புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?
சுயம் வரம் : 05
டிங் டிங் என்ற மணி ஓசை எழுப்பிய நொடி அங்காங்கு குழுமி இருந்த மாணவர்கள் சிலர் கூட்டம் கூட்டமாக பேசிக் கொண்டும் காலை உணவை மரத்திற்கு அடியில் வட்டமாக அமர்ந்து நண்பர்களோடு பகிர்ந்தளித்து கலகலவென்று பேசிக் கொண்டே உணவருந்திக் கொண்டிருக்க..
சில மாணவர்கள் கால் நடையாகவும் பள்ளிப் பேருந்திலும் வந்து இறங்கிக் கொண்டிருக்க…
பெல் அடித்ததும் எல்லோரும் தத்தமது வகுப்பறைக்குள் வேகமாக விரைந்து சென்று கொண்டு இருந்தனர்.
காலையில் பத்து மணிக்கு முதல் வகுப்பு தொடங்க இருந்தது.
அவினாசியில் அமைந்து இருக்கும் அந்த பிரபலமான பள்ளியில் எந்த வித வசதிகளுக்கும் குறைவில்லாத மாநிலத்தில் ஸ்டேட் ரேங்க் வாங்கிய பள்ளி.
படிப்பு மற்றும் விளையாட்டு இரண்டுக்குமே அதிகம் முக்கியத்துவம்.
அங்கு மொத்தம் நான்கு மாடிகள் அதில் இரண்டாவது மாடியில் மூன்று அறை தள்ளி இருந்த எட்டாம் வகுப்பு சி பிரிவில் சத்தம் சற்று அதிகமாகவே வந்தது.
அவ்வகுப்பில் இன்னும் நேரம் ஆகியும் ஆசிரியர் யாரும் வர வில்லை போலும்.
மாணவர்கள் அவர்களின் நண்பர் நண்பிகளுடன் கலகலத்துக் கொண்டு இருக்க..
அப்போது வாசலில் நின்று “சைலன்ஸ்” என்ற ஒற்றை கம்பிரமான குரல் அனைவரின் வாயையும் பசை போல் ஒட்டிற்று.
அந்த வகுப்பில் இருந்த எல்லா மாணவர்களும் வேகமாக இருக்கையில் இருந்து எழுந்து “குட் மோர்னிங் மேம்…” என்று சொல்ல..
அதற்க்கு சிறு தலை அசைப்பை மட்டும் கொடுத்து விட்டு.. “உக்காருங்க.” என்று சொல்லி விட்டு நாற்காலியில் அமர்ந்தவர்.. மெல்ல திரும்பி அனைவரயையும் லேசர் விழிகளால் ஆராய்ந்தார்.
“இன்னைக்கு கணக்கு வீட்டுப்பாடம் முடிக்காதவங்க எல்லோரும் எழுந்திரி” என்று சொல்லவே.. அங்கு இருந்த பாதி மாணவர்களுக்கு அல்லு விட்டு இருந்தது.
காரணம் இன்று கணக்கு வகுப்பு மதியத்துக்கு மேலே தான்.
திடுதிடுப்பு என்று கணக்கு வகுப்பு ஆசிரியை நிர்மலா வந்ததும் பாதி பேருக்கு பயத்தில் வியர்வை வழிந்தது.
வீட்டுப் பாடத்தை கேட்டவுடன் கண்கள் பீதியாகின.
வகுப்பில் எல்லோரும் எழுந்து நிற்க..
அவர்களுடன் பயத்தில் வெடவெடத்த கோழியாக தானும் எழுந்து நின்றாள் அவள் வெண்மதி.
அவள் எழுந்த நொடி வகுப்பில் பெரும்பாலானோருக்கு ஆச்சரியம்.
வெண்மதி கணக்கில் படு சுட்டி. கொடுத்த வேலையை நிறைவாக செய்து முடிப்பவள்.. வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவியும் கூட..
கடினமான கணக்குகளை கூட வீட்டிலே முடித்து விட்டு வருபவள் வகுப்பில் இருப்பவர்கள் மதியின் நோட்டை வாங்கி தான் பார்த்து எழுதுவார்கள்..அவளா இன்று எழுதாமல் வந்து இருக்கிறாள்..
மெல்ல மதியை திரும்பிப் பார்த்த ஆசிரியை புருவம் சுருக்கி..
என்ன மதி நீ ஏன் எழுந்து நிற்கிற? என்று வினவினார்.
“மேம்.. நான் நேத்து டோர்னமென்ட் போயிட்டு வரவே மணி பதினொன்று ஆகிடுச்சு மேம் அதான்…ன்..” என்று இலுக்க…
இயற்கையாகவே பயந்த சுபாவம் உடைய வெண்மதிக்கு ஆசிரியரின் பார்வை மேலும் திகில் ஊட்டியது.
இன்னைக்கு மதியம்குள்ள முடித்து என் டேபிளில் வை. என்று கடினமாக சொல்லியவர் “உட்கார்” என்று மூங்கில் குச்சியை மேஜையில் தட்டவும்..
“சாரி மேம்” என்றவள் உள்ளுக்குள் தோன்றிய சிறு நடுக்கத்துடன் இருக்கையில் அமர்ந்து விட்டாள்.
வீட்டுப்பாடம் முடித்து விட்டு வராத மற்ற நாற்பது மாணவ மாணவிகளுக்கும் அடி வெளுத்து எடுத்து விட்டார் கணக்கு ஆசிரியை நிர்மலா.
கணக்கு வகுப்பு முடியும் தருவாயில் இரண்டு மாணவிகள் வந்து மதி அக்காவை உடற்கல்வி ஆசிரியர் அழைப்பதாக வந்து சொல்லவே..
“மதி…”
“மேம்…”
“நீ மட்டும் கிளம்பு…மத்தவங்க இங்க கிளாசை கவனி”
அவள் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு அந்த மனைவிகளுடன் கிளம்பி சென்றாள்.
உடற்கல்வி ஆசிரியர் இருந்த அறைக்குள்.. “மே ஐ கம் இன் சார்…”
என்று பணிவாக அழைக்கவும்..
“எஸ்” என்று குரல் மட்டும் வந்தது.
உள்ளே வந்தவள் கண்டது அங்கு திடகாத்திரமாக ஆறடியில் இளம் அரும்பு மீசையில் நின்று இருந்த இளைஞனைத் தான். அவன் தான் மெல்ல திரும்பி அவனுக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த மூன்று மாணவிகளையும் பார்த்து சற்று வழிவிட்டு நின்றான்.
“வா மதி நாளைக்கு நீ இறுதி கட்டத்திற்கு தேர்வு ஆகி இருக்க..
அதனால் உனக்கு கொஞ்சம் பயிற்சியும் குறிப்பும் சொல்லித்தறேன் சரியா…?” என்றார் உடற்கல்வி ஆசிரியர்.
மதி மண்டையை மட்டும் ஆட்டினாள்.
பிறகு தான் எதோ யோசனை வந்தவராக.. “இன்னைக்கு நான் ஹெட் மாஸ்டர் கூட மீட்டிங் இருக்கு அதனால் என்ன பண்றது?”
அங்கு நின்று இருந்தவனை நோக்கி.. இன்னைக்கு நீ அவளுக்கு சொல்லி கொடு டா.. உனக்கும் நாளைக்கு பைனல் தானே…” என்க.
“ஓகே மாஸ்டர்…” என்று தலை அசைத்தவன் மெல்ல திரும்பி வெண்மதியைப் பார்த்தான்.
அவன் கண்களில் ஒரு நொடி மின்னல் தாக்கியது போல உடல் அதிர்ந்தது.
மறு நொடி தன்னை சமாளித்துக் கொண்டவன்..
“ஹலோ.. ஐ யம் அக்னி…வாட் அபோயுட் யூ..”
“மதி” என்றாள் மெல்லிய குரலில்.
“பைன்… என் பின்னாடி வா.”
அவளும் அவன் பின்னாடியே சென்றாள்.
விளையாட்டுத்திடல் மைதானத்தின் வரிசையாக போடப்பட்டு இருந்த இரும்பு பெஞ்சின் மேல் போய் அமர்ந்தவர்கள்.. விளையாட ஆயத்தம் ஆகினர்.
வெண்மதியின் வெள்ளை நிற சிர்பாய் முதலில் களம் இறங்கியது.
அக்னியும் அதற்க்கு சளைத்தவனில்லை என்பது போல் இரு அணியும் முதல் விளையாட்டிலே சற்று பலமாகவே மோதிக் கொண்டன.
அக்னி முதலில் சற்று அலட்சியமாகவே காய்களை நகர்த்தினான்.
எதிரில் விளையாடும் மதியின் தீவிரமான விளையாட்டைக் கண்டு அவனும் சற்று உற்சாகம் ஆகி தீவிரம் காட்ட ஆட்டம் சூடு பிடித்துக் கொண்டது.
மதியின் ஒவ்வொரு காய் நகர்த்தலையும் கண்டவன் மனதிற்குள் சற்று வியக்கவே செய்தான். அதன் ஊடே அந்த கேள்வியையும் தொடுத்தான்.. நீ எத்தனை வருஷமாக விளையாடுற…?”
நான் நான்கு வயது இருக்கும் போதில் இருந்தே… என்று வாசகத்தில் அதோடு முடித்து ஆட்டத்தில் கவனம் செலுத்த..
அவன் இமைகள் ஆச்சிரியத்தில் விரிந்தது.
அவள் என்ன தான் திறம்பட விளையாடினாலும் அங்காங்கு தென்பட்ட சிறு குறைகளை மனதில் வைத்துக் கொண்டான்.
இறுதியில் அக்னியே வென்றான்.
“அச்சோ.. என்று தலையில் கை வைத்துக் கொண்டவள்.. அக்னியை ஏறேடுத்து
“வாழ்த்துக்கள்…” என்றாள் புன்னகையுடன்.
“நீ நல்லா தான் விளையாடுற ஆனால் சின்ன சின்ன திருத்தம் மட்டும் செய்தால் போதும்… ஆட்டம் முக்கியம் தான் அதை சீக்கிரம் எதிர் அணியை முறியடிப்பதற்கான ஒரு பின் திட்டம் ஒன்றை மனதில் உருவாக்கி கிட்டே வரனும் அப்போ தான் ஜெயிக்க முடியும்…”
சரி என்று தலை அசைத்தவள்..
அடுத்த ஆட்டத்திற்கு இருவரும் தயார் ஆகினர்.
இப்போது போட்டியாக இல்லாமல் சில நுணுக்கங்களை மட்டும் போதித்தான் அக்னி.
அதை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொண்டவள் அடுத்து அடுத்து ஆடிய ஆட்டங்களில் அதை அவள் வெளிப்படுத்தவும் செய்தாள்.
மணி இரண்டை நெருங்கிக் கொண்டு இருக்க.. இருவருக்கும் இப்போது தான் நன்றாக பசித்தது போன்ற உணர்வே தோன்றிற்று.
ஆட்டத்தின் கவனம் செலுத்தியதில் பசியை மறந்து விட்டு இருந்தனர்.
“சரி நான் சாப்பிட போகட்டுமா?” என்றாள் வெண்மதி.
“ம்ம்… இன்னைக்கு அவ்ளோ தான் பயிற்சி.. நீ நல்லா பண்ணு நாளைக்கு” என்று வாழ்த்தி விட்டு அவனும் உணவு அருந்த கிளம்பி விட்டான்.
மதி தன் முன்னால் நடந்து போகிறவனையே வெறித்த வண்ணம் அவளை அறியாமல் நோக்கியவள் பின்ன என்ன நினைத்தாலோ அவளும் அவள் வகுப்பை நோக்கி சென்று விட்டாள்.
வகுப்ப்பிற்கு வந்தவபோது அங்கு குழுமி அவளின் சக மாணவர்கள் உணவு உண்டு கொண்டு இருக்க.. அவளின் தோழி இந்துஜா மட்டும் மதிக்காக காத்து கொண்டு இருந்தாள்.
இதை கண்டதும் மதி சிறு புன்னகைத்துக் கொண்டு அவளின் நண்பியின் தோளில் கையிட்டு.. “வாடி சாப்பிடலாம்…”
“ஹே ஏன்டி இவ்ளோ லேட்டு…லஞ்ச் டைம் முடியவே போகுது தெரியுமா?”
“சாரி டி… இப்போ தான் முடிஞ்சுது.. அதுவும் நீ சாப்பிட்டு முடித்து இருப்பேன்னு நினைச்சேன்..” சா..ரீ…ரீ. டீ என்றாள் மதி.
“நான் எப்ப டி உன்னை விட்டுட்டு சாப்பிட்டு இருக்கேன். வா சாப்பிடலாம்.
இன்னைக்கு நான் லெமன் சாதம் டி.. நீ?”
“நானு பிரியாணி கூடவே சில்லியும் டி..”
“பார்ரா பேசாமல் உங்க வீட்டுக்கே வந்துடலாம் டி நானு.. தினமும் எதாவது ஒரு ஸ்பெஷல் ஆக பண்ணுறாங்க டி உங்க வீட்ல..” என்று சொல்லிக்கொண்டு சில்லியை வாயில் திணித்தாள் அவள் தோழி இந்துஜா.
அவள் தலையை மெல்ல தட்டி விட்டு..”சாப்பிடு டி.. நான் சீக்கிரம் கணக்கு வீட்டுப்பாடம் வேற எழுதணும்.” என்று சொல்லிக்கொண்டே மளமளவென்று உணவை உண்டவள் கையை கழுவி விட்டு கணக்கு நோட்டை எடுத்து எழுத ஆரம்பித்து விட்டாள்.
அன்றைய பள்ளி நாட்கள் அடுத்தடுத்த வகுப்புகள் மாறி மாறி வந்து கழிய மாலை நான்கு மணிக்கு முடிந்து போயிற்று.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து இறங்கியவள்… நேராக குளியல் அறைக்குள் சென்று முகம் கை கால் கழுவி விட்டு.. லஞ்ச் பாக்ஸை கழுவி அதன் உரிய இடத்தில் வைத்தவள் சிறிது நேரம் குளிர் சாதனப்பெட்டில் இருந்த தின்பண்டங்கள் சிலவற்றை கொறித்து விட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தது விட்டாள்.
“செல்லம்” என்ற குரலில் அறைக்குள் வந்த தந்தையை திரும்பி பார்த்தவள்..
“அப்பா.. என்ன இன்னைக்கு இவ்ளோ சீக்கிரம் வந்துடீங்க…?” என்றாள் ஆச்சரிய பாவனையில்.
“இன்னைக்கு பெருசாக வேலை ஏதும் இல்லைம்மா.. நாளைக்கு தான் ஜப்பானில் இருந்து ஒரு புது கிலைன்ட் வராங்க.. நாளைக்கு எனக்கு வேலை ஜாஸ்தி டா செல்லம்.. பெங்களூர் போகிறேன்.” என்றார் அவள் கன்னத்தை பிடித்து..
“ஹும்…!!” என்று முகத்தை கோணியவளைக் கண்டவர்.. “நான் கண்டிப்பா சீக்கிரம் வந்து விடுவேன்.. இந்த ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடிஞ்சுடும் அதே சமயம் என் செல்லமும் செஸ்ஸில் முதலிடம் வந்து விடுவாள் எனக்கு டபுள் குஷி…!!” என்று சொல்லவும்..
அவளின் போலி கோபம் போய் சிரிப்பு இதழில் எட்டிப்பார்த்தது.
அதை கண்டவர் சிரித்துக் கொண்டு…” வாம்மா சாப்பிடலாம்..” என்று அழைத்து சென்று தன் கையால் ஊட்டியும் விட்டார். இது இவர்களுக்கு வழக்கம் தான் போலும்.
இங்கே மதியிடம் இருந்து கிளம்பிய அக்னி அதன் பிறகு அவளைப் பற்றி சிந்திக்கவே இல்லை.
இவர்களின் காதலின் தொடக்கபுள்ளியாக இருவரையும் ஒரு கோட்டில் இணைத்தது விதி.
