உயிரை உயிரால் கோர்க்கவா
ஜோஷிதா உதடு கடித்து தலைகுனிந்து கொண்டாள்.. உன்னோட வெட்கமும் அழகுதான்.. என்று அவள் காதோரம் மெல்ல உதடு உரசி பேசியவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டே அவனது இருக்கைக்கு போய் அமர்ந்தான்.. பெண்ணவளுக்கோ அவன் கொடுத்த முதல் இதழ் முத்தம் அவளை பித்து பிடிக்க வைத்தது.. அவன் காதலின் அளவை வாய் திறந்து கூறவில்லையென்று வருத்தப்பட்டவளுக்கு அவன் கொடுத்த முத்தமே அவனது காதலை சொல்லி மலையளவு சந்தோசத்தை கொடுத்தது அவளுக்கு.
சென்னை பக்கம் திருவள்ளூர் கிராமத்தில் தான் மோகனுக்கு பொண்ணு பார்த்திருக்கின்றனர்.. இன்னும் இரண்டு நாளில் கல்யாணம்.. ஆனால் முத்துவின் மகள் அனிதாவோ அப்பா எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்.. நான் ராசி இல்லாதவப்பா கல்யாணமாகி இரண்டு வாரத்துல அவரு இறந்துட்டாரு..இப்ப எனக்கு இன்னொருத்தரோட கல்யாணம் செய்து வைத்து அவருக்கும் ஏதாச்சும் ஆகிடுச்சா என்னால உயிரோட இருக்க முடியாது என்று கண்ணீருடன் தகப்பனிடம் கூறினாள் அனிதா.
“அனிதா உனக்கு தாலி கட்டினவனுக்கு ஆயுசு குறைவு கண்ணு அதான் அவன் இறந்துட்டான்.. உன்னோட ராசி எப்பவும் நல்லாயிருக்கும்.. ஒரு மாசம் கூட நீ அவன் கூட வாழல கண்ணு.. அவன் இறந்து இரண்டு வருசம் ஆச்சு.. பீரோ நிறைய புடவையிருக்கு ஆனா நீ வெள்ளை புடவை கட்டியிருக்க.. என்னால உன்னை இந்தக் கோலத்துல பார்க்க முடியல தாயி.. நான் வேணா மூட்டைபூச்சி மருந்தை வாங்கி குடிச்சிட்டு செத்து போயிடறேன்” என்றார் மனம் வருந்தி மகள் மனம் மாற வேண்டி பேசினார்.. அவராவது மகளை விட்டு போறதாவது.. அனிதா மூன்று வயதாக இருக்கும்போதே முத்துவின் மனைவி பாண்டியம்மாள் இறந்துவிட்டாள்.. சொந்தக்காரர்கள் முத்துவை இரண்டாம் திருமணம் செய்யச் சொல்ல எனக்கு என்பிள்ளை இருக்கா என்று அனிதாவை வாரி அணைத்துக்கொண்டவர் அவரா மகளை விட்டு பூச்சி மருந்தை குடிப்பார்.
“அப்பா நீங்க போய்ட்டா எனக்கு இங்க என்ன வேலை. நானும் உங்க பின்னால வந்துருவேன்” என்றாள் முத்துவின் காலை கட்டிக்கொண்டு..
“கண்ணு இந்த அப்பன் ஆசையை நிறைவேத்தி வையேன்” என்றார்.. அனிதாவின் தலையை வருடியபடி…தனக்காக இளம் வயதில் வாழவேண்டிய வாழ்வை வாழாமல் இருந்த தந்தையின் ஆசையை நிறைவேத்த சரியென்று தலையசைத்தாள்..
“ரொம்ப சந்தோசம் தாயி” என்று மகளை உச்சி முகந்தவர்.. “முதல இந்தக் கோலத்தை கலைந்து பீரோ பெட்டியில இருக்க நல்ல பட்டுப்புடவையா எடுத்து கட்டிக்கிட்டு ரெடியாகு தாயி நம்ம குலதெய்வக் கோவிலுக்கு போய்ட்டு வந்திடலாம்” என்றார்.. மகள் கல்யாணத்திற்கு சம்மதித்துவிட்டாள் என்ற சந்தோசத்தில்.
அறைக்குச் சென்ற அனிதாவோ தன் கோலத்தை கண்ணாடியில் பார்த்து வெற்றுச் சிரிப்பு சிரித்தாள்.. கடவுளே என்னை இப்ப கட்டிக்க போறவரு நீண்ட ஆயுளோட இருக்கணும் என்று குலதெய்வத்தை வேண்டியவள் பீரோவை திறந்து இரண்டு வருடம் கழித்து பட்டுப்புடவையை கையில் எடுத்தவளுக்கு கண்ணீர் நிற்காமல் வந்தது.. முதலில் திருமணம் செய்தவன் அவனது அத்தை மகன் வினோத் விவசாயம் தான் பார்த்துக்கொண்டிருந்தான்.. திருமணம் முடிந்து இன்னும் வாழ்க்கையை ஆரம்பிக்கவில்லை.. இருவரும் கோவிலுக்கு போயிட்டு வந்து அன்றைக்குத்தான் வாழ்க்கையை ஆரம்பிப்பதாக இருந்தனர்.. ஆனால் வினோதின் விதி அன்றோடு முடியவிருந்தது யார் அறிவார்.. வயலுக்கு மருந்து வாங்க போனவன் லாரியில் அடிபட்டு இறந்து சடலமாகத்தான் வந்தான்.. அத்தை மகனாக இருந்தாலும் கல்யாணத்திற்கு முன்பு அங்கே இங்கே நின்று பேசியதில்லை வினோத்தும் அனிதாவும்.. அன்னோன்யமாக பழகவில்லையென்றாலும் இரண்டு வாரம் வினோத் கூட இருந்தது அவளுக்கு பெரிதாக தெரிந்தது.. இதோ தனக்காக சிறுவயதில் இரண்டாவது திருமணம் செய்யாமல் வாழ்ந்த தந்தைக்காக மீண்டும் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டாள் அனிதா.
சிவாவோ ஒற்றை ஆளாய் கல்யாண வேலைகளை கவனித்தான்.. சிவாவுக்கு முந்தின நாள் கல்யாணம்.. அடுத்த நாள் மோகனுக்கு கல்யாணம் என்றிருந்தது..
சென்னை வந்திறங்கிய அர்ஜுனும் ஜோஷிதாவும் பார்வையால் விடைபெற்றனர்.. வீட்டுக்குச் சென்ற ஜோஷிதாவோ “பாட்டி” என்று லதாவைக் கட்டிக்கொண்டு, “பாட்டி அர்ஜுன் என் காதலுக்கு ஓ.கே சொல்லிட்டாரு” என்று துள்ளிக்குதித்தாள்..
அவசர காதலுக்கு ஆயுசு குறைவா இருக்கும் என்று கவலைப்பட்ட லதாவோ “கண்ணு ஜோஷி நான் அர்ஜுன் தம்பிக்கிட்ட பேசணும்” என்றார்.
“ம்ம் நான் கூட்டிட்டு வரேன் பாட்டி என்றவள் நாளைக்கு நம்ம மல்லிகா மேம்மிற்கும் ,சிவா சாருக்கும் கல்யாணம் பாட்டி உங்களையும் கூட்டிட்டு வரச்சொல்லியிருக்காங்க மல்லி மேம் நீங்களும் என்னோட வாங்க” என்றாள்.
“கண்ணு நான் வரலை நீ மட்டும் போய்ட்டு வா” என்றதும்..
“பாட்டிமா கல்யாணத்துக்கு அர்ஜுனும் வருவாரு.. நீங்க அவர்கிட்ட பேசணும்னு சொன்னீங்கள்ள”
“அப்ப நானும் வரேன்” என்றார் அவசரமாக..
“சரி நான் குளிச்சிட்டு வரேன் பாட்டி” என்று அறைக்குள் சென்றாள்.
அர்ஜுன் வீட்டுக்குச் சென்று குளித்து விட்டு கௌரியிடம் கல்யாணத்தைப் பற்றி பேச வந்தான்.
கௌரியோ போனில் யாரிடமோ “ஏன் வசந்தா உன் பையனுக்கு அறிவே இல்லையா ஒரு கிறிஸ்டியன் பொண்ணை போய் கல்யாணம் பண்ணியிருக்கான்” என்று அவளது சொந்தக்காரப்பெண்ணிடம் கோபத்துடன் பேசிக்கொண்டிருந்தாள்..
அர்ஜுனுக்கு இந்த அம்மா இந்தக் காலத்திலும் சாதி மதம் பார்க்குறாங்க.. நான் இப்பப்போய் என்னோட காதலை சொன்னா கண்டிப்பா சரினு சொல்ல மாட்டாங்க.. என்ன பண்றது என்று யோசித்தவன் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு டைனிங் டேபிளில் உட்கார்ந்தான்.
போன் பேசி முடித்து வந்த கௌரியோ, “கண்ணா இந்த வசந்தா பையன் கிறிஸ்டியன் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டானாம்.. இதெல்லாம் நம்ம வழக்கத்துக்கு ஒத்துவராதுப்பா” என்றார் ஹாட்பாக்ஸை திறந்து சாப்பாட்டை தட்டில் போட்ட படி..
“அம்மா எனக்கு அடிபட்டிருச்சு.. நான் உயிருக்கு போராடிட்டிருக்கேன்.. என்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போறீங்க அந்த டாக்டர் கிறிஸ்டியனா இருந்தா எனக்கு வைத்தியம் பார்க்க வேண்டாம்னு சொல்லுவீங்களா.. இல்ல எனக்கு இரத்தம் கொடுக்க கிறிஸ்டியன் பையன் வந்தா அவனை இரத்தம் கொடுக்க வேண்டாம் சொல்லுவீங்களாம்மா” என்றான் பெரும்மூச்சுடன்..
“கௌரியோ அது வேற இது வேற தம்பி.. நீ என்னென்னமோ பேசுறே நான் கும்பிடற அம்மன் உனக்கு எந்த ஆபத்தும் வரவிடமாட்டா.. நீ சாப்பிடு” என்றவருக்கு பதட்டமாய் வந்தது..
அர்ஜுன் சாப்பிட்டு முடித்து அவனது அறையில் போய் தலையில் கைக்கொடுத்து உட்கார்ந்துகொண்டான்.. ச்சே அவரசப்பட்டு முத்தம் கொடுத்துட்டீயேடா.. அந்தப் பொண்ணு மனசுலயும் ஆசையை உண்டு பண்ணிட்ட.. அவள காதலைக்கலைனு சொல்லத்தானே டெல்லி போன அதைவிட்டு அவளுக்கு முத்தம் வேறு கொடுத்திட்டு வந்திருக்க.. இப்ப உங்க அம்மாகிட்டையும் தைரியமா பேசமுடியலையே என்று அவனையே அவன் திட்டிக்கொண்டிருந்தான்.
கௌரியோ சமையல்கட்டை ஒதுங்க வைத்துவிட்டு அர்ஜுன் பேசியதை நினைத்துப்பார்த்தார்.. ஒருவேளை நம்ம பையனும் கிறிஸ்டியன் பொண்ணை லவ் பண்ணியிருந்தா.. ச்சே ச்சே என் பையன் அப்படியெல்லாம் தப்பு பண்ணமாட்டான் என்று யோசித்து குழம்பிக்கொண்டிருந்தவர் மகனின் அறைக்குச் சென்றார்..
அர்ஜுனோ தலையில் கைவைத்து அமர்ந்திருந்தான்.. “கண்ணா தலைவலிக்குதா” என்று தலைவலி தைலம் எடுத்து வந்து அர்ஜுனுக்கு நெற்றியில் தேய்த்துவிட்டார்.. இந்த பாசத்தை காட்டித்தான் என்னை உன்பக்கம் இருக்க வைக்குற என்று மனதில் எண்ணியவன் அப்படியே அவர் மடியில் படுத்துக்கொண்டு “ம்மா நான் ஆசைப்பட்டதெல்லாம் எனக்கு வாங்கி கொடுத்திருக்கீங்கள்ள” என்றவனது தலைமுடியை கோதிய படி “ஆமா கண்ணா இன்னும் என்ன வேணும் சொல்லு வாங்கித்தரேன் அம்மா” என்றதும்..
கௌரியின் மடியிலிருந்து எழுந்தவன் “நான் ஒரு பொண்ணை விரும்புறேன்ம்மா.. அவ பேரு ஜோஷிதா.. நீ அந்தப் பொண்ணை பாரு உனக்கு பிடிச்சிடும.. நாளைக்கு நம்ம சிவாவுக்கு கல்யாணம் ஜோஷிதா அங்க வரா நீயும் நாளைக்கு என்கூட கல்யாணத்துக்கு வாமா பொண்ணையும் பார்த்தது போல இருக்கும்” என்றான்..
“ஓ பொண்ணு நம்ம அளவுக்கு வசதியாப்பா.. உன் ஆசைக்கு நான் குறுக்கே நிற்கலை ஆனா அவங்க கிறிஸ்டியனா இருக்கக் கூடாது” என்றார் கண்டிப்புடன்.
“அம்மா ஜோஷிதா நம்ம காலேஜ்ல ஒர்க் பண்ணுறா.. ரொம்ப நல்ல பொண்ணும்மா.. அவ அப்பா கிறிஸ்டியன், அம்மா இந்து” என்றதும்..
கௌரியின் முகம் மாற.. “ஏன்மா இன்னும் சாதி மதம்னு இருக்கீங்க.. உங்க மகன் ஆசைக்கு முன்னால எதுக்கு இந்த சாதி மதம் எல்லாம்.. அதான் முக்கியமா போச்சா உங்களுக்கு” என்று கௌரியின் மனதை மாற்றப்பார்த்தான்.
“கௌரியோ அப்ப அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணறதா முடிவே பண்ணிட்டியாப்பா”
“ஆமாம்மா நான் ஜோவுக்கு வாக்கு கொடுத்திட்டேன்.. அவளை கல்யாணம் செய்துக்குறேனு” என்றான் நிதானமாக..
இப்போது இந்த கல்யாணம் வேண்டாமென்று சொன்னால் அர்ஜுன் பிடிவாதமாக கல்யாணம் பண்ணியே தீருவான்.. நாம கல்யாணத்துக்கு சம்மதிக்குறதை தவிர வேறு வழியில்லை என்று நினைத்தவர் “சரிப்பா உன் கல்யாணத்துக்கு எனக்கும் சம்மதம்” என்றார் அதிரடியாக அவர் வேறு கணக்கு போட்டுவிட்டார்.
கௌரி உடனே சம்மதிப்பார் என்று எண்ணாதவன் “ம்மா நிஜமா உனக்கு சம்மதமா” என்றான் அதிர்ச்சியுடன் அவரை கட்டிக்கொண்டு..
“இத்தனை நாள் நீ ஆசைப்பட்டு கேட்டது அனைத்தும் வாங்கிக்கொடுத்துட்டேன்.. இப்ப உனக்குப் பிடிச்ச பொண்ணை கேட்குற நான் எப்படி வேண்டாம்னு சொல்லுவேன்” என்றார் வரவழைக்கப்பட்ட சிரிப்பில்.. அவருக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை.. ஆனால் மகனின் மனதை நோகடிக்க விரும்பவில்லை கௌரி.. எல்லா கோபமும் ஜோஷிதாவின் மேல் திரும்பியது. காலேஜ்க்கு வேலைக்கு வந்தா வேலையை மட்டும் பார்க்கணும்.. அதை விட்டு மாப்பிள்ளையும் தேடிக்கிறாளுங்க என்று மனதில் ஜோஷிதாவை கருவினார். அர்ஜுனோ சந்தோசத்தின் உச்சத்தில் இருந்தான்.. போனை கையிலெடுத்தவன் இப்போதே ஜோஷிதாவிடம் அம்மா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டார்னு சொல்லலாமா என்று எண்ணியவன் வேண்டாம் நாளைக்கு அம்மாவோட போய் சர்ப்பிரைஸ் கொடுப்போம் என்று போனை வைத்துவிட்டான்.
அடுத்த நாள் காலையில் ஜோஷிதா அரக்கு பச்சை நிறத்தில் பட்டுப்புடவை கட்டி கழுத்தில் ஒரு ஆரம் மட்டும் போட்டு கண்ணுக்கு மையிட்டு தன்னை கண்ணாடியில் நின்று அழகு பார்த்தாள்.. லதாவோ கல்யாணத்துக்கு ரெடியாகி வந்தவர் “கண்ணு அர்ஜுன் தம்பி கல்யாணத்துக்கு வருவாருதான” என்றார் சந்தேகத்துடன்..
“பாட்டிஇஇ சிவா சார் அர்ஜுனுக்கு சீனியர் அதுக்கு மேல குடும்ப நண்பர் அவர் இல்லாமலா கல்யாணத்தில்.. இப்ப உங்க பேத்தி எப்படி இருக்கேனு சொல்லுங்க” என்று லதா முன்பே முந்தியை விரித்து நின்று காட்டினாள்.
“என் ராஜாத்தி தேவதை போல இருக்க என் கண்ணே பட்டிரும் போல இருக்கு” என்று ஜோஷிதா கன்னம் தொட்டு திருஷ்டி எடுத்தார் லதா.
ஜோஷிதா கார் நன்றாக ஓட்டுவாள்.. தங்களது காரிலே இருவரும் கல்யாணத்துக்கு காரில் சென்றனர்.. அர்ஜுன் ரிஜிஸ்டர் ஆபிஸிற்க்கு முன்னமே வந்து வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தான்.
விமலாவோ மைதிலியிடம் போனில் பேசிக்கொண்டிருந்தாள்.. அம்மா குழந்தைக்கு உடம்பு சரியில்ல நான் அண்ணன் கல்யாணத்துக்கு வரமுடியாதும்மா நாளைக்கு வரேன் என்று சொல்லிவிட்டாள் மைதிலி..
யாரு வரலைனாலும் என் கல்யாணம் நடக்கும்மா.. நீங்க கிளம்பி வாங்க என்று கையில் காப்பை ஏத்திவிட்டு வந்தான் சிவா.. ரொம்ப நாளைக்கு பிறகு வாங்கி வைத்த காப்பை போட்டான்..
விமலாவுடன் சிவா ரிஜிஸ்டர் ஆபிஸிற்கு சென்றான்..
மல்லிகாவும் அறையில் கோல்டன் கலர் புடவையில் தங்கமாய் மின்னினாள்.. மேக்கப் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.. கழுத்தில் ஒரு ஆரமும் நெக்லசும் போட்டுக்கொண்டு கண்ணுக்கு மையிட்டு உதடுக்கு மெலிதாக லிப்ஸ்டிக் மட்டும் போட்டுக்கொண்டாள்.
வடிவேலும் புஷ்பாவும் மகளை திருமண கோலத்தில் பார்க்க தவம் கிடந்தனரே…மல்லிகாவின தங்கை வனிதா இப்போது மாசமாய் இருக்க அவளும் திருமணத்திற்கு வரமுடியவில்லை.. மூவரும் ரிஜிஸ்டர் ஆபிஸிற்கு சென்றனர்.. மல்லிகாவிற்கோ ஒரு வித பதட்டம் இருந்தது..
மல்லிகாவை பட்டுப்புடவையில் பார்த்த சிவாவோ ப்ளாட் ஆகிவிட்டான்.. அப்படியே மெய் மறந்து பார்த்திருந்தான்.. “சீனியர் கர்சீப் இந்தாங்க” என்று அர்ஜுன் கர்சீப்பை சிவாவின் கையில் கொடுக்க..
“அர்ஜுன் உனக்கும் கல்யாணம் நடக்கும் அப்போ உன்னை இதை விட இரண்டு மடங்கா கிண்டல் பண்ணுவேன் பாரு” என்றான் சிரித்துக்கொண்டே.
மல்லிகாவோ சிவாவை பட்டுவேஷ்டியில் பார்த்தவளுக்கு கண்கள் அகலாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.. அவனை வெறுக்கிறேன் என்று இன்னும் அதிகமாய் அவன் மீது காதல்கொண்டிருந்தாள் மல்லிகா.
சிவாவோ மல்லிகாவின் கை பிடித்துக்கொண்டு ரிஜிஸ்டர் ஆபிஸிற்குள் நுழைந்தான்.. மல்லிகா மெல்லிய சிரிப்போடு சிவாவுடன் நடந்துசென்றாள்.. அவள் இந்த தருணத்தைத்தானே எதிர்பார்த்திருந்தாள்.. இன்று ஒருநாள் சிவாவுடன் சந்தோசமாக இருக்கணும் என்று எண்ணியவள் புன்னகை முகமாகவே நின்றிருந்தாள்.
ஜோஷிதாவும் லதாவும் காரிலிருந்து இறங்கினர்.. மாலை வாங்கி வந்த அர்ஜுன் ஜோஷிதாவை பார்த்தவன் பக்கம் வந்த லதா பாட்டியை பார்த்து “வாங்க பாட்டி” என்று புன்னகையுடன் அவரை வரவேற்றவன் மாலையை ஜோஷிதாவிடம் கொடுத்துவிட்டு லதாவின் காலில் விழுது ஆசிர்வாதம் வாங்கினான்.. லதாவுக்கு அர்ஜுனை பார்த்ததும் பிடித்துப் போய்விட்டது.. என்பேத்தி எதிலும் சோடை போக மாட்டா என்று பெருமையும் கொண்டார்.. “நூறு வருஷம் புள்ளை குட்டியோட நல்லா சந்தோசமா இருப்பா” என பூரிப்புடன் ஆசிர்வாதம் செய்தார்.
ஜோஷிதாவின் காதோரம் சென்ற அர்ஜுன் “ஹேய் நாமளும் இப்பவே இங்கயே நாம கல்யாணம் பண்ணிப்போமா என்று கிசுகிசுப்பாய் கேட்டான்.
“நான் ரெடி” என்றாள் கண்ணடித்து… அதே நேரம் கௌரி காரிலிருந்து இறக்கினார் .
