மைவிழி விடு தூது
45 MVT
மாத்திரை டப்பா/ பாட்டில் கலக்சன் எல்லாம் தங்கள் பெட் ரூமில் ஒரு ஒதுக்குபுற செல்ப்பில் ஒரு மணிநேரம் முதுகு உடைய அடுக்கி வைத்ததை பார்த்தும் என்னை நம்பவே மாட்டுரா.. நான் தான் குடும்பம் தான் வேணும் சொன்னேன்ல.. கிட்டேயே விட மாட்டுரா.. அவனுக்கும் பத்து நாள் அந்த பசி.. புலி ரொம்ப பாடா பட்டுச்சி கறி பீஸ் கிடைக்காது.. eee
இன்று மகள் வந்தால் உள்நாட்டு குழப்பம் அதிகம் தான் ஆகும்.. ஆனாலும் புகுந்த வீட்டுக்கே விட்டு கொடுத்திட முடியாதுல.. பிரதாப் வீம்புக்கே வந்திருந்தான்..
பாட்டி புண்ணியாதானம் அது இது என்று அடுக்கடுக்கா விசேஷங்களை அடுக்க.. இடையில் பிரதாப் நசுங்கிட்டான்..
“அப்பா… நான் அத்தை கூடவே போறேன்.. நீங்க அடிக்கடி என்னை பார்க்க வாங்க.. நானும் உங்களை தேடும் போது கூப்பிடுறேன் கூட்டிட்டு போங்க..” என்று நிவா மழலையா சொன்னாலும் சரியா சொல்ல..
மனைவியை ஓரமா தள்ளிட்டு போனான் பிரதாப்..
“ஹுக்கும் பெண்ணே பிள்ளை உண்டாகி இருக்கா.. புது பொண்டாட்டி போல எப்படி புஷ்பாவை உரசிட்டு போறான் பாரு எருமை ” மைண்ட் வாய்ஸ்..
யார்துன்னு நீங்க கண்டு பிடிச்சி இருப்பீங்களே.. ஹாஹா
பாட்டியே தான்..
“என்ன சொல்ற புஷ்பா?”
“என்ன சொல்லணும்?”
“ஏட்டிக்கு போட்டியாவே பேசாதே”
“யோவ் உன் பொண்ணு நீ முடிவெடு.. நான் வேலைக்காரி கூட கிடையாது உனக்கு” மெல்லிய குரலில் என்றாலும் நச்சுன்னு சண்டை ரெண்டுத்துக்கும்.. eee
பாட்டிக்கோ ஒன்னுமே கேக்கல .. கிசுகிசுப்பது அனைத்தும் காதல் மொழியாவே அவருக்கு தப்பா மொழி பெயர்த்து உணர்வுக்குள் விழ..
“இந்த கிளவனும் இருக்கானே.. ஒரு நாள் ஒருபொழுது இப்படி அன்பா அனுசரனையா பொண்டாட்டிக்கிட்டே ஆலோசனை கேட்டு இருப்பானா? இவனுக்கெல்லாம் பிள்ள பெத்து நானும் பூட்டன் வரை எடுத்துட்டேன்..”சலித்து தாத்தா மேலே கொலை வெறியில் பாட்டி..
அவரோ ஊருக்கு போகும் சந்தோஷத்தில் நாலு ஆளுக்கு சேர்த்து இவரே தண்ணி போட்டு தரைக்கு ரெண்டு இன்ச் மேலே மிதந்துட்டு வானுலக தேவனாய் சிரிப்பே சிறப்பு என்று புன்னகை மன்னனாய் இருந்தார்.. முடில.. பாட்டிக்கு இப்படி ஒரு நிதானமில்லா ஜோடி..
இங்கு தம்பதியருள் விவாதம் முடில..
“இப்போ அவர்களோடு முதலில் போகட்டும் அப்புறம் பின்னாடியே போய் கூட்டிட்டு வந்துடலாம்..”
“நீங்களே தான் அவளை கூப்பிட, வைக்க இனி போகணும்.. நான் வர மாட்டேன்”
“ஏன்? ஏன்?”
“அவ இடம் அதுதான்.. ஊணி வேர் போடுற நேரம் இங்கும் அங்கும் அலைச்சல் பண்ணா நம் பிள்ளை தான் கெலிச்சு போவும்.. அதுக்காக அவளை அப்படியேவும் விட மாட்டோம்ல.. நம் அன்பும் ஆதரவும் தேவை எனும் பொழுது தாராளமா கூட்டி வந்து கொண்டாடலாம்.. நிவாக்கு நூறு வயசானாலும் நமக்கு குழந்தை தான்..” எங்கேயோ வெறித்து பார்த்து தத்துவமா புஷ் வசனம் பேச..
“போதும்..” மூஞ்சை கடு கடு வென வச்சி.. சிவப்பு மூஞ்சி பொண்டாட்டிக்கு காட்டிட்டு..
“நாங்க அப்போ போய்ட்டு வரோம் விசேஷம் வைக்கும் பொழுது சொல்லுங்க..”
பகையாளி போல பாட்டிக்கிட்டே சொல்லிட்டு.. சல்லுன்னு புஷ்பாவை இழுத்துட்டு போய் காரில் தள்ளி கிளம்பி போய்ட்டான் அந்த இரும்புக்கை மாயாவி..
“என்னாச்சும்மா.. சாப்பிடாமா கூட போறாங்க..” ராக்கு தாயிடம் கேட்க..
நிவா அருகில் இல்லை என்பதை உறுதி படுத்திட்டு..
“உன் சம்பந்திக்காரன் ஒரு கிறுக்கன்.. அவனை பத்தி என்கிட்டே ஒன்னும் பேசாதே.. உன் மருமகளை கூப்பிட வந்தான்.. நான் விடல.. பொண்டாட்டி ஏதோ ஓதினா.. பறந்துட்டான் அவ்ளோதான்..
லட்டு போல பிள்ளையை கையில் கொடுத்திருக்கான்.. அதனால் மன்னிச்சு விடு.. போய்ட்டு போறான்.. எதையும் பெருசாக்காதே.. இன்னும் ரெண்டு சம்பந்தம் எடுத்து அவன் அல்லாடுரதை நான் பார்க்கத்தானே போறன்.. நம்ம கிட்டேயே அவன் பவிசை காட்டுறான்.. விடு.. விடு”
பாட்டிக்கு தாத்தா காண்டெல்லாம் சேர பிரதாப்க்கு சூப்பர் சாபம் ஹாஹா..
சமுக அரசியல் தான் மோசம் என்பார்கள்.. உறவுகளோடு உறவுகள் மோதி வித்தியாச குணங்கள் கொண்ட மனிதகளோடு வாழும் குடும்பங்களில் நடக்கும் அரசியல்கள் மோசமோ மோசம்.. சில நேரம் கொண்டாடும்.. சில நேரம் காலில் போட்டு மெறிக்கும்… கொஞ்சும்.. கோபப்படும்.. ஒரே லைன்ல போவாது.. அதனால் நாமும் மாட்டு வண்டி குலுங்கலுக்கு ஏற்ற மாதிரி சைஸா பிடிமானமா உக்கார்ந்துகோணும்.. இல்லன்னா காலி.. eee இது குடும்பம் சொல்லும் நீதி.. ம்ம்
“ஏங்க இப்படி முகத்தில் அறைஞ்ச மாறி இழுத்துட்டு வரீங்க..”
“கூழை கும்பிடு போட்டுட்டு வரவா?”
“சபை மரி..யாதை…”
“ஹுக்கும்.. பெரியம்மா மாத்தி மாத்தி பேசி ஏமாத்துராங்க ..” அவன் குதிக்க..
“என்ன அவங்க சொன்னாலும் நம்ம கலாச்சாரத்தில் இப்படித்தான் இருக்கணும் வரைமுறைக்கு வந்து தானே ஆகணும்.. அந்தம்மா புத்திசாலி.. நீங்க ஏமாளி அவ்ளோ தான்..”
வாய் பேசும் மனைவியை எரிக்க எண்ணி.. கார் ஒட்டிட்டே அவளை பார்க்க.. “ஹக்” வாய் தானா திறந்தது.. தொண்டை வறண்டு.. மூட் மாறி போச்சு.. அவனுக்கு மட்டுமே தெரியும் வண்ணம் ஒரு பக்கத்தை முள் வரை முழுக்க காட்டி மூடி விட்டாள் புஷ்பா .. சட்டுன்னு எங்கெங்கேயோ பூக்கள் பூத்துச்சு பிரதாப்க்கு.. ஏசி கார் பெண்டாட்டியின் அருகாமை அதுவும் அழைப்போடு.. நொடிக்குள் மறைந்த கோன்வடிவழகின் மேலே .. ஆசை வர.. வாய் தானா ஊறியது எச்சிலால்..
“ஏய் என்னதிது புதுசா?”
“பழசு தான்..” சிரிக்காது புஷ் நக்கல்..
“இன்னொரு முறை காட்டுடி..”
சேலையை அவன் கைகள் விலக்க போக.. முன்பு ஓபன்யா இருந்தது இப்போ இல்ல.. மாயமா ரெண்டு மூடி போட்டு மூடிட்டா இது எப்போ?
அடியேய்.. நல்லா பிடிக்குற பல்ஸ்ய.. உதடு கடிச்சான்..
சென்னையின் நெரிசலில் அவளை தனியா தள்ளிட்டு போய் உதட்டை பிய்க்க முடியாது.. இடம் பொருள் ஏவல் தெரியாது ஆசை எழுந்து நிற்க.. eee
பக்கத்தில் இருந்தவளோ யாரோ போலிருந்து வெறுப்பேற்றினாள்..
“இங்கேயே இறக்கி விட்டுட்டு நீங்க ஆபிஸ் போங்க.. ஒரு தெரு தானே? நான் நடத்துகிறேன்..”
அவன் போனோ விடாது அழைக்க..
“ம்ம்ம்.. போ..” அனுப்பிட்டான்..
வீட்டுக்கு நடந்த புஷ்க்கு வெற்றி சிரிப்பு.. நாங்களாம் அப்பாவியா இருக்கும் போது தான் நீங்களாம் ஓவியமா வாழ முடியும்… சடுதியில் உன் அறிவுக்கு நான் என்ன குறைவு? களம் இறங்கிகிட்டா ஒரு ஆணும் இங்கு பெண்ணை தாண்டி ஜெயிக்க முடியாது..
ஒரே ஒரு சாம்பிள் காட்டியதுக்கே.. அழன்று கழன்று ஒடுறான்.. நான் தாங்க மாட்டேனா? வாடா ஒத்தைக்கு ஒத்தை என் அயித்த மொவனே.. ஒருவித காதல் ஜென் நிலையில் புஷ் சபதம்.. பிரதாப் இவளை தாங்குவானா? ஹாஹா..
ஊருக்கு கிளம்பும் நேரத்தில் வாசுவுக்கு அவசர வேலையாகிவிட.. மனைவிக்கு விஷயம் சொல்லி ஞாயிறு வரேன் என்று சொல்லி சமாதானம் செய்ய.. அவள் சட்டுனு முகம் தூக்கி வச்சு அழ தயாராக..
ஏன்டி லூஸா நீ? நம் தொழில் பற்றி தெரியும்ல ஒருநாள் பொறுப்பான ஆள் இல்லன்னா எல்லாம் மாறிப்போயிரும்.. அழுதே உன் ஊருக்கே கூட வரமாட்டேன்.. கண்ண துடை.. பாப்பாவை பார்த்துக்கோ நீயும் சந்தோசமா இரு அடிக்கடி வரேன்.. என்று சொல்லி கிளம்பிட்டான்..
டிரைவர் போட்டு பத்திரமா அம்மா அப்பாவை ஊருக்கு கூட அனுப்பிவிட்டுத்தான் பொறுப்பாய் தன் கடமைக்கு திரும்பினான்..
கல்யாணம் தாண்டி பிள்ளை தாண்டி இப்போ புது புது அனுபவங்கள் திருமணவாழ்க்கை தரும் ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் எதிலேயும் இல்ல.. பிரமச்சாரிகள் ரிஷிஸ் சாதூஸ் ஏதேதோ சம்சாரிகளை சொன்னாலும் இல்வாழ்க்கை போல சொரக்கமும் இராது.. கஷ்ட நஷ்டங்களில் உழன்று ஆண்டு அனுபவித்து உரித்து பார்த்த பின் ஒன்னுமே இல்ல ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ்வதை தவிர.. அன்பே சத்தியம் அறைந்து சொல்லும் இல்லறம்.. நல்லறம் தான்..
அங்கு சங்க மீட்டிங்கில் கடமைக்கு பங்கெடுத்த பிரதாப்க்கு ஒன்றும் மூளையில் ஓடல.. இது ஒன்னும் அத்தனை முக்கியமான விஷயங்கள் பேசும் மீட்டிங் அல்ல.. சும்மா சும்மா சொன்னதையே திரும்ப திரும்ப பேச.. கடுப்பாக்கினார்கள்… தலைவருக்கு பைபாஸ் சர்ஜரி நடந்துச்சு ஓகே.. அவரால் முடில இதுவும் ஓகே.. அதுக்கு எதுக்குடா அறுவையை போடுறீங்க.. மனசுக்குள் தாளிச்சு.. மனைவியை பார்த்த வெண் வட்டம் அதனுள் பர்ப்பில் குட்டி வட்டம் அதன் நடுவில் ஒரு ஆரம்.. பட்ட பகல் வெளிச்சத்தில் பார்த்ததில் அம்மம்மா!! சொக்கினான்..
எழுந்து நின்னு விஷ் பண்ணிக்கோங்க பிரதாபன்..
அருகிலிருந்தவர் கைதட்டி எழும்ப சொல்ல..
அனிச்சையா எழுந்தவனுக்கு அப்போ தான் புரிந்தது.. இவனை சங்கத்தின் தலைவனா அவர்கள் ஒன்று கூடி தேர்ந்தெடுத்திருப்பது.. அதுக்குத்தான் ஆயிரம் போனா? வா வா ன்னு.. முடில
ஐயையோ.. சங்கத்தில் அங்கத்தினனாய் இருப்பதே தன் தொழில் எந்த சங்கடமும் சந்திக்காமல் போவதுக்குத்தான்.. இப்போ இப்படி தலைவரா கோர்த்து விட்டால்.. தன் தொழில் பார்க்க முடியுமா? மலைத்தான்..
இவனுக்கும் மேலே சீலர்கள் இங்கு உண்டு.. பழுத்த வயதும் அவர்களுக்கு இருக்க.. இதை ஏற்காது அவன் அவர்கள் பேரை பரிந்துரைத்து.. ஏற்க மறுக்க… இளைய தலைமைக்கு வழி விடுகிறோம் “பிரதாப் உன்னால் முடியும்” அவர்கள் மனம் நிறைவாய் சொல்ல..
மரியாதை பட்டங்கள் கிடைப்பதும் எல்லாம் குடும்பம் தான் அடிப்படை உணர்ந்தான்.. லீலைகள் இனி இல்லை.. அதனால் பொது வாழ்வில் கரும்புள்ளி விழாது என்று மனதை தேற்றிக்கொண்டு..
அன்றே அவன் பதவியேற்பும் எடுத்து கொள்ள சங்கம் ஹாப்பி..
நாலு மணிக்கா வீட்டுக்கு மலர் மாலைகளோடு போக.. கையில்லா ரவிக்கையோடு மனைவி கதவு திறக்க.. ஆசைகள் தீரக்கூடாது தோணுச்சு தலைவனுக்கு… eee
.
