மெய்நிகர் அழகியே
அத்தியாயம் 1
“டேய்.. ஏசிபி சக்திவேல்.. இன்னைக்கு இங்க மாத்தல் வாங்கிட்டு வாராறாம்.. இன்னும் கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசிக்கணும்.. சீக்கிரம் பொருளை மறைச்சு வைங்கடா..”
“ஏன் பெருசு.. நாமலாம் எத்தனை பேர் பாத்துருக்கோம்.. இவரு வந்து என்ன கிழிச்சிடப் போறாருன்னு.. இந்த பயோ பயப்படுறீக.. வரட்டுமே.. நான் பார்த்துக்கிடுதேன்..”
“ஏலேய் மலைச்சாமி.. நீ என்னத்தலே பார்க்கப் போற! அவரு வந்தா வயித்துல இருக்குற பச்சப்புள்ளை கூட வாயை முடிவுக்கும்லே..”
“அவரு அவ்வளவு பெரிய மாஸா?’
“பின்ன அவர் இறங்குன கேஸ்ல தோல்வியானதேயில்ல.. சரிபட்டு வரலைன்னா என்கௌண்டர்ல போட்டு தள்ளி போயிட்டே இருப்பாரு..”
“ஏலேய்.. அங்கப்பாரு.. அங்குசாமி தலைதெறிக்க ஓடிவர்றான்..”
“அட.. ஆமாலே.. ஏலேய்.. அங்குசாமி.. எதுக்குலே இப்படி தலைதெறிக்க ஓடி வர்ற?”
“சக்திவேல் சார்ர்ர்ர்ர்.. வந்துட்டாருலேஆஆஆஆஆ..”
“அய்யோ.. ஓடுங்கலேஏஏஏஏஏ.. ஓடுங்க..” என்று ஓடியவர்களின் முன்னே புயல் வேகத்தில் நின்றிருந்தான் சக்திவேல் ஐபிஎஸ்.
“சார்..”
“படிக்குற புள்ளைங்களுக்கு போதை மருந்தா கொடுக்குறிங்க..” என்றவன் அங்கிருந்த அத்தனை பேரையும் அடித்து துவம்சம் செய்தவாறே,
“சொல்லுங்கலே.. இதுல யார் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கு.. சொல்லுங்கலே.. ஒழுங்கா சொன்னீங்கன்னா.. துடிக்க வைக்காம ஒரே புல்லட்டுல சாவடிப்பேன்.. அப்படியில்ல.. நீங்களா வந்து என்னைய கொன்னுங்கன்னு சொல்றளவுக்கு சித்திரவதை அனுபவிச்சு சாவீங்க..” என்று மிரட்டியவனிடம், உண்மைகளை கூறினர். அவர்களை அடித்து இழுத்து வந்து லாக்கப்பில் தள்ளியவனிடம் வந்தார் கான்ஸ்டபிள் கண்ணாயிரம்.
“சார்.. உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு வந்துருக்காங்க..”
“யாரா இருந்தாலும் நீங்களே பார்த்து அனுப்பிடுங்க.. இப்போ நான் யாரையும் பார்க்குற மாதிரி இல்ல..”
“சார்.. அவங்க நீங்க கட்டிக்கப் போற பொண்ணுன்னு சொல்ல சொன்னாங்க..”
“என்னது லாயாவா?” என்று முணுமுணுத்தவாறே,
“க்கும்.. உள்ள வரச் சொல்லுங்க..” என்று கம்பீரமாக கூறியவனை பவ்வியமாக பார்த்தவாறே வெளியே வந்த கண்ணாயிரம்,
“மேடம்.. சார் உங்களை உள்ள வரச் சொன்னாங்க..” என்று கூற, தான் மேற்சட்டையாக அணிந்திருந்த பிங் நிற டாப்பின் முழுக்கையை இழுத்து மேலே விட்டவாறு நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்த கால்களில் எட்டு வைத்து அஸிஸ்டண்டன் கமிஷ்னர் அறைக்குள் நுழைந்தாள் அக்ஷயா.
“ஹலோ.. மாமா..”
‘மாமாவா?’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டிருந்தவனின் வாயில் வைத்திருந்த பேனா நழுவி கீழே விழ, தன் முன்னே நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் சிரித்த முகமுமாக நின்றிருந்தவளை விழி எடுக்காது பார்த்திருந்தான். அவன் முன்னே தன் இடது கையை ஆட்டியவள்,
“ஹலோ.. மாமா.. என்ன கனவா?”
“என்ன திடீர்னு? வேலை பார்க்குற இடத்துக்கெல்லாம் வரக்கூடாது.. கிளம்பு.. எதுவா இருந்தாலும் ஈவினிங் வீட்டுக்கு வரப்போ பேசிக்கலாம்..”
“என்னது வீட்டுக்கா? கிழிஞ்சது கிருஷ்ணகிரி.. அங்க தான் அம்மா, அப்பத்தா எல்லோரும் இருப்பாங்களே?!”
“ஏன் அவங்கல்லாம் இருந்தா என்ன?”
“ச்சு.. உங்களுக்கு எல்லாம் எப்படி தான் ஐபிஎஸ் பட்டம் கொடுத்தாங்களோ? அதெப்பது அவங்க முன்னாடி நான் ப்ரீயா பேச முடியும்?” என்றவள் கூற, சென்ற வாரம் பெண்பார்க்க சென்ற போது வெட்டுக்கொண்டு குனிந்த தலை நிமிராது, வார்த்தைகள் தந்தியடித்தபடி, பனியில் நனைந்த ரோஜாவாக தன்னருகே நின்றிருந்த பெண்ணாயிவள்?! என்று நினைத்தவன், ஆச்சர்யம் மேலோங்க, தன் புருவங்களை உச்சி மேட்டிற்கு உயர்த்தியவாறே, தன் முன்னே இருந்த கோப்புகளில் ஒன்றை எடுத்து, அதனை பார்வையயிட்டுக் கொண்டே,
“எதுவானாலும் கல்யாணத்துக்கு அப்புறம் பேசிக்கலாம்.. இப்போ இங்கிருந்து கிளம்பு..” என்று கூறியவனை முறைத்துப் பார்த்தவள்,
“இப்ப மட்டும் நீங்க என்கூட வரல.. அப்புறம் கல்யாணத்துல தாலிக் கட்ட பக்கத்துல பொண்ணுயிருக்காது..” என்றவள் பல்லைக் கடித்துக் கொண்டு கூற, பொறுமையிழந்த சக்திவேல் எரிச்சலோடு அவளைப் பார்த்தவாறே,
“அப்படி என்ன முக்கியமான விஷயம்? இங்கேயே சொல்லித் தொலையேன்..” என்று கத்த,
“நீங்க கட்டிக்கப் போற பொண்ணை காணோம்.. யாரோ கடத்திட்டாங்க.. போதுமா?” என்று பதிலுக்கு அவளும் படபடவென பொரிய, அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தான் சக்திவேல். தன் முன்னே நின்றிருக்கும் பெண்ணை உற்று பார்த்தான். இவளைத் தானே திருமணம் செய்து கொள்ளப் போகிறான்.. பிறகெதுக்கு இவளை இவளே கடத்திட்டாங்கன்னு சொல்றா?! எதுவும் புரியாது அவளை பார்த்திருந்தவனுக்கு புரியாத புதிராக எதிரே கோபத்தோடு நின்றிருந்தாள் லக்ஷா.
“இப்ப நீங்க என்கூட வரல? உங்கப்பா உங்களுக்கு உங்க ஊர்ல பார்த்து வைச்சுருக்குற தேன்மொழி.. கனிமொழியவே கல்யாணம் பண்ணிக்கோங்க.. உங்களுக்கெல்லாம் லயா செட்டே ஆகமாட்டா..” என்றவள் படபடக்க, அவனையும் மீறி அவனது உதடுகள் புன்னகையால் விரிந்தன.
“சரி.. வெயிட் பண்ணு.. ஒன் மினிட்..” என்றவளைப் பார்த்து கூறியவன்,
“கண்ணாயிரம்.. ஒரு நிமிஷம் உள்ள வாங்க.. ” என்று அவரை தொலைபேசியில் தன் அறைக்கு அழைத்தவன்,
“இந்த போதை மருந்து கேஸுக்கான டீடெயில்ஸை கமிஷனர் டேபிள்ல வைச்சுடுங்க.. அப்புறம்.. நான் கொஞ்சம் பர்ஷனலா வெளிய போறேன்.. சோ.. முக்கியமா என்னைய தேடி யார் வந்தாலும் மெஸேஜ் பண்ணுங்க..” என்றவரை தனது பைக் சாவியை எடுத்துக் கொண்டு, லக்ஷாவை நோக்கி “போலாமா?” என்று கேட்டவாறே, அவளுக்கு முன்னால் நடந்து செல்ல, அவனை பின்தொடர்ந்து சென்றாள் லக்ஷா. பைக்கை அவன் ஸ்டார்ட் செய்ய, அவன் பின்னால் இருபக்கமும் கால் போட்டு அமர்ந்து, அவனின் மீது இம்மியளவும் படாதவாறு அமர்ந்து கொண்டவளைப் பார்த்தவனது புருவங்கள், மீண்டும் உச்சியை தொட்டன. இருவரும் அருகே இருந்த பூங்காவிற்குள் செல்ல, அவனை விட்டு கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டவள்,
“மாமா.. நான் யார் தெரியுமா?” என்று கேட்க,
“ம்ம்ம்.. பெயர் லயா.. இன்ஜினியர் ஸ்டூடண்ட்.. இப்போ தான் படிப்பை முடிக்கப் போற.. ஐம் ஐ கரெக்ட்?” என்றவனை கண்கள் விரித்து பார்த்த லக்ஷா, தன் தலையில் அடித்துக் கொண்டாள்.
“நீங்களெல்லாம் என்ன போலீஸ்? அக்காக்கும் தங்கச்சிக்கும் வித்தியாசம் தெரியல..”
“வாட்?!”
“என்ன வாத்து? கோழின்னு? என் அக்கா என்னை விட நாலு இன்ச் ஹைட் கம்மி.. அப்புறம் ரொம்ப சாஃப்ட் டைப்.. ஒரு பொண்ணைப் பத்தி தெரியாமலேயே பொண்ணு பார்த்ததுண்டு போயிடுறது.. ஆமா எங்கக்காவ கட்டிக்கணும்னு நினைச்சு பொண்ணு பார்க்க வந்தீங்களா? இல்ல பொண்ணு கிடைச்சா போதும்னு வந்தீங்களா?” என்றவளை விநோதமாக பார்த்தவாறே,
“நிச்சயா நீ லயா கிடையாது.. அவளுக்கு இந்த வாய் இருக்குறது டவுட்டு தான்.. ஆமா.. அவளை யாரோ கடத்திட்டு போய்விட்டதா சொன்ன?! அது நிஜமா? இல்ல உன் வாய்க்கு பயந்து உன் அக்கா சொந்தக்காரங்க வீட்டுக்கு போயி ஒழிஞ்சுகிட்டாளா?” என்றவனை முறைத்துக் கொண்டே,
“என்ன லந்தா? நானே.. அவளை ரெண்டு நாளாக காணோம்னு கவலைல இருக்குறேன்..” என்றவள், அந்த பக்கமாக போய் கொண்டிருந்த சுண்டல் விற்கும் பையனை நிறுத்தி, அதில் ஒரு பொட்டலம் வாங்கியவள், அதனை வாயிலிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தாள். அவளையும் அவளது செய்கையையும் பார்த்தவனுக்கு சிரிப்பு ஒருபுறம் வந்தாலும் அதனை உள்ளுக்குள் அடக்கியபடியே,
“ம்ம்ம்.. நீ கவலையா இருக்க?!” என்று கேட்க,
“பின்ன இல்லையா? ரொம்ப கவலையாக இருக்கேன்..” என்றவள் அவனது பார்வையை உணர்ந்ததும்,
“இது.. பசிக்கும்ல.. யோசிக்க தெம்பு வேணும்ல..” என்று கூறியதும்,
“சரி.. ரெண்டு நாளா காணோம்குறியே.. வீட்டுல யாருக்கும் இதைப் பத்தி தெரியாதா? உன்னோட தாத்தா ரிட்டயர்டு எஸ்ஐ தானே?! அவர்கிட்ட சொல்லிருக்கலாமே?!” என்றவன் கேட்க, பெருமூச்சு ஒற்றை வெளியிட்டவாறே,
“யோவ்.. உன்னால ஹெல்ப் பண்ண முடியும்னா சொல்லு.. இல்ல என் அக்காவை தேடி நானே போயிக்குறேன்..” என்றவள் கத்த,
“இப்படி கத்துனா ஐயா வந்துருவாளா? அவ எப்போ காலேஜுக்கு போனா? கடைசியா எப்போ உன்கூட பேசுன? எந்த இடத்துல இருந்து காணாம போனா? இதெல்லாம் தெரிஞ்சுக்கணும்.. அதுக்கு முன்னாடி உன் வீட்டுக்கு ஏன் தெரியக்கூடாதுங்குறதும் தெரியணும்..” என்று பொறுமையை இழுத்துப் பிடித்துக் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“எங்கம்மா ஒரு ஹார்ட் பேசண்ட்.. ஹார்ட் பீட் ஃபிப்டி டூ தான் இருக்கு.. அதுனால ஷாக்கிங் நியூஸ் எதுவும் அவங்களுக்கு சொல்லக்கூடாது.. இப்போ தான் அப்பா ஹார்ட் அட்டாக்ல இருந்தாங்க.. எங்கம்மாவும் எங்களை விட்டு போக நான் விரும்பல.. தாத்தா கிட்ட தேவைப்பட்ட சொல்லிக்கலாம்.. எதுக்கு தேவையில்லாம இந்த வயசுல அவரை தொந்தரவு பண்ணிகிட்டு.. அதான் அவர்கிட்டயும் சொல்லல..” என்றவள் விளக்க, சிறிது நேரம் யோசித்தவனிடம்,
“நான் அம்மாக்கு துணையா இங்க பிபிஓ படிச்சேன்.. ஆனா அக்கா ஐதராபாத்து யுனிவர்சிட்டில கடைசி வருஷ இன்ஜினியர் ஸ்டூடண்ட்.. அவளுக்கு படிப்புனா அவ்வளோ பிடிக்கும்.. அப்படியே அம்மா மாதிரி.. ரெண்டு நாளைக்கு முன்னாடி யாரோ ஒரு ப்ரெண்ட் பாஸ்சன் குடிச்சிட்டு சீரியஸா இருக்குறதா ஃபோன் வந்துச்சு.. இவளும் உடனே கிளம்பி போகணும்னு கிளம்பி போனா.. அதுக்கு அப்புறம் அவளுக்கு போன் பண்ணா ஃபோன் நாட்ரீச்சபல்னு வருது.. அவளோட ப்ரெண்ட்ஸ்கிட்ட கேட்டா.. அவ ஊருக்கு தான் வந்ததுக்கு அப்புறம் அங்க ஹாஸ்டலுக்கு திரும்பவே இல்லன்னு சொல்றாங்க.. அங்க யாரை கான்டக்ட் பண்ணாலும், அவங்களுக்கு அவளைப் பத்தி எதுவுமே தெரியல.. அதான் உங்களோட ஹெல்ப் கேட்டு வந்துருக்கேன்..” என்று படபடவென கூறியவளிடம் இருந்து மேலும் சில தகவல்களை கேட்டு அறிந்து கொண்டவன்,
“சரி.. இனிமே இந்த விஷயத்தை நான் பார்த்துக்குறேன்.. நீ கவலைப்படாத..” என்று கூறி அவன் எழுந்து கொள்ள,
“அதெப்படி நான் கவலைப்படாம இருக்க முடியும்?! என் அக்காவை பார்த்தாத்தான் எனக்கு உசுரே திரும்பி வரும்.. நீங்க என்கூட இப்போ ஐதராபாத் வர்றீங்களா? இல்லையா?” என்று பிடிவாதமாக கேட்டவளைப் பார்த்தவன், சலிப்புடன் இருபுறமும் தலையை ஆட்டியவன், அலுப்புடன்
“இது என்னோட பெர்ஷனல்.. சோ அஃபிஷியலா போக முடியாது.. சீக்ரெட்டா தான் போய் விசாரிக்கணும்.. அங்க என்ன ஆபத்து இருக்குன்னு தெரியாது.. அதுவுமில்லாம நீ ஒரு வயசுபிள்ள.. உன்னைய என்கூட கூட்டிட்டு போறது எனக்கு சரியாபடல.. சோ சொல்றதை கேட்டு, நல்லப்புள்ளயா இங்க உன் அம்மாக்கூட இரு.. நான் போய் உன் அக்காவை கூட்டிட்டு வர்றேன்..” என்று கூற,
“முடியாது.. நானும் உங்கக்கூட வருவேன்.. ஆமா.. என்னையப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? ஐபிஎஸ் ட்ரெயின் முடிச்சுருக்கேன்.. போஸ்டிங்காக வெயிட்டிங்.. சோ.. நானும் உங்கக்கூட தான் வருவேன்..” என்று முடிவாக கூறியவள், அங்கிருந்து எழுந்து செல்ல, சக்திவேலின் கண்முன்னே மின்னி மறைந்தது லியாவின் முகம். தன் தாயாரின் கட்டாயத்தின் பெயரில் தான் அன்று பெண்பார்க்க சென்றான். எந்த பிடிப்பும் இல்லாது சென்றவனை ஈர்த்தது அவளது கொஞ்சும் கண்கள். விழிகளால் கூட ஒருவரை பார்த்ததும் சுட்டி இழுக்க முடியுமா? அவளின் முகத்தை கூட சரியாக பார்க்கதவனின் மனதில் பதிந்து போனது அவளது கண்கள்.
ஊரறிந்த போலீஸ் குடும்பம் தான் லயா மற்றும் லக்ஷாவின் குடும்பம். பரம்பரை பரம்பரையாக போலீஸிலும் மிலிட்டரியிலும் சேர்ந்து நாட்டிற்காக தொண்டாற்றும் குடும்பம். எதிர்பாராத விதமாக லயா மற்றும் லக்ஷாவின் தந்தை இறந்து விடவே, அவ்வீட்டில் உடனடியாக திருமணம் செய்தால் சோகம் மறைந்து போகுமென லயா மற்றும் லக்ஷாவின் பாட்டியான கல்யாணி கூற, அதன்படியே லயாவை சக்திவேலுவிற்கு திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்தனர். பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் புன்னகை முகத்தோடு இருந்த லயாவின் முகத்தில் திருமணம் பிடிக்கவில்லை என்பதற்கான எந்தவித பாவனையும் தென்படவில்லை. அப்படியிருக்கும் போது, திருமணம் பிடிக்காது அவள் ஓடியிருக்க வாய்ப்பில்லை; வேறு யாரும் அவளது மனதில் இருந்திருந்தால், அவள் இத்திருமணத்திற்கு சம்மதமும் தெரிவித்திருக்க மாட்டாள். அப்படி அவளுக்கு என்ன நேர்ந்திருக்கும்? அவள் யாரால் கடத்தப்பட்டாள்? எங்கு தான் சென்றிருப்பாள்? என்று யோசித்தவன், லக்ஷாவுடன் லயாவைத் தேடி ஐதராபாத்தை நோக்கி பயணிக்க தொடங்கியிருந்தான்.
