புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

சுயம்வரம் : 17
 
    வெண்மதி ஹாஸ்பிடலில்  இருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஒரு வாரம் கடந்து இருந்தது.
       அவள் விரைவில் குணமாவதற்கு மருத்துவமனையில் கொடுத்த மருந்துகளோ அவள் அத்தையின் கவனிப்போ இரண்டுமே அவளை வெகுவாக குணப்படுத்தி இருந்தது என்று சொன்னால் அது பாதி உண்மையே.  அன்று அக்னியை கண்டதிலிருந்து மீண்டும் அவனை எப்போடா சிந்திப்போம்  என்ற உத்வேகமே அவளை வேகமாக குணமடைய செய்தது என்று தான் சொல்ல வேண்டும்.

 அவள் கல்லூரிக்கு வருவதற்கு ஒரு நாள் முன்புதான் அவள் தலையில் இருந்த கட்டை முழுதாக பிரித்துவிட்டு  சிறு பேண்டேஜ் மட்டும் ஒட்டப்பட்டு இருந்தது.
 மருத்துவமனை வந்தபோது கூட அவளை இன்ஸ்பெக்ட் செய்த டாக்டரும் “பரவாயில்லையே,  இவ்வளவு முன்னேற்றம் எனக்கு ஆச்சரியம் தான் வெல்டன் மதி!!” என்று அவள்  தோளை தட்டி விட்டு இன்னும் சில மாத்திரைகளையும் மருந்துகளையும் மட்டும் கொடுத்து கூடவே ஒரு வாரம் காரமில்லாத உணவையும் சுடு தண்ணீரும் கொடுக்குமாறு அறிவுறுத்திவிட்டு வேறு பேஷண்டை பார்க்க சென்று விட்டார்.

 அதன் பின் இப்போது மதியை கல்லூரிக்கு அனுப்ப சுத்தமாக மனது இல்லை  பிரபாகரனுக்கு.
 ஆனால் அதே சமயம் அவள் படிப்பை பற்றியும் யோசிக்க வேண்டுமே அவருக்கு இன்னொரு ஆச்சரியமும் கூட மதி இயல்பாகவே அதிகம் பிடிவாதம் பிடிக்காத பெண்தான்.. இந்த நிலை நடந்த பிறகும் பழைய மதியாக இருந்திருந்தால் படிப்பாவது மண்ணாவது  உள்ளூர் கல்லூரியிலேயே படிப்பை தொடர்ந்து விட்டு வீட்டிலே பத்திரமாக இருந்து கொள்வோம் என்று ஒடுங்கி தான் போய் இருப்பாள்.
 அக்னியை காதலிக்காமல் இருந்திருந்தால் கண்டிப்பாக அவள்  கோவை பக்கம் தலை வைத்து கூட படுத்திருக்க மாட்டாள்.
 தந்தையும் தன் கூட இல்லாத தனித்து இருக்கும் நிலைமையின் போது. அதை மீறி அவளை இங்கு வர வேண்டும் என்ற துணிச்சலை கொடுத்தது அவளின் காதல் அக்னி மட்டும்தான்.
 காதல் கோழையை கூட  வீரன் ஆக்கிவிடும் போலும்.
 ஆனால் அந்த வீரனான அக்னியும் காதல் கோழையாகி போனான்.
 அவளை தினம் தினமும் எண்ணி அந்த ஒரு வார தவியாய் தவித்தான்.
 ஏதோ ஒரு நாள் அம்மாவின் ஆசைக்காக கோவிலுக்கு வந்து சுற்றிப் பார்த்து விட்டு செல்பவன்  இன்று தினமும் கோவிலுக்கு சென்று மதிக்காக வேண்டிக் கொண்டிருந்தான்.

 இதை கண்ட அவனது நண்பர்கள் கூட…”என்ன மச்சான் அந்நியன் அம்பியாகிவிட்டான் போல..இன்னும் அந்த பட்டை குடிமி மட்டும்தான் மிசிங் என்று ஒருவன் கூட சேர்ந்து கலாய்த்து கூட்டமாக கேலி செய்து சிரிக்கவும்..
அதற்கு ஒரு மில்லி மீட்டர் புன்னகையை மட்டும் கொடுத்து விட்டு கடந்து போய் விட்டான்.

 அவனுக்கு அவள் மதி வேண்டும் அதுவும் முழுதாக வேண்டும்.
 அவள் நன்றாக  இருக்க வேண்டும். அவள் சீக்கிரம் குணமாகி வர வேண்டும் என்பது ஒரு உண்மையான காதலின் அன்பு  வெளிப்பாடு அல்லவா அந்த வகையில் மதி கொடுத்து வைத்தவளே..

 அந்த ஒரு வாரம் கழித்து தன் ஹாஸ்டலில் இருந்து ரெடியாகி கல்லூரிக்குள் காலை எடுத்து வைத்தாள் மதி.
 அவள் முதலில் கண்டது அக்னியைத்தான்.
 அந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே மதி எங்கு தங்கியிருக்கிறாள் எந்த படிப்பு எல்லாத்தையும் விசாரித்து வைத்து விட்டான்.
 அதற்காக அவன் பெரிதாக மெனக்கெடவும் தேவை இருக்கவில்லை.
 அந்த ஆக்சிடென்ட் பத்தி தான் ஒரு வாரமாக கல்லூரியில் பரபரப்பு செய்தி. அவள் யார் என்ன டிபார்ட்மென்ட் எந்த ஹாஸ்டல் என ஒருவரும் குசு குசுவென்று பேசி தகவல் தானாக தன் மடியில் வந்து விழுந்தது.
 அவனுக்கும் இது வசதியாகவே போய்விட்டது.

தானாக போய் ஒரு பெண்ணை விசாரித்தால் யார் என்ன என்று உடனடியாக தகவலை கொட்டி விடுவார்களா சந்தேகம் வருவது கூட வாய்ப்பு இருக்கிறது தானாக அல்வா வாயில் விழும் போது கசக்கவா செய்யும்.
 
அதனால் தினம் தோறும் ஹாஸ்டலுக்கும்  கல்லூரி பின்னால் கேட் வாசலுக்கு இடையில் இருந்த மரங்களுக்கு நடுவே அங்காங்க போடப்பட்டிருந்த இரும்பு பெஞ்சின் மேல் தினமும் அவளுக்காக காத்துக் கொண்டுதான் இருப்பான்.

 அவனை அதிகம் சோதிக்காமல்  ஒரு வாரமாக காக்க வைத்து விட்டு திங்கட்கிழமை கல்லூரிக்கு வந்திருந்தாள் வெண்மதி.
அவள் வழக்கம் போல் பின் வாசல் வழியாகவே வர.. அங்கே அக்னியை எதிர்பார்க்கவில்லை இன்ப அதிர்ச்சியாக இருந்தது உடல் எல்லாம் ஒரு நொடி  சிலிர்த்துப்போட்டது போல் ஒரு குறுகுறுப்பு.

அவளின் கொட்டை விழிகள் அவனை சந்திக்க இயலாது தரையை நோக்கிய வண்ணம் தலை தாழ்த்தி நிற்க…அன்றைய பூத்த தாமரைப் போல் அன்ன நடை நடந்து வந்து கொண்டு இருந்தவள் திடீர் என்று தன் நடையை நிறுத்தவும் தானே அவளை நோக்கி அருகில் வந்தான் அக்னி.
சற்று இடைவெளி விட்டு நின்றவன் அவளின் குனிந்த தலையைப் பார்த்து தானும் தரையை நோக்கி எதோ தேடுவதுப் போல் பாவனை செய்து கொண்டிருந்தான்,

 எதிரில் வந்தவனின் கால்களைத் தான் மதி பார்த்து விட்டு… மெல்ல இமைகளை மட்டும் உயர்த்தி அவனை ஏறிட்டுப் பார்த்தவள்..
“இவன் என்ன தேடுகிறான்…” என்
று யோசனையாக மீண்டும் தலை குனிந்து அங்கும் இங்கும்  பார்த்தாள்.

“போதும். தேடிட்டியா…?  கீழ குனிந்து என்ன தேடிட்டு இருக்க?” என்றவனுக்கு அவள் தன்னைக் கண்டதும் நாணத்தால் தலைகுனிந்திருந்தாள்
 என்று தெரிந்த போது மனதிற்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல் இருந்தது.

 “நீங்க இங்க எங்க…?” கீச்சு குரலில்.

“இந்த காலேஜில் தான் நான் படிக்கிறேன் மேடம். நீங்க இங்க என்ன பண்றீங்க…?” என்று அவளையே திருப்பி கேட்டான்.

“நானும் இங்க தான் படிக்கிறேன்” என்று மீண்டும் தலையை குனிந்த வண்ணம்.

  “அச்சோ உன் தலையில் இருந்த கிளிப் கீழே விழுந்துடுச்சே…?”

 என்ன..? என்று அவசரமாக அதை சரி செய்ய அவள் தலையில் கை வைக்க அப்போதுதான் தோன்றியது அவள்  அவள் தலையை ரப்பர் பேண்ட் போட்டு முடிச்சிட்டு இருக்கிறாள் என்று.

“இப்போது அவளை நன்றாக உற்று நோக்கி…”வந்ததில் இருந்து  நான் உன் தலையை தான் பாத்துட்டு இருக்கேன்…கொஞ்சமாவது முகத்தை பார்த்து பேசுங்க மேடம்.” என்று அவன் சற்று அவள் குனிந்து அவள் முகத்துக்கு நேராக கண்ணடித்துக் கொண்டே செல்லவும்..

 இவள் மனது மேலும் வெட்க அரிதாரம் பூசிக்கொண்டது.

  அவளின் வெட்கத்தில் இவன் வழுக்கி விழுந்து விட்டான்.
 தன்னவள் தன்னைப் பார்த்து வெட்கப்படும் பொழுது  அவனுக்கு கர்வமாக இருக்காதா என்ன…?”

மெல்ல அவள் நாடியை  நிமிர்த்தி… “இப்போ உடம்பு எப்படி இருக்கு…?” என்றான் காதலனாக அக்கறையுடன்.

 “ஐ அம் பைன்…”

 “எங்க நீ இந்த காலேஜுக்கு வர மாட்டியோன்னு நான் பயந்தே போயிட்டேன் டி.”
 உங்க அப்பா நம்பர் என்கிட்ட இருக்கு இருந்தாலும் ஏதோ போன் அடிச்சு கேட்கிறதெல்லாம் நல்ல விதமாக தோன்றாதுன்னு தோணுச்சு அதான் பண்ணலை.  என்றான்  மன்னிப்பு கோருபவனாக.

 “என்னது என் அப்பாவுடைய நம்பர் உங்ககிட்ட இருக்கா?”
 ஆமா உன் ஐ டி கார்டில் இருந்து எடுத்துப் பேசி தானே உன்னை ஸ்கூல் படிக்கும் போது எல்லாம் மறந்துட்டீயா…?”
“நான் ஒரு டைம் அவர் கிட்ட பேசி இருக்கும் போது கூட என் நம்பரை சேவ் பண்ணிக்கிறேன்னு சொல்லி முழு பெயர கேட்டாரே…”

 இப்போதுதான் மதிக்கு நியாபகம் வந்து இருந்தது..

 “நம் அப்பாவிடம் நம்பர் முன்னாடியே இருக்கிறது என்று தெரிந்திருந்தால் இவ்வளவு நாள் அவனிடம் பேசாமல் இருந்திருக்க முடியுமா?
 தினமும் போன் பண்ணி பேசி இருக்கலாம் என்ன செய்கிறான் என்றாவது  தெரிந்திருக்கலாம். இத்தனை நாட்கள் காக்க வைத்திருக்கிறானே
 கையில் வடை இருந்தும் வாய்க்குள்  எட்டாமல் போய்விட்டதே என்ற சோகம் அவளுக்கு.
 “ஆண்டவா நீ இப்படி என் மேல கேம் ஆடி சுத்தல்ல விட்டு இருக்கியே” என்று ஆண்டவனையும் ஒரு முறை திட்டிவிட்டு நகத்தை கடித்தாள்.

 “என்ன பழக்கம் இது?” என்று அவள் கையை தட்டி விட..

அவன் மேல் தான் எரிந்து  விழுவது போல் கடுமையாக பேசினாள் மதி..
“எங்க அப்பா நம்பர் உங்ககிட்ட இருக்கு தானே பின்ன ஏன் நீங்க எனக்கு போன் பண்ணல…?”
 என்று காரணமே இல்லாமல் குற்றம் கண்டுபிடித்து திட்ட… பின்னே அவள் கஷ்டம் அவளுக்கு முழுதாக நான்கு வருடம் தவியாய் தவித்து இருக்கிறாளே அந்த வேதனையில் அவனிடம் கொட்டினாள்.. அது மட்டும் இல்லாது அது சிறகடிக்கும் டீன்ஏஜ் பருவம்… மெய் பொய் முழுதாக பிரித்து அறியாத பக்குவமற்ற பருவம் அது. இயல்பில் தன் தந்தைக்கு அழைத்து உங்கள் பெண்ணிடம் கொடுங்கள் பேச வேண்டும் என்று இவன் சொன்னால் அவர் தந்தை இருவரையும் காதல் மொழி பேச போனைக் கொடுத்து விட்டு பார்த்துக் கொண்டு இருப்பாரா என்ன…?”
இதை எல்லாம் மதி அறிவுக்கு எட்டினாலும் பக்குவம் அற்ற மனது வீண் சண்டை தான் பிடித்தது. இதை என்னவென்று சொல்ல…?” 

“இது என்ன வம்பா போச்சு.. உங்க அப்பாவிடம் என்ன பேசுறது நானு…? அடிக்கடி நான் கால் பண்ணினா அவர் என்ன நினைப்பார்…இப்பவே உங்க அத்தை நாலு நாள் வந்ததுக்கு வினோதமா பார்த்து மூஞ்சிய திருப்பிகிறத பார்த்தா உங்க அப்பா என்ன ஒரேடியாக பிளாக் செய்துவிடுவார்.. வச்சிருக்க நல்ல இமேஜஸ் நாசம் ஆகிவிடும் அதுக்கு தான் பண்ணலை என்றான்  அவளுக்கு புரியவைக்கும் நோக்கில்.

ஆனால் அவளுக்கு தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது தினம் தினமும் அந்த நம்பரை பார்த்துவிட்டு அழைக்கலாமா? மதி எடுப்பாளா? அவர் அப்பா எடுத்து விடுவாரோ?  என்று அந்த நம்பரையே அவள் காதலியாக நினைத்து ஏராளமான நாட்கள் பார்த்துக் கொண்டிருந்தது உண்டு. இது சில சமயம் பைத்தியக்காரனாக தோன்றினாலும் ஏதோ அந்த நம்பரின் அந்த பக்கம் மதி  இருப்பது போலவே ஒரு வித திருப்தி இருக்கும் அவனுக்கு இந்த காதல்தான் எத்தனை பைத்தியக்காரத்தனம் எதை எதையோ யோசிக்க செய்கிறது எதையெதையோ பண்ணி தொலைக்கிறது என்று அவனுக்கு அடிகடி தோன்றும்.

“ அவன் சொன்ன பதிலை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் இவளுக்கு முகம் உர்ர் என்று தான் இருந்தது.

“சரி சரி ரிலாக்ஸ்… போலாம் வா…” என்று  என்று சொல்லிவிட்டு அவன் முன்னால் நடக்க மதி பின் னால் நடந்து வந்தாள் அவனை மதிப்பீடு செய்து கொண்டே…
 வெள்ளை சட்டையில் பிளாக் ஜீன்ஸுடன் ஐடி கார்டு மாட்டிக்கொண்டு ஆளை அசர அடிக்கும் அழகாக முன்னால் நடந்து கொண்டிருந்தான் அக்னி.
அவளை ரசித்த வண்ணம் அவன் பின்னே வந்து கொண்டிருந்தாள் மதி.

“மதி அக்னியை பார்த்த வண்ணமே நடந்து கொண்டிருக்க…மெல்லத் திரும்பி மதியைப் பார்த்துக் கொண்டே நடந்தான் அக்னி.

  அப்படியே ஓரிடத்தில் அக்னி நின்றுவிட அவனையே பார்த்துக் கொண்டு நடந்து வந்தவள் சற்று எதிர்பாராமல்  அவன் மீது மோதிவிட… 
இதை  இந்த எதிர்பாராத மோதலில் இருவருக்குமே மின்சாரம் பாய்ந்தது போல் தலை முதல் உள்ளங்கால் வரை இறங்க  பட்டென்று விலகினர் இருவரும்.

அக்னி அவள் அருகில் நடந்து வந்து அவள் கைகளை உரிமையாக பிடித்துக் கொண்டான்.
 அதில் மதிக்கு தான் தடுமாற்றம். கைகள் நடுங்கியது உருவிக் கொள்ள மனம் ஏங்க… சற்று அவன் கைக்குள் இருந்து விலக எத்தனிக்க அவனின் பிடி மேலும் இறுகியது.

அவள் பக்கவாட்டாக நெடுமரம் போல் நின்ற அக்னியை ஏறிட்டு பார்த்து கை என்று சுட்டிக்காட்ட…

 தெரியுது என்றான் எதையும் வெளி காட்டிக் கொள்ளாத முகத்துடன்.

 என்…க்…க்கைய் என்று மீண்டும் தட்டு தடுமாறி சொல்ல…

“வாடி என்று உரிமையாக சொல்லிவிட்டு அவளுக்கு வலிக்கும் என்பதற்காக கையின் பிடியை மட்டும் சற்று தளர்த்தினான்.

 இவன் விடமாட்டான் போல இருக்கே என்று மதிக்கு  நன்றாக புரிந்து விட்டது.
 அவள் ஒருவித பதற்றத்துடன் அதே சமயம் மனதில் குதுகலத்துடன் வர
 காலேஜ் கேம்பஸிற்குள் வரும் பொழுது அவளுக்குள் ஒரு பதற்றம் வந்துவிட்டது ஆட்கள் கூட்டம் இருக்குமே யாராக இருவரையும் ஒன்றாக இப்படி பார்த்தால் என்ன நினைப்பார்களோ என்கிற ஒரு பயம்தான்.

 அந்த பயத்துடனும் இவனிடம்  இருந்து கையை விலக்கிக் கொள்ள மனம் விரும்பாவிட்டாலும் இன்னொரு மனம் சூழ்நிலை கருதி பயத்தில் உதறக் கூட பயமாக இருந்தது அவளுக்கு. 

“என்ன?”

 அங்கு கடந்து சென்ற சில பேரின் பார்வை இவர்களைத்தான் வட்டமடித்தது.
 காரணம் அங்குள்ள பெரும்பாலோர்க்கு அக்னியை தெரியும்  கடந்த நான்கு வருடமாக கல்லூரியில் அங்கு தான் படிக்கிறான். அங்கு கல்லூரியில் பிரசித்திப்  பெற்ற மாணவனும் கூட..
 அங்கிருந்தவர்களுக்கு வெண்மதியும் பற்றியும் இப்போது தெரிந்திருந்தது. இரண்டு வாரத்திற்கு முன்னாடி தானே ஆக்சிடென்ட் நடந்து ஹாஸ்பிடலில்  அட்மிட் செய்யப்பட்டவள். கல்லூரியில் கூட நோட்டீஸ் போர்டில் அவள் போட்டோ ஒட்டப்பட்டு செய்தியாக வந்திருந்தது.

 இவர்கள் இருவரும் ஒன்றாக நடந்து வருவதை பார்த்து ஒவ்வொருவரின் கண்கள் ஒவ்வொன்று பேசிக் கொண்டிருந்தன.

 மதிக்கு அவர்களின் பார்வையை கண்டு மேலும் பயம்.
 இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக நடந்து வந்தவன் அக்னிதான்.
 அவள் வகுப்பறை வாசல் வரை நின்று விட்டுவிட்டு பாய் சொல்லிவிட்டு தான் கிளம்பினான்.

 அந்த சந்தோஷத்திலே அன்று  வகுப்பறைக்குள் கால் எடுத்து வைத்தவள் இந்துஜாவை தேட அவள் வேறு ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தாள் ..

இந்துஜாவின் அருகில் சென்று ஹாய் என்று அவள் தோளை தொட்டு உலுக்கவும்…
 முகத்தை திருப்பிக் கொண்டு தன் பெஞ்சில் போய் அமர்ந்து கொண்டாள்.

 இது வரை இருந்த  சந்தோசம் புஸ்வாணம் போல் புஸ்ஸாக மாறியது.

 “ஏன்டி என் கிட்ட பேசமாட்டேன்கிற…” என்று அவளாக அவள் கையைப் பிடித்து போய் கேட்க..
ஆனால் இந்துஜா  எந்த பதிலும் பேசவில்லை நோட்டை எடுத்து எழுத ஆரம்பித்து விட்டாள்.
 
“ஹோம் ஒர்க் எதாவது  கொடுத்தாங்கன்னு சொல்லு… அதையாவது நான் எழுதுறேன்” என்று அவள் பேச்சை வளர்க்க.. அதற்கும் அவள் பெரிதாக எதுவும் பதில் அளிக்கவில்லை.

 அன்று நாள் முழுவதுமே இந்துஜா வெண்மதியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. ஏன் அவள் பேசுவதை கூட காதில் கேட்காமல் மரம் போல் தான் அமர்ந்திருந்தாள்.
 மதிக்கு அழுகையே வந்துவிட்டது. இந்துஜாவுக்கு தன் காதல் விவகாரம் தெரியும் என்பதை மதிய அறியாதவள் அல்லவா அதனால் விளைந்த வினை.

 அன்று பள்ளி வகுப்பு முடிந்த பின்பும் கூட எதுவும் பேசாமல் கிளம்பி விட்டாள் இந்துஜா.

 அப்போதுதான் மதிக்கும் ஞாபகம் வந்தது ஒரு வாரம் அவள் தன்னிடம் கால் கூட செய்யவில்லை என்று. தான் அழைத்தபோது கூட பெரிதாக  அட்டென்ட் செய்யாமலும் அப்படி யாராவது எடுத்தால் கூட அது  வேறு யாராவதாகத்தான் இருக்கும் அப்போது அது பெரிதாக  தெரியவில்லை மதிக்கு. இப்போது ஓயாமல் தன்னிடம் பேசிக்கொண்டு இருப்பவளின் அமைதி சுட்டது.

 தன் தோழி ஏன் தன்னிடம் இப்படி நடந்து கொள்கிறாள் என்று புரியாமல் தவித்தாள் மதி.
 ஆனால் இந்துஜாவும் வகுப்பு முடிந்த பின்பு பாத்ரூமுக்கு சென்று ஒரு மூச்சாக அழுது தீர்த்தாள்.
 அவள் என்னதான் முயற்சி செய்து பார்த்தாலும் மதியை வெறுக்கவும் முடியவில்லை கடின பாடுபட்டு தான் பேசாமல் இருந்தாள். 

 மதியிடம் பேசிவிடும் மனமே என்று அவள் மனம் துடித்தாலும் அவள் தன்னிடம் மறைத்து விட்டாள் அது இத்தனை நான்கு வருடங்கள் என்று நினைக்கும் போது அவளுக்கு இந்த தண்டனை கண்டிப்பாக தேவை என்று தான் தோன்றியது.

 அதுவும் இல்லாமல் மது வேறு யாரிடம் பெரிதாக  ஒட்டமாட்டாள் தானும் அவளை விட்டு வேறு நண்பியேத்  தேடிச் சென்றால் அவர் வெகுவாக உடைந்து விடுவாள் என்பதை அறிந்தவள் அதை செய்து தினம் தினம் வகுப்பிலிருந்து ரசித்து பார்க்க அளவிற்கு குரூரம் படைத்தவள் அல்லவே..
 அவள் கூடவே இருந்து பேசக்கூடாது என்று தான் தோன்றியது.

 ஆனால் அவள் பேசும் பொழுது தன்னால் அமைதியாக இருக்க முடியவில்லை என்று புரிந்தது. எப்படியோ அந்த  அன்றைய கல்லூரி வகுப்பை எப்படியோ முடித்துவிட்டு பாத்ரூமுக்கு வந்து விட்டாள். 

 இங்கு அவளின் டிபார்ட்மெண்ட் வாசலில் அக்னி காத்திருந்தான்.
 ஆனால் இந்துஜா தன்னிடம் பேசாமல் இருந்த மனநிலையில் அக்னியை பார்க்கும் எண்ணம் அவளுக்கு துளியும் இல்லை.

வெண்மதியின் கையைப் பற்றி.. “எங்க போற நான் இங்க இருக்கேன்…” என்று சொல்லவும்.. அவள் எதுவும் உணர்ச்சியற்ற மரம் போல் ஆ ஆவேன மட்டும் சொன்னாலே தவிர அவள் வாயில் இருந்து வேறு ஒன்றும் உதிர்க்கவில்லை.

“என்னாச்சு இவளுக்கு…?” என்ற அவள் முகத்தை பார்த்து சிந்தித்த வண்ணம் இவன் இருக்க…

“ஐ நீட் டு பி அலோன் ப்ளீஸ்…”என்றாள் வெண்மதி.
 இதெல்லாம் கேட்டு விலகி செல்பவன் அக்னி அல்லவே…
 “என்னாச்சு சொல்லு…?” என்று வலுக்கட்டாயமாக அவள் வாயில் இருந்து வார்த்தையே பிடுங்க எத்தனிக்க…

“தட்ஸ் மை பர்சனல்…ஐ நீட் ஸ்பேஸ்…ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட்…” என்று கோபத்தில் குரலை உயர்த்தி கத்தவும்.

 அவனுக்கு கோபம் திபுதிபு என எரிந்தது.

 வேகமாக அவள் கையில் வைத்திருந்த செல்போனை பிடுங்கி தன் நம்பரை சேமித்து விட்டு பாய் என்று கத்தி விட்டு அதே கோபத்துடன் சென்று விட்டான்.

 நடந்த சம்பவங்கள் சுருக்  என்று வலித்தாலும் இத்தனை வருடம் தன் தோழி தன்னிடம் பேசாமல் அமைதியாக இருந்ததே அவளை இந்நேரம் வெகுவாக பாதித்து இதயம் அடிபட்டு  ரணமாக கிடந்தது.

 அவள் எதை சமாதானம் செய்வது எதை பேசுவது எதை சொல்வது என்று தெரியாமல் விடுதிக்கு  சென்றால் போதுமடா சாமி இங்கேயே அழுதால் மானம் போய்விடும் என்று எண்ணத்தில் வேகமாக ஹாஸ்டல் நோக்கி சென்றாள்.

 இந்துஜாவும் வெண்மதியும் மீண்டும் ஒன்று சேர்வார்களா?

 பூவிடம் சிக்கிய புயல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *