புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

சுயம் வரம் : 13


தன் தந்தையிடம் விடைபெற்றுக் கொண்டு மீண்டும் ஹாஸ்டலில் தனக்கு கொடுக்கப் பட்ட அறைக்குள் வந்தவளுக்கு முத்து முத்தாக கண்ணீர் துளிகள் வடிந்து கன்னத்தை தாண்டி தரையில் தெறித்தது.


இத்தனை வருடம் தன் தந்தையை பிரிந்து இருக்காததால் ஏற்பட்ட வலி இது. பதினெட்டு வருடம் பெற்றவர்களின் நிழலிலே வளர்ந்த மதிக்கு இன்று அவரைப் பிரிந்து ஒரு மணி நேரம் கூட கடத்த முடியவில்லை.

ஒரே மூச்சாக ஒரு மணி நேரம் அழுது முடித்தவள்.. தன் மேலே சுயப் பச்சாதாபம் பட்டுக் கொண்டாள்.


அக்னியைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை கண்ணீரில் தான் மிதக்கிறது அவள் வாழ்க்கை.


மெல்ல கண்களைத் துடைத்துக் கொண்டு தான் கொண்ட வந்த பெட்டியில் இருந்த துணிகளையும் பொருட்களையும் அலமாரியில் அடுக்கி வைத்தவள் தனது ரூமில் இருந்த இன்னொரு இரும்பு கட்டிலும் அலமாரியும் காலியாகவே இருக்க.. இன்னும் அங்கு யாரும் வரவில்லைப் போலும் என்று நினைத்துக் கொண்டவளுக்கு உடல் கசகசவென்று இருக்க.. குளியல் அறைக்குள் சென்று குளித்து விட்டு வெளியே வர அதற்குள் இரவாகி விட்டு இருந்தது.


மறுநாள் அதிகாலையிலே கண் முழிப்பு தட்டிவிட.. மெல்ல எழுந்து உக்கார்ந்தவளுக்கு முற்றிலும் தூக்கம் கலைந்த உணர்வு.

புது இடம் என்பதாலோ என்னவோ அதிகம் தூக்கம் பிடிக்கவில்லை வெண்மதிக்கு.


எழுந்து முகம் கழுவி பல் துலக்கிவிட்டு வந்தவள் கீழே சென்று பால் பிடித்து விட்டு காபியும் கலந்தாள்.

காலை எட்டு மணிக்கே காலேஜ் என்பதால் அங்கு இருந்த மாணவர்கள் பரபரப்பாக கிளம்பிக் கொண்டு இருந்தனர்.


வெண்மதியும் மணி ஏழாகியதைக் கண்டு தானும் அறைக்குள் சென்று வேகமாகக் கிளம்பியவள்.. ஹாஸ்டல் டைனிங் ஹாலில் இருந்த கிச்சடியையும் தேங்காய் சட்னியையும் எடுத்துக் கொண்டு மெதுவாகவே உண்டு முடித்து கிளம்பியவளின் கால்கள் சற்று துள்ளலுடனே கல்லூரியை நோக்கி நடந்தது.


வெள்ளை அனார்கலி சுடிதார் வித் பிங்க் கலர் துப்பட்டா அணிந்து முடியை ஒரு கிளிப்புக்குள் அடக்கி பின்னல் இடாமல்  விட்டு இருந்தால்.. அது ஒரு பக்கம் காற்றில் அசைந்தாட.. மயில் போல் அன்னநடையில் நடந்து வந்தவளை கண்ட யாவரும் ஒரு நொடி திரும்பிப் பார்த்து ரசித்து விட்டு தான் கடந்தனர்.


இந்த கல்லூரியில் ராகிங் ஸ்ட்ரிக்ட்லி நோ என்பதால் அவளுக்கு அந்த இடையூறும் இல்லை.

அவள் ஏற்கனவே டாக்குமென்ட் ஒப்புவிக்க வரும்போதே அவர்களுக்கு முதலாம் வருடம் ஒதுக்கப்பட்ட வகுப்பறையில் இருந்து தான் வாங்கி இருந்ததால் அவளுக்கு சுற்றி இருந்தக் கட்டடங்களைப் பார்த்து தன் வகுப்பு எதுவாக இருக்கும் என்று மிரளவில்லை அவள்.


சி ப்ளாக்கில் இரண்டாவது மாடிக்கட்டிடத்தில் 306 என்பது தான் அவளின் வகுப்பறை. மதி பனிரெண்டாம் வகுப்பில் தொண்ணுறு சதவீதம் பெற்று இருந்தாள்.

அவள் வைத்து இருந்த மதிப்பெண்ணுக்கு இன்ஜினியரிங் கூட சேரலாம் ஆனால் பேஷன் டிசைனிங் எடுத்து இருந்தாள்.அது அவளின் கனவு.

வருங்காலத்தில் சிறந்த ஆடைவடிவமைப்பாளராக வேண்டும் என்பது அவளின் ஆசை.


தன் வகுப்பிற்குள் முதலில் நுழையும் போதே அங்கு பெரும்பாலான மாணவர்கள் ஏற்கனவே வந்துவிட்டு இருந்தனர்.


மதி வகுப்பறைக்குள் வந்த போதே தனக்கு எங்கு உட்காரலாம் என்று அறை முழுவதும் கண்களை சுழற்றி பார்க்கவே.. நான்கவது பெஞ்சில் இடம் காலியாக  இருக்க.. அதை நோக்கி சென்று அமர்ந்துவிட..


அப்போது அவளின் கண்களை இறுக்கிப் பொத்தியது ஒரு கரம்.


“யாரது…?” என்று மதி ஒரு நிமிடம் தடுமாறினாள்.


அந்தக் கையை பிடித்து தடுக்க முயல.. அப்போது வெடுக்கென்று கையை எடுத்துக் கொண்டு “சர்ப்ரைஸ்” என்று சொன்னது இந்துஜாவே தான்.


“ஹே நீயா…? எப்படி…?”


“அப்படித் தான்…” என்று கண்ணடித்தவளை கண்ட மதி இதை எதிர் பார்க்கவில்லை தான்.. 


“நீ என்கிட்ட சொல்லவே இல்ல… சென்னை போகப் போறேன்னு தானே சொல்லிட்டு இருந்தே…?”


“இல்ல டி உன்னை விட்டுட்டு அங்க எல்லாம் எனக்கு போக விருப்பம் இல்ல.. அதான் உன் கூடவே இந்த கோர்ஸ் ஜாயின் பண்ணிட்டேன்.

நீ தான் ஆத்தா ஒரு ஊசி நூல் கூட கோர்க்கத் தெரியாத பிள்ளைக்கு எல்லாம் சொல்லித் தரனும்..”


“ஹாஹா..!!” என்று வாய் விட்டே சிரித்தவள்..

 “சரி டி… இதில் என்ன இருக்கு… நான் சொல்லித் தரேன்.”


மதிக்கு அவளின் தோழி அவள் வகுப்பிற்கே வந்தது மகிழ்ச்சியாகவே இருந்தது. காரணம் மதி அவ்வளவு எளிதில் மற்றவர்களுடன் ஒன்றிப் பழகிவிட மாட்டாள்.


இன்று முதல் நாள் என்பதால் வகுப்புகள் ஏதும் பெரிதாக நடக்கவில்லை..

அவர்களுக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் வந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு மாணவர்கள் ஒவ்வொருவராக எழுந்து தங்கள் பெயரை சொல்வதுமாக சென்று விட..


பிரெஷேர்ஸ் பார்ட்டி ஒன்று நாளைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க..

அதன் குதுகலத்தினுடனே அன்றைய கல்லுரி வகுப்பு மதியம் ஒன்று மணிக்கே முடிந்து விட்டது.


மதியும் இந்துஜாவும் நெடு நாள் கழித்து நேரில் சந்தித்துக் கொள்வதால் நண்பிகளுக்கு பேச வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்க..

பேசி கிண்டல் செய்து கொண்டு இருந்தனர்..

அதன் ஊடே இந்துஜா சொன்னாள்..


“மதி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா…?”


“என்னடி…?”


“எனக்கு மாப்பிள்ளை முடிவு ஆகிட்டு டி…”


“என்ன டி லூசு சொல்லுற…? அதற்குள்ளயேவா…!!’ என்று வாயை பிளந்தாள்.


“ஆமா டி மதி. எங்க மாமா பையன் சுந்தரம்.”


“அவரு உங்க அக்காவை கட்டிக்க இருந்தவரு தானே…?”


“ஆமா டி அவருக்குத் தான் பேசி இருந்தோம்.. ஆனால் அவ தான் இன்னொருத்தன் கூட ஓடிப்போய்ட்டாளே…!!” என்றவளுக்கு கோபமும் சோகமும் ஒன்றே படர்ந்து இருந்தது.


“அதனால அக்காவிற்கு பதில் தங்கச்சி ப்ரீயா…?” என்று மதி அவளின் வருத்தமான முகத்தைக் கண்டு அதைப் போக்க எண்ணி கிண்டல் செய்ய..


“இல்ல டி எங்க மாமா ரொம்ப நல்லவரு… பாவம் எங்க அக்காவிற்குத் தான் கொடுத்து வைக்கல..”


“அதனால் நீ வாழ்க்கை கொடுக்க ஆரம்பிச்சிட்டீயாக்கும்…”


எங்க அக்காவால இரண்டு குடும்பத்துக்கும் ரொம்ப அசிங்கம் டி…

எங்க மாமா குணம் தெரியும் அதனால் தான் எங்க வீட்டில் ஆசைப் பட்டு கல்யாணம் என்னை பண்ணிக் கொடுக்கணும்னு நெனைக்குறாங்க..


நான் தான் படிப்பை முடிக்காமல் கல்யாணம் பண்ண மாட்டேன்னு அடம் புடிக்க.. சுந்தரம் மாமாவும்  எனக்கு அந்த இடத்தில் சப்போர்ட் பண்ண.. அதற்கு மேல நான் அவரைப் பற்றி பெரிதாக எல்லாம் நான் யோசிக்கலை டி..”


“சரி சரி…!!” என்று மதியும் அதற்கு பிறகு அதைப் பற்றி பெரிதாக பேசவில்லை.


“சரி டி…நான் காலேஜ் ஹாஸ்டல் தான்… அதனால் நான் உள்ளே சாப்பிட போயிட்டு பிரெஷப் ஆகிட்டு வரேன்.. நீயும் சாப்பிட போ மதி.”


“இந்துஜாவின் வீட்டில் பிரைவேட் ஹாஸ்டலுக்கு எல்லாம் தங்க அனுமதிக்க மாட்டார்கள் என்று மதிக்கு தெரியும்.

மதியின் தந்தை போல் அவளின் நண்பி வீட்டில் சுகந்திரம் ரொம்ப  கிடையாது. அதனாலே அவள் ரூமில் ஒரு இடம் இருந்தும் அவளிடம் கேட்கவில்லை அவள்.


இந்துஜாவின் ஹாஸ்டல் காலேஜுக்குள் இருந்ததால் அவளை விட்டுவிட்டு மதி.. அவளின் ஹாஸ்டலுக்கு உணவருந்த கையில் வைத்திருந்த பையையும் காற்றில் ஆட்டியபடி ஒரு இளையராஜா பாட்டையும் முணுமுணுத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள். அப்போது அவளின் அலைபேசி பைக்குள் இருந்து டிங் டிங் என்று மணியடிக்க அதை எடுத்துப் பார்த்ததும் அவளின் அப்பா என்று காட்டியது… அதில் குதுகல மாகி…


“ப்பா…!!”  என்றாள் உடனே போனை அட்டென்ட் செய்து உற்சாக குரலில்.


“ஏய் செல்லம் எப்படி இன்னைக்கு காலேஜ் ஃபர்ஸ்ட் டே போச்சு..

நான் இங்க உன்னை அப்பா ரொம்ப மிஸ் பண்றேன் டா..”


“நானும் தான்ப்பா…” என்றவளுக்கு அவரின் ஞாபகம் படுத்தித் தான் எடுத்தது.


உன் அத்தை நேத்துல இருந்து சரியாவே சாப்பிடல..

பாருடா செல்லம் என்கிட்ட இப்பவே சண்டை போட ஆரம்பிச்சிட்டா.. அவ காலேஜ்ல படிக்க வேண்டாம் என் கூடவே இருக்கட்டும்.. இல்ல நான் அவக் கூட அங்கப் போய் தங்கிக்குறேன் அப்படி சொல்லிட்டு பெட்டி எல்லாம் தூக்கிட்டா..” என்று சிரித்துக்கொண்டே சொல்ல..


“இன்னும் கொஞ்ச நாள் தான் பா இந்த காலேஜ் எல்லாம் முடிஞ்ச அப்புறம் நாங்க கூட  தானே இருக்க போறேன்..”என்று சமாதானம் சொன்னது அவருக்கா இல்லை இவளுக்கா என்று அவளுக்கே தெரியவில்லை.


“சரிடா செல்லம்.. சாப்டியா..? மணி  இரண்டு ஆகப்போகுது…?” 


“இல்லப்பா இனிதான் சாப்பிடணும். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா…? என் ஃப்ரெண்டு இந்து எங்க கிளாஸ்ல என் கூட தான்ப்பா ஜாலி…!!” என்று துள்ளல் குரலில் சொல்ல..


இது அவருக்கு ஏற்கனவே தெரிந்த விடயம் போலும்.

“எப்படிமா இருக்கு அப்பாவோட இன்னொரு சர்ப்ரைஸ்…!!” என்று கேட்டவுடன் தான் இது உங்களுக்கு முன்னாடியே தெரியுமா…?

ஏன்ப்பா என்கிட்ட சொல்லல…?” என்று கோபத்துடன் கேட்க..


“அதான் சர்ப்ரைஸ்ன்னு சொல்லிட்டேன்ல டா செல்லம்..”


மதி அப்போதும் கோபம் மறையாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு உர் என்று எதுவும் பேசாமல் இருக்க..


அங்கு இருந்து ஹலோ ஹலோ என்று அவளின் அப்பாவின் குரல்.


“ஹேட் யூ ப்பா…”


மகளின் சிறு பிள்ளைத் தனமான கோபம் புரிந்து மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.

வாய் விட்டு சிரித்தாலும் அதற்கும் முகத்தை தூக்கி வைத்துக் கொள்வாள் பெண் என்பதை அறிந்தவர்..

“இன்னும் ஒரு மாசத்துல நான் என் செல்லத்தை பார்க்க போறேன். அதற்கு வேறு இருபத்தி ஒன்பது நாள் தான் இருக்கு..

“சரி சரி டா..!!

நீ போய் சாப்பிடு சரியா..? அப்பா பிறகு பேசுறேன் டா செல்லம்.

நல்லா சாப்பிடுடாமா..

எத பத்தி யோசிக்கக் கூடாது எதனாலும் அப்பா கிட்ட சொல்லிடனும்.

 பத்திரமா இரு. என்று சொல்லிவிட்டு மறுமுனையில் அழைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.

அவருக்கு அதற்குள் வேலை வந்து இருந்தது அதனாலே அவசரமாக பேசிவிட்டு துண்டித்து விட்டார்.


கையில் வைத்திருந்த நோக்கியா போனை பார்த்த மதிக்கு அப்பாவிற்கு வேலை வந்து இருக்கும் அதனாலே தான் 

போனை வைத்து விட்டார் என்பது புரிந்து இருக்க.. அவளும் மதிய உணவருந்த சென்றுவிட்டாள். அன்றைய நாட்கள் பெரிதாக ஏதுமில்லாமல் சற்று போராகவே கழிந்தது.


 மறுநாள் பிரேஷேர்ஸ் டே என்பதால் அந்த கல்லூரியில் இருந்த விசாலமான ஆடிட்டோரியத்தில் சீக்கிரமே வந்து இருந்ததால் இந்துஜாவும் மதியும்.

முன்பே வந்து இருந்ததால் முன் சீட்டு கிடைத்திருந்தது.

நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டவர்கள்.

அன்று அவர்களுக்காக சீனியர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பார்ட்டியை காண ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர்.


முதலில் எல்லோர்க்கும் ஒரு வெல்கம் ட்ரிங்க்ஸ் கொடுக்க..

ஜூஸை குடித்து விட்டு டம்ளரை குப்பைத் தொட்டியில் போடவும் என்று மேடையில் ஒரு ஆசிரியர் மைக்கில் அறிவுரை கூறிக் கொண்டு இருந்தார்.

அதன் பின் சீனியர் ஒருவர் வந்து முன்னுரையை சுருக்கமாக வாசிக்க..

நிகழ்ச்சி கோலாகலமாக நடன நிகழ்ச்சி தொடங்கியது.

 ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்க்கும் இரண்டு மணி நேரம் தான் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்ததால் இரண்டு நடனங்கள் மட்டுமே இருந்தது.


பாட்டுப் பாட யாரும் இல்லாததால்

ஜூனியர்சில் யாரு நல்ல பாடுவீங்க…? மேல வந்து பாடலாம். என்று ஒரு சீனியர் மாணவன் அழைக்க.


 யாரும் வாயை திறக்கவே இல்லை ஒண்ணு ரெண்டு பேருக்கு பாடத் தெரிந்தாலும் என்னவோ மேடை ஏறி சென்று பாட கூச்சமும் தயக்கமும் போட்டிபோட அமைதியாக அமர்ந்திருந்தனர். 

அப்போது எழுந்த இந்துஜா என் பிரெண்ட் நல்லா பாடுவா…”

என்று  சொல்லவும்..  


“பயபுள்ள எப்படி கோர்த்து விடுது பாரு..” என்றுதான் நினைத்து தலையில் அடித்துக் கொண்டாள் மதி.


“கமான் வெண்மதி என்று கூக்குரல் சீனியர் இருவரிடமிருந்து வர..

 

“போடி…!!” என்றாள் இந்துஜா.


மதி நன்றாகப் பாடுவாள் என்றாலும் அது இந்துஜாவிடம் மட்டும்தான் பாடிக் காட்டுவாள்.

 அது அவளுக்கே வினையாக முடிந்து விட்டது போல் தோன்றியது.

 அதிக திறமை இருந்தாலும் அதே மேடையில் முழங்கும் அளவிற்கு தைரியமற்ற பயந்தாங்கோலி.

 இப்படி கூட்டத்தில் தன்னை கோர்த்து விட்ட இந்துஜாவைக் கண்டு கொலை வெறியே வந்தது.

இதற்கு மேல் தப்பிக்க முடியாது என்று தோன்ற..

மெல்ல தைரியத்தை வர வளைத்துக் கொண்டவள் இருக்கையை விட்டு எழுந்து சென்று நடக்கும் போதே கை கால்கள் என சகலமும் நடுங்கியது கூட்டத்தைக் கண்டு. மேடையிலேயே மயங்கி விடுவோமோ என்ற பயத்தில் எட்டு நடை வைக்க. அவள் முன்னால் நின்றிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை கண்டவுடன் மயக்கத்திற்கு சென்றிடுவாள் போல.. 

இப்படி மேடையில் மயங்கி விழுந்து வந்து சேர்ந்த இரண்டாவது நாளிலே காமெடி பீஸாக போகிறோமோ என்ற எண்ணம் தோன்ற அவள் மைக்கை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.


பாடு என்ற குரல் அவளை சுற்றி வண்ணம்  எதிரொலிக்க பயத்தில் காத்துதான் வந்தது.


அவள் அருகில் வந்த ஒரு சீனியர் மாணவி “பயப்படாதே இது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல. நான் கூடவே நிற்கிறேன் இப்ப பாடு என்று தைரியம் ஊட்ட அவளுக்கு இப்போது தான் சற்று தெம்பு வந்தது போல் இருந்தது. அவரின் கையை சற்று அழுத்தி பிடித்துக்கொண்டு மெல்ல தன் இனிய குரலால் பாட ஆரம்பித்தாள்..


அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே என்ற பாடலை அவள் பாடிக்  கொண்டு இருக்க..

 எல்லோரும் அவளின் குரலில் மெய்மறந்து தான் போயினர். என்னமாதிரியான வாய்ஸ் அப்படியே ஸ்ரேயா கோஷல் வாய்ஸ் மாதிரி இருக்கே என்று அங்கு இருந்த  பலபேருக்கு தோன்றாமல் இல்லை..


இந்த ஆடிட்டோரியம் வழியாக வெளியே நடந்து சென்று இருந்தவன்  இந்த இன்னிசை குரல் ஸ்பீக்கர் வழியாக கேட்க ஒரு நொடி தன் நடையை நிறுத்தி..அந்த இசையில் மயங்கி தான் நின்று இருந்தான்.


அது வேறு யாருமில்லை அக்னி தான்.  அவனுக்கு மதி நன்றாக பாடுவாள் என்று கூட தெரியாது அல்லவா..


 இந்த குரலுக்கு சொந்தக்காரி பார்க்க அவன் மனம் ஏனோ தூண்ட ஆடிட்டோரியத்தில் நுழைந்தான் அதற்குள் பாடி முடித்துவிட்டு ஆடிட்டோரியம் பின்வாசல் வழியாக நடந்து வந்து சென்று விட்டாள் மதி.

 அவன் உள்ளே நுழைவதற்கும் அவள் பின் வாசல் வழியாக வெளியே செல்வதற்கும் நேரம் சரியாக இருந்தது.


 அவள் வெளியே வந்த போது இந்துஜாவும் தன் பையை எடுத்துக் கொண்டு பின் பக்கம் வந்து விட்டாள்.

 

அதன் பிறகும் கேட்கவா வேண்டும் இந்துவை மொத்தி எடுத்துவிட்டாள் மதி.


“அந்த இடத்தில் என் மானத்தை வாங்க பிளான் போட்டு இருக்கியே டி பிசாசு என்று மேலும் அவளை அடிக்க..

 என்னை அசிங்கப்படுத்தவே எழுப்பிவிட்டுருக்கல்ல.. சரி என்கிட்ட பேசாத.” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள..


“இந்த மினி ஸ்ரேயாகோஷல் இந்த உலகத்துக்கு தெரிய வேண்டாமா…?”

எவ்ளோ நாள் தான் இப்படியே பயந்துட்டு இருப்ப…ஸ்கூல்ல தான் ஒழுங்காக யூஸ் பண்ணிக்கலை.. காலேஜில் ஆவது உன் திறமை வெளியே வரட்டும்னு தான் உன்னை தள்ளி விட்டேன்..”


“இப்ப பாரு நம்ம டிபார்ட்மெண்ட் நீதான் மினி ஷ்ரேயா கோஷல்.”


“அதெல்லாம் எனக்கு ஒன்னும் தேவையில்லை. ஆடிட்டோரியம்க்கு போகலாம் என்று சொல்லிக் கொண்டே முன்வாசல் வழியாக வர அவள் எதிரிலேயே தான் வந்து கொண்டிருந்தான் அக்னி. ஆனால் இருவருக்கும் கஷ்டம் என்னவென்றால் இருவருமே எதிரி வருபவரை சரியாக கவனிக்கவே இல்லை. அவருடன் பேசிக்கொண்டே வர எதிரில் வந்த மதியை பார்ப்பதற்கு ஒரு நொடிக்கு முன்..

மதியை ஒரு சீனியர் கையைப் பிடித்து திருப்பி அழைத்துச் சென்று விட்டார்.


தன் காதலன் காதலி எதிரில் இருந்த போதும் சந்திக்க முடியாமல் விதி சதி செய்தது.

பூவிடம் சிக்குமா புயல். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *