இது ஒருநாள் உறவா தலைவா..?

This entry is part 27 of 42 in the series இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?



 
உறவு – 32
 
இரண்டு வாரங்களின் பின்பு..!!

காலை நேர மிதமான குளிர் உடலைத் தாக்க அந்த வீதியில் ஜாக்கிங் செய்து கொண்டிருந்தான் விதார்த். இன்று இந்தியா திரும்ப வேண்டும் என்பதை நினைவில் கொண்டவன் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்திருந்தாலும் கூட அவனுடைய மனதில் திருப்தி இன்மையே நிலவியது. 

இன்றைய நாளின் பின் தன்னவளை இனி அருகிலிருந்து காண முடியாது என்ற நிதர்சனம் அவனைக் கலங்கச் செய்தது. நேசித்தவர்களையும் அன்பு கொண்டவர்களையும் விட்டுப் பிரிந்து வாழ்வதே தன்னுடைய சாபம் போலும் என எண்ணி கொண்டவன் தன்னுடைய மனதை தேற்றிக் கொண்டான். ம்ஹும் தேற்றியதாக எண்ணிக் கொண்டான்.

அவன் பாரிசுக்கு வந்த வேலை கச்சிதமாக முடிந்திருந்தது. அவன் எதிர்பார்த்ததை விட அனைத்து திட்டங்களும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட அவனுடைய மேலாண்மை ஆலோசனைகள் யாவும் வெற்றியைத் தழுவி இருந்தன. 

தொழிலில் எந்த அளவிற்கு முன்னேற்றத்தையும் வெற்றியையும் தழுவிக் கொண்டானோ அதே அளவிற்கு எதிர்மறையாக தன்னுடைய சொந்த வாழ்வில் ஏமாற்றத்தையும் தோல்வியையும் தழுவிக் கொண்டான் விதார்த்.

இந்த  பதினான்கு நாட்களில் தன்ஷிகாவின் மீது அவன் கொண்ட காதலோ பன்மடங்காக பெருகித்தான் போனது. உள்ளே விருச்சமாக வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்த காதலை வெளியே மணம் பரப்ப விடாது உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டான் அவன். 

எவ்வளவு வேதனையாக இருந்தாலும் அதனைச் சுலபமாக ஒரு புன்னகையில் மறைத்து விடும் அளவிற்கு தன்னை தேற்றிக் கொள்ளப் பழகியிருந்தான் அவன்.

சில ஏமாற்றங்களையும் மன வலிகளையும் தனக்குள் மறைத்து இயல்பாக நடக்கப் பழகிக் கொண்டான் விதார்த். அவனுடைய கம்பீரமும் நிமிர்வும் மீண்டும் அவனிடமே வந்து ஒட்டிக் கொண்டன. சிரமப்பட்டு அவற்றை தன்னோடு ஒட்ட வைத்துக் கொண்டான் என்பது சாலப் பொருந்தும்.

தன்ஷிகாவோ இப்போதெல்லாம் அவனோடு ஒரு நண்பனைப் போல சகஜமாகப் பழகத் தொடங்கியிருந்தாள். பழைய ரணங்களை அவள் கிளறுவதே இல்லை. அவள் கொடுத்த அந்த நண்பன் எனும் இடத்தை தக்க வைக்கும் முயற்சியில் இறக்கினான் விதார்த்.

ஜாக்கிங்கை முடித்துக்கொண்டு ஹோட்டல் நோக்கிச் சென்றான் அவன்.
தன்ஷிகாவோ தன்னுடைய பொருட்களை எல்லாம் பேக் செய்து கொண்டிருந்தாள்.  அவளுடைய மனமோ வெறுமையாக இருந்தது.
 எதைப்பற்றியும் சிந்தித்து தன்னைக் குழப்பிக் கொள்ள விருப்பம் இல்லாதவள் காலம் போகும் போக்கில் தன்னுடைய வாழ்க்கையை பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவை எடுத்திருந்தாள். 

அதைப் போலவே விதார்த்தின் காதலையும் புரிந்து கொண்டவள் அவன் கீதாவுடன் நிம்மதியாக வாழட்டும் என  எண்ணிக் கொண்டாள். அவன் அவளுக்குச் செய்தது துரோகமாக இருந்தாலும் கூட அவன் கீதா மேல் கொண்ட காதலால் மூன்று வருடங்கள் அனுபவித்த வலியை அறிந்திருந்தவளுக்கு அவன் மீது இரக்கமும் தோன்றியது. 

அவளுடைய மனசாட்சியோ, ‘நீயே இரக்கப்பட வேண்டிய இடத்துலதான் இருக்க.’ எனக் கூற, சட்டென முகம் வாடிப் போனாள் அவள்.

பிடிக்காதவர்களை வற்புறுத்தி தங்களுடன் வாழ வைப்பதில் எந்த உபயோகமும் இல்லை என்பது அவளுக்கு தெள்ளத் தெளிவாகவே புரிந்தது.

விழிகள் கலங்கிப் போக, அவளுடைய அலைபேசியோ லோகஜித்தின் அழைப்பைத் தாங்கி வந்தது. விழிகளைத் துடைத்துக் கொண்டு,

“ஹ.. ஹலோ…” என்றாள் அவள்.

“ஹேய் பேபி.. என்னாச்சு..? ஏன் வாய்ஸ் டல்லா இருக்கு…?” மறுபக்கம் இருந்து பதறினான் லோகி.

“ந… நத்திங் லோகி..”

“ஆர் யு ஓக்கே தன்ஷி…?”

“எஸ்… எஸ்.” என்றவள் இயல்புக்குத் திரும்பினாள்.

“ம்ம்… உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் பேபி.. சீக்கிரமா வந்திரு.” என்றான் லோகி. அவனுடைய வார்த்தைகள் அவளை மயிலிறகாய் வருடின. புண்பட்ட நெஞ்சத்திற்கு லோகியின் வார்த்தைகள் மருந்தாகிப் போகின.

உடைந்து போகும் நேரங்களில் அவளைத் தேற்றுவது லோகஜித்தின் பொறுப்பாக மாறிப்போனது. அவன் இந்தியா போன பின்பும் கூட அடிக்கடி அலைபேசியில் அவளோடு உரையாடி விடுவான் அவன். 

தன்னை ஆழமாக நேசிக்கும் லோகியின் காதலை அவளால் வெறுக்க முடியவில்லை. தூய்மையான அன்புக்காக காத்திருந்தவளுக்கு அதுவோ வரப்பிரசாதமாகவே இருந்தது. 

தனக்காக அவன் இந்தியாவில் காத்திருப்பதை அறிந்து சிறு புன்னகை உதிர்த்தவள் ஃபோனை அவுட் ஸ்பீக்கரில் போட்டவிட்டு தன்னுடைய ஆடைகளை மடிக்கத் தொடங்கினாள்.

லோகியின் குரல் அவளுடைய அறை முழுவதும் எதிரொலித்தது.

“உன்னை உடனே பார்க்கணும் போல இருக்குடி..” 

“ஓஹ்… ம்ம்… சீ.. சீக்கிரமா வர்றேன் லோகி..” திணறினாள் அவள்.

“இங்கே வந்தா எனக்கு என்ன தருவ…?” என்றவனின் கேள்வியில் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு எட்டிப் பார்த்தது.

அவளோ எழுந்து “சாக்லேட்ஸ் , ட்ரெஸ்..” எனக் கூறியவாறே குளியல் அறைக்குள் நுழைந்தாள்.

அதே நேரம் ஜாக்கிங் முடித்துவிட்டு வந்த விதார்த்தோ தன்ஷிகாவைத் தேடி அவளுடைய அறைக்குள் நுழைந்தவன் அவளுடைய அறையில் ஒலித்துக் கொண்டிருந்த லோகியின் குரலில் திகைத்து அவளுடைய படுக்கையில் கிடந்த தன்ஷிகாவின் ஃபோனை வெறித்தான்.

“ஹேய் வெறும் சாக்லேட்ஸ்தானா…? எனக்கு அதெல்லாம் வேணாம் பேபி… வேற ஏதாவது ஸ்பெஷலா வேணும்…” என்றான் அவன்.

“அப்போ ஸ்பெஷல் சாக்லேட்ஸ் வாங்கித் தர்றேன்.” என சிரித்தவாறே உள்ளிருந்து கேட்ட தன்ஷிகாவின் குரலில் விதார்த்தின் முகமோ நொடியில் மாறிப் போனது.

“அடியேய்… எனக்கு சாக்லேட்ஸே வேணாம்.. வேற ஏதாவது கொடுடி..” என்றவனின் குரல் தாபமாக ஒலிக்க, அப்போதுதான் தன்ஷிகாவிற்கு லோகியின் குரல் மாற்றமே புரிந்தது.

“எ.. என்ன வேணும்..?” எனத் திணறியவாறே தன்னுடைய ஃபோனை எடுக்க வந்தவள் அங்கே நின்ற விதார்த்தைக் கண்டு அதிர்ந்து போனாள்.

அங்கே நின்ற விதார்த்தைக் கண்டு பதறியவள், “வி… விதார்த்..” என்க, அலைபேசியில் தொடர்பில் இருந்த லோகியோ, “ப்ச்… இப்போ எதுக்கு அவனைப் பத்திப் பேசுற..? அந்த துரோகியை பத்தி பேசாத தன்ஷிம்மா.. அவனை நினைச்சாலே செம கான்டாகுது…” என இறுகிய குரலில் கூற, அவளுக்கோ ஐயோவென்றாகிப் போனது.

விதார்த்தின் இதழ்களோ தன்னைப் பார்த்து உறைந்து நின்றவளைக் கண்டு புன்னகை சிந்தியது.

அவன் தன்னையும் லோகியையும் கோபம் கொண்டு திட்டுவான் என எண்ணியவள் அவன் புன்னகை புரியவும் மீண்டும் அதிர்ந்தாள்.

“ஹேய் பேபி.. ஏன் சைலன்ட்டா இருக்க, எனக்கு சாக்லேட்ஸ்லாம் வேணாம்டி. ஒரே ஒரு டீப் கிஸ்… ப்ளீஸ்… ரொம்ப ஏங்கிப் போய் இருக்கேன்டி.. இந்தியா வந்ததும் கிடைக்குமா பேபி ப்ளீஸ்டிஇஇஇ.” என்றதும் அவளுக்கோ உடல் நடுங்கிப் போனது. 

லோகியின் வார்த்தைகளில் சட்டென அவளுக்குள் சினம் முகிழ்த்தது. 
 அலைபேசியை எடுத்து அழைப்பைத் துண்டித்தவள், பதற்றத்தோடும் தவிப்போடும் விதார்த்தை ஏறிட்டுப் பார்த்தாள். 

அவனுடைய உதடுகளிலோ அதே மாறாத புன்னகை.

“சாரி தனி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..? நீ லோகஜித் கூட பேசு.. நான் அப்புறமா வர்றேன்.” என்றவன் அடுத்த நொடியே அவளுடைய அறையில் இருந்து வேகமாக வெளியேறினான். 

தன்னுடைய  அறைக்குள் வேகமாக வந்து கதவைப் பூட்டிக் கொண்டவனுக்கு இதயம் பிளந்தாற் போல இருந்தது. அவர்களின் அலைபேசி உரையாடல் அவனை வதைக்க, தன் கேசத்தை அழுந்தக் கோதியவன் தன்னைத் தேற்ற முயன்று தோற்றான்.

தொண்டை அடைத்தது. உணர்வுகள் தடுமாறி தத்தளித்தன. கலங்கப் போகிறேன் என அடம்பிடித்த விழிகளை இறுக மூடித் திறந்தவன் சற்று நேரத்தில் தன்னுடைய உடைமைகளை அடுக்கி முடித்துவிட்டு பயணத்திற்குத் தயாராகினான்.

ஆனால் அவனுடைய மனமோ அங்கேயே ரணத்தோடு தேங்கி நின்றது.

******** 
இந்தியா செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்தவர்களோ ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாது மறுபக்கம் திரும்பி இருந்தனர். தன்ஷிகாவை பார்வையாலும் கூட தீண்டி விடக் கூடாதென கவனமாக இருந்தான் விதார்த். 

அவளைப் பார்த்தால் மனம் தவிக்கும்.. ஏக்கம் எக்கச்சக்கமாக உள்ளுக்குள் எழும்.. அவளை தீண்டி அவள் கரம் பற்றிட இதயம் துடியாய் துடிக்கும். இதெல்லாம் தேவையா..? எதற்கு வம்பு..? என எண்ணியவன் அவள் புறம் திரும்பவே மறுத்தான். 

அக்கணம் அவளோ இரகசியமாக எதையோ முணுமுணுக்கும் சத்தம் இவனுடைய காதில் கேட்க, தன்னை மறந்து அவள் புறம் திரும்பி அவளைப் பார்த்தான் விதார்த். 

அங்கே அவளோ இமைகள் படபடக்க தன்னுடைய இரண்டு கரங்களையும் கூப்பி பத்திரமாக இந்தியா சென்று சேர்ந்து விட வேண்டும் என படபடத்தவாறே இறைவனிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தாள்.

இத்தனை நேரமும் இருண்டு கிடந்த அவனுடைய மனம் எனும் வானமோ அவளைக் கண்டதும் இருள் விலகி ஒளி வீசியது. அதன் பின்னர் விதார்த்தின் பார்வை அடிக்கடி அவளைத் தீண்டிய வண்ணமே இருந்தது.

விமானமோ மெல்ல மெல்ல பறக்கத் தொடங்கி வேகமாக மேலே உயரத் தொடங்க, அதில் அச்சம் கொண்டவள் சட்டென விதார்த்தின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டு விழிகளை மூடினாள். 

அவளுடைய ஒற்றைத் தீண்டலில் உள்ளுக்குள் பூகம்பமே வந்ததைப் போல அதிர்ந்து போனவன் தன் கையில் கிடைத்த சொர்க்கத்தை இறுகத் தழுவிக் கொள்வதைப் போல அவளுடைய கரத்தை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான். 

அந்த மெல்லிய விரல்கள் அவனுடைய கரத்தினுள் அடங்கிய பின்பும் கூட நடுங்குவதை உணர்ந்தவனுக்கு அவளை இழுத்து அணைத்து தனக்குள் புதைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் ஓடியது.

அவனால் தனக்குள் நடந்த மாற்றங்களை நம்பத்தான் முடியவில்லை. முதல்முறையாக அவளோடு பாரிசுக்கு விமானத்தில் வரும்போது தன்ஷிகாவை பற்றி அவன் எதையுமே பெரிதாக எண்ணவில்லை. 

தற்போது அவளோடு இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு போகையில் அவளைத் தவிர வேறு எதைப் பற்றியும் அவன் பெரிதாக எண்ணவில்லை. சில குறுகிய நாட்களிலேயே தன் மனதில் நீங்காத இடமாய் அழகிய காதலை விதைத்தவளை எண்ணி அவனுக்கு உடல் சிலிர்த்துத்தான் போனது. 

அவள் இன்னும் அச்சத்தின் பிடியில் இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் மெல்ல தன்னுடைய கரத்தை உயர்த்தி அவளைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டான். 

அவனுடைய உதடுகளோ “ரிலாக்ஸ் தனி. பயப்படாத. ஒன்னும் ஆகாது…” என அவளை ஆறுதல் படுத்திக் கொண்டே இருந்தன.

அக் கணம் அவனுடைய அணைப்பில் சுயமடைந்து பதறி விலகினாள் தன்ஷிகா.

“சாரி விதார்த் எனக்கும் இந்த பிளைட்டுக்கும் கொஞ்சம் கூட செட்டே ஆக மாட்டேங்குது.” என சிறு புன்னகையை உதிர்த்தவள் தன்னுடைய துப்பட்டாவை சரி செய்து கொள்ள விதார்த்தின் பார்வையோ ஒரு கணம் அவள் மீது ஆழ்ந்து மீண்டது.

“எ… என்ன..?” அவனுடைய பார்வையில் அவளுடைய புருவங்கள் உயர்ந்தன.

“நத்திங் தனி…”

“ம்ம்…. உங்களுக்கும் கீதாக்கும் எப்போ கல்யாணம்..?” எனக் கேட்டாள் அவள். அந்தக் கேள்வியை கேட்கும் போது அவளுடைய மனமோ உள்ளுக்குள் சற்றே நடுக்கம் கண்டது.

“இன்னும் த்ரீ மந்த்ஸ்ல கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்..”  என்றான் அவன்.

“ஓஹ்…”

அவன் கூறும் பொய்களை அப்படியே நம்பியவள் மறுபுறம் திரும்பிக் கொண்டாள். அவர்களுக்குள் நடந்த திருமணம் வெறும் ஒருநாள் கேலிக் கூத்தாக மாறிப் போனதைத்தான் அவளால் இன்று வரை தாங்க முடியாது போனது.

அக்கணம் விதார்த்தின் மீது பொல்லாத கோபம் எழுந்தது. துவண்டு போக முயன்ற மனதை சட்டென அடக்கிக் கொண்டாள் அவள்.  போதும் எத்தனை தடவைதான் நடந்து முடிந்ததை எண்ணியே கவலை கொள்வது.? தவறு செய்தவனே தன் காதலியுடன் மகிழ்வாக இருக்க, அவள் மாத்திரம் கலங்கித் தவிக்க வேண்டுமா.? இதென்ன அநியாயம் என உள்ளுக்குள் தகித்துக் கொண்டிருந்தாள் தன்ஷிகா.

அதே கணம் அவளுடைய முகத்தில் தென்பட்ட சோர்வைக் கண்டவன் “டயர்டா இருந்தா  தூங்கு தனி..” என்றான்.

“ப்ச் உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க.” எனச் சீறினாள் அவள்.

“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி கோபப்படுற..? டயர்டா இருக்க தூங்குன்னுதானே சொன்னேன்.?”

“ஓஹ் இப்போ மட்டும் எதுக்கு இந்த அக்கறை..? இந்த மூணு வருஷமும் என்னை மனுஷியாக் கூட மதிக்காத நீங்க இப்போ எதுக்காக நல்லவன் வேஷம் போடுறீங்க..?”

“ப்ச்…ஏன் கத்திப் பேசுற…? நான் எந்த வேஷமும் போடலை. “

“ஓஹோ…? நீங்க வேஷமே போடத் தெரியாதவர்தான். சே.!”

“தனி ப்ளீஸ் ஸ்டாப்..” என்றான் அவன்.
“டோன்ட் சே அ வர்ட்… டோன்ட்  சே எனிதிங்.. என்னை தனின்னு கூப்பிடுறதை முதல்ல நிறுத்துங்க. உங்களை மாதிரி ஒரு சுயநலம் பிடிச்ச மனுஷனை நான் பார்த்ததே இல்ல.
 ச்சீஈஈ…”

அவளுடைய ச்சீ என்ற வார்த்தையில் அவன் மனமோ பலமாக அடி வாங்கியது.

“சாரி தனி…” என்றவனின் குரலோ கரகரப்பாக ஒலித்தது.

“சாரியா…? நல்ல வேளை கல்யாணம் மட்டும் பண்ணிட்டு விட்டுட்டுப் போனீங்க. இதுவே அன்னைக்கு ஒரு நாள் என்கூட படுத்துட்டு…….”

“ஏய்ய்ய்ய்….” எனக் கர்ஜித்தான் விதார்த்.
 அவனுடைய சினமோ எல்லையைக் கடந்தது. அந்தக் கர்ஜனையில் நடுங்கிப் போனாள் அவள். 
💜💙💙💜
 
உறவு – 33
 
அவனுடைய கர்ஜனையில் அவளுக்கோ தூக்கிவாரிப் போட்டது. உடல் நடுங்க இருக்கையோடு ஒன்றிக் கொண்டவளை வெறித்துப் பார்த்தான் அவன்.

“பேசுற வார்த்தையை யோசிச்சு பேசு. ஆமான்டி நான் உன்னை விட்டுட்டு போனேன்தான்.. அதுக்காக உன்கூட படுத்துட்டு உன்னை ஏமாத்திட்டு போற அளவுக்கு நான் காமுகன் இல்ல. தப்புத்தான். உன்னை விட்டுட்டு வந்தது என்னோட தப்புதான். உன்னோட கால்ல இருக்க செருப்பை வேணும்னாலும் கழட்டி என்னை அடி. நான் பண்ண தப்புக்காக வாங்கிக்கிறேன். உன்னோட கோபம் தீரும் வரைக்கும் அடி..” என்றவனின் குரலோ உடைந்தது. 

“நா.. நான் எ… எதுக்கு அடிக்கணும்..? உங்க செருப்பைக் கழட்டி நீங்களே உங்களை அடிச்சுக்கோங்க…” என அவளும் வார்த்தையை விட, சட்டென குனிந்தவன் தன்னுடைய பாதணியை கழற்ற அவளுக்கோ மெய் பதறியது.

“வ… வருண்…” என அலறியவள் அவனுடைய கரத்தை தடுத்துப் பிடித்துக் கொண்டாள். அவளுடைய கரங்கள் நடுங்கத் தொடங்கின. இதழ்கள் கூட நடுங்கின.

“எ.. என்னை நானே அடிச்சுக்கிட்டா உனக்கு சந்தோஷம் கிடைக்கும்னா இதைப் பண்றதுல எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லைடி.” என்றவனின் விழிகள் கலங்கியது. 

“வே… வேணாம்.. வேணாம்.. ஐயோ வேணாம்…” என்றவள் விம்மி வெடித்து அழத் தொடங்கினாள். 

“சா… சாரி நான் ஏதோ கோபத்துல அப்படி சொல்லிட்டேன்.. சாரி..” என்றவளின் அழுகையோ கூடிப் போனது.

சுற்றி இருந்தவர்கள் யாவரும் அவர்களையே பார்க்க, விதார்த்தோ உள்ளுக்குள் ஊமையாகக் கதறினான். 

“நா.. நான்தான் சாரி கேட்கணும் தனி. உன் மேல எந்தத் தப்புமே இல்ல. ப்ளீஸ் டோன்ட் க்ரை..” என்றவன் தவிப்போடு அவளுடைய கண்ணீரைத் துடைக்க முயல, தன்ஷிகாவோ விழிநீரோடு மறுபக்கம் திரும்பிக் கொண்டாள்.
 அதன்பின் அவள் அவனோடு பேசவும் இல்லை. அவனுடைய முகத்தைப் பார்க்க விரும்பவும் இல்லை.

அவர்களுக்கு இடையே மௌனமே நிலவத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் அவள் அழுதவாறே உறங்கி விட, அவளுடைய வதனத்தையே பார்வையால் வருடிக் கொண்டிருந்தான் அவன்.

அவளுடைய கன்னங்களில் படிந்திருந்த கண்ணீர்க் கறையைப் பார்த்து மனம் வெம்பியவன் அவளுடைய துயிலைக் குழப்பாது மெல்ல அவளின் பட்டுக் கன்னத்தைத் துடைத்து விட்டான்.

அவள் இன்னும் தன்னை வெறுக்கிறாள் என்பதனை உணர்ந்து கொண்டவனுக்கு ஆயிரம் தேள்கள் ஒரே சேர அவனைக் கொட்டியதைப் போல அவன் உடலும் மனமும் வலிக்கத் தொடங்கியது. 

அவன் செய்த தவறென்ன சிறிய தவறா.? அவள் மறந்து மன்னித்து ஏற்க..? தூக்கத்தை தொலைத்து விட்டு கனமாகிப் போன இமைகளை மூட மறந்து தன்னவளை மாத்திரம் பார்வையால் வருடி காயம்பட்ட மனதிற்கு அவளை மருந்தாக்கிக் கொள்ளத் தொடங்கினான் அவன்.

அவள் குளிரில் உடலைச் சுருக்க, சிறு போர்வையை அவள் மீது போர்த்தியவன் அவளைக் குழந்தை போலப் பாதுக்காக்கத் தொடங்கினான். 

உள்ளம் அவளுக்காக கரையத் தொடங்கியது. அன்று அவன் உணராத குற்ற உணர்ச்சியை இன்று அவள் மீது காதல் கொண்டதும் அவளுடைய வலியில் உணர்ந்து கொண்டான்.
 அவளுக்கு நியாயம் செய்ய அவன் மனம் துடியாய் துடித்தது. 

குற்ற உணர்ச்சியே தன்னைக் கொன்று தின்று விடுமோ என பயந்தும் போனான் அவன். 

அதே கணம் தன்ஷிகாவோ தூக்கத்தில் அவன் மீது சாய்ந்து மார்பில் தூங்க ஆரம்பிக்க, அவனோ முற்றிலும் உடைந்து போனான். 

‘காலம் முழுக்க உன்னை என்னோட நெஞ்சுல சுமக்க முடியாத பாவியா போய்ட்டேன்டி.’ என எண்ணியவனின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

பல மணி நேரத்தின் பின்பு அவர்களுடைய விமானப் பயணமும் முடிவுக்கு வந்தது.

தன்ஷிகாவோ விதார்த்தோடு பேசாது மௌன விரதத்தையே கடைபிடிக்கத் தொடங்க, அவனோ அவளோடு பேசிக் கொண்டே வந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் விதார்த்தை புறக்கணிக்க முடியாது போனது அவளுக்கு.

தன்னுடைய முகம் பார்த்துச் சிரிப்பவனை ஒதுக்க முடியாமல் அவனோடு சாதாரணமாக பேசினாள் தன்ஷிகா.
 அதுவே அவனுக்கு பெரும் ஆனந்தமாகிப் போனது. 

விதார்த்தோ தங்களை அழைத்துச் செல்வதற்கு தனசேகரனை வரச் சொல்லி இருக்க, தனசேகருக்கு முன்பே அந்த விமான நிலையத்தில் தன்ஷிகாவுக்காக காத்திருந்தான் லோகஜித். 

தன்ஷிகா வருவதைக் கண்டதும் அவளை நெருங்கியவன் வேகமாக அவளை இறுக அணைத்து விடுவிக்க,
 அந்தக் காட்சியை கண்ட விதார்த்தின் உடலோ ஒரு கணம் இறுகி விறைத்துப் போனது. கொதிக்கும் கொதி நீரை தன் முகத்தில் ஊற்றினாற் போல தகித்தவன் முகம் சுளித்தவாறு தனக்காக காத்துக் கொண்டிருந்த தனசேகரனை நெருங்கினான். 

என்னதான் அவர்கள் இருவரும் நன்றாக வாழவேண்டும் என தன் மனதில் எண்ணிக் கொண்டாலும் கூட அவர்களுடைய நெருக்கத்தை நேரில் கண்டபோது அவனால் சற்றும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது போனது. 

அவன் எப்படி அவளை அணைக்கலாம் என அவனுடைய சட்டைக் காலரைப் பற்றிக் கேள்வி கேட்க வேண்டுமென அவனுடைய கரங்களும் அதரங்களும் பரபரத்தன.

அந்தக் கேள்வியை கேட்பதற்கு தனக்கு எந்தவிதமான உரிமையும் தற்போது இல்லை என்பதை உணர்ந்து கொண்டவன் தன்னை பெரும்பாடு பட்டு அடக்கிக் கொண்டான்.

இனி அவர்கள் இருக்கும் பக்கமே திரும்பக் கூடாது என முடிவெடுத்தவனின் காதில் லோகஜித்தின் குரல் நுழைந்து அவனுடைய மூளையைக் குடையச் செய்தது.

“ஹேய் பியூட்டி உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. தெரிஞ்சா ரொம்பவும் சந்தோஷப்படுவ.” என்றான் லோகஜித்.

“என்ன சர்ப்ரைஸ்…?” எனப் புரியாது கேட்டாள் தன்ஷிகா. 

அவளுடைய கரத்தைப் பற்றியவன், “இங்கே வேணாம். நாம தனியா பேசலாம்.  இப்போ நீ டயர்டா இருப்ப. என்கூட வா. நானே உன்னை ட்ரோப் பண்றேன்.” என அவளை அழைத்தவாறு தன்னுடைய காரை நோக்கிச் செல்ல, விதார்த்தின் பார்வையில் ஒருகணம் தயங்கி நின்றாள் அவள்.

“தனி போலாம் வா… டைம் ஆகுது.”  என அவளைத் தன்னோடு வருமாறு அழைத்தான் விதார்த். ஏனோ அவளை லோகஜித்துடன் அனுப்ப அவனுக்கு மனம் ஒப்பவில்லை.

“சாரி விதார்த். நீ கிளம்பு அவ என் கூட வரட்டும்.” என்றான் லோகஜித்.

தன்ஷியோ ஒரு முடிவோடு லோகஜித்தின் காரினுள் ஏறி அமர்ந்து விட, லோகியின் முகத்திலோ கர்வப் புன்னகை அபரிமிதமாக எழுந்தது.

“ஷீ இஸ் மை லவ்வர். எங்களுக்கு நடுவுல நீ வராத.” என எச்சரித்தான் லோகி.

அவனுடைய எச்சரிக்கையில் கொதித்துப் போன விதார்த்தின் அதரங்களோ வார்த்தைகளை வெளி விடத் துடித்தன.

“ஷு இஸ் மை வைஃப்…” என அந்த இடமே அதிரும் வண்ணம் கத்த வேண்டும் போல இருந்தது அவனுக்கு.  சட்டென தன்னை நிதானித்தான் அவன்.

அடுத்த கணம் லோகியோ தன்ஷியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட, விதார்த்தின் மனமோ காயம் பட்டுப் போனது. 

அவன் அருகே நின்ற தனசேகரனுக்கோ பேரதிர்ச்சி.

“என்ன பாஸ் இவர் நம்ம கம்பெனியோட எதிரி ஆச்சே. இவர் கூட எதுக்கு நம்ம  தன்ஷிகா மேடம் போறாங்க.?” எனத் திகைத்தவாறே கேட்டான் அவன்.

“அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க.” எனக் கூறியவன் தனக்காக காத்துக் கொண்டிருந்த காரினுள் ஏறி அமர்ந்தான்.

“என்னது ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்களா..?” என அதிர்ந்தவனுக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. 

“சார் அப்போ தன்ஷிகாவை வேலையில் இருந்து தூக்கிடலாமா..?” எனக் கேட்டான் தனசேகரன்.

அவர்களுடைய கம்பெனியின் வழக்கம் அதுதான். இங்கு வேலை செய்பவர்கள் எவராயினும் போட்டிக் கம்பெனியுடன் எந்தவிதமான தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி மீறி வைத்துக் கொண்டால் நிறுவனத்தில் இருந்து விலக்கப்படுவதே அங்கு எழுதப்பட்ட சட்டமாக இருந்தது. ஆகையால்தான் தன்ஷிகாவை நிறுவனத்திலிருந்து நீக்குவதற்காகக் கேட்டான் தனசேகரன்.

அவனை அழுத்தமாகப் பார்த்த விதார்த்தின் விழிகளோ தனசேகரனை எச்சரித்தது.

“உனக்கு உன் வேலை வேணாமா தனா…?” என்ற அவனுடைய கேள்வியில் அதிர்ந்தவன், “பாஸ்…?” என்றான்.
 தனாவின் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்தன. தனசேகரனின் அதிர்ச்சிப் பார்வையில் தன்னையே கடிந்து கொண்டான் விதார்த். 

“ப்ச் சாரிடா.. அவளுக்கு என்னோட கம்பெனில எல்லா உரிமையும் இருக்கு. அன்ட் அவ எப்பவுமே நமக்குத் துரோகம் பண்ண மாட்டா. நான் அவளை நம்புறேன்.” என்றவன் அதற்கு மேல் என்னை எதுவும் கேட்காதே என்பது போல் ஒரு பார்வையை செலுத்தி விட்டு காரின் இருக்கையில் சாய்ந்து தன் விழிகளை மூடிக் கொண்டான்.‌

இன்னும் சில நாட்களில் தன்ஷிகா கோவாவை விட்டுச் சென்று விடுவாள் என்பது புரிய அவளுடைய பிரிவைத் தாங்கும் திறன் தனக்கு இருக்குமா என சிந்தனையில் மூழ்கிப் போனான் அவன். 

அதே நேரம் தனசேகரனின் மனமோ தன்னுடைய முதலாளியும்  நண்பனுமான விதார்த்தின் மனதை தெளிவாக புரிந்து கொண்டது.

லோகியுடன் செல்ல முயன்ற தன்ஷிகாவை ஏக்கமாக பார்த்ததும் இல்லாமல் தன்னுடன் வரும்படி அழைத்ததும் அதிர்ச்சி எனில்,

அவள் போட்டிக் கம்பெனியின் முதலாளியைத் திருமணம் செய்யப் போகிற நிலையில் இருந்தும் கூட அவளை தன்னுடைய நிர்வாகத்தில் இருந்து தூக்க வேண்டாம் எனக் கூறியது அதிர்ச்சியின் உச்சமாகிப் போனது. 

அதன் விளைவு அவனுக்குள் சந்தேகத்தை கிளப்பி விட்டிருந்தது.
தன்ஷிகா விதார்த்தின் மனதில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டவன் அது காதலாக இருக்குமோ என சந்தேகம் கொண்டான். 

பின்னே யாருக்காகவும் எவருக்காகவும் தன்னுடைய நிர்வாக விதிமுறைகளை மாற்றிக் கொள்ளாதவன் தன்ஷிகாவுக்காக மாற்றிக் கொண்டதைத்தான் அவனால் கிஞ்சித்தும் நம்ப முடியவில்லை. 

அது மட்டும் இன்றி அவனுடைய ஏக்கப் பார்வையில் பொருள் புரியவில்லை என்றாலும் கூட அந்தப் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று தனசேகரனின் மனதைப் பிசைந்தது.

விதார்த்தைப் பற்றி சிந்தித்தவாறே காரை செலுத்திக் கொண்டிருந்தவன் “தனா…” என்ற விதார்த்தின் குரலில் காரின் வேகத்தைக் குறைத்து விட்டு அவனைத் திரும்பிப் பார்த்தான். 

“சொல்லுங்க பாஸ்…”

“எதையோ தீவிரமா திங்க் பண்ற போல…?” 

“ஹி ஹி… இல்லையே..” என்றான் தனா.

“ஓஹ்… இஸ் இட்…?” என்றவன், “ஓகே காரை இங்கேயே ஸ்டாப் பண்ணு.” என்றான்.  

மறுக்காமல் சட்டென காரை நிறுத்தினான் தனசேகரன்.

அவன் காரை நிறுத்தியதும் காரில் இருந்து இறங்கிய விதார்த்தோ தனசேகரனைப் பார்த்து, “இப்போ நீ நேரா தன்ஷிகாவோட வீட்டுக்குப் போ. அங்கே அவ பத்திரமா போய் சேர்ந்துட்டாளான்னு பார்த்துட்டு எனக்கு இம்மீடியட்டா  இன்ஃபார்ம் பண்ணு.” என்றான்.

அவனுடைய வார்த்தைகளோ தனசேகரனின் மனதில் உறுத்திக் கொண்டிருந்த சந்தேகத்தை தெளிவாக்கி விட்டிருந்தது. 

‘ஆஹா நம்ம கட்டப் பிரம்மச்சாரி காதல்ல விழுந்துட்டான்டோய்.” என எண்ணி தன் காரில் புறப்பட்டான் தனசேகரன்.

தனசேகரன் கிளம்பியதும் தான் அணிந்திருந்த ஷர்ட்டின் பட்டன்களை கழற்றி விட்டவாறு அந்த இரவு நேரம் யாரும் மற்ற வீதியில் நடக்கத் தொடங்கினான் விதார்த். 

சில்லென்று வீசிய தென்றலோ அவன் மனதை சற்றும் குளிர்விக்காது போக விரக்தியான புன்னகை மட்டும் அவனுடைய இதழ்களில் தோன்றி மறைந்தது.

தனிமையில் நடந்து கொண்டிருந்தவனுக்கு தன்ஷிகா கூறிய வார்த்தைகள் மீண்டும் காதில் ஒலித்தன.

“நா.. நான் எ… எதுக்கு அடிக்கணும்..? உங்க செருப்பைக் கழட்டி நீங்களே உங்களை அடிச்சுக்கோங்க…”

“உங்க செருப்பைக் கழட்டி நீங்களே உங்களை அடிச்சுக்கோங்க…”

“செருப்பைக் கழட்டி நீங்களே உங்களை அடிச்சுக்கோங்க..”

“நீங்களே உங்களை அடிச்சுக்கோங்க…”

 என மீண்டும் மீண்டும் அவளுடைய வார்த்தைகள் கத்தி போல அவனைத் தாக்க, தன் தலையைப் பிடித்துக் கொண்டு நடுவீதியில் நின்றவாறு அலறியவன் நிதானம் இழந்தான். 

தான் அணிந்திருந்த ஷூவை கழற்றித் தன் முகத்திலேயே வெறி கொண்டவன் போல அறையத் தொடங்கினான் அவன்.

அவளுடைய அழுகை, கதறல், வலி அத்தனையும் இப்போது புரிய கதறியவாறே மாறி மாறி தன்னுடைய கன்னங்களிலும் தலையிலும் அடித்துக் கொண்டான் அவன்.

“அடிச்சிட்டேன் தனி. அடிச்சிட்டேன்.. நீ சொன்னது மாதிரியே பண்ணிட்டேன். இனிமே நீ அழக்கூடாது.” என்றவன் மீண்டும் தன்னுடைய ஷூவால் தன்னையே தாக்க, அந்த வழியே சென்ற ஒருவனோ விசித்திரமாக பார்த்தவாறு விதார்த்தைக் கடந்து சென்றான். 

விதார்த்தின் கட்டுடல் தேகத்தையும் கம்பீரமான தோற்றத்தையும் அவனுடைய ஆடைகளின் உயர்தரத்தையும் உள்வாங்கிய அந்த ஆடவனுக்கோ விதார்த்தின் செயல் அதிர்ச்சியையே தோற்றுவித்தது. 

“அடச் சை பணக்காரப் பைத்தியம்..” என சத்தமாக கூறிச் சிரித்தவாறு சென்றுவிட, அந்த ஆடவன் உரைத்த வார்த்தைகளில் உறைந்து போனான் விதார்த்.

💜💙💙💜

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *