நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

அத்தியாயம் 17

ஃப்ளைட்டில் சந்துருவிடம் வந்து தேவையில்லாமல் வழியும் பெண்களைக் கண்டபோது நேத்ராவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. 

அவளைப் பொருத்தவரை தன் பொருளென ஆகிவிட்டால் எவர் வந்து கேட்டாலும் விட்டுத் தர மாட்டாள். அதே நேரத்தில் தனக்கு சொந்தமில்லாத பொருள் மீது அநாவசிய மோகம் கொள்ள மாட்டாள்.

ஆனால் இங்கே தன்னை தான் சந்துரு நேசிக்கிறான் என அறிந்ததும் அவளையறியாமலேயே பொஸிசியுவ்னஸ் அதீதமாக தலை தூக்குவது நேத்ராவின் முகத்தில் அப்பட்டமாக தெரிய, மௌனச்சிரிப்பில் குலுங்கியவாறு அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தான் சந்துரு.

இங்கு நடக்கும் கூத்தை வேடிக்கைப் பார்த்த இன்னொரு கும்பல் பொறாமையில் பொங்கி எழுந்து கொதித்து கொண்டிருந்தது. நிகிலன் சங்கரின் தொடையில் ஓங்கி குத்தியவாறு, “அதென்ன அவன மட்டும் விழுந்து விழுந்து கவனிக்குறாளுக. ஏன்…. நம்மல்லாம் மனுஷனா தெரியலியா?!” என பொரும,

“ஆ..அ..” என்று அலறிய சங்கரோ, “ஏன்டா லூசூப்பயலே! அதுக்கெதுக்குடா என் தொடைய பஞ்சர் பண்ணுன?!” என புலம்பியபடியே தனது தொடையைத் தேய்த்து விட்டான்.

“அதுக்கெல்லாம் ஒரு லட்சணம் வேணும்டா. அவனப் பாரு. எவ்ளோ அழகா இருக்கான்… நேத்ராக்கு பதிலா நான் அங்கப் போயி உட்காந்தா எவ்ளோ கெத்தா இருக்கும் தெரியுமா?!” என ஏக்கக்குரலில் கூறிய ஜமுனாவை ஒருசேர திரும்பிப் பார்த்த சங்கரும் நிகிலனும்,

“சிறப்பு…. மிகச் சிறப்பு…” என ஒரேக் குரலில் கூறிய இருவரையும் புரியாமல் பார்த்த ஜமுனா, சற்று நிமிடத்தில் சந்துருவின் அருகில் அமர்ந்திருந்தாள் ஆனந்தமாக.

ஃப்யூஸ் போன பல்ப்பாக முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கும் சந்துருவைப் பார்க்க பார்க்க, நேத்ராவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஃப்ளைட் என்றும் பாராமல் மேகஸின் புக்கை விரித்து தன் முகத்தை மறைத்தவாறு சிரித்தபடியே இருக்கையில் சாய்ந்து விட்டாள்.

நிகிலனும் சங்கரும், “டேய் சோனமுத்தா! போச்சா?! இதுக்குத்தான் அடக்கி வாசிக்கணுங்கறது?! அந்த ஏலியன் கூட கொஞ்ச நேரத்துக்கு குடும்பம் நடத்து…” எனக் கலாய்த்தபடி சந்துருவையும் ஜமுனாவையும் கிண்டலடித்துக் கொண்டே பிரயாணம் செய்து வந்தனர்.

ச்சப்பி பேபியான ஜமுனாவை ஒருதரம் திரும்பிப் பார்த்து அதிர்ந்தவன் தான்… அதன்பிறகு மருந்துக்கும் கூட அவள் பக்கம் திரும்பவில்லை சந்துரு. ‘என்னை ஏன்டா இவ்வளோ அழகா படைச்ச ஆண்டவாஆஆஆ…’ என மனதினுள் புலம்பியவனுக்கு அப்போது தான் மயக்கம் வராதக் குறையாக தூக்கம் வந்தது.

சந்துரு தூங்குவதைப் பார்த்த பணிப்பெண்கள் அவனருகில் உற்சாகத்துடன் வந்து வந்து பார்த்து விட்டு சோர்வுடன் திரும்பிப் போவதை சங்கர், நிகிலன் மற்றும் நேத்ரா மூவரும் கண்குளிர பார்த்து ரசித்துக் கொண்டே வந்தனர்.

“மவனே! டெல்லி போய் சேர்ற வரைக்கும் நீ கோமா தான்டா.. யாருக்கிட்ட சீன போடுற?! எங்க பாப்போம்.. என்னை மீறி எவளாவது உன் பக்கத்துல வந்துருவா?! வேலியில்லாத காடுன்னா வந்துருவாளுகளே மேயுறதுக்கு.. நீ மட்டும் கண்ணத் திறந்து பாரு.. அப்பறம் இருக்கு உனக்கு..” என்று முணுமுணுத்தவாறே நமுட்டு சிரிப்பை உதிர்த்தவளுக்கு வெகுநாட்கள் கழித்து மனம் சற்று லேசானது போல தோன்றியது.

‘ஏன்டி… அவன் தான் உன்னை வேணாம்ன்னு சொல்லிட்டு போயிட்டான்ல.. அப்புறம் எதுக்கு இந்த வேலையெல்லாம்..?!’ என்றுக் கேட்ட மனசாட்சியை, ‘நீ உன் வேலைய மட்டும் பாரு.’ என அதட்டி அடக்கினாள் நேத்ரா.

காதலில் ஊடல் தான் மிகப் பெரும் முக்கியத்துவத்தை அடைந்துள்ளது என்பதை காதலிக்கும் அனைவரும் உணர்ந்து தான் தீர வேண்டும். அந்த ஊடலே கூடலுக்கு வழிவகுக்கவும் பெரும் உதவியாகவும் மாறும் என்பதையும் நேத்ராவும் சந்துருவும் விரைவில் புரிந்து கொள்ளத் தான் போகிறார்கள்.

‘யார் என்ன சொன்னாலும் தன்னை நம்பாமல் போய்விட்டானே’ என்றக் கோபத்தில் நேத்ராவும், ‘நேத்ரா தனக்கு மட்டுமே சொந்தமாக இருந்திருக்க வேண்டும்’ என்ற அளவு கடந்த பொஸிசியுவ்னஸ்ஸில் சந்துருவும் ஒருவரையொருவர் சிண்டுபிடித்து ஊடலில் இதுவரை இருந்து விட்டார்கள். இனி அந்த ஊடலில் மன்மதனும் ரதியும் நுழைந்து தங்களது ஆட்டத்தை ஆடாமல் விட்டுவிடுவார்களா என்ன?!

டெல்லி ஏர்ப்போர்ட்டில் வந்து இறங்கியதும் நேத்ராவும் அவளது நண்பர்களும் டாக்ஸியை நாடிச் செல்லும் போது, அவர்களை நோக்கி முகமூடி அணிந்த ஒரு கும்பல் கையில் ஆயுதங்களுடன் நெருங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு துணுக்குற்றவன், வேகமாக அவர்களை நோக்கி முன்னேறினான்.

ஓசையில்லாமல் சரியாக நேத்ராவின் பின்முதுகில்  கூர்மையான கத்தியை கொண்டு குத்த முற்பட்டபோது பட்டென அந்த முரடனின் கையிலிருந்த கத்தியை லாவகமாக தட்டிவிட்டு அவர்களுடன் மல்லுக்கட்ட தயாரானான் சந்துரு.

அதுவரை ஒன்றும் அறியாமல் இருந்த நேத்ரா அரவம் கேட்டு திரும்பிப் பார்த்த போது சந்துரு அக்கும்பலை பந்தாடிக் கொண்டு இருந்ததை முதலில் அதிர்ச்சியுடன் கண்டுவிட்டு, பின் எதையோ நினைத்து அவளின் இதழ்கள் ஏளனத்துடன் வளைய ஆரம்பித்தது.

இறுதியில் அனைவரையும் வீழ்த்திவிட்டு நேத்ரா பத்திரமாக இருக்கிறாளா என திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்த போது அடிபட்டு விழுந்திருந்த ஒருவன் சந்துருவை கிட்டத்தட்ட நெருங்கி தாக்க முனைய,

நேத்ராவின் விழிகளில் அம்முரடனைக் கண்டு கொண்ட சந்துரு பின்னால் திரும்பாமல் தனது வலது கையால் தாக்க முற்பட்ட கத்தியைப் பிடித்து தூரமாக வீசிவிட்டு அவனை அடிக்க ஆரம்பித்த வேளையில் அம்முரடனின் தலையில் பெரியக் கல்லொன்று பறந்து வந்து தாக்கியது.

அதில் இரத்தக்காயம் ஏற்பட்டு தடுமாறியவன் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினான். அவன் ஓடுவதைக் கண்ட மற்றவர்களும் ஆளுக்கொரு திசையில் தப்பியோடி மறைந்தனர்.

அங்கே நடந்தக் கலவரத்தில் சந்துருவின் வலது உள்ளகையில் உதிரம் சொட்டுவதைக் கூட கவனியாமல் நேத்ராவிற்கு ஏதும் காயமுள்ளதா என கவனித்தவனை எவ்வித உணர்வுமின்றி பார்த்தாள் நேத்ரா.

கைகளைத் தூக்கி பலத்த ஓசையுடன் தட்டியவள், சின்ன சிரிப்புடன் “சபாஷ்… உங்க ஆளுங்க ரொம்ப நல்லா ஃபர்ஃபார்மென்ஸ் பண்ணுனாங்க. நீங்களும் சூப்பரா ஆக்டிங் பண்ணீங்க.. கையில ஏதும் ப்ளட் வர்ற மாதிரி செட்டிங்கா… இல்ல.. அதாவது ஒரிஜினலா?” என அசட்டையுடன் கேள்விக் கேட்ட நேத்ராவை அடிபட்ட பார்வைப் பார்த்தான் சந்துரு.

‘நான் நடித்தேனா?!’ என்பது போன்றப் பார்வையுடன் பதிலொன்றும் பேசாமல் அமைதியாக தன்னைப் பார்க்கும் சநதுருவின் தீர்க்கமான விழிகளைக் கண்ட நேத்ராவிற்கு மேலும் ஆத்திரமே பொங்கியெழுந்தது.

“உங்கக் கண்ணு முன்னாடி நான் ஒரு ஸ்டேட்டஸ்க்கு வந்துட்டேன்னு தெரிஞ்சதும் தான் இந்த அனுசரனையெல்லாம் பண்ணணும்ன்னு உங்களுக்கு தோணுதுல்ல.. ஆனா பாருங்களேன்.. இப்பவும் நான் அதே பட்டிக்காடு தான். என்மேல நீங்கப் போட்டப் பழியும் கூட அப்படியே தான் இருக்கு. அப்டி இருக்கும் போது எதுக்கு இந்த டிராமா எல்லாம்ன்னு தான் எனக்கு உண்மையிலயே புரியல. போங்க சார். நீங்க உங்க பாதைல போங்க. நாங்க எங்க வாழ்க்கைய பாத்துக்குறோம்.” என மனதில் தோன்றியதை எல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டு வெட்டுவது போல திரும்பி நடந்தவள்,

 ஒரு பெருமூச்சொன்றை எடுத்துவிட்டு விட்டு ஒருசில கணங்கள் அமைதியாகப் பல்லைக் கடித்தவாறு நின்று, பின் மீண்டும் அதே வேகத்தில் திரும்பி வந்து சந்துருவின் கையை சுட்டிக் காட்டி,

“டேய் சங்கர்! அந்த ஃபர்ஸ்ட் ஏய்டு பாக்ஸ்ஸ எடுத்துட்டு வாடா சீக்கிரம்..” என சங்கரைப் பார்த்துக் கத்த, திடீரென நேத்ரா தன்னைப் பார்த்து கத்தியதும் அரக்கப் பரக்க பயணப்பொதிகளைத் திறந்து ஃபர்ஸ்ட் ஏய்டு பாக்ஸை எடுத்துக் கொடுத்தான்.

சந்துருவின் கையைப் பிடிக்க முதலில் தயங்கியவள் பின் அவனது உதிரம் சொட்டுவதைக் கண்டு தன் கண்களை ஒருதரம் அழுத்தமாக மூடித் திறந்துவிட்டு ‘கடமையே கண்’ என காயத்தைத் துடைத்து மருந்திட்டு கட்டு போட்டாள்.

நேத்ரா தனக்கு முதலுதவி செய்வதை நம்ப முடியாமல் கண்டிருந்தவனுக்கு வலி என்பது சுத்தமாக தெரியாமல் போனது. ‘காதல் என்பது இது தானா?! அது இத்தனை அழகானதா?! இவள் என் தேவதை. இவள் மனதில் நான் இன்னும் இருக்கிறேனா?!’ என்ற எண்ணவோட்டத்தில் தன்னை மீறி வந்த ரசனையான புன்னகையில் பேரழகனாக தெரிந்தான் அனைவர் கண்களுக்கும்.

ஆனால் அந்த பேரழகனை ஒருமுறைக் கூட ஏறிட்டு பார்க்காமல் தன் வேலையை செய்து கொண்டிருந்த நேத்ரா நிமிர்ந்து பாராமலேயே, “உங்க காயத்துக்கு இப்போ நான் கட்டு போட்டனால, அப்டியே உங்க மேல காதல் பொங்கி வழிஞ்சதா அர்த்தமில்ல.. அப்படி நீங்க நெனச்சா நீங்க தான் உண்மையான பட்டிக்காடு..” என வெடுக்கென கூறிவிட்டு தன் வேலை முடிந்ததென அங்கிருந்து நகன்று டாக்ஸியை அழைத்து அதில் ஏறிச் சென்று விட்டாள்.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது இரத்தப்பந்தத்திற்கு மட்டுமல்ல… காதலுக்கும் கச்சிதமாக பொருந்தும். சந்துருவின் கையில் இரத்தத்தைக் கண்ட நேத்ராவின் உள்ளம் பதறித் துடித்ததை எக்காரணம் கொண்டும் வெளிக்காட்டாமல் சமாளித்தவளுக்கு ஒருக்கட்டத்திற்கு மேல் சமாளிக்க இயலவில்லை.

தன் கையைத் தொட்டதும் தனது உடலில் ஏற்பட்ட ரசாயன மாற்றத்தை இன்பமாக உணர்ந்தவாறு தன் சித்திரப்பதுமையையே வைத்தக் கண் வாங்காமல் புன்முறுவலுடன் பார்த்திருந்த சந்துருவிற்கு அப்போதே அவளை அள்ளியணைத்து,

 ‘நீ இல்லாது தவித்த நாளெல்லாம் எனக்கு நரகமாய் தான் சென்றது. இத்தனை நாட்களில் உன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் நான் ஏறெடுத்துப் பார்க்கவில்லை நித்து…’ என உரக்கக் கத்தி கூச்சலிட்டு முத்தாட வேண்டும் போல பரபரத்த தனது உணர்வுகளைக் கட்டுபடுத்த தான் படாதபாடு பட்டுப் போனான் சந்துரு.

அங்கு நடந்த அத்தனையையும் வேடிக்கைப் பார்த்த சங்கர், நிகிலன் மற்றும் ஜமுனாவிற்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது நேத்ராவிற்கும் சந்துருவிற்கும் இடையே ஏதோ ஊடல் உள்ளது என்று. நடப்பவை அனைத்தையும் அமைதியாகக் கண்டவர்களுக்கு சந்துரு வேண்டுமென்றே செட்டப் செய்து சண்டைப் போட்டது போல் தோன்றவில்லை.

இந்த உண்மை நேத்ராவும் அறிந்தே இருந்தாள். ஆனால் சூடு கண்ட பூனையல்லவா! அப்பூனையை மீண்டும் பாலருந்த வைப்பது மிகவும் கடினம் தானே தவிர முடியாதக் காரியமில்லை என்பதை சந்துரு அப்போது உணர்ந்தான்.

தன் மணவாட்டியின் பூப் போன்ற உள்ளத்தை கண்மண் தெரியாமல் கசக்கி எறிந்ததை எண்ணி தன்னைத் தானே வதைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுமளவிற்கு தன்மீதே கோபம் வந்தது அவனுக்கு.

‘அப்பா சொன்ன மாதிரி நேத்ரா ரொம்ப காயப்பட்டிருக்கா. அந்தக் காயத்தை முதல்ல சரி பண்ணணும் சந்துரு. பொறுமையா தான் ஹேன்டில் பண்ணணும். என்ன ஆனாலும் சரி. எனக்கு நேத்ரா வேணும். அவ இல்லாம நான் இங்கிருந்து போக மாட்டேன்.’ என தனக்குள் உறுதி பூண்டவனுக்கு தெரியவில்லை, ‘அவன் தனக்கு கிடைக்கவில்லை என்றால் எவருக்கும் கிடைக்க விட மாட்டேன்’ என ஒரு ஜோடி விழிகள் குரோதத்துடன் கவனித்துக் கொண்டிருந்ததை.

தனக்கு கட்டு போட்டதிலிருந்து டாக்ஸியில் செல்லும் வரை வாடாத புன்னகையுடன் கண்டிருந்தவனுக்கு, அதன்பின் முகம் மாறத் தொடங்கியது. ‘யாரிவர்கள்? எதற்காக நேத்ராவை கொல்லத் துணிந்தனர்?’ என்ற தீவிர யோசனையுடன் ஒரு டாக்ஸியை அழைத்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டலொன்றை நோக்கி செல்ல ஆரம்பித்தான் சந்துரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *