இராமனின் கண்ணம்மா
இராமனின் கண்ணம்மா
அத்தியாயம் 25
நிர்த்தியா “ஐ டோன்ட் லவ் யூ நவ்.” என சொல்லிவிட்டு, ரகுவின் கோப கொந்தளிப்புக்காக காத்திருக்க, அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக அவன் வாய்விட்டு சிரிக்க துவங்கினான்.
சிரித்து முடித்தவன், தனது கூடலின் மயக்கங்கள் மொத்தமாக தெளிந்துவிட எழுந்து அமர்ந்து, தன் இரு கைகளையும் அவள் கன்னங்களின் இரு மருங்கிலும் கொண்டு போய் கொஞ்சுவது போன்ற பாவனையில், கிள்ளியவன், “ச்சோ சுவீட்.” என்றுவிட, நிர்த்தியாவிற்கு கருவிழிகள் இரண்டும் தெறித்து வெளியே விழுமளவு அகல தன் நர்த்தன நீள் விழிகளை ஆச்சரியத்தினால் அகட்டியவள், இது உண்மையிலேயே என் கணவன் தானா இல்லை வேறு யாரேனுமா என சந்தேகித்து, ஆராயும் நோக்கோடு, அவனை விட்டு சற்றே தள்ளி நகர,
அவள் கையின் மணிக்கட்டை பற்றி தன் மீது அவளை இழுத்து போட்டுக் கொண்டவன், பாலையின் துரோணமென, அவள் அங்கங்கள் தந்த சுக அழுத்தங்களை ரசித்து மகிழ்ந்தவன், தன் மேல் பரவி படுத்திருந்த அவளை கண்ணோடு கண் நோக்கியவாறே சொல்ல துவங்கினான்.
“என்னடா வழக்கம் போல போட்டிக்கு போட்டியா கத்தி கூச்சல் போட்டு சண்டை போடாம, இல்லை நம்மை முறைச்சு கூட பார்க்காம இவன் கொஞ்சுறானேன்னு அதிசயமா இருக்கா? இது நீ பார்த்த அதே பழைய ரகுராமபூபதி இல்லை. அவனுக்கு கோபம், ராஜ வம்சம்ங்கிற திமிர் கூடவே வறட்டு பிடிவாதங்கள் அதிகம்.
உன்னை பிரியும் போது கூட உன் மேல் வருத்தமும், என்னைவிட இன்னொருத்தன் மேல் நீ வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ற அளவுக்கு காதல் வச்சிருந்தியேன்னு கோபமும் சரிவிகிதமா இருந்தது. ஆனால் என்னோட குறையாத திமிர் நீ தானே தப்பு பண்ணின, அதனால நீயே தான் தேடி வந்து என் காலடியில விழணும்னு என்னை உன்மேலான கோபத்தை இழுத்து பிடிக்க வச்சது.
உன்னை இன்னொருத்தனோட, சேர்த்து பார்த்த அந்த போட்டோ என்னை ஒரு கெட்ட சொப்பனமா துரத்தி, மருட்டி வேற எதுவுமே யோசிக்கவிடலை. என் கண்கள்ல பச்சை குத்தின மாதிரி ஒட்டிகிட்டு என்னை வாட்டி வதைச்சது, உண்மைய சொல்லப்போன என் மனசளவுல உன்னை ரொம்ப நேசிச்சிருந்தேன், யாரோட போட்டோவை பார்த்தும் தோன்றாத ஒரு எண்ணம் உன் போட்டோவை பார்த்ததும் தோணுச்சு. அது எப்படியாவது இவளை மனைவியாக்கிக்கணும்ங்கிற எண்ணம் தான். உன் போட்டோவிலேயே மயங்கிட்டேன்டீ என் வெள்ளிகட்டி.” என்றதோடு அதிர்ந்தவளின் முகத்தில் தன் நாவும், இதழும் கொண்டு எச்சிலால் ஆங்காங்கே ஈரம் செய்து அதை முத்தமென கொண்டாடினான்,
ரகுவை கண்ணோடு கண் நோக்கி பார்த்திருந்தவளோ, அவன் காதலறிக்கையில் அதிர்ந்து இன்னும் அகலமாக கண்களை திறக்க, ரகுவோ “போதும் இதுக்கு மேல கண்ணை விரிக்காத, இன்னும் நான் சொல்லப்போறதெல்லாம் கேட்டா, உன் கண்ணு இரெண்டும் வெளியவே குதிச்சு விழுந்திடும் போல.” என கேலி செய்தவன் தொடர்ந்தான்.
“அப்பவே, அதனால தான் உன்னை நேரில கூட பார்க்காமலேயே கல்யாணம் செய்துக்க ஒத்துக்கிட்டேன். அதுக்கு பிறகு உன் கூட வழ்ந்தது உண்மையிலேயே ஏதோ பாஸ்ட் பார்வர்டாகத் தான் தோணுது. ஹனிமூன்ல நாம எவ்வளவு தான் காதல் கொண்டாடி இருந்தாலும், அது பரிபூரணமா எனக்கு தோணினது இல்லை. காரணம் ரொம்ப சின்னது தான் நாம இரண்டு பேருமே தயக்கங்களை எல்லாம் உதறிட்டு, சாஸ்வதமா நீ தான் எல்லாமேன்னு ஒன்னு சேராதது தான். என் மனசு முட்டி நின்ன காதலை, ஆசைகளை உங்கிட்ட சொன்னா எங்கே என்னை மதிக்க மாட்டியோன்னு ஒரு பிரமை என்னை வாட்டி வதைச்சது. அதை சரியான வார்த்தையில சொல்றதுன்னா கர்வம்ன்னு தான் சொல்லணும். நம்ம பொண்டாட்டி தானே ஏன் நம்ம உருகி கிடக்குறதையெல்லாம் சொல்லணும்ங்கிற தெனாவெட்டு.
ஆனா அந்த போட்டோ என் வாழ்க்கையில ஒரு பெரிய திருப்பு முனை தியா, நம் பொண்டாட்டிக்கும் மனசிருக்கு, அவளுக்கும் நம்மை மட்டும் தான் பிடிக்கணுங்கிறதில்லை, யாரை வேணும்னாலும் பிடிக்கலாம்ங்கிற அந்த எண்ணமே என்னை என் திமிரை, கர்வத்தை வேரோட அசைச்சு பார்த்துச்சு. அன்னைக்கு என்ன பேசினேன் உன்கிட்ட என்ன சொல்லி சண்டை போட்டேன்னு கூட எனக்கு நினைவே இல்லை தியா. என் மனசு முழுக்க நீயும், யாரோவும் மாலையும் கழுத்துமா நின்ன அந்த படம் நீ அந்த வீடியோவில சொன்ன வார்த்தைகள் தான் திரும்ப திரும்ப ஓடிகிட்டு இருந்தது. அது தான் அந்த விபத்துக்கு காரணம். வண்டி ஓட்டுறதுல கவனமே பதியலைன்னு வண்டிய நிறுத்திட்டு இறங்கினா, எப்படி உருண்டேன்னே தெரியல. இனிமேல் பிழைச்சு என்ன பண்ணப்போறோம்னு ஒரே சிந்தனை உருளும் பொழுது. அதுதான் நான் கண்திறக்க அதிக நாள் ஆனது போல.” என்றவன், சத்தமின்றி அழுது கொண்டிருந்த நிர்த்தியாவின் கண்களை துடைத்துவிட்டு தொடர்ந்தான்.
“உன்னை வருத்தப்படுத்தணும்னு சொல்லலமா. சில தெளிவுகள் நமக்குள்ள இப்போ அவசியம் தேவைன்னு நினைக்கிறேன். என்னடா இவன் தொடர்ந்து போரடிக்கிறானேன்னும் நினைக்காதே.” என்றவன், அவள் முறைப்பில், “சரிசரி நீ நினைக்கல இருந்தாலும், ஏனோ இன்னைக்கே எல்லாமே பேசிடணும்னு தோணுது. என் மனசுல இருக்கிற எல்லாத்தையும் கொட்டி முடிச்சுட்டு நம்ம இரண்டு பேருக்கு இடையிலேயும் சின்ன உறுத்தல் கூட இல்லாம, ஒவ்வொரு கணமும் அனுபவிச்சு வாழணும்னு தோணுது. அதனால தான்.” என்றவன்,
நிர்த்தியாவின் தலையை வருடிக் கொண்டே தொடர்ந்தான், “நான் கோமாவில இருந்து முழிச்சு, முடியாம படுத்திருந்த பொழுது, யார் அந்த அறையோட கதவை தள்ளிட்டு உள்ளே நுழைஞ்சாலும் உன்னை தான் மனசு எதிர் பார்த்து ஏமாறும். ஒவ்வொரு முறையும் இங்கே ஊருல உன்னை பத்தி அம்மாக்கள், பாட்டி மத்தவங்கன்னு தப்பா பேசும் பொழுது, என் பொண்டாட்டிய இவங்க எப்படி தப்பா பேசலாம்னு கோபம் வந்தாலும், உன் மேல இருந்த அந்த அதிருப்தி என்னை எதிர்த்து பேசவிடாம தடுத்திடும். என்னதான் உன் மேல கோபம் இருந்தாலும், இரண்டாம் கல்யாணத்துக்கு எல்லோரும் ரெடி பண்ணின போது, அதுக்குள்ள என்ன இவங்க, என் தியா இடத்துக்கு இன்னொருத்திய கொண்டுவர பார்க்குறாங்கன்னு எல்லோரையுமே லேசா வெறுக்க துவங்கிட்டேன். என்னை எமோசனல் பிளாக்மெயில் பண்ணக்கூடாதுன்னு தான் திரும்பி ஜெர்மனிக்கே போனேன். அங்கே உன்னை தேடுற ஒவ்வொரு சமயத்துலயும், நீ தானே விட்டுட்டு போனன்னு என் மனசுல சொல்லிகிட்டு கோபபட்டுகிட்டு இருந்தேன். உன்னை டான்சரா பார்த்த பொழுது, எனக்கு வந்த உரிமையுணர்வு அப்பா சொல்ல முடியல, அந்த அரங்கத்துக்குள்ள இருந்த ஒவ்வொரு ஆணையும் கண்ணை நோண்டணும்னு தோணுச்சு. ஆனாலும் உன் திமிரான பார்வையும், பேச்சும் என்னை கிளறிவிட, உன்னை ரொம்ப வெறுக்கிறேன்னும் அதனால தான் உனக்கு சப்போர்ட் பண்றவங்களை கூட கொல்ல தோணுதுன்னும் நினைச்சுகிட்டேன்.
ஆனால் எப்போ உன்னை ரோம்ல சுயநினைவில்லாம மயங்கி விழுகுற நிலையில கூட, தன்னோட கைப்பைக்காக தனியே போராடுற ஆதரவில்லாத நிலமையில பார்த்தேனோ, அப்பவே அந்த கணமே என் மொத்த கர்வமும் பாதியா உடைஞ்சு போச்சு தியா. ஒரு ஆம்பளையா, புருஷனா என் மனைவியை இது மாதிரி எத்தனையோ எனக்கே தெரியாத சூழ்நிலைகள்ல துணையில்லாம, அநாதரவான நிலையில மூணு வருசம் தவிக்க விட்ருக்கேனேன்னு மனசுல ஒரு குற்ற உணர்வு. குற்ற உணர்வுங்கிறதைவிட குன்றல் உணர்வுன்னு சொல்லலாம். அது தான் என்னை உறுதியா நீ தான் வேணும்னு முடிவெடுக்க வச்சுது. அடுத்து, அந்த டாக்டர் மூலமா நீ ஒரு குழந்தைக்கு அம்மான்னு தெரிஞ்சதும், நம்ம அல்லிய பார்த்ததும் இப்பவும் கனவு போலவே இருக்கு. எது எப்படியோ நீ என்னை காதலிக்கலன்னாலும் சரிதான் பொண்டாட்டி நான் உன்னை உயிருக்குயிரா காதலிக்கிறேன்.” என முடிக்க,
அதுவரையிலும் வார்த்தைகள் வராது அதிர்ந்திருந்த நிர்த்தியா, ஒரு கேவலுடன் தன் கணவனை மார்போடு கட்டிக் கொண்டவள், தான் அவனை ஒவ்வொரு கணமும் நினைத்துக் கொண்டே இருந்தது, அல்லி பிறக்கும் பொழுது, அவன் வீடியோ பார்த்து, அவனே கூட இருப்பதாக உருவகப்படுத்திக் கொண்டு குழந்தை பெற்றதை சொன்னவள், “அல்லியோட ஒவ்வொரு அசைவுலயும், உங்களை தான் பார்த்தேன் ராம். இன்பேக்ட் அல்லிங்கிற பெயரே அவளுக்கு நான் வைக்க காரணம் உங்க குடும்ப வரலாறு தான். என்னோட ஒவ்வொரு அசைவிலும் நீங்களே இருக்கும் பொழுது நான் எப்படி உங்களை வெறுப்பேன். உங்களோட செல்போனுக்கு வாய் இருந்தா சொல்லும் எத்தனை நாள் உங்ககிட்ட என்னவெல்லாம் சொல்லி புலம்பி, அழுது நீங்க திரும்பி வாங்கன்னு கெஞ்சியிருப்பேன்னு. ஆனா எனக்கும் கர்வம் அதிகம் தான் இல்லையா. நானுமே ரோம்ல மூளை பிசுபிசுப்பா யோசிக்கும் பொழுதே என் கரவத்தை விட்டு உங்ககிட்டையே வரணும்னு முடிவு பண்ணிட்டேன். நீங்க எப்பவுமே என்னோட உயிர். ஐ லவ் யூ டூ ராம்.”என்றவள் ரகுவின் வலிய கரங்களுக்குள் நொடியில் கைது செய்யப்பட்டாள்.
இருவரும், முத்தங்களோடு உயிர் உறிஞ்சும், கட்டில் வித்தைகள் துவங்க, அன்றைய இரவு இருவருக்கும் விடியா இரவாகியது. அல்லி சுகமாக தாத்தா, கொள்ளு பாட்டியோடு பொழுது போக்க, ரகுவுக்கும், நிர்த்தியாவுக்கும் பசியே நினைவில் இல்லை நள்ளிரவு வரை.
நள்ளிரவு, நேரத்திலும் வெண்ணை தாழியினுள் தவறி விழுந்த பூனையாய் தன் மனைவியை உண்டு கொண்டிருந்தவனை, “ராம்ராம்.” என கூப்பிட்ட நிர்த்தியா, திரும்ப கிடைத்த “ம்ம்.” சத்தத்தில் கடுப்பானவள், “டேய் பசிக்குது டா.” என உரக்கவே நிர்த்தியா கடிந்து கொள்ள,
அவனோ “எனக்கு பசியே இல்லையே? சும்மா சொல்லாத.” என தன் வேலையை தொடர, “உனக்கு ஏன் பசிக்க போகுது, அதான் நீ கிடைக்கோ கிடைக்கலியோன்னு,” என ஏதோ சொல்ல வந்தவளை வேகமாக வாய் மூடியவன், “போதும் தியா பாட்டி காது செம்ம ஷார்ப், அப்புறம் மானத்தை வாங்கிடுவாங்க. இரு ஏதாவது எடுத்துட்டு வரேன்.” என அவசரமாக சொல்ல,
“காத்திருக்கலாம் முடியாது வா நானும் வரேன்.” என இருவரும் கீழே கிளம்ப, பாதி இருளில் கிடைத்த ஒற்றை உடைகளை இருவரும் போட்டு கிளம்ப, கீழே போய் சமயலறையில் உருட்டியவர்கள், பிரிட்ஜை திறந்து வைத்து, “எனக்கு ஆம்லெட் வேணும்.” என நிர்த்தியா அவன் காதுகளில் கிசுகிசுக்க, அவனோ “ஓகே. இரண்டு போதுமா?” என கேட்டுக் கொண்டிருக்க திடீரென யாரோ சமயலறை விளக்கை ஆன் செய்ய, கண்ணை கூசும் வெளிச்சத்தில் இருவரும் கண்களை கசக்கியவாறே திரும்பி பார்க்க,
அங்கே ஜனகன், தன் கைகளில் அல்லியை ஏந்தி நின்று கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் அவரிடம் பேசும் முன்பாகவே அவசரஅவசரமாக “வந்து அல்லிக்கு தண்ணி வேணும்னு வந்தேன்.” என்றவர், ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலுடன் விடுவிடுவென தன் அறை நோக்கி ஓடிவிட, அல்லி மட்டும் இவர்களை திரும்பி பார்த்து, “ப்பா ஸ்க்க்கட்டு.” என ஏதோ சொல்லிக் கொண்டே போனாள்.
ரகுவும், நிருவும் ஒருவரை ஒருவர் வெளிச்சத்தில் பார்த்தவர்கள் சிரிக்க துவங்கினர், ஆம் ரகு வேஷ்டி என நினைத்து, நிர்த்தியா கழற்றி வைத்திருந்த அவர்கள் அறையின் அழுக்கு கர்ட்டனை சுற்றி இருக்க, நிர்த்தியாவோ, ரகு அணிந்திருந்த ஜிப்பாவை தனது நைட்டியை ரகு எடுத்து வந்து விட்டான் போல, என நினைத்து அவள் அணிந்திருந்தாள்.
தொடர்ந்து வந்த நாட்கள், ஆனந்தமாக கடக்க, நிர்த்தியாவிற்கு சார்ஜ் போன தன் போனை பற்றிய நினைவே இல்லை.
நட்ராஜ், பத்மினி,ஜனகன் மூவரும் ரகுவின் போனிலோ மற்றவர்கள் போனிலோ நிர்த்தியாவுடன், அல்லியுடன் என வீடியோ காலில் பேசிக் கொள்ள, வரதராஜ பூபதிக்கு உடல்நிலை தேறும் வரையுலும் ரகுவே மொத்த தொழில்களையும் பார்க்க துவங்கியவன் மனைவியை பிரிந்திருக்க மனமின்றி, அல்லியை பகலில் தன் அன்னையரின் பொறுப்பில் விட்டுவிட்டு நிருவை தன்னுடனே கூட்டிக் கொண்டு சுற்றினான்.
அன்றுடன், நிரு ரகு வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிந்திருக்க, இந்த ஒரு மாதமும் ரகுவின் மனைவிக்கான தேடல்கள் கூடியதேயன்றி குறையவில்லை. முடிவிலியில் பயணித்த இவர்களின் கூடல்கள் இருவருக்கும் குறைவிலா மகிழ்வையும், அளவில்லா தனி தேஜசையும் தந்திருக்க, நாட்கள் இனிமையாக கழிந்தன.
மறுநாள், சதீஷ், லலிதாவின் திருமணம் ஆகையால் அன்றே வரப்போகும் இரு நாட்களுக்கான கூடுதல் வேலைகளை முடித்துக்கொண்டு தாமதமாக வருவதாக சொன்ன ரகு நிருவை தங்களுக்கு சென்னை செல்ல தேவையான பொருட்களை எடுத்து வைக்க சொல்லி சீக்கிரமாக அனுப்பி வைத்தான்.
வீட்டிற்கு வந்து தன் மகளுடன் கதைகள் பல வாய் ஓயாமல் பேசியவாறு நிர்த்தியா பெட்டி அடுக்க, சீதா இருவரது இலக்கற்ற பேச்சில் சிரித்தவாறே அல்லிக்கு உணவூட்டிக் கொண்டிருந்தார். காஞ்சனி தன் கணவருடன் சிறு நடை பயிற்சியில் ஈடுபட்டிருக்க, பாட்டி தங்கள் வீட்டு பூஜை அறையில் மகன் திரும்பி வந்ததற்காக நன்றி சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு மகனது கண்டம் பற்றியும், அது சேதாரமின்றி லேசாக கடந்து போனது பற்றியும், அதற்காக செய்ய வேண்டிய சில பூஜைகள் பற்றியும் சோசியர் மருமகனை பார்க்க வந்த இடத்தில் சொல்லியிருந்தார்.
கோமாவில் இருந்து எழுந்த வரதராஜபூபதியோ, காஞ்சனியிடம் தான் கோபத்தில் பேசியவற்றிற்காக வருந்தியவர், “நீ என்னுல பாதி, உன்னை கோவிச்சிட்டு என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும்? நீ செய்த்தெல்லாமே என் மேல இருந்த அளவுகடந்த காதலினாலதான்னு எனக்கு தெரியாதா?” என கேட்க, காஞ்சனி ஒருவாறாக பழைய உற்சாகத்தை மீட்டெடுத்தார். காஞ்சனியும், வரதராஜபூபதியும் பேத்தி, மருமகள் என வீடே கலகலப்பாகியிருக்க மகிழ்ந்திருந்தனர். கூடவே பேசாத மகன் இப்பொழுதெல்லாம் அப்பாவுடன் காலையும் மாலையும் நேரம் செலவழிக்க, கூடுதல் மனபலத்துடன் பழைய திடத்திற்கு மீண்டு கொண்டிருந்தார் வரதராஜபூபதி.
உதய் நிர்த்தியாவை சரிவர கடத்தாமல் கோட்டைவிட்டுவிட்டதாக சொல்லி, இத்தாலியன் கும்பலுடன் சண்டை போட்டவன் மீதி பணம் தரமுடியாதென சொல்லி ஜெர்மனி திரும்பினான். பிணத்தை புசிக்கும் மாமிச பட்சிகளினும் இழிவான மனநிலையை, கயமையை அவனுக்கு கண்மறைத்த தாபம் கொடுத்திருக்க, பிறன்மனைவியை கட்டிலில் கூடிவிட துடித்து கொண்டிருந்தவன், நிர்த்தியாவை திகம்பரமாய் பார்த்துவிடும் நோக்கோடு அன்று அவன் தங்கை திருமணத்தின் பொழுது குளியலறையில் வைத்திருந்த கேமிராவின் மெமரி கார்டை கைகளில் எடுத்தவன், கொடூர சிரிப்புடன் தன் கணிணியில் அதை பொருத்தி ஓடவிட, நிர்த்தியாவிற்கு பதிலாக அதில் இவனது சொந்தங்கள், தாய், தங்கை என வரிசையாக பதிவாகியிருக்க மிருகமாகிவிட்ட அவன் கடைவாயில் எச்சில் ஒழுக்கி காத்திருக்கும் ஓநாயாக, அவற்றை தாண்டியும் அந்த மெமரி கார்டை ஓடவிட்டு, தன் இரையை தேடினான்.
நிர்த்தியாவின் குழுவில் அனைவரும் உடை மாற்றுவது அதில் பதிவாகியிருக்க, மாலில் உடை மாற்றியிருந்த நிரு மட்டும் அதில் பதிவாகவில்லை, ஆடல் முடிந்த பின்பும் குழுவில் மற்ற பெண்கள் உடை மாற்றுவது அதில் தெளிவாக பதிவாகியிருக்க, ரகுவின் கண்களில் பட்டு, வீண் பிரச்சனை ஆகாமல் நிருவை இழுத்து போக எண்ணி அன்று நட்ராஜ் காட்டிய அவசரத்தில், நிரு நாட்டிய உடையுடனேயே கிளம்பியிருக்க முழு வீடியோவிலும் அவள் பதிவாகவில்லை.
மெமரி கார்டு ஓடி முடித்ததும் ஆங்காரத்தில் கண்கள் சிவக்க, அந்த கணினியை எட்டி உதைத்தான். தன் வெறியை தீர்த்துக் கொள்ள வேகமாக, நயவஞ்சகமாக நோசித்த அவன் மூளை, நிருவின் குழுவில் உள்ள பெண்களின் வீடியோக்களை மட்டும் வெட்டி எடுக்க அறிவுறை சொல்ல, சாப்ட்வேர் பயன்படுத்தி வெட்டி எடுத்தவன், உடனேயே அந்த வீடியோவை நிருவின் செல்லுக்கு அனுப்பி அவள் இவன் வலையில் விழ காத்திருந்தான். நிருவின் செல்லோ கிட்டதட்ட ஒரு மாதமாக அவள் கைப்பையிலேயே தூங்க அவள் எங்கே வீடியோவை பார்த்து பயப்படுவது?
வக்கிர எண்ணம் கொண்ட அவன் அந்த வீடியோக்களை திரும்பதிரும்ப பார்த்து தன் மனதினுள் விழித்துக் கொண்ட கொடிய விரகத்தீயை அவ்வப்போது தண்ணீர் தெளித்து ஆற்றுப்படுத்த துவங்கிய உதய், அந்த வீடியோவை பற்றி மற்றவர்களை மிரட்டி மாட்டி கொண்டால் எப்படி நிர்த்தியாவை அனுபவிப்பது என்பதால் அதனை மறைத்து வைத்தான். மறுநாள் சதீஷின் திருமணத்திற்கு ரகுவும், நிருவும் சென்னை வருவதாக சதீஷின் வருங்கால மனைவி லட்டுவின் பேஸ்புக் ஐடி மூலம் தகவல் சேகரித்தவன், இன்னொரு நிழலுலக கும்பலை தொடர்பு கொண்டு நிருவை கடத்திதர பேரம் பேசினான், அவர்கள் பணத்திற்கு பதிலாக தங்களுக்கு கைத்தடியாக வேலை செய்ய, குடும்ப அமைப்பில் ஆள் தேடியவர்கள் ஆகையால் இவனையும், இவன் மனைவியையும் தங்கள் அமைப்பிற்கு கேட்க,
“நான் மணமாகதவன்.” என கழன்று கொள்ள பார்த்தவனை, “நீ கடத்தறியே அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ.” என அவர்கள் சொல்ல, அந்த அறுவறுப்பான கற்பனை பிடித்தவனாக சம்மதித்தான். ரகு எப்படி, எங்கிருந்மு கிளம்புவான், அவன் காரின் எண் என்ன என்பவை போன்ற அடிப்படை தகவல்கள் அவர்களுக்கு தந்துவிட்டு, நிருவிற்காக ஜெர்மனியில் காத்திருக்க துவங்கினான் உதய்.
இங்கே, தன் தோல்வியை ஒத்துக்கொள்ள பிடிக்காத காமினியோ, ரகு, நிருவின் சென்னை பயணத்தினை தனக்கு சாதகமாக்க எண்ணியவள், கைகளில் மறைத்து வைத்துக் கொண்ட மடக்கு கத்தியோடு, சென்னை செல்லும் நெடுஞ்சாலையில், ரகு வழக்கமாக தேநீர் அருந்தும் சிறுகடையின் மறைவினில் காத்திருந்தாள்.
உதய் அணுகியிருந்த மாபியா கும்பலோ, அதே நெடுஞ்சாலையின் இன்னொரு முனையில் காத்திருந்தது.
தன் காரில் நிரு கொடுத்த அனைத்து பொருட்களையும் வைத்த ரகு, அவள் கைப்பையை மட்டும் டேஷ் போர்டில் வைக்க, ஜிப் திறந்திருந்த அந்த பையிலிருந்து அனைத்தும் வெளியே கொட்ட, அவள் செல்போனும் வெளியே வந்து விழுந்தது. மற்ற பொருட்களை திரும்ப அவள் கைப்பையினுள்ளேயே அடுக்கியவன், அந்த போன் சார்ஜ் இல்லாமல் இருப்பது கண்டு அதை டேஷ் போர்டினுள் இருந்த சார்ஜிங் பின்னில் இணைத்தவன், “இது சார்ஜ் ஆகட்டும்.” என வாய்விட்டு சொல்லிக் கொண்டே, காரிலிருந்து கீழிறங்கினான்.
தீமை வெல்லுமோ?
தொடரும்.
