இது ஒருநாள் உறவா தலைவா..?

This entry is part 34 of 42 in the series இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒருநாள் உறவா தலைவா..?



உறவு – 40


கோவாவின் பிரம்மாண்டமான ஹோட்டலில் விதார்த்தின் ப்ராஜெக்ட் வெற்றிகரமாக நடந்து முடிந்ததற்கான கொண்டாட்ட விழா சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. 

விதார்த்துடன் இணைந்து தங்களுடைய திட்டத்தில் வெற்றி பெற்ற சில வெள்ளையர்களும் விதார்த்தின் நிறுவனத்தைச் சார்ந்த அனைத்து ஊழியர்களும் அழகழகான ஆடைகளில் தம்மை அழகுப்படுத்திக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்க, அந்த விழாவின் நாயகனான விதார்த்தின் பார்வையோ ஒவ்வொரு நொடியும் இடைவிடாது வாயிலையே பார்த்த வண்ணம் இருந்தன. 

அவனுடைய மனம் விரும்பும் தேவதை இன்னும் பார்ட்டிக்கு வரவில்லை என்பதை அறிந்தவனுக்கு அங்கிருந்த கொண்டாட்டம் கிஞ்சித்தும் ரசிக்கவில்லை. 

மனமோ சிறு குழந்தை போல அவளையே அடம்பிடித்து நாடித் தேட, அவளின் வருகைக்காக இடைவிடாது காத்துக் கொண்டிருந்தான் விதார்த். 

புடவையுடன் யாரேனும் தென்பட்டால் எங்கே தன்னவள்தான் வந்து விட்டாளோ என அவனுடைய விழிகள் ஆர்வமாக விரிந்து அவர்களை ஒரு கணம் உற்றுப் பார்க்கும். பின் அது தன்னவள் இல்லை என்றதும் சோர்ந்து மறுபுறம் திரும்பிக் கொள்ளும். 

இவ்வாறாக அங்கே வரும் பெண்களை எல்லாம் தன்னவள்தானா என எண்ணி ஆவலுடன் பார்ப்பவன் சற்று நேரத்தில் சோர்ந்து துவண்டுதான் போனான். 
கொண்டாட்ட விழா தொடங்கி சுமார் ஒரு மணி நேரமாகி விட, இன்னமும் அவள் வராததை நினைத்தவனுக்கு சற்றே கலக்கமாக இருந்தது. 

தன்னுடைய ஃபோனை கரத்தில் எடுத்தவன் அவளுக்கு அழைப்பெடுத்துப் பார்க்கலாமா என எண்ணி பின் வேண்டாம் என தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். 

அவனுடைய உள் மனமோ அவள் வருவாள் என்பதை அவனுக்கு உணர்த்த மீண்டும் அவனுடைய விழிகள் வாயிலை நோக்கி படையெடுத்தன.

அதே கணம் அவனை நெருங்கி வந்தாள் சரிதா.‌ வேலையில் சேர்ந்தது முதலே விதார்த்தின் மீது அவளுக்கோ அபாரமான ஒரு ஈர்ப்பு. ஆனால் அவன்தான் பெண்களை சற்றும் திரும்பிக் கூட பார்ப்பதில்லையே.
 அதனாலையே தன்னுடைய ஆசைகளை அடக்கி வைத்திருந்தவள் இன்று கோட் சூட்டில் கம்பீரமாக வந்து நின்றவனைப் பார்த்ததும் கட்டுப்பாடுகள் இழந்து போனாள்.

கறுப்பு  நிற கோட் சூட் அணிந்து கோட்டின் நடுத்தெறியோட்டையை திறந்து விட்டிருந்தவன் அவன் அணிந்திருந்த கருப்பு நிற ஷர்ட்டில் முதல் மூன்று பட்டன்களையும் திறந்து விட்டிருந்தான். 

அவனுடைய கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியில் டொல்பின் ஒன்று துள்ளிப் பாய்வது போன்ற பென்டன் ஒன்றை அணிந்திருக்க அதுவோ அவனுடைய மார்போடு உரசிக் கொண்டிருந்தது.

அவனுடைய கரத்தில் அணிந்திருந்த விலையுயர்ந்த கைக்கடிகாரமும் அவனுடைய நேர்த்தியான ஆடை முறையும் அவனைப் போலவே படியாத சிகை அலங்காரத்தையும் கண்டு அங்கே வந்த பல பெண்களும் அவனைக் கண்களால் பின் தொடர்ந்த வண்ணமே இருந்தனர். 

அதையெல்லாம் பார்த்த சரிதாவிற்கோ சற்றே எரிச்சலாகவும் இருந்தது.
 எத்தனையோ ஆண்கள் இருக்க பெரும்பாலான பெண்கள் விதார்த்தையே பார்வையால் விழுங்க வேண்டுமா என எண்ணி மனதினுள் கடுகடுத்தவள் அவனை நெருங்கிச் சென்றாள். 

‘நல்லவேளை இன்னைக்கு தன்ஷிகா வரல. அவ வேற நம்ம சாரை புருஷன் அது இதுன்னு சொல்லிட்டு இருந்தா எங்க அவளால நம்ம ரூட்டுக்கு ஆபத்து வந்துருமோன்னு பயந்துகிட்டு இருந்தேன். இப்போதான் நிம்மதியா இருக்கு.’ என எண்ணியவாறு விதார்த்தின் முன்னே வந்து நின்றவள், 
“ஹாய் சார்..” என அழகாக புன்னகைத்தாள்.

அவள் அணிந்திருந்த நவீன கவுனோ அவளை மிகவும் அழகாகவே காட்டியது.  

“ஹாய் சரிதா.. வாட்ஸ் த மேட்டர்..?” என்றவனது பார்வையோ மீண்டும் வாயிலை நோக்கிப் பாய, அந்தப் பார்வையை பின்தொடர்ந்து தன்னுடைய பார்வையை செலுத்தினாள் சரிதா. 

“யாருக்காகவும் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா சார்..?” எனக் கேட்டாள் அவள். 

“ம்ம் எஸ்.. இன்னும் தன்ஷிகா வரலையே. அவளைத்தான் பாத்துட்டு இருக்கேன்.” என சற்றும் மறைக்காது உண்மையைக் கொட்டினான் அவன். 

அவனுடைய வார்த்தைகளில் அவளுடைய புருவங்களோ உச்சி மேட்டைத் தொட்டன. பெண்களின் பெயர்களையே உச்சரிப்பதில் எரிச்சல் படுபவன் இன்று ஒரு பெண்ணிற்காக காத்திருக்கிறானா என எண்ணி அதிர்ந்தே போனாள் சரிதா. 

பாரிஸுக்கு சென்று வந்ததிலிருந்து அவனுடைய மாற்றம் அவளுக்கு உறுத்தத் தொடங்கியது. தன்ஷிகாவும் விதார்த்தும் சற்றே நெருக்கமாக பழகுவதைப் போல இருக்க உள்ளுக்குள் கடுகடுத்த மனதை அடக்கிக் கொண்டவள் வெளியே அவனைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தாள்.
 அவளுடைய உள் மனமோ உடைந்து நொறுங்கியதைப் போல இருந்தது அவளுக்கு.

எங்கே கலங்கி விடுமோ என கண்ணீரை வடிக்கத் தயாராக இருந்த கண்களை இமை சிமிட்டி கட்டுப்படுத்திக் கொண்டாள் அவள்.

“சார் நான் உங்க கூட கொஞ்சம் பேசணும். இப்போ நீங்க ஃப்ரீயா..?”  
அவள்  அப்படிக் கேட்டதும் தன்னுடைய முழுக் கவனத்தையும் சரிதாவின் மீது திருப்பியவன் அவளைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தான். 

“தாராளமா பேசலாமே..” என்க, அவனுடைய அந்த மென் நகையில் அவளுடைய முகம் பூவாய் மலர்ந்தது. 
அவனை அழைத்துக்கொண்டு தடாகத்தின் அருகே இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள் அவள். 

அவனோ அவளுக்கு எதிரே அமர்ந்தவன் “என்ன விஷயம் சரிதா.? ஏதாவது இம்பார்ட்டண்ட் நியூஸா?” எனக் கேட்டான். 

“இல்ல சார். இது என்னோட பர்சனல் மேட்டர்.” என்றாள் அவள்.

அவள் பர்சனல் மேட்டர் என்றதும் அவனுடைய புருவங்களோ உயர்ந்து பின் இயல்பாகிக் கொண்டன. 

“ஓஹ் ஓகே சொல்லுங்க.” என்றான் விதார்த்.  அவனுடைய கரங்கள் ஒன்றோடு ஒன்று கோர்த்துக் கொண்டன.

“விதார்த் நான் ரொம்ப நாளாவே உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும்னு நினைச்சுக்கிட்டே இருக்கேன். பட் அப்பப்போ படபடப்பா வந்து சொல்லாமலேயே போயிடுறேன். இன்னைக்கு நான் இதை உங்ககிட்ட கண்டிப்பா சொல்லியே ஆகணும்.” என அவள் கூறிக் கொண்டிருந்த கணம் விதார்த்தின் பார்வையோ வாயிலில் எதையோ அதிசயத்தைக் கண்டவாறு நிலை குத்தி நின்றது. 

அவனது அசைவற்ற பார்வையில் அதிர்ந்து அந்தப் பக்கம் தன் பார்வையை திருப்பினாள் சரிதா.

அங்கே அழகிய டிசைனர் புடவையில் பேரழகியாக வந்து கொண்டிருந்த தன்ஷிகாவைக் கண்டு அவளுடைய முகமோ வாடிப்போனது.  

விதார்த் அவளைத்தான் இமை சிமிட்டாமல் இரசித்துப் பார்க்கின்றான் என்பது புரிய அவளுடைய காதல் கொண்ட மனம் சற்றே ஆட்டம் காணத் தொடங்கியது. 

பரிதவிப்போடு மேஜை மீது இருந்த விதார்த்தின் கரத்தின் மீது தன்னுடைய கரத்தை மெல்ல வைத்து அழுத்தியவள் அவனை அழைக்க முற்பட்ட நேரம் சட்டென தன் கரத்தை உருவி எடுத்துக் கொண்டான் விதார்த்.

“வாட்ஸ் ராங் வித் யு சரிதா..?” என்றவனின் பார்வை அவளை துளைத்தது.

“எ… எனக்கு உங்களை பி… பிடி…” என அவள் கூற முயல, அவள் என்ன கூற வருகின்றாள் என்பதனை உணர்ந்து கொண்டவன் சட்டென நிதானித்தான். 

அவனுடைய முக பாவனை சடுதியில் மாறிப் போனது. 

“ரிலாக்ஸ்… எதுக்காக டென்ஷன் ஆகுறீங்க சரிதா..? என்கிட்ட பேசுறதுல உங்களுக்கு என்ன தயக்கம்.? என்னை உன்னோட அண்ணாவா நினைச்சுக்கோ.” என்றதும் அவளோ பேச்சற்றுப் போனாள். விழிகள் கலங்கிப் போயின.

“அ… அண்ணாவா…?” தடுமாறினாள் அவள்.

“எஸ்…” என்றவன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான். 

“நீ பார்ட்டியை என்ஜாய் பண்ணு சரிதா.. நாம அப்புறமா பேசலாம்.” என்றவன் தன்ஷிகாவை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.

சரிதாவின் காதல் கொண்ட மனம்  உடைவுற்றுப் போனது.

************ 
சரிதாவை சமாளித்து விட்டு தன்ஷிகாவை நோக்கி வந்த விதார்த்தின் கரத்தை பற்றி இழுத்தாள் ஒரு பெண். அதில் அதிர்ந்து திரும்பியவன் தன்னை இழுத்த பெண்ணை யாரெனப் புரியாது பாரத்தான்.

“யார் நீ..?”

“ஹேமி…. ஹேமா… நீங்க ஏமாத்திட்டு வந்தீங்களே உங்க மனைவியோட தங்கச்சி.” என்றவளின் கரம் அடுத்த நொடியே விதார்த்தின் கன்னத்தை பதம் பார்த்தது.

இமைக்கும் நொடியில் அவனை ஓங்கி அறைந்தவள், “என்னோட அக்காவை அழ வெச்சிட்டீங்கள்ல உங்களை சும்மா விட மாட்டேன்…”  என அழுகையோடு சீறினாள்.

அதே கணம் அவர்களை நெருங்கி வந்த தன்ஷிகாவோ, “ஏய் ஹேமி பைத்தியமாடி நீ…?” எனத் திட்டியவாறு அவளைத் தன் பக்கம் இழுக்க, ஹேமியோ தன் சகோதரியின் கரத்தை உதறி விட்டு மற்றைய பக்கம் விரைந்து சென்றாள்.
“சா… சாரி விதார்த். அவ என்னோட தங்கச்சி. அவளுக்கு எல்லா உண்மையும் தெரியும்.. சின்னப் பொண்ணு கோபத்துல அப்படி பண்ணிட்டா சாரி.” என படபடப்பாக கூறினாள் தன்ஷிகா.

“இட்ஸ் ஓக்கே… அவ பண்ணதுல தப்பில்ல.” என்றவன் கண்களை எட்டாத புன்னகையை உதிர்த்தான்.

“ம்ம்…” என்றவளுக்கோ சங்கடமாகிப் போனது.

“இங்கே எப்படி அவ வந்தா..?”

“நான் நாளைக்கு சென்னை போறேன்ல. என்னை அழைச்சுட்டுப் போக ட்ரைவர் அங்கிள் கூட இவளும் வந்துட்டா. நான்தான் ரூம்ல தனியா இருக்கணுமேன்னு பார்ட்டிக்கு கூட்டிட்டு வந்தேன்.”

“ஓஹ்..” என்றவன் அவளிடம் தலையசைத்து விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்தான். அந்நொடி விதார்த்திற்கோ தனிமை தேவைப் பட்டது.

அதே கணம் அவர்களை விட்டு நகர்ந்து வந்த ஹேமியின் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது. தன்ஷிகா ஏமாந்து போனதை கூறி தன்னிடம் அழுது கரைந்தது நினைவில் வர அவளுடைய மனமோ தன் சகோதரிக்காக மிகவும் வருந்தியது.

“வாவ்… வாவ் வாவ்… சூப்பர் பேபி.. என்னாஆஆ அடி… எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துப் போச்சு.. இன்னும் நாலு அடி அவனை அடிச்சிருக்கலாம்..” என்றவாறு கையில் குளிர் பானத்துடன் அவளை நெருங்கிய லோகியைப் பார்த்து முகம் சுளித்தாள் ஹேமா.

“டேய் சைனீஸ் மண்டையா..? அவரு என்னோட மாமா.. நான் அடிப்பேன் சொந்தம் கொண்டாடுவேன். உன் வேலையை பார்த்துட்டு போடா..” என்றாள் அவள்.

“ஏய் சுண்டெலி மாதிரி இருந்துக்கிட்டு என்னையே எதிர்த்துப் பேசுறியா..?” எகிறினான் லோகி.

“யோவ் போயா பெருச்சாளி.”

“இடியட் மைன்ட் யுவர் வேர்ட்ஸ். உங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்கப் போறது நான்னு தெரிஞ்சும் இப்படி மரியாதை இல்லாம பேசுற.” கண்டித்தான் அவன்.

“எங்க அக்காக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆகிருச்சு மிஸ்டர் பெருச்சாளி. நீங்க நடுவுல வந்து பிரேக் போடாதீங்க.”

“ஷட் அப் இடியட்.” எனக் கர்ஜித்தான் லோகஜித். சிறு பெண்ணின் உதாசீனம் அவனைக் கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. 

“ப்ச் சரியான அரவேக்காடா இருப்பான் போல.” என முணுமுணுத்தவாறு அவள் கடந்து சென்று விட, லோகியோ கொதித்துப் போனான்.

*************** 
விதார்த்தின் மனமோ ஹேமியின் வெறுப்பில் சுருண்டு போனது. சற்று நேரம் தனியாக தோட்டத்தின் அருகே வந்து நின்றவன் தென்றல் காற்றின் வருடலில் தன்னைத் திடப்படுத்த முயன்றான். 

சற்று நேரத்தில் மனம் சிறிது அமைதிப்பட, அவனுடைய விழிகளோ மீண்டும் தன்ஷியைத் தேடத் தொடங்கின. 

சற்றே தொலைவில் நின்ற லோகியைக் கண்டவன் புருவம் சுருக்கினான்.
 ‘இவனை யாரு இந்த பார்ட்டிக்கு இன்வைட் பண்ணது.?’ என சிந்தித்தவனுடைய பாதங்களோ தானாக தன்ஷிகா நிற்கும் இடம் நாடி விரைந்தன. 

தன்ஷிகாவோ யாரோ ஒரு புது நபருடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு வியந்தவன் அவளை நெருங்கினான்.
 அதே கணம் அவளுடைய பார்வை மங்குவதையும் அவளுடைய பேச்சு குளறலாக ஒலிப்பதையும் கண்டு புருவம் உயர்த்தியவன் அவளுடைய கரத்தில் இருந்த கிளாஸை சட்டெனப் பறித்தான். 

குளிர்பானம் என எண்ணி மதுபானத்தை எடுத்து அருந்தி விட்டாளோ என அஞ்சியவன் அவள் அருந்தியது குளிர்பானமா என அவசர அவசரமாக பரிசோதித்தான்.
அது அன்னாசிப் பழரசம் என்பது புரிய அவனுடைய முகத்திலோ நிம்மதி படர்ந்தது. 

அதே கணம் தன்ஷிகாவுடன் பேசிக் கொண்டிருந்த நபரோ சட்டென ஓடத் தொடங்க, எதுவோ சரியில்லை என உணர்ந்தவன் ஓடிச் செல்பவனை துரத்தத் தொடங்கினான்.

அங்கே அதீத சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த பாடலுக்கு அனைவரும் நடனம் ஆடிக் கொண்டிருக்க, விதார்த் கத்தியது யாருடைய காதையும் எட்டாது போனது.

விதார்த் தன்னைப் பார்த்து விலகி ஓடியவனைத் துரத்திச் செல்ல, அங்கே தனித்து நின்ற தன்ஷிகாவின் தோளின் மீது அழுத்தமாக கரத்தைப் போட்டவாறு அவளைத் தன்னோடு அழைத்துச் சென்றான் ஒருவன்.

அவள் குடித்த அன்னாசிச் சாற்றினுள் இருந்த போதையோ தன் வேலையைக் காட்டத் தொடங்க, அந்தப் புதியவனின் இழுப்புக்கு இசைந்து செல்லத் தொடங்கினாள் நம் நாயகி.

💜🧡🧡💜

தாமதமான பதிவுக்கு ரொம்ப ரொம்ப சாரி டியர்ஸ்..
இன்னும் டூ வீக்ஸ்ல ஃபுல் ப்ரீ ஆகிடுவேன்.. அதுவரைக்கும் ப்ளீஸ் அட்ஜஸ்ட் கரோ.
அடுத்த எபி இன்னைக்கே வரும்…

ப்ளீஸ் லைக்ஸ் கமெண்டஸ்
 பண்ணுங்க டியர்ஸ்..
உங்க கமெண்ட்ஸ்தான் எனக்கு பூஸ்ட்..

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *