புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

சுயம் வரம் : 12 

“ஹே ஒழுங்காக எண்ணெய் தேய்த்துத் தான் குளியேன் டி…?”

“ஏன் அத்தை.. என் முடிக்கு என்ன குறைச்சல்…? அது நல்லா தானே இருக்கு…” என்றாள் கோதிக் கொண்டே..

“எங்க டி நல்லா இருக்கு ஒரே வரவரன்னு இருக்கு.” என்று சொல்லிக்கொண்டே மெல்லிய இதமாக சூடு செய்த தேங்காய் எண்ணையை அவள் தலையில் தடவி மசாஜ் செய்து விட்டார் சித்ரா.

“பாருங்க முகம் எல்லாம் தேங்காய் எண்ணெய் வடியுது… போங்க அத்தை.” முகத்தை சுணக்கிக் கொண்டு எழுந்து அறைக்குள் செல்ல..

“ஒரு அரை மணி நேரம் ஆவது தலையில் எண்ணெய் ஊறட்டும் டி… அதற்குள் குளிக்கப் போனேன்னு தெரிஞ்சுது அடி வாங்குவ என் கிட்ட..”

“என்னம்மா தங்கச்சி இப்போவே மாமியார் அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிடியா…?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் பிரபாகரன்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லன்னா… வர வர எல்லாத்துக்கும் அவ சோம்பேறித்தனம் பட ஆரம்பிச்சுட்டா… அதான் கொஞ்சம் கடுமையாக சொல்றேன் வேற ஏதும் இல்லைன்னா…”

“சரிம்மா…கிருஷ்ணா ஏதும் போன் செஞ்சானா…?”

“அவன் பேசி இரண்டு நாள் ஆகுது.” என்றவரின் குரலில் சற்று சோகம் எட்டிப்பார்த்தது.

“எதுவும் வேலையாக இருப்பான்.. இன்னைக்கு போன் பண்ணுவான். அப்படி போன் செய்தால் என்னிடம் மறக்காமல் சொல்லும்மா…” என்று சொல்லி விட்டு அவர் ஆபீஸ் கிளம்பி விட..

இங்கு வெண்மதி அரை மணி நேரம் கழித்து சீகக்காய் போட்டு நன்றாக குளித்து விட்டு தலை துவட்டிக் கொண்டு வெளியே வர..

அப்போது சித்ரா அவளுக்காக சாம்ப்ராணி புகை போட்டு கொண்டு இருந்தார்.

“மதி இங்க வா.” என்று சொல்லிக் கொண்டே அவள் சாம்பிராணி காட்டியவர்.. 

“நீ போய் வெயில்ல கொஞ்சம் நேரம் நின்னுட்டு வா..அதற்குள் பூ கட்டி விடுறேன்” என்று சொல்லவும்..

“சரிங்க அத்தை…”  என்று சொன்னவள் திரும்பி வரும் போது முக்கால்வாசிப் பூவை தொடுத்து முடித்து இருந்தார்.

“மதி இங்க வா..”என்று தனக்கு அருகில் அமர்த்திக் கொண்டவர்..
சீப்பை எடுத்து அழகாக அவளுக்கு சீவி பின்னல் இட..

“அத்த…உங்களை மாறி யாரும் அழகாக தலை பின்னி விட முடியாது…” என்று பாரட்டியவள்.. 
“ஏன் அத்த.. எனக்கு பூ கட்ட சொல்லித் தர மாட்டேங்கிறீங்க…?”

“அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல.. உனக்கு வேண்டும்ன்னு சொல்லும் போதெல்லாம் பூக் கட்டிக் கொடுக்க  நான் இருக்கேன்ல.. அது மட்டும் இல்லாமல் நீ எப்போவுமே எங்க வீட்டில் தான் மருமகளாக இருக்கப் போற…?” என்று மதியின் கன்னத்தை செல்லமாக வருடவும்..

மதியின் முகம் இதுவரை இருந்த இயல்பு மாறி இறுக்கம் குடி கொண்டது.
அதை அறியாதவரோ மேலும் பேச்சைத் தொடர்ந்து கொண்டே இருந்தார்.

“அத்தை நான் ரூமுக்கு போறேன்…” என்று எழுந்து விட..

“எங்கடி எழுந்து போற…? இந்தா இந்தப் பூவை வச்சுவிடுறேன் பிறகு போலாம்.” என்று சொன்னவர் தன் முட்டியைப் பிடித்துக் கொண்டு எழும்பி.. அவள் முடியில் பூவை வைத்ததும்… “இப்போ தான் மகாலட்சுமி மாறி இருக்க…?” என்று நெட்டை முறிக்க..

அதன் பிறகு ரூமுக்கு சென்றவள் மதி தனது அறைக்குள் சென்று கட்டிலில் இருந்த மெத்தையில் மல்லாந்து சாய்ந்தவளின் கண்களில் ஒரு துளி கண்ணீர்.

அவள் எதை நினைத்து அழுகிறாள் என்று சொல்லத்தான் வேண்டுமா என்ன…?

அவள் நினைவு நான்கு வருடத்திற்கு முன்னால் சந்தித்தவனைப் பற்றியே இருந்தது.

அன்று பள்ளியில் அந்த காண்டீன் வாசல் முன் தான் அவள் கடைசியாக அவனைக் கண்டது.
அதன் பின் அக்னியை அவள் சந்திக்கவே இல்லை.

அவனின் வகுப்பறை பக்கம் தினசரி உணவு  இடைவேளை அல்லது தண்ணீர் பிடிக்க வேண்டும் என்றால் கூட இரண்டு மாடி இறங்கி வந்து அவன் வகுப்பிற்கு அருகில் இருக்கும் குழாயில் தான் வந்து பிடித்துக் கொண்டே அவன் இருக்கிறானா என்று வந்து எட்டிப்பார்த்து விட்டு இல்லை என்றவுடன் அவளின் கண்கள் தான் ஏமாற்றத்தால் பூத்துப்போகும்.

அவன் என்ன ஆனான் என்ற செய்தியே தெரியாமல் பித்து பிடிக்கும் நிலைக்கே சென்று விட்டாள் பெண்ணவள்.

அவள் மேல் கடவுளுக்கு சற்று கருணை இருந்தது போலும். அப்போது தான் கிருஷ்ணா போனில் அவன் நண்பர்கள் யாரிடமோ பேசிக் கொண்டு இருந்தது கேட்டது.

முதலில் அவள் அதை கவனிக்கவில்லை. அக்னி என்ற பெயர் வாயில் வந்த போது தான் செவிகள் சற்று கூர்மையாகி கதவின் பக்கத்தில் வந்து நின்று கொண்டாள்.

அவள் கேட்டது இது தான்..
“மச்சி அந்த அக்னி பரீட்சைக்கு மட்டும் வரதாக சொல்லி  பள்ளி முதல்வர் கிட்ட கடிதம் எழுதிக் கொடுத்திட்டுப் போய் இருக்கான் டா.. எப்படியோ ஒழிந்தான். இனி நம்ம ஸ்கூல்ல அவனுக்கு ஏதும் வேலை இல்லை…” என்று சிரித்துக் கொண்டே எத்தோ பேசிவிட்டு போனை வைத்தான்.

அக்னி இந்த பள்ளியை விட்டே பாதியில் சென்றுவிட்டான் என்ற போது வெண்மதிக்கு அழுகை அழுகையாக வந்தது.

அன்றில் இருந்து விட்ட கண்ணீர் அக்னியை நினைக்கும் போது எல்லாம் விடாமல் வழிந்து தலையணையை நனைத்துக் கொண்டு தான் இருக்கிறது.

இன்னும் இரண்டு நாட்களில் அவள் கல்லூரிக்கு செல்ல வேண்டி இருந்ததால் அதற்க்கு தேவையான பொருட்களை வாங்க அவினாஷியில் உள்ள கடை வீதிக்கு சென்று வாங்கி வந்தாள்.

அந்த நாட்கள் அப்படியே கழிய.. அடுத்த நாள் காலை..
“செல்லம்  ரெடி ஆகிட்டியா…?”

“இதோப்பா..வந்துடுறேன்…” என்று சொல்லி கை கடிகாரத்தை கட்டிக் கொண்டே வெளியே வந்தவள்.. “கிளம்பலாமாப்பா…?”

“போலாம் செல்லம்” என்று சொல்லி சித்ராவையும் அழைத்துக் கொண்டு காரில் ஏறியவர்களின் கார் கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டு இருந்தது.

“செல்லம் காலேஜ் ஹாஸ்டல் கிடைக்கலை.. பிரைவேட் உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே..”

“ஐயோ!! அப்பா இதோட மொத்தம் நூறு தடவைக்கு மேல சொல்லீட்டீங்க..
எனக்கு என்ன பிரச்சனை இருக்கப் போகுது”

“அப்படின்னா சரி தான்ம்மா…”
அந்த இடத்தில முகத்தை உர்ர்ர் என்று வைத்துக் கொண்டு இருந்தது சித்ரா தான்.

“ஏன் அத்த.. இப்படி முகத்தை வச்சு இருக்கீங்க.. பார்க்க சகிக்கலை…” என்று சொல்லி நகைக்கவும்..

“கொஞ்சம் சும்மா இரு. நீ தான் இந்த அத்தையை விட்டு இருப்பேன்னு முடிவு பண்ணிட்ட…?”

“நான் படிக்குற கோர்ஸ் இந்த காலேஜில் தான் அத்த இருக்கு. அதுவும் இங்க தான் பெஸ்ட்…” என்று சொல்லவும்..

“லீவு கிடைக்கும் போது எல்லாம் வீட்டுக்கு வந்துரு டி.. என்னால உன்னைப் பிரிஞ்சு இருக்க முடியாது பார்த்துக்கோ…?”

“கண்டிப்பா அத்த..” என்று கட்டிக் கொண்டவளை அணைத்துக் கொண்டவர்..

“இங்கப் பாரு எப்போவும் கவனமாக இருக்கணும்.. வெளியே எல்லாம் சாப்பிடக் கூடாது. தெரியாத யார்கிட்டயும் பேச்சு கொடுக்க கூடாது.” என்று அடுக்கிக் கொண்டே போக..

“அய்யோ மறுபடியும் ஆரம்பிச்சுட்டிங்களா!!” என்று தலையில் கைவைத்துக் கொண்டாள்.

“இப்போ எல்லாம் பெரியவங்க பேசுறது உங்களுக்கு வேம்பாக கசக்கத் தான் செய்யும்.
காலம் கெட்டுக் கிடக்கு மதிம்மா…சொன்னால் புரிஞ்சுகோ..”

“சரி சரி…” என்றாள் சரணடைந்தவளாக.

அவள் கல்லூரிக்கு அருகில் இருந்த பிரைவேட் ஹாஸ்டலில் தான் கார் நின்றது.
அங்கு ஏற்கனவே பதிவு செய்து வைத்து இருந்ததால் பெயரை சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தவர்கள்..
வார்டனை சந்தித்து வந்த நோக்கத்தை சொல்ல..

“தாரளாமாக சார். தங்கிக்கலாம்.”

“ரூம் முதல் தளத்தில்  தான் இருக்கு வந்துப் பாருங்க.” என்று அழைத்து சென்ற வார்டனுக்கு முப்பது வயதுக்கு மேல் இருக்கலாம்.

புடவை முந்தானையை தூக்கிப் பிடித்துக் கொண்டு மேலே படிக்கட்டுகளில் ஏற..

பின்னாடியே வந்தார்கள் இவர்கள் மூவரும்.

முதல் தளத்தில் இருந்த இரண்டாவது ரூமை திறந்து காட்ட..
அறை நன்கு சுத்தமாகவே இருந்தது.

அந்த அறையில் இரு இரும்பு கட்டிகள் மூன்று அலமாரி
மின்விசிறி என அணைத்து வசதியும் சிறப்பாகவே இருக்க..

இங்கு உள்ளே வந்த சித்ராவோ.. கிடுகிடு வென்று அறைக்குள் நுழைந்தவர்..
கட்டில் மேல் தொப் என்று அமர்ந்தார். அது டம் என்ற சத்தத்தை ஒலி எழுப்ப..
அதோடு நிற்காமல் மின்விசிறி மின்விளக்கின்  சுவிட்சை மீண்டும் மீண்டும்  அமுக்கி அது வேலை செய்கிறதா என்று உறுதிப்படுத்தி கொள்ள..

“என்ன சித்ரா அத்த பண்ணுறீங்க?”

“ஜஸ்ட் செக்கிங்…” 
 
அப்படியே பாத்ரூமுக்கு சென்று தண்ணி வருகிறதா என்று பைப்பை திறந்து பார்க்க.. 

“அத்த…” என்று பல்லைக் கடித்தாள் வெண்மதி.

 அவர் மறுபடியும் “ஜஸ்ட் செக்கிங்.”

மதி தலையில் அடித்துக் கொண்டாள்.

“வாட்டர் ஹீட்டர் இல்லியா…?” – சித்ரா.

“இருக்கு மேம்.” என்றாள் வார்டன்.

“அப்போ சாப்பாடு எல்லாம்…” என்று மீண்டும் அடுத்த கேள்வியை கேட்க.

“இங்க கீழே டைனிங் ஹால் இருக்கு.”

“நல்லா இருக்குமா?”

“ இருக்கும் மேம்.. கூகுள் ரேடிங்க்ஸ் பார்த்து தானே வந்து இருப்பீங்க.”

“நீங்களே உங்களைப் பற்றி புகழ்ந்து தான் எழுதுவிங்க அதை நான் எப்படி நம்புறது…?”

“ஐயோ அத்த..“ என்று மதி தடுக்கவும்.

அவர் மறுபடியும் “ஜஸ்ட் செக்கிங் டி.”

“சரி ஓகே மேடம். இன்னும் ஒரு கேள்வி. இங்கு குடிக்க நல்லத் தண்ணீர் தானே…?”

“ஆமா மேடம்..ம்  என்று அழுத்தி சொன்ன வார்டனுக்கு கடுப்பு ஏகத்துக்கும் எகிறியது.

“ஏன் சொல்லுறேன்னா என் மருமகளுக்கு உப்புத் தண்ணீர் மினரல் வாட்டர் எல்லாம் ஒத்துக்காது அதான்.. ஹீஹீஹீ!!”.. என்று இளித்து வைக்க..

அவர் முகத்தில் எதுவும் காட்டிக் கொள்ளாமல் திரும்பி அவர்களுடன் கீழே இறங்கி வந்து..
“லக்கேஜ் எல்லாம் எடுத்துட்டு வந்து இருந்தீங்கன்னா.. இன்னக்கே ஜாயின் பண்ணிக்கோங்க.”

“எடுத்திட்டு வந்து இருக்கோம்.” என்று சொல்லிவிட்டு எல்லாவறையும் ஒவோவோன்றாக ரூமில் கொண்டு வந்து வைத்து விட்டு பணமும் செலுத்தி விட்டு..

“அப்போ செல்லம் நாங்க கிளம்பட்டுமா..?”

“ஆ.. சரிப்பா..”

“நீ பயபடாம இருந்திருவ தானே…?” 

“இருப்பேன் பா..”

அவள் அத்தை சித்ரா வந்து மதியைக் கட்டிக் கொண்டவள்.. “தினமும் போன் பண்ணு டி…” என்று சொன்னவருக்கு கண்கள் கலங்கி  விட்டது.

“கண்டிப்பாக பண்றேன் அத்த.. “

“சரி செல்லம் நாங்க வரோம்.” என்று டாட்டா காட்டிவிட்டு செல்ல..

வெண்மதி வாசல் வரை நின்று டாட்டா காட்டிக் கொண்டு இருந்தவள்.. அவளின் அறைக்கு சென்று விட்டாள்.

இதுவரை புன்னகை முகத்துடன் நின்று இருந்த பிரபாகரன் முகம் சோகமாகி சிறு குழந்தை போல் ஸ்டீரிங் வில் மேல் சாய்ந்து விம்மி விம்மி அழுதார்.

“அண்ணே.. அழாதிங்க.. நம்ம மதி இங்க தான் இருக்கா.. நம்ம நெனச்ச.. நென..ச்…சா வந்துப் பார்த்துக்கப் போறோம்…” என்று சொன்னவருக்கும்  கண்களில் கண்ணீர் துளிர் விட்டது.

“இல்ல சித்ரா… என் மக.. இவ்ளோ நாள் நான் எப்படி அவளைப் பிரிந்து இருப்ப.. என் மனைவி இல்லாத குறையை அவ தீர்த்தாள்..
இப்போ அந்த வீட்டில் என் மகளும் இல்ல என் மனைவியும் இல்ல..
நான் அங்க எப்படி இருப்பேன்.” என்று கண் கலங்கியதைக் கண்ட சித்ராவுக்கும் அவரின் வலி புரிந்தது.

“சரி அண்ணே பார்த்துக்கலாம்.” என்று ஆறுதல் சொல்ல..
அவர் முகத்தை துடைத்துக் கொண்டு.. 
“கிளம்பலாம்மா…இன்னும் ஒரு மாசத்திற்கு அவளைப் பார்க்க முடியது” என்று எண்ணிக் கொண்டு வண்டியைக் கிளப்ப..

விதி அவரை அடுத்த ஒரு வாரத்திற்குள் அடித்துப் பிடித்து வர வழைத்தது.

என்ன நடந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *