புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

“புயலுக்கும் பூவுக்கும் சுயம் வரமோ?”

சுயம் வரம் : 1 

நாயகன் : அக்னி மித்ர தேவ்
நாயகி : வெண்மதி

அன்று அதிகாலை ஐந்து மணிக்கே அவினாசி நெடுஞ்சாலையோரம் தனக்கு பிடித்த புஹாட்டி காரை ஓட்டிக்கொண்டு அதிவேகமாக கருமத்தம்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தான் நம் நாயகன் அக்னி மித்ரன்.
தேவ் குரூ ஒப் கம்பெனீஸ் இன் அடுத்த வாரிசு.
தேவ் கார்மெண்ட்ஸ், தேவ் எக்ஸ்போர்ட்ஸ், தேவ் டெக்ஸ்டைல்ஸ் என்று  இன்னும் பல தொழில் சாம்ப்ராஜியத்திற்க்கு  முடி சூட்டப்போகும் அரசன்.

அக்னி மித்ரன் ஆறடிக்கு சற்று  மேல் நெடு மரம் போன்ற உயரம், கம்பிரமான மீசை, மழித்த தாடி, பார்வையிலே எடை போடும் கண்கள்,
நல்ல சிவந்த நிறத்தில் திடகாத்திரமான தோள்களுடன் வெறும் இருபத்தி எட்டு  வயதே ஆன ஆளை அசரடிக்கும் அழகன்.
அக்னியின் குணம் மென்மை என்று சொல்வதை விட இடத்தின் தன்மைக்கு ஏற்ப அவன் நடந்து  கொள்வான் என்று சொல்வதே பொருந்தும்.
கோபம் வந்தால் எரிமலையாக வெடிப்பவன் அமைதியில் புத்தன் என்று தான் சொல்ல வேண்டும்.

அக்னியின் கார் கருமத்தம்பட்டியை அடைய இன்னும் சிறிய நேரமே இருக்க.. அவன் உள்ளத்தில் பல கொந்தளிப்புகள்,ஏமாற்றம், விரக்தி என சூழ்ந்து இம்சை செய்து கொண்டு இருக்க.. அவன் மனம் ஒரு  நிலையில் இல்லாமல்  தடுமாறியது. அதன் விளைவாக கார் அதிவேகத்தில் சென்று கருமத்தம்பட்டியில் இருக்கும் கிருஷ்ணா கார்மெண்ட்ஸ் அரை மணி நேரத்தில் வந்து அடைய வேண்டிய இடத்தை பனிரெண்டு நிமிடத்திற்குள் வந்து அடைந்து அதன் பெரிய  வாசல் முன் கீரச் என்று நின்றது அந்த புஹாட்டி.

அங்கு ஆள் அரவம் பெரியதாக இல்லாத அந்த இடத்தில் வாசல் முன் சற்று தள்ளி  நின்று கொண்டு தன் கையில் வைத்து இருந்த ஐ போனில் யாரிடமோ உரையாடிக் கொண்டு இருந்தாள் அரக்கு நிற ஜார்ஜெட் புடவைக்கு சொந்தக்காரி.
இதற்கு முன் பல தடவை அவள் புடவை அணிந்து பார்த்து இருக்கிறான். 
அன்று அவன் கண்டதற்கும் இன்று காண்பதற்கும்  மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.
அதே ஒடிசலான தேகம் தான்  ஆனால் நிறையவே  மாற்றம்.
காரில் இருந்து அனாயசமாக இறங்கி தன் கருப்பு கூலிங் கண்ணாடியை  ஒரு கையால் அணிந்து கொண்டே ஸ்டைல் ஆக கீழே இறங்கியவன்.. பார்வையாலே அங்கு நின்று இருந்தவளை வருடினான்.

கிருஷ்ணா  கார்மென்ஸ் அரை ஏக்கர் நிலப்பரப்புடன் விஸ்தாரமாக கட்டப்பட்டு இருந்தாலும் அவன் கம்பெனியில் இது கால் வாசி கூட அல்ல என்று ஏளனப்பார்வையே வெளிப்படுத்தியது  அவன் கண்கள். கட்டிடத்தை சுற்றி பெரிய சுவர் வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்டு வேலிக்கம்பிகளுடன் எழுப்பப்பட்டு இருந்தாலும் பல மரங்கள் சுவர் பக்கம் அரணாக பச்சை பசேலென சுற்றி இயற்கை எளிலாகவே காட்சி அளித்தது. அங்காங்கு சிறு செடிகள் கூட நட்டு இருந்தன.” மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்கிற வாசகம் கூட அடக்கம்.” 

 இதை எல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருக்கும் போது.. 
அதற்குள் “அப்பா” என்ற நான்கே வயதான சிறுவனின் குரல் அந்த அமைதியான சூழலில் காற்றை கிழித்துக்கொண்டு செவி மடலில் ஒலித்தது.

“ஆதி” என்று ஓடிச்சென்று இருகையால் வாரி அணைத்துக் கொண்டு அப்படியே வானுயரத்தில் தூக்கி தட்டமாலையாக சுழற்றினான்  அக்னி மித்ரன்.

அதில் கிளுக்கி சிரித்தது  குழந்தை.
மெல்ல தன் தோளில் தூக்கிகொண்டவன்.. “ஹாய் மை பிரின்ஸ்!!” என்று ஹைபை அடித்து நெற்றியில் முத்தம் இட்டான். 
“அப்பா.. எப்போப்பா நீங்க நம்ம  வீட்டுக்கு  வருவீங்க?” என்று சட்டை பட்டனை திருகிகொண்டு கேட்டது குழந்தை.

“சீக்கிரமே நீயும் நானும் நம்ம வீட்டுக்கு போகலாம்..” என்றான் அக்னி.

அப்ப.. அப்பா  அப்போ அம்மா!! என்று திரும்பி கொஞ்சம் தள்ளி நின்று இருந்தவளை திசைக் காட்டி கேட்கவும், 

மெல்ல அவனும் ஏறிட்டு திரும்பி அவளைப் பார்த்தான் இப்போது  அலட்சியமாக.

அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் திசை திருப்ப எண்ணி…
“சரி!! உனக்கு சாக்லேட் வாங்கிட்டு வந்து இருக்கேன் வேண்டாமா?” என்று பின் பாக்கெட்டில் இருந்து எடுத்து அவனிடம் நீட்ட.. அதை தடுத்தது ஒரு கரம் வேறு யார் அவளே தான். 
“வெண்மதி”

வெண்ணிற அழகில் வெளுத்த வெந்தயம்  போன்ற முகம்.
அதில் குங்குமம் என சிவந்த உதடுகள். வானவில்லை வெட்டி வைத்தாற் போன்ற புருவம். காந்தார கண்ணழகி, வெண் பனி குளத்தில் கயல்கள் நீந்த செய்தது போன்ற கரு விழிகள் 
மூக்கு விடைப்பில் மாணிக்கத்தை ஒட்டியது போன்ற நூண் நாசி, செவ்விளநீர் கன்னங்கள்,
புற்றுக்குள் இருக்கும் எறும்பை பற்றி இழுக்கும் பால்கோவா தேகம் என அவளும் அவனுக்கு நிகரான  அழகியே என்று படை சாற்றிக்கொண்டு இருந்தது.

ஆதியை தூக்கி வைத்து இருக்கும் அவ்வடவனை அப்போது தான் தூரத்தில் இருந்து பார்த்தாள் வெண்மதி.
பார்த்தவுடன் சற்று அதிர்ச்சி அடைந்தால் ஆனாலும் மெல்ல நடந்து அவனை நோக்கி வந்து கொண்டிருக்க.. அப்போது தான் ஆதியிடம் கொடுத்த சாக்லேட்டை கண்டவுடன்.. அதை லாவகமாக அவனிடம் இருந்து பிடிங்கியவள்.. “அவனுக்கு சாக்லேட் கொடுக்க கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க.. சோ ப்ளீஸ்!!” என்று தள்ளி இருந்த குப்பை தொட்டியில் தூக்கி வீசினாள்.

அதை கண்டவனுக்கு சினம் ஏற.. “ஏய்!!” என்று கையை ஓங்கினான்.
முன்னாடி  இருந்த மதியாக இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த பார்வைக்கும் கோபத்திற்கும் பயந்து  நடுங்கி ஒடுங்கி கண்ணீரே உகுத்து இருப்பாள்.
ஆனால் இங்கு இருப்பது பல கல்லடிப்பட்டு தன்னைத்தானே செதுக்கிய சிலை அல்லவா..
அதனால் அசறுவாளா என்ன? அவனையே பதில் பார்வைப் பார்த்து.. அழுத்தமாக அவன் முகத்தை நோக்கவும்.. கருப்புத் திராட்சையாய் மிரட்டும் விழிகளில் வழுக்கி விழுந்த  அந்த ஆறடி ஆடவனின் கை சற்று தளர்ந்தது.

“என் பையனுக்கு நான் என்ன கொடுக்கணும்னு உன்கிட்ட கேட்டுட்டுத் தான் கொடுக்கணும்மா? என்று உறுமினான்.

“ஆமா” என்று அழுத்தமாக வந்தது பதில்.

“ஏற்கனவே என் பையனை இந்த நிலைமைக்கு ஆள் ஆக்கினது போதாதா?”
என்று சொல்லவும் அவன் முகம் பாறை என இறுகியது. 

அதற்குள் கார்மெண்ட்ஸ் வாசலுக்கு வெளியே வந்த கிருஷ்ணா அக்னியை நக்கல் பார்வையுடன் பார்த்து வைத்தான் அதன் பொருள்.. “நீ ஏன் இங்கு வந்தாய்?” என்று அடங்கி இருந்தது.

அதுவரை அக்னியிடம் நின்ற குழந்தை கிருஷ்ணாவை கண்டவுடன் அவன் மேல் தாவி பாய முற்பட, அதை உணர்ந்தவன் மெல்ல குழந்தையை அவனிடம் கொடுக்காமல் கொஞ்சம் அழுத்தி பிடிக்க..  அதில் ஆதி வலி தாங்க முடியாமல்  வீறிட்டு அழுதான். 

அதை கண்ட வெண்மதி.. “குழந்தைய கொடுங்க முதல்ல?” 
என்று பிடிங்கியவள்.. மெல்ல முதுகை தட்டி விக்ரமை சமாதனம் செய்தாள்.
இதற்கு இடையில் ஒரு குழந்தையை  கூட எப்படி கையாள வேண்டும் என்று தெரியாதா? என்று குட்டு வேறு சமயம் பார்த்து  வைத்து கொண்டே விக்ரம் நெஞ்சில் நீவி விட்டாள்.

சிறிது நேரத்தில் ஆதியின் அழுகை அடங்கி விசும்பல் மட்டுமே கேட்டது.
அக்னிக்கு கோபம் எரிமலையாக வெடித்துக் கொண்டு இருந்தது..
இந்த கிருஷ்ணாவின் முன்னாடி எல்லாம் அசிங்க பட வேண்டி இருகிறதே என்று உள்ளுக்குள் கொதித்தான்.
தன் எதிரில் நிற்கும் மனைவியை கண்டு.. “ஆதிக்கு இன்னும் ஒரு வாரத்தில் பிறந்த நாள் வருது. அதை பெருசாக கொண்டாடனும்னு ஆசை படுறார் என் தாத்தா.. அதனால் நீ அங்க வந்திடு.” என்றான் கட்டளையாக.

அதற்குள் கிருஷ்ணா  இடைப்புகுந்து  இத்தனை வருஷம் அங்கே தானே கொண்டாடினீங்க..? இந்த வருடம் எங்க மாமா வீட்டில் தான் நடக்க போகுது.” என்று சொல்லவும், கோபம் மண்டைக்குள் எகிற கிருஷ்ணாவின்  சட்டையை பிடித்து.. “அதை சொல்ல நீ யாருடா?” என்று சண்டைக்கு தயாராக நின்றான் அக்னி.

“கொஞ்சம் நிறுத்துங்க.” என்று இடை புகுந்த வெண்மதி.. “நாங்க வரோம்.”
என்றாள் அக்னியை நோக்கி.. 

“நம்ம ஒன்னும் போகத்தேவை இல்லை..  நீ கொஞ்சம்  சும்மா இரு.” என்று கிருஷ்ணா  மதியை  அடக்கினான்.

“என் பெண்டாட்டி குழந்தைகள் வரக் கூடாதுன்னு.. நீ என்னத்துக்கு டா  சொல்ற?” என்று தலை முடியை தூக்கிக்  காட்டினான்.

அதில் கிருஷ்ணாவிற்கு பொறுமை போய் சினம் எகிறியது. “ஒரு சின்ன திருத்தம் அவ உன் முன்னால் பொண்டாட்டி.
விவாகரத்து வாங்கின பிறகு உனக்கு எந்த உரிமையும் இல்லை..
நீ உன் இடத்திலே  நில்லு.”

இருவரும் வாக்குவாதம் முற்றி சண்டைக்கோழியாக சிலிர்த்துக் கொண்டு நிற்பதை பார்த்த வெண்மதிக்கு என்ன சொல்லி இருவரையும் தடுப்பது என்றே புரியவில்லை.

மெல்ல திரும்பி கிருஷ்ணாவை நோக்கி..” நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு கிருஷ்ணா வாக்குவாதமோ சண்டையோ வேண்டாம். நான் பேசிக்குறேன்” என்று சொல்லிவிட்டு அக்னிமித்ரனை திரும்பி பார்த்தாள்.

வெண்மதியின் கருவிழிகள் உடைவாளை எடுத்து உருவி சொருகியது  போன்ற பார்வையை கண்டு அதில் சிறிது நேரம் தன்னை மீறி  லயித்தான் அக்னிமித்ரன்.

“இங்க பாருங்க மிஸ்டர் அக்னிமித்ரன் என்று மெல்ல சொடக்கிட்டு அவன் பிரம்மையை கலைத்தவள்..
“நானும் என் குழந்தையும்… என் குழந்தை என்று சொல்லில் சற்று அழுத்தி உதிர்த்தவள்.. கண்டிப்பாக வருவோம் ஆனா சீக்கிரமா கிளம்பிடுவோம் இதில் உங்களுக்கு சம்மதம் என்றால் நான் ரெடி.”

“சரி என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று யாரையும் திரும்பிக் கூடப் பார்க்காமல் குழந்தைக்கு மட்டும் முத்தம் இட்டு விட்டு காரை நோக்கி சென்றான்.

அவினாசியில் இருந்து வரும் போதே இருந்த கோபம் விரக்தி இங்கு வந்தபின்  பன்மடங்காக கூடியிருந்தது.

கிருஷ்ணாவின் அருகில் நெருங்கிய வெண்மதி மெல்ல தளர்விரல்களை அவன் கைகளோடு கோர்த்து..”சண்டை வேண்டாம்.. விட்டுடு.. எனக்கு தேவை நிம்மதி தான் கிருஷ்ணா.. நான் என் வழியிலே போயிட்டு இருக்கேன்.. இதோ இப்ப போறாரே அவர் என் வாழ்க்கையில என்  பக்கத்திலேயே வச்சுக்கவும்  முடியல தூரத்தில் விரட்டவும்  முடியல எங்களை இணைக்குற ஒரு பந்தம் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி பதிஞ்சிருச்சு என்று சொல்லிக்கொண்டு விக்ரமாதித்யதேவை பார்த்தாள்.

கிருஷ்ணா வெண்மதியின் தோளை அழுந்தப்பற்றி..”உன்னோட நான் இருக்கேன்…” என்று சொல்லாமல் பார்வையால் உணர்த்திக்கொண்டு  உள்ளே அழைத்துச் சென்றான்.

காலை 6 மணிக்கு கம்பெனிக்கு பூஜை போட்டுவிட்டு கிருஷ்ணா தன் வேலையை தொடங்க.. கிருஷ்ணாவின் தனிப்பட்ட கேபினுக்குள் நுழைந்த வெண்மதி…
“ஹாய் கிருஷ்ணா!!… நான் கிளம்புறேன்.
 இப்ப நான் கிளம்புனா தான் ஆர் எஸ் புரத்தில் இருக்க என் பொட்டிக்கு  நான் எட்டரை மணிக்குள்ளேப் போய் சேர முடியும். எனக்கு இன்னும் 
நிறைய ஆர்டர் இருக்கு.. நான் போய் அதை பார்க்கிறேன்..

“நீ இன்னும் வேற லெவல்ல தொழில்ல வளர்ந்துடுவாய் கிருஷ்ணா!!” என்று கையைக் குலுக்கி வாழ்த்தி விட்டு.. அவள் வைத்திருந்த இனோவா காரில் பின் சீட்டில் விக்ரமை படுக்க வைத்துவிட்டு ஆர் எஸ் புரம் நோக்கி விரைந்தாள்.

அக்னிமித்ரனையும் வெண்மதியையும் கல்லூரி காலத்தில் கண்ட யாவரும் இவர்கள் இப்படி பிரிந்து எதிரணியாக இருப்பார்கள் என்று சொன்னால் யாரும் அன்று நம்பி இருக்க மாட்டார்கள்..

விதி வலியது…


புது கதையோடு வந்துவிட்டேன் சகாஸ்!!
உங்கள் ஆதரவை அள்ளித் தெளிக்குமாறு அன்போடு உங்கள் தாரா❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *