புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?

சுயம் வரம் : 7

தன் கையை இறுகப் பிடித்து நின்று இருந்த வெண்மதியின் பால் வண்ண வதனத்தை இப்போது தான் சற்று உற்று நோக்கிக் கண்டான் அக்னி மித்ரன்.
அக்னி மித்ரனின் விழிகள் இப்போது அவளின் நிலை என்னவாகி இருக்கும் என்பதை ஊகிக்க முடியாமல் சற்று திணறிய விழிகளுடன் அவளை கேட்டான்
“என்ன ஆச்சு வெண்மதி?”

அவன் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லுவது என்று தெரியாமல் திணறியவள் 
அது வந்து… என்று அழுகையின் ஊடே சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டு இருக்க..
அப்போது அவள் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணி கழிவறையை சுத்தம் செய்து கொண்டு வாளியையும் துடைப்பத்தையும் கையில் எடுத்துக் கொண்டு வந்தவர்.. அவள் நிலையை ஊகித்து விட்டார் போலும்.
மெல்ல படிகளில் இறங்கி கீழே வந்தவர்..”என்னமா இது தான் முதல் தடவையா? அதான் கண்ணு பயந்து போய் விட்டது.
ஒன்னும் இல்ல கண்ணு பயப்படாதே.” என்று சொல்ல அக்னிக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை..

“என்ன பாட்டி  சொல்றீங்க?” என்று அக்னி வினவ..

அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாதவர்.. இவளிடம் திரும்பி,” உங்க வீட்டில் இருந்து யாரும் வந்து இருக்காங்களாம்மா…?”

“இல்லை” என்று மதி கண்களை துடைத்துக்கொண்டு சொல்ல..
  
“சரிம்மா.. நீ என் கூட வா.. நான் எங்க மேடம் கிட்ட சொல்லி உங்க வீட்டில் யாரவது வர சொல்லுறேன்.” என்று கையில் இருந்த வாளியை அங்கயே கீழேப் போட்டு விட்டு அவளை அழைத்து செல்லவும்..

இங்கு அக்னியின் முகம் கோப அக்னியாக ஜொலித்தது.
தான் இங்கு ஒருவன் நின்று கொண்டு இருப்பது கூட தெரியாமல் அவர்களாக பேசிக் கொண்டு கிளம்புவதைக் கண்டவன்..
“என்ன பிரச்சனை என்று சொல்லப்போறிங்களா இல்லையா?” என்று கத்தினான்.

“தம்பி நீ யாரு? உனக்கு என்ன வேணும்?”என்றாள் அந்த பாட்டி.

“இவள் என் ஸ்கூல்ல படிக்குற பொண்ணு.. நான் தான் பொறுப்பு.. இப்போ சொல்லுங்க?”

“தம்பி நான் எப்படி உன்கிட்ட சொல்ல முடியும்? நீ கொஞ்சம் நேரம் இங்கயே இரு. நான் போய் எங்க மேடம்  கிட்ட கூட்டிட்டு போறேன்.” என்று சொல்லவும்..

இவன் காரணம் தெரியாமல் விடுவதாய் இல்லை போலும். பிடிவாதமாக இருவரையும் தடுக்கவும்..

அப்போது அந்த பாட்டி இவனின் ரோதனையில் சலித்துப் போய்..” இங்க பொண்ணு பெரிய மனுஷி ஆகிட்டாப்பா…இப்போவாது கொஞ்சம் வழியை விடு.” என்க.
 
அந்த பாட்டி கூறியது முதலில் இவனுக்கு புலப்படவில்லை. சற்று நேரம் கழித்து தான் ஆணி அடித்து போல் உரைக்க அவன் கைகள் தானாகவே விலகி வழிவிட்டு நின்றன.

அந்த பெண்ணைக் கூட்டி கொண்டு சற்று தூரத்தில் காணப்பட்ட ஒரு அறைக்குள் அழைத்துக் கொண்டு இருக்க.. அவன் கால்கள் பின்னாடியே சென்றன அவன் அனுமதி இன்றியே.

“ஒரு நிமிஷம் இங்க இரு கண்ணு. நான் வந்துடுறேன்” என்று சொல்லி விட்டு அறைக்குள் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவர் சற்று ஏமாற்றத்துடன் வெளியே வந்தார்..”அந்த மேடம் மதியமே கிளம்பிட்டாங்கப்பா…இன்னைக்கு பள்ளிகூடம் வேற விடுமுறை.. வேற எந்த டீச்சரும் இல்லை.. நேரம் ஆகிட்டதுனால் எல்லோரும் கிளம்பிப் போய்விட்டாங்க.” என்று சொன்னவரின் முகத்திலும் சற்று வருத்தம் இருந்தது.
மதிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் கண்கள் குளம் கட்டி விட்டன.
அவள் மனம் தன் அப்பாவை நினைத்துக் கூப்பாடு போட..

“எங்க அப்பாவிற்கு போன் பண்ணுங்க.” என்று மெதுவாக அக்னியை நோக்கி சொல்ல..

அவனுக்கும் அதுவே சரி என்று பட.. ஓடிச்சென்று அங்கு நின்று இருந்த  வேறு பள்ளி ஆசிரியரிடம்  உதவிக் கேட்டு அலைப்பேசியை வாங்கியவன் அவள் அடையாள அட்டையில் இருந்த அவளின் தந்தை பிரபாகரன் நம்பருக்கு அழைப்பு எடுக்க..

அது போகவே இல்லை. அவர் அலைபேசி சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகி இருக்க இவர்களின் துரதிஷ்ட நிலையை எப்படி சொல்ல்வது?

“போன் போகலை” என்று அக்னி சொல்லவும்.. மதிக்கு நெஞ்சம் மேலும் கலங்கியது.

ஒரு பக்கம் வயிறு வேறு பலமாக வலிக்க.. இங்கு அனாதைப் போல் தன்னந் தனியாக செய்வதறியாமல் திகைத்து நின்றாள்.

அவளின் நிலையை ஓரளவு புரிந்து கொண்ட அக்னி..
பாட்டி கொஞ்சம் நேரம் இவளை பார்த்துக்கோங்க.. நான் வந்துடுறேன் என்று சொல்லவும்..

சீக்கிரம் வாப்பா.. நானும் யாரவது வராங்கலான்னுப் பார்கிறேன் என்று சொல்லி விட்டு நின்று கொண்டார்.

அக்னி திரும்பி வரவே பதினைந்து நிமிடங்கள் கடந்து விட்டு இருந்தன.
அவன் வரும்போதே கையில் நாப்கினுடன் வந்தான்.
அதை அவள் முன் நீட்ட..

அதை அவள் எதுவும் சொல்லாமல் வாங்கிக்கொண்டாள்.

“என்னோட கார் வெளியில் தான் நிற்கிறது. நீ மாற்றி விட்டு வா. நான் உன்னை உன் வீட்டிலே விட்டுட்டு போய்விடுகிறேன்.” என்று சொல்ல..

அந்நிலையில் அவனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்கிற சிந்தனையும் அன்றி அவள் கால்கள் வேகமாக கழிவறையை நோக்கி சென்றன.

“அந்த கண்ணு  பார்க்க அப்பாவி மாதிரி இருக்கு.. என்ன செய்யனும்ன்னு தெரியாமல் பயத்தில் துடிதுடிச்சுப் போய்டுச்சு.. கொஞ்சம் பாத்து பத்திரமாக வீட்டில் கொண்டுப் போய் சேர்த்து விடுப்பா..”

“ம்ம்ம்..!! சரிப்பாட்டி” என்றவன் அவள் திரும்பி வந்ததும் அவளை அழைத்துக் கொண்டு விடைபெற.. “நீ எப்போவும் நல்லா இருக்கணும் கண்ணு…” என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார். 

ட்ரைவரிடம் காரை எடுக்கச் சொல்லியவன் அவளுக்கு வசதியாக இடம் விட்டு சற்று தள்ளியே அமர்ந்தான். “வெண்மதி இந்தா.. இந்த வலி நிவாரணி மாத்திரையை சாப்பிடு.” என்று கையில் கொடுக்க அவளும் அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டு அவள் வீட்டின் முகவரியை சொல்ல டிரைவர் காரை மதியின் வீட்டை நோக்கி செலுத்தினான்.

வீட்டின் முன்பு இறங்கியவர்கள்.. “வீட்டில் யாரும் இல்லையா?” என்று மதியிடம் கேட்க..

“அப்பா பெங்களூர் போய் இருக்காங்க.. அப்போ உங்க அம்மா?”
  
அதைக் கேட்டதும் மதியின் கண்கள் சற்று கலங்கின போலும்.. “இல்ல.. சாமிகிட்ட இருக்காங்க.” என்று தழுதழுத்த குரலில் சொன்னாள்.

அவள் முகத்தில் படர்ந்த வேதனையை நன்கு உணர்ந்தவன்.. “ஒன்னும் பிரச்சனை இல்லை..வீட்டுச்சாவி எங்க?”

அது ஜன்னலுக்குப் பின்னாடி இருக்கு என்று திசைக் காட்ட..
அங்கு போய் தேடி எடுத்துக் கொண்டு வந்தவன்..

“டிரைவர் நீங்க கிளம்புங்க. வீட்டில் கேட்டால் என் நண்பன் வீட்டுக்கு போய் இருக்கேன் என்று மட்டும் சொல்லுங்க போதும்.” என்று கட்டளையாக கூறியவன் அவரை அனுப்பி விட்டு மதியை அவளின் வீட்டிற்க்குள் துவாரத்தில் சாவியைப் பொருத்தி திறந்து உள்ளே அழைத்துச் சென்றான்.

வரவேற்பரையில் போடப்பட்டு இருந்த சோபாவின் மேல் அமர்ந்தவன்.. உன் அறையில் நீ தூங்கு. நான் உங்க அப்பா வரும் வரை இந்த ஹால்லயே  இருக்கேன்.”

உங்களுக்கு ஏன் சிரமம் என்று அவனை அனுப்ப அவள் மனம் முயலவில்லை.
அவன் தன்னோடு இருப்பதே பாதுகாப்பு என்று அவள் மனம் அடித்துக் கூற..
நேற்று பார்த்த ஒருவன் மேல் தான் இவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்கிறோம் என்று அவள் சிந்திக்கும் பக்குவம் அப்போது இருக்கவில்லை.

இவனுக்கும் இந்த சிறுப் பெண்ணை தனியாக விட்டுவிட்டு செல்ல ஏனோ மனம் வராது போகவே.. அவள் அப்பா வரும் வரை அந்த சோபாவிலே அமர்ந்து விடலாம் என்று எண்ணினான்.

அவனுக்கு எதிரில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் மட்டைப்பந்து ஆட்டத்தை பார்த்துக் கொண்டு பொழுதைக் கழிக்க.. அவள் அங்கு அறைக்குள் சென்றவள் முதலில் குளித்து உடை மாற்றி விட்டு மாத்திரையின் வீரியமோ என்னவோ 
நன்றாக உறக்கம் வர அங்கயே தூங்கியும் விட்டாள்.

இரவு எட்டு மணி கடந்த நிலையில்.. வாசலில் கோட் சூட் அணிந்து நின்றது ஒரு உருவம்.

அவர் கண்கள் சுருங்கின.
“யாருப்பா நீ?” என்ற கேள்வியில் சற்று திரும்பிப் பார்த்த அக்னி.. தன் வீட்டிற்க்குள் இந்த இரவு நேரத்தில் ஒரு பையன் அமர்ந்து இருந்தால் அவரின் மனநிலை சொல்லவும் வேண்டுமா என்ன?

அப்போது தான் தொலைகாட்சி திரையில் ஓடிக்கொண்டு இருந்த மட்டைப்பந்து ஆட்டத்தை அணைந்தவன்.. எதிரில் நின்று இருந்தவர் யார் என்று ஒரு நொடியில் புரிந்து கொண்டான்.

அவரைக் கண்டதும் எந்த வித பயமோ அன்றி நேர்முகப்பார்வையாகவே அவரை சந்தித்தவன்.. அங்கிள் என் பெயர் அக்னி. உங்க பொண்ணு படிக்குற பள்ளிக்கூடத்தில் தான் நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்குறேன்.
நாங்க இன்னைக்கு போட்டிக்கு போய் இருக்கும் போது எனத் தொடங்கி அங்கு நடந்த எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அவர் முகத்தைப் பார்க்க..
அவர் அப்போதே அறையில் தூங்கிகொண்டு இருக்கும் தன் மகளின் அறைக்குள் சென்று அவள் தலையை அன்பாக கோதி விட்டார்.

அவர் கண்கள் ஆனந்தத்தில் நிறைந்து இருந்தது.
மெல்ல கதவை சாற்றி விட்டு அக்னியை நோக்கி வந்தவர் அவனின் கையைப் பிடித்துக் கொண்டு உனக்கு எப்படி நன்றி சொல்லுறது என்று எனக்கு தெரியலைப்பா.. ரொம்ப நன்றி.”

பரவலை அங்கிள். எனக்கும் என்ன செய்வது என்று தெரியலை. அந்த பொண்ணையும் எனக்கு என்ன என்று தனியாக விட்டுவிட போக முடியலை. இனிமேல் நீங்க பார்த்துக்கோங்க. என்று சொல்லிவிட்டு கிளம்ப எத்தனிக்க..
இன்னொரு நாள் கண்டிப்பாக வீட்டுக்கு வாங்க தம்பி என்று சொல்லிவிட்டு அவரின் விசிடிங் கார்டை கொடுத்தார்.
அவருக்கு அக்னியின் மேல் நல்ல மதிப்பு ஏற்பட்டு இருந்தது.
கதவை தாள்போடாமல் இருந்த விதமே அவனுக்கு சொல்லிற்று அவனின் குணத்தை. 
அதையும் வாங்கிக்கொண்டு வெளியே வந்தவன் டாக்ஸி பிடித்து அவன் வீட்டுக்கு சென்று விட்டான்.

பிரபாகரன் ஊருக்கு சென்று இருந்த பக்கத்து வீட்டு தங்கையை அழைத்து சொல்ல.. அவரும் அடுத்த பஸ் பிடித்து வேகமாக கிளம்பி வந்து விட்டார்.

மதியின் அறைக்குள் சென்று மெல்ல அவளை எழுப்பி.. “அட என் சின்னக்குட்டி இப்போ பெரிய மனுஷி ஆகிவிட்டாளா?” என்று கன்னத்தைப் பிடித்து கொஞ்சவும்..

மதி அழகாக வெக்கப்பட்டாள்.

அண்ணா.. வர வெள்ளிகிழமை நாள் நல்லத்தான் இருக்கு அன்னைக்கு சிறு சடங்கு ஒன்னு பண்ணி விடலாம். பிறகு பெருசாக ஒரு மாசம் கழிந்த பின்பு பார்த்துக்கலாம் என்று சொல்ல..

எல்லாம் உன் விருப்பம் போல் செய் தங்கச்சி என்று பிரபாகரன் சொல்ல..
அதற்கான வேளையில் இறங்கி விட்டனர்.

இங்கு இரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் தவித்தாள் மதி.
அவள் எண்ணங்கள் அக்னியை பற்றி சிந்தித்தது.
அவளை அறியாமல் பருவக்காய்ச்சல் அவளுக்குள் புகுந்து இருந்தது.

இங்கு அக்னியின் வீட்டில் அவனின் தாத்தா ஆதித்யநாராயணதேவ்’கடுமையாக முறைத்தார் அக்னியை நோக்கி.


 காதல் மலரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *