உயிரோடு விளையாடு அசுரா
உயிர் – 06
பீமாவின் அறையை விட்டு வெளியே வந்த ராஜேஸ்வரியின் முகமோ கோபத்தில் சிவந்து போய் இருந்தது.
அவரால் தன்னுடைய மகன் செய்த செயலை சற்றும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அவனை மிரட்டி காரியம் சாதிக்க முடியாது என நன்றாக அறிந்தவர் அமைதியாக வெளியே வந்திருந்தார்.
தாய் அறியாத சூல் இல்லை அல்லவா.?
அவருடைய கோபம் முழுவதும் தன் மகன் அழைத்து வந்திருந்த முகிலாவின் மீதே தேங்கி நின்றது.
பீமாவின் அறையில் இருந்த முகிலாஷியை தன் கரத்தால் அடித்துக் கொல்ல வேண்டும் போல இருந்தது அவருக்கு.
அவரின் அருகே இருந்த ருத்ராவோ அழுது கொண்டே இருந்தாள்.
“நீ அழாத ருத்ரா. அத்தை நான் பார்த்துக்கிறேன்.” என அவளுக்கு ஆறுதல் அளித்தார் ராஜேஸ்வரி.
“எப்படி அத்த அழாம இருக்க முடியும்.? அவர் பண்ணது கொஞ்சம் கூட சரியே இல்லையே. நான் இருக்கும் போதே இன்னொரு பொண்ணை கூட்டிக்கிட்டு வந்து இப்படி சொல்றது நியாயமா.? யாரோ ஒருத்திக்காக என்னை டிவோர்ஸ் பண்றேன்னு சொல்றாரு. சத்தியமா என்னால தாங்கிக்கவே முடியல அத்த. அந்த சிறுக்கி என்ன பண்ணி என் புருஷன மயக்கினாளோ தெரியல. அவ எல்லாம் நல்லாவே இருக்க மாட்டா.
நாசமா போவா…” என கோபமாக திட்டித் தீர்த்து சாபம் இட்டாள் ருத்ரா.
“அந்த சிறுக்கிய என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும் ருத்ரா. அதைப் பத்தி நீ யோசிச்சு கவலைப்படாத. நம்ம ஆளுங்கள வச்சு அவளைத் தூக்கிடலாம். அவ இருக்கிறதாலதானே என் மகனுக்கு அறிவு கெட்ட போச்சு. அப்படி என்னத்த காட்டி என் பையனை மயக்கினாளோ தெரியல.. என் பையனோட பணத்தை கண்டு பல் இளிச்சுகிட்டு வந்துட்டா போல. இந்த ராஜேஸ்வரி யார்னு அவளுக்கு காட்டுறேன். என்ன நடந்தாலும் நீ மட்டும்தான் இந்த சக்கரவர்த்தி குடும்பத்தோட மருமகள்.” எனக் கூறினார் ராஜேஸ்வரி.
அதே நேரம் தன்னுடைய அறையை விட்டு வெளியே வந்தான் பீமா.
பீமாவை பார்த்ததும் தன்னுடைய கண்களை துடைத்துக் கொண்டாள் ருத்ரா. அவளுடைய சீற்ற முகமோ சடுதியில் மாறிக் கொண்டது.
அவர்களை நோக்கி வந்தவன் தன்னுடைய தாயைப் பார்த்து “நீங்க இன்னும் கிளம்பலையா..?” எனக் கேட்டான்.
அவனை முறைத்துப் பார்த்தார் ராஜேஸ்வரி. அவருக்கோ பொறுமை பறந்து கொண்டிருந்தது.
“இது உங்க அப்பாக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்னு தெரியுமா.?” எனக் கேட்டார் அவர்.
“யாருக்குத் தெரிஞ்சாலும் எனக்கு பிரச்சனை இல்லை. பயமும் இல்லை. உங்களால முடிஞ்சதை பண்ணிக்கோங்க.” என்றான் பீமா.
“என்கிட்ட இல்லாத எதை அவகிட்ட கண்டு மயங்கினீங்க.?” என வெடித்தாள் ருத்ரா.
“மைண்ட் யுவர் வேர்ட்ஸ் ருத்ரா. நம்ம கல்யாணம் எந்த சூழ்நிலையில் நடந்துச்சுன்னு உனக்கே நல்லாத் தெரியும். அதை இன்னொரு தடவை நான் சொல்லித்தான் உனக்கு தெரியணும்னு இல்லை மரியாதையா என்னோட வாழ்க்கையை விட்டு விலகிரு அதுதான் உனக்கு நல்லது.”
“ஏன் மாமா…? அது உங்களுக்கும் தெரியும் தானே இவ்வளவு நாளும் நல்லா தானே இருந்தீங்க.? இப்போ மட்டும் என்ன நடந்துச்சு இப்போதான் நம்ம கல்யாண பிரச்சனை உங்களுக்கு ஞாபகம் வருதா.?” சீறினாள் அவள்.
“நான் எப்பவும் ஒரே மாதிரிதான் இருப்பேன். மத்தவங்கள மாதிரி நிமிஷத்துக்கு நிமிஷம் நிறம் மாற எனக்குத் தெரியாது.” என அழுத்தமாகக் கூறினான் பீமா.
“எந்த சூழ்நிலையில கட்டினாலும் தாலி தாலிதான். நீங்க தானே என்னோட புருஷன். அதை உங்களால மாத்த முடியுமா.? இப்போ திடீர்னு இன்னொருத்தி கூட வந்து அவள்தான் பொண்டாட்டி நீ இல்லன்னு சொன்னா அதை எப்படி என்னால ஏத்துக்க முடியும்.?”
“சோ வாட்…? இப்ப நான் என்ன பண்ணனும்னு சொல்ல வர்ற.?” எனக் கேட்டான் அவன்.
“அவளை இங்கிருந்து போகச் சொல்லுங்க மாமா.”
“சாரி ருத்ரா அவளை எங்கேயும் அனுப்ப முடியாது.”
“நா… நான் செத்துருவேன் மாமா. பரவாயில்லையா..?” என அழுகுரலில் கேட்டாள் அவள்.
“ஓஹ் ரியலி…? தாராளமா செத்துப் போ. அது உன்னோட விருப்பம். அடுத்தவங்க விருப்பத்தில் தலையிடுற பழக்கம் எனக்கு கிடையாது.” என்றதும் அங்கிருந்த ராஜேஸ்வரி அதிர்ந்து தான் போனார்.
“டேய் நீ எல்லாம் மனுஷனாடா.? யாரோ ஒருத்திக்காக தாலி கட்டிய பொண்டாட்டியை செத்துப் போன்னு சொல்ற. சே…!! உன்னை என் மகன்னு சொல்லவே எனக்கு வெட்கமா இருக்கு. எத்தனை நாளைக்கு அந்த பொண்ணு கூட இருக்கேன்னு நானும் பார்க்கிறேன். அவ உன்னை கழட்டிவிட்டதுக்கு அப்புறம் பொண்டாட்டி அம்மான்னு எங்ககிட்ட வருவ தானே. அப்ப புரியும்டா எங்களோட அருமை.” என்றதும் சட்டென சிரித்தான் பீமா.
அடுத்த நொடியே “ப்ளீஸ்மா போதும் எரிச்சலா இருக்கு. கிளம்புங்க.” என்றான்.
“இப்ப நாங்க பேசுறது உனக்கு எரிச்சலா தான்டா இருக்கும்.” என்றவர் ருத்ராவின் கரத்தை அழுத்தமாக பிடித்தபடி நடக்கத் தொடங்கினார்.
பீமாவைத் திரும்பித் திரும்பி பார்த்தவாறே கண்ணீரோடு அங்கிருந்து சென்றாள் ருத்ரா.
ருத்ராவின் மனமோ முகிலாஷியை அடியோடு வெறுக்கத் தொடங்கியது. அவளுடைய மனதில் ஆறாத வடுவாக பதிந்து போனாள் முகிலாஷி.
அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றதும் அந்த ஹாலில் குறுக்கும் நெடுக்கமாக நடக்கத் தொடங்கினான் பீமா. அவனுடைய விழிகளோ அனலை கக்கும் எரிமலை போல மாறிப் போயிருந்தன.
வரவேற்பறையின் ஆரம்பத்தில் இருந்த வளைவான படிகளில் ஏறியவன் மேலே மொட்டை மாடியை நெருங்கினான்.
அவனுடைய மனமோ கனத்துப் போனது. சொல்ல முடியாத துயரம் உள்ளுக்குள் இருந்து அவனை ரணப்படுத்த விழிகளை இறுக மூடி அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து கொண்டான் பீமா.
உறவுகள் என்பதை விட மனித வர்க்கமே அவனுக்கு கசந்தது. எவரையும் பிடிக்கவில்லை அவனுக்கு.
யாருமற்ற தனித் தீவில் சென்று வாழ்ந்தால் கூட நிம்மதியாக இருக்குமோ என எண்ணியவன் தன் கைமுஷ்டிகளை மடக்கி தன் தொடையில் ஓங்கிக் குத்தினான்.
அவனுடைய உடலோ அந்த வலியை சற்றும் உணரவே இல்லை. அவன் உடல்தான் வலிக்கு பழக்கப்பட்டு உணர்வுகளை தொலைத்து மரத்து போய் இருந்ததுவே.
மாடியில் குளுமையாக வீசிக் கொண்டிருந்த தென்றல் காற்று கூட அவனை குளிர்விக்கவில்லை.
எத்தனையோ தடவை அந்த கட்டுடல் கொண்ட ஆண்மகனை தழுவிப் பார்த்தும் அவனுடைய எண்ணங்களை தன்னை நோக்கி திசை திருப்ப முடியாது தோற்றுப்போன தென்றலோ வந்த திசையே சோர்வோடு திரும்பிச் சென்றது.
அவனுடைய உடலும் உள்ளமும் தான் என்றோ இரும்பாக இறுகிப் போயினவே.
சாதாரண தென்றல் காற்றால் அவனை இளக்கி குளிர்வித்து விட முடியுமா என்ன.?
ஆம் அவனுடைய வாழ்வில் இரண்டு திருமணம்தான்.
ஆனால் அந்த இரண்டு திருமணமும் அவனுக்கு சற்றும் பிடிக்காத பெண்களுடன் அல்லவா நிகழ்ந்து விட்டது.
ருத்ரா, முகிலாஷி இருவரையும் அடியோடு வெறுத்தான் அவன். ஒருத்தியை அளவுக்கு மீறிய வெறுப்பால் ஒதுக்கி வைத்தான். மற்றொருத்தியை அளவு கடந்த வெறுப்பால் தன்னுடைமையாக்கிக் கொண்டான்.
இந்த அளவு கடந்த வெறுப்பு விருப்பாக மாறுமா.?
******
சூறாவளி அடித்து ஓய்ந்தாற் போல இருந்தது அந்த அறை. அவளோ அந்த அறையின் ஒரு மூலையில் அமர்ந்து தன் முழங்கால்களில் முகத்தை புதைத்தவாறு விசும்பிக் கொண்டிருந்தாள்.
வேறு என்ன தான் அவளால் செய்ய முடியும்.? அந்த அரக்கன்தான் கொஞ்சம் கூட ஈவு இரக்கமற்றவனாக இருக்கின்றானே.
அவனிடம் கதறியும் மன்றாடியும் மிரட்டியும் எந்த பயனும் கிடைக்காது என தெள்ளத் தெளிவாக தெரிந்து கொண்டவள் தன்னுடைய மன அழுத்தத்தை கண்ணீரின் மூலம் குறைக்க முயன்று கொண்டிருந்தாள்.
அந்தோ பரிதாபம் கண்ணீர் வற்றியதே தவிர அவளுடைய மன அழுத்தமும் வலிகளும் சற்றும் குறையவே இல்லை.
அதிலும் பீமாவின் அன்னை பேசிய வார்த்தைகள் யாவும் அவளுடைய செவிகளை மீண்டும் மீண்டும் வந்து மோதி அவளை நிலைகுலையச் செய்தன.
அவர் பேசிய வார்த்தைகள் யாவும் அமிலத்தை காய்ச்சி செவிதனில் ஊற்றியதைப் போல் அல்லவா இருந்தது.
தன்னுடைய வீட்டில் மிகச் செல்லமாக வளர்ந்த முகிலாஷிக்கோ இப்படிப்பட்ட தரக்குறைவான வார்த்தைகள் யாவும் இதுவரை கேளாதவையே.
கெட்ட வார்த்தைகள் எனத் தெரிந்து வைத்திருந்தவளுக்கு அதை தன்னிடமும் ஒருவர் பிரயோகிக்க கூடும் என கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. நடந்து முடிந்த நிகழ்ச்சிகள் யாவும் அவளை உயிரோடு கொன்று புதைத்தன.
தன்னுடைய திருமணம் என ஆவலோடும் பல ஆசைக் கனவுகளோடும் இருந்தவளுக்கு ஏமாற்றங்களும் அதிர்ச்சிகளும் வலிகளும் மாத்திரமே வந்து குவிந்து கொண்டிருந்தன.
எங்கிருந்தோ திடீரென வந்து குதித்த இந்த அரக்கன் கிஷோரை சுட்டதும் அல்லாமல் தன்னைக் கட்டாயத் தாலி கட்டியது வரை எண்ணித் தாங்க மாட்டாமல் அழுது புலம்பினாள் அவள்.
அவள் தரையில் இருந்து விசும்பி விசும்பி அழுவதை பார்த்தவாறே உள்ளே நுழைந்தான் பீமா.
அவனுடைய முகமும் தீவிரமான சிந்தனையை தத்தெடுத்திருந்தது.
“ஏய் எதுக்கு இப்போ ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்க.? சத்தம் வந்துச்சுன்னா கொன்னு புதைச்சிடுவேன்.” என வீடதிர கத்தினான் அவன்.
அவனுடைய கர்ஜனையில் தன் இரு கரங்களாலும் தன் வாயை அழுத்தமாக பொத்திக் கொண்டவள் அப்படியே முழங்கால்களில் தன் முகத்தை கவிழ்த்தாள்.
வாயை மூடி சத்தத்தை அடக்கினாலும் அவளை மீறி வெடித்தது கேவல்.
அவனோ அழுத்தமான காலடிகளுடன் அவளை நெருங்கியவன் அவளின் கரத்தைப் பிடித்து இழுத்து தன் கரங்களுக்குள் அவளைக் கொண்டு வந்தான்.
அவனுடைய செயலில் அதிர்ந்து நின்றவள் அடுத்த கணமே வெறுப்போடு அவனைத் தள்ளி விட்டாள்.
அவனுடைய ஒற்றைத் திண்டலில் தன் மேல் சகதி பட்டாற் போல அருவருத்து போனாள் அவள்.
அவனோ அவனுடைய முகச்சுழிப்பை பார்த்து சிரித்தவன் அவளைத் தன் கரங்களில் மீண்டும் ஏந்திக் கொண்டான்.
விம்மி வெடித்துக் கதறியவளை படுக்கையில் கிடத்தியவன் அவளுடைய முகத்தை கூர்ந்து பார்த்தான்.
அவளுடைய கண்களில் நில்லாமல் வழிந்து கொண்டே இருந்தது கண்ணீர்.
அவளுடைய மலரினும் மென்மையான இரண்டு பட்டுக் கன்னங்களும் கைவிரல் அடையாளங்கள் பட்டு சிவந்து வீங்கிப் போயிருந்தன.
அவன் அடித்ததும் அவனுடைய அன்னை அடித்ததும் நினைவிற்கு வர அவளை விட்டு விலகியவன் நிமிர்ந்து படுத்து விட்டத்தை வெறித்தான்.
தன் மீதிருந்து அவன் எழுந்ததும் பதறியவாறு கட்டிலில் இருந்து இறங்க முயன்றவளை இழுத்துப் பிடித்து மீண்டும் படுக்கையில் கிடத்தியவன் “அப்படியே படு..” என ஆணையிட்டான்.
அவனுடைய கட்டளையில் தேகம் நடுங்க அசையாது கிடந்தாள் அவள்.
அடுத்த கணம் அவனுடைய கரங்கள் அவளுடைய புடவையை வலுக்கட்டாயமாக அகற்றத் தொடங்கின.
“என்னை விட்ருங்களேன் சார்.. இது ரொம்.. ரொம்ப… த… தப்பு..” கை கூப்பி மன்றாடினாள் அவள்.
“இப்போதைக்கு உன்னை விடுறதா ஐடியாவே இல்லை டியர்.” என்றவன் அவள் துடிக்க துடிக்க அவளுடைய ஆடைகளை மொத்தமாக களைந்திருந்தான்.
💜💙💙💜
