புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?
சுயம் வரம் : 11
அன்று அக்னி வீட்டிற்கு வந்து பார்த்து விட்டுப் போனதோடு சரி.
அதன் பின் அவனை காண அவளுக்கு எந்த வாய்ப்பும் கிட்டவில்லை.
அக்னியின் முகம் அவள் மனகண்ணில் வந்து செல்லும் போதெல்லாம் முகத்தில் ஒரு வித பரவசம் பரவி உடல் முழுவதும் சில்லிற்று போய்விடும் அவளுக்கு.
இது என்ன மாதிரியான உணர்வு என்று தெரியாமல் திணறியவள்..
அவனை நினைக்க வேண்டும் என்று உந்தித் தள்ளும் மனதை மட்டும் உதறித் தள்ளாமல் அவனின் காதல் அலைகள் நுழைய இவளின் இதய
வாசல் அவனை இரு கை விரித்து திறந்து விட்டது போலும்.
சதாக் காலமும் அவனின் நினைவு அலைகளிலே மயங்கி கிடந்தவளுக்கு சுற்றம் யாமும் மறந்துப் போக அக்னி தானும் மட்டுமே இந்த உலகில் ஜீவிப்பதாக கற்பனை செய்து கொண்டு பொழுதை கழிக்க..
ஹார்மோனின் அபிரிவித சுரப்பில் ஏற்கனவே பருவக்காய்ச்சல் கொண்டதன் விளைவாக இன்று முகத்தில் அங்காங்கு பருக்கள் வந்து அக்னியின் மீதான ஈர்ப்பு விசையின் அடையாளங்களைப் பொருத்தின.
எப்போதடா பள்ளிக்குப் போவோம்.. அக்னியை மீண்டும் சந்திக்கலாம் என்ற கனவுக் கோட்டைகளுடன் உழன்று கொண்டு இருந்தவள் ஒரு வழியாக ஒன்னரை வாரம் கழிந்த பிறகு தான் மீண்டும் பள்ளிக்கு வந்தாள் வெண்மதி.
அன்று வெண்மதியின் தந்தை பிரபாகரன் தான் தன் காரிலே அழைத்து வந்து பள்ளியில் அவளை விட்டுவிட்டு சென்று விட்டார்.
வாசலில் இறங்கிய அடுத்த நொடி அவள் கண்கள் அவனைத் தான் தேடி அங்கும் இங்கும் அலைப் பாய்ந்தது.
வெண்மதியின் கால்கள் அக்னியின் வகுப்பை நோக்கி அனிச்சையாக நடக்க.. வாசல் வரை வந்து விட்டாள்..
அவளின் கண்கள் அக்னி இருக்கிறானா என்று ஆர்வமுடன் எட்டிப்பார்க்கவும்..
இல்லை என்ற நொடி ஏமாற்றம் பரவ, முகம் கூம்பிப்போய் விட்டது.
அப்போது பின்னால் நின்ற ஒருவனின் கரம் மெல்ல அவள் தோளைத் தொடவும்..
அக்னி என்ற ஆர்வத்தில் திரும்பிப் பார்க்க அங்கு நின்று இருந்தான் கிருஷ்ணா.
“என்ன டி…? உன் வகுப்புக்கு போக வேண்டியது தானே…?”
இல்ல..அது வந்து.. என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறியவளின் கைகள் சிறிது நடுங்கக் கூட செய்தன.
“என்ன வந்து போயின்னுட்டு இருக்க கிளம்பு இங்கு இருந்து முதலில்…” என்று அவன் உருட்டி மிரட்டி விரட்ட..
“டேய் அவளை ஏன்டா இப்படி திட்டுற…?” என்றான் அவன் நண்பன் பிரியன்.
“அதெல்லாம் உனக்கு சொன்னால் புரியாது மச்சி.. நீ கொஞ்சம் நேரம் சும்மா இரு.” என்று அவனை அடக்கியவன் இவளிடம் திரும்பி..
“இன்னும் இங்க என்னப் பண்ணிட்டு இருக்க…?”
அவள் எதுவும் சொல்லாமல் தளர்ந்த நடையுடன் சென்றுவிட்டாள். அவளுக்கு அவள் இங்கிருந்து தப்பித்ததால் போதும் என்ற எண்ணம் தான் இருந்தது.
இயற்கையாகவே பயந்த சுபாவம் கொண்ட மதி.. கிருஷ்ணாவைப் பார்த்ததும் தான் இங்கு அக்னியைப் பார்க்க வந்தது அவனுக்கு தெரிந்துவிடுமோ என்கிற அச்சம் தோன்ற அவன் கேட்டக் கேள்விக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்தாள்.
இங்கு இருந்து கிளம்புவதே மேல் என்று தோன்ற அவசர அவரமாக அவளின் வகுப்புக்குள் சென்று விட்டாள்.
வகுப்புக்குள் வந்து கடைசி பெஞ்சில் வந்து அமர்ந்தனர் கிருஷ்ணாவும் பிரியனும்.
“மச்சி பாவம் டா ரொம்ப நாள் கழிச்சு இப்போ தான் அவ கிளாஸுக்கு கூடப் போகாமல் உன்னைப் பார்க்கத்தான் வந்து இருக்காள் அதைக் கூட நீ புரிஞ்சுகாம இப்படி கோவமாக பேசிட்டியே…?”
“என்னடா பண்ண சொல்லுற? அன்னைக்கு அவள் சடங்கு அப்போக் கூட நிறைய பேர் என்னையும் அவளையும் தான் வச்சுப் பேசினாங்க. எங்க அம்மாவிற்கு கூட அந்த எண்ணம் தான் இருக்கு.
இப்போ மதியோட நடவடிக்கை வேற சற்று வித்தியாசமாக இருக்கு..”
அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைடா…” என்றான் பிரியன்.
“ஏன்டா…? இதற்கு முன்னாடி மதி நம்ம வகுப்பு பக்கம் என்னைக்காவது வந்து இருக்காளா சொல்லு…?”
ப்ரியனின் தலை “இல்லை” என்று ஆடியது.
“இன்னைக்கு ஏன்டா என்னைத் தேடி வந்து இருக்கா?”
“பார்த்து ரொம்ப நாள் ஆச்சுன்னு வந்து இருப்பா டா” என்று பிரியன் சமாதனம் சொன்னான்.
“இல்லை மச்சி..அவளுக்காக நான் உயிரையும் கொடுப்பேன் ஆனால் ஒரு நண்பனாக. சுத்தி இருக்கவங்க எதாவது பேசி அவள் மனசை கலைச்சி அது வேறு மாதிரி ஆகிடக்கூடாதுன்னு நான் தெளிவாக இருக்கேன்.” என்று சொன்னவனின் கண்கள் வேதனையை அப்பட்டமாக காட்டியது.
கிருஷ்ணன் அறியாத ஒன்று.. மதி அக்னிகாக தான் அங்கு வந்தாள் என்று. மதியின் மனதை அவன் அறியும் போது கிருஷ்ணன் தன் உயிர் தோழியின் உணர்வைப் புரிந்து கொள்வானா…?
இங்கு பள்ளி முதல்வரின் அறையில் கடிதத்தில் ஒப்புதல் வாங்கிக் கொண்டு இருந்தான் அக்னி.
வகுப்புக்கு சென்ற மதி இந்துஜாவின் அருகில் சென்று அமர்ந்தவள்..
அவள் தோளில் சாய்ந்து கொண்டு முகம் எங்கும் சோகம் அப்ப..
தலை சாய்ந்து இமைகளை மூடினாள்.
“என்ன ஆச்சு…?” என்ற இந்துஜாவின் குரலுக்கு அவளிடம் எந்த பதிலும் இல்லை.
திரும்ப திரும்பக் கேட்டு அவளைத் தொல்லைப் பண்ண வேண்டாம் என்று எண்ணியவள்.. அவள் முகத்தையே பார்த்துக்கொண்டே இருந்தாள்.
மதியின் விழிகளில் மூடிய இமைகளில் இருந்து சொட்டாக கண்ணீர் வடிய..
என்ன மதி என்று அக்கறையுடன் அவளை உலுக்கிக் கேட்டாள் இந்துஜா.
அவளின் உலுக்கலில் தான் இமைப் பிரித்தவள் தன் நண்பியிடம் அக்னியைப் பற்றி சொல்லாமல் மறைத்து அம்மா நியாபகம் டி என்று பொய்யுரைத்து விட்டு மீண்டும் தலை சாய்த்துக் கொண்டாள்.
மதிக்கு அவளின் அம்மா நியாபகம் வந்தால் சோகமாகி விடுவாள் என்பதை உணர்ந்தே இருந்தாள் இந்துஜா. அதனாலே மேலும் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தவள் மதியின் முதுகை ஆதுரமாக தடவி விட்டாள்.
கிருஷ்ணா எப்படி அவளுக்கு சிறு வயதில் இருந்து தெரியுமோ அதுப் போலத் தான் இந்துஜாவும் ஒன்றாம் வகுப்பில் இருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். இதுவரை இருவரும் எதையும் மறைத்து இல்லை.
எது செய்தாலும் அது கண்டிப்பாக மற்றொருவருக்கு தெரியாமல் இருக்காது..
அப்படி இருக்க மதி முதன் முதலாக அக்னியின் மேல் கொண்ட உணர்வை இந்துஜாவிடம் முதல் முறையாக மறைத்து இருந்தாள்.
இது இந்துஜாவிற்கு தெரியவரும் போது அவள் தோழி தன்னிடம் மறைத்தது கண்டு நெஞ்சு புண் படும் அல்லவா..
இப்படியே மணித்துளிகள் சிறிது சிறிதாக கழிய..இன்றைய பள்ளி முடியும் நேரமும் ஒரு வழியாக வந்தாயிற்று.
தத்தமது வகுப்பறையை விட்டு மாணவர்கள் வீட்டிற்கு நடந்தும் பள்ளிப் பேருந்திலும் வேகமாக நடந்து கொண்டு இருக்கும் போதே வானத்தில் இருந்து சாரல் வீசத் தொடங்கி இருந்தது.
வருண பகவான் தன் மும்மாரிகளைப் பொழிய தொடங்கி இருக்க..
இந்துஜா தினமும் பள்ளிப் பேருந்தில் தான் செல்வாள் என்பதால் அவள் வெண்மதியிடம்…” எனக்கு நேரம் ஆகிடுச்சு மதி…பஸ் எடுத்துடுவாங்க.. அங்கிள் வந்துடுவாங்க தானே…?” என்று வினவவும்..
“அதெல்லாம் பிரச்சனையையே இல்ல…நான் சமாளித்துக்கொள்வேன்.. இங்கு தான் இத்தனைப் பேர் இருக்காங்களே.. என்று சுற்றும் முற்றும் நின்ற ஆட்களைக் காட்டவும்..
சரி டி… நீ பத்திரமாக போய் விடு. உன் வீட்டுக்கு போனதும் எனக்கு போன் பண்ணு சரியா…?” என்று ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டே கிளம்பினாள் அவளின் அன்புத் தோழி.
ம்ம் என்றவளுக்கு உள்ளுக்குள் தனக்கு தெரிந்தவர்கள் சுற்றி யாரும் இல்லாததால் தனிமையில் நிற்பது சற்று அவஸ்தையாகத் தான் இருந்தது.
சரி இங்கயே நிற்க வேண்டாம் என்று எண்ணியவள்.. பள்ளியில் நடத்தப்படும் காண்டீனுக்கு சென்று எதாவது கொறிக்க வாங்கலாம் என்று தோன்றவும்.. மீண்டும் உள்ளே வந்து படிக்கட்டு வழியாக ஏறி அந்தப் பக்கம் சென்று கேண்டீனை அடைந்தவள்.. அது பூட்டி இருப்பதைக் கண்டு சற்று ஏமாற்றத்துடன் வெளியே வரும் போது ஜோர் என்று மழை பொழிய
ஆரம்பித்து இருந்தது. “அய்யோ இது வேறயா…?” என்று புலம்பியவளுக்கு
இனி வேறு வழி இல்லை. தந்தை வேறு இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவார் என்பதால் மழை பெய்ந்து கொண்டு இருப்பதைக் கூட புறக்கணித்து வேகமாக ஓட முயல அவளைத் தாங்கிப் பிடித்து தடுத்தது ஒரு கரம்.
அந்த கரத்தின் சொந்தக்காரரை திரும்பிப் பார்க்கும் பொது தான் தெரிந்தது
அவள் காலையில் இருந்து எதிர்ப் பார்த்து ஏமார்ந்து போன அக்னி தான் என்று.
அவனை அங்கு அவள் சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை என்பதால் கொஞ்சம் ஆனந்த அதிர்ச்சியே அடைந்தாள்.
இவர்கள் இருவரும் மழைக்கு சற்று ஒதுங்கித் தான் நின்றாலும்.. காற்றடித்து வீசிய சாரல் கொஞ்சம் அக்னியை நனைத்து இருந்தது.
ஆம்… மழை சாரல் அவர்களின் பக்கம் வீசும் போதே மதியை அவன் பக்கம் இழுத்துக் கொண்டு அவள் மேல் தெறிக்காதபடி அரணாக நின்றான்.
காண்டீனுக்கு வெளியில் இருக்கும் பெஞ்சின் மேல் போய் அமர்ந்தாள் வெண்மதி.
அவனுக்கு அக்னியைப் பார்த்த போது அவ்ளோ மகிழ்ச்சி.
அதை அவள் முகமும் காட்டியது.
அவள் பக்கத்தில் அமராமல் சற்று தள்ளி நின்று அமர்ந்தவன்
அவளின் முகத்தை ஏறிட்டுப் பார்த்த அக்னிக்கு.. அவளின் சந்தோஷத்திற்கான காரணத்தை அறிந்தே இருந்தாலும் அவளைப் பார்க்கும் போது அவனுக்கு பாவாமாகவே இருந்தது.
மெல்ல வரவழைக்கப் பட்ட சிரிப்புடன்.. தன் பையில் இருந்த சாக்லேட்டை எடுத்து அவளிடம் நீட்ட..
அதை அவள் வாங்க மறுக்கவில்லை. முதன் முதலில் அவனிடம் இருந்து ஒரு பொருள் என்றவுடன் ஒரு குதுகலம் ஒட்டிக்கொண்டது. மெல்ல கையை நீட்டி வாங்கினாள். அப்போது மெல்லியதாக ஒரு உரசல் படவே பட்டென்று கையை எடுத்துக் கொண்டான் அக்னி.
அவள் அதை சாப்பிடாமல் பைக்குள் எடுத்து வைக்கவும்..
அவன் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தான்.
இருவரின் அமைதி நெடுநேரம் நீடிக்கவில்லை.
கனத்த மழையின் இடையே இடி ஒன்று இடிக்கவும்… ஆ என்று அலறினாள் வெண்மதி அக்னியின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் இரண்டாம் முறையாக.
அதைப் பார்த்தவன் ஏதோ பேச வாய் எடுப்பதற்குள் மதி என்ற சத்தமும் கொஞ்சம் தூரத்தில் இருந்து ஒலித்தது.
அவளின் அப்பாவே தான். ரெயின்கோட் அணிந்து அவளுக்கும் ஒன்றை எடுத்துக் கையில் வைத்து இருந்தார்.
அக்னி தான் முதலில் அவரை கவனித்து கை அசைக்க.. நானே வரேன் நீங்க அங்கேயே இருங்க.. என்று சொல்லிக் கொண்டு நடந்து வந்தார்.
அப்பொழுதும் மதி அக்னியின் கையை விடவில்லை.
மதியின் அருகில் வந்தவருக்கு தன் மகள் அக்னியின் கையைப் பிடித்துக் கொண்டு இருப்பது அவர் கண்ணோட்டத்தில் ஏதும் தவறாகப் பதியவில்லை. காரணம் அன்று அவன் தானே எனக்கு என்ன…? என்று யோசிக்காமல் வீடு வரை மதியை பத்திரமாக கூட்டிட்டு வந்து சேர்த்தான்.
அன்று அவருக்கு போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. அந்த நேரத்திலும் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை தன் வீட்டில் இருந்த லேண்ட்லைனிலும் முயற்சி செய்து கொண்டு இருந்திருக்கிறான்.
அதனாலே அவன் மேல் அவருக்கு நன்மதிப்பும் நன்றி உணர்ச்சியும் ஏற்பட்டு இருந்தது.
“ரொம்ப நன்றி தம்பி.. என் மகளை கூட இருந்து பார்த்துக் கொண்டதற்கு.”
“இல்ல சார்.. நான் ரெஸ்ட்ரூம் போக வந்தேன் அப்போ தான் தனியாக நின்று கொண்டு இருந்த உங்கள் பெண்ணை பார்த்தேன்.. மழையும் அந்நேரம் ஜோராக இருந்ததால் எங்களால் இங்கு இருந்து நகரமுடிய வில்லை..” என்று அவசரவிளக்கமும் கொடுத்து விட்டான்.
“புரியுது தம்பி” என்று சொல்லியவருக்கு நன்றாகவே புரிந்தது அவர் தப்பாக எண்ணி விடக் கூடாது என்று..
மதியின் கையை பிடித்து..”வா செல்லம் போகலாம்.” என்று சொல்லவும்..
“சரிப்பா” என்று தலை அசைத்தவள் தன் முகத்தை கர்சீப்பால் ஒத்தி எடுத்தாள். அப்போது தான் கவனித்தான் அக்னி.. இந்த கர்சிப் அன்று அவன் கொடுத்தது என்று.
அவள் முகத்தையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்து தன் கண்களில் நிரப்பிக் கொண்டான்.
“மன்னிச்சுடுங்க தம்பி… அன்னைக்கு என் மகளுக்காக அவளோ உதவி செய்தீங்க.. ஆனால் நீங்க திரும்பி எப்படி வீட்டுக்குப் போவிங்கன்னு கூட யோசிக்கலை.. வெறும் கையோடு அனுப்பி விட்டேன்..” என்று சொல்லவும்..
“இஸ் ஓகே அங்கிள்.. இதில் என்ன இருக்கு” என்று இதை பெரிது படுத்தாவன் போலத்தான் பேசினான்.
அவனின் பேச்சின் தன்மையில் கவரப்பட்ட பிரபாகரனுக்கு அவன் மேல் மதிப்பு கூடியது.
“இப்போ வேணாம் நான் உங்களை உங்க வீட்டில் விட்டுவிடுகிறேன் தம்பி வாங்க…” என்று அழைக்க..
“இல்ல அங்கிள்.. என் ட்ரைவர் இப்போ வந்துடுவார்.. நான் கிளம்பிடுவேன்..
நீங்க போங்க.. நான் பார்த்துகிறேன்.” என்று சொல்லவும்..
“சரித் தம்பி!” என்று சொல்லி விட்டு கைகுலுக்கி விடைப் பெற..
அப்போது மதியும் அவனை நோக்கி கையை நீட்டினாள்.
அவள் கையைப் பற்றி குலுக்கியவன்.. சற்று அழுத்தமாக குலுக்கி விட்டு தான் அவள் கைகளை விட்டான்.
தன் தந்தை இருந்ததால் அவளுக்கு அப்போது தெரியவில்லை ஆனால் அவனின் முகத்தைக் காணும் போது ஏதோ ஒரு இனம் புரியாத வலி அவனிடம் இருந்து இவளுக்குள் கடத்தப்பட்டது போல் ஒரு நொடியில் நெஞ்சம் திக் திக் திக் என்று வேகமாக அடித்துக் கொண்டு பாரம் ஏறியது.
அவள் தந்தையுடன் தன்னைக் கடந்து செல்லும் மதியை கண்டவன் இதயம் துடிதுடிக்க.. கடலில் இருக்கும் மீன்களின் கண்ணீர் எப்படி தெரியாதோ அதுப் போலவே அவனின் கண்ணீர் துளிகள் மழை நீரோடு கரைந்து விட்டது.
கொட்டும் மழையில் நனைந்து கொண்டே முட்டி போட்டு அமர்ந்தவன்..
குட் பாய் பால்கோவா.. என்று சொன்னது அப்போது மதிக்கும் கேட்டுருக்க வாய்ப்பு இல்லை..
பூவிடம் சிதறிய புயல்..
