புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

சுயம் வரம் : 06

மறுநாள் காலை கதிரவன் பூமியில் தன் செந்நிறக் கதிர்களைப் பரப்பி கொண்டிருக்க.. மணி ஏழு என்றதும் செட் செய்து வைத்து இருந்த  அலாரம் ஒலி எழுப்பியது.

அதில் தூக்கம் கலைந்த வெண்மதி.. இமைகளை பிரித்து தனக்கு எதிரில் புகைப்படத்தில் சிரித்த முகத்துடன் நின்று இருந்த தன் தாயின் முகத்தில் விழித்தவள்.. மெல்ல கீழ் இறங்கி காலை கடன்களை முடித்து விட்டு குளித்து உடை மாற்றி தயார் ஆகி வெளியே வந்தாள்.

“என்ன டா செல்லம்.. இன்னைக்கு சீக்கிரம் ரெடி ஆகிட்ட…மணி எட்டு கூட ஆகலையே..?” 

“அப்போ இன்னைக்கு இறுதிப்போட்டி இருக்கு… மறந்துடீங்களா?” 

அதெப்படி மறப்பேன்.. வேலைக்காரம்மா வர மணி எட்டரை ஆகும் அதற்க்கு முன்னாடியே உனக்கு சமைத்து வைத்து விட்டேன் பாரு..என்று உணவு மேஜையை திசை காட்ட..

“சரிப்பா…சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பலாம்” என்று அவசரப்படுத்த..

“ஆமா செல்லம்!!.. எனக்கும் பிளைட்டுக்கு நேரம் ஆகுது. நான் திரும்பி வரவே மணி பத்தை கடந்து விடும்.. என்று சொல்லி விட்டு இருவரும் வேகமாக கிளம்பினர்.

வெண்மதியின் அப்பா பிரபாகரன் வேகமாக வண்டியை எடுத்துக் கொண்டு மதிக்கு போட்டி நடக்கும் பள்ளிக்கு சென்று விட்டுவிட்டு..
“ஆல் தீ பெஸ்ட் செல்லம்” என்று நெற்றியில் முத்தம் இட்டு..
“நீ பத்திரமாக வீட்டுக்கு சீக்கிரம் போய்விடு என்ன?”

“அதெல்லாம் நான் பார்த்துகிறேன் அப்பா.. என்று அவள் முதுகை மெதுவாக காரை நோக்கி தள்ளி விட்டவள்.. பட்டென்று பறந்து சென்று விட்டாள் வண்ணத்துப்பூச்சியாக.
  
துள்ளி குதித்து ஓடும் தன் மகளைக் கண்ட தகப்பனின் கண்கள் ஆனந்தத்தில் சிரித்தன. 
மெல்ல திரும்பி  கோவை விமான நிலையம் நோக்கி அவர் கார் சென்று விட்டது.

வெண்மதி வேகமாக நடந்து சென்று அங்கு இருந்த பெரிய கரும்பலகையை கண்டு அங்கு தனக்கு ஒதுக்கப்பட்டு இருந்த அறையை கண்களால் துழாவினாள்.
இதோ இங்க இருக்கு என்று கண்டு பிடித்தவுடன் சிறு மகிழ்ச்சி மனதில் முகிழ்த்தது.
அதன் வெளிப்பாடாக சிறு புன்னகையுடன் அந்த ஹால் நம்பரை உள்ளங்கையில்  
பேனாவால் எழுதி விட்டு.. அதை நோக்கி சென்று கொண்டு இருக்க.. எதிரில் இருந்த ஒரு மாணவன் மேல் இடித்து விட..
“சாரி..!! சாரி…!!” என்று அவசர மன்னிப்பு கேட்டு விலக முற்பட்டவளைத் தடுத்து..
அவள் கையை பிடித்து வம்பு இழுத்தான்.
“என்ன ஆப்பிள் பழம் மாறி தக தன்னு இருக்கியே இன்னொரு தடவை இடிச்சிட்டு போறது…இல்லை நான் இடிக்கவா?”

மதிக்கு பயத்தில் அழுகை பீறிட்டு வந்து விட்டது.
“ப்ளீஸ் என்ன விட்டுடுங்க..” என்று கெஞ்சியவள் பயத்தில் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்.

அவள் கையைப் பிடித்து வம்பு செய்த போட்டிக்காக வந்து இருந்த மாணவனுக்கோ.. சை சரியான அழுமூஞ்சியாக இருக்கும் போல இருக்கு என்று மனதில் எரிச்சல் மூண்டாலும் அவளின் பலவீனத்தை தனக்கு சாதாகமாக பயன் படுத்த எண்ணி மேலும் நெருங்க முயல.. அப்போது அவன் முகத்தில் ஓங்கி குத்து விட்டான் அக்னி.

அக்னியை கண்டதும் தெய்வம் அந்நேரம் தனக்கு நேரில் வந்து உதவி செய்வது போல் ஒரு பிரமை தோன்றி அக்னியின் பின்னால் சென்று மறைந்து கொண்டாள்.

அக்னியின் ஒற்றைத் தீப்பார்வை அந்த மாணவனின் நெஞ்சில் நீர் வற்றிப் போய் விட்டது. மெல்ல திரும்பிப் பார்க்காமல் அவன் ஓடி விட.. திரும்பி மதியைப் பார்த்தவன்.. “போ முன்னாடி நட.” என்று மட்டும் சொன்னான்.

அவள் மெல்ல நடந்து செல்லவும்.. அவனும் பின்னாடியே நடந்து சென்று அருகில் இருந்த குடிநீர் என்று எழுதப்பட்டு இருந்த வாசகத்தை கண்டு அந்த தொட்டியில் இருந்த பைபில் இருந்த நீரை  போத்தலில் நிரப்பிக் கொண்டு அவள் முன்  நீட்டினான். 
 
அப்போது தான் மரத்திற்கு அடியில் போடப்பட்டு இருந்த பெஞ்சில் அமர்ந்தவள்..
தன்  முன் ஒரு கரம் நீர் போத்தலை நீட்டுவதைக் கண்டு அண்ணாந்து பார்த்தாள்.

“இந்தா குடி..” என்றான் அக்னி. 
அதனை வாங்கியவள் மடக்மடக்கென்று முழுவதையும் அருந்தி விட்டு.. “இன்னும் கொஞ்சம் வேணும்?” என்க.

அவன் முகம் சற்று கடுப்பைக் காட்டியது.
“இவளுக்கு நான் என்ன எடுபிடியா? போனால் போகுது என்று தண்ணீர் பிடிச்சு கொண்டு வந்தால் இன்னும் நம்மளை வேலை வாங்குறாளே…” என்று மனதில் எழுந்த கடுப்பையும் மீறி அவளுக்காக செய்தான்.

இப்போது வெண்மதியிடம் அழுகை நீங்கி விசும்பல் மட்டுமே ஒலித்தது.
கையில் கர்சீப் இல்லாததால் தனது டீ ஷர்ட்டை தூக்கி துடைக்க.. அப்போது அவள் வெண்ணிற இடையை கண்டவன்.. “ஹே லூசு.. இப்படியா பொது இடத்தில் பண்ணுவ” என்று கடிந்து கொண்டே.. தன் பின் பாக்கெட்டில் இருந்த கர்சிப்பை எடுத்து அவளிடம் கொடுத்தான்.. 
தன்னிடம் உள்ள ஒரு சிறு பொருளையும் பங்களிக்க விரும்பாதவன்.. அவனின் ஒவ்வொரு சிறு சிறு பொருளும் அவள் வசம் ஆகிக் கொண்டு இருந்தன. 
அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டவள்.. தன் முகத்தை நன்கு துடைத்துக் கொண்டு திருப்பிக் கொடுக்க..

“வேண்டாம்… உனக்கு இன்னைக்கு தேவைப்படும். சீக்கிரம் அழுகையை நிப்பாட்டி விட்டு போய் போட்டியில் ஜெயிச்சு நம்ம பள்ளி பெயரை காப்பாற்றுகிற வழியைப் பார்.. என்ன புருஞ்சுதா?” என்று புருவத்தை உயர்த்தி கேட்கவும்..

புரிந்ததற்கு அறிகுறியாக ஆம் என்று தலை தானாக ஆடியது.

“குட்….!!” என்றவன் மேலும் உனக்கு எத்தனை மணிக்கு போட்டி ஆரம்பம் ஆகுது?”

“காலை பத்தரை மணிக்கு..அதில் ஜெயிச்ச பிறகு மதியம் மூன்று மணிக்கு அப்பறம் நான் கப்பை வாங்கி விட்டு வந்து விடுவேன்.

அவள் சொன்னதைக் கேட்டு இது வெறும் நம்பிக்கை போல் அல்லாது சற்று அதீத நம்பிக்கையாகவே அவனுக்கு தோன்றினாலும்  அவளின் இந்த உறுதி நான் தான் ஜெயிப்பேன் என்ற எண்ணம் அவனுக்கு சற்று அவளிடம் பிடித்து தான் இருந்தது.

அவனுக்கான இறுதி கட்ட போட்டிக்கான நேரம் வந்துவிடவே அவன் கிளம்பி அக்னிக்கு ஒதுக்கபட்ட ஹாலுக்குள் சென்று விட்டான். அவன் போவத்ற்கு முன்பே அவளிடம் எதற்கும் பயப்படாதே.. இங்கு தான் நான் இருப்பேன் சீக்கிரம் வந்து விடுவேன் என்று கொஞ்சம் தைரியம் சொல்லிவிட்டுத் தான் கிளம்பி இருந்தான்.

அவள் அவன் சொன்னதை எல்லாம் பூம் பூம் மாடு மாதிரி தலை ஆட்டவும்..
இவனுக்கு இப்படி ஒரு பயந்தான்கொல்லி தனியாக இருந்து விடுவாளா என்ற சிறு அச்சம் இருக்கத்தான் செய்தது. பின்ன காரணம் இல்லாமலா இந்த சிறு பெண்ணுக்கு இவன் இவ்வளவும் செய்து கொண்டு இருக்கிறான்.
அவர்களின் பள்ளியில் செஸ் போட்டியில் இறுதியில் அக்னியும் வெண்மதியும் மட்டுமே தேர்வு ஆகி இருந்தனர்.
அவர்களின் உடற்கல்வி ஆசிரியரோ..இதே நாளில் வேறொரு  பள்ளியில் மட்டைப் பந்து போட்டியும் நடைப் பெற இருப்பதால் அவர் அங்கு சென்று விட.. மதியம் உணவு அருந்த அவன் சென்ற பொது அக்னியை தனிப்பட்ட முறையில் அழைத்தவரோ … உன் கூட இப்போ  பயிற்சிக்கு அனுப்பிய வெண்மதி நாளைக்கு
அந்த போட்டிக்கு வருவாள்.. அவள் வீடு போய் பத்திரமாக சேருவது உன் பொறுப்பு அக்னி என்று கையை பிடித்துக் கொண்டு உதவி கேட்கவும் மறுக்கமுடியவில்லை அவனால்.  

அவளிடம் சொல்லிவிட்டு ஹாலுக்குள் நுழைந்தவன்.. மதியின் சிந்தனைகளை ஒதுக்கி விட்டு.. போட்டிக்கு தயார் ஆனான்.

இங்கு தனித்து விடப்பட மதி.. எங்கே அந்த மாணவன் திரும்பி வந்து விடுவானோ என்கிற பயத்தில் சுற்றும் முற்றும் கண்களை ஓடவிட.. ஒரு வித பயம் நெஞ்சுக்குழியில் இருந்து கொண்டே தான் இருந்தது. அதை மறக்கவே 
தன் பையில் வைத்து இருந்த சிறு புத்தகத்தை எடுத்து வாசித்துக் கொண்டு இருந்தவள் அதில் பாதி புத்தகம்  முடிந்த பிறகு அக்னியும் அவளை நோக்கி வந்து விட்டான்.

“ஒன்னும் பிரச்சனையை இல்லியே…” என்பது அவனின் முதல் கேள்வி.

“இல்லை” என்று தலை அசைத்ததும்.. “மணி இப்போவே பத்தே கால் ஆகி விட்டது..
நீ கிளம்பு.” என்கவும்..

“ம்ம்..போட்டி என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.

“நீ என்ன நினைக்குற?”  

“ஜெயிச்சிருப்பிங்க” 

“பின்ன ஏன் கேக்குற? கிளம்பு…”

அவளும் சென்று திரும்பி வரும்போது அந்த ஆட்டத்தில் வென்று தான் வந்து இருந்தாள். அதன் காரணமாகவே அவள் முகத்தில் மீண்டும் மகிழ்ச்சி வெள்ளம் கரைப்புரண்டு ஓடியது.
வெளியே நின்று இருந்த அக்னி அவளின் முகத்தை வைத்தேக் கண்டு பிடித்து விட்டான்.

“சரி சாப்பிடலாம்.. எனக்கு மதிய நேரம் போட்டி ஆரம்பம் ஆகுது.. அதனால் நான் சீக்கிரம் சாப்பிடப் போகலாம்னு இருக்கேன் நீ?”



“எனக்கும் பசிக்குது. நானும் சாப்பிட வரேன்.” என்று சொல்லி விட்டு இருவரும் கேண்டீனை நோக்கி வழிக் கேட்டுக் கொண்டே நடந்தனர்.

கேண்டீனில் மதிய உணவும் முடிந்தாயிற்று.. அவன் பைனல் போட்டிக்கு சென்று விட மதி மீதி இருந்த புத்தகத்தை முடித்தும் விட்டாள்.. ஆனால் அவன் இன்னும் வர வில்லை. அவனுக்கு இன்னும் முடியவில்லை போலும்.. அவளுக்கும் போட்டிக்கான நேரம் வந்துவிட அவளும் சென்று விட்டாள்.. 
கடைசியில் இருவருமே வெற்றி வாகை சூடி இருந்தனர்.

போட்டி முடிந்ததும் வெளியே வந்த வெண்மதி.. பதட்ட நிலையில்  தன்னை நோக்கி வராமல் வேறு எங்கோ திரும்பி செல்வதைப் பார்த்த அக்னி புருவ முடிச்சுடன் திரும்பிப் பார்த்தவன் யோசனியுடன் அவள் பின்னாடியே சென்றான்.

அவள் சென்றது பெண்கள் கழிப்பறைக்கு தான்.. அதை கண்டவனுக்கு.. ச்சை இதை எல்லாம் என்னிடம் சொல்லி விட்டா வருவாள் இதற்க்கு போய் பின்னாடியே வந்து இருக்கிறோமே.. என்று தலையில் அடித்துக் கொள்ள..

அப்போது வெளியில் வந்த வெண்மதியின் முகத்தில் வடிந்த வியர்வையும் கண்களில் வடிந்த கண்ணீரும் கண்டவன்.. “ஹே என்ன ஆச்சு?” என்று அருகில் வந்து கேட்க..

அவள் தலையை குனிந்து கொண்டு மேலும் அழுகவும்.. செஸ் ஆட்டத்தில் தோற்று விட்டாள் போல என்று தான் நினைத்தான்..
சரி விடு அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம்..சிறுப் பெண் என்று ஆறுதல் சொல்ல வாய் எடுக்க..
அங்கு ஒலிப்பெருக்கியில் அந்நேரம் சரியாக வெண்மதி செஸ் போட்டியில் முதலிடம் என்றும் அவர்கள் பள்ளியின் பெயரையும் வாசித்துக் கொண்டு இருக்க..

இப்போது அக்னி திரும்பி வெண்மதியை விசித்திரமாகப் பார்த்தான்.
அவன் பார்வை எதையும் பொருட்படுத்தாமல் அழுது கொண்டே இருக்க..
அதில் சினம் ஏற.. எப்படியோ போய் தொலை என்று சொல்லி விட்டு நகர முற்படும் போது அவன் கைகளை இறுக்கிப் பிடித்து தடுத்த்தாள் வெண்மதி.
அதில் அக்னியின் இதயம் நின்று துடித்தது.

இருவர் இதுவரை ஒன்றாகவே இருந்தாலும் சிறு தீண்டல் கூட பட்டது இல்லை..
அவளின் விடாபிடியான கையை கண்டவன் சற்று தடுமாறித் தான் போனான்.அவளின் இறுகிய பிடியில் சொல்வரியாத உணர்வொன்று தாக்கியது அக்னியை.

முதல் மின்னல் பார்வை இதயத்தை தொட்டது..
இரண்டாம் தீண்டல் அவன் இதயத்தை உலுக்கியது..

என்ன நேர்ந்து இருக்கும்?



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *