மைவிழி விடு தூது
35 MVT
சுகி, அவன் கண்ணில் கண்டது நிஜ காதல் .. என் தம்பி பொம்பளை பொறுக்கியோ? பழகும் பெண்களை வைத்து டயம்பாஸ் பண்ணும் ஈன பிறவியோ அல்ல.. இந்த நல்லதுக்கு சந்தோசப்பட்டாள்..
இதே அளவு அந்த பெண்ணிடம் இருந்தால் போதும்.. அம்மா கவலை வீணே.. மனங்கள் ஒத்து போவுதா? விட்டு கொடுத்திடணும்.. காலம் பூரா வாழ அதுதானே வேணும்..
காதல் என்றதும் தன் நிலாக்காலங்கள் நினைவுக்கு வர, தன் வாசுவிடம் எந்த பிணக்கு வந்தாலும் அனுசரித்து போவதுக்கு அடிப்படை அவன் மீது கொண்ட தீரா காதல்தான்.. இந்த ஐந்து வருட திருமண வாழ்வில் எத்தனை மாற்றங்கள்? மன வேற்றுமைகள் .. பிரிவுகள் .. சண்டைகள்.. சின்ன சின்ன காயங்கள், காதல் அருமருந்துகள்.. அனைத்தையும் இன்று திரும்பி பார்த்தால் எத்தனை சுவையானவை.. இதே அந்நேரம் அன்பு இல்லாது எதிர்கொண்டால் போச்சு.. அனைத்தும் கிண்டப்பட்டு பிச்சுட்டு, நீ வேணாம், நானும் உனக்கு வேணாம் என்று மல்லு கட்டத்தான் வேண்டி இருக்கும்..
நம் சட்டம் அவனுக்கும் பொருந்தும் தானே..
இப்போ இவனை என்ன செய்யலாம்? அந்த பொண்ணு விவரம் கேட்டு பழகி பார்க்கலாமா? சேற்றில் முளைத்த செந்தாமரையாக இருக்கக் கூட வாய்ப்பு இருக்கே.. ம்ம்ம்
தன் இடம் இறங்கி பேச தயக்கமாக இருக்க.. அதில் வாசுவின் காவுரவமும் சேர்த்திருக்கிறது அல்லவா?
சரி! நம்மை சுற்றி இருக்கும் தாய்குலங்கள் அட்வைஸ் கேட்போமா? நிறய கருத்து வரும்.. அதில் எது பெஸ்ட் பார்ப்போம்.. காசா? பணமா?
முதலில் தன் சமகால தலைமுறையான ராதா அண்ணியிடம் என்று முடிவு பண்ணி கேட்க..
“அடடா! அப்படி போவுதா கதை? நல்லா வசதியானவன், அழகன், நல்லவன், வலை போடாதிருந்தால் தான் நீ ஆச்சரியபடணும் சுகி.. சின்ன பசங்களுக்கு பேச பழக இந்த வயசில் பொண்ணு தேவைப்படுது.. அப்படி அவனை முதன் முதல் கவர் பண்ற பொண்ணு கிட்டே இதுக முழுக்க கவுந்துடுது..
ஒன்னு சொல்றேன் கேட்கிறியா சுகி.. ஆண் பிள்ளைக லைட்டா பொறுக்கியா இருப்பது கூட நல்லது தான் தப்பான பெண்களிடமிருந்து விலக.. உன் தம்பிக்கு அந்த சமர்த்து கிடையாது.. அந்த பொண்ணுக்கு உன் தம்பி கிடைச்சுட்டா ஒத்த பைசா செலவில்லாது உங்க வீட்டில் ராஜ்ஜியம் பண்ணலாம் இது பயங்கர சதிதிட்டம் சுகி… லவ் என்கிற போர்வையில்.. ” ராதா தன் ஊகத்தை சொல்ல..
“ஒருவேளை நல்ல பெண்ணா இருந்து ஏழையா இருந்துச்சுன்னா அண்ணி?”
“அது பார்த்த அடுத்த செகண்ட் தெரிஞ்சிரும்.. எதுக்கும் சும்மா வர வச்சு பேசிப்பாரு.. அப்பாவியா தெரிஞ்சா கைலாஷ் முதலில் பிஜி படிக்கட்டும் அடுத்து நல்ல வேலைக்கு போவட்டும் ஐஞ்சு வருஷம் பொறுங்க .. சொல்லு என்ன பதில் வருது பார்ப்போம்..”
“ம்ம் .. சொல்றேன் அண்ணி ..” குழம்பி சுகி அரையும் குறையுமா பதில் சொல்ல..
“ஆனால் நான் ஒன்னு மனசில் வச்சுருந்தேன் சுகி.. இவரோட தூரத்து உறவுகாரங்க பொண்ணு ஒன்னு தங்கச்சிலை போல இருக்கும்… குணமும் சூப்பர்.. ஒரே நாள்தான் அவங்க வீட்டு பால்காய்ப்புக்கு போனோம்ப்பா.. நல்ல பேமிலி.. அவ்ளோ அன்பு.. அந்த பொண்ணு தேவதை போல இருந்தா.. நம்ம இனத்திலேயே அப்படி ஒரு அழகு பொண்ணை பார்த்ததே இல்லன்னா பாரேன்.. அன்னைக்கு ஒரு நிமிஷம் நினைச்சேன் கைலாஷ் தம்பிக்கு இந்த பொண்ணு மேட்ச்யா இருக்கும்ன்னு.. அப்போ 15 வயசு இருக்கும் நான் பார்த்தப்போ.. இப்போ பிளஸ் 2 படிக்கும் நினைக்கிறேன்…. அந்த லவ் செட்டாச்சுன்னா பாரு இல்லன்னா நாம இப்படி ஏதாச்சும் ஒரு பொம்மையை கண்ணுல காட்டி பிள்ளையை பாதுகாப்பு பண்ணி இருக்கலாம்.. “
உடன் பிறந்தவளுக்கு மேலேயே ராதாவும் கவலைப்பட.. அத்தை போலவே அண்ணியும் எந்த கற்பிதங்களும் கொண்டிருக்காதது சுகிக்கு பிடிக்க மகிழ்ந்தாள்
வேறு யாராவது என்றால் புறம் பேசியே நக்கல் பண்ணி இருப்பார்கள்.. நிஜ நாத்திகள்
“நாம இத்தனை பேர் கைலாஷ் நன்மைக்காக யோசிக்கிறோம்.. கண்டிப்பா அவன் நல்லா இருப்பான் அண்ணி..”
“உண்மைடா சுகி.. உத்து பாரு விடாதே”
அடுத்து தன் அத்தையிடம் சொல்ல..
“ஒரே வயசுன்னா கஷ்டம் சுகிம்மா.. நம்ம கைலாஷ் பச்ச பிள்ள.. சரி வராது.. ” ரெண்டே வார்த்தையில் வரும்மா முடித்து விட.. பெருமூச்சுவிட்டாள் சுகி..
கடைசி ஆச்சி.. அவ்ளோதான் கையில் சூலம் வைக்காத குறையா ஆட்டம்.. என் பேரன் அழகென்ன? படிப்பென்ன? அந்தஸ்த்தென்ன? ஒன்னுமத்தவளை கட்டணும்ன்னு தலை எழுத்தா?.. தெரிஞ்ச ஆளை வச்சு கூப்பிட்டு வச்சு மிரட்ட சொல்லி இருக்கேன்.. ஓடிருவா விடு” சூசகமா பாட்டி பேச.. இளைய தலைமுறையான சுகிக்கு ஆச்சரியமாய் புருவம் உயர்ந்தது..
இனி டெய்லி நாமே தம்பிக்கிட்டே பேசுவோம் என்று வலிய போய் உக்கார.. அவனோ செல்லும் கையுமாவே திரிய மண்டை காய்ந்தாள்..
“அடுத்து என்ன படிக்கபோற கைலாஷ்?”
“கேட் எக்ஸாம் ப்ரிப்பேர் பண்றேன் ME தான்..”
“நல்லதுப்பா நீ யாரையோ விரும்புற ன்னு அம்மா சொன்னாங்க.. என்ன விஷயம்? அவ பேர் என்ன?”
” ராஜிக்கா.. “
“ம்ம்ம்..எத்தனை வருஷமா பழக்கம்?”
“ரெண்டு வருசமாக்கா..” வெட்கப்பட்டு கைலாஷ்
ஓகே.. வீட்டுக்கு தெரிஞ்சிடுச்சு அடுத்து என்ன ஐடியால இருக்கீங்க ரெண்டு பேரும்..”
“பி ஈ முடிச்சதும் கல்யாணம் பண்ணிட்டு ரெண்டுபேரும் படிக்கலாம் என்று இருக்கோம்..”
“ஓ.. உனக்கு ரொம்ப வயசு கம்மியா இருக்கே கைலாஷ்..”
“அவ வீட்டில் நெருக்குராங்களாம் .. புலம்புரா”
அதுசரி..!!!
“கல்யாணம்ன்னா என்ன தெரியுமா கைலாஷ்?”
“தெரியும்க்கா.. சம்பாரிச்சு என்னை நம்பி வரவளை பொறுப்பா காப்பாத்தனும்”
“அழகா சொல்லிட்டே.. அதுக்கு மட்டுமில்ல லவ்ல அதைவிட பொறுப்புகள் இரண்டு மடங்கு தேவை.. கவனம்டா.. சரி கல்யாணமும் பண்ணுறே வச்சுக்கலாம்.. உன்னால குடும்பம் சமாளிக்க முடியுமா?”
“அதான் அம்மா கிட்டே முதலில் சொன்னேன் நான் படிக்க போவும் போது ஹெல்ப் பண்ணுங்க என்று .. அவங்க ஓவர் பீலிங்ஸ் வச்சுட்டாங்க அப்பா சுத்தமா பேசவே மாட்டுறார்..”
” ம்ம்ம் சொன்னாங்க என்கிட்டேயும்.. சரிப்பா.. அவங்க ஒரு பக்கம் இருக்கட்டும்.. உன்பக்கம் நானிருக்கேன்.. ராஜி கிட்டே பேசணுமேப்பா”
“நாளைக்கே கூட்டிட்டு வரேன். ரொம்ப நல்ல பொண்ணுக்கா அன்பா இருப்பா பேசிக்கிட்டே இருப்பா.. உனக்கு ரொம்ப பிடிக்கும்”
சிரிப்பு வந்தது சுகிக்கு.. காதல் ஒரு ஆரஞ்சு மிட்டாய்..!!!
“நல்லது.. நாளை நீ, நான், ராஜி மூவரும் பேசுவோம் எல்லோருக்கும் நன்மை கிடைக்கிற மாதிரி பொதுவா ஒரு முடிவு எடுப்போம்.. அப்புறம் நம்ம பேரன்ட்ஸ் கிட்டே பேசுவோம் சரியா?”
சுகியின் மென்மையான முதன் முதல் பாசிட்டிவ் அணுகுமுறை கைலாஷ்க்கு நம்பிக்கை தர ரொம்பவும் ஹாப்பி..
“கண்டிப்பாக்கா.. போட்டோ காட்டவா?”
“வேணாம் நாளைக்குத்தான் நேரிலேயே பார்க்க போறேனே..”
உடன்பிறந்தபாசத்தோடு.. தலை தடவி..
பெருமாளே!! நல்லது செய்ங்க என் தம்பிக்கு.. எங்க அப்பா அம்மாக்கு நிம்மதியும் சந்தோசமும் தாங்க.. மனசார வேண்டினாள்..
மறுநாள் பக்கத்தில் உள்ள பார்க்குக்கு வந்து நின்ற பெண்ணை பார்த்து ஜெர்க் ஆனாள் சுகி.. ஓவர் வாய் .. படு ஒல்லி, கருப்பு முகத்தை தேய்ச்சு அதை மட்டும் பார்க்கும்படி வைத்திருக்க..
கைலாஷ் டேஸ்ட் தாண்டி.. மனசை திடம் பண்ணிட்டு..
“என்னப்பா செய்யலாம் ராஜி” சுகி பேசத்துவங்க
தன் தாய் மாமன்கள் பொல்லாதவர்கள் கல்யாணம் முடிச்சே ஆகணும்.. இல்லன்னா வேறு மாப்பிள்ளை பார்த்து தள்ளி விட்டுருவார்கள் என்று கண்ணை திருகி பல வித அப்பெண் பலவித நடிப்பில் சொல்ல..
“ம்ம்ம்..நீ என்ஜினரிங் படிக்கிற பொண்ணுதானே? தைரியமா காத்திருந்து செய்யலாமேப்பா.. உங்க வீடு சரி, எங்க வீட்டிலும் சம்மதிக்கணுமேம்மா?”
“ரிஜிஸ்டர் மாறி பண்ணிட்டு கூட.. ” பெரிய வார்த்தையை சிறுபெண் அசால்டா பேச..
எல்லாம் “அலைபாயுதே” படம் கொடுக்கும் திண்ணக்கம்..ம்ம்
“பண்ணுறோம் கூட வச்சுக்கோ ..நீ எங்கே இருப்ப?”
“எங்க வீட்டில் தான்..”
“அப்போ உங்க வீட்டில் இருக்க விடுவார்களா?” கேட்டு.. பதில் எதிர்பார்க்காது..
“எனக்கு லவ் பற்றி பிற்போக்கான கருத்துகள் எதுவுமில்லை.. வெறும் லாஜிக்கல் தின்கிங் பற்றி தான் பேசுறேன் ராஜி..
இன்னும் நீயும் கைலாஷும் நிறய பேசுங்க.. உனக்கு 21 வயசு நிறைவான திருமணவயசு.. அவனுக்கு 21 குடும்பம் பண்ண எந்த பேஸ்யும் இல்லாத வயசு.. சத்தான உடம்பு இல்ல.. படிப்பு முடிக்கல.. சுய சம்பாத்தியமில்ல.. எல்லாத்துக்கும் மேலே அனுபவம் தரக்கூடிய தன்னம்பிக்கையில்ல.. இந்நிலையில் அவனை கட்டிக்கிட்டு குடும்பம் உள்ளே வரணும்ன்னா எங்க பேரன்ட்ஸ் சம்மதம் அதிமுக்கியம்.. இவ்ளோ சின்ன வயசில் திருமணம் முடிப்பதை எங்கள் இனத்தில் ஒத்துக்கவும் மாட்டார்கள் செல்லம்.. டயம் கொடு.. அறிவான பொண்ணு நீ.. யோசிடா..”
அந்த பெண்ணுக்காய் வாங்கி வந்திருந்த பூவும் சாக்லேட்யும் கொடுத்து அனுப்பிவிட..
மறுவாரங்களில் மழிக்காத முகத்தோடு ஒருமார்க்கமாய் கைலாஷ் சுற்ற..
“காதல் படுத்தும் பாடு”
“என்னப்பா”
“ஒன்னுமில்லக்கா..” மறைத்தான்..
சொல்லும் போது சொல்லட்டும்.. சுகியும் விட்டுவிட்டாள். ஏதாச்சும் வாக்குவாதம் வந்திருக்கும்.. ஊருக்கு முன்னாடி, தழைய தாலி கட்டி, ஒரிஜினல் கணவன்_மனைவி டேக்யோடு சேர்ந்து வாழும்போதே உலக கருத்துவேறுபாடுகள் வருது.. எந்த பிடிமானமும் இல்லாத லவர்ஸ்குள்ள வராதா? eee
இங்கு.. “இனி நம் நிறுவனம் பூரா நானே பார்த்துகிறேன் நீ குடும்பம் பார்த்தால் போதும்” கார்டை கையில் தந்து வரவு, செலவு, உறவுகள் வீட்டு செய்முறை எல்லாம் நீதான் இனி ” சுகியிடம் வாசு ஒப்படைத்துவிட்டான்.. அதனால் இப்போ சுகி படு பிரீ.. வெயிலுக்கு முன் வண்டி எடுக்க.. பிரஷ்யா உணவுக்கு பொருட்கள் வாங்க.. மாமியார் நறுக்கி தர.. இவ அடுப்பில் நின்று கூட்டி எடுத்து செஞ்சு பரிமாற.. குடும்பக்கப்பல் தேராய் அழகாய் நகர்ந்தது…
பாட்டி இங்கேயேதான் பகலெல்லாம் இருக்க.. 55″ டிவியில் சீரியல் போட்டு விட்டு வரும்மாவும் அவரும் அடிக்கும் லூட்டி அது தனி சீரியல்.. வீட்டில் வகையா இருந்தாலும் ஸ்விக்கி/ சமாட்டோ என்று வரவழைத்து சாப்பிடுவதில் இருவரும் கூட்டு கேடிகள்.. தாதா அடிக்கடி ஊருக்கு போய்ட்டு வந்துட்டு இங்கும் அங்கும் மெஸ்ஸெஞ்சரா சுத்தினார்.. பாவம் எப்போவும் ரோமிங்கில் வச்சு அவரை கொடுமை பண்ணி ரசிப்பது பாட்டிக்கு தனி சந்தோசம் eee
அம்மாதத்திலேயே..
சுகன்யாக்கு நாள் தள்ள,
தள்ளி போனது பிள்ளைதான் என நிச்சயமும் ஆக கொண்டாட்டம் இரு குடும்பங்களிலும்..
ஊரிலிருந்து தாயும் தகப்பனும் ஓடி வர.. எங்கும் ஆனந்தம் .. சுகிக்கு தானா முகமெங்கும் மலர் சிரிப்பு.. அன்றைய பூரிப்பை அவளால் விவரிக்கவே முடியாது..
அப்பப்பா !! எத்தனை நாள் ஏக்கம்.. அருந்தவப்பலன்.. நன்றி சொன்னாள் தனக்காக வேண்டிய நல் உள்ளங்களுக்கும் .. எல்லாம் வல்ல இறைவனுக்கும்.. முத வேலை சாமியறையில் விளக்கேற்றி.. கையெடுத்து கும்பிட்டு, விழுந்து வணங்கியதுதான்.. கண்ணு பூரா அன்பின் ஈரம்
புருசனுக்கு போனில் மெல்லிய குரலில் சொல்லி சுகி பீல் பண்ண, அவனுக்கும் நெஞ்சார்ந்த நிம்மதி..
“வீட்டுக்கு ஸ்வீட் வாங்கிட்டு வரேன் சுகன்.. பாட்டிக்கு ரொம்ப ரொம்ப நான் நன்றி சொன்னதா சொல்லிடுமா.. சீக்கிரம் வரேன்.. அப்பாவோடு.. கோவிலுக்கு போலாம் எல்லோரும் ரெடியா இருங்க..”
அன்றிரவு வாசுவும் சுகியும் ஒருவரை அணைத்து ஒருவர் பேசாமல் கிடந்தது கவிதை..
வாசு திடீர்னு எந்திரித்து மனைவியின் மணி வயிற்றுக்கு அளவில்லா முத்தங்கள் தர, சுகி கணவனின் மீசை உரசலின் கூச்சத்தில் நெளிந்து கிளுங்கி சிரித்தது மாகாதல் காவியம்.. நினைவிலிருந்து அழியா ஓவியம்..
வார்த்தைகளுக்கு இடமில்லா போது அங்கே மவுனங்கள் கோர்ப்பது.. அடடா! அடடா! அழகியலடா!
“பிள்ளை” “பிள்ளை” பறந்தவளுக்கு உள்ளிருக்கும் குட்டி வச்சு செஞ்சது.. எது சாப்பிட்டாலும் பார்த்தாலும் நுகர்ந்தாலும் வாந்தி தான் ஒன்றும் இறங்கவில்லை..
மாத்திரைகளுக்குலாம் டேக்கா கொடுத்தது.. eee
சுகி மெலிந்தாள்.. வரும்மா முழுக்க மருமகளுக்கு சலிக்காது சேவகம்.. அவங்களுக்கு நவ் சிறகு முளைச்சிங்.. ராதா பேமிலியா வந்து தன் மகிழ்ச்சியை கொண்டாடி செல்ல.. கடுமையான மசக்கையால் நிற்க ஆவி இல்ல சுகனுக்கு..
ஓர் இரவில்..
“என்னங்க பிள்ளைன்னா இப்படியா இருக்கும்.. கஷ்டமா இருகேப்பா” புருஷமணம் மட்டும் பிடிக்க அவன் முடி விரவிய மார்பில் படுத்துட்டே வாசுவிடம் கேட்க..
“எனக்கென்ன தெரியும்?” அவனும் விளங்கா பதில் சொல்ல
“ம்க்கும் .. நல்லா அது மட்டும் செய்யத்தெரிது..” தன் மசக்கை கிறக்கத்தினால் சுகி காண்டாகி சலிக்க..
“தானா வந்துடுதுடி… என்ன செய்ய?” வாசுவுக்கு வேறு கிறக்கம்.. கொச்சையா பேசியதில் பச்சை எண்ணங்கள் டகால் ன்னு நொடியில் உதிச்சு..
“முடியுமா?”
“முடிலங்க..” இந்தம்மா உணவு இறங்கா சிரமத்தை மனதில் வச்சு பதில்..
“ட்ரை பண்ணவா? வலிச்சா சொல்லு” என்னது? புரிந்து..
“செல்லாது செல்லாது 8 மாசமும் கிட்டே வரக்கூடாது..”
“போங்கு போடி.. வருவேன்” மெல்ல அணைத்து தென்றாய் இதம் முத்தம் தந்தே.. பெண்டாட்டியை மயக்கி.. தன் தேவையை வேகம் குறைத்து என்றாலும் அதையெல்லாம் பெரியமனசு பண்ணி விட்டு கொடுத்து eee எடுத்துகிட்டான் ரெண்டு வாரமாக சும்மாவே காத்து கிடந்த வாசு.. கல்யாணத்துக்கு முன் எப்படியோ? காதல்கள் கனவா இருந்ததால் ஆர்வம் அவ்ளோவா இல்ல.. ஏக்கம் இல்ல.. சுகிக்கு பின் இரவுகள் பூரா கலர் கனவாய் இருப்பதால்.. தேடாதிருப்பது பசிக்கும் தன்மையை தந்து ஏக்கம் கொள்ள வைப்பது வினோதம்.. கூடலுக்கு பின்னான தூக்கம் சொர்க்கம் அவனுக்கு.. பகலின் வேலைகள் தரும் வெக்கைகள் தீர்க்கும் குளிர் அமிர்தம் உறவு..
வழக்கம் போல கைலாஷ் காலேஜுக்கு போயிருக்க.. இடையில் அவனுடைய நண்பர்களிடமிருந்து வாசுவுக்கு போன்..
“யாரோ அவனை அடிச்சுட்டாங்க ஜி ஹெச் ல சேர்ந்துருகோம்.. கேஸ் ஆகிருச்சுண்ணா” என்க.. ஒரு நிமிடம் தூக்கி வாரி போட்டது வாசுவுக்கு..
“கைலாஷ் எப்படி இருக்கான்? ரொம்ப அடியா? உள்ளதை அப்படியே சொல்லுப்பா.. அடுத்த ஸ்டெப் நாங்க எடுக்கணும்.. ” பதைபதைப்பா கேட்க..
“கை உடஞ்சு போச்சுண்ணா, அங்கங்கு ரத்த காயங்கள் இருக்கு.. மயக்கத்தில் இருக்கான் முகமெல்லாம் வீங்கி கிடக்கு.. சீக்கிரம் வாங்கண்ணா..”
“எதனால்? காலேஜில் ஏதாவது பிரச்சனையா?”
“லவ்ண்ணா..”
“ஓ..”
சுகி லூசா முன்பு ஏதோ உளறி கொண்டிருந்ததும்.. “அதெல்லாம் வயசு கோளாறு விடு விடு நீயே பேசி பேசி பெருசாக்காத..” என்று இவன் கண்டித்ததும் இப்போ நியாபகம் வந்தது..
“இதோ வரோம் கூடவே இருங்க” வாசு.. தன் தொடர்பில் உள்ள பெரியாட்களை கொண்டு அடுத்தடுத்து ஆக வேண்டிய வேலைகளை துரிதப்படுத்தி.. தன் தந்தையோடு தனியார் மருத்துவமனையில் கைலாஷை சேர்க்க பக்காவா ஏற்பாடு செய்து.. போய் பார்க்க அவன் அங்கு அனாதையா கைலாஷ் படுத்திருந்த கோலம் இதயத்தை பிசைந்தது.. நல்லவேளை வீட்டு பெண்களிடம் இன்னும் விவரம் சொல்லல.. நமக்கே உயிர் அசையுதே.. அவர்கள் பார்த்தால் அவ்ளோதான்.. கதறி தீர்த்து விடுவார்கள்..
கண் கலங்கினான்.. எப்படி சொல்ல? சொல்லாமலும் இருக்க முடியாது?? ம்ம்ம்
“என் ஐயா ! ராசா ! தங்கம்.. அழகு மருமவனே!! கண்ணு திறடா” சிறிது காலம் துணைக்காய் கைலாஷ் கூடவே கிடந்த பாசத்தில் கதிர் கண்ணீர் பெருக்கி.. ஆசையா பெயரிட்டு.. கன்னம் தட்டி அழைக்க..
லேசா அரைக்கண் திறந்து பார்த்தவன்.. “மாமா” “மாமா” புலம்பி..
“அம்மா வேணும் ..” கண்ணில் பக்கவாட்டில் ஒழுங்கில்லாது கொட்டிய நீர்த்தாரைகள் சொன்னது தாயே உயிரின் வேர் என்று…
