புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

சுயம்வரம் 19

     அக்னியைத்  தேடிச் சென்ற வெண்மதி டி ப்ளாக் அருகில் போடப்பட்டு இருந்த பெஞ்சின் ஓரம் நண்பர்கள் கூட்டத்துடன்  அமர்ந்திருப்பதை பார்த்து தயங்கி சற்று தூரமாகவே நின்று விட்டாள்.
 முதலில் அவளை வந்து நின்று இருப்பதை எதிர்ச்சையாக திரும்பி முதலில் பார்த்தது அவன் நண்பன் கிஷோர் தான்.
தன் நண்பர்களுடன் ப்ராஜெக்ட் விஷயமாக விவாதித்து கொண்டு இருந்த  அக்னியை நெருங்கி வந்து அவன் காதில் “மச்சான் உன்னோட ஆள் வந்திருக்கா டா அக்கடச் சூடு…” என்ற கிசுகிசுக்க..
 
அவன் சொன்னதும் ஒரு முறை திரும்பிப் பார்த்த அக்னி முகத்தை திருப்பிக் கொண்டு மீண்டும் தன் நண்பர்களுடன் இயல்பாக விவாதிக்க ஆரம்பிக்க..

 அவன் முகத் திருப்பலில் மதிக்கு முனுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது.
அதை யாருக்கும் தெரியாதது போல லாவகமாக கர்சீப்பால் ஒத்தி எடுத்துக் கொண்டாள்.
 அருகில் நின்று இருவரையும் கவனித்துக் கொண்டு இருந்த இந்துஜாவுக்கு தன் தோழியின் காதலுக்குள் உள்ளே நுழைவது நாகரிகம் இல்லை என்பதால்  பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள். தன் தோழியை புறக்கணித்தது வேறு கோபம் எல்லை மீறி கொண்டு வந்தது.

“மதி நம்ம கிளம்புவோமா…? பிறகு கூட வந்து உன் ஆளைப் பாரு…” என்று அங்கிருந்து அவளை கூட்டி செல்ல நினைத்தாள். அவர்கள் பிரச்னையை பிறகு பேசி சாவகாசமாக தீர்த்துக் கொள்ளட்டும் என்பது அவள் எண்ணம்.

 “உங்களுக்கு அவசரம்ன்னா நீங்க தாரளாமாக போகலாம் ஆனால் அவள் வரமாட்டாள் என்று சொன்னது சாத் சாத் அக்னியே தான்.
முதலில் அவள் மேல் இருந்த கோபத்தில் கண்டு கொள்ளாமல் இருப்பது போல நடித்தாலும் அவள் கண்களில் வழிந்த ஒரு துளி நீரும் அதை அவள் லாவகமாக துடைத்தைக் கூட அவன் லேசர் விழிகள் கவனிக்க தப்பவில்லை. முதலில் அவனுக்கு அவள் மேல் கடுங்கோபம் இருந்தாலும் பிறகு தன்னை தேடி வந்ததைக்  கண்டு அவனுக்கும் ஒரு வித இன்பசாரல் படரத்தான் செய்தது மனதில். 

அக்னி சொன்னதைக் கேட்ட இந்துஜாவுக்கு…”எனக்கு என்ன பேச்சு உங்ககிட்ட…” என்று முகத்தை வெட்டிக் கொண்டு முறைத்தவள்..
“மதி பத்திரமாக போயிட்டு பத்திரமா வந்து சேருடி…”  என்று சொல்லிவிட்டு  நடையைக் கட்டினாள்.

 “திமிரைப் பார்”  என்றவன் எங்க இருந்து புடிச்ச இந்த குள்ள வாத்தை…”

“அவ என் சின்ன வயசில் இருந்தே ப்ரெண்டு… நேத்து இவ என்கிட்டே பேசலன்னு தான் உங்க கிட்ட வீணாக கத்திவிட்டேன் சாரி…” என்று இரு காதையும் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடுவது போல் செய்யவும்…

“என்னது அந்த குள்ள வாத்துக்காக என்னிடம் சண்டை போட்டியா…ம்…இம்…” என்று உறும…

“அது வந்து… அதான் சொன்னேனே அவ என் பெஸ்ட் ப்ரெண்டுன்னு…” என்று மதி தொண்டையில் எச்சிலை விழுங்கிக் கொண்டு அவனை அச்சத்துடன் பார்த்தாள்.

இருவருக்கும் என்ன சண்டை என்றெல்லாம் அவன் கேட்கவில்லை. இனி கண்டிப்பாக கேட்க மாட்டான் காரணம் தட்ஸ் மை பர்சனல் என்று அவள் சொன்ன வார்த்தை அவனை நெருடிக்கொண்டே இருந்தது. உரிமை இல்லாதவன் போல மதி அவனை தள்ளி வைப்பது போன்ற ஒரு பிரமை. 

மேலே எதும் பேசாமல்…”வா போலாம்” என்றான் கறார் குரலில்.

 “எங்க…?”

“ஹோ…மேடம்க்கு எங்க போகப் போறோம்னு விளக்கமாக சொன்னால் தான் வருவீங்களோ…?” என்றான் புருவத்தை உயர்த்தி..

 “அப்படி இல்ல…சொன்னா நானும் தெரிஞ்சுப்பேன்ல..”

“தொனத் தொனன்னு பேசாம வாடி… நீ நேற்று  பண்ணதுக்கு நான் உன்கிட்ட முகம் கொடுத்து பேசியிருக்கவே கூடாது.”

“இரண்டு வார்த்தை பேசினது இவனுக்கு தொனத் தொனவென்று இருக்கிறதா…?” என்று மனதில் திட்டிக் கொண்டு வெளியில் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவன் கூட நடந்து வர… இரண்டு அடி தான் முன் நடந்து இருப்பான் அதற்குள் அக்னியின் நடை சட்டென்று நின்றது.

 “என்ன…?” என்று இவள் திரும்பி புரியாமல் பார்த்தாள்.
 
“கை” என்றான் அக்னி.

“என்ன கை…?” என்று மதி யோசனையாக அவனிடமே திரும்பி கேட்டாள்.

“மக்கு” என்று வாய்க்குள் திட்டியவள்.. ஹும் என்று தொண்டையை கனைத்துவிட்டு பார்வையாலே அவளின் கையையும் இவன் கையையும் சுட்டிக்காட்டினான்.

அவன் கூற வருவதன் பொருள் மதிக்கு புரிந்து விட்டது. இருந்தாலும் தானாக போய் எப்படி கையைக் கோர்ப்பது.. என்று மதி தயங்கினாள். அது பெண்ணுக்கே உரிய நாணம் அச்சம் எதோ ஒன்று மதியை தொற்றி இருக்க அதே தயக்கம் கலந்த முகத்தோடு அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

“ஓ என் கையெல்லாம் மேடம் எங்க பிடிக்கப் போறீங்க…?”  என்று நக்கல் வழியும் குரலில் பேசியவன்.. “டைம் பாஸுக்கு லவ் பண்ணுற நீ யோசிக்க தானே செய்வ…?”
என்று வார்தையால் நோகடித்தான்.

அக்னி கூறிய வார்த்தைகள் யாவும் மதிக்கு சாட்டையை எடுத்து விளாசியது போல் இருந்தது. நான்கு வருட என் பொக்கிஷ காதலை ஒரு நொடியில் நீ டைம் பாஸ் என்று சொல்லி விட்டாயே…” என்கிற வேதனையில் கண்கள் குளமாகி விட்டது.
பொது இடங்களில் அழக் கூடாது… நாளு பேர் முன்னாடி பேசு பொருள் ஆகிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பாள். அப்படிப் பட்ட அவள் இன்று அவன் கூறிய சொல் கட்டுப்பாடு இன்றி கண்களில் இருந்து நீர் அருவி போல் சர சரவென்று கொட்டிற்று.
 
மதியின் அழுகையைக் கண்டப் பின் தான் அவனுக்கு தான் விட்ட வார்த்தை அவளை வெகுவாக காயப்படுத்தியதை தாமதமாகத் தான் உணர்ந்தான்.

“மதி” என்று அவள் கண்ணீரைத் துடைக்கப் போக…

அவன் கையை இவள் தானாகவே முன் வந்து பிடித்துக் கொண்டு மறு கையில் தன் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாள்.

அக்னிக்கு இப்போது மனம் வலித்தது. இருவர் கையும் கோர்த்துக் கொண்டே நின்றாலும் அக்னிக்கு எதோ நெருப்பில் கை வைத்தது போல் சுட்டது.

மதி தன் அமைதியை உடைத்து பேச வார்த்தைகள் வெள்ளம் போல் அடித்துக் கொண்டு ஓடின.

“நான் நான்கு வருஷம் உங்களை லவ் பண்ணுறேன் அக்னி.”

“டூ யூ நோ தட் வேல்யூ…? ஈஸியாக டைம் பாஸ்ன்னு சொல்லுற…?” என்று அவள் மென்மையான குரலில்  தான் கேட்டாள்.

அவனுக்குத் தான் அது இதயத்தை கத்தியில் சொருகுவது போல் இருந்தது. “அப்போ உங்க லவ் டைம் பாஸா அக்னி.? யுஸ் அண்ட் த்ரோ வா நானு…?” 

“வாட் ரப்பிஷ்… டைம் பாஸ் காதலுக்கு தான் நான் அப்படி துடிச்சேனா…?”

“அப்பறம் ஏன் என்ன அப்படி சொன்னீங்க…?”

“பின்ன என்னடி… உன்னப் பார்க்க அவளோ ஆசையாக வந்தா தட்ஸ் மை பர்சனல் என்று என்னை விலக்கி வைக்குற.. அதுக்கு அப்பறம் ஒரு போன் பண்ணியா டி… நம்பர் தான் நான் சேவ் பண்ணி கொடுத்துட்டு தானே போனேன்.
சரி நேத்து தான் அப்படி இருந்தன்னே வை. இன்னைக்கு காலையிலேயே இருந்து என்னை பார்க்கனும்னு உனக்கு தோணுச்சா…? சொல்லு டி…?”

“காலையில் உன்னை வழக்கம் போல இருக்க இடத்தில் உன்னை தேடினேன் அக்னி. நீ அங்க இல்லன்ன உடனே எனக்கு ஏமாற்றம் ஆகிட்டு” என்று தலையை குனிந்து கொண்டு சொன்னாள்.

“ஓஹோ… நான் இல்லன்னா உடனே  நல்லப் போடு என்று போயிட்ட… ஆனால் நான் தான் பையித்தியக்காரன் மாதிரி உன் டிப்பார்ட்மெண்ட் முன்னாடி தவமாக நின்று இருக்கேன். நீ உன் ப்ரெண்டு அந்த குள்ள வாத்துக் கூட சிரிச்சிட்டே அரட்டை அடிச்சிட்டு வர… என் பீலிங்க்ஸ் பத்தி உனக்கு ஒரு ம*** இல்ல. அப்படித் தானே…?”

“அப்படி எல்லாம் இல்ல அக்னி” என்று அவள் மறுத்தாலும் அதைக் கேட்கும் நிலையில் அவன் இல்லை.

நேற்று அவன் மனதை சமாதானப் படுத்தவே ஆயிரம் முறை தன் மனதிற்குள்ளே அசைப் போட்டுக் கொண்டாலும் முடியவில்லை அக்னியால். அவனை மீறியும் வார்த்தைகள் வெளிப்பட்டு விடுகிறது.

மதிக்கு அக்னியை சமாதனம் செய்வது என்பது மலையைப் பிளக்கும் வேலை என்று புரிந்து விட்டது. நேற்று நடந்த விஷயங்களில் அவள் எதையுமே சிந்திக்கவில்லை. முக்கியமாக கோபித்துக்கொண்டுப் போன அக்னியின் நிலையை அவள் பெரிதாக உணரவில்லை. அதன் விளைவு தான் இது என்று தோன்றியது. 

அக்னி கேட்ட கேள்விக்கு அவளுக்கு பதில் சொல்ல நா எழவில்லை.
அமைதியாகவே நின்று இருக்க…

அக்னி தான் ஒரு பெருமூச்சை விட்டு கொண்டு.. “நட.” என்றான்.

அப்படியே சிறிது தூரம் காலாற நடந்தார்கள் இருவரும்.
 அக்னியும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
மதி தான் ஏதாவது பேசுவதற்கு முயற்சிக்க… க்க்ஹ்ம்ம்  தொண்டையை கணைத்தாள்.

அந்த கடுவன் பூனையோ எதையும் கண்டுகொள்ளாதவன் போல அமைதியாகவே அவள் கையை பிடித்துக் கொண்டு நடந்து வந்தான்.

“ஐயோ அக்னியை நான் எப்படி மலை இறக்கப் போறேன்னு தெரியலையே முருகா இவன் மட்டும் மலை இறங்கிட்டான்னா உனக்காக நான் பழனி மலை ஏறுறேன்…” என்று அவசர வேண்டுதலை வைக்க…

 முருகர் அப்போது தன் தேவியருடன் பிஸியாக இருந்திருப்பார் போலும்..இவள் வேண்டுதல் அப்போது அவர் காதில் விழவில்லை.

 அக்னி அவளை முதலில் அழைத்துச் சென்றது ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்கு தான்.
அவள் ஐஸ்கிரீம் கடையை பார்த்த உடனே கண்கள்  குதூகலமாகி ஐஸ்கிரீம் என்று இவன் கையை விட்டுட்டு  முன்னே ஓடிப்போய் மெனுகார்டை  எடுத்து என்னென்ன ஐஸ்கிரீம்  இருக்கிறது என்று வரிசையாக பார்த்துக் கொண்டு ஆர்டர் செய்ய… இப்போது அக்னியின் முகம் ரௌத்திரமாகிவிட்டது. 

இன்னைக்கு மதிக்கு நாள் முழுவதும் எமகண்டம் போல… லைன் கட்டி அவளை அடிக்க பாவம் அவளுக்கு தான் ஏதும் தெரியவில்லை.

வெண்மதி ஒரு தீவிர ஐஸ்கிரீம் பிரியை… ஐஸ்கிரீமைக் கண்டால் போதும் சுற்றம் எல்லாம் மறந்து விடும். பிரபாகரன் கூட மதியை சமாதானம் செய்ய வேண்டும் என்றால் முதலில் கையில் எடுக்கும் ஆயுதம் ஐஸ்கிரீம் தான். 
ஐஸ்கிரீம் மேல் இருந்த ஆசையில் அக்னியை சிறிது நிமிடங்கள் மறந்தே விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும். மதியின் இந்த நடவடிக்கை பிரபாகரனுக்கு வாடிக்கை தான் என்றாலும் அக்னிக்கு தெரியாது அல்லவா… 
 
 அப்போது மதிக்கு அவள் முதுகில் ஏதோ தீப்பற்றி எரிவது போல ஒரு பிரம்மை தோன்ற அச்சச்சோ ஐஸ்கிரீம் மேல இருக்க ஆசையில கொண்டைய மறந்துட்டேன் அப்பவே என் மேல செமையா கோவமா இருந்தானே… போச்சு… போச்சு… எல்லாம் போச்சு… திரும்பி பார்க்க கூட பயமா இருக்கே… என்று அவள் கையில் வைத்திருந்த  மெனு கார்டை அழுத்தி பிடிக்க ஓரக்கண் போட்டு பக்கவாட்டாக திரும்பி பார்த்தாள்.

 அக்னி சித்திரை மாச வெயிலை போல முகம் கொழுந்து விட்டு எறிந்தது கோபத்தில்.

 அதை கண்டவளுக்கு இன்னும் மேலும் பயம்பற்றிக் கொண்டது.
போச்சு போச்சு சோலி முடிஞ்சுது… என்ற தலையில் கை வைத்துக் கொள்ள..

மெல்ல எழுந்து வந்து அவன் பக்கத்தில் அருகில் நின்று  கொண்டவள் சாரி என்றாள் மெல்லிய குரலில்.

இதுவரை சலங்கை கட்டிக் கொண்டு அளவாக ஆடியவன் இனி தாண்டவமாடப் போகிறான் என்று மதி அவன் முகத்தைக் கண்டு அறிந்த நொடி அவளுக்கு பீதியாகிவிட்டது. அவள் அறியாத ஒன்று அவன் அவளுக்கு வேறு பனிஷ்மென்ட் வைத்து இருக்கிறான் என்று. 

“சரி கிளம்பலாம் வா.” என்றான் அதே கரடு முரடான முகத்தை வைத்துக்கொண்டு..

 அவன் கோபம் அவளுக்கு புரிந்தாலும் ஐஸ்கிரீம் போய்விட்டதே… என்று சிறுபிள்ளைப் போல் அந்த கடையை ஏக்கமாக பார்த்துவிட்டு அவன் பின்னால் ஏமாற்றத்துடன் நடக்கலானாள்.

பாதி தூரம் வந்த பின் தான் அக்னிக்கு ஒன்று நியாபகம் வந்தது. அவளாக முதல் தடவை வாய் விட்டே கேட்டது ஐஸ்கிரீம் வேணும் என்று தான். இப்படி கூட்டிட்டு வந்து ஏமாற்றத்துடன் அழைத்துச் செல்வது அவனுக்கே சிறிது வருத்தம் மனதில் இழையோட…

 பிறகு அக்னி என்ன நினைத்தானோ  முதல் முறை தன்னிடம் ஒன்று கேட்டிருக்கிறாள் என்பதாலும் மறுக்க தோன்றாமல் “வா ஐஸ்கிரீம் கடைக்கு போலாம்” என்றான் பாறை போன்று இறுகிய முகத்துடன்..

“கொஞ்சம் சிரிச்சா தான் என்னவாம்” என்று மனதிற்குள் தான் நினைத்துக் கொண்டாள். அதற்கு மேல் அவளும் எதுவும் பேசாமல் அந்த கடையில் உட்கார்ந்து அவளுக்கு பிடித்த இரண்டு பிளேவர்களை வாங்கி அவனுக்கு ஒன்று கொடுக்க  அக்னியும் அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டான். 
அவள் சுவைத்து முடிக்கும் வரை இவன் எதுவும் பேசவில்லை அவள் வாங்கியிருந்த  போனில் ஐஸ்கிரீம் உருகி அவள் கையில்  வடிவதை கண்டவன் டிஷ்யூவை எடுத்து துடைக்க போக..

 “அதெல்லாம் அப்படி வேஸ்ட் பண்ண கூடாது என்று சொல்லிவிட்டு வடிந்த  ஐஸ்கிரீமை நக்கி  சப்புக்கொட்டி திங்க.

 இவனுக்குத்தான் இவளின் சிறு பிள்ளைத்தனமான செயலில் சிரிப்பு பொத்து கொண்டு வந்தது. அதை அவரிடம் காட்டாமல் இருக்க கடினப்பட்டு அடக்கிக் கொண்டவன்.

 “நீ ஒன்னும் சின்ன புள்ள இல்ல டீசண்டா சாப்பிட பழகு மதி.” என்று கரறாக சொல்லிவிட்டு ஒவ்வொரு ஸ்பூனாக அவனிடம் இருந்த ஐஸ்கிரீமையும் தின்று  முடித்து விட்டான்.

 அவள் முகத்தை சுழித்துக் கொண்டு…”நான் இப்படி தான் சாப்பிடுவேன் நீ என்னடா எனக்கு டீசண்ட் பத்தி கிளாஸ் எடுக்குறது அங்க்ரி பேர்ட் பெல்லோ…” என்று மனதில் மட்டும் தான் திட்ட முடிந்தது அவளால்.
இவள் பேசுவது அவன் காதில் விழுந்தால் ஏற்கனவே இருக்கும் கோபத்தில் இதுவும் ஒன்று சேர்ந்து கொண்டு உக்கார்ந்த இடத்திலே அவளுக்கு சமாதி கட்டிவிடுவான் அக்னி. 

“இப்பவாது என்கிட்ட பேசேன் அக்னி…” அவன் கையைப் பிடித்து கெஞ்சுதலாக கேட்கவும்…

அவள் உதடு சுருக்கி கெஞ்சுதலாக கேட்கும் தொனியிலேயே பாதி விழுந்துவிட்டான் பையன்.  இப்படியே போனால் எதையாவது பேசிய மயக்கி  விடுவாள் போல என்றும் மனதிற்குள் அவளையே காய்ந்தான்.

 ஆனால் வெளியில் ஏதும் காட்டிக் கொள்ளவில்லை அதே கடினமான முகம்.
 இவன் மாறவே மாட்டான் போலிருக்கிறது  ன்கிற எண்ணத்தில் யோசிக்காமல் வாயை விட்டு விட்டாள்  மதி அது வேறொன்றுமில்லை “நீங்க என்ன சொன்னாலும் நான் செய்கிறேன்” என்று அவன் கையை சத்தியம் செய்ய…

அவளின் அவசர முட்டாள் சத்தியம் அவளை எத்தனை தூரம் இம்சை செய்யப்போகிறது என்பது அவள் அப்போது அறியாள்.

 குலோப் ஜாமுன் தன் வாயில் வந்து விழுந்ததை கண்ட அக்னி மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

“என்ன சொன்னாலும் செய்வியா…?” என் தான் வாக்குறுதி வாங்குபவன் போல்..

 அவன் என்ன சொன்னாலும் என்ற அழுத்தி சொன்னதை அப்போது புரிந்து கொள்ளாத மதி என்று பலியாகும் ஆடு போல மண்டையை ஆட்டினாள்.

“அப்போ ஒரு கிஸ் குடு” என்று வம்பு இழுக்க…

“என்னா…துஉஉ…” என்று வாயை பிளந்து விட்டாள்  வெண்மதி.

“அப்போதான் உன்னை மன்னிப்பேன்” என்றான் அலட்சிய குரலில்.

அவள்தான் பேய் விழி விழித்தாள்…அவசரப்பட்டு வாய் விட்டுட்டு  வசமாக சிக்கிட்டியே மதி… என்று ஆயிரம் முறை  மனதிற்குள்ளே காரித் துப்பிக்  கொண்டாள்.

“இதை தவிர வேறு ஏதாவது சொல்லுங்களேன்…” என்று வாய்ப்பு கேட்க…

 “அப்படியா இந்த இடத்தில் எனக்கு ஒரு லிப் கிஸ் கொடு…” என்று அவன் அதிலே பிடிவாதமாக இருக்க…

“இதற்கு நாம் இதை கேட்காமலே இருந்திருக்கலாம்…” என்றுதான் தோன்றியது.


 “என்ன பதில் சொல்லு…?” குறுகுறுப்புடன்  கண்கள் மின்னக் கேட்டவனைப் பார்த்து இவளுக்கு ஆயாசமாக இருந்தது. 


 அவ என்னதான் பதில் சொல்லுவாள்…என்ன சொல்ல முடியும் அவளால்.. அவன் தான் அவளை செக்மெட் வைத்து விட்டு விளையாடி பாரேன் என்று சவால் விடுகிறானே.

 மதிக்கு இப்போதைக்கு தப்பிப்பதற்கு என்று வேறு வழியில்லாமல் அவன் கையில் லேசாக தன் உதடு வைத்து ஒத்தி எடுத்தாள்.

“இதை கண்டவனுக்கு இதெல்லாம் எனக்கு வேண்டாம் சீ சீ சீ…” என்று வீம்பு செய்தான் மதியின் ரோமியோ…

“இப்போ நீ செய்யலை இங்கேயே  நம்ம ரெண்டு பேரும் இனி பேசிக்க  வேண்டாம்…” என்று மேலும் அவளை சீண்டி வம்பிழுக்க…

“உண்மையிலேயே அவள் நம்முடன் பேசாமல் போய்விடுவானோ என்றதை மெய்” என நம்பி பயந்தே போய்விட்டாள் பெண்ணவள்.

அவ சுற்றி முற்றி பார்க்க அவளை கடந்து  பலபேர் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தனர்.

 இத்தனை பேர் முன்னாடியில் செய்தால் என் மானம் போய்விடாதா இவன் ஏன் என்னை புரிந்து கொள்ளவே மாட்டேன் என்கிறான் இவனுக்கும் மானம் இல்லையா என்று மனதிற்குள் ஏதேதோ திட்டிக் கொண்டு இருக்க… அப்போ நீ அவனுக்கு கிஸ் பண்ணவே ரெடி ஆகிட்டியா மதி என்று மனசாட்சி இடித்து உரைக்க…

“இல்ல…இல்ல… என்று பயத்தில் வாய் விட்டே சொல்லிவிட்டாள்.
 
“என்ன இல்ல…?” என்றான்  கடுமையான குரலில்.

“ஒன்னும் இல்ல..எனக்கு ஓகே.” என்று சொன்னவளுக்கு  இதழ் கடையில் ஒரு குறும்பு புன்னகை.

 அதை கவனிக்கவில்லை அக்னி.

அக்னிக்கு சுற்றி கடந்து செல்லும் ஆட்கள் எல்லாம் ஒரு பொருட்டல்ல…
 
“சரி கண்ண மூடுங்க.” என்று சொல்ல அவனும் ஒரு குதூகலத்துடன் கண்ணை மூடினான்.

நேரம் தான் போய்க் கொண்டிருந்ததை தவிர எந்த முன்னேற்றமும் தெரியவில்லை அக்னிக்கு.
 அதற்குள் வெண்மதியே அவள் வலது கையை அவன் வாய் மேல் வைத்து “சாரி அக்னி சார் என்னதான் நீங்க என் லவ்வரா இருந்தாலும் எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்…நீங்க ரெண்டு நாள் பேசாம இருந்தாலும் பரவாயில்லை…” என்று சொல்லிவிட்டு அவனிடம் பிடிபட்டு அடி வாங்குவதற்குள்  வேகமாக ஓடினாள்.

“அடி கழுதை…!! ஏமாற்றவா செய்ற…?” என்று கை சட்டையை மடித்து விட்டு அவள் பின்னாடியே ஓடியவன் அவள் கையே கிறுக்கு பிடி போட்டு நகர முடியாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

“நீங்க கோவமாகி என்கிட்டே பேசாமல் இருந்தாலும் பரவாயில்லை நான் அதை செய்யவே மாட்டேன்…”என்று பிடிவாதமாக சொல்லவும்…  அவளின் கூற்றில் அவனுக்கு கோபம் வரவில்லை மாறாக மரியாதை தான் வந்தது.  அதில் அவளுக்கு அவனுக்கு முக்கால் வாசி மலை இறங்கி இருந்தான் இருந்தாலும் அது அவளிடம் காட்டிக் கொண்டால் சரிவராது என்று எண்ணியவன் இந்த சத்தியத்தை வைத்து பல காரியங்களை சாதிக்க எண்ணினான்.
அவனுக்குமே காதலில் எல்லை மீறுதலில் கிடைக்கும் தற்காலிக சுகத்தை விரும்பவில்லை. 

“சரி வா…” என்று அவள் கையை வேகமாக பற்றி இழுத்துக் கொண்டு அவன் காரில் அருகில் போய் நிறுத்த…

“மதி வந்து காரில் ஏறு…நம்ம ஒரு இடத்துக்கு போலாம்” என்ற அக்னியின் குரலில் ஆணை.

“ஐயோ நான் வரமாட்டேன்ப்பா…” என்று மறுக்கவே…

“உன்னால ஒரே ரோதனையாக போச்சு ஏறு.” என்று பல் இடிக்கில் சீற்றம்.

“சரி சரி நோ டென்ஷன்…நோ டென்ஷன்… என்ற ரிலாக்ஸாக சொல்லிவிட்டு அவளும் ஏறி விட்டாள்.

 அவன் கார் அக்னியின் பீளமேட்டில் இருந்து கெஸ்ட் ஹவுஸ் நோக்கி விரைந்தது.

 இருவரின் காதலுக்கான முதல் அழகான நிகழ்ச்சிகள் எல்லாம் அங்கேயே சங்கமித்தன.

கெஸ்ட் ஹவுஸிற்குள் நுழைந்து காரை பார்க் செய்தவன் அப்போதுதான் அந்த பெரிய பங்களா வீட்டைப் பார்த்து மதி கேட்டாள்…”இது யாரோட வீடு” என்று..

“இது என் வீடுதான்.” என்றான் சுருக்கமாக.

“ வேற யாராவது…?”

“நான் மட்டும் தான் இருக்கேன் நீ வா மதி…”

“இப்போது மதிக்கு கிலி பிடித்துக் கொண்டது. அவன் தன்னிடம் தனியாக அத்துமீற மாட்டான் என்று அவளுக்கு உறுதியாக தெரியும் இருந்த போதும் தனிமை சந்திப்பு இவ்வளவு அவசரமாக தேவையா?
 அது சரியாக வருமா என பெண் மனம் ஆயிரம் கோணத்தில் யோசிக்கும் அல்லவா அது போலவே யோசித்தது. மற்றபடி அவன் மேல் சந்தேகமா என்று கேட்டால் இல்லை இருந்தாலும் காதலில் அவசரம் எப்பொழுதுமே தவறான முடிவு என்று அவர் தந்தை சொல்வது அடிக்கடி கேட்டு இருக்கிறாள். அதற்காகவே ஒவ்வொரு விஷயங்களும் சரியா தவறா என்று அவள் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது.

 ஆனால் அக்னியின் மேல் இருந்த ஏதோ ஒரு நம்பிக்கை அது ஒட்டி இருந்ததோ இல்ல மொத்தமாக இருந்ததோ  அவள் மனதில் தோன்றிய எச்சரிக்கை மணிகளோ சந்தேகங்களும் எல்லாம் மொத்தமாக அழித்துவிட்டு அவனை நம்பி அந்த வீட்டு காலடி எடுத்து வைத்தாள் வெண்மதி.

 வீடு பிரம்மாண்டமாகவே இருந்தது அவன் வரவேற்பு அறையில் இருந்த சோபாவில் அவளை அமர வைத்துவிட்டு தானே காப்பி கலக்கிக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தான்.

“இல்ல வேண்டாம் இப்பதான் ஐஸ்கிரீம் சாப்பிட்டேன்.” என்றும் மறுக்க…

“சரி” என்று சொல்லிவிட்டு ஓரமாக வைத்து விட்டவன்… 
அவளை நெருங்கி வந்தமர்ந்து அவளின் வெண்டைப் பிஞ்சு விரல்களை பிடித்து மெதுவாக நீவி விட்டான்.

 அவன் தன் கையை நீவும் போது ஒரு வித சுகமும் கூச்சமும்  பரவியது வெண்மதிக்கு.

அக்னி  பெரிதாக எதுவும் பேசவில்லை..
அவளை இங்கு அழைத்து வந்தது  தனிமைக்காக. இருவரைப் பற்றியும் ஒருவருக்கு ஒருவர் இயல்பாக பேசிக் கொள்வதற்காக தான்.

 காதல் விஷயத்தில் அக்னியை குறை காண முடியாது காரணம் அவன் கமலாவின் வளர்ப்பு மற்றொரு கமலநாதனின் அறிவுரைகள் கீழ் வளர்ந்தவன் அதனால் அவள் இங்கு இருப்பது அவளுக்கு பாதுகாப்பு.

  வெண்மதி தன் குடும்பத்தை பற்றியும் தன் சிறுவயது தோழி இந்துஜாவை பற்றியும் நிறைய சொல்லிக் கொண்டிருந்தாள் அவ்வப்போது அவள் அத்தை சித்ராவை பற்றியும் சொன்னாள். ஆனால் கிருஷ்ணாவை பற்றி மூச்சு கூட விடவில்லை காரணம் இருவரை பற்றி வீட்டில் நினைத்து இருக்கும் அபிப்பிராயம் தான்..அதை அவனிடம் மெதுவாகவும் சாவகாசமாகவும் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள்.

 அக்னியும் அவனின் குடும்பத்தை பற்றி மேலோட்டமாக தான் சொன்னான் முக்கியமாக அவன் தாத்தாவை பற்றி அவன் வாயே எடுக்கவில்லை.
 அவர்களின் குடும்ப கட்டுப்பாடு எல்லாம் மதிக்கு தெரிந்தால் அவள் பயப்படக் கூடும்..அவனே  இந்த காதல் விவகாரத்தை எப்படி கையாள போகிறோம் என்றும் அவன் குடும்பத்தில் இருக்கும் கட்டுப்பாட்டிற்குள் மதி ஒத்து வருவாளா என்கிற பயமும் அவனுக்குள் அவ்வப்போது இருக்கத்தான் செய்தது.

 ஒரு மணி நேரம் கழித்து அவளை ஹாஸ்டலில் வந்து விட்டு விட்டான் அக்னி.
 இருவரின் முதல் சந்திப்பு அந்த வீடு என்பதால் அதை நினைவு கூறும் வகையாக அவன் மொபைலில் செல்பி எடுத்துக் கொண்டான்.

 அவளை ஹாஸ்டலில் விட்டு விட்ட பிறகு அந்த போட்டோவை ஒரு கடையில் கொடுத்து ப்ரேம்  செய்து கொண்டான்.

 அக்னியின் கோபம் முழுமையாக  தணிந்து விட்டது ஆனால் மதியிடம் மட்டும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “கேன்டீனுக்கு வா. அங்கே வா. இங்கே வா. என்று அவள் கொடுத்த சத்தியத்தை வைத்து பிளாக்மெயில் செய்து கொண்டு தன் காரியத்தை சாதித்துக் கொண்டு வம்பு இழுத்துக் கொண்டு இருந்தான்.

மதி அந்த சத்தியத்தைப் பற்றி இந்துஜாவிடமும் புலம்ப…

“வசமாக சிக்கிட்டேன் டி…” என்றாள் மதி.
 
“இது இத்…தான்..ன்… தவளை தன் வாயால் கெடும்” என்று சிரித்து கிண்டல் செய்தாள்.

 இருந்தாலும் ஒரு தோழியாக அவள் எச்சரிக்கையே செய்தாள்.. “காதலிக்கிறது  தப்பில்ல மதி ஆனா அத்துமீறதுக்கு எந்த நிலைமையிலும் ஒத்துக்காதே. நாணயத்துக்கு வேணா ரெண்டு பக்கம் இருக்கலாம் ஆனா காதலில் பிரச்சினை வந்தால் பெண்களை மட்டும் தான் பாதிக்கும் பசங்க ஈஸியா வெளியே போயிடுவாங்க. அதனால எப்பவுமே கவனமாக இரு.” என்று மட்டும் அடிக்கடி சொன்னாள்.

 முதலில் இந்துஜாவின் அறிவுரை சற்று பயம் கொள்ள செய்தாலும், 
 நாட்கள் செல்ல செல்ல அக்னியை பற்றி அவள் நன்கு புரிந்து கொண்டாள் அவள் சத்தியத்தை வைத்து அவன் சீண்டுவானே தவிர அவளிடம் எல்லை மீறவோ தவறாக நடந்து கொள்ளவோ சந்தர்ப்பத்தையும் வாய்ப்பையும் உருவாக்கிக் கொள்ளவில்லை என்று புரிந்த போது… மை அங்க்ரி பேர்ட் ஜென்டில்மேன்…” என்று மனதில் கொஞ்சிக்கொள்வாள்.

அவர்கள் சந்தித்துக் கொள்ளும் இடம் தான் அவனின் கெஸ்ட் ஹவுஸ்.
 ஒவ்வொரு தடவையும் பார்த்து பேசி விட்டு எங்கேயாவது வெளியே சென்று விட்டு வந்தால் கூட கெஸ்ட் ஹுசில் தங்கி  சில மணி நேரங்கள் கடலை போட்டுவிட்டு தான் வீட்டுக்கு செல்வாள் வெண்மதி.

 வெண்மதியை சந்தித்த ஒவ்வொரு சந்திப்பையும் செல்பியாக எடுத்து அவ்வப்போது ப்ரேம் செய்து ரகசியமாக அந்த வீட்டில் அறையில் மாட்டி வைத்திருந்தான். 

 என்னதான் அக்னி  மதியை காதலித்தாலும் படிப்பில் கறராக இருப்பவன்.
காதலால்  படிப்பை  கோட்டை விடுவது அவனுக்கு  சுத்தமாக பிடிக்காது. பெரும்பாலும் வகுப்பு நேரங்களில் அவளை தொந்தரவு செய்யவும் மாட்டான். அவளும் அவனை தொந்தரவு செய்தால் இவனுக்கு பிடிக்காது.

 அவன் படிப்பது எம்பிஏ என்பதால் ஏதாவது ஒரு நிறுவனத்தில் போய் இன்டர்ன்ஷிப் செய்ய அடிக்கடி நேரிடும் அதனாலே மாதத்தில் 20 நாள் சென்னை பெங்களூர் என்று அவன் பறந்து விட..  அவ்வப்போது மட்டும் அரை மணி நேரம் வீடியோ காலில் பேசிக் கொள்வர்.

 இப்படியே இவர்களின் காதல் பட்டாம்பூச்சி போல் வானில் சிறகடித்துக் கொண்டிருந்தது.  மதி அவன் மேல் பைத்தியம் ஆகிப் போனாள்.
அதற்கு காரணம் அக்னியின் அன்பு அத்துமீறாமை என இன்னும் பல பல நற்குணங்கள் பட்டியல் நீண்டு கொண்டே சென்றன.

 இப்படியே நாட்கள் சென்று செமஸ்டரும் வந்துவிட்டது. இதற்கு இடையில் அவ்வப்போது தன் வீட்டுக்கும் சென்று வருவாள் வெண்மதி அப்போது ஃபோனுக்கு குட் பாய் பெரும்பாலும் தன் அத்தை சித்ராவிடமும் தந்தையிடமும் நேரத்தை செலவழிப்பாள்.

  ஒரு வழியாக ஃபர்ஸ்ட் செமஸ்டர் முடிந்து இருந்தது. 
அக்னி பைனல் இயர் என்பதால் இன்னும் ஆறு மாதத்தில் அவனுக்கு கல்லூரி முடிந்து விடும். அதற்கு பிறகு நான் என்ன செய்வேன் என்று அடிக்கடி அவனிடம் புலம்புவாள்.. அவள் இரண்டு மணி நேரமும் புலம்புவதைப்  பொறுமையாக கேட்டுக் கொண்டவன் தினமும் சொல்கின்ற அதே அட்வைஸை மறுபடியும் சொல்வான் அதையும் கேட்டுக் கொண்டு மறுநாளும் அதே கதையை வேறு ஒரு பாணியில் புதிதாக ஆரம்பிப்பாள்..இவனுக்கு தான் மண்டையை பிச்சுக்கலாம் என்று இருந்தது.

 அவனுக்கு மட்டும் அவளை விட்டு பிரிய வேண்டும் என்ற ஆசையா என்ன?
 சில சமயம்  மதி அவனிடம்…”அரியர் வைத்து விட்டு இரண்டு வருடம் என்னுடன் இரேன் என்று கூட பிடிவாதம் பிடிப்பாள் பைத்தியக்காரி போல்..
அவள் சொல்வது போல் எல்லாம் இருக்க முடியுமா சில நிமிடம் திட்டி விடுவான் சில சமயம் பொறுமையாக புரிய வைப்பான். அது எடுப்பட்டது போல தான் இருக்கும். அதெல்லாம் ஒரு நாளைக்கு தான் அடுத்த நாள் புதுக்கதைகள் ஆரம்பித்து விடும். இப்படியே அந்த கல்லூரி நாட்களும் முடிவு அடைந்து விட்டது அக்னிக்கு.

மதி வருத்தப்படக் கூடாது என்பதற்காகவே அதிக நேரம் அவளுடன் அதிகமாக செலவு செய்வான் அக்னி.
 முதல் செமஸ்டரில் ஐஸ்கிரீம் பார்லர், ரெஸ்டாரண்ட் என்ற மாத்திரம் செலவு செய்து கொண்டவர்கள். இந்த இரண்டாவது செமஸ்டரில் இருவரும் அதிக நேரம் கூடவே இருக்க வேண்டும் என்பதற்காகவே வி.ஓ.சி பார்க், தியேட்டர்,மால், ரேஸ் கோர்ஸ் என எல்லாம் அழைத்துச் சென்று நேரம் அவள் கூடவே இருந்தான்.

மாலை நேரம் வரை அவனுடன் இன்பமாக செலவிட்டு வந்தவள் ஹாஸ்டல் வந்த பிறகு தன் தந்தை அழைக்கும் போது தான் குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுப்பது போல் இருக்கும். இன்னைக்கு என்ன நடந்தது என்று அவர் கேட்கும் போது அவள் அக்னி கூட வெளியே சென்றுவிட்டு வந்ததை அவரிடம் சொல்ல முடியுமா…?
வாயில் பொய் தானே வரும். முதலில் பொய் சொல்ல ஆயிரம் தடவை பயந்தவள் ஒரு வருடத்திற்குள் சரளமாக பொய் பேசவும் இங்கு நடப்பதை மறைக்கவும் கற்றுக் கொண்டாள். தன் மகள் செய்யும் பித்தலாங்களை அறியும் போது அவள் தந்தையின் மனம் வலிக்கும் என்பதை காதலிக்கும் போது மூளை மழுங்கடித்து விட்டது.

அக்னியின் கல்லுரி கடைசி நாளில் மதி ஓவென்று ஒரே அழுகை. இப்படி தேம்பித் தேம்பி அழுபவளைக் கண்டு இவன் மனம் தான் உருகிப் போயிற்று.
  
அடுத்து அக்னியை கண்டது அவன் கிராஜுவேஷன் டேவில் தான்.
 இருவரும் வழக்கம் போல் சந்திக்கும் கெஸ்ட் ஹவுஸில் நிறைய நேரம் பேசிவிட்டு மாலுக்கு மட்டும் சென்று விண்டோ ஷாப்பிங் செய்து விட்டு வந்தார்கள்.

 மதியைப் பொருத்தவரை எல்லாமே விண்டோ ஷாப்பிங் தான்.
 அதே அக்னி நினைத்தால் ஒரு லட்சம் கூட செலவு செய்வான் அது மதிக்கும் தெரியும். ஆனால் அவனிடம் இருந்து எதிர்பார்க்கவும் மாட்டாள்.  இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டுமா…? அதுக்கு நானே தைத்து போட்டுக் கொள்கிறேன். இதை விட இந்த மெட்டீரியல் விலை கம்மிதான் கிடைத்தால் பாதி கூட வராது” என்று அவனின் படிப்பறிவை இதில் நுழைப்பாள்..

தயவு செய்து  என்னை விட்டுடு சாமி” என்று கும்பிடு போட்டு விடுவான்.
 இப்படியே  அவர்களின் நாட்கள் மகிழ்ச்சியாகவும் அவ்வப்போது சண்டை போட்டுக் கொண்டு ஊடலுக்குப் பின் காதலும் காதலுக்கு பின் ஊடலும் என மாறி மாறி அந்த ஒரு வருடம் கழிந்து விட்டது.

 அக்னி எம்பிஏ முடித்துவிட்டு தன் குடும்பத் தொழிலில் எல்லாம் இறங்கவில்லை தான். அனுபவத்தை வளர்த்துக்  கொள்வதற்காக வேறு ஒரு நிறுவனத்தில் சேர்ந்து கொண்டான்.
 அது லட்சுமி மில்ஸ் ஒரு பிரபலமான நிறுவனமும் கூட இன்னொன்று  அவர்களின் செயல்கள் ஆர்டர்கள் எல்லாம் தெரிந்து கொள்ளவும் உதவும் அல்லவா.
 அது மட்டும் தான் காரணமா என்று கேட்டால் இல்லை இன்னொரு காரணம் மதி கோவையில் தான் இருக்கிறாள். நினைத்த நேரமாத்திரத்தில் போய் பார்த்துக் கொள்ளலாம்.சென்னை பெங்களூர் என்று போய்விட்டால் பார்ப்பது அரிது என்பதாலே வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.

 தின சந்திப்பு வாரமாகியது, வாரங்கள் மாதங்கள் ஆகின இப்படியே நாட்கள் உருண்டோடியது இருவரும் அவரவர் வேலைகளில் பிஸியாகி விட இருவரும் சந்தித்துக் கொள்வதே அரிதாகி போனது.
 அந்த பிரிவையே அவர்களின் காதலை இன்னும் வேறொன்று வளர்த்தது என்று தான் சொல்ல வேண்டும். நம் இங்கிலீஷ் பாஷையில் சொல்வார்களே லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் அது போல் தான் இவர்களும் அந்த இரண்டு வருடங்களை கழித்தார்கள்.

 மதி பேஷன் டிசைனிங் எடுத்திருப்பதால் லேபே கதி என்று கிடந்தாள். இந்துஜாவுக்கு இந்த கோர்ஸ் ஏன் தான் எடுத்தோம் என்று அளவிற்கு நொந்து கொள்ளும் நிலை.   இன்னும் ஆறு மாதத்தில் எப்படா தெறித்து ஓடுவோம் என்கிற அளவிற்கு அவள் வந்து விட…  இந்த பிராக்டிகல் கிளாஸ் வரும்போது எல்லாம் மதியை  ஒரு பிடி பிடித்து விடுவாள் இந்துஜா.

 “உன்னை நானா எடுக்க சொன்னேன்” என்று மதி நைசாக நழுவி விடுவாள்.
 அவ்வப்போது போரடித்தால் இருவரும் மால் சென்று விட்டு வருவார்கள்
 இந்த கல்லூரி பொறுத்த வரைக்கும் சுற்றுலா என்பது ஸ்ட்ரிக்லி நோ… முந்தைய பாச்சில் மாணவர்கள் செய்த அட்டகாசம் மொத்தமாக சுற்றுலாவுக்கு முழுக்கு போடும் அளவுக்கு இருந்திருக்கிறது.

 இப்படியே  மூன்று வருடம் இறுதி நிலையில் இருந்தால் வெண்மதி.
 அடுத்த மாதம் வயது 21 பிறந்தநாள் வேறு வரவேற்கின்றது.
 மதிக்கு அக்னி என்ன பரிசு கொடுப்பான் என்று ஆவலாக காத்திருக்க அவன் கொடுக்கும் பரிசு அவள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதது என்பதை அன்று அறியவில்லை பெண்ணவள்.


பூவிடம் சிக்கிய புயல் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *