மைவிழி விடு தூது
J51 MVT
நிவா தகப்பனை போன்ற உயரம் ஷார்ப் முகம் வடிவான தேகம்,பெரிய கண்ணு என்று ஓர் அழகில் இருப்பாள்.. அவளின் விகற்பமில்லா குழந்தை குணம் இன்னும் பேரழகு.. ஆனால் தஷாவோ சராசரி பெண்களை போன்று அளவான உயரம், தகப்பனின் செழிப்பான வளர்ப்பு மகளின் உடலில் தன் கைவண்ணத்தை அபரிதமான முறையில் செய்திருக்க.. பொல்லா பருவவயதின் மினுமினுப்பு புஷ்பாவின் வட்ட முகம், பொன்னிறம், மான்விழி எல்லாத்துக்கும் மேலே ஸ்மார்ட் அண்ட் ஷார்ப் அறிவு தஷாவின் சிறப்பு..
கன்றுகுட்டி காதல் ஹரி மீது கொண்டாலும் அவளின் தேர்ந்தெடுப்பு அபாரமே.!! தகப்பனா இவளுக்கு மாப்பிள்ளை பார்த்து வைத்தாலும் ஹரி போன்ற ரா பீஸ்கள் கிடைப்பது அபூர்வம்.. தேடுவதும் வீண் வேலையே.. ஒரே குறை பணக்காரன் இல்லை என்பது மட்டுமே.. ஆணுக்கு சம்பாரிக்கும் திறமை போதுமே அழகெல்லாம் எதுக்கு??!! eee
ஹரியின் காதல் பார்வை தன் மேல் விழுந்தாலும் போதும் என் பெண்மைக்கு பெருமை தன் காதலில் நேர்மையாயிருந்தாள் தஷா.. அதன் எதிர்காலம் பற்றிலாம் யோசிக்க தெரில.. பணம் எப்படி வருது வசதிகள் எப்படி கிடைக்குது பேசிக் அறிவு சுத்தமாயில்ல.. ஹரி போல அடிப்படல..
உணவை முடித்து, புஷ்பா மாமியிடம் சொல்லிக்கொண்டு விடை பெற காத்திருந்த ஹரி .. தஷாவின் கிறுககுத்தனத்தில் அவனுக்கு அவளின் செயல் அப்படித்தான் பட்டது.. அவளின் ஈர்க்கும் பருவ எழில்கள் எதிர் பாலினகாவர்ச்சிகள் ஏதும் கவரல.. ஐயோ இங்கு மாமாவிடம் பெற்றிருக்கும் நல்ல பேரை இந்த பொண்ணு கெடுத்து விட்டுரும் போலயே.. காது கொடுத்து கேட்டதே துரோகம் போல முகம் சுண்டினான்.. தாடை இறுகியது..
தகப்பன் ஏழு திரை போட்டு காக்கும் அரிதிலும் அரிதான தேவதையின் ஸ்பரிசம் அவனுள் ஏதும் செய்யல.. நொடியில் விரைத்து எழுந்து நின்றவன்.. கிடு கிடு ன்னு வாசல் நோக்கி நடக்க.. இதுவரை புறக்கணிப்பு அறியா சின்ன பெண்ணுக்கு கண்ணீர் வந்தது..
காதல் என்பது வலிகளின் வெந்நீர் ஊற்று.. தாண்டி செல்பவர்கள் அறிவாளிகள்.. அதனுள்ளே கால் நனைப்பவர்கள் நிஜமாவே பாவம்.. உலகின் அத்தனை ரோதனைகளையும் இலவசமா பெறுகிறார்கள்… அழுதா காதல் வருமா??!!
ஹரிக்கு கொடுக்க ட்ரை நட்ஸ் கையில் எடுத்து வந்த புஷ்பா .. டையனிங் அறையில் அவனை காணாது தேட.. சமையல் கட்டில் மகளின் கொலுசு சப்தம் தாவணி முந்தியின் வேகமான மறைவு.. இவ ஏன் இங்கே வந்தாள்? புருவம் சுருக்க வைத்தாலும்.. மனதில் அதை குறித்துக்கொண்டு.. வெளியில்
ஹரி தம்பி .. குரல் கொடுத்தே போக..
கேட்டுக்கே போனவன்.. நின்றான்.. முகம் சுத்தமா விழுந்து விட்டது.. மாமி முகம் பார்க்க பயமாயும் இருந்தது..
உண்ட வீட்டுக்கே துரோகமா? உன் இருப்பை நினைச்சுப்பாரு தெரு நாயே? என்று சத்தம் போட்டால் கண்டிப்பா ஹரி உடைந்தே போவான்.. அந்த பொண்ணு பேர் கூட தெரியாது அது தானா பேச வந்ததுக்கு நான் என்ன செய்வேன்? அந்த இளையவன் மனம் உளைந்தது..
இந்தா ஹரிம்மா.. காசை மிச்சம் பண்ணி ஊருக்கு அனுப்புறேன் என்று ஒருவேளை மட்டும் சாப்பிட்டு தெரியாதே.. நட்ஸ் வாயில் ஊறவச்சு மென்னு சாப்பிடு.. வாட்ச்மேன் முருகனை ஹோட்டலில் வாங்கி வரச்சொல்லி வயிறு நிறைய சாப்பிடு.. கவரோடு ரெண்டாயிரம் பணமும் வச்சு தர..
மாமி .. உங்க அன்பு போதும் .. கவரை வாங்கிக்கொண்டு.. பணத்தை திருப்பி கொடுத்து.. இது வேண்டவே வேணாம்.. வேகமாய் நகர்ந்துவிட்டான்..
ஹரி… நில்லு..
மாமி.. வலி நிரம்பிய கண்களோடு அந்த பையன் திரும்பி பார்க்க..
சாமிகள் வேறு பெயர்களில் இருந்தாலும் சக்தியில் ஒரே சாமிதான் .. அதே போல ஒவ்வொரு வீட்டில் தனித்தனியா இருந்தாலும் எல்லா தாயும் ஒன்னு தான்.. புஷ்பாக்கு ஈரம் சுரக்க..
அடிபட்டது ரொம்ப வலிக்குதா?
இல்ல.. மறுத்து தலையசைக்க..
உடம்பை பார்த்துக்கோ தம்பி.. புஷ் விடை கொடுக்க..
நேரா பிரதாபனிடம் சென்றவன்..
“மாமா வேற வேலை கிடைச்சுடுச்சு.. இந்த மாசத்தோட நின்றுருறேன் மாமா” என்று அடமா நிற்க.. யோசனையா பார்த்த பிரதாப்..
“சரி .. போ.. விட்டுவிட்டான்..
நிவா வுக்கு தாய் வீட்டு சீராட்டு புளித்து விட்டது.. மித்ரா தொல்லை தராத குழந்தை அமுது உண்ண தூங்க.. முழித்திருந்தால் கை கால் ஆட்டிக்கொண்டு உருண்டு கட்டிலை சுத்த என்று தானா விளையாடும் அமைதியான குழந்தை.. கொழு கொழு ன்னு பார்க்க தூக்க ஆசை கொள்ளும் அளவுக்கு சமர்த்து பிள்ளை.. யார் தூக்கினாலும் சிரித்தே தாவி கன்னம் தொடும் ஸ்வீட் கிட்..
அதனால் 0 பராமரிப்பு நிவாவுக்கு.. மாமியார் ஊருக்கு சென்றாலும் கிராமத்தில் ஆட்கள் புழக்கம் அதிகம் செய்ய வேலைகளும் உண்டு பொழுதும் நன்றாக போகும்.. நினைக்க ஆரம்பித்த நேரத்தில் தான் லயனின் ஒதுக்கம் புரிய ஆரம்பித்தது.. போன் இல்ல.. மெஸேஜஸ் இல்ல.. தவித்தே போனாள்.. தம்பிகளோடு அம்மா பிசியாக இருக்க.. இந்த புது பிரச்சனையை இங்கு சொல்ல தயங்கினாள்.. பிள்ளை சாக்கு வச்சுட்டு ஊருக்கு வரல என்று பாட்டியும் ரேவதியும் நிவா மேல் கடுப்பில் இருக்க.. அவர்களும் இவளுக்கு போனே போடல.. மொத்தமா இருந்துக்கட்டும் என்று டீலில் விட்டு விட்டார்கள்.. ஒரு மாசம் மேலேயே இந்த ஊமை படம் ஓட.. கடைசியில் சுகன்யா அண்ணிக்கு ஒரு மதிய பொழுதில் போன் போட்டு மாங்கு மாங்கு ன்னு அழுது..
மாமா போனே பண்ணமாடுராங்க 40 நாள் ஆச்சு.. என்று மனசின் வெம்மையை கொட்ட..
உனக்கும் பண்ணலியா?
உங்களுக்கும் பண்ணலியா?
ஆமாம்.. பிரண்டு போனுக்கு அடிச்சா நான் ப்ராஜெக்ட்ல பிசி சொல்லிட்டு வச்சிடுறான்.. சரியா பேசுவதில்லை.. நீதான் காரணம் என்று அம்மா அப்செட்..
ஹான் ஹாங்.. இன்னும் ஓவர் அழுகை நிவா..
அண்ணி எனக்கு அவர் பேசினா மட்டும் தான் பேசவே தெரியும்.. திரும்ப எப்படி கூப்பிடனும் கூட தெரியாது.. அவர் போன் வந்தா என்ன நானே மறைந்துடுவேனே.. யார் சொல்லி யாரை பிரிக்க முடியும் அண்ணி.. என்னை அவருக்கு இப்போதானே தெரியும்.. நீங்களாம் பிறந்ததிலேர்ந்தே தெரியும்ல.. பாவம் போல அழுதுட்டே மழலையா கேட்டாலும் நிவாவின் பக்கம் பெர்பக்ட்.. சுகன் புரிஞ்சிக்கிட்டா..
முன்னமே அவன் உனக்கு போன் பண்ணாததை சொல்ல வேண்டியது தானே..
சில நேரம் பிரேக் எடுத்துப்பார் அது போல நினைச்சேன் அண்ணி..
ஓ..அப்போ அவனை பிடிக்கணுமே? நான் ஊரில் பேசிட்டு உனக்கு விபரம் சொல்லுறேன்..
வாசுவுக்கு போன் பண்ணி கைலாஷ்யின் பாராமுகம் கூற..
“அங்கு யாரையாச்சும் பொண்ண கரெக்ட் பண்ணியிருப்பான்? எல்லாம் என்ன மாறி சாமியாரா திரிவாங்களா?” பொடி வச்சு பேச..
போயா. போ… வீட்டுக்கு வா உனக்கு இருக்கு.. தரை லோக்கலா திட்டி வச்சுட்டா .. ஏழுவருசம் தொடங்கிருச்சுல்ல.. இனி மரியாதலாம் தேயும்ல
இவ தம்பிக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா டோமோடோ சாஸ் வாசு நொந்து சாபம்.. அந்த 100’s ல ஒன்னு கூட செலவாகலன்னா கொதிப்பு வரும்ல பாஸ்.. வில்லன் அவனின் ஆசை மகன் தவமிருந்து பெற்ற பிரஜின் தான்.. தாயின் விரலை கூட தகப்பனை தொட அனுமதிக்கவேயில்லை.. கற்பை அவ்வாறு இரவும் பகலும் ஹெட்லைட் கண்ணு வச்சு கண்காணிச்சான்.. கிட்டே நெருங்கினால் அழுது ஊரை கூட்டி அசிங்கப்படுத்தினான்.. eee
“கண்டிப்பா இவனை ஐபிஎஸ் யாத்தான் ஆக்கணும் ரொம்ப உசாரு பயப்புள்ள..” புலம்பி வாசு இன் வெக்ஸ் யோ வெக்ஸ் மூட்.. விசித்திரமான அந்தரங்க பிரச்சனை.. ஹாஹா
சுகியும் என் மகனுக்கு எவ்ளோ அறிவு பாருங்க.. என்று புகழும் பொழுது முடியல்ல வாசுவால்.. எங்கு என்னென்னு சொல்வான்? காம வெறியன் சொல்லிட்டா?? EEee
