புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

சுயம் வரம் : 09

அன்று பள்ளி முடிந்த பிறகு தன் நண்பர்களிடம் சொல்லிவிட்டு விரைவில் தன் மாமன் வீட்டிற்கு சென்றான் அக்னி.
அவரின் வீடு திருப்பூரில் உள்ள பெருமாநல்லூரில் அமைந்து இருந்தது.
அக்னியின் பள்ளியில் இருந்து தொலைதூரம் என்பதால் அவன் தன் மாமனின் வீட்டை வந்து அடையவே மணி ஆறு மணியைக் கடந்து இருந்தது.
அவன் தன் மாமன் கமலநாதனிடம் முன் கூட்டி 
சொல்லிக்கொள்ளாமல் தான் வீட்டிற்கே வந்து இருந்தவன் அந்த பிரமாண்ட வீட்டில் வரவேற்பறையில் போடப்பட்டு இருந்த சோபாவில் அமர்ந்து இருக்க..
அவீட்டில் முதலில் சமையல்கட்டில் இருந்து வெளியே வந்தது அந்த வீட்டின் வேளையாள் தான்.
முதலில் அக்னியை கண்ட அவ்வீட்டில் இருபது வருடம் பணிப்புரிந்த பெண்மணியோ.. “அடடே வாங்க தம்பி.. எப்போ வந்தீங்க…? ஐயாவை வரசொல்லுறேன்…” என்று மாடியை நோக்கி செல்ல எத்தனிக்க.
“மாமா இப்போ மீட்டிங்கில் இருப்பாங்க.. நீங்க தொந்தரவு செய்யாதிங்க…”
என்று தடுக்க..
“சரி தம்பி.. டீயா இல்லை காபியா?”
எதுவும் வேண்டாம்..கொஞ்சம் தாகமாக இருக்கு தண்ணீர் மட்டும் கொடுங்க.” என்று சொல்லவும்..
“அச்சோ தம்பி நான் ஒரு லூசு.. வந்ததில் இருந்து தண்ணீர் கூட கொடுக்காம வீணாக பேசிக்கொண்டு இருக்கேன் பாருங்க…” என்று சமையல் அறைக்குள் ஓடாத குறையாக வேகமாக நடந்து நீரைக் கொண்டு வந்து பருகக் கொடுக்க..
அதை வாங்கி தாகம் தீர குடிக்கவும் தான் மாடியில் இருந்து இறங்கி வந்தார் கமலநாதன்.
“மருமகனே..” என்று மாடியில் இருந்து இறங்கி வரும்போதே அழைத்த அழைப்பில் தான் எத்தனை அன்பு கனிவு.
மாடியில் இருந்து அலைபேசியில் பேசிக்கொண்டே அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தவர் எதிர்ச்சியாக திரும்பி கீழே நோக்கவும் தான் அக்னியை கண்டு இன்பமாக அதிர்ந்தார்.
அவனைக் கண்டதும்.. “நான் உங்களிடம் பிறகு பேசுகிறேன்” என்று சொல்லி அவசரமாக துண்டித்துவிட்டு படிகளில் இறங்கி வேகமாக கீழே இறங்கி வந்தவர்   
தன் மருமகனை அணைத்துக் கொண்டு.. 
“தோளுக்கு மேல் வளர்ந்து விட்டாயே என்றவரின் குரலில் நெகிழ்ச்சி பரவிக்கிடந்தது.
“இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வந்து இன்ப அதிர்ச்சி தர என்ன காரணம்.” என்று சிரித்துக் கொண்டே கேட்டாலும் “ஏதும் பிரச்சனையோ?” என்று மனம் சிறிது உள்ளுக்குள் திக் திக் என்று அடித்துக் கொள்ளத்தான் செய்தது.
அதை அவர் முகத்தைக் கண்டு ஒரு நொடியில் ஊகித்தவனோ.. “உங்களைப் பார்க்க ஆசைப்பட்டேன் மாமா அதான் வந்து ஒரு மாசம் தங்கிட்டு போலாம்னு வந்தேன். ஏன் நான் உங்களைப் பார்க்க எல்லாம் வரக்கூடாதா?”
“நீ பார்க்க வந்தது எல்லாம் எனக்கு சந்தோசம் தான்..” என்று சொல்லி விட்டு வாக்கியத்தை அதோடு முடித்துக் கொண்டவர் வேறு ஏதும் பேசாமல்…
“உள்ள வா. பாட்டி உன்னைப் பார்த்தால் ரொம்ப சந்தோசப்படுவாங்க…” என்று சொல்லி அவன் தோள் மேல் கையிட்டுக் கொண்டு மாடிபடிக்கு பின்னால் இருந்த அறைக்குள் உள்ளே நுழைந்தான். 
  அங்கு வீல் ச்சேரில் வெள்ளைப் புடவை அணிந்து கண்களில் கண்ணாடி அணிந்து கந்த சஷ்டி கவசப் பாடலை காசெட்டில் ஓடவிட்டு கேட்டுக் கொண்டே அமர்ந்து இருந்தார் வாணி (கமலாவின் தாய்).
“பாட்டி..!!” என்று அக்னி அழைக்க…
அவர் செவிகளில் அது விழவில்லை போலும்.
மீண்டும் ஒரு முறை சற்று சத்தமாகவே அழைக்க.. அப்போது தான் காசட்டை அணைத்து விட்டு திரும்பி அக்னியையும் கமலநாதனையும் பார்த்தார்.
கமலநாதனின் அருகில் இளைஞன் ஒருவன் நின்று இருப்பதைப் பார்த்து…
“யார் இது கமலநாதா?”
“தெரியலையாம்மா… உங்க பேரன் அக்னி.” என்று புன்னகையுடன் சொல்லவும்..
“என்னது என் மித்ரனா…?” என்று வீல் ச்சேரை சற்று வேகமாக நகட்டிக்கொண்டு முன்னால் வர..
“நீங்க ஏன் பாட்டி சிரமப்படுறீங்க…?” என்று அக்னி முன்னால் வந்து அவரின் பாதத்தின் அருகே அமர்ந்தான்.
“கொண்டாத்து காளியம்மா… இப்போ தான் நீ கண்ணை திறந்தியா…?
என் பேரனை நான் என் மகன் கல்யாணம் அப்போத்தான் கடைசியாகப் பார்த்தது.. இப்போ தான் என் கண்ணில் காட்டி இருக்கியா?” என்று அவரின் வலிகளைப் புலம்பி கண்ணீர் உகுத்தார்.
“பாட்டி அதான் நான் வந்துட்டேன்ல.. இனி ஏன் நீங்க கவலைப்படுறீங்க…” என்று சமாதானம் சொல்லி அவரின் கைகளை ஆறுதலாகப் பிடித்துக் கொண்டான். 
“பாட்டியாம் பாட்டி.. என்ன இது மித்ரா…? ஆசையாக அம்மாச்சின்னு கூப்பிடு…” என்று சொல்ல..
அவனும் சிரித்துக் கொண்டே “சரி அம்மாச்சி…” என்றான்.
“என் மகள் கமலா எப்படி இருக்கா…?” என்று கேட்கவும்..
“அவங்க நல்லா இருக்காங்க அம்மாச்சி…”
“பொய் சொல்லாத அக்னி என்ற கமலநாதன்… என் தங்கச்சி உன் அப்பன் கூட ஒரு நாள் கூட நிம்மதியாக வாழ்ந்து இருக்க மாட்டாள்…” என்று வலியின் வேதனையில் வார்த்தைகளைக் கொட்டினார்.
“மாமா அப்படி எல்லாம் இல்லை என்று அடித்துப் பேச அவனுக்கு மனம் வரவில்லை.” தலையை மட்டும் குனிந்து கொண்டு எதுவும் பேசாமல் நின்றான்.
இதை கேட்ட வாணி அம்மாச்சிக்கும் வேதனை படர்ந்தாலும் தன் பேரன் வருதப்படுவதைக் காணப் பொறுக்காதவராய் அவன் தலையை ஆதுரமாக தடவி.. “எல்லாம் ஒரு நாள் சரி ஆகிடும் மித்ரா…?”  
இனி சரி ஆக என்ன இருக்கு… இருபது வருஷ வாழ்க்கையே முடிந்து போய்டுச்சி இனியா எல்லாம் மாறும் என்று மனதில் மட்டும் தான் நினைத்துக் கொண்டார் கமலநாதன். வெளியே சொல்லி மீண்டும் இருவரையும் மனம் நோகடிக்க விரும்பாதவராக.
“சரி அக்னி.. இது பாட்டிக்கு மருந்து கொடுக்க வேண்டிய நேரம். மணி ஏழு ஆகுது பாரு. நீ போய் உடலை அலும்பிக்கொண்டு வா.. உனக்கு இரவு உணவு எதாவது ஸ்பெஷல் ஆகசெய்து வைக்க சொல்லுறேன்…”
“சரி மாமா…!” என்று சொல்லிவிட்டு தன் அம்மச்சியிடமும் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தவன்.. தனக்கு கொடுத்த அறைக்குள் சென்று விட்டான்.
அவன் கண்கள் என்றும் இல்லாத சோர்வைக் காட்ட.. பேசாமல் குளித்து விடலாம் என்று எண்ணி குளியல் அறைக்குள் சென்று குளித்து விட்டு உடை மாற்றி தயார் ஆகி வெளியே வந்தான்.
இங்கு உணவு மேஜை மேல் அமர்ந்து இருந்த அக்னியை நோக்கிய அந்த வீட்டு வேலைக்கார அம்மாளோ… “தம்பி இன்னைக்கு எல்லாம் உங்களுக்கு பிடித்தது தான் சமைத்து வைத்து இருக்கேன் எவ்ளோ நாளும் சாப்பிடுங்க..” என்று ஆசையுடன் பரிமாற…
“அட போதும் போதும்.. எனக்கு என்னல்லாம் பிடிக்கும்கிற அளவிற்கு தெரிஞ்சு வைத்து இருக்கீங்களே…!!” என்று ஆச்சிரியமாக கேட்டான்.
“என்ன பண்றது தம்பி.. கமலாம்மா சந்தைக்கு வந்தாவே பெரும்பாலும் உங்களைப் பற்றித் தான் பேசிக்கொண்டு இருப்பாங்க.. அதில் தெரிஞ்சுகிட்டது தான்.” என்று சொல்லி புன்னகைப் பூத்தார்.
“நீ இங்க இருக்க வரை என்ன வேணாலும் தயங்காமல் கேளு…” என்றார் கமலநாதன்.
“இது என் மாமா வீடு.. நான் ஏன் தயங்க போறேன்..” என்று சொல்லி விட்டு சாப்பிட அவரின் இதழும் விரிந்தது.
தன் மாமனிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவன்.. தூங்க அறைக்குள் சென்று விட்டான்.
இதமான சொகுசு மெத்தையில் படுத்தபோதும் கூட அவனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை.
அவன் மனம் இப்போது தாயிடம் பேசவேண்டும் என்று ஏக்கம் முளைக்க..
அவரைப் பற்றித் தான் எண்ணிக் கொண்டு இருந்தான்.
அங்கு தேவ் மாளிகையில் கமலாவும் மகனைப்பற்றியே தான் எண்ணிக்கொண்டு இருந்தார். அவருக்கு கருவேப்பில்லைக் கொத்துப் போல ஒரு பிள்ளை அக்னி மட்டும் தான். அவனிடம் பேசாமல் எப்படி இருப்பார்..மனம் உலையாக கொதித்தது. என் பிள்ளையிடம் பேசக் கூடாது என்று சொல்ல நீங்கள் யார் என்று அவளின் மாமனாரின் சட்டைப் பிடித்துக் கொண்டு கேள்வி கேட்க வேண்டும் போல் இருந்தது.
ஆனால் தன்னால் தான் முடியுமா? புருஷன் தயவு இருந்தால் அதைப் பற்றி யோசித்து பின் அந்த எண்ணத்தை யோசிப்பது கூட வீண் என்றே தோன்றியது கமலாவிற்கு.
பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு அமைதியாக நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து இருக்க.. அப்போது அறைக்குள் வந்த வாசு.. “இன்னைக்கு ஒப்பந்தம் நல்ல படியாக முடிந்து விட்டது. எனக்கு சீக்கிரம் போய் கேசரி கிண்டி எடுத்து விட்டு வா…” என்று சொன்னதைக் கூட காதில் வாங்காமல் அமைதியாக மகனின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
“என்ன கமலா நான் பேசிக்கிட்டே இருக்கேன்…” என்றவரின் குரல் சற்று கடுமையைக் காட்டியது.
அப்போது தான் குனிந்த தலையை நேராக நிமிர்ந்து அவரை நோக்கினாள் கமலா.
அவள் முகம் அழுது அழுது வீங்கி கண்கள் ரத்த நிறம் போல் இருந்தது.
அதைக் கண்டவர் ஒரு நொடி திகைத்துத் தான் போனார்.
அவர் ஏன் என்ன என்றெல்லாம் கேட்கவில்லை..”உன் மகன் ஒரு மாசம் கழித்து உன் கிட்ட பேசப்போறான்.. இதுக்குப் போயா இவ்ளோ கவலைப் படுற…?
கண்ணைத் துடைத்துக் கொண்டுப் போய் கேசரி செஞ்சு எடுத்துகிட்டு வா..” என்று சொல்லவும் அவளுக்கு மனசே ஆறவில்லை.
 
இவரிடம் பேசி என்ன பிரோஜனம் என்று தன் மன வேதனையை தனக்குள்ளே முழுங்கிக் கொண்டவள்.. அறையை விட்டு வெளியேறி கேசரி கிண்ட ஆரம்பித்தாள்.
அப்போது தான் சற்று கண் அயரலாம் என்று நினைத்த அக்னிக்கு இந்த பிரச்சனையின் ஆணி வேர் எங்கு இருந்து ஆரம்பம் ஆனது என்று புரிந்தவுடன் படுக்கையை விட்டு எழுந்தவனின் இதழ்களில் உச்சரித்த பெயர் வெண்மதி தான்.
அவள் தான்.. அவளே தான். ஒரு சிறு பெண். இவளுக்கு உதவி செய்யப் போய் தானே இவ்வளவும் என்று எண்ணிக் கொண்டான். நடந்த எல்லா சம்பவங்களும் கண்களில் மின்னி மின்னி மறைந்தன.
முகத்தைப் பார்த்தால் எலிக்குட்டிப் போல இருக்கிறாள்.. அவளைப் பார்த்து இரண்டு மூன்று நாள் இருக்குமே.. நாளைக்கு அவளைப் பார்க்க போக வேண்டும் என்று எண்ணியவன் அப்படியே ஒரு கையை முகத்தில் வைத்துக் கொண்டு சுகமாக உறங்கினான்.
சுயம் வரம்: 10
இங்கு வெண்மதி ஓலைக் குடிசையில் நாள் முழுவதும் உக்கார வைத்து இருந்ததால் சலிப்பூட்டியது.
மறுநாள் அக்னி பள்ளிக்கு சென்றவன் முதல் வேலையாக அவன் கால்கள் சென்றது எட்டாம் வகுப்பை நோக்கித் தான்.
வாசலில் நின்ற அக்னியைக் கண்ட நிர்மலா கணக்கு ஆசிரியை.. “உனக்கு என்ன வேணும்?” என்று கேட்க..
 
“மேம் வெண்மதி” என்று கேட்கவும்..
“என்ன விஷயமாக கேட்கிற?”
“செஸ் போட்டிக்கு நானும் அவளும் தான் தேர்வு ஆகி இருந்தோம்.”
“ஓ!! அந்த பொண்ணு பத்து நாளைக்கு லீவ்.. அவங்க அப்பா போன் பண்ணி இன்போர்ம் பண்ணி விட்டார்.” 
 
“ஒஹ் அப்படியா?” என்று புருவத்தை நீவிக் கொண்டு அங்கிருந்து வெளியே வந்தவன்.. “என்ன செய்வது? அவளை எப்படி மறுபடியும் பார்ப்பது?” என்று திசை தெரியாமல் விக்கித்து நின்றான்.
அப்படியே அக்னிக்கு பள்ளி மாமாவின் வீடு என்று மாறி மாறி கழிய..
இங்கு மதி அந்த குடிசைக்குள்ளே உக்கார்ந்து இருந்தாள்.
அவ்வப்போது தனியாக உக்கார்ந்து செஸ் விளையாடியும், தன் நண்பி இந்துஜா வந்து கொடுத்து செல்லும் வீட்டுப்பாடங்களை படித்து எழுதிக் கொண்டும் நேரத்தைக் கழித்துக் கொண்டு இருக்க..   
அன்று மாலை நேரம் வெண்மதியின் வீட்டிற்கு வந்த இந்துஜா..”ஹே இன்னைக்கு ஒருத்தர் வந்து உன்னை விசாரிச்சார்…”
“யாரு டி…?”
உன் கூட செஸ் போட்டிக்கு வந்தவர்ன்னு சொன்னார்.
அதைக் கேட்டதும் மதியின் முகம் சொல்லுனா அதிர்ச்சியில் வியந்து வெக்கம் பூசியது. ஆனால் பாவம் அவளுக்குள் என்ன மாற்றம் நடந்து கொண்டு இருக்கிறது என்று அவளுக்கே புரியவில்லை.
அக்னி நான்கு நாள் பொறுத்தவன்.. அதற்கு மேல் பொறுமை பக்கத்து ஊர் பறந்து போய்விட..
அவள் தந்தை கொடுத்த கார்டில் அழைத்துப் பேசலாமா என்று என்னும் போதே
சை இது வேண்டாம்.. வேறு என்ன செய்யலாம்?” என்று நாடியில் கை வைத்து சிந்தித்தவன்.. ஆஹ் ஐடியா…!! இன்னும் அந்த சர்டிபிகட் மெடலும் அவள் வாங்கி இருக்க மாட்டாள்.. அதை சாக்காக வைத்துக் கொண்டு கொடுத்து விடலாம் என்று எண்ணியவன் அதுவே சரி என்று முடிவு எடுத்துக் கொண்டு உடற்கல்வி ஆசிரியரிடம் அவனுடையதும் அவளுடையதும் வாங்கிக் கொண்டு சென்றான்.
வெண்மதியின் வீடு அவனுக்கு ஏற்கனவே தெரிந்து இருந்ததால் அவன் அதற்கு மேலும் சிரமம் இருக்கவில்லை. 
அவன் வீட்டிற்கு வந்து இருந்தது மாலை நேரம் என்பதால் மதி இந்துஜா கொடுத்த வீட்டுப்பாடத்தை செய்து கொண்டு இருக்க.. அவள் அத்தை சித்ரா 
மகளிர் குழு மீட்டிங்க்கு சென்று விட்டாள்.
முன் வீடு பேருக்குத் தான் தாழ்பாள் போட்டு இருந்தது. உள்ளே போகலாமா என்று ஒரு நொடி சிந்தித்துக் கொண்டு இருந்தவன்.. எனக்கு அவளைப் பார்க்க வேண்டும் அவ்ளோ தான்.. என்று எண்ணியவன் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
ஹாலின் ஓரமாக கட்டப்பட்டு இருந்த குடிசையை நோக்கி வேகமாக கால்களை எடுத்து வைத்து நடந்தவன் அங்கு கண்டது உள்ளே தாவணி அணிந்து கொண்டு குனிந்து வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டு இருந்த வெண்மதியை.
“ஓய்” 
அவள் பதறி மேலே நோக்க.. அங்கு நின்று இருந்தான் அக்னி.
அவள் வீட்டிலே அவனை எதிர்ப் பார்த்து இருக்க மாட்டாள் அல்லவா..
பேயோ என்று பயந்து வீல் என்று கத்த தொடங்க..
அதை முன்பே உணர்ந்தவன்.. “ஹே கத்தாதே.” என்று அவசரமாக வாயைப் பொத்தி குடிசைக்குள் வந்து விட்டான்.
ஊஹும் ஓஹ்ஹும் என்று அவன் கை வைத்து பொத்திய வாய்க்குள்ளே ஏதோ முனுமுனுக்க.. 
மெல்ல தன் கையை உருவியவன்.. “இப்போ சொல்லு” என்றான்.  
 
“இங்க என்னப் பண்ணுறீங்க…?” படபடக்கும் வண்ணத்துப் பூச்சி விழிகளுடன் இமைகளைக் கொட்டிக் கொண்டு கேட்டாள்.
“உன்னைப் பார்க்கத்தான்…“என்றான் கிசுகிசுத்த மொழியில்.
“ஏன்…?” என்று கேட்டவளின் குரல் காற்றுப் போல் ஒலித்தது.
“இந்த செர்டிபிகட்டையும் மெடலையும் கொடுக்கத் தான்…”  
“ஓ” என்றவளின் குரல் அவளை அறியாமலே அவளுக்கு ஏமாற்றத்தை தந்தது.
அதை சிறுப்பெண் இவள் உணராமல் இருக்கலாம் ஆனால் அதை அக்னி உணர்ந்து விட்டு இதழில் மந்தகாச புன்னகை.
“ஆனால் நீங்க இங்க எல்லாம் வரக்கூடாது..”
“ஏன்…?”
“எங்க அப்பாக்கூட குடிசைப் பக்கம் வரமாட்டார்.. கொஞ்சம் நாளைக்கு 
ஆண்கள் முகத்தில் விழிக்க கூடாதாம்..”
“பட் ஐ நெவெர் கேர்…” என்று சொல்லிவிட்டு அந்த குடிசைக்குள் நன்றாக உள்ளே வந்து நின்று கொண்டான்.
“உன்னை நான் அன்னிக்குப் பார்க்கும் போது எலிக்குட்டிப் போல இருந்த.. இன்னைக்கு இந்த தாவணியில் ஆள் வேற மாறி இருக்க.. அழகாக இருக்கு என்று பாராட்டவும்..
அவள் தலையில் ஐஸ்கட்டியை வைத்தது போல் ஜிவ்வென்று இருந்தது மதிக்கு.
சித்ரா அத்தை இவளிடம் ஒரு வாரம் மட்டும் தாவணி கட்டிக்கம்மா அதன் பிறகு வேண்டாம் என்று பல முறை கெஞ்சியப் பிறகு தான் மலை இறங்கி தான் வேண்டா வெறுப்பாகக் கட்டிக் கொண்டாள். 
ஆனால் இன்று அக்னி நல்லா இருக்கு என்று சொன்ன ஒற்றை வார்த்தையில் தாவணி அவளுக்கும் பிடித்துப் போயிற்று.
“எனக்கு நல்லா இருக்கா…?” என்று மீண்டும் மீண்டும் கேட்டவளை 
சளைக்காமல் அவனும் நல்லா இருக்கு என்று திரும்பி திரும்பி பதில் சொன்னான்.
ஒவ்வொரு தடவை அவன் நல்லா இருக்கு என்று சொல்லும் போது அவள் முகத்தில் படர்ந்த குதூகலப் புன்னகையைக் கண்டவன் தானும் இன்ப வெள்ளத்தில் திளைத்து போல் உணர்ந்தான்.
அக்னியின் பார்வை மதிமேல் ஆசையாக வருடியது.
“மதி வீட்டுப்பாடம் எழுதிட்டீன்னா மறக்காமல் உளுந்தங்கலியை தின்று விடு” என்று வீட்டுக் கதவில் இருந்தே சத்தமாக சொல்லிவிட்டு சென்று விட்டான் கிருஷ்ணன்.
அவர்களின் சிவபூஜைக்குள் கரடியாக நுழைந்து இடையூறு செய்த குரல். அக்னி அந்த குரலை அப்போது கணிக்கவில்லை. 
அவன் கிருஷ்ணன் தன் பரம எதிரி அவனின் தோழி தான் மதி என்று அறியும் போது அக்னி இப்படியே இருப்பானா…
“யாரது…?” – அக்னி.
“என் ப்ரெண்டு…”
“ஒஹோ!! ரொம்ப க்ளோசா…”
அவள் ஆம் என்று மண்டையாட்ட.. அதில் அக்னிக்கு முதல் முறையாக பொறமை என்னும் தீ எட்டிப் பார்த்தது.
இனி நீ என்கிட்டே மட்டும் தான் க்ளோஸ் ஆக இருக்கணும் என்ன புரியுதா…?
“ஏன்….?”
“அதான் உன்கிட்ட எப்போவுமே பேச நான் இருக்கேனே..
என்கிட்டே மட்டும் க்ளோசாகப் பேசினால் போதும். மத்தவங்க கிட்ட எல்லாம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு நகர்ந்திடு” என்று சொல்ல…
அவள் பே என்று விழித்தாள். 
அவளுக்கு நான் சொன்னது ஒன்றும் புரியவில்லை என்று அவனுக்கு நன்றாகப் புரிந்தே இருந்தது. சிறுப் பெண் என்பதால் போகப் போக புரிந்துகொள்வாள் என்று எண்ணமிட்டவன் சற்று திகைத்தான்.
நாம் இவளைப் பார்க்கத் தானே வந்தோம்.. பார்த்தாயிற்று.. இனி அவள் யாரிடம் பேசினால் எனக்கு என்ன? என்று சிந்திக்கும் போதே அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்க..
ஒரு வேளை நான்… நான்.. இவளைக் காதலிக்குறேனா? என்று தோன்றிய ஒரு கணம் ஓஹ் மை ஹாட் என்று நெஞ்சில் கைவைத்துக் கொண்டு அப்படியே அந்த குடிசையின் மேல் சாய.. வெறும் நாண் கயிறு வைத்துக் கட்டப்பட்ட குடிசை அவனோடு சேர்ந்து சாய்ந்தது.
என்ன ஆச்சு என்று இவள் பதறி எழுப்ப முயல..
“நோ… நான் இப்போ இங்க இருந்து கிளம்பியாகனும்.”
பின் வாசல் வழியாக கிளம்புங்க. என்று மதி சொல்லவும்..
“தேங்க்ஸ்” என்றான் அக்னி.
“ம்ம் பாய்” என்று டாட்டாக் காட்ட..
அவன் அதைக் கூட கவனியாமல் அடித்துப் பிடித்து இங்கு இருந்து தெறித்து ஓடினான்.
பின் வாசல் வழியாக வந்து ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு அதில் பயணித்தவன் எண்ணம் எல்லாம் மதியைப் பற்றித் தான் இருந்தது.
“பார்த்தவுடனே அந்த பொண்ணுக்கு நீ என் உதவி செய்யனும்…?”
என்றது அவன் மனம்.
அதற்கு காரணம் என்னை நம்பி தான் சார் விட்டுட்டுப் போய் இருக்கார்.
அப்பறம் ஏன் உன்னோட பொருளை பங்களித்த…? அவளைப் பார்க்க இப்படி துடிக்குற? உண்மை தெரிஞ்சதும் இப்படி தெரிச்சு ஓடி வர…?”
எல்லா வற்றுக்கும் காரணம் காதல் காதல் காதல் என்று மனம் மைக் போட்டு முழங்குவது போல் சொல்லவும்.. 
அவன் தலையைப் பிடித்துக் கொண்டு நோ என்று கத்தினான்.
உடனே ஆட்டோவை நிறுத்திய டிரைவர்.. என்ன ஆச்சு தம்பி என்று சொல்லிக் கொண்டே நீர் போத்தலை நீட்டவும்..
“ஒன்னும் இல்லைண்ணா… நீங்க போங்க.”  
  
அவன் அவளை சந்தித்த நொடியில் இருந்து நடந்ததை எண்ணிப் பார்த்து சப்பைக் காரணம் கட்டி பூசி மெழுகுவது போல் தன் மனதிற்கு சமாதனம் செய்து கொண்டாலும் கடைசியில் மனம் அவள் பின்னாடி தான் வந்து நின்றது.
இனி அவளைக் காணவே கூடாது என்ற முடிவுடன் தான் பயணம் செய்தான்.
அவன் பயணம் முழுவதும் இனி மதியோடு தான் என்பதை அவனுக்கு இனி யார் சொல்லுவார்?
பூவிடம் சிக்கிய புயல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *