இது ஒருநாள் உறவா தலைவா..?

This entry is part 17 of 42 in the series இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?


உறவு – 20 
 
தனித்தனி அறையில் தங்கியிருந்த இருவரும் தூக்கமின்றி வெவ்வேறு சிந்தனைகளில் மூழ்கி இருந்தனர்.

தன்ஷிகாவோ இந்த வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு சீக்கிரமாகவே இங்கிருந்து இந்தியாவிற்கு சென்று விட வேண்டுமென எண்ணிக் கொண்டிருந்தாள். 

என்னதான் அவள் வருணை மறந்து விதார்த்தை தன்னுடைய முதலாளியாக ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட அவனுடைய முகம் அவளை அடிக்கடி தடுமாற வைத்தது. 

மூன்று வருடங்கள் அவளுடைய மனதில் பதிந்து போன முகம் அல்லவா அது. நினைத்தவுடன் மறக்கும் வரம் வாங்கிப் பிறக்கவில்லையே அவள். உள்ளிருக்கும் நினைவுகள் அவளைக் கொன்று தின்று கொண்டல்லவா இருக்கின்றன.

அவனிடமிருந்து தள்ளி இருப்பதே சாலச் சிறந்தது என்பதை அனுபவரீதியாக உணர்ந்து கொண்டவள் சீக்கிரமே இந்தியா செல்வதில் சித்தம் கொண்டிருந்தாள்.

அதன் பின்னரே நாளைய தினம் செய்ய வேண்டிய வேலைகளை ஒழுங்குப்படுத்தி வைத்தவள், ‘எப்படியும் இதுல விதார்த் கான்சென்ட்ரேட் பண்ணப் போறது இல்ல. அவருக்கு அவரோட லவ்தானே முக்கியம். நாமதான் இதை சீக்கிரமா செஞ்சு முடிக்கணும்.’ என எண்ணிக்கொண்டவள் படுக்கையில் சரிந்தாள்.

ஏனோ மனம் முழுவதும் வெறுமையே பரவியது. தன்னுடைய எதிர்காலம் இனி எப்படி இருக்கும் என எண்ணியவள் பதில் தெரியாது திகைத்தாள். தன்னுடைய எதிர்காலம் எப்படி அமைந்தாலும் அதில் நிச்சயம் வருண் என்பவனுக்கு இடம் இல்லை என்பது மாத்திரம் அவளுக்கு உறுதியாகப் புரிந்தது.

பழைய நினைவுகளை எண்ணிக் கலங்க முயன்ற விழிகளுக்கு தடா போட்டவள் விழிகளை இறுக மூடிக்கொண்டாள்.

‘நோ தன்ஷி… நோ… நீ அழக் கூடாது. உன் மேல எந்தத் தப்புமே இல்ல. நீ அழக் கூடாது. கடந்த காலத்தை மறந்திரு.. புதுசா வாழ ஆரம்பி.. உன்னால முடியும்.’ என தன்னைத் தானே திடப்படுத்திக் கொண்டாள் அவள். 

மென்மை கொண்ட அவளுடைய இதயமோ கொஞ்சம் கொஞ்சமாக இறுகத் தொடங்கியது.

அவ்வளவு திடப்படுத்தியும் கூட அவளுடைய விழிகள் சற்றே கசியத்தான் செய்தன. 

அதே கணம் விதார்த்தின் அறையில் எதுவோ விழுந்து உடைவதைப் போன்ற சத்தம் கேட்க, சட்டென எழுந்தவள் அவனுடைய அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள். 

அங்கே படுக்கையை விட்டு எழுந்தவன் நடக்க முடியாது சுவற்றைப் பற்றியவாறு மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டிருக்க சுவற்றின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த சிறிய மின் விளக்கு நிறுத்தியோ அவன் பிடித்ததில் கீழே விழுந்திருந்தது.

“என்னாச்சு சார்..? உங்களுக்குத்தான் காலை அசைக்க முடியாதுல்ல. ரெஸ்ட் எடுக்காம என்ன பண்றீங்க.? ஏதாவது வேணும்னா என்ன கூப்பிட்டிருக்கலாமே..?” என மெல்லிய குரலில் கேட்டாள் தன்ஷிகா.

“ரூமுக்குப் போ…” என்றவனின் குரல் சோர்வாக ஒலித்தது.

“என்ன சொன்னீங்க புரியலை..?” அவனுடைய சோர்வான குரல் அவளுடைய காதை எட்டவில்லை.

“ப்ச்…. இட்ஸ் ஓகே. நான் பாத்துக்கிறேன். தண்ணி தாகமா இருந்திச்சு. அதான் எடுக்கலாம்னு வந்தேன். நானே எடுத்துக்கிறேன்.” என தடுமாறியவாறு மீண்டும் சுவற்றை பற்றிக் கொண்டு நடக்க முயன்றவனைக் கண்டு இரக்கம் மேலிட மனம் கேட்காது ஓடிச் சென்று அவனைத் தாங்க முயன்றவள் அவன் அருகே சென்றதும் தயங்கி  நின்றாள்.

“ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க விதார்த். நீங்க ரெஸ்ட்ல இருந்தா மட்டும்தான் சீக்கிரமா குணமாக முடியும்.” என்றவள் அவன் சிரமப்படுவதைக் கண்டு அவனை அழைத்து வந்து மீண்டும் படுக்கையில் அமர்த்தி விட்டு அவனுக்கு தேவையானவற்றை எடுத்து அவனுடைய படுக்கையின் அருகே வைக்கத் தொடங்கினாள்.

“இதெல்லாம் நீ எதுக்கு பண்ற.? இத்தனை வருஷத்துல நான் தனியாத்தானே இருந்தேன். எத்தனையோ பிரச்சனைகளை அனுபவிச்சிருக்கேன். அப்போ மாதிரியே  இப்பவும் என்னால என்னைப் பாத்துக்க முடியும். யாரும் எனக்காக கஷ்டப்பட வேணாம்.” எனச் சற்று காட்டமாகக் கூறினான் விதார்த்.

“நீங்க தனியா இருந்தது உங்களோட பிரச்சனை. நீங்க எடுத்த முடிவுக்கு நாங்க என்ன பண்ண முடியும்.?” என சற்றே சீற்றமாகக் கேட்டவள் அவன் வலியில் முகம் சுருக்குவதைக் கண்டதும் தன்னையே கடிந்து கொண்டாள். 

“ஹாஸ்பிடல் போவோமா..?” என கவலையாகக் கேட்டாள் அவள்.
“நோ…” என ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான் அவன். அவள் இந்த அறையில் இருந்து சீக்கிரமாக வெளியேறினால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது அவனுக்கு. 

அவளுடைய அக்கறை அவனை கொஞ்சம் கொஞ்சமாக வதம் செய்து கொண்டிருந்தது. குற்றவுணர்ச்சியோ அதிகமாகி மனதை வேதனை அரிக்கத் தொடங்கியது.

‘இங்க இருந்து போயிரு தனி…. ப்ளீஸ்…’ என தனக்குள் முனகிக் கொண்டான் அவன். 

தன்ஷிகாவோ அவனைப் பார்த்தவாறு அவனுடைய அறையில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

அவள் எடுத்து வைத்த நீரை எடுத்து அருந்தியவன் தன்னுடைய அறையில் அமர்ந்து விட்டவளைக் கேள்வியாகப் பார்த்தான்.

“நீ தூங்கலையா…?”

“நீங்க தூங்குங்க. நானும் தூங்கப் போறேன்.” என்றவள் சோபாவில் சாய்ந்து கொள்ள அவனுடைய புருவங்களோ மேலே உயர்ந்தன.

“உன்னோட ரூமுக்கு போ தனி..”

“இன்னைக்கு இதிலேயே படுத்துக்கிறேன் சார்.” எனக் கூறவும் அவனோ அதிர்ந்து போனான்.

“ஏன்..?”

“உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் தேவைப்பட்டா நான் இங்கே இருந்தா உதவியா இருக்கும்ல.” என்றாள் அவள்.

“எனக்கு எந்த ஹெல்ப்பும் தேவைலை. நீ உன்னோட ரூமுக்குப் போ.” என்றான் அவன். 

“ப்ச்… நான் இப்ப இங்க இருக்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? இப்படியே உங்களை விட்டுட்டுப் போனாலும் எனக்கு டென்ஷனாத்தான் இருக்கும். அதுக்கு நான் இங்கேயே தூங்கிடுவேன்.” என்றவள் விழிகளை மூடிக்கொள்ள ஒரு கணம் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த விதார்த் தன்னுடைய முகத்தை மறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

‘என்னால முடியலடி..’ என எண்ணியவன் அமைதியாக உறங்க முயன்றான். அவளுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்ற அவசர முடிவும் அவனுடைய மனதில் அக்கணம் தோன்றியது.

தன்ஷிகாவின் விழிகளோ சற்று நேரத்தில் மெல்ல திறந்து விதார்த்தின் உடலை ஒரு தரம் ஆராய்ந்தன. அவன் தூங்கிவிட்டான் என்பது புரிய, அவனையே இமைக்காது பார்த்தாள் அவள்.  

அவன் மீது கடலளவு வெறுப்பு இருந்த போதும் அவனுக்கு ஒன்றென்றதும் உள்ளம் பதறுவதை எண்ணி அவளுக்கோ தன் மீது கோபம் அதிகரித்தது. 

உணர்வுகள் எனும் ஆழிப்பேரலையை கட்டுப்படுத்தும் திறன் தனக்கு இல்லை போல என எண்ணியவள் அவன் குளிரில் உடல் சிலிர்ப்பதைக் கண்டதும் எழுந்து சென்று போர்வையை எடுத்து அவனுக்குப் போர்த்தி விட்டாள்.
 அவனை நெருங்கியதும் அவளுடைய உடல் லேசாக நடுக்கமுற்றது.

பின் சத்தமே இன்றி படுக்கைக்கு நேராக இருந்த சோபாவில் வந்து மீண்டும் அமர்ந்து கொண்டவளுக்கு அவளுடைய திருமண நாள் நினைவு வந்தது.

அந்த நினைவுகள் அவளை ஆக்கிரமிக்கத் தொடங்க அவளுடைய விழிகளை கண்ணீர் எனும் அருவி சூழத் தொடங்கியது.

********** 
திருமணம் முடிந்து அன்றைய இரவு படபடப்போடும் அடக்க முடியாத நாணத்தோடும் தன்னுடைய அறையில் அமர்ந்திருந்தாள் தன்ஷிகா. 

அவளுடைய முகமோ மகிழ்ச்சியில்  திளைத்திருந்தது.  என்று அவள் வருணின் புகைப்படத்தை பார்த்தாளோ அன்றே சத்தமின்றி அவளுடைய மனதில் நுழைந்தவன், அன்றிலிருந்து அவளுடைய மனதினுள் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டான். 

திருமணம் பேசிய ஆரம்ப நாட்கள் முதல் இன்று வரை அவனையே கணவனாக எண்ணி மனதால் காதல் செய்தவள் இன்று அவனையே  திருமணம் செய்து கொண்டதும் எல்லையில்லாத மகிழ்ச்சியை எட்டிப் பிடித்ததைப் போல உணர்ந்தாள்.

அவளை அவளுடைய தோழிகள் முதலிரவுக்காக தயார்படுத்த இயற்கையாகவே சிவந்திருந்த அவளுடைய கன்னங்களோ மேலும் சிவந்து போனது.

தன்னை கேலி செய்தவர்களை செல்லமாக  முறைத்தாள் தன்சிஷிா. 

அவர்களோ அவளை உண்டு இல்லை என ஆக்கியதன் பின்னரே வருணின் அறைக்குள் அவளைத் தள்ளிவிட, அவளுடைய மனமோ படபடத்துப் போனது. 

கன்னம் தொடக்கம் காது மடல்கள் கூட சிவந்து விடும் அளவுக்கு வெட்கி நின்றவள், அவனை நிமிர்ந்து பார்க்கவே அச்சம் கொண்டாள். 

முதன்முறையாக ஒரு ஆணுடன் அறையில் தனித்துவிடப்பட்டிருப்பதை எண்ணி அவளுடைய இதயத்துடிப்பு ஏகத்துக்கும் எகிறிப் போனது.

வருண் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது புரிய கரத்திலிருந்து பாலை மேஜை மீது வைத்தவள் அவனை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாது சிறு குழந்தை போல மலங்க மலங்க விழித்தவாறு அதே இடத்திலேயே நின்றாள். 

அதே கணம் வருணோ அவளை நெருங்கி வர, அவளை நெருங்கிய வருணைக் கண்டு அவளோ படபடத்துப் போனாள்.  அவனோ அவளைத் தாண்டி அந்த அறையின் கதவருகே சென்றவன்,

எதிர்பார்ப்புடன் தலைகுனிந்து நின்றவளை சொடக்கிட்டு அழைத்தான்.
அதில் அவளுடைய கவனம் சிதற, நிமிர்ந்து அவனுடைய முகத்தைப் பார்த்தாள் தன்ஷிகா.

“என்னோட ப்ரெண்ட்ஸ் இப்போ போட்டிங் போக கூப்பிட்ருக்காங்க. நம்ம வெடிங் ட்ரீட்டா கேட்டதால என்னால அவாய்ட் பண்ண முடியல. போய்ட்டு சீக்கிரமா வந்துர்றேன்.. சாரி…” எனக் கூறினான் அவன். 

அதில் சட்டென அவளுடைய முகம் வாடினாலும் உடனே மலர்ந்தவள், “சரிங்க….” எனக் கூற, அடுத்த கணம் அந்த முதலிரவு அறையை விட்டு வெளியேறிச் சென்றிருந்தான் வருண்.

சென்றவன் சென்றவன் தான் திரும்பி வரவே இல்லை. இரவு முழுவதும் தூங்காது அவனுக்காக காத்திருந்து காத்திருந்து ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் விடியற்காலையிலே உறக்கத்தை தழுவினாள் தன்ஷிகா.

விடிந்த பின்பும் கூட அவன் வராது போக வீட்டில் இருந்தவர்களுக்கோ பதற்றம் கூடிப்போனது.

தன்ஷிகாவோ மழையில் நனைந்த கோழிக் குஞ்சு போல எதுவும் புரியாது ஒடுங்கிப் போய் அமர்ந்திருக்க, வெகு நேரத்தின் பின்னே வருனின் உடல் மாமல்லபுரம் கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாக செய்தி அவளுடைய தலையில் மின்னாமல் முழங்காமல் இடியாக வந்து விழுந்தது.

நம்ப முடியாத அதிர்ச்சியில் மூர்ச்சையாகி மயங்கி விழுந்தவள் எழுந்து பார்க்கும் போது அனைத்தும் முடிந்திருந்தது. 

யார் யாரோ வந்தார்கள்..!! 

யார் யாரோ அணைத்தார்கள்…!! 

யார் யாரோ ஆறுதல் படுத்தினார்கள்…!!
 
யார் யாரோ கணவனைக் காவு கொடுத்து விட்டாள் எனத் திட்டி விட்டுச் சென்றார்கள். 

எதுவுமே அவளுக்கு அக்கணம் உரைக்கவே இல்லை. திரும்பி வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற கணவன் எங்கே எனும் கேள்வியே அவளுக்குள் மறுபடியும் மறுபடியும் ஓடிக்கொண்டிருக்க, விழிகளில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தன்னைத் தேடி வந்த தந்தையை  ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள் அவள். 

புதுவீடு புது சொந்தத்திற்கிடையே எதுவுமே புரியாது தவித்துக் கொண்டிருந்தவளுக்கு தன்னுடைய தந்தையைக் கண்டதும் பெரும் நிம்மதியாக இருந்தது. 

இருண்ட பாலைவனத்தில் சிறு வெளிச்சம் தெரிந்ததைப் போல உணர்ந்தவள் அடுத்த கணம் தன்னுடைய தந்தையை கதறலோடு அணைத்துக் கொண்டாள்.

“ப்பாஆ.. ப்பாஆ அவர் எங்கப்பா..?  அவர் எங்க..? இவங்க என்னென்னவோ சொல்றாங்களே.. எ… எனக்கு பயமா இருக்குப்பா.. படபடப்பா இருக்கு… அவரை சீக்கிரமா வரச் சொல்லுங்கப்பா… ப்ளீஸ்..” எனக் கதறி அழுதாள் அவள்.

அவளை அனைத்துக் கொண்ட அவளுடைய தந்தையோ அவளைக் குழந்தை போலத் தாங்கிக் கொண்டார். அவளை மாமல்லபுரம் கடற்கரைக்கு அழைத்துச் செல்ல, அவர்களுடன் வருணின் குடும்பமும் அங்கே விரைந்து  சென்றது.

அங்கே இருந்த சடலம் முழுவதும் சிதைந்து போய் இருக்க, அது வருணுடையது என உறுதிப்படுத்தினார்கள் அவனுடைய நண்பர்கள். 

அக்கணம் வானமே அதிரும் வண்ணம் கதறி அழுதாள் தன்ஷிகா. 

*********** 
“ஐயோஓஓஓஓஓ வருஉஉஉஉண்…” என வீறிட்டாள் அவள்.

பழைய நினைவுகளில் மூழ்கிப் போயிருந்தவள் அந்த சம்பவங்கள் யாவும் இப்போதே நடப்பது போல எண்ணி வீறிட்டு அலறிக் கதற, அவளுடைய அலறலில் திடுக்கிட்டு எழுந்தான் விதார்த். 

வருண் என சத்தமாக அழைத்தவாறு தன் மார்பில் அடித்துக் கதறும் தன்ஷிகாவைக் கண்டவனுக்கு மூச்சே நின்று போனது. 

அடுத்த நொடி அசைக்க முடியாத காலை எப்படி எடுத்து தரையில் ஊன்றினான். எப்படி அவளின் அருகே நொடிப் பொழுதில் வந்தான் என அவனுக்கேத் தெரியவில்லை.

மின்னல் வேகத்தில் அவளை வந்தடைந்தவன் அவளை உலுக்கி எழுப்ப, அவளோ கதறிக் கதறி அழலானாள்.

“எழுந்திரிங்க வருண்…. எழுந்திருங்க வருண்… ப்ளீஸ்…. திரும்பி வந்திருங்க…. ஐயோஓ..” என பதறித் துடித்தவளை வேதனையோடு பார்த்தவன் உடைந்து போனான்.

“ஹேய்… தனீஈஈ தனீஈஈ… என்னைப் பாருடி… எஸ் நான்தான் வருண்… உன் முன்னாடிதான் இருக்கேன்.. எனக்கு ஒன்னும் ஆகலடி… ஓபன் யுவர் ஐஸ்.. ப்ளீஸ் ஓபன் யுவர் ஐஸ்…” என்ற அவனுடைய கலங்கிய குரலில் விழிகளைத் திறந்தவள் தன் முன்னே மிக நெருக்கத்தில் தன்னைத் தீண்டியவாறு நின்ற விதார்த்தத்தை கண்டு அதிர்ந்தவள் அவனைச் சட்டெனத் தள்ளி விட்டாள்.

“நீ என்னோட வருண் கிடையாது.. நீ என்னோட வருண் இல்ல…. என்னோட வருண் செத்து மூணு வருஷமாச்சு… அவரை புதைச்ச இடத்துல புல்லு இல்ல மரமே முளைச்சிருக்கும்.. எ.. என்னைத் தொடாத… விதார்த்… என்னை தொடாத… டோ… டோன்ட் டச் மீ எவர்…” என சீறினாள் அவள்.

அவளுடைய வார்த்தைகளில் உறைந்து போய் அசைவற்று நின்றான் அவன்.
 
💜💙💙💜

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *