மயக்கும் மாரன் நீயே

This entry is part 12 of 13 in the series மயக்கும் மாரன் நீயே

மயக்கும் மாரன் நீயே

மயக்கும் மாரன் நீயே

மயக்கும் மாரன் நீயே

மயக்கும் மாரன் நீயே2

மயக்கும் மாரன் நீயே2

மயக்கும் மாரன் நீயே 3

மயக்கும் மாரன் நீயே 3

மயக்கும் மாரன் நீயே4

மயக்கும் மாரன் நீயே4

மயக்கும் மாரன் நீயே

மயக்கும் மாரன் நீயே

மயக்கும் மாரன் நீயே

மயக்கும் மாரன் நீயே

மயக்கும் மாரன் நீயே

மயக்கும் மாரன் நீயே

மயக்கும் மாரன் நீயே

மயக்கும் மாரன் நீயே

மயக்கும் மாரன் நீயே

மயக்கும் மாரன் நீயே

மயக்கும் மாரன் நீயே

மயக்கும் மாரன் நீயே

மயக்கும் மாரன் நீயே

மயக்கும் மாரன் நீயே

மயக்கும் மாரன் நீயே

மயக்கும் மாரன் நீயே

மயக்கும் மாரன் நீயே

மயக்கும் மாரன் நீயே

அத்தியாயம் 12



ஷாம்பவி, திக்விஜெயின் கையை கடித்தவள் அவன் கையில் இருந்து ஓரிரு துளிகள் இரத்தம் தன் நாவில் படும் வரையும் விடவில்லை, இரத்தத்தின் இரும்பு வாசனையை அவள் நாசி நுகர,

இரத்த வாடையை அவள் மூளை உணர்ந்து கொண்டதும் தான் ‘ஐயோ இரத்தம் வர்ர மாதிரி ஆழமா கடிச்சிட்டேனே! யாராயிருந்தா என்ன பல் பட்டா விஷமாச்சே பாவம் வலிக்குமே!’ என அதிர்ந்தவள், 

தன் செயலை கைவிட்டு மூடி இருந்த கண்கள் திறந்து அவன் கையில் தான் கடித்த மணிக்கட்டு பகுதியை பார்வையால் ஆராய, இவள் பற்கள் அத்தனையும் அவன் கையில் ஆழமாக தடம் பதித்திருக்க ஆங்காங்கே லேசாக இரத்தம் வேறு துளிர்த்து இருந்தது.

திக்விஜெயின் கையில் இரத்தம் பார்த்ததும், “ஏய் லூசு அதான் பலமா கடிக்கிறேன்னு தெரியுது இல்ல, கைய உதற வேண்டியது தான? இல்ல என்னையாவது உதறி தள்ளி இருக்கலாம்ல? எருமை மாடு! கொஞ்சம் கூட சொரணயே இல்லாம நின்னுட்டு இருக்க!” என திக் விஜெய்யை கத்தி தீர்க்க, 

ஷாம்பவி திட்டும் பொழுது அதில் அவனுக்கான கரிசனையை உணர்ந்ததாலோ என்னவோ வினோதமாக அவனுக்கு கோபத்திற்கு பதில் சிரிப்பு தான் வந்தது. திக்விஜெய் சிரிக்கவும் கடுப்பானவள், “லேசா வலிச்ச உடனேயே கையை உதற வேண்டியது தானேன்னு உன்ன எருமமாடு, லூசுன்னுலாம் சொல்லி திட்டிகிட்டே இருக்கேனே, அப்புறம் என்ன மானங்கெட்ட டேஷுக்கு உனக்கு இந்த இளிப்பு வேண்டி கிடக்கு?! 

சரி அத விடு! இந்தப் பாருப்பா செய்யுள்ளு! நடந்தது நடந்துடுச்சு. நீ என்ன கடத்துனதுக்கு நான் உன்ன கடிச்சு வச்சது சரிக்கு சரியா போச்சுது. இனிமேல என் வழியில நான் போவேனாம் உன் வழியில நீ போவியாம்.” என்க,

திக்விஜெய்க்கு இவள் பேச்சுக்கள் சுவாரசியத்தை கொடுக்க, “ஓஹோ?! தென்?!” என கிண்டலாக கேட்டு நிற்க, அப்பொழுதும் அவள் கையிலிருந்த அவன் பிடி சற்றும் தளரவில்லை.

“ஷ்ஷூ! எப்பா சாமி உனக்கு என்ன தான்டா வேணும்! இத்தன போலீஸ்காரங்க மத்தியில நடு ஏர்போர்ட்ல நின்னுகிட்டு உன்ன கடத்தி வச்சிருக்கேன்னு சொல்லி காமெடி பண்ற?!” என ஷாம்பவி எரிச்சலாக,

அவனோ ‘ஓ இப்படி சுத்தி போலிஸ்காரங்க நிக்கிற துணிச்சல்ல தான் ஓவரா பேசுறியா? பாரு இன்னைக்கு உன்னை பயப்பட வைக்காம நான் ஓய போறதில்லை.’ என மனதினுள் உறுதி எடுத்தவன், “ஓஹோ! அப்படி ஒண்ணு இருக்குதுங்களா? சரிங்க நாங்க உங்கள ஏதாவது பண்ணினா இந்த போலீஸ்காரங்கள்ல எத்தனை பேர் எங்களை தடுக்க வராங்கன்னு பார்ப்போமா?!” என கேட்டவன்,

ஷாம்பவி புரியாமல் திருதிருத்து கொண்டிருக்கும் பொழுதே, அவள் கையை விட்டுவிட்டு சற்றே குனிந்து அவள் நிதம்பத்தினோடு தன் இரு கைகள் கோர்த்து அவளை தன் உயரத்திற்கு தூக்கி கொள்ள, 

அவள் முன்புறம் முழுதாக அவனோடு அழுத்தி ஒட்டி கொள்ள, எதிர்ரெதிர் முனை காந்தங்களாக ஒட்டிக் கொண்டிருந்த உடல்களை கணக்கில் எடாமல், எங்கே திக்விஜெய் தன்னை மீண்டும் போட்டு விடுவானோ என பயந்தவளாக, கீழே விழுந்துவிடாமல் இருக்க, பிடிமானத்திற்காக அவள் கால்கள் இரண்டையும் அவன் இடையோடு தானாகவே பின்னி கொண்டவளோ, 

“ஏய்! என்னை விடு சம்படி ப்ளீஸ் ஹெல்ப்!” என தன் கால்களால் அவனை விடாமல் இறுக பற்றி கொண்டாலும் அதற்கு மாறாக, அவள் பெருங்குரலெடுத்து கத்த துவங்க, இவள் ஒருத்தி கத்துவது யார் காதிலும் விழவில்லை போல அந்த காவலர்கள் யாருமே இவளை திரும்பி கூட பார்க்கவில்லை. பயணிகளில் பெரும்பாலானோர் இவர்கள் இருவரையும் ஆர்வமாக வேடிக்கை பார்க்க, 

பலர் ‘பக்கத்துல நிக்குற போலிசே கண்டுக்காம நிக்கிறாங்க ஏன் வம்பு?!’ என இவர்களை கண்டு கொள்ளாது கடந்து விட, 

மனித நேயம் கொண்ட சிலர் மட்டும் ஷாம்பவியை சுகமாக சுமந்து நின்று, தன் கண் இமைகள் மூடி, தன் அங்கங்களில் ஆங்காங்கே அழுத்தி கொண்டிருக்கும் அவள் பெண்ணுடலின் எழுச்சிகள், வீழ்ச்சிகள், பதுங்கிடங்கள் என உடலால் உடல் உணரும் மோன நிலையில் இருந்த திக்விஜெயை நோக்கி நடந்து வந்தவாறே தங்கள் சொந்த மொழிகளில் ஷாம்பவியை கீழே விட சொல்ல வேறு செய்ய, 

அவர்களை எல்லாம் திக்விஜையை நெருங்கும் முன்னரே தடுத்து நிறுத்திய அந்த காவலர்களோ அவர்கள் காதுகளில் ‘அவர் சவுகான் ஏர்லைன்ஸ் ஓனர், அந்தப்பொண்ணு அவரோட பியான்சே!’ என கிசுகிசுக்கவும், 

ஷாம்பவிக்காக நியாயம் கேட்க வந்த ஒரு சிலரும் இது ஏதோ காதலர்களுக்கு இடையேயான ஊடல் என எண்ணி கொண்டு, திக்விஜெயிடம் “சாரி மேன்” “யூ கேரி ஆன்!” என அவனே தங்களை கவனியாவிடினும், காதலர்களிடையே இடறலாக வந்ததற்கு மன்னிப்பு வேண்டியவாறே திரும்பி போய்விட, 

ஷாம்பவி அவன் கைகளை விடுவிக்கும் முயற்சியில் திக்விஜெயின் இடையில் எம்பி அமரும் பொழுதெல்லாம் விண் அதிர் இமிழ் இசை கடுப்ப (இடி ஓசை போல) தடதடத்த இதய துடிப்புக்களோடு சுகமாய் சித்ரவதை அனுபவித்த திக்விஜெயோ ‘ஷாம்பவி எனக்கானவள் இவள் எனக்கே எனக்கு!’ என மனமிடும் உரிமை ஓலத்தோடு ஊடாக, தந்தையின் குரல் பால்ய வயதிலேயே போதித்த பாட்டியாக்கள் மீதான குற்றச்சாட்டுகளும், குறைகளும் திடுமென உரத்து ஒலிக்க, ‘ஷாம்பவி பாட்டியா குடும்பத்தவள்!’ என தன் வசம் மீண்டவன் சட்டென தன்னை உணர்வுகளின் ஆளுமையிலிருந்து மீட்டு கொண்டான்.

“சுத்திலும் இருக்கிறவங்கள்ல ஒருத்தராவது நம்மை நெருங்கினாங்களா சொல்லுங்க? போலிஸ் இருக்காங்கன்னு ரொம்ப தைரியமா பேசுனீங்க? அவங்க எல்லோரும் எங்களோட பக்கெட்ல காட் இட்! இப்ப என்ன சொல்றீங்க?” என அவன் தன் வழமையான ஆணவ குரலில் கேட்க,

திக்விஜெய் சொன்னதை எல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், காதிலேயே வாங்காமல் தன் காரியத்திலேயே கண்ணாக இருந்த ஷாம்பவியோ மீண்டும் “ஆ! ப்ளீஸ்! இட்ஸ் கிட்னாப்பங்! ஹெல்ப்!” என அவன் காதின் செவிப்பறையை கிழியுமட்டும் கூச்சலிட, திக்விஜெயோ அவளை வாயை மூட வைக்க மார்க்கம் கண்டு கொண்டவனாய் “அரே சோனி குடியா! யூ கேவ் மீ நோ ஆப்ஷன்!” என சொன்னவாறு, 

அவள் கத்துவதற்காக அகட்டி திறந்திருந்த வடிவான அதரங்களில் கீழுதடை மட்டும் பட்டென தன் வாயினுள் அதக்கியவன், அந்த விலை உயர்ந்த லிப்கிளாசினால் பளபளத்த உதட்டினை பதமாக பல்படாமல் மென்று, தின்றான்.

‘ஷாம்பவியின் வாயடைக்க தான் இந்த முத்தம்!’ என தனக்கு தானே சாக்கு சொல்லி கொண்ட திக்வஜெய், அவனே அறியாமல் அவனுள் முளைத்து, வேரூன்றிவிட்ட அந்த விரோதி குடும்பத்து வாரிசு மீதான இந்த யாருமறியா ‘கள்ளக்காதல்!’ கொடுக்கும் விரக தாகத்தை தாங்க வொண்ணாமல் தணிக்க விளைந்தவனாய், தன் உள்ளம் மூடி ஒளித்து வைத்துக் கொண்டிருக்கும் ஷாம்பவி மீதான ‘வன் காதலை’ மோகத்தின் முதல் எழுத்தான முத்தத்தில் சொல்ல துவங்க,

அவன் தன்னை தூக்கி இடுப்பில் வைத்திருந்த வாக்கில், வசதியாக அமர்ந்து கொண்டவளோ, அவன் முத்தமிட துவங்கவும் திகைத்தவளாக, “டேய்!” என கத்த துவங்கியவள், தன் கத்தலை கணக்கில் எடுக்காமல் இவள் உதட்டினை வெகு ரசனையோடு சுவை பார்த்து கொண்டிருந்த அவனை காயப்படுத்தும் நோக்கோடு, அவன் மேல் உதட்டை தன் வாயினுள் சுருட்டி உள்ளிழுத்து வலிக்குமாறு கடிக்க துவங்க, அவள் கைகளோ குழாயடி சண்டையில் குடுமி பிடிக்கும் பாவனையில் அவன் சுருள் முடிகள் ஊடாக அலைந்து வேரோடு பிடுங்க முயல,

அவனோ சிறு வயதிலேயே முரடனாக வளர்க்கப்பட்டு வலியை கடந்தவனாயிற்றே? மரத்து போன அவனுடலில் இவள் கொடுத்த வலியை பரவசமாக சுகித்தவன் இவள் முரட்டு செய்கைகளை தன் காமத்தின் எதிரொலியாக பாவித்தவனாய், அதை நொடிக்கு நொடி திகட்ட, திகட்ட வலியை சுகமென தோற்றப்பிழை கொண்டு அனுபவிக்க துவங்கி விட்டான்.

இவர்களது விநோத முத்த சண்டை தூரத்தில் இருந்து இவர்களை வீடியோவில் பதிவு செய்து யூ ட்யூபில் ஒளி பரப்பிய பிற பயணிகளுக்கு காதலின் கட்டுக்கு அடங்காத உணர்ச்சி வேகமாகவே காட்சி அளித்தது.

இப்படி சளைக்காமல் நடந்த இதழ்ச் சண்டையில், நேரமாவதை அவன் கால்சராயினுள் இருந்த கைப்பேசி அலாரம் அடித்து அறிவுறுத்தவும், ஒருவாறு தன் முத்தத்தை முடித்து கொண்டவன், “வாரே வாவ் குடியா! ஐம் இம்ப்ரஸ்ட்!” என மனதார அந்த தருணத்தை ரசித்து கருத்து சொல்ல, 

அவளோ அவன் இடையில் உட்கார்ந்திருக்கும் ஞாபகமே இல்லாதவளாய் கோப வேகத்தில், “என்னது?! உனக்கு விஷம் ஏறும் அளவுக்கு பல்லால கடிச்சு நகத்தால உன் மண்டை எல்லாம் பிராண்டி வச்சிருக்கேன் அதுக்கு நீ இம்ப்ரஸ்டா? என்னால சத்தியமா முடியலடாப்பா! சரி இப்போ நீ என்ன கடத்திட்டு வந்திருக்க அதை நான் நம்பணும் அப்படி தான? நம்பி தொலைக்கிறேன்? 

அந்த ஹேமு பப்பாகிட்ட ‘பணம் பிடுங்குவோர் சங்க தலைவி!’ அங்கிதா அத்தயோட மக பூனம்சேல, எனக்கு ஓசியில ஏர்டிக்கெட் குடுக்கும் போதே நான் உஷார் ஆகி இருக்கணும் இதுல ஏதோ வில்லங்கம் இருக்குன்னு! 

அவ சென்டிமென்டா பேசினதும் மெகா சீரியல் ஹீரோயின் வில்லிய நம்புற மாதிரி முழுசா நம்பினது எல்லாம் என் தப்பு தான். 

சரி சொல்லு உன்னோட டிமாண்ட் என்ன? எவ்ளோ பைசா வேணும்? லம்ப் அமௌண்ட் கேட்டுராத அப்பாவும், பப்பாவும் பாவம்! 

அப்புறம் பணம் கைக்கு வந்ததும், எப்ப என்ன வீட்ல கொண்டு போய் விடுவ?” என அவன் பதிலை எதிர்பாராமல் கேள்விகளால் அவனை துளைத்து எடுக்க,

திக்விஜெய்யோ இவள் பேசியதில் எதையுமே காதில் வாங்காமல் இவளை தூக்கி கொண்டே நடந்தவன், அங்கு தயாராக நின்ற பேட்டரி வாகனத்தில் இவளை மடியில் வைத்து கொண்டே அமர,

அந்த வாகனம் இவனது ஹெலிகாப்டர் அருகில் வந்து நிற்கும் வரையிலும் கூட ஷாம்பவியின் தொடர்ந்த வளவள பேச்சு முடிந்த பாடில்லை.

இறுதியாக பேசிய திக்விஜெய்யோ “நீங்களாவே நடந்து போய் ஹெலிகாப்டரில் ஏறுவீங்களா? இல்ல இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்த மாதிரி நாங்களே மறுபடியும் தூக்கிட்டு போகவா?” என கேட்க,

அப்பொழுது தான் அவன் மடியில் தான் உட்கார்ந்து இருப்பதை உணர்ந்தவள், அந்த இடத்தை சுற்றி பார்க்க அது விமான நிலையத்தின் சற்றே ஒதுக்கு புறமான பிரைவேட் ஹெலிபேட் பகுதி! 

சட்டென குதித்து கீழிறங்கியவள், “அது என்னவோ செய்யுள்? நீ என்னதான் என்ன மிரட்டுனாலும் எனக்கு பயமே வரமாட்டுது என்ன காரணமா இருக்கும்? உனக்கு தெரியுமா? எனக்கு இந்த கடத்தல்லாம் பர்ஸ்ட் டைம்ல அதான் பயம் வரலியோ? இல்ல நம்மள யாரும் ஒண்ணும் செய்ய முடியாதுன்னு ஹேமுபப்பா சொல்லி கொடுத்து வளர்த்ததால வந்த துணிச்சலா இருக்குமோ? ஹூ நோஸ்?

சரி அத விடு. பேச்சுவாக்குல சொல்ல வந்ததை மறந்துட போறேன். நீ டூ பேட் செய்யுள் என்ன மிரட்டுறதுக்காக என்னோட உதட்ட எச்சி பண்ணற? ஆனா பதிலுக்கு எப்படி என்னோட கடி ஆங்? இன்னும் உதடு வலிக்குமே? ஒரு மூணு நாளாவது காரமா சாப்பிட முடியாது! ஹீஹீ! இனிமே இப்படி எங்கிட்ட வாலாட்டுன அவளோ தான் சொல்லிட்டேன்?!

நான் ஏதோ பேச்சு சுவாரசியத்துல உன் இடுப்புல இருந்து இறங்க மறந்ததா நினச்சுக்காத என்ன? உனக்கு மட்டும் ஒரே சீக்ரெட் சொல்றேன் கேளேன்! எங்க பப்பாகிட்ட இதே மாதிரி கழுத்த கட்டி தொங்கிகிட்டே தினமும் ஈவ்னிங் ஸ்கூல் போயிட்டு வந்து கதை பேசுவேனா அந்த ஞாபகத்துல தான்! ஹீஹீ!” என தன் சறுக்கலை சமாளிக்க,

அப்பொழுது தான் தற்செயலாக தன் வாட்ச்சை கவனித்த திக்விஜெய் விமானம் தரை இறங்கி ஒரு மணி நேரம் கடந்து விட்டதை கவனித்தவன், “ஓ காட் ஐம் லேட் பார் மை மீட்டிங்.” என சொன்னவன், அடுத்து அவளோடு வழக்காடி கொண்டிராமல், அருகே நின்றிருந்தவளை இடையோடு கையிட்டு தூக்கி அவளை ஹெலிகாப்டரில் ஏற்றி அமர வைத்து சீட் பெல்ட்டையும் போட்டு விட்டு, தானும் ஏறிக் கொள்ள, “ஏய் என்ன விடுடா!” என ஷாம்பவி கூவியது எல்லாம் அந்த ஹெலிகாப்டரின் மேல் சுழன்ற காத்தாடி இறக்கைகளின் தடதக்கும் ஒலியில் அடங்கிவிட,

அதன்பிறகு அவள் பயத்தில் அலறியதையோ, இவனை திட்டி கொண்டே, வானில் பறப்பதினால் வந்த படபடப்பினை கூட கருத்தில் பதிக்காமல் அவள் இவனிடம் பேசி கொண்டே வந்த எதையுமே திக்விஜெய் காதில் வாங்கவில்லை. தன் ஹெட்செட்டில் ஒரு ஆஷாபோன்சலே பாட்டினை சப்தம் கூட்டி ஓட விட்டவன், கண்களை மூடி சாய்ந்து அமர்ந்து தன் பிசினஸ் டீலிங்கை பற்றி யோசிக்க துவங்கி விட்டான். 

அதற்குள் திக்விஜெயின் இடையில் ஷாம்பவி அமர்ந்தவாறே இதழோடு இதழ் பொருத்தி கடித்து சண்டையிட்ட காட்சி கேமிராக்களின் கோணத்தினால் முத்தமிட்டு கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவாக, சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்க,

ராஜஸ்தான் இளசுகளோ “ஜென்ம விரோதிகளான சவுகான்களும், பாட்டியாக்களும் காதலால் இணைந்தனர். சவுகான் இளவரசர் எங்கள் ராஜபுத்திர சிங்கம், பாட்டியா இளவரசியை காதலில் விழ வைத்து சவுகான்களின் வெற்றிக்கு வித்திட்டு விட்டார்!” என தலைப்பு இட்டு அந்த காட்சியை எல்லா ஊடகங்களிலும் உலவ விட,

தரம் வீரும், ஹேமேந்தரும் தொலைக்காட்சி செய்தியில் இந்த முத்தக் காட்சி வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைய,

தரம் வீர் “சபாஷ் திக்விஜெய்!” என மார்தட்டி பெருமை கொள்ள, 

அருகில் அமர்ந்திருந்த குஷாலோ “ஜஸ்ட் ஒன் அவர் தான் உன் பையன அந்த பொண்ணோட, சாரிசாரி பாபியோட(அண்ணி) தனியா விட்டுட்டு வந்தேன் அத்த! அதுக்குள்ள பாரேன்?! சும்மா சொல்லக் கூடாது இந்த சவுகான்சோட டெஸ்டோஸ்ரான் செம்ம பாஸ்ட் அன்ட் பவர்புல் மா!” என காயத்ரியின் காதில் கிசுகிசுக்க, அவரோ மகனது இந்த விசித்திர செய்கையினால் “அரே ஜெய்!” என அதிர்ந்தது தான் வேறு எதுவும் அவரது கவனத்தில் பதியவே இல்லை.

திக்விஜெய் இயல்பிலேயே யாரிடமும் அதிலும் குறிப்பாக பெண்களிடம் அதிகம் பேசுவதோ, சகஜமாக பழகுவதோ கிடையாது, அதிலும் அவன் தன் அன்னையை தவிர மற்ற பெண்களின் சின்ன தொடுகையை கூட விரும்ப மாட்டான் என்பதை அறிந்திருந்த காயத்ரிக்கு, 

இதுவரை திக்விஜெய் தான், தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றவும், பாட்டியாக்கள் மீதான கோபத்திலுமாக அந்த ஷாம்பவியிடம் அத்து மீறிவிட்டான் என எண்ணி இருந்தவர், வீடியோவில் ஷாம்பவி தன் கால்களால் மகனின் இடையை வாகாக வளைத்து இருந்த விதம் கண்டதும் தனது எண்ண போக்கை மாற்றி கொண்டார்.

‘இருவரும் சந்தித்து கொண்ட இந்த சில மணி நேரத்திலேயே ஷாம்பவி தன் கன்னி தன்மையை திக்விஜெய்க்கு எளிதாக விட்டு கொடுத்ததோடு, பலர் பார்க்க திக்விஜெயின் இடுப்பில் ஏறி ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு முத்தமிடும் காட்சியை இப்படி தொலைகாட்சி வரையும் பரவ விட்டு என்ன செய்ய நினைக்கிறாள்?

ஹேமேந்தரின் மகள் தானே அவள்? நம் மகனை அவன் பெரும் பணக்காரன் என்பதால் தன் விருப்பத்திற்கேற்ப வளைத்து மயக்க முயன்றிருப்பாளோ? அவளும் அவளது அத்தை மகள் பூனமை போலவே பேராசை பிடித்தவளாக, பண்பற்றவளாக இருப்பாளோ?’ என காயத்ரியின் மனதினில் வரிசையாக சந்தேகங்கள் தோன்றிய உடனேயே, 

அவருக்கு கணவரின் பிடிவாத குணம் தெரியுமாதலால் நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்தவோ, அந்த பெண் திக்விஜெயின் வாரிசை அவள் வயிற்றில் சுமப்பதையோ யாராலும் தடுக்க முடியாது என்பதால், தன் மகனை எப்படியாவது ஷாம்பவியிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்கிற திசையில் யோசிக்க துவங்கிவிட்டார். 

‘திக்விஜெய்க்கு மனைவியாக, ஒரு சவுகான் இளவரசியாக அந்த ஷாம்பவியை முழு மரியாதையுடன் நானும் நடத்த போவதில்லை. வேலைக்காரர்கள் துவங்கி மற்றவர்களும் அவளை மதித்து நடக்க அனுமதிக்க போவதும் இல்லை. 

இவளை கொஞ்சம் அடக்கி வைக்க வேண்டும், இல்லை கிடைத்தது எல்லாம் மொத்தமாக சுருட்டி கொண்டு அவளது தந்தை போலவே பொல்லாத பழிகளுக்கு என் மகனை ஆளாக்கிவிட்டு ஓடிவிடுவாள். அவளால் என் மகன் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் நான் தான் திக்விஜெயை பாதுகாக்க வேண்டும்.’ என நினைத்து முழு நேர மாமியாராக உருமாறி இருந்தார் காயத்ரி.

ஆனால், தரம்வீர் திக்விஜெய்க்கு அவனது பன்னிரெண்டாவது வயதில் ஷாம்பவி பிறந்தது முதலே அவள் தான் உன் வருங்கால மனைவி என சொல்லிசொல்லி வளர்த்ததனால் தான் திக்விஜெய் ஷாம்பவியிடம் மட்டுமே அதிக உரிமை எடுத்து தன் இயல்பாக பழகுகிறான் என்பதும், 

தன் அந்தரங்க கனவுகளிலும், கற்பனைகளிலும் மனைவி என ஏற்கனவே ஷாம்பவி ‘நடுக்கடல் நங்கூரமென’ நச்சென இவன் மனதினுள் பொருந்தி முழுதாக வியாபித்து இருக்கும் காரணத்தினால் தான், பிற பெண்கள் உடலளவில் அவனிடம் நெருங்கிய பொழுதெல்லாம் கூட திக்விஜெய், அவர்களால் எந்தவிதமான சலனமும் அடைந்தது இல்லை என்பதும் திக்விஜையே இன்னமும் மனதார உணர்ந்திராத உண்மைகள்.

தன் மகன் திக்விஜெய் தான் ஷாம்பவி மேல் கட்டுக்கு அடங்காத அளவில், ‘இவள் என் முழு உரிமை! எனக்கு மட்டுமேயான சொந்த உடமை!’ என்கிற ரீதியிலான உரிமை உணர்வுகளே விஞ்சி நிற்கும் அளவற்ற மோகமும் அதன் ஊடு கலந்து மறைந்திருக்கும் காதலும், அதே சமயம் அவள் குடும்பத்தினர் மேல் கலப்படமற்ற வெறுப்புமாக, 

வரப்போகும் திருமண பந்தத்தையும், அதோனோடு சேர்ந்தே வரப்போகும் புது சொந்தங்களையும், கூடவே எதற்குமே அலட்டி கொள்ளாத அவன் சொந்த மொழியில் சொன்னால் ‘பொறுப்பற்ற? மூளையற்ற?’ ஷாம்பவியையும் எப்படி கையாள்வது? என புரியாமல் திண்டாடி குழம்பி தவிக்கிறான் என அறியாத காய்த்ரி, 

வருங்கால கணவனாக தனக்கு பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசனை எப்படி நண்பனாக அல்லாமல் கணவனாக பார்ப்பது என்ற விதோத குழப்பத்தில் சிக்கியவளாய், திக்விஜெயின் இந்த அதீதமான நெருக்கத்தை கூட இயல்பான எதிர்வினையோடு மோகமாக எதிர்கொள்ளாமல், ஏதோ தனக்கு யுத்த களத்தில் விடப்பட்ட சவாலாகவே எதிர்கொள்ளும் விநோதமான யதார்த்தவாதி ஷாம்பவியை, 

தன் மகன் திக்விஜையை உடலால் இச்சை காட்டி மயக்குகிறாள் கைகாரி என அநியாயமாக தப்பர்த்தம் கற்பித்து கொண்டார் காயத்ரி.

புகுந்த வீட்டில் மணமகளாகி கால் பதிக்கும் முன்னரே கணவனின் மாமன் மகன் குஷால் நீங்கலாக கணவன் துவங்கி எல்லோருமே அந்நியர்களாகவும்,எதிரிகளாகவும் வாய்த்துவிட்ட இந்த சூழலை ஷாம்பவி எப்படி எதிர் கொள்வாளோ?

தொலைக்காட்சியில் செய்தி பார்த்ததும் இரு பக்கத்து தந்தையரும் தனியாக சந்தித்து பேச முடிவெடுத்தனர்.

தரம்வீரின் யோசனைப்படி சவுகான்களின் ‘ஜல்மஹெல்!’ என அழைக்கப்படும் நாற்புறமும் நீரால் சூழப்பட்ட அந்த கோடை வாசஸ்தலமான ஜல் மஹெலுக்கு தனது பிரத்யேக படகில் தன் அடி ஆட்கள் புடைசூழ வந்து சேர்ந்த ஹேமேந்தர், தன்னை எதிர் கொண்டு முகமன் கூறிய தரம் வீருடன் அவரது அலுவலக அறை புகுந்து கொள்ள,

காயத்ரியும், குஷாலும் திக்விஜெய்க்காக காத்திருக்க துவங்கினர்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *