இது ஒருநாள் உறவா தலைவா..?

This entry is part 42 of 42 in the series இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

உறவு – 49 
 
இருள் எனும் காதல் கள்வனோ வான மங்கை மீது படர்ந்து கூடல் புரிய, வானமங்கையின் நாணப் பூக்கள் யாவும் நட்சத்திரங்களாக மின்னும் அந்த  இனிய இரவுப் பொழுதில் தன்னுடைய அறைக்குள் படுத்திருந்த தன்ஷிகாவுக்கோ உறக்கம் வர மறுத்தது. 

இன்று குளியல் அறையினுள் நடந்த நிகழ்வுகளே மீண்டும் மீண்டும் அவளுடைய சிந்தனைகளில் தோன்றி அவளை நிலைகுலையச் செய்ய, தூக்கமின்றி தவித்தாள் அவள்.

அதே கணம் லோகியோ அவளுக்கு அழைப்பெடுக்க, அந்த அழைப்பை உணர்ந்தவளின் விழிகள் உணர்வுகளைத் தொலைத்தன.

பின் சிறு நொடியில் தன்னுடைய உணர்வுகளை மீட்டெடுத்தவள் அவனுடைய அழைப்பை ஏற்றுப் பேசத் தொடங்கினாள்.

“ஹலோ… சொல்லுங்க… லோகி…”

“சாரி.. சாரி பேபி… எங்க அப்பா பண்ணதெல்லாம் இப்போதான் எனக்கே தெரிய வந்திச்சு… அவர் இவ்ளோ கீழ்த்தரமா நடந்துப்பாருன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்லைடி..” என வேதனை மிகுந்த குரலில் கூறினான் லோகஜித். 

அவன் எதைப் பற்றிப் பேசுகிறான் எனப் புரியாது குழம்பியவள், “நீங்க எதுக்காக  சாரி கேட்கிறீங்க..? என்னாச்சு..? அப்படி உங்க அப்பா என்ன பண்ணாரு.? எனக்கு எதுவுமே புரியல. கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.” என சற்றே பதற்றம் மிகுந்த குரலில் கூறினாள் அவள்.  

“ஏன் உனக்கு விஷயமே தெரியாதா..? விதார்த் அங்கதானே இருக்கான் அவன் உன்கிட்ட எதுவுமே சொல்லலையா..?” எனக் கேட்டான் லோகி.

“இ… இல்லையே அவர் எதுவுமே சொல்லல. என்னாச்சு..? நீங்களாவது சொல்லுங்க..” என்றாள் அவள். 

“அன்னைக்கு பார்ட்டில உன்னைக் கடத்த ட்ரை பண்ணது வேற யாரும் இல்லை. எங்க அப்பாதான்.” என்றதும் அவளுக்கோ தலையில் இடி விழுந்தாற் போல இருந்தது.

“ரொம்ப சாரி தன்ஷிமா.. இதைப்பத்தி எனக்கு சத்தியமா எதுவுமே தெரியாது. அவர் பிஸ்னஸ்ல விதார்த்கிட்ட தோத்ததுல இருந்தே அவன் மேல ரொம்ப கோபமா இருந்திருக்காரு. அந்த கோபத்துல அவன மூணு தடவை கொலை பண்ணவும் ட்ரை பண்ணிருக்காரு. நான் உன்னை லவ் பண்றது அவருக்கு தெரிஞ்சதாலதான் அன்னைக்கு பார்ட்டில உனக்கு போதை மருந்து கொடுத்து உன்னை கடத்த ட்ரை பண்ணிருக்காரு.  

தேங்க் காட் விதார்த் உனக்கு எதுவும் ஆகாம அன்னைக்கு காப்பாத்திட்டான்.  நான் உன்னைக் கல்யாணம் பண்றதுல அவருக்கு கொஞ்சம் கூட விருப்பமில்ல. ஆல்ரெடி என்கிட்டயே பிடிக்கலைன்னு சொன்னாரு. பட் இது என்னோட விருப்பம்னு நான் அவர்கிட்ட அப்பவே தெளிவா சொல்லிட்டேன் தன்ஷிம்மா.
 நான் அவ்வளவு சொல்லியும் புரிஞ்சுக்காம இந்த கல்யாணத்தை நிறுத்துறதுக்காக உன்னோட ரூம்ல கேமராவை பிக்ஸ் பண்ணி வச்சிருக்கார். சே…!” என்றதும் தன்ஷிகாவோ விக்கித்துப் போனாள். 

லோகி கூறக் கூற அவளுடைய உடலோ விறைத்துப் போனது.  நான் என்ன பாவம் செய்தேன் என எண்ணி தவித்து போனாள் அவள். 

நடந்த முழுவதையும் லோகஜித் அவளிடம் கூற அவளுடைய விழிகளிலோ நீர் நிறையத் தொடங்கியது.
“இன்னைக்கு அவர்கூட பேசினதை விதார்த் ரெக்கார்ட் பண்ணி அனுப்பியிருந்தான். எனக்கு அவ்ளோ ஷாக்கா இருந்திச்சு பேபி.. பட் நீ எதுக்கும் பயப்படாத. விதார்த் உன்னோட ரூம்ல இருந்த கேமராவை எடுத்துட்டான். இனி நீ எதுக்கும் பயப்படத் தேவலை. 

அவரை இனி நான் பார்த்துக்கிறேன். நீ எதைப் பத்தியும் யோசிக்காம நிம்மதியா தூங்கு. நாளைக்கு நீ எனக்கானவளா என் கூடவே இருப்ப.” என்றவன் அலைபேசியில் அவளுக்கு முத்தமிட அவளோ அழுகையோடு சட்டென அழைப்பைத் துண்டித்தாள். 

லோகியினுடைய அப்பாவின் செயலில் அவளுடைய உடலோ உதறல் எடுத்தது. தன்னை காப்பதற்காத்தான் விதார்த் தன்னுடைய அறைக்குள் வந்திருக்கிறான் என்பது புரிய உடைந்து போனாள் அவள். 

அவளிடம் உண்மையைச் சொல்லி இருக்கலாமே. உண்மை தெரியாமல் அவனைக் கண்டபடி திட்டி விட்டதை எண்ணி அவளுடைய மனமோ துவண்டு போனது. அவளுக்காக தன் மீது தவறான பழியைச் சுமத்தச் சொன்னதை எண்ணி அவள் உடலோ மீண்டும் ஒருமுறை நடுக்கம் கொண்டது. 

கண்ணீரோடு படுக்கையில் சரிந்தவள் மீண்டும் அவளுடைய அலைபேசி ஒலிப்பதைக் கண்டு அதனை எடுத்தாள். 

லோகஜித்தான் மீண்டும் அழைக்கிறான் என அறிந்ததும் தன்னுடைய விழி நீரை துடைத்துக் கொண்டு அழைப்பை ஏற்றவள், “சொல்லுங்க….” என்றாள். 
அவளுடைய குரலிலோ உணர்வுகள் மரத்துப் போய் இருந்தன. 

“ஹேய் ஏன் உன்னோட வாய்ஸ் டல்லா இருக்கு..? என் மேல கோபமா பேபி. சாரிடி சத்தியமா இது எதுவுமே எனக்குத் தெரியாது. இனி இது மாதிரி நடக்காம நான் பார்த்துக்கிறேன். ஐ ப்ராமிஸ் யு..” என்றான் லோகஜித். 

“உங்க மேல எனக்கு எ.. எந்தக் கோபமும் இல்லை. எ.. எனக்கு தலை வலிக்கிற மாதிரி இருக்கு அதான் தூங்கப் போறேன்..” என்றாள் அவள். 

“சரிமா தூங்கு.. குட் நைட்..” என்றவாறு அழைப்பைத் துண்டித்தான் லோகஜித்.

தன்ஷிகாவுக்கோ அனைத்துமே வெறுத்துப் போனது. எல்லா பக்கமும் தன்னை மாத்திரமே பிரச்சினைகள் சுற்றி வளைப்பதைப் போல மூச்சு  முட்டிப் போனாள் அவள்.

விழித்திருந்தால் வேதனையே மிஞ்சும்… அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து தன்னையே கொன்று தின்று விடும் என எண்ணியவள் உறக்கத்தை தழுவ முயற்சி செய்யத் தொடங்கினாள். 

ஆழ்ந்த உறக்கம் மாத்திரமே மகிழ்ச்சியான நொடிகளை பரிசளிக்கும் என உணர்ந்தவள் விழிகளை மூடி உறங்க முயன்றாள்.

ஒவ்வொரு முறையும் விதார்த் தன்னைக் காப்பதற்காகவே முயற்சி செய்திருக்கிறான் என்பது புரிய அவளுடைய மனம் கனத்துப் போனது.

விதார்த்தைப் பற்றி எண்ணியவாறே சற்று நேரத்திலேயே உறக்கத்தை தழுவினாள் அவள்.

********* 
தனக்கென ஒதுக்கப்பட்ட அறையினுள் படுத்திருந்த விதார்த்திற்கோ இந்த இரவு முடிந்து விடக் கூடாதெனத் தோன்றியது. விடிந்தால் தன் தேவதை இன்னொருவரின் உடமை ஆகிவிடுவாளே. 

பின்னந் தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பதைப் போல வலிக்கத் தொடங்க, தன் தலையை அழுந்தத் தேய்த்து விட்டான் அவன். 

“என்கிட்டயே வந்திரு கண்ணம்மா… உன்னை இழக்கும் தைரியம் என்கிட்ட கொஞ்சமும் இல்ல.” என்றவன் தூக்கத்தை தொலைத்தான்.

******** 
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தன்ஷிகாவோ தன்னுடைய முகத்தில் யாரோ தலையணையை வைத்து அழுத்த மூச்சு விட முடியாமல் துடித்து பதறி எழ முயன்றாள்.

அந்த உருவமோ அவளை எழ விடாது மேலும் தலையணையால் அழுத்த மூச்சுக் காற்றுக்காக ஏங்கித் தவிக்கத் தொடங்கினாள் அவள்.  

அவளுடைய கரங்களால் அந்த உருவத்தை தாக்க முயன்றும் முடியாது போக, அவளுக்கோ உடல் சோர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக பலம் இழக்கத் தொடங்கியது. 

இன்னும் சில நொடி நேரத்தில் மூச்சு விட முடியாமல் தான் இறக்கப் போகிறோம் என்பதை உணர்ந்து பதைபதைத்துப் போனாள் அவள்.

அவளுடைய மனமோ இறுதிவரை மகிழ்ச்சி எனும் சுவையை சுவைக்காது செத்து மடியப் போகிறோம் என எண்ணி வேதனை கொண்டது.

அக்கணம் திடீரென அவளுடைய அறைக் கதவு திறக்கும் சத்தம் அவளுடைய காதில் கேட்டது. உதவி கேட்டு கத்துவதற்காக வாய் திறக்க முயன்றவள் தலையணையின் அழுத்தத்தில் கத்தவும் முடியாது படுக்கையில் தரையில் விழுந்த மீனாகத் துடிதுடித்தாள். 

அதே நேரம் “ஏய்… அவளை விடுடா..” என்ற விதார்த்தின் கர்ஜனையில் அவளுக்கோ யானை பலம் வந்தாற் போல இருந்தது.

அவன் வந்து விட்டான்..!! இனி அவளைக் காத்து விடுவான்.. என நம்பினாள் அவள்.

விதார்த்தோ அவளைக் கொல்ல முயன்ற உருவத்தை நொடியில் அடித்து விழுத்த விதார்த்தின் தாக்குதலை சமாளிக்க முடியாதவனோ சட்டென தப்பித்து வெளியே ஓடினான்.  

அவனைத் துரத்திப் பிடிக்க முயன்ற விதார்த்தின் கரத்தை இறுகப்பற்றிக் கொண்டாள் தன்ஷிகா. 

அவள் பயந்து போய் இருப்பதை உணர்ந்தவன் சட்டென அவளை நெருங்கி வந்து இறுகணைத்துக் கொண்டான்.

“விதூஊஊஊ…” எனக் கதறியவள் ஏங்கி ஏங்கி அழத் தொடங்க, விதார்த்தின் கரமோ அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டது.

“ரிலாக்ஸ்  கண்ணம்மா…  இனி ஒன்னுமே ஆகாது. அதான் நான் வந்துட்டேன்ல. பயப்படாதே ரிலாக்ஸ்..” என்றவன் அவளுடைய கூந்தலை மென்மையாக வருடிவிட்டான்.

அவள் உடலோ நடுங்கிக் கொண்டிருந்தது. 

“ப… பயமா இருக்கு… மூச்சு முட்டுது..” எனத் திணறியவளை கரம் பிடித்து எழுப்பியவன் யாரும் அறியாது அவளை மாடி நோக்கி அழைத்துச் சென்றான்.

அங்கே மாடிப் படிகளின் வளைவில் அவளை அமர்த்தியவன், “கொஞ்ச நேரம் இங்கேயே இரு.. இந்தக் காத்து உன்னை ரிலாக்ஸ் ஆக்கும்.” என்றான் விதார்த்.

அவளோ அவனையே இமைக்காது பார்த்தவள், “ஏன்..?” என்ற கேள்வியை அவனை நோக்கி எழுப்பினாள்.

“என்ன ஏன்…?”

“ஏன் எனக்காக இவ்ளோ ஹெல்ப் பண்றீங்க..?” 

“தோணிச்சு பண்ணினேன்.” என்றான் அவன்.

“அதான் ஏன் தோணிச்சு..? நான் திட்டும் போதாவது உண்மையை சொல்லிருக்கலாம்ல.” 

“உண்மையை சொல்லியிருந்தா நீ இன்னும் பயந்திருப்ப.” என கனிவான குரலில் கூறினான் அவன்.

“ம்ம்…” என்றவள் படிகளில் சரிந்து படுத்து வானத்தைப் பார்த்தாள். கீழே ஒரு சிலர் நடமாடும் சத்தம் கேட்க விதார்த்தோ எழுந்து சென்றவன் மொட்டை மாடியின் கதவைப் பூட்டித் தாழிட்டு விட்டு அவளின் அருகே வந்து படிக்கட்டுகளில் தானும் சரிந்தான். 

இருவருடைய விழிகளும் வானில் தெரிந்த மின்னும் நட்சத்திரங்களை பார்க்கத் தொடங்கின. 

“ஸ்டார்ஸ் எல்லாமே ரொம்ப தூரத்துல இருந்தாலும் அவ்ளோ அழகா இருக்கு. பட் நம்மளால அதை நெருங்கவும் முடியாது. தொடவும் முடியாது.” என தன்னுடைய மென்மையான மெல்லிய கரத்தை வானத்தை நோக்கி நீட்டியவாறு  கூறினாள் தன்ஷிகா. 

விதார்த்தின் அதரங்களிலோ விரத்திப் புன்னகை தோன்றலாயிற்று. 

“உண்மைதான் என்னோட மனசுக்கு பிடிச்சதும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கும். ஆனா என்னால அதை தொடவும் முடியாது. நெருங்கவும் முடியாது.” என்றவனைத் திரும்பிப் பார்த்தவள் “அது என்ன..?” எனக் கேட்டாள். 

அவனுடைய உரோமம் நிறைந்த கரமோ உயர்ந்து அவளைச் சுட்டிக்காட்ட அவளுடைய விழிகளோ அதிர்ச்சியில் மேலும் பெரிதாக விரிந்தன. 

“அது நீதான் கண்ணம்மா… நீ பக்கத்துல இருந்தும் கூட ரொம்ப தூரத்துல இருக்கிற மாதிரிதான் தோணுது. உன்ன அள்ளி அணைச்சு என்னோட கைக்குள்ளையே பொத்தி வச்சுக்கணும் போல தோணுது. ஆனா அந்த உரிமையை இழந்து இப்போ யாரோ ஒருத்தன் போல கைகட்டி நிற்கிறேன்.” என்றவனின் குரல் கலங்கி ஒலித்தது.
 அவளோ விழிகள் கலங்க மீண்டும் வானத்தையே வெறிக்கத் தொடங்கினாள்.

அவர்களின் இடையே வார்த்தைகள் குறைந்து மௌனம் அதிகரிக்கத் தொடங்கியது.

“என்னை ஏன் விட்டுட்டு போனீங்க..?” என மெல்லிய குரலில் விசும்பலாகக் கேட்டவள் அவனுடைய முகத்தை கூர்ந்து பார்த்தாள்.

“வேணாம் கண்ணம்மா..” என்றவன் அவளுடைய உதட்டில் தன்னுடைய விரலைப் பதித்தான்.

“நான் நிறைய தடவை அந்தக் கேள்வியைக் கேட்டு தவிச்சுப் போய்ட்டேன்டி மறுபடியும் வேணாம்.” என்றவாறு அவளுடைய உதடுகளில் இருந்து தன் கரத்தை விலக்க முயன்றவன் அதன் மென்மையில் தடுமாறி விலக்க முயன்ற விரலால் அவளுடைய உதடுகளை அழுத்தமாக வருடி விட்டான்.

அவளோ விழிகளை மூடிக் கொள்ள, அவனுடைய கரமோ மெல்ல கீழிறங்கி அவளுடைய கழுத்தினை வருடியது.

அடுத்த நொடி அவளை இழுத்து தன் மார்பின் மீது போட்டுக் கொண்டவன் அவளை அணைத்தவாறு விழி நீர் சிந்த, அவனுடைய கண்ணீரில் கரைந்து போனாள் அவள்.

அவளுடைய இதழ்களோ மெல்ல அவனுடைய தாடி அடர்ந்த கன்னத்தில் பதிய, அவனோ உன்மத்தம் கொள்ளலானான்.

அடுத்த நொடியே தன் மீது கிடந்தவளை புரட்டித் தரையில் சரித்தவன் அவளுடைய முகமெங்கும் முத்தமிடத் தொடங்கினான்.

அவளோ கிறங்கி விழி மூடி அவனுடைய தலைக் கேசத்தை அழுந்தப் பற்ற, அந்த நொடி அவளுடைய மென் இதழ்களை அழுந்தக் கவ்விக் கொண்டான் விதார்த்.
அவள் உடலிலோ இனிய படபடப்பு படரத் தொடங்கியது.

அடி வயிற்றில் இருந்து ஒருவித உணர்வு பந்து போல உருளத் தொடங்க, அவளுடைய மயிர்கால்களோ குத்திட்டு நின்றன.

இரு இதழ்களும் முத்த யுத்தத்தில் மோதி போரிட்டு உமிழ்நீரை பரிமாறிக் கொள்ள, இருவருக்குள்ளும் அமிழ்ந்திருந்த காதலோ அங்கே  வெளிப்படத் தொடங்கியது. 

இதழ் முத்தம் முடிவற்ற யுத்தமாய் அங்கே நிகழத் தொடங்கியது.

படிகளில் படுத்திருந்தவளைத் தூக்கி சம தரையில் கிடத்தியவன் விலகி ஓட முயன்றவளின் கரத்தை இறுகப் பற்றி தன்னுடைய மடியில் இருத்திக் கொண்டான்.

அவனுடைய கரங்களோ அவளுடைய இடுப்பை மலைப் பாம்பாய் சுற்றிக் கொண்டன. சுற்றியதோடல்லாமல் அழுத்திப் பிடித்து உணரத் துடித்தன.

கொடியிடையில் படிந்த கரங்களோ ஆடைக்குள்ளும் பயணித்து அவளுடைய உடலின் சூட்டினை உணர்ந்து கொள்ள, பெண்ணவளின் தளிர் மேனியோ நடுங்கத் தொடங்கியது.

உடல் நடுங்கியவளின் பின்னங் கழுத்தில் அழுத்தி அழுத்தி குட்டிக் குட்டி முத்தங்களை பதித்தான் அவன்.

அவளோ விலகவும் முடியாது விலக்கவும் முடியாது தவிக்க, அவளை தரையில் சரித்தவன் மீண்டும் அவளுடைய இதழை மையமிடத் தொடங்கினான்.

அப்பப்பா…!! அவளை உயிரோடு கொன்றது அவனுடைய ஆழ்ந்த இதழ் முத்தம். இதழ் வழியே இதயத்தையே உறிஞ்சி எடுத்தான் அவன்.

எத்தனை முறை சுவைத்தாலும் அடங்காத போதையை கொடுக்கும் அவளுடைய இதழ்களோ அவனுடைய இதழ்களுக்குள் பொருந்திக் கொண்டன. 

விடுவிக்கும் எண்ணம் சிறிதும் இன்றி அவளின் உதடுகளை சுவைத்தவன் அவளுடைய இடையை அழுந்தப் பற்றிப் பிசையத் தொடங்கினான்.

“ஸ்ஸ்ஆஆஆ.. வலிக்குது..” என முனகியவளின் இடையை சட்டென விடுவித்தவன் குனிந்து அங்கேயும் இதழ் பதிக்க, அவளோ தரையில் துடித்தாள்.

“ப்ளீஸ் வேணாமே..” என மறுத்தவளின் கரங்களோ அவனுடைய தலையை தன் வயிற்றோடு அழுத்தி அணைத்தன.

 
உறவு – 50 
 
மங்கையவளின் உடலோ மதுபானக் குடுவையாக மாறிப் போக, அதில் தன் தாகத்தை தீர்க்கத் தொடங்கியிருந்தான் விதார்த். 

அவளுக்கோ உடல் கூசிச் சிலிர்த்தது. விரல்கள் கூட அவனுடைய தொடுகையில் நடுங்கி நர்த்தனம் ஆடின. இதயம் படபடக்க உடல் வெடவெடக்க வெற்றுத் தரையில் கிடந்தவளின் இடையில் மெல்லக் கடித்தான் அவன்.

சேட்டைகள் பல புரிந்திட அவளுடைய சிற்றிடை அவனுக்கோ மைதானமாகிப் போனது. நாவு எனும் பந்தை அவளுடைய இடை எனும் வெண்ணிற மைதானத்தில் படர விட்டவன் அவளை ஏகத்திற்கும் சிவக்க வைத்தான்.

அவளுடைய காற்றும் தீண்டாத இரு தேமாப் பூக்களை தன் கரத்தால் கொய்ய முயன்றான் அவன்.

அவளோ அவனுடைய செயலில் துடித்து அடங்க, தேமாப் பூக்களின் தேனை அவளுடைய ஆடையோடு சேர்த்து பருகத் தொடங்கினான் விதார்த்.

அவனுடைய கரங்களோ ஆடையுடன் தீண்டியவற்றை ஆடை இன்றியும் தீண்டிப் பார்க்க பேராசை கொண்டது. காதல் அவனை ஆட்டிப் படைத்தது.

அடுத்த சில நொடிகளில் அவளுடைய ஆடைகள் ஒவ்வொன்றும் விதார்த்தால் நீங்கப் பெற, அவளுடைய வெற்று உடலை வீணை போல மீட்டத் தொடங்கினான் அவன்.

காதல் இசை அவர்களுக்கிடையே சாமகானமாய் இசைக்கப்பட்டது. அவளுடைய வெற்று மேனியோ இசைக் கருவியாக மாறி அவனால் மீட்டப்படத் தொடங்கியது. 

அவனுடைய பற்தடங்கள் அவளுடைய உடலிலும் அவளுடைய நகக் கீறல்கள் அவனுடைய உடலிலும் ஏராளமாய் விஞ்சின.

அந்த இரவு நேரமோ அவர்களுடைய கூடலுக்கு வழிவகுக்க, அவளுடைய விழிகளில் வழிந்த கண்ணீரைத் தன் அதரங்கள் கொண்டு துடைத்தவன் அவளுள் தன்னைச் செலுத்தி அவளைத் தன்னவளாக மாற்றிக் கொள்ளத் தொடங்கினான்.

மன்னவனின் அசைவுகள் மங்கையினை சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் அழைத்துச் செல்லத் தொடங்கின.

அந்தச் சுக கூடலின் நடுவே “வீல்……” என அலறியவாறு பதறி தன்னுடைய படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் தன்ஷிகா. 

அவளுடைய விழிகளோ பதற்றத்தோடு கீழே குனிந்து தன்னுடைய ஆடைகளை அவசர அவசரமாக ஆராய்ந்தன.
அவளுடைய உடலோ வியர்வையால் குளித்திருந்தது. 

இவ்வளவு நேரமும் தான் கண்டது கனவு என்பது புரிய நிம்மதிப் பெரு மூச்சு விட்டவளுக்கோ உடல் வியர்த்துப் போனது. இதழ்கள் வரண்டு போயின. இதயம் தொண்டைக் குழிக்குள் வந்து துடிக்கத் தொடங்கியது.

லோகியுடன் அலைபேசியில் உரையாடிவிட்டு தூங்கியதன் பின்னர் நடந்தது அனைத்தும் கனவு என்பதை புரிந்து கொண்டவள் தன் தலையில் பலமாக அடித்துக் கொண்டாள். 

‘ஐயோ என்ன கனவிது…?’ பதறியது அவளுக்கு.

தன்னை தலையணை வைத்து ஒருவர் அழுத்தியதும் அதில் இருந்து விதார்த் தன்னைக் காப்பாற்றியதும் மொட்டை மாடிக்கு சென்று கூடல் புரிந்த அனைத்தும் கனவென உணர்ந்தவள் தனக்கு வந்த கனவை அடியோடு வெறுத்தாள்.

குளியலறைக்குள் நுழைந்து கொண்டவளோ கண்ணாடியில் தன்னுடைய விம்பத்தை ஆராய்ந்தாள்.
 அவளுடைய முகமோ வெளிறிப் போயிருந்தது. அவளுடைய மேலாடையை விலக்கி எந்த இடத்திலும் விதார்த்தின் பற்தடங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே  சீராக மூச்சு விட்டாள் அவள்.

நிஜத்திலேயே நடந்ததைப் போல அவளுடைய உடல் படபடக்க, குழாய் நீரைத் திறந்து தன்னுடைய முகத்தை நன்கு அடித்து கழுவியவளுக்கோ மனம் அமைதி கொள்ளாது தடுமாறத் தொடங்கியது. 

ஓடிச் சென்று தன்னுடைய அறைக் கதவை உள்பக்கமாக பூட்டியவள் தன்னுடைய நிம்மதியை முற்றிலும் இழந்தாள்.

இந்தக் கல்யாணத்தை நிறுத்தி விட்டு விதார்த்தை எண்ணியவாறே தன் வாழ்க்கையை வாழ்ந்து முடித்தால்தான் என்ன என்ற எண்ணம் அவளுக்குள் எழுந்தது. 

கனவில் கூட வந்து தன்னைத் தொடரும் விதார்த்தின் நினைவு அலைகளை அவளால் எங்கணம் சமாளிக்க முடியும்..? அழுகையோ விம்மி வெடித்தது. 

சட்டென தன்னுடைய அறைக் கதவைத் திறந்தவள், விறுவிறுவென மாடி அறை நோக்கிச் சென்றாள்.

அங்கே விதார்த்துக்கு கொடுக்கப்பட்ட அறையின் வெளியே வந்து நின்றவள் படபடப்போடு அந்த அறைக் கதவையே வெறித்துப் பார்த்தாள். படபடவென அந்தக் கதவை வேகமாகத் தட்டி உள்ளே நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பவனிடம் நான்கு கேள்விகள் நறுக்கென கேட்க வேண்டும் போல உள்ளம் துடித்தது அவளுக்கு.

அப்படியே அவனுடைய கதவின் முன்பு மண்டியிட்டு அமர்ந்தவள் அந்தக் கதவில் தன்னுடைய கரத்தை பதித்தவாறு சத்தம் இன்றிக் கதறி அழுதாள்.

எவ்வளவு பெரிய துரோகத்தை அவன் அவளுக்கு செய்திருந்தும் கூட அவளுடைய மனமோ இன்னும் அவனை மாத்திரமே விரும்பிக் கொண்டிருந்தது.

காதல் எனும் உணர்வு நிச்சயமாக முட்டாள்தனத்தின் உச்சகட்டம் போலும். இது நிறைவேறாது எனத் தெரிந்தும் கூட உள்ளுக்குள் வேர் விட்டுப் படரும் ஆசைகளை பிடுங்கி எறிய முடியாது வதைப்பட வேண்டியுள்ளதே என எண்ணி அழுது கரைந்தாள் அவள்.

இன்னும் சில அடிகள் முன்வைத்து அந்தக் கதவை தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்து அவனிடம் அவளால் நியாயம் கேட்க முடியும்.
 ஆனால் அவள் அதைச் செய்யவில்லை. 

அவனுடைய மனதில் தான் கீதா எனும் பெண் மாளிகை கட்டி வசித்து வருகின்றாளே.. அப்படி இருக்கையில் தான் எங்கனம் அவனை நாடிச் சென்று காதல் யாசகத்தை பெற முடியும்..? அன்று மனைவியாக உறவு எனும் பந்தத்தில் தோற்றுப் போனாள். இன்று அவனுடைய குணம் அறிந்தும் காதலில் விழுந்து உணர்வுகளிடம் தோற்றுப் போனாள்.

அவனுடைய அறைக் கதவின் வெளிப்புறம் தரையில் அமர்ந்தவாறு தன்னுடைய ஏக்கங்களை மனதினுள் கூறி கதறித் தீர்த்தாள் அவள்.

‘எதுக்காக என்னோட கழுத்துல தாலி கட்டினீங்க…? ஏன் என்னை அன்னைக்கு ஏமாத்திட்டு விட்டுட்டுப் போனீங்க..? இவ்வளவு நாளும் கஷ்டப்பட்டாலும் இந்த மூனு வருஷம் தனியா எந்த சபலமும் இல்லாம இருந்த என்னோட வாழ்க்கையில மறுபடியும் எதுக்காக வந்தீங்க..? உங்களோட முகத்துல கூட விழிக்கவே கூடாதுன்னு வைராக்கியமா இருந்த என்னோட மனசை எதுக்காக மாத்தினீங்க..? ஏன் எனக்கு உதவி பண்றீங்க..? எதுக்கு என்னோட அனுமதி இல்லாம என்னைத் தொட்டீங்க..? ஏன் என்னை உங்களோட பொம்மையா மாத்தினீங்க…? எனக்கும் உணர்வுகள் இருக்கும்னு நீங்க கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லையா..? என்னோட மனசு பத்தி உங்களுக்கு ஒரு சதவீதம் கூட கவலையே இல்லையா..? நான் நிம்மதி இல்லாம ஒவ்வொரு நிமிஷமும் செத்துகிட்டு இருக்கேன் விதார்த். நா.. நான் என்ன பண்ணட்டும்…?  நான் என்ன பண்ணட்டும்…?” என மனதினுள் எண்ணியவாறு சத்தம் இன்றிக் கதறித் தீர்த்தாள் அவள்.

அதே கணம் அந்த அறையினுள் இருந்த விதார்த்தோ தூக்கம் சிறிதுமின்றி விட்டத்தை வெறித்த வண்ணம் படுத்துக் கிடந்தான். அவனுக்குள்ளே இருந்த உணர்வுகள் தாறுமாறாய் வெளிப்படத் தொடங்கின.

அந்த அறையே அதிரும் வண்ணம் கத்த வேண்டும் போல இருந்தது அவனுக்கு. கொஞ்சம் கொஞ்சமாக விடிந்து கொண்டிருக்கும் விடியலை மனதாரச் சபித்தான் அவன்.

 பின்னே விடிந்தால் அவளுக்கு திருமணம் அல்லவா..? நான் தாலி கட்டிய அவளுடைய பொன் கழுத்தில் இன்னொருவனும் தாலி கட்டி அவளை தன்னுடைய உடமையாக்கப் போகின்றான் என்ற நிதர்சனம் அவனுடைய முகத்தில் அறைய வலி எனும் அரக்கன் அவனை வாட்டி வதைக்கத் தொடங்கினான்.

‘நான் பண்ணது மன்னிக்கவே முடியாத தப்புதான். கூடவே இருந்து அதுக்காக எவ்வளவு தண்டனை வேணும்னாலும் கொடுடி.. என்னை விட்டுட்டு இன்னொருத்தன் கிட்ட போயிடாத கண்ணம்மா.. ப்ளீஸ்..’ என அந்த அறையே அதிரும் வண்ணம் கத்த வேண்டும் போல இருந்தது அவனுக்கு. 

இக்கணமே அவளைத் தேடிச் சென்று அவளுடைய அறை வாயிலில் மண்டியிட்டு அவளுடைய காதலுக்காக யாசகம் பெற்றால் கூட நன்றாக இருக்கும் என எண்ணினான் அவன்.

அவனுடைய அறைக் கதவின் முன் அவனுடைய தேவதைப் பெண் அவனது காதலுக்காக மண்டியிட்டு வெளியே கதறுகிறாள் என்பதை அறியாது உள்ளே கதறிக் கொண்டிருந்தான் விதார்த்.

அதேபோல உள்ளே அறையினுள் இருப்பவனும் சற்றும் தூக்கமின்றி அவளுக்காக அவளுடைய காதலுக்காக மருகித் தவிக்கின்றான் என்பதனை அறியாது வெளியே அமர்ந்திருந்து கதறிக் கொண்டிருந்தாள் தன்ஷிகா.

அழுதழுது அவளுக்கோ முகம் சிவந்து போனது.

அவளைப் பொறுத்த மட்டில் இந்த வாழ்க்கை தன்னை வஞ்சித்து விட்டது என்றே எண்ணினாள். 

அதே கணம் அவளை அலங்கரிப்பதற்காக வெகு நேரத்திற்கே அழகு நிபுணர்கள் அங்கே வந்து சேர, தன்னுடைய கண்ணை அழுத்தமாகத் துடைத்துக் கொண்டவள் விதார்த்தின் அறையை ஒரு கணம் ஏக்கமாய் பார்த்தவள், அடுத்த கணமே தன்னை திடப்படுத்திக் கொண்டு அங்கிருந்து விலகிச் சென்று விட, விதார்த்தின் மனமோ நிலை கொள்ளாது தவித்தது. 

சட்டென படுக்கையில் இருந்து எழுந்து வந்து தன்னுடைய அறைக் கதவைத் திறந்தவன் இங்கே எங்கேயேனும் தன்ஷிகா இருக்கிறாளோ என அவசர அவசரமாகப் பார்வையால் அலசத் தொடங்கினான். 

அவள் இத்தனை நேரமும் கிட்டத்தட்ட பைத்தியக்காரி போல அவனுடைய அறையின் முன்பு அமர்ந்திருந்து அவன் காதலுக்காய் கதறி அழுததை அறியாது சோர்வுடன் மீண்டும் உள்ளே நுழைந்தான் அவன்.

அவனுடைய மனமோ சிறுசிறு கண்ணாடித் துண்டுகளாக உடைந்து சிதறிப் போய் இருந்தது. அவளுடைய திருமணம் வரையிலும் இங்கே இருந்து அதைக் காணும் சக்தி சிறிதும் அற்றவன் திருமணத்திற்கு முன்பே இங்கிருந்து கிளம்பிச் சென்று விட வேண்டும் என்ற முடிவை எடுத்துக் கொண்டான்.

அவளுக்காக உயிர் உருக தவித்து துடிப்பவன் தன்னுடைய காதல் அவள்தான் எனும் உண்மையை அவளுக்கு தெரிவித்திருந்தால் நிச்சயம் அவள் விதார்த்தை ஏற்றுக் கொண்டிருப்பாள்.‌

இருவருடைய மனதிலும் காதல் ஆழமாய் நிலைத்திருந்த போதும் கூட சூழ்நிலைகளின் காரணத்தினால் அவை வெளிப்படாது மனதின் அடியாழத்தினுள் அமிழ்ந்து போயின.

பல உண்மைக் காதலர்கள் சேராது பிரிவைத் தழுவுவதற்கு இப்படிப்பட்ட பல சூழ்நிலைகளும்தானே காரணம்.

இங்கே தங்களுடைய மனம் முழுக்க காதல் நிறைந்திருந்தும் கூட அதை வெளிப்படுத்த முடியாது மருகித் தவித்தன இரு அன்புடை நெஞ்சங்கள்.

********* 
பொன்னை விட உயர்ந்த நேரமோ நிற்காமல் நகர்ந்து கொண்டே இருக்க, அழகிய விடியலும் பூமிதனைத் தழுவிக் கொண்டது. 

விடியல் வந்ததும் முகூர்த்த நேரமும் வந்து சேர்ந்துவிட, அழகில் அழகிய எல்லோரா சிற்பமும் தோற்றுப் போகும் வண்ணம் அழகு நிபுணர்களின் கை வண்ணத்தில் பொன் ஓவியமாய் மிளிர்ந்தாள் அவள்.

லோகஜித்தோ ஆண் மகனுக்கே உரிய கம்பீரத்துடன் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமான கர்வமான அழகுடன் தன் துணைக்காக மண மேடையில் காத்திருந்தான். 

விதார்த்தோ தன்னுடைய பையினை எடுத்தவன் தன்ஷியிடம் சொல்லி விட்டுச் செல்லலாம் என்பதற்காகக் காலையில் இருந்தே அவளைக் காணக் காத்திருந்தான்.

அவளின் அறைக்கு முன்பு குட்டிப் போட்ட பூனை போல அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டிருந்தவனை பிடித்துக் கொண்டார் தன்ஷியின் அன்னை.

“என்னப்பா…? ஏதாவது வேணுமா…?”

“ஆமாம்மா.. நான் அவசரமா இன்னைக்கு கிளம்பணும். தனிகிட்ட சொல்லிட்டு போறதுக்காக வெயிட் பண்ணினேன்.” என்றான் விதார்த்.

“ஓஹ்… என்னப்பா இப்படி சொல்ற…? கல்யாணம் முடிஞ்சதும் சாப்பிட்டுப் போகலாமே..?”

“அவ நல்லா இருந்தாலே என் வயிறும் மனசும் நிறைஞ்சிரும் மா.” என உணர்ந்து கூறியவனை திகைப்பாகப் பார்த்தவர் அவனை தன்ஷியின் அறைக்கு கூட்டிச் சென்றார்.

“தம்பி நீங்க அவகிட்ட சொல்லிடுங்க. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.” என்றவர் அங்கிருந்து நகர, அவளைத் தேடி உள்ளே வந்தவன் மொத்த அழகையும் குந்தகைக்கு எடுத்திருந்தவளைக் கண்டு பேச்சற்றுப் போனான்.

அவனுடைய விழிகளோ கண்ணீரை சட்டென வழிய விட்டிருந்தன.

பேச முடிந்தும் ஊமையாகி அவள் முன்னே நின்றான் அந்த ஆண்மகன்.
 
 💜💙💙💜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *