உயிரோடு விளையாடு அசுரா..!!

This entry is part 39 of 40 in the series உயிரோடு விளையாடு அசுரா

உயிரோடு விளையாடு அசுரா

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!

உயிரோடு விளையாடு அசுரா..!!


 
உயிர் – 44
 
தீபக்கோ தன்னுடைய வாழ்க்கையே சீரழிந்து விட்டது என எண்ணிக் கதறிக் கதறி அழ, சித்தார்த்தோ அழக் கூட சக்தி அற்றவனாக பீமாவையே வெறித்த வண்ணம் சிலையாக அமர்ந்திருந்தான்.

பீமாவோ இருக்கையில் இருந்து எழுந்தவன் தன்னுடைய ஷர்ட்டின்  கைப்பகுதியினை மேலே உயர்த்தி விட்டவாறு தன்னுடைய ஆட்களில் ஒருவனைத் தன்னருகே அழைத்தான்.

“பாஸ்…?”

“குணா நீ முகியைக் கூட்டிட்டு என்னோட காருக்குப் போ.”

“பீமா நீங்களும் வாங்க.” என்றாள் அவள்.

“நீ குணாகூட போ முகி. த்ரீ மினிட்ஸ்ல நான் உன் பக்கத்துல இருப்பேன்.” என்றவன் குணாவுடன் முகியை அனுப்பி வைத்தான்.

முகி அந்த அறையை விட்டு வெளியேறிய அடுத்த கணமே தன்னுடைய கைமுஷ்டிகள் வீங்கும் அளவுக்கு அந்த இருவரையும் ஓங்கி முகத்தில் குத்தத் தொடங்கினான் பீமா. 

அவனுடைய ஆத்திரம் கோபம் தீரும்வரை விடாது அவர்களை காயப்படுத்தியவன் அவர்களை விட்டு விலகும் போது இருவரின் முகமோ சிதைந்து போயிருந்தது. 

“இவனுங்க ரெண்டு பேரோட பேன்டையும் கழட்டுங்க.” என பீமா உத்தரவிட, அங்கே நின்ற அவனுடைய ஆட்களோ ஓடி வந்து அவன் கூறியதைச் செய்தனர். 

அதைத் தடுக்க கூட முடியாத நிலையில் துவண்டு போய் கிடந்தனர் தீபக்கும் சித்தார்த்தும்.

இருவருடைய கீழ் ஆடைகளையும் கழற்றிய பின்னர் அவர்களுடைய ஆணுறுப்பில் தன்னுடைய ஷூ அணிந்த காலால் மிதித்து அதை சேதப்படுத்தியவன் “இனி நீங்க ஆம்பளைங்கன்னு வெளியே சொல்லக்கூடாது. இந்த நோயோட எவகிட்டையும் போகவும் கூடாது.” எனக் கர்ஜித்தான்.

உச்சகட்ட வலியில் அலறித் துடித்து அந்த இருவரும் மயங்கிப் போக, அவர்களை விட்டுத் தள்ளி நின்றவன், 

“இவனுங்களை பக்கத்துல இருக்க ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணுங்க. எக்காரணம் கொண்டும் ஒருத்தன் கூட செத்துறக்கூடாது. இவனுங்கள அட்மிட் பண்ணும் போது இவங்க எய்ட்ஸ் நோயாளின்னு ஹாஸ்பிடல்ல மென்ஷன் பண்ணிருங்க. 

இவனுங்கள ஹாஸ்பிடல்ல சேர்த்த அடுத்த நிமிஷமே நீங்க அங்கிருந்து வெளியே வந்திரணும். உங்களுக்கான பிளைட் டிக்கெட் எல்லாமே ரெடி பண்ணிட்டேன். எல்லாமே இந்த பேக்ல இருக்கு எடுத்துக்கோங்க. ஜாக்கிரதை எல்லாமே பிளான் பண்ண மாதிரிதான் நடக்கணும். 

இதுல உங்களுக்குத் தேவையான பணம் வச்சிருக்கேன். என்கிட்ட வேலை பார்த்த அத்தனை பேருக்கும் அவங்களுக்கு என்னென்ன தேவையோ அதை பண்ணி வச்சிருக்கேன். பத்திரங்களும் இருக்கு எடுத்துக்கோங்க. என் கூட இத்தனை வருஷம் உண்மையா இருந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ். இனி இந்த பீமாவ நீங்க பாக்க மாட்டீங்க.” என்றவனை விழிகள் கலங்க பார்த்தனர் அவர்கள்.

அடுத்த நொடியே அவர்களைப் பார்த்து விடைபெறும் நோக்கில் தலை அசைத்தவன் சித்தார்த்தையும் தீபக்கையும் பார்த்து இகழ்ச்சியாக இதழ்களை வளைத்தான். 

அக்கணம் அந்த அறையின் மூலையில் அமுதா நின்று கை தட்டிச் சிரிப்பதைப் போன்ற விம்பம் தோன்ற, பீமாவின் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்தன.

அமுதாவோ மெல்ல பீமாவை நெருங்கி வந்து அவனுடைய கரம் பற்றி அவனுடைய கரத்தில் அன்பு முத்தம் பதிக்க, அக்கணம் அவனுடைய கரமோ சிலிர்த்தது.

“தேங்க்ஸ் பீமாண்ணா..” என்ற அவனுடைய அம்முவின் குரல் அவனுடைய காதோரம் ஒலிக்க, விழிகளை இறுக மூடிக் கொண்டான் பீமா.

மூடிய விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது. சட்டென விழிகளைத் திறந்தான் அவன். அவனுடைய அம்முவை எங்கும் காணவில்லை. பெருமூச்சு விட்டவன் அடுத்த கணமே அங்கிருந்து வெளியேறினான்.

வெளியே காத்துக் கொண்டிருந்த காரினுள் நகத்தைக் கடித்தவாறு பதற்றத்தோடு அமர்ந்திருந்தாள் முகிலாஷி. பீமா காரில் வந்து அமர்ந்த பின்னரே அவளுக்கு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது. 

அடுத்த கணம் சிறு விசும்பலோடு அவனுடைய தோளில் தலை சாய்த்தவள் விழிகளை நிம்மதியாக மூடிக் கொண்டாள். 

‘முடிந்தது இந்த உயிர்வதைப் போராட்டம் இத்தோடு முடிந்தது.’ என எண்ணியவளுக்கு ஒரு துளிக் கண்ணீர் விழியோரம் வழிந்தது.

இதழ்களைக் கடித்து தன் விழி நீரை அடக்க முயன்றாள் அவள்.  ஆனால் சற்று நேரத்திலேயே அவளுடைய சிறு விசும்பலோ பெரும் கதறலாக மாறியது. 

விம்மி வெடித்து அவனுடைய மார்பில் புதைந்து கதறி அழுதாள் அவள். அவளுடைய அழுகையில் பதறிப் போனான் பீமா. 

“ஹேய் என்னாச்சு கண்ணம்மா..?” எனக் கேட்டவனின் கரமோ அவளை இறுக அணைத்துக் கொண்டது. 

“ந.. நம்ம ரூமுக்கு போகலாம் ப்ளீஸ்.” என குரல் நடுங்க கூறியவளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டவன் அடுத்த கணமே காரைத் தங்களுடைய அறையை நோக்கிச் செலுத்தத் தொடங்கினான். 

அதற்குள் அவள் தன் கண்ணீரை துடைத்து விட்டு தன்னை சமப்படுத்திக்கொள்ள அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலும் வந்து விட்டிருந்தது. 

கீழே இறங்கி அவளுக்காக கார்க் கதவை திறந்து விட்டான் பீமா. மெல்ல அவனுடைய முகத்தைப் பார்த்து சிறு புன்னகையை உதிர்த்தவள் அவனுடைய கரத்தை பற்றியவாறு அந்த அறையினுள் நுழைந்தாள். 

“முதல்ல குளிச்சிட்டு வா.” என்ற பீமாவின் கூற்றுக்கு சரியென தலையசைத்தவள் குளித்து முடித்துவிட்டு வந்திருக்க,  அவனும் குளித்து முடித்து வேறு ஆடையில் அவளின் முன்னே வந்து நின்றான்.

“சாரிடி….” என்றவனின் குரல் ஏகத்துக்கும் கலங்கியிருந்தது.

“ஏன் பீமா…? ஏன் சாரி..?” எனப் புரியாமல் கேட்டாள் அவள்.

அடுத்த கணம் அவளை நெருங்கியவன் அவள் அருகே சென்று தரையில் மண்டியிட்டு அமர, பதறிப் போனாள் அவள்.

“அச்சோ என்ன பண்றீங்க பீமா எழுந்திருங்க.” என படபடப்போடு கூறியவளை பார்த்து இதழ் பிரியாது புன்னகைத்தவன்,

“தப்பு பண்ண எல்லாருக்கும் தண்டனை கொடுத்துட்டேன். ஆனா உன்னை உன்னோட இஷ்டம் இல்லாம கல்யாணம் பண்ணி தூக்கிட்டு வந்து நான் பண்ண கொடுமைக்கு எனக்கு என்ன தண்டனை கொடுக்கிறதுன்னு சத்தியமா புரியலடி.. எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நிம்மதியா மூச்சு விடக் கூட முடியல முகி.  

என்னை நானே வெறுத்துருவேனோன்னு பயமா இருக்குடி. உன்னைப் பார்க்கும் போதெல்லாம் உன்னோட அழுகைதான் ஞாபகம் வருது. உன்னைக் கதறக் கதற டிரஸ் அவுத்திருக்கேன். மரத்தில் கட்டிப் போட்டுருக்கேன். பெட்ரோல் ஊத்திருக்கேன். ரொம்ப கொடுமை பண்ணிட்டேன்ல.” என்றவனின் குரல் கமறியது.

“நான் மட்டும் நல்லவனா என்ன.? அடுத்தவனுக்கு தண்டனை கொடுக்கிறதுக்கு எனக்கு என்ன தகுதி இருக்கு..? எனக்கு ஏதாவது தண்டனை கொடுடி. நீ கொடுக்கலைன்னா நானே எனக்கு கொடுத்துப்பேன்.” எனக் குரல் உடையக் கூறினான் பீமா.

பல நாட்களாக அவனுடைய மனதை வருத்திக் கொண்டிருந்த விடயத்தை அவள் முன்னே போட்டு உடைத்தான் அவன். அவன் செய்ததும் தவறுதானே.
 சித்தார்த்தை தண்டிக்க எந்தப் பாவமும் செய்யாத முகியை வருத்தியது எத்தகைய பெரும் பிழை என எண்ணியவன் முதன் முறையாக தன்னவளுக்காக அவள் முன்பே மண்டியிட்டிருந்தான். 

இதுவரை எவரின் முன்பும் தலை குனியாதவன் தன்னவளின் முன்பு தலை குனிந்து பாவ மன்னிப்புக் கேட்டான். தன்னவள் அன்று கண்ணீர் வடித்ததுக்கு தானும் அல்லவா காரணம். அவனுடைய அதரங்களோ மீண்டும் “சாரிடி சாரி…” என முணுமுணுத்தன.

அவனுடைய வார்த்தைகளில் கண்களில் கண்ணீர் வடிய, தொப்பென அவன் முன்னே தரையில் அமர்ந்தவள் அவனை இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். 

எத்தனைக் கம்பீரமான தன்னவன் தனக்காக மண்டியிடுவதா.? தாளவில்லை அவளுக்கு.

“இல்ல பீமா… நீங்க எனக்கு நல்லதுதான் பண்ணிருக்கீங்க. நீங்க மட்டும் அன்னைக்கு எனக்கு கட்டாயத் தாலி கட்டலைன்னா ஒரு சின்னப் பொண்ணை கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம ரேப் பண்ணிக் கொன்ன கொடூரனுக்கு மனைவியா இருந்திருப்பேன். 

அப்படி மட்டும் நடந்திருந்தா என்னோட வாழ்க்கையே நாசமா போயிருக்கும் பீமா.
வார்த்தையால சொல்ல முடியாத அளவுக்கு கேவலமான குணத்தோடு இருக்க எங்க அண்ணாவை பத்தி கடைசி வரைக்கும் எனக்கு தெரியாமலேயே போயிருக்கும். எங்க அப்பாவை என்னோட ரோல் மாடலா நினைச்சேன்.
 பட் அவர் எவ்ளோ பெரிய சுயநலவாதின்னு உங்களாலதான் தெரிஞ்சுக்கிட்டேன். இந்த உலகத்தில இப்படியும் கேவலமானவங்க இருக்காங்கன்னு உங்க மூலமாகதான் தெரிஞ்சுக்கிட்டேன் பீமா.

நீங்க மட்டும் என்னோட வாழ்க்கைல வரலைன்னா இப்போ வரைக்கும் நான் அவங்க கூட நரகத்திலதான் முட்டாள் மாதிரி வாழ்ந்துகிட்டு இருந்திருப்பேன். 

உண்மை தெரியாமல் வாழ்ற போலி சந்தோஷம் எனக்கு தேவையே இல்லை. உண்மைய சொல்லணும்னா நீங்க எனக்கு நல்ல ஒரு வாழ்க்கையை கொடுத்திருக்கீங்க. காதலை கொடுத்திருக்கீங்க. கட்டாயத்தாலி கட்டினா கூட என்னோட விருப்பம் இல்லாம என்னை எடுத்துக்க முயற்சி பண்ணவே இல்ல. உங்களைப் போல நல்ல குணம் படைச்ச மனுஷன் எங்க தேடினாலும் எனக்கு கிடைக்காது பீமா.
 நான்தான் உங்களுக்குத் தேங்க்ஸ் சொல்லணும்.” என்றவள் அழுகையோடு அவனுடைய கன்னம் தாங்கி தாடி அடர்ந்த அவனுடைய கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்தாள்.

“உங்களை நீங்களே தண்டிச்சுக்கிட்டா நா.. நான் செத்திருவேன் பீமா.. உங்க வலியைத் தாங்குற சக்தி எனக்கு நிச்சயமா இல்ல.” என்றாள் அவள்.

அவளுடைய வார்த்தைகளில் அவனுக்கோ உடல் சிலிர்த்து விழிகள் பணித்தன. சேற்றில் விளைந்த செந்தாமரை இவள் என நெகிழ்ந்து போனான் அவன்.

அவனுடைய கலங்கிய விழியில் மென் முத்தம் பதித்தாள் அவள்.

அந்த ஒற்றை முத்தத்தில் அவளுடைய நேசம் அப்பட்டமாக வெளிப்பட்டது.

அவளுடைய வார்த்தைகளில் அவனுடைய மனதில் இருந்த துயரங்கள் முற்றிலுமாக மறைய, தன் மார்பில் சாய்ந்திருந்தவளை இறுகத் தழுவி உச்சி முகர்ந்தான் அவன்.

சற்று நேரம் அவர்களிடையே பெரும் அமைதி நிலவியது. முத்தங்களும் ஆரத் தழுவல்களும் கண்ணீரும் அவர்களிடையே விஞ்சிப் போனது. 

இருவரும் காதலால் நெகிழ்ந்த அழகிய தருணம் அது..!!

சற்று நேரத்தின் பின் அவளை விட்டு விலகியவன்,

“ஏன் முகி கார்ல அப்படி அழுத..?” எனக் கேட்டான்.

“வேணாம் பீமா.. அதைப் பத்தி நாம பேச வேணாம்.” என்றாள் அவள்.

“ப்ச் சொல்லுடி..”

அவளோ கசப்பாக புன்னகைத்தவள், “இ… இதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு பீமா. அமுதாவோட சாவு, அந்த சாவுக்கு பழிவாங்குறதுக்காக இறந்து போனவங்க. எத்தனையோ வக்கிரமான முகம், சகிக்கவே முடியாத சில காட்சிகள் அப்படி இப்படின்னு கொஞ்ச நாளா மனசுல இது மட்டும்தான் ஓடிகிட்டே இருக்கு. என்னால இதெல்லாம் தாங்க முடியல. 

எனக்கு நிம்மதியா சந்தோஷமா மூச்சு விடனும் போல இருக்கு. யாரைப் பார்த்தும் கோபப்படவோ யாரைப் நினைச்சும் கவலைப்படவோ நான் தயாரா இல்லை. நமக்காக ஒரு வாழ்க்கை. அதுல நீங்களும் நானும் மட்டும் இருக்கணும். உங்களுக்காக நானும் எனக்காக நீங்களும் நமக்காக நம்ம பசங்களும் வாழனும்னு ஆசைப்படறேன். இதுக்கு மேல என்னால எந்த கொலையையும் தாங்கிக்க முடியாது பீமா. 

நான் ரொம்ப தைரியமானவ மாதிரி இன்னைக்கு நடந்துகிட்டேன். ஆனா அது நிஜம் கிடையாது. நான் ரொம்ப ரொம்ப பலவீனமானவ பீமா. என் கையெல்லாம் நடுங்குது. நெஞ்செல்லாம் படபடன்னு வருது. எனக்கு இதெல்லாம் வேணாம். இந்த உயிரோட விளையாடும் விளையாட்டே வேணாம். ப்ளீஸ்…” என்றவள் ஏங்கி ஏங்கி அழத் தொடங்கினாள். 

அவளுடைய மனநிலையை தெளிவாக புரிந்து கொண்டான் பீமா. அவளை மெல்லத் தூக்கிப் படுக்கையில் கிடத்தியவன், அவள் அருகே படுத்து அவளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டான். அழுதவளின் விழி நீரை துடைத்து அவளுடைய கூந்தலை கோதி விட்டவன்,

“சரி இப்போ உனக்கு என்ன வேணும்..?” எனக் கேட்டான் பீமா. அவனுடைய செவிகளோ அவளுடைய விருப்பங்களைக் கேட்க கூர்மையாகின.

அவனுடைய மார்பில் தன்னுடைய முகத்தை அழுத்தமாக புதைத்துக் கொண்டவள், 

“நமக்குன்னு எந்த பிரண்ட்ஸும் வேணாம். அதே மாதிரி எந்த எதிரிகளும் வேணாம். நமக்காக சண்டை போட எந்த அடியாட்களும் வேணாம். ஆடம்பர வாழ்க்கை வாழ இந்த பணமும் வேணாம். சின்னதா ஒரு வீடு. யாருக்குமே தெரியாத ஒரு இடம். இவ்வளவு பெரிய பணக்காரனான்னு பார்க்கிற அளவுக்கு அங்க இருக்க யாருக்குமே உங்களைப் பத்தி தெரிஞ்சிருக்கக் கூடாது.” அவளுடைய கோரிக்கைகளைக் கேட்டு அவனுடைய இதழ்களோ புன்னகையில் விரிந்தன.

“இந்த டைமண்ட் டீலர் எனக்கு வேணாம். இந்த நகைகளும் எனக்கு வேணாம்.  மோசமான கடந்த காலமும் வேணாம். இதுக்கு மேல எந்த ரத்தத்தையும் நான் பார்க்க விரும்பல. அமைதியா நிம்மதியா சந்தோஷமா உங்க கூட வாழனும்னு ஆசைப்படறேன். எங்கேயாவது என்ன கூட்டிட்டு போயிருங்க பீமா. இது எதுவுமே நமக்கு வேணாம். எனக்காக என்னோட காதலுக்காக என்னை மட்டுமே முக்கியமா நினைச்சு இதைப் பண்ணுவீங்களா..?” என ஏக்கமாகக் கேட்டாள் முகிலாஷி.

அவனோ எந்தவித பதிலும் கூறாது போக, அவனுடைய முகத்தையே கலங்கிய விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தவளின் இதழ்களில் ஆழ்ந்து முத்தமிட்டான் பீமா.

சற்று நேரத்தில் விழிகள் கலங்க மீண்டும் அவனுடைய மார்பில் முகம் புதைத்தாள் அவள்.

அவனுடைய மார்பில் முகம் புதைத்தவாறு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தாள் முகிலாஷி. தன் மார்பில் உறங்கும் குழந்தையை வெகுவாக இரசித்தான் பீமா.

ஆம் அவள் குழந்தைதான்..!!

இந்த அரிமாவிற்கு அவள் என்றுமே குழந்தைதான்…!!

💜💙💙💜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *