ஆசையே காதலாம்.... ஆகினேன் காதலா
7
சண்முகம் மூலம் நம்பிராஜன் வெளியே வர முடியாதபடி சிறப்பாக கட்டம் கட்டி விட்டு.. தனது கல்யாணத்தன்று அழகியையும் திட்டம் போட்டு கட்டு இருந்தான்.
வெளிவார்த்தைக்கு திட்டம் என்று கூறினாலும் அவனின் ஆழ் மனதுக்கு தெரியும் அழகியின் இடம் அவன் மனதில் எது என்று!! அவள் அவனுக்கு யார் என்று!! அவனின் செல்ல பிஜிலி!!
மொய்த்திருவிழா….!!
புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் மொய் விருந்து திருவிழா, கோவில் திருவிழாவை விட மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் தொடங்கப்பட்ட இந்த மொய் விருந்து, தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவியுள்ளது. ஆடி மாதம் முழுவதும் நடைபெறும் இந்த மொய் விருந்து விழாவில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் மொய்யாக வசூலிக்கப்படும்..
தனிநபரோ அல்லது பத்து நபர்கள் சேர்ந்தோ, ஒரே பந்தலில் மொய் விருந்து விழாவை நடத்துவார்கள். விழாவில் நூற்றுக்கணக்கான கிலோ ஆட்டுக்கறி சமையல் செய்து, மொய் விருந்துக்கு வருபவர்களுக்கு பரிமாறப்படும். இதனை தொடர்ந்து உணவு அருந்தியவர்கள், தங்கள் பெயரில் மொய் எழுதி செல்வர்.
ஒருவர் இந்த ஆண்டு மொய் விருந்து நடத்தினால், அதன் பிறகு நான்காண்டுகளுக்கு விழா நடத்தக்கூடாது. அப்போது தனக்கு மொய் செய்தவர்களுக்கு, மீண்டும் மொய் அளிக்க வேண்டும். இவ்வாறு நான்காண்டுகள் மொய் செய்த பின், மீண்டும் ஐந்தாவது ஆண்டு அவர் மொய்விருந்து நடத்துவார்.
இவ்வாறு செய்யப்படும் மொய் 5 ஆண்டுகளுக்கு பிறகு, மொய் விருந்து நடத்தும்போது இருமடங்காக கிடைக்கின்றது. இதனை வைத்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது தொழிலை உயர்த்திக் கொள்வார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் வடகாடு, மாங்காடு, புல்லான் விடுதி, நெடுவாசல், கீரமங்கலம் அறந்தாங்கி, மரமடக்கி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி, திருச்சிற்றம்பலம், ஆவணம், களத்தூர், குருவிக்கரம்பை பகுதிகளிலும் இந்த மொய் விருந்து விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
கோடிக்கணக்கான ரூபாய் மொய் வரும் இந்த விருந்துகளில், வங்கிகள் பந்தலிலேயே வைத்து பணத்தை டெபாஸிட் பெற்றுக் கொள்வார்கள்.
இந்த நம்பிராஜன் யார்? இவனுக்கும் ஆதித்யநிலவனுக்கும் உள்ள பகை என்ன? நம்பி ஆதியின் ஒன்றுவிட்ட பங்காளி அதாவது அருளனந்தனின் சித்தப்பாவின் மகனின் மகன்!!
அருளனந்தனும் ஏகம்மையும் சிறுவயதில் தாய் தந்தையரை இழந்து கஷ்டப்பட்டபோது அவரது சித்தப்பா சற்றும் உதவாமல் நெருங்கி வந்தால், எங்கே அண்ணன் பிள்ளைகளின் பாரத்தை ஏற்க நேரிடுமோ? இவர்களும் அட்டை போல ஒட்டிக் கொள்வார்களோ? என்று பயந்து தள்ளியே நின்று கொண்டார்.
ஆனால் ஒன்றுவிட்ட தாய் மாமனான ஆதிசங்கரன் அவர்களை அரவணைத்துக் கொண்டார். அந்த நன்றியுணர்வு விசுவாசம் பாசம் என்றுமே அருளனந்தனுக்கு உண்டு. அதனால் இடையில் ஏற்பட்ட சில குழப்பங்களுக்கு நீதி பக்கம் நிற்க முடியாமல்.. பதில் அளிக்க முடியாமல்.. எப்பொழுதும் போல எதையும் எதிர்க்இ இயலாமல் அமைதியாக இருந்து விட்டார், ஆதிசங்கரனின் பக்கம்.
தங்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று உயர்ந்த நிலையில் இருப்பதைக் கண்டு வழக்கமான பொறாமை உணர்வு பொங்கியது நம்பிராஜனுக்கும் அவனது தந்தை தங்கராஜூவுக்கும்!!
தங்கராஜ் குத்தல் கேலியாக “வீட்டோட மாப்பிள்ளையாகிட்ட உனக்கு என்ன டா நீ வேலையே செய்யலைன்னாலும் உன் மாமனார் பார்த்துக் கொள்வார்! அதுவும் அவர் பெண்ணை மட்டும் நீ பார்த்துக் கொண்டால் போதும்…” என்று சில வக்கிர புத்தியோடு பேசுவார்.
“உனக்குத்தான் உன் மாமனார் தொழில் எல்லாம் இருக்கே… உன் மச்சானும் வெளியூரில் தான் படிக்கிறான். உன் அப்பா நட்டம் பட்ட அந்த பஞ்சு மில்லை என்னடா பண்ணப் போகிறாய்? என்னிடம் கொடுத்த விடு! உனக்கு பார்த்து போட்டு தருகிறேன் என்ன இருந்தாலும் நீ என் அண்ணன் தானே!” என்று தொந்தரவு செய்வார்.
“தங்கம்.. என்னால முடியும் அந்த மில்லை திரும்ப கொண்டு வந்திட முடியும். இப்போதைக்கு நான் விக்கிற பிளான்ல இல்லை” என்று பலமுறை கூறிப் பார்த்துவிட்டார் அருளும். ஆனால் தங்கம் கேட்பதாக இல்லை. தொடர்ந்து தொந்தரவு கொடுக்க ஆதிசங்கரின் தலையிட்டால் சற்று அமைதியாக இருந்தாலும், இவரை கண்டவுடன் பேச்சு குறைவது காணும்.
அருளும் விலகிய சென்றிடுவார். துஷ்டனை கண்டால் தூர விலகு என்பதை போல… ஆனால் அதையே நம்பிராஜன் ஆதிக்கு செய்யமுனைய தந்தை போல் இல்லாமல் தாத்தாவைப் போல நின்று ஒரு முறைப்போடு பதிலுக்கு பதில் கொடுத்துவிட்டு செல்வான். அந்த வகையில் ஆதி தாத்தனின் வாரிசே!!
நம்பிக்கும் அவனது தந்தை தங்கத்திற்கும் இவர்களது பஞ்சுமில் மீது ஒரு கண்ணு தான்!! ஆதி தலை எடுத்தவுடன் அதை இன்னும் விரிவாக்கம் செய்து சுற்றுப்புறத்தில் உள்ள அனைத்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக பருத்தியை இவன் தருவித்துக் கொள்வதால் விவசாயிகளும் நல்லா லாபத்துடன் ஆதிக்கு விற்க முனைந்தனர்.
இப்பொழுது கல்யாணம் சமயத்தில் ஆதி இருப்பதால் தொழிலில் சரியாக கவனிக்க மாட்டான் என்று நம்பிராஜன் நம்பி.. இவன் பருத்தி ஆலைக்கு செல்ல இருந்த பருத்தி முட்டைகளை குடோனில் இருந்து கடத்தினான். பின் தரமற்ற பருத்தி மூட்டைகளை அங்கே வைப்பதே நம்பியின் திட்டம்.
நம்பி எப்படியும் கோக்குமாக்கு வேலையை புரிந்த ஆதி, அப்போது தான் விவசாயிகளிடமிருந்து வாங்கிய பருத்தி மூட்டைகளை
சண்முகம் மூலம் ராத்திரியோடு ராத்திரியாக அனைத்தையும் இடம் மாற்றிவிட்டான். அதாவது தரமான பஞ்சு மூட்டைகளை இவனே அகற்றிவிட்டு அதற்கு பதில் இரண்டாம் தரப் பஞ்சுகளை அங்க வைத்து, அதை மாற்ற வந்த நம்பியையும் அவன் ஆட்களையும் வேலையை செய்ய விட்டு அவற்றை சிசிடிவி மூலம் வீடியோ போட்டோ என சாட்சிக்கு எடுத்து வைத்துக் கொண்டான்.
நம்பியோ அந்த மூட்டைகள் எல்லாம் நல்ல மூட்டைகள் என்று நம்பி.. திருப்பூரில் இருக்கும் மற்றொரு கம்பெனிக்கு அனுப்பி வைத்து விட்டான். ஆதியை வென்றதாக அங்கே நம்பி சந்தோஷத்தில் இருக்க அவனுக்கு ஆதி ஆப்பை வைத்தது தெரியாமல்..
இந்த மொய்த் திருவிழாவில் எவ்வளவு நன்மை இருக்கிறது அதே அளவில் சில பல தீமைகளும் உண்டு. வியாபாரிகளும் விவசாயிகளும் இந்த முறை பணத்தை தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தி வெற்றி கண்டாலும் அல்லது நஷ்டப்பட்டாலும் சரி.. தனக்கு மொழி செய்தவர்களுக்கு திரும்ப மொழி செய்திட வேண்டும் அந்த நான்காண்டுகளுக்குள்!!
அப்படி செய்யத் தவறினால் அவர்கள் பேச்சும் பேச்சிலும் நடத்தும் நடவடிக்கைகளும் தானாகவே நாண்டுக்கிட்டு செத்தவர்கள் உண்டு.
மொய்பணம்.. இதுவும் இருபக்கம் கூறுமுனை உள்ள கத்தியை போன்றது!! ஞாபகமாக பயன்படுத்தினால் தன்னை தற்காத்துக் கொள்ளலாம்!! இல்லையேல்.. அது நம்மை அழிக்கவும் தயங்காது.
பல நாள் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த பெருச்சாளியை குறிவைத்து பிடித்த வெற்றி களிப்பில் சந்தோஷத்தில் வீட்டுக்குள் நுழைந்த ஆதி கண்டது என்னவோ அழகியும் மைத்ரேயியும் ஒருவரை ஒருவர் கழுத்தை நெருக்கிக் கொண்டு கண்களில் தீப்பொறி பறக்க நின்றிருந்ததைத்தான்!!
ஏகம்மையும் மங்கையும் வீட்டில் இல்லை. பின் பக்கம் தோட்டத்தில் இருக்க.. கோவில் சென்று தம்பதியராய் வந்த அழகியை ஒருவித வன்மத்தோடு பார்த்தாள் மைத்ரேயி. “ஏற்கனவே மூத்த தாரத்து மகள்.. உரிமை உள்ளவள்.. இப்போ ஆகிய வேற கட்டியிருக்கா.. பார்த்து இருந்துக்கோ மைத்ரேயி, உன்னையும் உன் ஆத்தாளையும் வீட்டை விட்டே துரத்திட போறா?” என்று பலரும் அவள் காது படவும் முதுகுக்கு பின்னாலும் பேசியிருக்க.. அது தீயாய் எரிந்தது அவள் மனதில்!!
இப்பொழுது இந்த வீட்டுக்கு அதிகாரமாய் வந்தவளை கண்டு ஆத்திரம் மிகுந்தது மைத்ரேயிக்கு. அதை நஞ்சாய் வார்த்தைகளில் கொட்ட காத்திருந்தாள் அவள்!!
அருகில் ஆகர்ஷனா இருக்க அவளிடம் பேசுவது போல “ஏன் அத்தாச்சி இப்படி நேர்வழியில வராம குறுக்கு வழியில போறவங்களுக்கு ஒரு பேர் இருக்குதாமே! அது என்னன்னு உனக்கு தெரியுமா?” என்று உதட்டை பிதுக்கி ஒன்றும் அறியா பிள்ளை போல முகத்தை வைத்து சனாவிடம் கேட்க..
ஷனா மைத்ரேயின் பால் அதிக அன்பு வைத்திருப்பவள், சிறு வயதில் இருந்தே சேர்ந்து வளர்ந்த பாசம் வேறு!! இப்படி அண்ணன் செய்தது அவளுக்கும் பிடிக்காமல் இருக்க.. மைத்ரேயிக்கு ஒத்து ஓதினாள் ஷனா.
“தெரியுமே அத்தாச்சி… நல்லா தெரியுமே!! அதுக்கு பேரு…” என்று நிறுத்தி அழகியை பார்த்து “எதற்கு பேரை சொல்லிக்கிட்டு அதான் ஆளே நேரில் இருக்கிறாளே!” என்றாள் ஷனா.
அப்பவும் இவர்களிடம் பேசுவது வீண் என்று நினைத்த அழகி அதே நேரம் இவர்களுக்கு பயந்து அறைக்குள் சென்று முடுங்கிவதையும் தவிர்த்து அவர்கள் எதிரே இருந்து சோஃபாவில் தான் அமர்ந்து இருவரையும் தீர்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
செய்ததை சொல்லிக் காட்டினால் அவமானப்பட்டு அறைக்குள் சென்று முடங்கி கொள்வாள் இல்லை கண்ணீர் விடுவாள் என்று இவர்கள் எதிர்பார்த்து இருக்க… அவள் அப்படி செய்யாமல் இருப்பது இவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. அப்பவும் சும்மா இல்லாமல்… “சொத்தை கண்டதும் எல்லாம் மறந்து போகும் போல… பணம்னா பிணம் கூட வாயைப் பிளக்கும் என்பர்களே அதுபோல போல..” என்று எகத்தாளமாக மைத்ரேயி பேசி ஏளனமாக சிரிக்க..
மைத்ரேயி என்கிற ஒருவள் அங்கே இருப்பது போல காட்டிக் கொள்ளாத அழகி ஆகர்ஷ்னாவை பார்த்து,
“உனக்கு புது உதாரணம் தேவை இல்லை ஆகர்ஷனா! அதுக்கு தான் இவ அம்மாவே இருக்காங்களே உதாரணத்திற்கு… ரொம்ப பழைய உதாரணம்!!” என்று உதட்டை பிதுக்க..
“ஏய்.. நீ தான்டி என் வாழ்க்கைய பறிச்ச!!” என்று கத்தினாள் மைத்ரேயி!
“எது? உன் கூட ஒன்னு மண்ணா வாழ்ந்த உன் புருஷனை நான் என் பக்கம் இழுத்தனா என்ன? தாலி கட்டி முடிக்கும் வரைக்கும் எந்த ஒரு பந்தமும் திருச்சங்கு சொர்க்கம் மாதிரிதான். அப்படிப் பார்த்தால் என்ன விட உனக்குத்தான்… அதைப்பற்றி அதாவது இந்த குறுக்கு வழியில் வந்ததை பற்றி இன்னும் நல்லா தெரிந்திருக்குமே.. பால பாடமே நல்லா நடத்திருப்பார்களே சின்ன வயசிலிருந்து!!” என்று அழகியும் பேச…
இதனால் வரை மற்றவர்கள் அவள் அம்மாவை இவளுக்கு முதுகுக்குப் பின் பேசியதை இன்று அழகி முகத்துக்கு நேராக பேச மிகுந்த கோபத்தோடு “இனி ஒரு வார்த்தை என் அம்மாவை பற்றி பேசினாலும் உன்னை கொன்று விடுவேன்டி!!” என்று ஆக்ரோஷமாக நின்றாள் மைத்ரேயி.
“ஏன் பேசக்கூடாது? இல்லை ஏன்பேச கூடாதுனு கேட்கிறேன்! நீ என்னை பேசும்போது.. உன் அம்மாவை நான் ஏன் பேசக்கூடாது? நல்லா பேசுவேன்!! அதற்கு மாமா வேலை பார்த்த உன் அம்மாவையும் பேசுவேன்…!” என்று ஷனாவையும் அழகி இழுக்க..
ஷனா அவளின் பேச்சில் அதிர்ந்து பின் “ஏய்…!!” என்று பாய்ந்து வர..
“அண்ணி!! அண்ணி!! அந்த வார்த்தையை தாண்டி ஒரு வார்த்தை உன் வாயிலிருந்து வரக்கூடாது!! சரியா? யார வேனாலும் அத்தாச்சியினு கூப்பிடலாம். அண்ணன் பொண்டாட்டிய மட்டும் தான் அண்ணின்னு கூப்பிட முடியும். அண்ணின்னு மட்டும் தான் இனி உன் வாயில் வரணும் காட் இட்!!” என்று அவளை மிரட்டி விட்டு, மைத்ரேயியை நக்கலாக பார்த்து “அப்புறம் இப்படி எல்லாம் பேசினா மூலையில் உட்கார்ந்து ஊழூஊழூனு அழுவேனு நினைத்தாயா? தப்பு செஞ்சு இத்தனை வருஷமா அந்த குற்ற உணர்ச்சி இல்லாமல் தலை நிமிர்ந்து வாழும் உனக்கும் உன் அம்மாவுக்கும் இவ்வளவு இருக்கும்போது… நேர் வழியில பிறந்த எனக்கு ஏண்டி தலை நிமிர்வு இருக்கக்கூடாது?” என்று அழகி நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்க..
இந்த நிமிர்வு.. திமிர்.. ஆளுமை இதையெல்லாம் அழகியிடம் கண்டவளுக்கு ஆத்திரம் கண்ணை மறைத்தது. இதுபோல் எல்லாம் மைத்ரேயியால் யாரிடமும் பேச முடியாது. எந்த ஒரு விசேஷத்திற்கு சென்றாலும் அதுவும் மங்கை கூட தான் பெரும்பாலும் செல்வாள்.
“என் அண்ணன் மக… என் மருமக…” என்று யாரிடமாவது மங்கை அறிமுகப்படுத்தினால், “யாரு சுபத்திரை மகளா?” என்று ஆர்வாமாக கேட்பார்கள். “இல்லை..!” என்றால், “ஓஹ்.. ஏகம்மை மகளா..” என்று கேலியை கேட்பவர்கள் குரலில் தெரிவிக்க.. அதிலேயே அவமானம் பிடுங்கி திங்கும் மைத்ரேயிக்கு. ஒன்றும் கூற முடியாமல் அமைதியாக தன் நிலைமை கண்டு ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு விடுவாள்.
இப்போது அழகியின் இந்த துணிவு அவளை தலைகீழாக புரட்டி போட ஆத்திரம் கண்ணை மறைக்க.
அழகியின் கழுத்தை இறுக்க பிடித்து விட்டாள் மைத்ரேயி!!
“அத்தாச்சி… வேணாம்!! விடு.. விடு.. யாராவது பார்த்தா பிரச்சினை பெருசாயிடும்.. உன்னை நான் பேசுவாங்க…” என்று ஆதர்ஷனா அவ்வளவு சொல்லி பிரித்து விட பார்த்தாள். ஆனால்.. மைத்ரேயி அப்பொழுது முழு சந்திரமுகியாக மாறி இருக்க… யாரின் வார்த்தையும் காதில் விழவில்லை. பதிலுக்கு அழகியும் சும்மா இருக்காமல் அவளது கழுத்தை இறுக்கப்பற்றி விட்டாள்.
“அத்தாச்சி.. விடு.. விடு.. சொல்றேன்ல…” என்று ஆகர்ஷனா அவர்களிடையே மல்லுக்கட்ட… ஷனாவின் அத்தாச்சி மைத்தியை வெறியேற்றியது.
“ஏய்.. ஷனா.. என்னை அத்தாச்சி கூப்பிடாதே! அண்ணி கூப்பிடு!” என்று அதட்டினாள்.
“எது? அண்ணியா? ஆத்தி!!!” என்று ஷனா பயத்தோடு வாயிலை பார்த்தாள். அண்ணன் எங்கே வந்து விட போகிறானோ என்று!!
“எங்கே கூப்பிடு பார்ப்போம்?!” என்று அழகியின் விழிகள் சவால் விட… பயத்தில் தொண்டை குழி ஏறி இறங்கியது ஷனாவுக்கு. பொதுவாக ஆதிக்கு சட்டென்று கோபம் வராது. அப்படி வந்தது என்றால்… எதிரி நொந்து போய்விடுவான் அப்படி இருக்கும் அவனது கோபம்!!
“சொல்றத கேளேன் அத்தாச்சி… அண்ணன் வந்துட போகுது!” என்றாள் ஷனா. பிறந்ததிலிருந்து அத்தாச்சி என்று கூப்பிட்டு பழகிய ஷனாவால் சட்டென்று மாற்ற முடியவில்லை.
“ஹேய் ஷனா… உங்க மாமா மாதிரியே உங்க அண்ணனையும் மாத்த பார்க்கிறா… கூப்படு கூப்படு அவளையும் அண்ணினு கூப்பிடு!!” என்று எகத்தாளமாக அழகி கூற.. அதே நேரம் ஆதியும் உள்ளே நுழைய.. இவர்கள் இருவரையும் கண்டு திகைத்தான்.
அண்ணனை கண்ட ஷனாவுக்கு சர்வமும் நடுங்கியது!!
ஆதி இவர்களை பார்த்து “என்ன பண்றீங்க ரெண்டு பேரும்?” என்று இருவரையும் விலக்கி விட…
உடனே நீலிக் கண்ணீர் வடித்த மைத்ரேயி “பாருங்க மாமா… நானே கல்யாண நின்ன சோகத்தில் இருக்கேன். இவள் வெந்த புண்ணுல வேல பாய்ச்சுறது போல சும்மா சும்மா என்னை சீண்டி கொண்டே இருக்கா மாமா… என்னை சீண்டுறது மட்டும் பத்தாம பொண்ணு வாழ்க்கையே கேள்வியா போச்சுனு தினம் தினம் கண்ணீர் வடித்து சோகத்தில் இருக்கிற என் அம்மாவையும் பேசுகிறா மாமா!! நாங்கள் இரண்டாவதா வந்தவங்க தான். ஆனால் அதற்கு காரணம் நாங்க மட்டுமா மாமா? எனக்கும் நடந்த விஷயங்கள் எல்லாம் ஓரளவு தெரியும் தான்!! இன்னொரு முறை இப்படி உங்க பேசிட்டு இருந்தாங்க நானும் என் அம்மாவும் ஒரேடியா போய்டுவோம்!!” என்று கண்ணீர் வடித்தவளை எங்கனம் கடிந்து கொள்ள முடியும் ஆதியால்?
அருகில் நின்ற தங்கையை பார்த்து “அம்மு மைத்தியை கூட்டிட்டு போ!!” என்றதும்.. அப்பாடி என்று நிம்மதி அடைந்த ஷனா திரும்பி போக முயல..
“அப்போ அவ பேசுறத மட்டும்தான் காதுல வாங்குவீங் என்கிட்ட என்னன்னு கேக்க மாட்டீங்க!! அப்படித்தானே? சச்சி ரெடிக்குலஸ்!!” என்று ஆக்ரோஷமாய் அழகி பேச அவளை திரும்பி பார்த்தவன் “வாயை மூடுடி!!” என்று கர்ஜிக்க மைத்ரேயி முன் தன் கணவன் தன்னை திட்டியதை அவமானமாக உணர்ந்த அழகி விடுவிடுவென்று தங்கள் அறைக்கு சென்று விட்டாள்.
அவள் போவதையே பெரு மூச்சுடன் நெற்றியை தேய்த்துவாறு பார்த்த ஆதி, அவளை எப்படி சமாதானப்படுத்த என்று குழம்பி நின்றான்.
ஆசை வளரும்.
8
