இது ஒருநாள் உறவா தலைவா..?

This entry is part 10 of 42 in the series இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?



உறவு – 12 
 
புறப்படத் தயாரான விமானத்தில் ஒன்றை ஒன்று தள்ளும் காந்தத்தின் ஒத்த முனைகள் போல விதார்த்தும் தன்ஷிகாவும் ஓரே ஆசனத்தின் விளிம்புகளில் அமர்ந்திருந்தார்கள்.

தன்ஷிகாவிற்கு விமானம் என்றால் கொஞ்சம் நடுக்கம்தான்.  இதுதான் அவள் மிக நீண்ட தூரம் விமானத்தில் செல்லும் முதல் பயணம். அதனால்தான் என்னவோ இப்பயணம் அவளுக்கு  நடுக்கத்தையும் பயத்தையும் ஒருசேர உண்டாக்கி இருந்தது. இதைச்  சமாளிக்கும் வண்ணம் ஜன்னலின் ஊடாக பார்வை செலுத்தியிருந்தாள் அவள். 

விமானம் ஓடு பாதையில் நகர ஆரம்பித்ததும் தலையில் பாரம் ஏறுவதைப் போல் உணர்ந்தவள், தன் முன் இரு தொடைகளிலும்  இரு முழங்கைகளையும் ஊன்றி இரு  கைவிரல்களாலும் நெற்றியை அழுத்திப் பிடித்தபடி இருந்தாள். 

இவை எதையுமே சட்டை பண்ணாத வண்ணம் தனது டேப்பில் மூழ்கிப் போய் இருந்தான் விதார்த். அவனுக்குத்தான் எதைப் பற்றியும் கவலையே இல்லையே.

விமானம் மேலே உயர உயர அவளுடைய உடலோ அச்சத்தின் பிடியில் ஆட்கொண்டு மெலிதாய் நடுங்கத் தொடங்கியது.

இதழ்களைக் கடித்து தன் அச்சத்தை அடக்கிக் கொண்டவள் விழிகளை மூடியவாறு மழையில் நனைந்த கோழிக் குஞ்சு போல ஒடுங்கிப் போய் அமர்த்திருக்க, அப்போதுதான் அவளை நோக்கித் தன் பார்வையை திரும்பினான் விதார்த்.

‘இவளுக்கு என்னாச்சு’ என மனதுக்குள் நினைத்தவன் “வாட் ஹப்பன்ட் தன்ஷிகா எனி திங் ராங்.?” என சாதாரணமாகக் கேட்டான் அவன். 

உடல் பயத்தால் நடுங்கியதாலும் அதனை விதார்த்திடம் ஒப்புக் கொள்வது தன்மானப் பிரச்சினையாக இருந்ததாலும் உதவிக்கு கூட அவளால் பதில் பேச இயலவில்லை. 

அவளை அறியாமலே கீழ்தாடைப்பற்கள் மேல் பற்களோடு ‘தட தட’ என தந்தியடித்தன. வாயிலிருந்து சொற்களை அவள் துப்ப முயன்றும் அவை வெளியில் வராமல் காற்று மட்டுமே வந்தது.

‘நான் கேட்டும் ஏதாவது வாயைத் திறந்து பதில் சொல்றாளா..? ஒரு ரியாக்சன் கூட இல்ல இடியட். என்னவாவது செய்யட்டும்’ என நினைத்தவன் பழையபடி தன்னுடைய டேப்பை நோண்டலானான். 

விமான இயந்திரம் காற்றை உள்வாங்கி அதி உச்ச சக்தியுடன் வானை நோக்கிப் பறந்தது.

தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டு நிமிர்ந்தவள்  இருக்கையில் தன்னை திடப்படுத்திக்கொண்ட அடுத்த நொடி இவளின் போதாத காலம் போல விமானம் சட்டென்று சரிவாகப் பறக்கவும் “ஐயோ அம்மா” என அலறியவளின் புலன்கள் அறிவிழந்ததோ அவள் பயத்தில்  அருகில் இருந்த விதார்த்தின் வலது தோளை இறுகப் பற்றியவாறு அவனுடைய தோளில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். 

ஒரு சில விநாடிகளில் நடந்து முடிந்த செயலில் தன்ஷிகாவின் இதயம் தொண்டைக்குள் வந்து துடிக்கத் தொடங்கியது.

இதனை சற்றும் எதிர்பாராத விதார்த் தனது இரு கைகளையும் சட்டென அகல விரிக்க டேப் கீழே விழ செய்வதறியாது மலையைப் போல் அசைவின்றிப் போனான். 

அவளுடைய ஸ்பரிசம் அவன் இது வரை உணர்ந்திராத ஒரு அதிர்வலைகளை பரப்பிக் கொண்டிருந்தாலும் அவன் முகம் இறுகிப்போய் இருந்தது.    அடுத்த சில நொடிகளில் நிலைமையை சுதாரித்துக் கொண்ட விதார்த்தோ அவளுடைய உடல் மெலிதாய் நடுங்குவதை உணர்ந்து கொண்டான்.

‘ரொம்ப பயந்திட்டா போல.
 இதுக்கெல்லாம் பயந்தா என்னத்த சொல்றது.? சில்லி கேர்ள்…” என்று விதார்த் கொஞ்சம் சலித்துக் கொள்ள அவனுடைய மனசாட்சியோ அவனை கோபமாக முறைத்துப் பார்த்தது.

‘யோவ் பாஸ் நீ எல்லாம் ஒரு ஜென்டில் மேனா…?. உன்னோட ஃவைப்னு  நினைக்கலைன்னா கூட பரவால்ல ஜஸ்ட் உன்னோட ஆபீஸ் ஸ்டாப்பா நினைச்சு ஹெல்ப் பண்ணலாம்ல..’ என உள் இருந்து அவனுடைய மனசாட்சி சொல்லவும், சற்று கழிவிரக்கம் தோன்றியவனாக, “எஸ்  ஷீ ஸ் மை ஸ்டாப். இப்போ அவளை நான்தானே பார்த்துக்கனும்” என முனுமுனுத்துக் கொண்டான் விதார்த். 

“தன்ஷிகா இட்ஸ் நத்திங். டோன்ட் வொர்ரி” என்றவாறு தனது இடது கையால் அவள் முதுகை சற்று நீவி விட்டான் விதார்த். 

அவனுடைய வார்த்தைகளில் சற்றே பயம் விலக, தன்னை திடப்படுத்திக் கொண்டவள் விதார்த்தை கிட்டத்தட்ட அணைத்திருப்பதைக் கண்டு அதிர்ந்து போனாள்.

‘ஐயோ… என்ன காரியம் பண்ணிட்டேன்..’ என சுவற்றில் அடித்த பந்து திரும்பும் வேகம் போல விதார்த்திலிருந்து விலகியவள் தன்னைத் தானே நொந்து கொண்டவள். 

அவள் மேனி சில நொடிகளில் படபடத்துப் போனது.

‘சா…ர்…சாரி சார். ப…. ப..ய…த்துல தெரியாம பண்ணிட்டேன்” என மன்னிப்புக் கோரியவாறு செய்யக் கூடாத செயலை செய்து விட்டதாக எண்ணி சற்று ஒடுங்கிப் போய் இருந்தாள் அவள். 

அவளுடைய பதறலும் விலகலும் அவனை புருவம் உயர்த்த வைத்தது.
“இட்ஸ் ஓக்கே ரிலாக்ஸ்..” என்றான் அவன்.

அவனுடைய மடியில் இருந்த டேப்போ கீழே விழுந்திருக்க, அதனை எடுக்க விதார்த் குனியவும் அது தனது  காலடியில் விழுந்திருந்ததை அவதானித்த தன்ஷிகா அதை எடுத்துக் கொடுக்க முனைந்தாள்.

அக் கணம் அவளுடைய  விரல் டேப்பில் பட்டு முன் தொடுதிரை பளிச்சிட, திரையில் தெரிந்த புகைப்படத்தைக் கண்டு தன்ஷிகாவின் மனம் சிதறியது. 

அதில் விதார்த் ஜீன்ஸ் அன்ட் ஸ்லீவ்லர்ஸ்சுடன் உள்ள பெண்ணின் இடையை அணைத்தவாறு காட்சி கொடுத்தான். அந்தப் பெண்ணோ விதார்த்தின் கழுத்தை வளைத்து அவனுடைய கன்னத்தில் முத்தம் பதித்தவாறு இருக்க, முற்றிலும் உடைந்து போனாள் தன்ஷிகா.

அவர்களுடைய நெருக்கத்தைப் பார்த்த மறுகணமே சிந்தையில் பிரமை பிடித்தவளாக தான் இருக்கும் இடம் பயணம் என்பவற்றை முழுதாக மறந்து போனாள் அவள்.

கண்ணீர் வழிய, உள்ளத்தின் வலி தாங்காது துடித்துப் போனவளின் முகமோ தொட்டாற்சுருங்கி தாவரம் போல சுருங்கிப் போனது.

அவனைத் தீண்டிய தன் கைகளை தீயில் இட்டுப் பொசுக் வேண்டும் என எண்ணியவளோ, கலங்கிய விழித்திரையுடன் விதார்த்தை நோக்க…
தற்செயலாக திரும்பிய விதார்த் தன்ஷிகா அழுவதைக் கண்ணுற்றவன் அதிர்ச்சி மேலிட,

“ஹேய் என்னாச்சு ஏன் அழுகுற.? ஆர் யு ஓகே.?” என நடந்த எதையும் உணர்ந்திராத விதார்த்தின் கேள்வி யதார்த்தமாக இருந்தது.

தன் சுய லாபத்துக்காக தாலி கட்டிய மனைவியை அந்நியவள் போல நடத்தும் விதார்த்தை பார்க்க பார்க்க அவளுக்கு கோபம் சுருசுருவென தலைக்கேறியது.

நயனங்களில் கண்ணீர் வழிந்தோட, எப்படிச் சொல்ல முடியும்.?
 ‘கட்டிய மனைவியை அருகில் வைத்துக் கொண்டு இன்னொருத்தியின் போட்டோவை வைத்திருக்கும் கணவனை நினைத்து அழுகிறேன் என்றா சொல்ல முடியும்’ என நினைத்தவள் தன்னைச் சற்று சமாளித்துக் கொண்டு, 

“நத்திங் சார்…. வீட்டு ஞாபகம் வந்திருச்சு சார் அதுதான்….” என பட்டும் படாமலும் வார்த்தைகளை உதிர்த்தாள் அவள்.

அவளின் கண்ணிலிருந்து ஒற்றைத் துளிக் கண்ணீர் சரேலென வடிந்து ஓடியது. 

விதார்த் தனது முகத்தையும் உடலையும் விறைப்பாகக் காட்டினாலும் அவளின் கண்ணீர் மனதின் ஓரமாக சிறு உறுத்தலை கொடுக்கச் செய்தது.

ஏதும் பேச மனமின்றி மறுபடியும் டேப்பில் மூழ்க முனைந்தவனுக்கோ, தன்ஷிகா தன் பக்கமே தலையை திருப்பி சாய்ந்திருந்த விதம் அவனை சற்று குழம்பச் செய்தது. 

அந்த அழுகை ஓய்ந்திருந்தாலும் கண்கள் கலங்கி கண்ணீர் குளங்களாகவே இருந்தன.

‘அவள் என்னைத் தான் பார்க்கிறாளா… இல்ல எனக்குத்தான் அவள் என்னை பார்க்கிற மாதிரி ஃபீல் ஆகுதா…?’ என சிந்தித்தவன் அவளைப் பார்க்க, அவளின் நேத்திரங்களோ டேப்பை வெறித்துப் பார்ப்பதை உணர்ந்தான். 

தன்ஷிகா பார்ப்பது தன்னை அல்ல அவள் பார்ப்பது டேப்பில் உள்ள படத்தை,  தானும் கீதாவும் உள்ள படத்தை.  அப்போது தான் அவனுக்கு தன்ஷிகாவின் கண்களில் இருந்து வழியும் கண்ணீர்த் துளிகளுக்கான காரணம் மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது. 

அடுத்த நொடி அவன் டேப்பின் திரையை சட்டென அணைக்க, தனது தலையை வலப் பக்கமாக திருப்பி பார்வையை ஜன்னலினுடாக புதைய விட்டாள் தன்ஷிகா.

அவளின் அடி நெஞ்சு வரை வேதனை பரவியது. விமானத்தின் இருக்கையில் அவன் அருகே இருக்க முடியாது தவித்தாள் அவள்.

தன்னை அறியாமலே டேப்பை அணைத்தவன், 

‘நான் ஏன் போட்டோவை மறைக்கனும். பார்த்தால் பார்க்கட்டுமே, ம்ம். அவள் அழுதா அழட்டும் எனக்கென்ன…?’ என எண்ணிக் கொண்டான் அவன்.

‘ஐ லவ் மை கீத்து’ என மனசாட்சிக்குப் பதிலளித்தான்.  

‘அப்படியா பாஸ்..? அப்போ எதுக்காக தன்ஷி அழுததும் போட்டோவை மறைச்சீங்க..? ம்ம்..?’ என அவனுடைய மனசாட்சி மறுபடியும் அவனைக் குடைய விடை ஏதும் கூற முடியாது மௌனமாகிப் போனான் விதார்த்.

நேரம் செல்லச் செல்ல தன்ஷிகாவின் நிலையோ மோசமாகிப் போனது. அவள் மூன்று வருடங்களாக நேசித்து கற்பனையில் வாழ்ந்த கணவன் நிஜத்தில் இன்னொரு பெண்ணின் அணைப்பில் இருப்பதைக் கண்டதும் அவள் மனம் புழுவாய் துடித்தது. 

துடிக்கும் அவளுடைய இதயத்தில் யாரோ சம்மட்டியால் ஓங்கி அடித்ததைப் போல வேதனை தாங்காது மருகித் தவித்தாள் அவள். 

வாய்விட்டுக் கதற வேண்டுமென அவள் மனம் துடியாய் துடித்தது. உடலின் அத்தனை பாகங்களிலும் கூரான கத்தியை இறக்கியது போல வலிக்க, சீட் பெல்டினை கழற்றியவள் விம்மலோடு எழுந்து ஓட முயன்றாள்.

அவள் சீட் பெல்ட்டை கழற்றியதைக் கண்டு அதிர்ந்தவன், அடுத்து அவள் செய்யப் போகும் காரியம் புரிய, சட்டென அவளுடைய கரத்தை பிடித்து இழுத்து தன் அருகே அமர்த்திக் கொண்டான்.

“ஏய்… எ… என்னடி பண்ற.? முட்டாள்.” என சீறினான் அவன்.

அவளுக்கோ அது புரியவே இல்லை. அவன் தன் கையைப் பிடித்து அமர வைத்ததைக் கூட உணராது நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தாள் பேதை.

அவளின் தவிப்பு துடிப்பு பதறல் போன்றவற்றின் காரணம் புரிய, அவனுடைய உடலோ இறுகிப் போனது. 

‘அந்த போட்டோவை அவ பார்த்திருக்கக் கூடாது.’ என எண்ணியவன் தன் அருகே இருந்து துடிக்கும் ஜீவனை எப்படி ஆற்றுவது எனத் தெரியாது இறுகிப் போனான்.

அவளோ தன் கரத்தை மடித்து தன் தொடையில் அழுத்தியவள் இதழ்களை பலமாக கடித்து தன்னைக் கட்டுப்படுத்த முயன்றாள்.

முறன்றாள்..!! முயன்றாள்…!! முயன்று கொண்டே இருந்தாள்..!! ஆனால் விளைவு என்னவோ பூச்சியம்தான். 

கடித்த இதழ்களில் இருந்து இரத்தம் கசிய, அவளைப் பார்த்துக் கொண்டிருந்த விதார்த்தின் இதயத்தில் அக்கணம் சருக்கென தைத்தது.

“தன்ஷிகா ப்ளீஸ் ஸ்டே காம்.” என மென்மையாகக் கூறியவனை சடாரென நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

அந்தப் பார்வையில் அடங்கியிருந்த உணர்வுப் பிரவாகத்தில் ஸ்தம்பித்தான் விதார்த். 

அவள் பார்வையில் அப்படி என்னதான் இருந்ததுவாம்..?

சீற்றமா..?

ஏமாற்றமா..?

தவிப்பா…?

தகிப்பா…?

வலியா…?

பழியா…?

ஏக்கமா..? 

ஆம் அது ஏக்கப் பார்வைதான். அதில் சற்றே சீற்றமும் ஏமாற்றமும் தவிப்பும் தகிப்பும் வலியும் பழியும் கலந்தே இருந்தது. 

அவளுடைய இதழ்கள் பற்களுக்குள் சிக்குண்டு துன்புறுவதைக் கண்டவன் தன் தலையைப் பற்றிக் கொண்டான். 

மீண்டும் அவனுடைய உதடுகள், “ரிலாக்ஸ் தன்ஷிகா.” என மெல்லிய குரலில் முணுமுணுத்தன.

“மு… முடியலையே…  எ… என்னால முடியலையே.. வலிக்குது வருண்… இ.. இப்படி வலி அனுபவிக்கத்தான் என்னை கடவுள் படைச்சானா.? தா.. தாங்கிக்க முடியலை.. உ.. உள்ளே என்னமோ ப… பண்ணுது..” என்றவள் விழிகளை இறுக மூடிக் கொள்ள, விதார்த்தின் இதயத் துடிப்போ ஏகத்துக்கும் எகிறியது. 

“சா.. சாரி.” என தாள முடியாமல் கூறினான் அவன். 

“அ.. அச்சோ நீங்க ஏன் சா… சாரி கேட்குறீங்க…? ஐ ஆம் ஓ… ஓகே.. ஏதோ வீ… வீட்டு ஞாபகத்துல எ.. எதையோ உளறிட்டேன் சார். சாரி.” என்றவள் அழுகையோடு தன் கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.

அவன் எதையோ கூற முற்பட, சட்டென தன் முகத்தை திருப்பிக் கொண்டாள் தன்ஷிகா.

“குட் நைட் வரு… விதார்த்த்.. விதார்த் சார்.” என்றவள் தன் விழிகளை மூடிக் கொள்ள தன் தலையை அழுத்தமாகக் கோதினான் விதார்த்.

அவர்கள் உறங்க முயல, அங்கே அவர்களின் உணர்வுகளோ விழித்துக் கொண்டன.

💜💙💙💜

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *