புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

 சுயம் வரம் : 16

இந்துஜாவின் கையில் இருந்த போன் “ட்ரிங் ட்ரிங்” என்று மணி ஒலித்துக் கொண்டு இருக்க எதிர் முனையில் இருந்து எடுத்தான் கிருஷ்ணா.

“ஹலோ…!! கிருஷ்ணா’ இஸ் ஸ்பீகிங்…” அதற்கு இந்து தான் அதற்கு பதில் மொழி ஏதும் பேசவும் இல்லை.. அவளின் கண்களில் அவ்வளவு வலியும் ஆத்திரமும் போட்டிப்போட்டுக் கொண்டு இருக்க கோபத்தில் பல்லைக் கடித்தாள்.

கிருஷ்ணா “ஹலோ!! ஹலோ!!” என்று பல முறை கூவி விட்டு…
“இடியட்” என்று சீறிவிட்டு போனை வைத்து விட்டான்.
அவனிடம் இந்துஜாவின் நம்பர் இல்லை போலும். யார் என்று தெரியாததால் ஏதோ தவறான அழைப்பு என்று எண்ணி வைத்து விட்டான்.

இந்துஜாவுக்கும் கிருஷ்ணாவிடம் மதியைப் பற்றிய உண்மையை சொல்ல எதோ ஒன்று தடுக்க..
சிறு தயக்கத்துடன் போனை காதில் வைத்து வேறு எதாவது பேச எத்தனிப்பதற்குள் அதுவே கட் ஆகி இருக்க.. ஒரு நிம்மதி பெரு மூச்சு அவளுக்குள் தோன்றி மறைந்து அப்பாடா என்று இருந்தது.

மதி தன்னிடம் இந்த உண்மையை மறைப்பாள் என்று சற்றும் கனவில் கூட எண்ணியதில்லை அவள். இந்துஜாவைப் பற்றி வீட்டிற்கு தெரியாத பல ரகசியத்தைக் கூட மதிக்குத் தான் முதலில் சொல்லுவாள்.

அவள் வீட்டில் வளரும் நாய் குட்டிக்கு பேர் வைப்பதில் இருந்து அவளுக்கு எதாவது உப்பு சப்பு இல்லாத கதை என்றாலும் ஒன்று விடாமல் அவளிடம் ஒப்பித்து விடுவாள்.
அவளுக்கு நிச்சயம் செய்யப்பட்டு இருந்த விஷயம் கூட மதியை தவிர அவளின் நெருங்கிய சொந்தங்களுக்குக் கூட தெரியாது.
இந்துஜாவைப் பொறுத்தவரை மதி மட்டுமே அவளுக்கு உயிர் தோழி.
இந்துஜா சற்று கலகலப்பானவள் எல்லோரிடமும் சீக்கிரம் நட்பாக பழகி ஒட்டி விடுவாள்.

அப்படித் தான் ஒரு நாள் பள்ளியில் படிக்கும்போது அதே வகுப்பில் படிக்கும் வேறு ஒரு நண்பியிடம் சற்று நெருக்கமாக பழகினாள் இந்துஜா. அது ஏனோ மதிக்கு பிடிக்காமல் போக அந்த இரண்டு நாட்களும் அவள் முகத்தை தொங்க கொண்டு சோகமாக இருப்பதை கண்ட இந்துஜா அன்றிலிருந்து இன்று வரை அவளைத் தவிர வேறு யாரிடமும் அவள் பெரிதாக நட்போ பேசவோ வைத்துக் கொள்வதில்லை காரணம் மதி மற்றவரிடம் பெரிதாக விரும்பி பழக மாட்டாள் தானாகவும் சென்று நட்பை வளர்த்துக் கொள்ள மாட்டாள் அவள் ஒரு தனிமை பிறவி அவளுக்கு கிடைத்த இந்துஜாவையும் வேறு ஒருத்தியிடம் பழகுவது அவளுக்கு பிடிக்காமலும் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லாமலும் முகத்தை மட்டும் சோகமாக வைத்துக் கொண்டுதான் அந்த இரண்டு நாட்களை கடத்தி இருந்தாள். இப்படித் தான் அன்றிலிருந்து எதுக்கெடுத்தாலும் மதி மட்டுமே தனக்கு என்று இன்று வரை
ஒவ்வொரு விஷயத்தையும் மறைக்காமல் இருவரின் நட்பு தொடர்ந்து வந்தது.

இப்படி இருக்க அவளின் தோழி அந்த காதல் விஷயத்தை மட்டும் தன்னிடம் இருந்து மறைப்பாள் என்றோ அதுவும் அந்த பையன் செஸ் டோர்னமெண்டில் பார்த்திருக்கிறேன் என்று சொல்லும்போது கண்டிப்பாக அது எட்டாம் வகுப்பாக தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக தெரிந்து இருந்தது.
அதற்கு பிறகு தான் மதி ஏனோ எந்த விளையாட்டிலும் சேர்ந்து கொள்ளாமல் படிப்பே கதி என்று இருந்து விட்டாளே..
அதற்கான காரணம் அப்போது அவளுக்கு புரியவில்லை. இப்போது கொஞ்சம் புரிவது போல் இருந்தது.
அந்த புரிதல் கூட வலித்தது எத்தனை பொய் சொல்லி இருக்கிறாள் பத்தாவது பொதுத் தேர்வு வருகிறது படிப்புத்தான் முக்கியம் என்று அத்தனையும் பொய்.
இது முழு பொய் என்று சொல்லாவிட்டாலும் அவள் அங்கு போகாததற்கு ஒருவகை காரணம் இவளின் காதலாகவும் இருக்கலாம் அல்லவா என்று ஒவ்வொன்றையும் கோர்வையாக அவன் மனதில் வந்து கொண்டிருக்க அவள் தன்னிடம் எல்லாவற்றையும் மறைத்து ஏமாற்றி விட்டாள் என்று மனக்கொதிப்பும் அதிகரித்து அதன் ஊடாக கண்களில் கண்ணீரும் வழிந்தது.

தான் இதற்கு மேல் இங்கிருந்து எந்த பிரயோஜனமும் அல்ல..
என் மதி முன்ன மாதிரி இல்லை.. இப்போது மாறிவிட்டாள்..
இதற்கு மேல் நான் இங்கிருந்து என்ன செய்வது என்று ஒருவித
ஒட்டாத்தன்மை மனதில் தோன்ற வழிந்த கண்ணீரையும் துடைத்துக் கொண்டு நாற்காலியை விட்டு எழுந்திருக்கவும் அப்போதுதான் பதறி எடுத்துக் கொண்டு இந்துஜாவின் அருகில் வந்து நின்றார் பிரபாகரன்.

அம்மாடி இந்து என் மகளுக்கு என்ன ஆச்சும்மா? என்று பதறியவருக்கு முகம் முழுவதும் வேர்வை தலை முடியெல்லாம் கலைந்திருக்க, சட்டை கசங்கிப் போய் கண்கள் ரத்தமான சிவந்து வீங்கி இருந்தது.

தொலைபேசியில் மதிக்கு ஆக்சிடென்ட் என்று கேட்டபோதே மனிதன் பதறி அடித்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார் என்று நன்றாக தெரிந்தது அவர் முகத்தில்.

இந்துஜாவும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்..
”ஒன்னும் இல்ல.. ரிலாக்ஸ் அங்கிள்!! அவ நல்லா தான் இருக்கா..
உள்ள தான் இருக்கா..போய் பாருங்க.” என்று அறை நோக்கி கைக்காட்ட..
அப்போதுதான் திரும்பி அந்த எமர்ஜென்சி வார்டைப் பார்க்க..
“சின்ன அடின்னு தான் சொன்னாங்க. அதுக்கு எதற்கு எமர்ஜென்சி…” என்று மனிதன் பயத்தினுடே இந்துஜாவைப் பார்த்து கேட்கவும்..

“இப்ப நார்மலாக தான் இருக்கா அங்கிள்.. நீங்கப் போய் பாருங்க…” என்று சற்று தைரியம் ஊட்டுவது போல் சொல்லவும்…

“இதுவாம்மா இதுவா…!!” என்று வார்த்தைகள் குளற அந்த எமர்ஜென்சி வார்டின் கதவை மெல்ல திறந்தார்.
அந்த கதவின் மீது கை வைக்கும் போதே அவரின் இதயத்துடிப்பு பன் மடங்கு வேகமாக துடித்தது. தன் மகளுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்று வரும் வழியிலேயே ஆயிரம் சாமிக்கு வேண்டுதல் வைத்துக் கொண்டே தான் வந்திருந்தார். இப்போது ஏனோ நெருங்க நெருங்க கால்கள் தள்ளாடின.
ஒரு வித பயமும் ஏதோ மனதை எதோ ஒரு கலக்கமும் ஒருசேர உந்தி தள்ளி அவரை மனதளவில் வெகுவாக தளர்த்தியது அந்த கதவின் மீது கை வைக்க கூட அவருக்கு பயமாக இருந்தது. உள்ளிருக்கும் மகளின் நிலை என்ன என்று இங்கிருந்து பார்க்கவே அவருக்கு ஏற்பட்ட பயம் அது.
மெல்ல மனதை திடப்படுத்திக் கொண்டு கதவை திறந்தவர்..
உள்ளே கண்ட காட்சியில் பாதி செத்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் மகள் பல வயர்களுக்கு நடுவே ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருக்க கண் மூடிக் கிடந்தாள்.

ஆம் மது கண் விழித்த போது டாக்டர் வந்து செக் அப் செய்துவிட்டு இன்னொரு ட்ரிப்ஸ் செலுத்த சொல்லி தாதிப்பெண்ணிடம் சொல்லிவிட்டுப் போக அது சொட்டு சொட்டாக அவள் நரம்பின் வழியாக உடலுக்குள் சென்று கொண்டிருந்தது. அதன் அருகில் அமர்ந்திருந்தான் அக்னி.
அப்போது அவர் அவனை கவனிக்கவில்லை…
அவரின் எண்ணவோட்டம் எல்லாம் மதுவாகவே இருந்ததால்.

படுக்கையில் கிடந்தவளின் அருகில் சென்று “செல்லம் என்ன ஆச்சும்மா…? ரோட்ல பார்த்து நடக்க மாட்டியா…ம்…?” என்று கையைப் பிடித்துக் கொண்டு அழ…
பாவம் பிரபாகரனுக்கு மதி மட்டுமே உலகம். அவர் மனைவி இறந்தப்பிறகு மகளே உலகம் என வாழ்ந்தவருக்கு அவளுக்கு சிறு முள் காலில் குத்தினால் கூட துடிதுடித்துப் போகிறவர் இப்படி தலையில் காயத்தோடு ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டு இருப்பதைக் கண்டு தாங்குவாரா மனிதர்.

“ஐயோ ஐயோ…!!” என்று கதறினார்.
“அப்போது வேகமாக எழுந்து வந்த அக்னி… “ஒன்னும் இல்ல சார் ரிலாக்ஸ்…” என்று அவர் தோளைத் தொட்டு சமாதானம் செய்ய..

அப்போதுதான் அவர் அக்னியை பார்த்தார்.. ”நான் உன்னை எங்கேயோ எங்கேயோ…” என்று வார்த்தை முடிக்காமல் தடுமாற… மகளின் நிலையை கண்டு அவருக்கு எதுவும் சரியாக அந்நேரம் யார் அவன் என்று பிடிபடவில்லை…

“நான் தான் சார் அக்னி.. மருந்து எல்லாம் வாங்கிட்டேன்..டாக்டர் அவ நல்லா இருக்கா.. இன்னும் கூடிய சீக்கிரமே டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” என்று சொல்லவும்..

அதைக் கேட்டதும் அவர் ஆறுதல் எல்லாம் அடையவில்லை.. அதை நம்பாமல் “அவளுக்கு ஒன்னும் இல்லை தானே ஒன்னும் இல்லை தானே” என்று அவர் கையைப் பிடித்து ஏக்கத்துடன் கேட்க…

“ஒன்றும் இல்லை சார்…” என்று அமைதியாகவே பதில் சொன்னான் அக்னி.

“அப்புறம் ஏன் என் மகள் கண்விழிக்க மாட்டேங்குற?”

“இல்ல சார் கொஞ்சம் டயர்ட் ஆயிட்டா அதான் தூங்குறா…” என்றான் அதே பொறுமையான குரலில். அவனுக்கும் அவரின் வலி நன்கு புரிந்திருந்தது.

“அப்பா” என்ற ஒரு குரல் படுக்கையில் இருந்து தீனமாக வர…

“செல்லம்” என கண்களை துடைத்துக் கொண்டு வேகமாக அவளை அணைத்துக் கொண்டார்.
“என்னடா ஆச்சு…? நீ பார்த்து வரமாட்டியா…? நான் உன்னை எவ்வளவு பத்திரமாக இருக்க சொன்னேன்…? உனக்கு ஏதாவது ஆச்சுன்னா அப்பாவோட நிலைமை யோசித்து பார்த்தியா…?” என்று கண்கள் குளமாகி வேதனையுடன் சொல்ல..

மதிக்கும் அவரின் அழுகையைப் பார்த்து இவளுக்கும் அழுகை வந்தது.
“அப்பா ஒன்னும் இல்லப்பா சின்ன ஆக்சிடென்ட் தான் இனி கவனமா இருக்கேன்.”என்று நம்பிக்கை வாக்குறுதி கொடுக்கவும்…
அதையெல்லாம் ஒத்துக்கொள்ளாதவராக..

“நீ இனி இங்க இருந்து படிக்கவெல்லாம் வேண்டாம். வாம்மா நம்ம ஊருக்கே போய்க்கலாம்…” என்று இடியைத் தூக்கி இருவர் தலையிலும் இறக்க…தூக்கி வாரிப்போட்டது இருவருக்கும்.

அக்னி முதலில் அதிர்வை காட்டினாலும் அது லாவகமாக மறைத்துக் கொண்டு அவள் என்ன மறுமொழி கூறப் போகிறாள் என்று சலனமற்ற முகத்துடன் நின்றிருந்தான்.

ஆனால் மதியின் முகமும் அப்பட்டமான அதிர்ச்சியை வெளிக்காட்டியது.
“ஏம்மா இப்ப ஷாக் ஆகுற…?”

“ஒன்னும் இல்லப்பா… உங்க இஷ்டம்.” என்று என்ன சொல்வது என்று தெரியாமல் இரு வார்த்தையில் முடித்து விட..

“மதியை இதற்கு மேல் பார்க்க முடியாதோ என்கிற வேதனையில் அக்னி.
அதை அவளிடம்கூட காட்ட முடியாமல் இறுகிய முகத்துடன் நின்றிருந்தான்.

மதி மெல்ல திரும்பி அக்னியைப் பார்க்க… அவனின் இறுகிய முகம் கண்டு என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை அவளால்.

“ஒருவேளை நாம் போவது தான் சரி என்று இவன் நினைக்கிறானோ என்று ஒரு மனம் யோசிக்க..இன்னொரு மனமோ “அட அப்படி எல்லாம் இருக்காது…” என்று சமாதனம் செய்து கொண்டவள்…” நடப்பதுபடி நடக்கட்டும்” என்று இறைவன் கையில் விட்டு விட்டு அமைதியாகிவிட்டாள்.

மதியை நார்மல் வார்டிற்கு மாற்றி நான்கு நாட்களுகளில் டிஸ்சார்ஜும் செய்து விட்டனர்.
அது நான்கு நாட்கள் அவ்வப்போது அக்னி வந்து சென்று கொண்டிருந்தான்.
அந்த நான்கு நாட்களிலே பிரபாகரனுக்கும் அக்னிக்குமே ஒரு சுகமான உறவு ஏற்பட்டிருந்தது.

அவன் மதியை பார்க்க மருத்துவமனை வந்த நாட்களில் அவன் வருகை பிடிக்காமல் இருந்தது ஒரே ஒருவருக்கு தான். அது வேறு யாருக்கும் அல்ல கிருஷ்ணாவின் அம்மா சித்ரா.
“ஆபத்துக்கு உதவிச் செய்தான் என்பதற்காக நான்கு நாளும் வந்து பார்க்க வேண்டுமாஎன்ன? அதுவும் ஒரு வயசு பொண்ண…?”
இது வெறும் உதவியாக மட்டும் இல்லாமல் வேறு ஏதும் இருக்குமோ? என்று அவர் மனம் அனுபவத்தில் பலகோணத்தில் சிந்திக்க…

அவனின் தின வருகை அவருக்கு பிடிக்காமல் தான் போனது.
அதை சூசகமாக பிரபாகரிடமும் சொல்ல.. ஆனால் அவரோ…”சரியான நேரத்தில் ஹாஸ்பிட்டல் கொண்டு வந்து பில்லைக்கட்டி நம் மகள் உயிரைத் திருப்பிக் கொடுத்த அந்த பையனை இனி இங்க வரவேண்டாம்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்ல முடியுமா? அதே சமயம் நம்ம பொண்ணு வயசுக்கு வந்த போது கூட இந்தப் பையன் தான் அப்போது நம்ம இல்லாத நேரத்தில் உதவினான் என்று சொல்லவும் சித்ராவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. இதற்கு முன்பு தொடர்பு இருக்கிறதா?
எதுவும் அவருக்கு எதார்த்தமாகவேப்படவில்லை.

அதையும் பிரபாகரனிடம் சித்ரா சொன்னார்.
ஆனால் அதை பெரிதாக கண்டுகொள்ளாத பிரபாகரனோ..
“இங்க பாரும்மா ஆண்டவன் இவன் ரூபத்துல வந்து என் பொண்ண காப்பாத்துறான் அவ்வளவுதான். என் பொண்ணுக்கும் அந்த பையனுக்கும் மேல பெருசா விருப்பம் இருக்க மாதிரி நான் பார்த்த வரைக்கும் தெரியல.
நீ பார்க்கும்போது அப்படி எதுவும் தெரியுதா?”

இல்லைண்ணா என்று ஒத்துக்கொள்ள…

“அவனுக்கு கொஞ்சம் இரக்கம் ஜாஸ்தியா இருக்கு.. அதனால நம்ம அட்மிட் பண்ண பொண்ணு இப்போ எப்படி இருக்குன்னு வந்து பாத்துட்டு போறான். அதை தாண்டி மதிக்கிட்ட ஆர்வம் காட்டுற மாதிரி எந்த விசயமும் அவன் நடந்துக்கலை…
“தேவையில்லாம சங்கை ஊதிக் கெடுத்து இல்லாத உறவை சொல்லி நம்மளே இருவர் மனதையும் சங்கடப்படுத்த வேண்டாம்.”

இந்த ஒரு விஷயம் போதாத சித்ராவின் வாயை அடைக்க..

“நம்ம எப்பவுமே பேசி வச்சபடி மதி உன் மருமக தான். அதனால இத பத்தி எல்லாம் குழம்பி எதையும் யோசிச்சிட்டு கெடக்காத…” என்பதோடு முடித்துக் கொண்டார்.
அதன் பின்னும் அவருக்கு ஏதோ ஒரு தெளிவு வந்த நிலையில் அதைப்பற்றி அவரும் பெரிதுவாக கண்டுகொள்ளாமல் மதியை கவனிப்பதிலேயே அந்த நான்கு நாட்களையும் செலவிட்டு வந்தார்.
கிருஷ்ணாவுக்கும் தகவல் சொல்ல… அவன் பதறிப் போய்விட்டான்.
“ஆனால் அவனுக்கு வர முடியாது சூழ்நிலையில் மாட்டிக்கொண்டதால் கண்டிப்பாக வந்து பார்க்கிறேன்…” என்று உறுதிமொழி அளித்துவிட்டு வீடியோ காலில் மட்டும் அவ்வப்போது அழைத்து பேசினான்.

அப்படித்தான் ஐந்தாம் நாள் காலை மதி டிஸ்சார்ஜ் செய்ய ஒரு மணி நேரம் முன்பு கிருஷ்ணாவிடமிருந்து வீடியோ கால் அழைப்பு மதிக்கு வந்தது.
அக்னியும் அங்கு தான் இருந்தான்.
ரிங் வந்ததும் முதலில் அதை எடுக்க கையை நீட்டியது அக்னிதான்.

எடுத்து யார் என்று பார்ப்பதற்குள் கட்டாகி இருந்தது..
அழைத்தவரின் பெயரை பார்க்க லூசு என்று சேவ் பண்ணி இருந்ததால் பக்கென்று சிரித்து விட்டான்.

மதி திரும்பி என்ன என்று கேட்க…

“ உன் லூசு தான் கால் பண்ணி இருக்கு மறுபடியும் பேசுறியா…?”

“சரி” என்று சொல்லி அவள் மீண்டும் வாய்ஸ் டயல் பண்ண…
அவசரமாக போனை எடுத்தவன்…
”அதற்குள் வேலை வந்திருச்சுடி…? நீ நல்லா இருக்க தானே…? பிறகு பேசுகிறேன்.” என்று உடனே கட் பண்ணி விட்டான்.

அக்னியும் அது யார் என்று கேட்கவும் இல்லை ஏதாவது ஒரு பெண் தோழியாக இருக்கும் அந்த சமாச்சாரம் நமக்கு எதற்கு என்று போனை வாங்கி மீண்டும் சார்ஜரில் போட்டான்.

“சரி எனக்கு காலேஜுக்கு டைம் ஆகுது மதி.. . நான் போயிட்டு வரேன் நீ பத்திரமாக வீட்டுக்கு போ…?” என்று தலை அசைத்து சொல்ல..

“போகாதே…?” என்று அவள் கண்கள் அவனை பார்த்து யாசித்தது..
“இன்னும் கொஞ்ச நேரம் இரேன்…” என்று கூட அவள் மனம் ஆசைப்பட்டது..

அவனுக்கும் இங்கே நாள் முழுக்க இருக்க ஆசைதான்…
ஆனால் அவனுக்கு எம்பிஏ பைனல் ப்ராஜெக்ட் இருக்கிறது.
முக்கிய நாள் வேறு. படிப்பையும் பார்க்க வேண்டும் அல்லவா அதை அவளிடமும் சொன்னான். அவளுக்கு அது புரிந்து தான் இருந்தது இருந்தாலும் நீ இங்கே இரேன் எனக்காக என்று பிடிவாதம் பிடிக்க வேண்டும் போல் இருந்தது.

ஆனால் அதெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல் “பாய்” என்று மட்டும் கையசைத்தாள்.

“சீக்கிரம் வந்து விடுகிறேன் டி பால்கோவா” என்று அவள் கன்னத்தை கிள்ளிவிட்டு சிரித்துக் கொண்டே சென்றுவிட..

“பால்கோவா…வ்வா…”என்று புரியாமல் போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் இங்கு வந்து ஹாஸ்பிடல் வந்த முதல் நாளே அவன் பால்கோவா பால்கோவா என்று தான் கத்திக் கொண்டிருந்தான்.
அப்போது அவள் இருந்த நிலையில் அதை யோசிக்க முடியவில்லை.

இந்த இடையே நான்கு நாட்களில் அத்தையும் அப்பாவும் இருந்ததால் இவர்கள் இருவரும் இருவரின் திசை பக்கம் கூட திரும்பாமல் ஏனோ தானோ என்று இருந்தனர்.
அத்தையின் கூர்மையான பார்வையை அறிந்த மதியும் அவன் பக்கம் எதிர்ச்சியாக கூட திரும்பாமல் கவனமாக இருந்தாள்.
காதல் வந்தால் கள்ளத்தனம் வராமல் இருக்குமா என்ன? அதேபோல் தான் வீட்டுக்கு தெரியாமல் மாட்டிக் கொள்ளாமல் இருக்க இந்த காதல் தான் அத்தனை திருட்டுத்தனமும் செய்யுமே அது மதியை மட்டுமா விட்டுவைக்கும்.

“பால்கோவா இது எனக்கு வச்சு செல்ல பேரா இல்ல இதுக்கு எதுக்கும் வேற ஏதாவது கதை இருக்குமா?” என்று அவள் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது,
“நான் என்ன பால்கோவா மாறி அவ்வளவு கலராக இருக்கிறேன்..”
என்று தனக்குள்ளே பார்த்து சிரித்துக் கொண்டு அவன் அழைத்த பால்கோவா என்ற வார்த்தை மனதிலே திரும்பத் திரும்ப அசை போட்டுக் கொண்டிருந்தாள்.

இப்படியே ஒரு வழியாக பார்மாலிட்டிஸ் எல்லாம் முடிந்து பிரபாகரன் அவளை டிஸ்சார்ஜ் செய்து விட்டு தன் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார்.
மதி நன்றாக ஓய்வெடுத்து விட்டு ஒரு ஒரு வாரம் கழித்து மீண்டும் கல்லூரிக்கு வந்தாள்.

அவள் மீண்டும் கல்லூரிக்கு வரப்பட்டப்பாடு அவளே அறிவாள்.
அவளை அனுப்ப சம்மதிக்கவே இல்லை பிரபாகரனும் சித்ராவும்.
பின்னர் கொஞ்சி கெஞ்சி கோபப்பட்டு சாப்பிடாமல் வீண் பிடிவாதம் பிடித்து நான் அந்த காலேஜில் தான் படிப்பேன் என்று அடம் பிடித்து இருவரையும் ஒரு வழியாக்கி தான் மீண்டும் வந்து இருந்தாள் கல்லூரிக்கு.

ஆனால் வந்த முதல் நாளே அவளுக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தன ஒன்று இன்பம் மற்றொன்று துன்பம்.

பூவிடம் சிக்கிய புயல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *