே காயப்படுத்துற அளவுக்கு என்ன நடந்துச்சு..?” எனக் கேட்டவனை விழிகள் கலங்க பார்த்தவள்,
“உங்களுக்கு எதுவும் ஆகிடுமோன்னு பயமா இருக்கு பீமா. மனசே சரியில்ல. ப்ளீஸ் என்ன விட்டுப் போகாதீங்க. ரொம்ப பதட்டமா இருக்கு. எனக்குன்னு இருக்கிறது நீங்க மட்டும் தானே. உங்கள நான் இழக்க விரும்பல.” என்றவள் அழுதே விட அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் அவன்.
தன்னை நினைத்து கலங்கித் தவிக்கிறாள் என்பது புரிய, அவனுடைய மனம் பாகாக உருகிப் போனது. அவளுடைய காயம் பட்ட கரத்தை தூக்கி மெல்ல தன் உதடுகளில் பொருத்தி எடுத்தவன்,
“இப்படி உன்ன நீயே ஹர்ட் பண்ணிக்காத பேபி ப்ளீஸ்…” எனக் கெஞ்சலுடன் கூறினான்.
“எனக்கு வலிக்கலை பீமா…”
“பட் எனக்கு வலிக்குதே பேபி.. இனி இப்படி பண்ணாத கண்ணம்மா.” என கரகரப்பான குரலில் கூறியவனை இறுக அணைத்துக் கொண்டவள் அவனுடைய மார்பில் முகத்தை புதைத்தவாறு சரி என்றாள். அவள் நேத்திரங்களில் அவன் நேசத்தால் உவர் நீர் கசியத் தொடங்கியது.
தன்னை அணைத்துக் கொண்டவளின் முகத்தை நிமிர்த்தி அவளுடைய நுனி மூக்கில் முத்தம் வைத்தவன் அவளுடைய கண்ணீர் வடிந்த கன்னங்களிலும் முத்தமிடத் தொடங்கினான்.
“பேபி நான் வெளியே போய்ட்டு சீக்கிரமா வந்துர்றேன்..” என்றவனை விழிகள் சுருங்கப் பார்த்தவள், அவன் கழுத்தை வளைத்து அவன் கன்னத்தோடு இழைந்தாள்.
“வலிக்குது பீமா…” எனத் தன் கையை உயர்த்தி அவனுக்கு காண்பித்தவள் அவனை விலக விடாது அணைத்துக கொள்ள, அவனுடைய இதழ்களோ சிரிப்பில் விரிந்தன.
“ஏய் கொத்தமல்லி என்னை வெளியே போக விடக்கூடாதுன்னு முடிவே பண்ணிட்டியா…? கேடி…” என்றவன் அவளுடைய காது மடலில் முத்தம் பதிக்க, சிலிர்த்துச் சிவந்தாள் அவள்.
“முகி… என்னோட சில முடிவுகளை யாராலையும் மாத்த முடியாது. நான் யாருக்காகவும் மாத்தவும் மாட்டேன். இப்போ நான் வெளியே போறதுலையும் எந்த மாற்றமும் இல்ல.” என்றதும் அவளுடைய முகமோ வாடியது.
“ஊஃப்….சரி…. உனக்கு த்ரீ மினிட்ஸ் டைம் தர்றேன். அதுக்குள்ள ரெடியாகி என்கூட நீயும் வா.” என்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டவள் சரி எனத் தலை அசைத்தாள்.
தன்னுடைய ஆடைகளை எடுத்தவாறே, “எங்க போறோம் பீமா…” எனக் கேட்டாள் அவள்.
“சித்தார்த்தை மீட் பண்ணப் போறோம்…” என்றதும் விதிர்விதிர்த்துப் போனாள் அவள்.
“பீ… பீமாஆஆ…????!!!!…”
“இன்னும் ரெண்டு நிமிஷம்தான் உனக்கு டைம்.. அதுக்குள்ள நீ வரலைன்னா நான் போயிருவேன்.” என்றான் அவன்.
அடுத்த கணம் குளிப்பதையே தவிர்த்தவள் ஆடையை மட்டும் மாற்றிக் கொண்டு அவன் அருகே வந்து நின்றாள்.
அவள் முகமோ இரத்தப் பசையற்று வெளுத்துப் போனது.
💜💙💙💜
