மைவிழி விடு தூது
38 MVT
“அண்ணன்” சொல் ஆண்மையின் வேர்வரை சுடுதண்ணீர் ஊற்ற.. கைலாஷ் .இப்போ அசுரனாகிட்டான்..
“என்ன.. என்ன.. அண்ணன் கூப்பிடுற..”
“வேற எப்படி கூப்பிடண்ணா?”
“மாமா, அத்தான், மச்சான் ன்னுகூப்பிடு..”
“ஐய ஓல்டா இருக்கு..” என்னவோ அண்ணனை விடஇதுக மோசமான விளியா நிவா நடிக்க..
வேணாம்.. இவ கிட்டே முடில..
அந்த பேச்சை விட்டு கைலாஷ் .
19 வயசில் இப்படி ஒரு க்ரீன் பிள்ளையா? அதுவும் 20ஸ்ல
“செல் லாம் யூஸ் பண்ணமாட்டியா?”
“அம்மாகிட்ட இருக்குண்ணா”
“உனக்கு கேட்டேன்?”
“எனக்கெதுக்கு?”
இப்டி லேடி வடிவேலுவா கேட்டா.. eee
“இல்ல உனக்கு ஒரு விவரமும் தெரிலியே அதான் கேட்டேன்”
“செல்லுக்கும் விவரத்துக்கும் என்ன லிங்க் ண்ணா? நாங்க ஏகப்பட்ட ஜிகே புக்ஸ் படிப்போம்.. புதுசு புதுசா வாங்குவோமே?”
ஹுக்கும் உனக்கு விளக்கம் கடவுள் கூட கொடுக்க முடியாதுடி..
“காலேஜ் படிக்கிற சொன்னாங்க..”
“அது ஈவ்னிங் காலேஜ் ண்ணா”
எதுக்கு முழு நேர கல்லூரிகள் இருக்கும்போது??!!
“உனக்கு பிரன்ட்ஸ்?”
“என் சிஸ்டர்ஸ் தஷாவும் ஸ்ரத்தாவும் தான்.. எங்க வீடு எவ்ளோ ஜாலியா இருக்கும் தெரியுமாண்ணா?” என்று கதை கதையா சொன்னாள் குமரி
மாடி பூரா மகள்களுக்கு வித விதமா அவர்கள் கேட்கும் சொப்பு ஜாமான்கள், புக்ஸ், இசை, நடனம், வெளிநாட்டு மொழிகள் பயிற்சி என்று அத் தகப்பன் தனி உலகமே உருவாக்கி இருக்குறான் தகப்பன் பிரதாபன் ..
இளவரசிகளின் கன்னிமாடமாக வச்சு மொத்தத்தில் வெளியுலக தொடர்பிலேயே வைக்காது 20கிட் யா வளர்க்கவில்லை.. கண்டுகொண்டான் இந்த இளைய கணவன்..
“உங்களுக்குகெல்லாம் பேர் யார் வச்சது? நல்லா இருக்கு..”
“அப்பா தானாம் அம்மா சொல்லி இருக்காங்க..”
“எல்லாம் அப்பா அப்பா என்றால் உங்கம்மா என்னதான்டி செய்யும்?”
“நீ டீ சொன்னா நான் டா போடுவேன்டா அண்ணா..”
“எத்தனை டா வேணும்னாலும் போட்டுக்கோ.. அண்ணா மட்டும் சொல்லாதேடி என் டோமோட்டோ..”
டோமோட்டோ வா? அதிர்ச்சியில் குட்டி கண்ணு விரிய..
“எஸ்ஸ்ஸ்.. குட்டியா உருண்டுட்டு அலையிர.. தக்காளியே தான் நீ..”
“அண்ணா.. கொன்றுவேன் பார்த்துக்கோ..”
தன் இடத்திலிருந்து எழுந்து, இருகைகளையும் கழுத்தை நெறிப்பது போலவே கைலாஷிடம் கொண்டு வர..
அதை எளிதாய் தன் வலிய கைகளை கிடுக்கிப்பிடி போட்டவன்..
“பிரன்ட்ஸ்?”
“நோ.. நீ என்னை தக்காளி சொல்லிட்டே.. போடா”
தக்காளி போல தள தள ன்னு சூப்பரா இருக்கே .. நல்லா தானே சொல்லியிருக்கேன்.. ஒய் கோபம்?”
“ஓ..அது நல்ல பேரா?” கண்ண தோகையா விரிச்சு கேட்க..
அதில் இருந்த ஏதோ ஒன்னு பார்த்தவனுக்கு ரொம்ப பிடிச்சது..
“ஆமாம்.. டோமோட்டோ”
“நாம் இன்றிலிருந்து பிரன்ட்ஸ் ஓகே..” நிவா..
“டீல்.. அப்புறம் அண்ணா கூப்பிடவே கூடாது முத கண்டிஷன்..”
“ஓ.. எப்படி கூப்பிட?”
“உன் இஷ்டம்..”
அவள் கார்ட்டூன் கேரக்டர் பேரா வைக்க..
ஏற்க முடியவே முடியாது.. “நான் சிங்கம்டி” கணவன் கர்ஜித்தான் அவள் லொள்ளு தாங்காது..
“உங்க பேர் பிடிக்கலயே.”
அவள் முகம் சுருக்க..
“ஏதாவது சீக்கிரம் வைடி தக்காளி..” எரிஞ்சி விழுந்தான் அவசரக்காரன்..
“ம்ம்ம்.. நீங்க சிங்கம்னா .. லயன்னு கூப்பிடவா?”
“ஏதோ வச்சிக்கோ போ.. உங்கம்மா ரோல் என்ன? அதை முதலில் சொல்லு என் தக்காளி”
” ஓ.. முன்பே கேட்டீங்கல்ல.. நாங்க ஸ்கூல் காலேஜ் போனா துணைக்கு கூட வருவது அவங்கதான்.. சமையல் என்னென்ன வேணுமோ சலிக்காது செய்வாங்க.. எங்க வீட்டில் சேர்வன்ட்ஸ் கிடையாது அம்மாக்கு வீட்டிலேயும் வேலை சரியா இருக்கும்..”
சபாஷ்..சரியான குடும்ப நிர்வாகம்..
தகப்பன் விழிப்புணர்வு .. மூன்று பெண்குழந்தைகளுக்கான கவனம்… மெச்சினான் இளையவன்..
ஒவ்வொருத்தர் எப்படி ஸ்மார்ட்டா பிழைக்கிறார்கள்? அதிசயித்தான்.. நாமும் இருக்கோமோ?!! சிம்பிள் பிஈ அது முடிப்பதுக்குள் ஏகப்பட்ட இம்சையை கூட்டி.. வெளிநாட்டுக்கே பேக் அப் பண்ணுற அளவு நிலமையை சிக்கலாக்கிட்டோம்.. முத முறை வருத்தம் வந்துச்சு..
அவனுடைய பேரென்ட்ஸ் பிரதாபனோடு கம்பேர் பண்ணினால் விவரமில்லாதவர்கள் தான்.. எனக்கு எவ்ளோ சுதந்திரம் தந்திருந்தார்கள்.. அதை உபயோகம் பண்ணிக்கத்தான் தெரில..ம்ம்ம்
இவன் யோசிக்கும் நேரம்.. நிவா கட்டிலிலிருந்து இறங்கி கீழே போக..
“எதுக்குடி கீழே படுக்குர?”
“அம்மா அப்படித்தான் சொல்லி தந்தாங்க”
“அம்மா.. நொம்மான்னா அடி விழும் பார்த்துக்க தக்காளி” சின்ன பெண்ணை லயன் ஜாலியா மிரட்ட..
“உங்கம்மா தான் எங்கம்மா அவங்கதான் சொன்னாங்க..”
ஹாங்.. இது புது விஷயமா இருக்கே.. ஜெர்க் ஆகி
“எதுக்கு அப்படி சொன்னாங்க?”
“நீங்க ஆஸ்திரேலியா போற வரை நான் பத்திரமா இருக்கணுமாம்.. ஆமாம் ஏன் அப்படி சொன்னாங்கண்ணா? பழக்க தோஷத்தில் சொல்லிவிட்டு சாரி சாரி லயன்..
நிஜமாவே நீங்க சிங்கமா? கடிச்சு திம்பீங்களா? “
குட்டி தேவதையின் சந்தேகம் கேட்டு லயனுக்கு
சிப்பு சிப்பா வந்துடுச்சு ..
அழகாத்தான் இருக்கா.. மேல் மாடிதான் காலி.. ஐயோ பாவம்.. சாட் இன்ட்ரஸ்டாத்தான் இருந்தது..
அடாவடியா நிவா அருகில் லயன் படுக்க.. விரிந்த வட்ட கருவிழிகள் அதற்கு பார்டராய் வளைந்த புருவங்கள்.. கோட்டு ஓவியம் தீட்டியது போன்ற பெரிய இமை இரப்பைகள் அழகு அபாரமாக ஈர்க்க.. ஓவியபெண்ணழகில் சொக்கித்தான் போனான் அச்சுந்தரன்..
“உனக்கு தான் மேலே கீழே.. என்னை யாரும் எங்கு படுக்கணும் சொல்லல பேபி “கேலி செய்தான் அக்குறும்பன்
“அப்புறம் அந்தக்கா என்ன ஆனாங்க?”
“எந்த அக்கா டியர்”
“அந்த அக்காதான் வேணும் ன்னு.. மாடியிலிருந்து சூசைட் அட்டம்ப்ட் லாம் பண்ணி கையில் அடிபட்டு இருந்தீங்களே.. மறந்துட்டீங்களா?”
சூசைட்.. நானா? அடப்பாவிகளா? என்னாதிது? தரையில் உருண்டு புரண்டு பொம்மை லயன் வெடிச்சிரிப்பு.. ஹாஹா..
“நான் உங்களை அப்போதான் முதன்முதலா பார்த்தேன்.. தெரியுமா? ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தேன்.. சும்மா சிரிச்சு ஏமாத்தாதீங்க லயன்.. “
திரும்ப அவளின் தமிழ் மொழி உச்சரிப்புக்கு லயன் சிரிக்க..
“போங்க உங்க பேச்சு கா..” என்று பெருவிரல் வளைத்து வாயில் வச்சு காய் விட..
அவ்விரலை இழுத்து தன் உதடுக்குள் வச்சு எச்சில் பண்ணி பழம் சொன்னான் .. அவளின் மோசமான அவசரக்கார நியுவ் பிரன்ட்..
ஜன்னல் வழியே வந்த வளர்பிறை சந்திர ரேகைகள் தன் வெண்ணொளியை பரப்பி இதம் தர.. இறந்தகாலத்துள் பிரவேசித்த கைலாஷின் மனோரதம்.. விரக்தியின் விருட்சங்களை எண்ணி பெருமூச்சு விட்டது..
“பெண்களுக்கு எப்படியோ? டோமோட்டோ.. டீன் பசங்களுக்கு எப்பவும் அந்தரங்க தேடல் இருக்கும்.. அது 12வயதில் தொடங்கும் வச்சுக்கோயேன்.. தன்னோடு பழகும் எதிர்பாலினம் குறித்து.. பேசுவது எப்படி? பழகுவது எப்படி? அவங்க உடல் எப்படி இருக்கும்? தொட்டு பார்க்கணும்.. அப்படி இப்படின்னு கண்டமேனிக்கு ஹார்மோன் துள்ளும்..எனக்கே எனக்கு ஒரு கேர்ள் பிரன்ட் வேணும் .. அவ நான் என்ன சொன்னாலும் செஞ்சாலும் ரசிக்கணும்.. தொடனும் அவளை பார்த்துட்டே இருக்கணும் ஏக்கம் அதிகம் வரும்.. ராஜி என்னை தேடி அவளே வர, வலிய போவத்தெரியாத எனக்கு பரவசமா இருந்தது.. பேசினோம்.. பழகினோம்.. நான்தான் அவளுக்கு எல்லாமே என்று உரிமையா செலவு செஞ்சேன் கேர் கொடுத்தேன் ரெண்டு வருஷம் போச்சு.. அடுத்து கல்யாணம் என்று பேச்சு வந்தப்போ கமிட்மென்ட்ஸ்ன்னு சிக்கல் வர, அவ சுய ரூபமும் தெரிஞ்சுது.. அவ வறுமைக்கு என்னை யூஸ் பண்ணியிருக்கான்னு.. மனசு விட்டு போச்சு.. பழகியது பொய்யா என்று” படு பீலிங்கில் லயன் பேச
“சாரி சாரி லயன்.. நான் முன்பு சொன்னது தப்புதான்… அந்த அக்கா வேணாம்ன்னு விழுந்திருக்கீங்க இப்போ சரியா?” தக்காளியும் சீரீசா கதை கேட்க..
அடியேய் நான் எந்த அட்டெம்ட்டும் பண்ணலடி லூசு சொல்லாது..
திரும்ப உருண்டு சிரிப்பு லயன்.. இந்த வினயமில்லா பெண்ணின் தோழமை இதம் தந்தது..
” ஏய்..இந்த சிரிப்பு எதுக்குடா லயன்? காரணம் சொல்லு இல்ல கொன்றுவேன் பார்த்துக்க..” நகம் பெருசா வளர்த்த நீள விரல்களை கொண்டு கழுத்தை நெறிக்க வர..
“உங்கப்பன் வளர்ப்பை நினைச்சேன் சிரிச்சேன்டி” இன்னும் லயன் கிளுங்க..
அப்பனா???!!!! பாசமகளுக்கு இந்த மரியாதையற்ற விளி .. கோபம் மிக தர..
“என்னை என்ன வேணும்னாலும் பேசிக்கோடா.. எங்கப்பாவை சொல்லாதே.. எனக்கு பிடிக்காது.. உன்னை ஹேட் பண்ணிடுவேன்”
“ஓ.. இப்ப என்ன லவ் பண்றதா நினைப்போ?”
“வேணாம் பேசாதே..” கையை கட்டி முகத்தை உர் ன்னு வச்சு தக்காளி இன்னும் கோபத்தில் சிவக்க.. விட்டுட்டான் லயன்..
“சாரி.. குட் நைட்.. கட்டிலிலேயே படு.. ஒன்னும் பண்ணமாட்டேன் வா டோமோட்டோ” அழைக்க
நொடியில் குழந்தையா கோபம் மறந்தவள்.. அவன் அழைப்பை கண்டுக்காது..
“லயன்” “லயன்” .. ன்னு கொஞ்ச
“சொல்லுடி..” அவன் கட்டிலில் வசதியா படுத்தாச்சு
“நான் உனக்கு இப்போ வெறும் பிரன்டு தானே.. கேர்ள் பிரன்டா மாறிக்கவா?”
லூசு.. இப்பவே அப்டித்தானே!!!
“மாறுவதால் உனக்கு என்ன?”
“உனக்கு தேடல் சொன்னல்ல .. அது போல எனக்கும் ஒரு கனவு உண்டு.. சின்றெல்லா கதைகளை போல.. என்னை தேடி ராஜகுமாரன் வரணும்.. ரெண்டு பேரும் எப்போதும் ஒரே அன்போடு ஒற்றுமையா வாழனும் என்று.. நீங்க ரொம்ப அழகு லயன்.. ராஜகுமாரன் தான் அந்த அக்காக்கு பதில் நான் வரேன்.. நான் ஏமாற்ற மாட்டேன்.. அதனால் அதே அன்போடு நீங்க என் கிட்டே நடந்துக்கனும்”
தக்காளி ஓவராசாறு பிழியுதே.. முடில லயனுக்கு..
“செல்லாது செல்லாது.. டோமோட்டோ இப்போ கேர்ள் பிரண்டுக்கு இலக்கணங்கள் மாறிடுச்சு”
“ஒய் லயன்?”
“அது காலாவதி ஆகிங்.. இப்போ லெவல் மாறிடுச்சு”
“நான் உங்க இஷ்டத்துக்கு வரேனே லயன்.. என் ஒரே ஒரு பாய் பிரன்டு நீதான்.. உன் கூட நிற்க .. தொட.. பேசத்தான் எங்கப்பா ஒன்னும் சொல்லல.. ப்ளீஸ் ப்ளீஸ் டா அண்ணா”
“திரும்பவும் அண்ணாவா ..” லயன் நெற்றிகண்ணு திறக்க முயல.. வழிந்தவள்..
கட்டிலில் இவன் அருகிலேயே எதிரெதிரா முகம் வச்சு படுத்துக்கொண்டு.. எட்டி கன்னத்தில் பிள்ளை முத்தம் தந்து.. சாரி லயன் சொல்லி கூல் பண்ண.. “ஜிவ் வென்றுருந்தது லயனுக்கு .. பூவாசமும் பெண் வாசமும் நரம்புகளை ஜடையா பின்னி முறுக்க .. கண்ணோடு கண்ணை உண்ண..
“கேட்டேனே லயன்.. எஸ் சொல்லுடா..”
“இப்போ கேர்ள் பிரன்ட் கிட்டே எல்லாமே செய்யனும் தோணுதுடி.. நீ சரிபட மாட்டே.. அப்புறம் இவன் கிள்ளிட்டான் கடிச்சுட்டான் வெளியில் சொன்னியென்னா நானும் ஆயுளுக்கும் உன்னை ஹேட் பண்ணிடுவேன்.. சோ வேணாம் விடு” கண்ணை மூடி விளையாட்டை விட்டு தக்காளியின் லயன் அமைதியாக..
நல்லா ஓட்டி படுத்துகிட்டு .. லயன் இடுப்பில் கையை போட்டு.. “யார் கிட்டயும் நம்ம பிரண்ட்ஷிப் பற்றி சொல்லவே மாட்டேன் பிராமிஸ்டா லயன்.. ஆணின் நட்பை எனக்கு காட்டி தா.. பெண்ணின் நட்பை நானும் ட்ரை பண்றேன்.. ப்ளீஸ்டா..” டோமோட்டோ ரகசியமா பேச..
இழுத்து உச்சி நெற்றி கண்ணு மூக்கு கன்னம் என்று கழுத்து என்று சூடான முத்தங்கள் லயன் பிரன்ட்ஷிப் அச்சாரமிட.. பெற்றவளுக்கும் உடல் லேசா அதிர்ந்தது.. பிடிமானத்துக்கு அவனையே கட்டி அணைக்க.. எந்த முத்தமும் மோகதாகத்தை தீர்க்காமல் இருக்க.. ஈரம் கொண்ட இதழ்களை சுவைத்து சாருண்ண எண்ணியவன்..
“நான் என்ன செஞ்சாலும் வேணாம்னா சொல்லிரு மேலே தொடர மாட்டேன்.. டோமோட்டோ.. எந்த படிநிலையிலும் உன் இஷ்டம் தான்..” மூச்சு வாங்க நிபந்தனைகள் சொல்ல..
மொழியால் மொழியாது கண் மூடி தலையாட்ட.. அழகு பொசு பொசு மெழுகு பொம்மையாய் இசைந்து கிடைந்தவளை இந்நேரத்துக்கு ரொம்ப பிடிச்சுது.. உதட்டோடு உதட்டை பொருத்தி.. மெல்ல மெல்ல சுவைக்க.. அவளும் அவன் தலையை கோதி கொடுத்து வலிய தந்தது வல்லிய குஷி தர.. அதற்கு பின்னரான முதல் முயற்சி.. இருவருக்கும் செய்கையிலேயே உணர்த்த பட்டு நடக்க.. முக்கிய பொழுதில் அவள் இவன் பிடியிலிருந்து நழுவ..
“வேணாமா அம்மு?” திகைத்து தவித்தான் லயன்.. காதில் தன் சங்கடத்தை தக்காளி ல்ல.. இவனுக்கும் சிக்கல் புரிந்தாலும் செய்வதறியாது.. செல்லில் தேடி விபரம் கற்று.. வாகாய் நடந்துகொள்ள சுபம்..
அவ்ளோதானா??!! அவ்ளோவே தானா??!! பெண்சுகம் முதன் முதலில் பெற்றவன் வெரி ஹாப்பி..
“தான்க்ஸ்டி நிவா..” முத்தமாம் முத்தத்தில் குளிப்பாட்டினான்.. இதுபற்றி ஆசை அதிகமா இருக்கும்போது கிடைத்ததில் பேரானந்தம்.. கெட்ட விவரமே இல்லாத தன் இளைய மனைவியின் அன்பு ரொம்ப பிடிச்சிருந்தது.. பத்திரம் என்றது பிள்ளை கூடாது என்பதுகாய் இருக்கும் என்று கண்டுகொண்ட கேடி லயன்.. அந்த விஷயத்தில் உசாரா இருந்துடுச்சு..
“டயர்டா இருக்கா? சாரிடி.. ‘இணையை அன்பா கேட்க..
“குளிக்கனும் லயன்.. டர்ட்டி யா பீல் பண்றேன்..”
“வா நானே ஹெல்ப் பண்றேன்..” அரைகுறை உடையோடு அள்ளிக்கொண்டான்.. முத நாளே ஜலக்கிரீடை.. வெளிச்சத்தில் நிவா கூச்சம் தாளாது கிளு கிளுன்னு சிரிக்க.. ஒற்றை விரல் வாயில் வைத்து நோ சப்தம் எச்சரிச்சு லவ்.. ஆசைப்பட்டது பூரா மென்மையா வாங்கிக்கொண்டான்.. இரவே போதலை.. லயனின் தேடலுக்கு..
“லயன் இதான் பாய் பிரண்டு பூரா செய்வாங்களா? நீங்களும் அந்தக்காவும்….” நிவாவை பேச விடாது வாயடைத்தவன்..
“ஒப்பிடலுக்கு அப்பாற்பட்டவள் நீ சோ எதுவும் இந்த குட்டி மூளைக்குள் அடைக்காதே அம்மு.. ஐலவ்யூ டி தக்காளி”
“ஐ லவ் யூ டூ லயன்..” தோளில் ஒன்றி தூக்கம் சொக்கும் விழிகளோடு..
“இப்போ நமக்குள் நடந்ததை வெளில சொல்ல மாட்டேல்ல”
“நெவர் லயன் பிராமிஸ்..”
“உன்னை கஷ்டப்படுத்திட்டேன் நினைக்கிறேன்.. ஆசை ஜாஸ்திடி.. சாரின்ன” கலைந்த கூந்தல் நீவி லயன் குற்ற உணர்ச்சியில் சாரி கேட்க..
“நானும் என்ஜாய் பண்ணேன் லயன்.. இன்னும் ஒருவாரம் தான் இருப்பீங்க.. எவ்ளோ முடியுமோ? செஞ்சுருவோம்.. சரியா? “அவள் ஏதோ ஆர்ட் ஒர்க் போலவே அதை சொல்ல.. சத்து இல்லதான்.. ஆனாலும் மோகம் முட்ட.. இன்னொரு முறை அவளை எச்சில் கொண்டு அர்ச்சித்து ஆட்கொண்டான் அவளின் மாதவன்.. ஆசைக்கடலலைகள் ஓயவே இல்ல..
இங்கு வேறு ஜோடிகளுக்குள் ஊடல் மோதல்..
“ஏன்டி எதுக்கு ரெண்டு பேரையும் இன்றே ரூமுக்குள் விட்டாங்க.. எவ்ளோ தரம் ரேவதிம்மா கிட்டே பேசு பேசு சொன்னேன்” புஷ்பாவை கொலைவெறியில் நெருக்கிக்கொண்டிருந்தான் பிரதாபன்..
அவன் பொண்ணை சும்மா வச்சுருவாங்க.. மாப்பிள்ளை படிப்பு முடிஞ்சு வந்ததும் முகூர்த்தம் வச்சுக்கலாம் என்றெல்லாம் கணக்கு போட்டு வச்சிருக்க.. கடைசி நேரத்தில் மரகதம் பாட்டி சின்னசிறுசுக பேசி பழகட்டும்.. நாம ஏதும் ஊக்காமல் விடுவோம்.. நார்மலா அதுக புத்திக்கே இருக்கட்டும்.. இப்படி சாதா ட்ரெஸ்ஸில் அனுப்பி விட்டதும் அவரே தான்..
அதுவரை ரேவதியும் நம்மோடு படுக்கட்டும் என்றிருந்தவர் மாமியார் பேச்சுக்கு மறுவார்தை பேச முடியாது.. குட்டிக்கு மட்டும் புத்தி சொல்லி அனுப்பிட்டார்..
பிரதாபன் வீட்டில் அவன் சொன்னது நடக்கும் இங்கு?? ஹாஹா..
