இது ஒருநாள் உறவா தலைவா..?

This entry is part 13 of 42 in the series இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?



உறவு – 16
 
கீதாவைத் தேடி அலைந்து ஏமாற்றத்தில் துவண்டு போன விதார்த்தோ வெகு நேரம் கழித்தே தன்னுடைய கார் நிறுத்தி இருந்த இடத்தை நோக்கி வந்தான்.

அவனுடைய உடலோ தளர்ந்து போய் இருந்தது. காரை நெருங்க நெருங்க தன்ஷிகாவின் நினைவுகளும் வரிசையாக வரத் தொடங்கின.

அந்நொடியே அதிர்ந்தவன் அவளைத் தனியாக விட்டு வந்த தன்னையே நொந்தவனாக ஒருவித பதற்றத்தோடு தன் காரை நோக்கி விரைந்தான். 

சற்று நேரத்தில் கார் நிறுத்தியிருந்த இடத்தை வந்தடைந்தவன்,

“சாரி தன்ஷிகா…” என்றவாறு கார்க் கதவைத் திறக்க, காரின் உள்ளே தன்ஷிகா இல்லாததைக் கண்டு பதறித்தான் போனான் அவன். சட்டென அவனுடைய விழிகள் அவளை அந்த வீதியெங்கும் தேடலாயின. 

‘ஓ காட் வெயார் ஆர் யு…?” என முணுமுணுத்தவன் சற்றுத் தள்ளி நின்ற மரத்தின் கீழே நின்று லோகஜித்துடன் முகம் கொள்ளாப் புன்னகையோடு பேசிக் கொண்டிருந்த தன்ஷிகாவைக் கண்டு நிம்மதியுற்றவன் அடுத்த கணமே கொதித்துப் போனான்.

அவர்களை வேகமாக நெருங்கியவன், “தன்ஷிக்க்காஆஆஆஆ..” என சற்றே அழுத்தமாக அழைக்க, அந்த அழைப்பில் வெகு நிதானமாக அவனை நிமிர்ந்து பார்த்தவள், “எஸ் சார்..” என்றாள்.

பற்களை நறநறத்தான் விதார்த். ‘இவன்கூட இவளுக்கு என்ன பேச்சு..?’ என எண்ணியவன், “லெட்ஸ் கோ…” என்றான். அவனுடைய பார்வையோ இக்கணமே என்னுடன் வா எனக் கட்டளை இடுவதைப் போல இருந்தது.

“ஒன் மினிட் தன்ஷி, இதுல என்னோட நம்பர் இருக்கு. வெச்சுக்கோ உனக்கு தேவைப்படும்.” என்றவாறு தன்னுடைய அலைபேசி எண்ணை தன்ஷிகாவிடம் கொடுத்தான் லோகஜித்.

இம்முறை மறுக்காது புன்னகையோடு வாங்கிக் கொண்டாள் தன்ஷிகா.

“தேங்க்ஸ் லோகஜித். பை.” என்றவாறு அவள் புன்னகையோடு தலை அசைக்க,

“உனக்கு எப்பவுமே நான் லோகிதான். என்னை நீ லோகின்னே கூப்பிடலாம்.” என்றான் அவன். 

தன்ஷிகாவோ ஒரு தலையசைப்போடு காரை நோக்கி நடக்க, விதார்த்தின் உடல் இறுகியது. 

லோகஜித்தை நெருங்கிய விதார்த்தோ, ”எதுக்காக தன்ஷிகாவை நீ டார்கெட் பண்ற.?” என நேரடியாகக் கேட்டான். அவனுடைய குரலோ இரும்பென இறுகிப் போயிருந்தது. 

“பிகாஸ் ஐ லவ் ஹெர்.” என பட்டென பதில் கூறினான் லோகஜித்.

“வாட்..?” என அதிர்ந்தான் விதார்த். அவனுடைய வார்த்தைகளில் விதார்த்திற்கோ எரிச்சலாக இருந்தது.

இத்தனை நேரமும் இறுகிப் போயிருந்த விதார்த்தின் முகமோ லோகஜித் காதல் என்றதும் சடுதியில் மாறிப் போனது. 

“தன்ஷிகா நீ நினைக்கிற மாதிரி பொண்ணு கிடையாது லோகஜித். டைம் பாஸுக்கு மூவ் பண்ற ஐடியா இருந்தா நீயே விலகிரு.” என எச்சரித்தான் விதார்த்.

“உன்னை மாதிரி ஒரு நாள்ல அவளை ஏமாத்திட்டுப் போற டைப் நான் கிடையாது மிஸ்டர் விதார்த் ஹாங் வருண்.” என அழுத்திக் கூறினான் லோகஜித்.

அவனுடைய கூற்றில் விதார்த்தின் புருவங்களோ உயர்ந்தன. “சோ நீதான் எனக்கு ப்ராஜக்டை நிறுத்தச் சொல்லி அந்த போட்டோவை அனுப்பிருக்க ரைட்..?” என்றவனின் பார்வையில் எள்ளல் துள்ளியது.

“எஸ்…” என்ற லோகஜித்தின் பார்வையோ காரின் அருகே சென்று நின்ற தன்ஷிகாவை வருடியது. 

உள்ளங்கையை ஒன்றோடு ஒன்று தேய்த்து அதனைத் தன் இரு கன்னங்களிலும் பதித்துக் கொண்ட தன்ஷிகாவை காதலாய்ப் பார்த்தது லோகஜித்தின் பார்வை. 

அதை விதார்த்தும் கவனித்தான். 

“ஏய் லுக் அட் மீ. என்னால இந்த ப்ராஜக்ட்டை ட்ரோப் பண்ண முடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்க. சில்லித்தனமா ப்ளாக் மெயில் பண்ற வேலை எல்லாம் என்கிட்ட வேணாம். பிஸ்னஸ் டீலுக்காக தன்ஷிகாவை உனக்கு சாதகமாக யூஸ் பண்ணிக்க ட்ரை பண்ணாத. தொலைச்சிருவேன்.” என கர்ஜித்தான் விதார்த்.

சட்டென விதார்த்தை நெருங்கிய லோகஜித்தோ, “எனக்கும் உனக்கும் ஆயிரம் பிரச்சனை வந்தாலும் கூட அதுல எதுவுமே என் தன்ஷியை பாதிக்க விட மாட்டேன். பிரச்சனை உனக்கும் எனக்கும் மட்டும்தான் விதார்த். நீயும் நானும் மோதிக்கலாம். எனக்கு நீ மட்டும்தான் எதிரி தன்ஷி இல்ல.” என்றதும் விதார்த்தின் மனமோ சுருக்கென தைத்தது.

‘என் தன்ஷியாமே…’ என எண்ணி சீற்றத்தில் விழிகளை மூடித் திறந்தவன்,

“அவளை ஃபாலோ பண்றத முதல்ல நிறுத்து..” என்றான் விதார்த்.

“அத சொல்றதுக்கு நீ யாரு..?” எனத் திருப்பிக் கேட்டான் லோகஜித்.

“உன்னோட லிமிட்டை க்ரோஸ் பண்ணாத லோகஜித். நான் அவளோட பாஸ்.” எனக் கர்ஜித்தான் விதார்த்.

“நீ ஜஸ்ட் பாஸ் மட்டும்தானே. பட் நான் அவளைக் கல்யாணமே பண்ணிக்கப் போறேன்.” என்றதும் “டேய்ய்ய்ய்….” எனக் கர்ஜித்தவாறு அவனுடைய சட்டைக் காலரை எட்டிப் பிடித்தவன், பின் நிதானித்தான். 

இவனால் தன்ஷிகாவின் வாழ்க்கை மலரக் கூடுமோ..? 

இவனுடைய காதல் அவளை துளிர்க்கச் செய்யுமா..? 

என்னால் அவள் அனுபவித்த வேதனைகள் போதும். இனியாவது அவள் நன்றாக வாழட்டும் என எண்ணிக் கொண்டவன் அடுத்த கணம் அங்கே நில்லாது தன்னுடைய காரை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

ஏனோ அவனுடைய மனம் தவித்துக் கொண்டே இருந்தது காரணம் புரியாது அமைதியாக காரில் ஏறியவன் தன்ஷிகாவை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தான்.

அவளோ காரின் உள்ளே அமர்ந்து வெளியே தெரிந்த காட்சிகளை வெறித்துக் கொண்டிருக்க  அவனுக்கோ பெருமூச்சு கிளம்பியது. அடுத்த கணம் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு காரை செலுத்தியவன் சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்திருந்தான்.

அந்த இடத்திற்கு வந்து சேர்வதற்கு முதல் ஆயிரம் சிந்தனைகள் அவனுடைய மூளையை குழப்பியன. 

தன்ஷிகாவை அழைத்துக் கொண்டு அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தவன் அவளைப் பார்த்து தலை அசைத்துவிட்டு தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த பிரத்தியேகமான அறைக்குள் நுழைந்தான்.

அவன் உடலும் மனமும் வெகுவாக சோர்ந்து போய் இருந்தது.  தன் அறையில் இருந்த சோபாவில் தளர்ந்து அமர்ந்தவன் சற்று நேரம் விழிகளை மூடிக்கொண்டான். 

இத்தனை வருடங்களும் இறந்துவிட்டதாக எண்ணிய கீதா இன்று வீதியில் அவன் கண்முன்னே நடந்து  சென்றதைக் கண்டு அவன் மனமோ ஆழிப் பேரலையாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

அவள் தன் கீதாதானா.? அல்லது கீதாவைப் போல இருக்கும் இன்னொருத்தியா.? என எண்ணிக் குழம்பியவன் தன் தலையை பிடித்துக் கொண்டான். 

அடுத்த கணமே இப்படித்தானே தன்ஷிகாவும் தன்னைப் பார்த்ததும் துடித்திருப்பாள். இறந்ததாக கூறிய வருண் அவள் கண்முன்னே வந்து நிற்கும் போது அழுது கதறி அப்படி பதைபதைத்தாளே. அவளும் பாவம்தான். என எண்ணியவன் அக்கணம் அவள் அனுபவித்த வலியை தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டான்.  

மனமெல்லாம் வலித்தது அவனுக்கு. ஒரு காதலால் எத்தனை பேரை காயப்படுத்தி விட்டோம் என எண்ணியவன் துவண்டு போனான். 

என்னால் சீரழிந்த தன்ஷிகாவின் வாழ்க்கையை நானே சரிப்படுத்த வேண்டும் என எண்ணிக் கொண்டவன் இனி தன்ஷிகா என் பொறுப்பு என்ற முடிவையும் அக்கணம் எடுத்துக் கொண்டான். 

பின் தன்னுடைய அலைபேசியை எடுத்தவன் பாரிஸில் உள்ள பிரபல்யமான டிடெக்டிவ் ஏஜென்சியை அணுகி கீதாவின் போட்டோவை அவர்களுக்கு அனுப்பி வைத்தான். 

கீதாவின் புகைப் படத்தையும் அவளை இன்று பார்த்த இடத்தையும் கூறியவன் அவளைப் பற்றிய தகவல்களைத் திரட்டக் கூறினான்.

ஹென்றி எனப்படும் அந்த டிடெக்டிவ்வோ இன்னும் இரண்டு நாட்களுக்குள் அந்தப் பெண்ணை பற்றிய அனைத்து தகவல்களையும் ஒப்படைப்பதாகக் கூறி விட்டு அழைப்பைத் துண்டிக்க,

அதன் பின்னரே தன்னுடைய மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்த அத்தனை சிந்தனைகளையும் நிறுத்தி வைத்தவன் கீதாவை பற்றி வரப் போகும் செய்திக்காக காத்திருந்தான். 

அவனுடைய மனமோ தான் இன்று பார்த்தது கீதாதான் என அடித்துக் கூறியது.

சற்று நேரத்தில் அறைக்குள் இருக்க முடியாது தன்னுடைய கார் கீயை எடுத்தவன் வெளியே வந்து தன்ஷிகாவை அழைத்தான்.

அவன் அழைக்கும் சத்தத்தில் கதவை திறந்து கொண்டு அவர்களுக்கென பொதுவாக இருந்த ஹாலுக்குள் வந்தவள், “சொல்லுங்க விதார்த்..” என்றாள்.  

“எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு… அதை முடிச்சிட்டு வந்துர்றேன்.” என்றான் விதார்த்.

“கீதாவைத் தேடுற வேலையா சார்..?” என நிதானம் இழக்காத குரலில் கேட்டாள் அவள். 

அவளை ஒரு கணம் வெறித்து பார்த்தவன் பின் மூச்சை ஆழ உள்ளிழுத்து விட்டவாறு ஆம் என தலையசைத்தான்.

எவ்வளவு கட்டுப்படுத்தியும் முடியாது அவளுடைய விழி நீர் கண்கள் முழுவதும் நிறைந்து விட, தன் அழுகையை மறைக்கும் பொருட்டு சற்றே தன்னுடைய பார்வையை திருப்பி சுவற்றில் பதித்தவள், 

“கவலைப்படாதீங்க சார். நீங்க ஆசைப்பட்டது நடக்கணும்னு நான் கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன். கண்டிப்பா உங்க கீதா உங்களுக்கு கிடைப்பா. அவ கூடவாவது சந்தோஷமா வாழுங்க.” என குரல் நடுங்கக் கூறியவள், துடித்த தன்னுடைய இதழ்களை அழுந்தக் கடித்து வெளிவந்த விம்மலை அடக்கியவள் தன்னை திடப்படுத்திக் கொண்டு அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்தாள்.

விதார்த்தோ அவள் கூறிய வார்த்தைகளை கேட்டதும் ஸ்தம்பித்துப் போனான். 

அவளுடைய வலி எப்படிப்பட்டது என்பது அவனுக்கு புரியத் தொடங்கிய நேரம்  இது. அவளுக்கு அவன் கொடுத்த வலியை அப்படியே கீதா அவனுக்கு கொடுத்திருக்கிறாள் அல்லவா.? 

இக்கணம் தன்னைப் பற்றி சற்றும் சிந்திக்காது நான் கீதாவுடன் சேர வேண்டும் என வாழ்த்தும் அவளைக் கண்டு அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

அவளால் எப்படி இந்த வார்த்தைகளை அவ்வளவு இயல்பாகக் கூற முடிந்தது.? தனக்காக கதறி துடித்தவள் தன்னிடம் நியாயம் கேட்டு சண்டை பிடித்தவள் தன்னை வருண் என அடித்துக் கூறி மார்பில் சாய்ந்து கதறி அழுதவள், இப்போது இப்படி கூறுவது சாத்தியமா.? தலைவலிப்பதை போல இருக்க அவளிடமே நேரடியாகக் கேட்டான் விதார்த்.

“நீ இப்படி சொல்லுவேன்னு நான் நினைச்சுக் கூடப் பாக்கல.” என கரகரப்பான குரலில் கூறினான் விதார்த்.

தாக்குப் பிடிக்க முடியாது கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை தன் பெருவிரல் கொண்டு துடைத்தவள், “நாம நேசிச்சவங்க நமக்கு கிடைக்கலன்னா அதோட வலியை நம்மளால தாங்கிக்கவே முடியாது விதார்த். அந்த வலியை நான் இத்தனை வருஷமா அனுபவிச்சிட்டேன். அ… அது கொடுமை.
அதே வலியை நீங்களும் அனுபவிக்க வேணாம். நீங்களாவது சந்தோஷமா இருங்க. உங்க கீதா கூட ஹேப்பியா வா… வாழுங்க. இந்த ப்ராஜெக்ட் முடிஞ்சதுமே நான் எங்க ஊருக்கு கிளம்புறேன்.” என கலங்கிப் போன குரலில் கூறியவளை சட்டென இழுத்து இறுக அனைத்துக் கொண்டான் விதார்த்.

அவன் உள்ளம் பதைபதைத்தது.

அவன் உடல் நடுங்கியது.

அவளுடைய வார்த்தைகளைக் கேட்டதும் ஏனோ உள்ளே துடித்துக் கொண்டிருந்த சிறிய இதயத்தை யாரோ கைவிட்டு கசக்கிப் பிழுவதைப் போல வலித்தது அவனுக்கு. 

அவனுடைய வலிமையான கரங்களோ அவளை இன்னும் தன்னோடு இறுக்கிக் கொண்டன. தன்னை மறந்து அவளுடைய கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் கண்ணீர் சிந்தத் தொடங்கினான்.

“சாரிடி… சா… சாரி எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல நீ ஏன் இவ்வளவு நல்லவளா இருக்க.? எதுக்காக நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிற.?” என்றவன் முற்றிலும் உடைந்து போனான். 

அவள் தன்னை திட்டி இருந்தால் கூட இலகுவாக எதிர்  கொண்டிருப்பான். ஆனால் அவள் அவனுக்காக அல்லவா பேசுகிறாள். மனம் சில்லு சில்லாக உடைந்து நொறுங்கியதைப் போல உணர்ந்தான் அவன்.

அவனுடைய இறுகிய அணைப்பில் அவளுக்கோ உடல் தூக்கி வாரிப் போட்டது. பதறித் துடித்து விலகியவளுக்கும் பொல பொலவென கண்களில் இருந்து கண்ணீர் ஊற்றாக வழியத் தொடங்கியது.

“இ… இன்னொரு முறை எ.. என்னைத் தொ… தொடாதீங்க.” என்றவள் நடுங்கிய குரலில் சீறினாள்.

தன்ஷிகாவின் கலங்கிய விழிகளில் உள்ளம் உயிர் வதையை அனுபவிக்க கீதாவை தேடும் முயற்சியை கைவிட்டவன்  சட்டென தன் அறைக்குள் நுழைந்து கதவை சாற்றிக் கொண்டான். 

யாரோ கூரான ஊசியை ஆயுதமாகக் கொண்டு அவன் உடல் முழுவதும் ஏற்றி ஏற்றி இறக்குவதைப் போல வலித்தது அவனுக்கு.

எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை அவன் அறியவில்லை ஆனால் நிகழ்காலம் இப்படியே உறைந்துவிட வேண்டுமென வலியோடு எண்ணிக் கொண்டான் விதார்த்.

💜💙💙💜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *