உயிரோடு விளையாடு அசுரா..!!

This entry is part 19 of 40 in the series உயிரோடு விளையாடு அசுரா

உயிரோடு விளையாடு அசுரா

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!




உயிர் – 20
 
ராஜேஸ்வரியின் குரல் வெளியே கேட்ட பின் சில நொடிகள் கழித்து கதவைத் திறந்தவன் தன் அன்னையையும் அவரின் அருகே நின்ற ருத்ராவையும் பார்வையால் என்னவெனக் கேட்டான்.

“அவள எதுக்குடா இங்கே அழைச்சிட்டு வந்த.?” சீற்றம் பொங்கக் கேட்டார் ராஜேஸ்வரி.

“என் பொண்டாட்டி என் கூடதானே இருப்பா.” என்றான் அவன்.

“அப்போ நான் யாரு..?” எனச் சீறினாள் ருத்ரா.

“நீ யாருன்னு உனக்குத்தானே தெரியும்.” என அவளை அர்த்தம் பொதியப் பார்த்தான் பீமா.

அந்தப் பார்வையில் ருத்ராவின் இதயமோ தடதடத்தது.

“பீமாஆஆஆஆ..” என அதட்டினார் அவனுடைய அன்னை.

“இப்போ எதுக்கு நீங்க ரெண்டு பேரும் இந்த அளவுக்கு கொந்தளிக்கிறீங்க.?” என நிதானமாகக் கேட்டவன் அவர்கள் இருவரையும் அழுத்தமாக பார்த்தான்.

“என்னோட வாழ்க்கைக்கு நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்க மாமா.?” எனக் கண்ணீர் வடித்தாள் ருத்ரா.

“அதை நான் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்லை.
 கல்யாணத்தன்னைக்கே எனக்கு விருப்பம் இல்லைன்னு சொன்னேன். நீயும் அம்மாவும் சேர்ந்து வற்புறுத்தித் தானே இந்த கல்யாணத்தையே நடத்தி வச்சீங்க. உங்க ரெண்டு பேரோட இஷ்டத்துக்கு வாழ்றதுக்கு நான் என்ன ஜடமா.?” என அழுத்தமாகக் கேட்டவன் தன்னுடைய தாயின் புறம் திரும்பினான்.

ராஜேஸ்வரியோ பீமாவை விலக்கிவிட்டு அவனுடைய அறைக்குள் நுழைந்தவர் அங்கே சோபாவின் அருகே நின்ற முகிலாஷியைக் கோபமாக நெருங்கினார்.

“ஏய்.. யாரைக் கேட்டுடி இந்த வீட்டுக்குள்ள வந்த.? இங்க வர்றதுக்கு உனக்கு கால் கூசலையா.?” என்றவரை மிரண்டு போய் பார்த்தாள் முகிலாஷி.

“ம்மா எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசுங்க.” என்றான் பீமா.

‘ஆமா இந்த காட்ஸில்லா தான் என்னை இங்கே தூக்கிட்டு வந்தான். அவன்கிட்டயே பேசிக்கோங்க.’ என மனதினுள் கூறிக் கொண்டாள் முகி.

“உன்கிட்ட பேசி இனி எந்த பிரயோஜனமும் இல்லைன்னுதான் தெரிஞ்சிருச்சே.” 

“வெல், முகி இங்கேதான் இருப்பா.” என உறுதியாகக் கூறினான் அவன்.

“ஆமா ஆமா… போற போக்கைப் பார்த்தா இவ எங்க எல்லாரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டு இவ மட்டும்தான் இந்த வீட்ல இருப்பா போல. ருத்ராவையே வீட்டை விட்டு வெளியே போன்னு சொல்லிருக்கான்னா இவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்.?” என்றார் ராஜேஸ்வரி.

“வாட்..? ருத்ராவை வெளியே போக சொல்லி முகி சொன்னாளா.? இது எப்போ.?” என்றவனின் பார்வை கூர்மையாகியது.

ருத்ராவோ பதறிப் போனாள். 

‘ஐயோ இந்தக் கிழவி வேற நம்மளை மாட்டி விட்ரும் போலயே..’ என எண்ணியவள் திணறித்தான் போனாள்.

ராஜேஸ்வரியோ, “ஆமா, என்னோட மருமகளையே இவ வீட்டை விட்டு வெளியே போன்னு சொல்லிருக்கா.” என்க,

“ஓஹோ…. அப்படின்னா அந்த வீட்டுக்கு ருத்ரா போயிருக்கா ரைட்.?” என்றவனின் பார்வை தீப்பிழம்பாய் மாறியது. 

“முகிஇஇஇஇ இவ அங்கே வந்தாளா..? இவளா உன்னை வெளியே தள்ளி விட்டாள்.?” என சீற்றத்தோடு கேட்க, முகியோ ஒரு முறை தயங்கி ருத்ராவைப் பார்த்தாள்.

ருத்ராவின் பார்வையோ முகியை சொல்லாதே என மிரட்ட, அந்தப் பார்வையில் கடுப்பாகிய முகியோ, நடந்தவை அனைத்தையும் கொட்டிக் கவிழ்த்து விட, அடுத்த நொடியே பீமாவின் கரமோ ருத்ராவின் கழுத்தை இறுக்கியிருந்தது.

அவனுடைய கரத்தின் அழுத்தம் தாங்காது ருத்ரா துடிக்க, அடுத்த கணமே ச்சை என உதறி அவளை விடுவித்தான் பீமா.

“உனக்கு அறிவு இருக்கா இல்லையா ருத்ரா.? உன்னை விட அவ சின்னவ. அவளைப் போய் நாய்ங்களுக்குள்ள தள்ளி விட்ருக்க. ச்சே…” எனக் கர்ஜித்தவனை முகியோ வெறித்துப் பார்த்தாள்.

‘ஏதோ இவரு ரொம்ப நல்லவரு மாதிரியே அவளைத் திட்றாரு.’ என எண்ணிக் கொண்டவள் பெரு மூச்சொன்றை வெளியேற்றினாள்.

“இந்த அநியாயத்த பாருங்க அத்த. இவளுக்காக என்னைக் கொல்லப் பார்க்கிறாரு.” எனக் கதறியவள் அழுது கொண்டே அங்கிருந்து ஓடினாள்.

ராஜேஸ்வரியோ முகிலாவைப் பார்த்து விரல் நீட்டி எச்சரித்தார்.

“இன்னும் பத்தே நாள்ல உன்னை இங்கிருந்து விரட்டி அடிக்கலைன்னா என் பேரு ராஜேஸ்வரி இல்லைடி.” என்றவாறு அவரும் சென்று விட, முகிக்கோ இப்போது சிரிப்பாக இருந்தது. 

‘தெய்வமே பத்து நாள்ல என்னை இங்கே இருந்து அனுப்பி வெச்சா உனக்கு புன்னியமா போகும். சீக்கிரமா இங்க இருந்து எஸ்கேப் ஆகிரலாம்.’ என எண்ணி மகிழ்ந்தாள் முகிலாஷி.

தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்ட ருத்ராவின் உடலோ எரிமலை குழம்பில் மூழ்கி எழுந்தது போல எரிந்து கனன்று கொண்டிருந்தது.

பீமாவோ அவர்கள் சென்றதும் கதவைத் தாழ் இட்டவன், “ருத்ரா வந்ததை என்கிட்ட ஏன் நீ சொல்லலை.?” எனக் கேட்டான்.

“எதுக்கு சொல்லணும்.? அவங்க அப்படிதானே பண்ணுவாங்க. எல்லா முதல் பொண்டாட்டியும் என்னை மாதிரி வப்பாட்டியை இப்படித்தான் அடிச்சு விரட்டுவாங்க.” என்றவளுக்கு விழிகள் கலங்கியன.

அவளுடைய வார்த்தைகளில் வலியை உணர்ந்த பீமாவின் கரங்களோ, அவளை இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டன.

“முகி…. நான் உரிமையா தொட்டது உன்னை மட்டும்தான். என்னோட முதல் முத்தமும் நீதான். முதல் அணைப்பும் நீதான். எனக்கு மனைவின்னா அது நீ மட்டும்தான்டி.” என்றவனின் குரல் ஏகத்துக்கும் கலங்கிப் போயிருந்தது.

அவனுடைய கலங்கிய குரலிலும் அவன் கூறிய வார்த்தைகளிலும் திகைத்து நின்றவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன், “எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டாங்க முகி…” என்றான்.

“எ… என்ன….?” எனத் திணறியவளின் வதனத்தை தன் கரங்களில் ஏந்திக் கொண்டவன், “சீக்கிரமா உன்னை இங்க இருந்து அனுப்பி வெச்சிடுறேன்.” என்றான்.

அந்த வார்த்தைகளில் முகம் மலர்ந்தவள் சரி எனத் தலை அசைக்க, சட்டென ஒளிர்ந்த அவளுடைய விழிகளைப் பார்வையால் வருடியவன், அடுத்த கணம் அவளுடைய இதழ்களில் தன் இதழ்களைப் புதைத்துக் கொண்டான்.

பதறி விலக முயன்றவளின் மெல்லிய இடையோ அவனுடைய இரும்பை ஒத்த கரங்களுக்குள் சிக்கி விட, விடுபட போராடினாள் மங்கை. 

அவளுடைய இதழ்களைப் பிளந்து நாவெனும் ஆயுதத்தால் அமிர்தம் கடைந்து அவளை அவன் ருசிக்க, முகிலாஷியின் விழி நீரோ கன்னத்தில் இறங்கத் தொடங்கியது.

வெகு நேரம் கழித்தே அவளை விடுவித்தான் பீமா.

அவன் விடுவித்ததும் அழுகையோடு தன் புறங் கையால் தன்னுடைய இதழ்களை அழுந்தத் துடைத்துக் கொண்டவள், அவனை வெறுப்போடு பார்த்தவாறு பின்னால் நகர்ந்து நின்றாள்.

“முகி….” என்றவாறு அவளை நெருங்கி வந்தவனைக் கண்டு உடல் வெடவெடத்துப் போனவள், “கி… கிட்ட வராதீங்க பீமா… எ… எனக்கு பிடிக்கலை.” என்றாள் அவள்.

அவளுடைய வார்த்தைகளில் கனிந்திருந்த அவனுடைய முகம் நொடியில் இறுகிப் போனது. அடுத்த கணம் தன் தலையைக் கோதியவாறு குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான் அவன்.

***********

தன் அறைக்குள் நுழைந்த ருத்ராவுக்கோ அத்தனை கோபத்திலும் சட்டென கண்ணீர்த் துளிகள் அவள் விழிகளில் இருந்து துளிர்த்து நில்லாமல் வழியத் தொடங்கின.

வஞ்சத்தோடு அதனை துடைத்து விட்டவளின் முழுக் கோபமும் முகிலாஷியின் மீது திரும்பியது. 

‘நான் மிரட்டின மிரட்டுக்கு இந்தப் பக்கம் தலை வைச்சுக்கூட படுக்க மாட்டான்னு நினைச்சேன். ஆனா என் வீட்டுக்குள்ளேயே நுழைஞ்சு என்னையே எதிர்க்க ஆரம்பிச்சுட்டாளே. இதுக்கு மேல இவளை சும்மா விட்டு வச்சா முதலுக்கே மோசம் ஆகிரும்.” என எண்ணியவள் தன்னுடைய ஃபோனை எடுத்து தனது நண்பன் ரவியை அழைக்கத் தொடங்கினாள்.

மீண்டும் மீண்டும் முயன்றும் அவனுக்கு அழைப்பு செல்லாது இருக்க அவளுடைய புருவங்களோ சிந்தனையால் சுருங்கின.

மீண்டும் இரு முறை ரவிக்கு அழைப்படுத்தவள் அவனிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றதும்  எரிச்சல் அடைந்து தன்னுடைய ஃபோனைத் தூக்கிப் படுக்கையில் விட்டெறிந்தாள்.

“ஷிட்… இவன் எங்க போய்த் தொலைஞ்சான்னு தெரியலையே.” என்றவாறு தன் தலையைப் பற்றிக் கொண்டவள் தன்னுடைய ஃபோன் ஒலிப்பதைக் கண்டு ரவிதான் அழைக்கிறான் என எண்ணி மகிழ்ந்து போனாள். 

ஆவலுடன் ஃபோனை எடுத்து பார்த்தவளின் முகமோ நொடியில் இருண்டு போனது. 

உள்ளம் பதறித் துடிக்க கரங்கள் நடுங்க அந்த அழைப்பை ஏற்காது விட்டவள் படுக்கையில் தொப்பென அமர்ந்தாள்.

அவளுடைய இதயத் துடிப்பின் ஓசை வெகு சத்தமாக வெளியே கேட்க, அவளுக்கு நொடிக்கு நொடி பதற்றம் கூடிக் கொண்டே போனது.

“ஐயோ இப்போ இவன் எதுக்கு கால் பண்றான்னு தெரியலையே.” தலையில் கை வைத்தவாறு அமர்ந்து விட்டாள் ருத்ரா.

நின்று போன அவளுடைய தொலைபேசி அழைப்போ மீண்டும் அழைப்பு வந்ததன் அறிகுறியாக ரீங்காரமிட அதற்கு மேல் அவனுடைய அழைப்பை ஏற்காது இருந்தால் பெரும் ஆபத்து தன்னை சூழ்ந்து கொள்ளும் என்பதை அறிந்து கொண்டவள் படபடப்புடனேயே அந்த அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.

“ஹாய் பேபி ஐ மிஸ் யூ சோ மச்….” என்றது மறுமுனையில் இருந்த ஒரு ஆணின் குரல்.

“இப்போ எதுக்கு எனக்கு கால் பண்ண.? உன்னை கால் பண்ணவே கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல.” எனச் சீறினாள் ருத்ரா.

“அதான் ஆல்ரெடி சொன்னேனே ஐ மிஸ் யூ சோ மச் னு அதான் கால் பண்ணினேன்.” எனச் சாதாரணமாகக் கூறினான் தீபக்.

“தீபக் ப்ளீஸ் சொன்னா புரிஞ்சுக்கோ. நான் ஆல்ரெடி நிறைய பிரச்சனைல இருக்கேன். இப்போதைக்கு என்னால வேற எந்த பிரச்சினையையும் சமாளிக்க முடியாது.” என்றாள் ருத்ரா.

“உன்னோட பிரச்சினையைப் பத்தி யோசிக்கிறதுக்கெல்லாம் எனக்கு டைம் கிடையாது பேபி. நான் கேட்டதை கொடுத்தீன்னா என்னோட தொல்லை உனக்கு இருக்காது.” எனச் சின்ன சிரிப்போடு மொழிந்தான் அவன்.

“என்ன விளையாடுறியா நீ….? நினைச்ச நேரத்துல நீ கேட்டதை எல்லாம் அள்ளிக் கொடுக்குறதுக்கு நான் என்ன கோடீஸ்வரியா.?” என எரிந்து விழுந்தாள் ருத்ரா.

“பின்னே இல்லையா நீ தான் கோடீஸ்வரனோட பொண்டாட்டியாச்சே. அப்போ நீயும் கோடீஸ்வரிதானே.” எனக் கொக்கி போட்டு நிறுத்தினான் தீபக்.

“ஸ்டாப் இட் தீபக் ஆல்ரெடி உனக்கு  இருபது லட்சம் கொடுத்துட்டேன். இதுக்கு மேலயும் ஒத்த பைசா கூட என்னால தர முடியாது தயவு செஞ்சு என்னோட வாழ்க்கைல குறுக்க வராத.” எனக் கத்தினாள் ருத்ரா.

“ஓ மை பேபி என்கிட்ட குரல் உயர்த்தி பேசுறதுன்னா நீ எந்த தப்புமே பண்ணாத உத்தமியா இருந்திருக்கணும் தப்பு மேல தப்பு பண்ண நீ எல்லாம் என்கிட்ட குரலை உயர்த்திப் பேசவே கூடாது இட்ஸ் ஓகே உன்னால தர முடியலைன்னா நோ ப்ராப்ளம். நான் நேரடியா உன்னோட ஹஸ்பண்ட் கிட்டயே வாங்கிக்கிறேன்.” என்றான் தீபக். 

அவனுடைய வார்த்தைகளில் நடுங்கிப் போனாள் ருத்ரா. 

பீமாவுக்கு மாத்திரம் அவள் செய்த விடயங்கள் தெரிய வந்தால் தன்னை உயிரோடு எரித்து விடுவான் என எண்ணி அஞ்சியவள் தீபக்கிடம் மிஞ்சிப் போவதை விட கெஞ்சி போவதே சிறந்தது என்பதை புரிந்து கொண்டு சட்டென தன் குரலை தாழ்த்திக் கொண்டாள்.

“ஹேய் ரிலாக்ஸ் தீபக். ரிலாக்ஸ்… நான் சும்மா சொன்னேன். இப்ப என்ன உனக்கு பணம் தானே வேணும்.? கொஞ்சம் டைம் கொடு எப்படியாவது ரெடி பண்ணி கொடுத்துடுறேன்.” என்றாள் ருத்ரா.

“அப்படி வா வழிக்கு. இப்போதான் நீ என் பேபி மாதிரி கியூட்டா பேசுற.” என சிரித்தான் தீபக்.

ருத்ராவுக்கு அவனைக் கண்டம் துண்டமாக வெட்டிக் கொல்ல வேண்டும் போல வெறியே எழுந்தது. இருந்தாலும் தன்னை மிக சிரமப்பட்டு அடக்கிக் கொண்டவள் வேறு வழியின்றி அவனோடு அமைதியாக உரையாடத் தொடங்கினாள்.

“இப்போல்லாம் உன் ஸ்மெல் இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு பேபி.. உன்கூட ஒன்னா இருந்தே நாலு மாசத்துக்கு மேல ஆகிருச்சு.”

“ப்ச்…. லீவ் இட் தீபக்.”

“நாம மறுபடியும் மீட் பண்ணலாமா பேபி…?” எனக் காமம் பொங்கக் கேட்டான் தீபக்.

“பீமாக்கு தெரிஞ்சா நம்ம ரெண்டு பேரையும் கொன்னே போட்ருவான் பரவால்லையா.?” என சீறினாள் அவள்.

“ஏன் உன் புருஷன் ஃபாரின் போனதுக்கப்புறம் என்கூட வந்து நாள் முழுக்க என்ஜாய் பண்ணதெல்லாம் மறந்து போச்சா பேபி..?”

“எனக்கு எதுவுமே மறக்கலை தீபக்.” என பல்லைக் கடித்துக் கொண்டு பதில் கூறினாள் அவள்.

“அப்போ வர்ற சன்டே நாம ஃபன் பண்ணலாமா..?” 

“சரிடா வந்து தொலைக்கிறேன். இப்போ ஃபோனை வை.” என்றாள் ருத்ரா.

💜💙💙💜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *