உயிரோடு விளையாடு அசுரா
உயிர் – 45
ஆறு நாட்களுக்குப் பின்…!!
பீமாவும் முகியும் பீமாவின் வேலை நிமித்தமாக ஆஸ்திரேலியாவின் மெல்போன் நகருக்கு வந்திருந்தனர்.
விமான நிலையத்திலிருந்து டாக்ஸி ஒன்றைப் பிடித்து குறிப்பிட்ட இடத்திற்கு வந்தவன் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு அந்த வீட்டினுள் நுழைந்தான்.
“வாவ் ரொம்ப அழகா இருக்கு பீமா.” என்றவாறு அந்த வீட்டிற்குள் நுழைந்தவள், “இன்னும் எத்தனை நாளைக்கு இங்கே இருக்கணும்..?” எனக் கேட்டவாறு தன்னுடைய கரத்தில் இருந்த பைகளை அங்கிருந்து மேஜையின் மீது வைத்தாள்.
பீமாவோ வீட்டினுள் இருந்த ஹீட்டரை ஆன் செய்தவன் தன்னவளை நெருங்கி பின்னால் இருந்து அவளை அணைத்தவாறு அவளுடைய பின் கழுத்தில் முகம் புதைத்து முத்தம் வைத்தவன், “இனி வாழ்க்கை முழுமைக்கும் இங்கேதான் இருக்கப் போறோம்.” என்றான்.
முதலில் அவன் கூறியது தெளிவாக புரியாமல் போய்விட விழிகளை சுருக்கி கேள்வியாகப் பார்த்தவள் அவனுடைய அர்த்தமான பார்வையைக் கண்டு அதிர்ந்து போனாள்.
“எ.. என்ன சொல்றீங்க பீமா..? நிஜமாதான் சொல்றீங்களா.?” என நம்ப முடியாத திகைப்பில் கேட்டவளின் இதழ்களை சுவைத்து விடுவித்தவன் ஆம் என தலையசைக்க அவளுக்கோ மகிழ்ச்சியில் தலைகால் புரியவே இல்லை.
விழிகள் கலங்க நம்ப முடியாத ஆனந்த அதிர்ச்சியில் அவனையே பார்த்தவாறு உறைந்து நின்றவளை இழுத்து அவளின் இடையோடு தன் கரத்தைக் கோர்த்து தன் உடலோடு மோதச் செய்தவன்,
“இனிமே இதுதான் நாம வாழப் போற அழகான சின்ன வீடு. இங்கே நீயும் நானும் மட்டும்தான் வாழப் போறோம். எனக்குன்னு இங்க எந்த பிரண்ட்ஸும் கிடையாது. எந்த எனிமியும் கிடையாது.
இங்கே அடியாட்களும் கிடையாது. நான்தான் பீமான்னு அடையாளம் காண்பிக்கிற அளவுக்கு இங்க இருக்க யாருக்கும் என்னையும் தெரியாது.” என்றான் அவன்.
விழிகளில் கண்ணீர் வழிய புன்னகைத்தாள் அவள். அவளுடைய கண்ணீரை துடைத்தவன்,
“ஆடம்பரமா செலவு செய்றதுக்கு என்கிட்ட அவ்வளவு பணம் கிடையாது. இப்போ உன் முன்னாடி நிற்கிறது தி கிரேட் டைமண்ட் டீலர் பீமச்சக்கரவர்த்தி இல்லை. உன்னோட காதலன் பீமா. உன்னைக் கண் கலங்காம பார்த்துக்கிற அளவுக்கு இப்போதைக்கு சின்னதா ஒரு வேலை தேடிருக்கேன். கடைசி வரைக்கும் உன்னை என்னோட உள்ளங்கைல வெச்சுத் தாங்குவேன்.
இங்க யாரோட ரத்தமும் சிந்தாது. எந்தக் கொலையும் நடக்காது. எந்த கடந்த காலத்தோட கசப்பும் உன்னைத் தீண்டாது. நிம்மதியா சந்தோஷமா நீயும் நானும் மட்டும் இங்க வாழலாம். இன்னும் கொஞ்ச நாள்ல குட்டி குட்டியா நிறைய குழந்தைகளை பெத்துக்கலாம்.” என்றவனை பாய்ந்து அணைத்துக் கொண்டாள் முகிலாஷி.
மேலும் எதையோ கூற வந்தவனின் உதடுகளை தன் இதழ் கொண்டு மூடியவள் அவனுடைய பேச்சினை தற்காலிகமாக நிறுத்தி வைத்தாள்.
அவனுடைய விழிகளோ அவளுடைய செயலில் சொக்கிப்போய் மூடிக்கொள்ள, அவனுடைய கரங்களோ அவளைத் தூக்கி தன்னிடையில் அமர வைத்தன.
தன் இடையில் அமர்ந்து மூச்சுக் கூட விடாது இதழ் அமுதம் பருகக் கொடுத்தவளை சுமந்து கொண்டே நடந்தவன் அங்கிருந்த ஒரு அறை வந்ததும் அவளைத் தன்னில் இருந்து பிரித்து கீழே இறக்கி விட்டான்.
அவளோ கங்காரு குட்டி போல மீண்டும் அவனுடைய இடையில் பாய்ந்து அமர்ந்து கொள்ள அவனுக்கோ புன்னகை வலுத்தது.
“இம்சை பண்றடி நீ..”
“அப்படித்தான் பண்ணுவேன். தாங்கிக்கோங்க.” என்றவள் மகிழ்ச்சியின் உச்சகட்ட அளவை தாங்க முடியாது அவனுடைய கன்னத்தில் எண்ணற்ற முத்தங்களை வாரி வழங்கியவள் இறுதியில் பற்தடம் பதிய கடித்தும் வைத்தாள்.
அவளுடைய கடியில் “ஸ்ஸ்ஆ…” என போலியாக அலறியவன் “உனக்கு கொத்தமல்லின்னு பேரு வச்சதுக்கு பதிலா கடிநாய்னு பேரு வச்சிருக்கனும்டி.” எனக் கூறிச் சிரித்தான்.
“என்னதுஉஉ நான் கடிநாயா..?உங்களைஐஐஐ…” எனக் கத்தியவள் மீண்டும் அவனுடைய கன்னம், கழுத்து, கரங்கள், மார்பு என பார்த்த இடத்தில் எல்லாம் கடிக்கத் தொடங்க,
அவனுக்கோ அவளுடைய செயலில் உலகம் மறந்தே போனது.
‘ஐயோ கொல்றாளேஏஏ..’ என மனதினுள் எண்ணியவன்,
அவளை வேண்டுமென்றே சீண்ட எண்ணி “அச்சோ இந்த குட்டி கடிநாய்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்த யாருமே இல்லையா..?” என போலியாக மீண்டும் அலறினான்.
அவனுடைய அலறலில் குலுங்கிச் சிரித்தவள் அவனுடைய கழுத்தை வளைத்துக் கொள்ள அவனுடைய இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டு விலகியவன் அந்த அறையை அவளுக்கு காண்பித்தான்.
அந்த அறையைப் பார்த்தவளின் விழிகளோ ஒரு நொடி அதிர்ச்சியில் விரிந்து பின் கலங்கிப் போயின. அந்த அறை முழுவதும் எக்கச்சக்கமான இசைக்கருவிகளை நிறைத்து வைத்திருந்தான் பீமா.
அவளுக்கு இசை என்றால் மிகவும் பிடிக்கும் என்பதையும் இசைக்கருவிகளை வாசிப்பதில் அவளுக்கு அலாதிப் பிரியம் என்பதையும் அறிந்து கொண்டவன் அவளுக்காக அனைத்தையும் தேடித் தேடி வாங்கி வைத்திருந்தான்.
அவள் அதிகம் விரும்பும் பியானோ, வயலின், கிட்டார், புல்லாங்குழல் என எத்தனையோ விதமான இசைக்கருவிகள் அங்கே இருக்க அவளுக்கு ஆனந்தத்தில் விழிகள் கலங்கத் தொடங்கின.
“நான் இங்க வேலைக்கு போனப்புறம் நீ வீட்ல தனியாத்தானே இருப்ப. சோ உனக்கு பிடிச்சதுலாம் வாங்கி வச்சுட்டேன். என்ஜாய்..” எனப் புன்னகைத்தான் அவன்.
மகிழ்ச்சியில் பேச்சற்று நின்றாள் அவள்.
“என்னடி…?” எனக் கேட்டவனை நோக்கி தன் கரங்களை விரித்தாள் முகிலாஷி.
விரும்பியே அவளுடைய கரங்களுக்குள் புகுந்து கொண்டவன் அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
அங்கே காதல் எல்லையற்றுப் பொங்கிப் பெருகியது.
“எ… எனக்காக என்னோட சந்தோஷத்துக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்துட்டீங்களா பீமா..?” என நா தழுதழுக்க கேட்டவளை தன் கரத்தில் ஏந்திக் கொண்டு படுக்கை அறையினுள் நுழைந்தவன் அவளைப் படுக்கையில் கிடத்தி விட்டு அவள் மீது படர்ந்தான்.
“உன்னை விட வேற எதுவுமே எனக்கு முக்கியம் இல்லைடி. என்னோட உலகமே நீதான். நீ மட்டும்தான்.” என்றவன் அவளோடு மோகமாய் காதலாய் தாபமாய் காமமாய் கலக்கத் தொடங்கினான்.
“ஐ லவ் யூ பீமா செல்லம்…” என்றவளின் இதழ்களை புசிக்கத் தொடங்கியது ஆண் அரிமா.
வெட்கிச் சிவந்தவள் அந்த அரிமாவின் வேட்டைக்கு விரும்பியே இரையாகிப் போனாள்.
“ஐ லவ் யூ டி பேபி….” என்றவன் பல போராட்டங்களின் பின் தன்னுடைய உயிரானவளுடன் மகிழ்வான வாழ்க்கையை வாழத் தொடங்கியிருந்தான்.
கடந்த காலக் கசப்புகள் அவர்களை விட்டு ஒழியட்டும்..!!
எபிலாக்
ஆறு வருடங்களின் பின்பு..!!
ஒற்றைப் படுக்கையறையில் மூச்செடுக்க சிரமப்பட்டவாறு உடலில் சதைகளே அற்றுப் போய் வெறும் எலும்புகளுக்கு ஆடை அணிவித்ததை போல தரையில் கிடந்தான் சித்தார்த். அந்த அளவிற்கு அவனுடைய உடல் மெலிந்து போயிருந்தது.
படிக்கட்டு தேகமோ காணாமற் போய் சிதைந்திருந்து.
அலையலையாய் படிந்திருக்கும் அவனுடைய அழகிய கேசமோ என்றோ முழுவதுமாக கொட்டிப் போயிருந்தது.
கண்களில் குழி விழுந்து பாதி பற்கள் கொட்டிப் போய் அவனுடைய உருவமோ முற்றிலுமாய் மாறிப் போயிருந்தது.
அவனுடைய முகம் கழுத்து மார்பு போன்ற இடங்களில் தோல் உரிந்து சிறு சிறு கட்டிகள் தோன்றியிருக்க, முப்பது வயதைக் கூடத் தாண்டாத சித்தார்த்தோ அறுபது வயதைத் தாண்டிய வயதானவரின் தோற்றத்தில் இருந்தான்.
அவனுடைய உடலில் கலந்திருந்த வைரஸோ அவனை மிகவும் பலவீனப்படுத்தி இருக்க, சொல்லில் அடங்காத நோய்களின் தாக்கத்தில் தினம் தினம் செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தான் அவன்.
ஒவ்வொரு நாளும் விடியும் போது இன்று எப்படியாவது தற்கொலை செய்து தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என எண்ணுபவன் இறக்கப் பயந்து அந்த எண்ணத்தை கைவிட்டு பின் வலியில் துடிப்பான்.
மீண்டும் அடுத்த நாள் காலை பொழுது புலரும் போது இன்றாவது இறந்து விட வேண்டும் என எண்ணிக் கொள்பவன் மீண்டும் அச்சத்தில் தவித்து துடிப்பான்.
அவனுடன் சில வருடங்கள் ஒன்றாக இருந்த தீபக்கோ வலி தாங்காது துடித்துப் போயிருந்தான். பெற்றோர்கள் கூட அவனை வீட்டிலே சேர்க்காது வெளியே துரத்தி விட, அவமானத்தில் அழகிழந்து தவித்து நோய்களில் வெந்து துடித்தவன் ஒரு கட்டத்தில் தாங்க முடியாது தூக்கில் தொங்கி இறந்து போனான்.
சித்தார்த்தின் தந்தையோ மாரடைப்பில் இறந்து விட, நண்பனும் தந்தையும் இல்லாது தனித்துப் போனான் அவன்.
சித்தார்த்தோ ஒவ்வொரு நாளையும் நரகத்தில் கழிப்பதைப் போல வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தான்.
அவன் செய்த தவறுகள் யாவும் கண்முன்னே தோன்றி அவனை அலறச் செய்தன. வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் வந்தவனுக்கு தான் செய்த தவறுகளின் வீரியம் அப்போதுதான் தெள்ளெனப் புரிந்தது.
தனிமையில் அழுது கரைபவன் மீண்டும் தற்கொலை செய்வதா இல்லையா என்ற போராட்டத்தில் துவண்டு போவான்.
எப்படியோ இன்னும் சில மாதங்களில் அவனுடைய உயிர் அவனை விட்டுச் செல்ல போவது உறுதி.
மறு ஜென்மம் என்ற ஒன்றிருந்தால் அதிலாவது பெண்களைப் போற்றும் நாயகனாகப் பிறக்கட்டும்…!!
மனிதம் உணர்ந்து வாழட்டும்…!!
****************
முகியோ வெளியே கேட்ட சிரிப்புச் சத்தத்தில் தூக்கம் கலைந்து மெல்ல விழி திறந்தாள். வெகு நேரம் தூங்கி விட்டது புரிய, முகத்தில் வாடாத புன்னகையோடு படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தவள், திறந்து கிடந்த தன்னுடைய மேற் சட்டையின் பட்டன்களைக் கண்டு இதழ் மடித்துக் கடித்துக் கொண்டாள்.
“சரியான திருட்டுப் பூனை…” எனத் தன்னவனை செல்லமாகத் திட்டிக் கொண்டவள் தன்னுடைய ஆடையை சரி செய்துவிட்டு அவிழ்ந்த கூந்தலை எடுத்து தன் மார்பின் மீது படரவிட்டவாறு படுக்கையில் இருந்து இறங்கினாள்.
வெளியே மீண்டும் சிரிப்பு சத்தம் பலமாக கேட்க, அவள் உதட்டிலும் சிரிப்பெனும் பூ பூத்தது.
“காலையே ஆரம்பிச்சிட்டாங்களா.?” என எண்ணியவாறு வெளியே சென்றவள், அங்கே பீமாவின் செயலைக் கண்டு சத்தமின்றி சிரித்தாள்.
வரிசையாக மூன்று பெண் குழந்தைகளையும் அமர வைத்து அவர்களுடைய நகங்ளுக்கு நகச்சாயம் பூசிக் கொண்டிருந்தான் அவன்.
ஆம் இந்த ஆறு வருடங்களில் முகியோடு ஓயாது விளையாடி முன்று பெண் குழந்தைகளுக்கும் ஒரு ஆண் குழந்தைகளுக்கும் தந்தையாகிருந்தான் பீமா.
ஒரு காலத்தில் துப்பாக்கியோடும் வைரங்களோடும் திரிந்த அவனோ தற்போதெல்லாம் பம்பர்ஸோடும் பால் போத்தலோடும் திரிவதைக் கண்டு முகிக்கோ புன்னகையே அரும்பும்.
பீமாவோ தன்னுடைய முதல் குழந்தையின் கரங்களைப் பிடித்து ஒவ்வொரு விரலுக்கும் ஒவ்வொரு நிறத்தில் நகச் சாயத்தை பூசிக் கொண்டிருக்க, அவனைக் காதலாகப் பார்த்தாள் முகி.
இறுதியாகப் பிறந்த ஆண் குழந்தையோ தொட்டிலில் உறங்குவதை உறுதி செய்தவள் மெல்ல பீமாவை நெருங்கி பின்னால் இருந்து அவனுடைய கழுத்தில் கரம் கோர்த்து அணைத்தவள்,
அவனுடைய முதுகில் மென் அங்கங்கள் அழுத்த, அவன் மீது மொத்தமாய் சாய்ந்தாள்.
மனம் விரும்பும் மங்கையின் நெருக்கத்தில் மயங்கிப் போனவன் தன் முகத்தை பக்கவாட்டாகத் திருப்பி அவளுடைய கன்னத்தில் இதழ் பதித்தான்.
“எழுந்திட்டியா பேபி…?”
“ம்ம்….”
“ரொம்ப சீக்கிரமா எழுந்திட்டடி.” என அவன் கேலி செய்ய, சட்டென அவனுடைய கன்னத்தில் கடித்து வைத்தாள் அவள்..
“ஸ்ஸ்ஆஆ… போடி கடிநாய்..” என்க,
“யோவ் கொன்னுருவேன்.” என அவனுக்கு பத்திரம் காட்டியவள் கிட்சனுக்குள் நுழைந்தாள்.
“பசங்களா கடிநாயா இருந்த உங்க அம்மா இப்போ வெறி நாயா மாறிட்டாங்கடா..” எனக் கூறிச் சிரிக்க, அவனுடைய குழந்தைகளோ தந்தையின் சிரிப்பைக் கண்டு தானும் சிரிக்கத் தொடங்கினர்.
“டேய் பீமா போய் ப்ரஷ் பண்ணுடா..” என உள்ளிருந்து கத்தினாள் அவள்.
“ம்க்கும் வர வர எனக்கு மரியாதையே இல்ல பேபீஸ்.” என அலுத்துக் கொண்டான் பீமா.
“நீங்க இன்னும் போகலையாஆஆ..?” என மீண்டும் கத்தினாள் அவள்.
தன் மூத்த பெண்ணிற்கு நகச்சாயம் பூசி முடித்தவன், “அப்பா போய்ட்டு வர்றேன்டா… இல்லைன்னா வெறிநாயா இருக்க உங்க அம்மா விசர்நாயா மாறிடுவா…” என்க,
“ம்மாஆ ப்பா உன்ன விதர்நாயாம்..” எனத் தன் தந்தை கூறியதை அப்படியே மழலை மொழியில் தன் தாயிடம் போட்டுக் கொடுத்தது குழந்தை.
“சோலி முடிஞ்ச்…” என்றவன் அடுத்த கணம் அங்கிருந்து மாயமாக மறைந்திருந்தான்.
அவளோ அவனுக்கு காபி போட்டு எடுத்து வந்தவள், பீமா தீவிரமாக எதையோ கணக்கு பார்த்தபடி சிந்தித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவள், அவனைக் குழப்பாது அவன் அருகே காபியை வைத்தாள்.
பிள்ளைகளோ விளையாடிக் கொண்டிருக்க, பீமாவின் தலையை கோதி விட்டவள்,
“என்னாச்சுப்பா…?” என்றாள்.
“கணக்கு பார்த்துகிட்டு இருக்கேன் கண்ணம்மா.”
“ம்ம் என்ன கணக்கு பீமா.?”
“அதுவா…? நாம கல்யாணம் பண்ணி ஆறு வருஷம் ஆகுது. பட் நாலு குழந்தைதான் பிறந்திருக்கு. ரெண்டு இடிக்குதே. அதுதான் கணக்கை எப்படி சரி பண்ணுறதுன்னு திங்க் பண்ணிகிட்டு இருக்கேன்.” என சிரித்தவனைப் பார்த்து காளி அவதாரம் எடுத்தவள் அவனுடைய தலையில் நங்கெனக் கொட்டினாள்.
“ஹா… ஹா….” விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான் பீமா.
“அடியேய் இந்தியா சனத்தொகைல நம்பர் ஒன்னுக்கு வந்ததுக்கு காரணமே நான்தான்டி. இன்னும் ஒரு பத்து பிள்ளையை பெத்து சனத்தொகையை இன்னும் கூட்டலாம் பேபி.” என்றவனின் பேச்சில் சட்டென சிரித்தாள் அவள்.
“ம்க்கும் இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல. டெலிவரி டைம்ல என்ன விட கதறிக் கதறி அழ வேண்டியது. அப்புறம் மறுபடியும் குழந்தை வேணும்னு கேட்க வேண்டியது. உங்களோட ஒரேயும் வம்பா போச்சு பீமா.” எனச் சிரித்தாள் அவள்.
அவளுடைய உதடுகள் சிரித்தாலும் அவளுடைய விழிகளோ தன்னவனை நொடிக்கு நொடி ரசித்துக் கொண்டே இருந்தன.
கோடி கொட்டிக் கொடுத்தாலும் அவனைப் போன்ற கணவன் யாருக்கு வாய்க்கும் என எண்ணினாள் அவள்.
இந்த ஆறு வருடத்தில் அவளையும் ஒரு குழந்தை போல் அல்லவா பார்த்துக் கொள்கிறான். தன்னவனின் அன்பை எண்ணி சிலிர்த்தவள், அவனுடைய கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு விலகினாள்.
“பேபிஇஇ….?”
“ம்ம்….?”
“நீ ஃப்ரீயா…?”
“எதுக்கு…?” என்றவள் அவனை சந்தேகமாக பார்த்தாள்.
அவனோ அவளைப் பார்த்து இமை சிமிட்டிச் சிரிக்க, அவனின் நோக்கம் புரிந்தவள் “முடியாது.. முடியாது…” என சிரித்தவாறு காபி கப்பை எடுத்துக் கொண்டு மீண்டும் சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அவனோ புன்னகையோடு தன்னுடைய தலையை அழுந்தக் கோதியவன் விளையாடும் தன் குழந்தைகளைப் பார்த்துவிட்டு அவளுக்குப் பின்னாலேயே சமையல் அறைக்குள் நுழைந்தான்.
சத்தமின்றி சமையல் அறையின் கதவினை பூட்டியவன் அவளின் பின்னால் சென்று இடையை வளைத்து முதுகில் முத்தம் பதிக்க, அவளுடைய கரத்தில் இருந்த பாத்திரமோ நழுவி கீழே விழுந்தது. அவன் தொட்டதும் சிலிர்த்த தன்னுடைய உடலை எண்ணிச் சிவந்தாள் அவள்.
அவனோ அவளுடைய இடையில் தன்னுடைய இரண்டு கைகளையும் பதித்து அவளைத் தூக்கிச் சமையல் கட்டில் அமர வைத்தவன், அங்கேயே அவனுடைய சில்மிஷங்களைத் தொடர, அவளின் முகமோ பூரித்துப் போனது.
“அச்சோ வெளியே பசங்க இருக்காங்க. வந்துடப் போறாங்க.” எனப் பதறியவள் அவன் கழற்றிய சட்டை பட்டன்களை மீண்டும் போட, அவளுடைய கரத்தைப் பற்றித் தடுத்தவன்,
“டோர் லாக் பண்ணிட்டேன்டி.” என்றவாறு அவளுடைய மார்பில் முகம் புதைத்தான்.
அடுத்த கணம் அவனோடு பசை போல ஒட்டிக் கொண்டாள் முகிலாஷி.
தன்னவனின் தேடலுக்கு ஏற்ப இசைந்து கொடுத்தவளை அள்ளி எடுத்துக் கொண்டான் பீமா.
சமையல் கட்டோ அவர்களுக்கு படுக்கையாக மாறிப் போக,
அவனோ அவளுள் கலந்து கரைந்து உறைந்து போனான். அங்கே காதலும் அவர்களோடு கூடிக் களிக்கத் தொடங்கியது.
சுபம்.
💜💙💙💜
இத்தனை நாட்கள் இந்தக் கதையோடு பயணித்த அனைவருக்கும் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள்..
உங்களுடைய கருத்துக்களுக்காக மீ ஆவலோடு வெயிட்டிங்..
என்னை ஏமாத்தாம கமெண்ட்ல உங்களுடைய கருத்துக்களை பகிரவும் டார்லிங்ஸ்..
Love you all 😍😘💜
நேற்று பெருநாள் கொண்டாடிய அனைவரும் வினிக்குட்டிக்கு பிரியாணி அனுப்பி வைக்கவும் 😁😁😁😁😁
Eid mubarak 💜
