மைவிழி விடு தூது
77 mvt
வெங்கட் இவ்ளோ வேகமா கார் ஓட்டுவான் என்று மாரிக்கு தெரியாது..
பொறுமையின் சிகரமா அமைதியா மென்மையா பேசும் பழகும் வெங்கட்தான் ரெண்டு மாதமா மாரிக்குத் தெரியும்..
இந்த வேகம் அவன் வன்குணத்தின் இன்னொரு பகுதியை காட்ட.. என்னாச்சு!! நாய் சொன்னதால் கோபமோ? மிரண்டு, பின் தேறி, பட்டுக்கோ போடா.. போடா.. எனக்கென்ன? உதட்டை இறுக்கி வைத்து உம் மென்று இருந்தாள் மாரி..
இந்த போங்காட்ட கல்யாணம் நினைக்க நினைக்க ஒவ்வாமையா இருந்தது . சாவக்கூடாது என்று வைராக்கியமாக தன் துயரகரமான வாழ்க்கையை கூட.கஷ்டப்பட்டு தனியா வடம் பிடித்து இழுத்து வந்தாச்சு..
அண்ணனின் புண்ணியத்தால் தாய் கடமை முடித்து
அக்கடாவென என்று நிலத்தில் வேலை பார்த்து குறை நாட்களை யாருக்கும் தொல்லைகள் தாராமல் ஓட்டுவோம் என்று கணக்குபோட்டு வைத்திருந்தால் அத்தனையும் இவனால் நீர்கோலமாய் கரைந்ததே..
சாவதற்கு தேவையே இல்லாது eee நல்லா இருக்கலாம் என்று எண்ணும் போது வீணாய் வெங்கட்டை வச்சு தற்கொலைக்கு தள்ளி விடும் போல விதி.. கொடுமைடா சாமி.. நொந்தாள்..
முன்பாவது நல்லதங்காள் கடும் போல கொடும்பாலை வாழ்வியல் கொடுமை..
வெயில் கடந்து பாதங்கள் நிழலில் இளைப்பாறும் பொழுது இறக்கும் நிலை..
அது அப்பொழுதில் நிகழ்ந்திருந்தாலும் கூட சாவும் பெருமையா இருந்திருக்கும்.. இன்று என்றால் கேலியா இருக்கும்.. ஐயோ..ம்ம்ம்.. என்னென்னவோ மனசு கண்டபடி புலம்ப..
ஓரிடத்தில் கார் பள்ளம் இறங்கி குலுங்கி ஏற.. தன் எண்ணங்களின் புதைகுழியிலிருந்து எழுந்தவள்.. முகம் சுளித்தாள்.. தற்கொலையை விட விபத்து மோசம் அல்லவா? eee
“மெதுவா போ வெங்கட்.. என்ன அவசரம்?”
“மெதுவா ஓட்டினால் தூக்கம் வரும்..”
இவளுக்கு அது பற்றி என்ன தெரியும்?
“மிதமா போயேன்.. பயமா இருக்குப்பா..”
ம்ம்..
கோபமா?
என்ன கோபம் ?
நான் மானங்கெட்ட நாய் சொன்னது?
அதுக்கு நாய் தானே பீல் பண்ணனும்? ஒய் மீ?
பல்லைக் கடித்தாள் மாரி.. இந்த நாய் அடங்காது…. கள்ளப்பூனை பூனை பொல்லாததது.. அவனால் பாவம் அப்பாவி விலங்குகளை திட்டி தீர்த்தாள்..
காரில் ஏசி குளிர் காற்று வரும் வலையமைப்பு இவள் முகத்திலேயே படும்படி இருக்க.. வகையா சிக்கினாள்.. விவரம் தெரிந்தவர்கள் அந்த வழியை மேலே உள்ள தளர்வு பட்டைகள் கொண்டு மூடினால் குளிர் காற்று வாராது படாது அல்லது கீழே மேலே அதுகளை தள்ளி வைத்துக்கொள்ளலாம் முகத்தில் படாது.. தெரில மாரிக்கு..
சேலையை கொண்டு மூடினாலும் மூக்கு நுனி சில்லிட்டது.. பொறுத்து சும்மா இருக்க.. குளிர் தொண்டைக்குள் இறங்கி, கனத்து வலி கொடுக்க.. கொஞ்சம் காரை எங்கெயேனும் நிறுத்து வெங்கட்.. சூடா ஏதாவது…. அப்படியே ரெஸ்ட் ரூம் என்றாலும் நலம்..வாய் விட்டு கேட்க தயக்கம்..
இவனுக்கு ஒன்னுமே தோணாதா? வராதா?
கொஞ்சம் வண்டிய நிறுத்துறியா வெங்கட்?
என்னங்க மாரி?
சூடா டீ வேணும்?
கஷ்டப்பட்டு சொல்லிட்டா..
இதோ வீட்டுக்கு போய்யிறலாம் ஜஸ்ட் ஒன் ஹவர் யா..
சாக்கு சொன்னானே ஒழிய.. கண்டுக்கல
லேசா இருமி சேலை பின்னை கழற்றி.. மொத்தமாய் முந்தனையை காதோடு முக்காடிட்டு ஜனனியையும் பொதிய..
குளூருதாங்க மாரி?
ம்ம்ம்..
முன்பே சொன்னா என்னங்க?
ஏசி லெவல் குறைத்து, அவளின் முன்பிருந்த ஏசி ப்லோவரை கீழே திருப்ப.. மூச்சு விட தவித்தாள் மாரி.. அவன் முழுக்க அவள் மீது பக்கவாட்டில் சரிந்து தோளை தொட்டு முழங்கை இவள் தொடையில் உரச உரச .. குளிர் போய் திகில் வந்தது..
என்னதிது? கார் சின்னது தான்.. இப்படிலாம் இடிக்க முடியுமா? தவித்தாள்..
அவனை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தாலோ என்னவோ அந்த தொடுகை சிலிர்ப்பை தந்தது..
என்றோ வற்றி போன கிணற்றில் நீர்க்கசிவை உற்பத்தி செய்தது..
அவ்வுணர்வை அறவே வெறுத்தாள்..
“இனி சரியாப்போகும்ங்க மாரி” மாஸ் ரிப்பேர் ஒர்க் போல இவளை உரசி தடவி செஞ்சுட்டு சோதித்தப் பின் வெங்கட் மோகன புன்னகையோடு சொல்ல..
யாருக்குடா??!! மாரி eee
சிறுது நேரம் கழித்து தரமான மோட்டலில் நிறுத்தி.. காரைவிட்டு இறங்கி அவனும் தன் கை கால்களை அசைத்து சோம்பல் முறித்து.. ஜனனியை வாங்கி.. ரெஸ்ட் ரூம் வரீங்களா? கூப்பிட்டு தள்ளி துணைக்கு நின்று..
பின் ஒரு சேரில் ராணியா அழைத்து அமரவைத்து.. டீ சூடா இவளுக்கு மட்டும் வாங்கி கொடுத்தான்
டீ காபி கூட குடிக்காத நல்லவன்..
“வெங்கட் உன் கிட்டே பேசணும் .. கொஞ்சம் காது கொடுத்து கேளேன்.. உன் அழகுக்கு படிப்புக்கு அந்தஸ்துக்கு ..”
“வீட்டில் நாம நிறைய பேசுவோம்ங்க மாரி ப்ளீஸ்..”
மேலும் அங்கே நிற்காது காரில் இருந்த தாயின் தேவையை கவனிக்க சென்று விட.. அப்டி இப்டி என்று அங்கேயே அரைமணிநேரம் ஆகிவிட்டது..
மீண்டும் துவங்கிய பயணத்தில் மெல்லிய ஒலியில் வெங்கட் பாட்டு போட்டுக்கொள்ள..
மாரிக்கு “இப்போ நல்லாருக்கே” என்ற பீல் வந்து நிதானமாகி கண் மூட..
இளமையெனும் பூங்காற்று..
கங்கை நதிக்கு மண்ணில் அணையா?
திடுமென, இந்த வார்த்தைகள் காதை அடைந்து உணர்வில் விழுந்து எழ.. அலங்க மலங்க விழித்து உசார் ஆனபொழுது..
மங்கை இனமும் மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன?தேகம் துடித்தால் கண்ணேது? கூந்தல் கலைந்த கனியே!
கொஞ்சிச் சுவைத்த கிளியே!
இந்த நிலைதான் என்ன விதியோ?
சில வரிகள் தாண்டி.. அடுத்தடுத்த பாடல் வரிகள் கடின பாறையைக்கூட சின்ன சின்ன துளையிட்டு ஊசி வெடி சொருகி வெடிக்கச்செய்யும் இளையராஜா மதுர இசையில் விரகத்தின் வரிகள்..
அம்மம்மா.. உயிரோடு கொன்றது .. மாரி பாட்டு கேட்டதே இல்ல.. அதுவும் இதுபோல ஒரு ரசனையான பாட்டை வாழ்க்கையில் நிதானமாய் ஒவ்வொரு சொட்டாய் ரசித்து ருசிக்கும் வாய்ப்பும் கிடைத்ததில்லை..
அழகான ஒரு குடும்பத்துக்குள் தானும் கலந்து.. வெளியில் தப்பித்து ஓடமுடியா ஊடகம், இரவு, பயணம் அருகில் ஒரு வீணா போன வெங்கட் என்று அமைய.. இம்முறை உடலெங்கும் பூமுள்ளாய் வினோத உணர்வுகள் குத்தியது.. மத மத வென்று திமிரெடுத்த உடலை லேசா அசைத்து நெளிக்க..
“திரும்பவும் குளூருதாங்க?”
“இல்ல.. ” வெளியில் வேடிக்கை பார்க்கும் பாவனையில் மாரி.. அவனை ஏறிட்டு பார்க்கவும் தெம்பில்லை..
பாட்டால் கொடுமை பண்ணுறானோ? பயந்தாள்..ஓரக்கண்ணால் பார்த்தால் அவன் கழுகு பார்வை இவளிடமே.. ஏதோ இறைஞ்சியது…
தன் பார்வையை அவசரமாய் விலக்கிக்கொண்டாள் மாரி ..
இவளுக்கு வெங்கட்டின் இந்த நறுவிசு பிடிக்கல.. இதெல்லாம் காதலின் அங்கம் தெரில..
யாரு காதலிச்சா? ஆசை ஆசையா வாழ்ந்தா? ..
ச்சீ!! எனக்குத்தான் இப்படி தப்பு தப்பா தெரிது எதுக்கு? என்று சாதாவா கண்ணை மூடிக்கொள்ள.. அவள்மீது
அடுத்த அணுகுண்டுமீது வீசப்பட்டது. பாட்டுத்தான்.. eee
பாடா படுத்தி எடுத்தான் வெங்கட்.. அடேய்..!!
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்?
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்க..
வெங்கட் வேணாமே.. ஆப் பண்ணிடு பதறி எடுத்து மாரி ரிக்வஸ்ட்..
முடில உடம்பு சில்லிட்டது.. சாவடிச்சான் பாட்டு போட்டு..
“தூக்கம் வரும்ங்க மாரி..”
“காரை ஓரமா நிறுத்தி தூங்கு.. காதுக்குள் நொய் நொய் ன்னு எரிச்சலா இருக்கு.. ” முறைக்க.. அணைத்தான்..
இளமைச் சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ???
அவனே அவனின் இனிமையான மென்மையான ஆண்மையான குரலில் பாடினான்..
பக்கவாட்டில் இருந்த அவனின் இடது கை இவளின் வலது கையை பிடித்து அதில் அவன் மனசை புரிய வைக்க..
இளமைச் சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ???
திரும்ப பாடி கேட்க..
இந்த முரட்டு பீஸ்.. என்ன மாறி ரியாக்ட் பண்ணனும் தெரியாது தவித்தது.. இவளின் கையை விட அவனுது அதி மென்மையா குளுமையாக இருக்க.. பொருத்தம் கைகளில் கூட இல்லை.. இந்த பன்னிக்கு ஆசைய பாரேன்.. கோபம் முட்டியது..
இவள் உருவ.. அவன் எங்கு விட்டான்? அப்படியே தன் கையோடு கொண்டு சென்றவன்.. நெஞ்சில் சிறிது நேரம் வைத்து இதயம் பட படவென்று சிறகுகளை அடிப்பதை உணர்த்தி.. இன்னும் கொஞ்சம் மேலே இழுத்து சென்று.. ஒவ்வொரு விரலாய் சப்பி எடுக்க.. ம்மா!! அச்சச்சோ !! மாரி தேகம் கோடி எறும்புகளை ஊற விட்ட சிலிர்ப்பு.. விரல் விட்டு சொர சொர உள்ளங்கைக்கு முத்தமிட்ட பொழுது.. தாழ்வு மனப்பான்மை தாளாது பிடுங்கி கொண்டாள்..
கையில் ஜில்லிடும் வெங்கட்டின் எச்சிலை என் செய்ய? தெரியாது.. சேலையின் நுனியை அதில் திருகி மறைத்தாள்..
நான் என்பது நீயல்லவோ தேவ தேவி.. இவளை பார்த்து அதே மாய புன்னகையோடு வெங்கி..
இப்படி பாட்டுகள் கூட இருக்கா? ஐயம் கொண்டாள்
பூவோடு சேர்ந்த நாரும் மணக்குமாம்
பூ யாரோ? நார் யாரோ? போக போக புரியும்..
இவர்கள் ரதம் வீடு சேர்ந்த பொழுது நாலே கால்.. இங்கிருக்கும் பொழுது எப்படி படுத்து இருந்தாளோ மாரி அது படி.. ஹாலில் பிள்ளைகளுடன் படுக்க.. சரசம்மா அறை இவளை பார்த்து கதவு திறந்தபடி..
அதற்கு அடுத்து வெங்கட் அறையில் மூடிய கதவுக்குள்.. பிள்ளைகள் முதலில் சிணுங்கினாலும் பின் வீடு என்றதும் வசதியா தூங்க.. நல்ல இருட்டு.. அமைதி..
காரில் நடந்த சேட்டைகளை மறந்து.. மாரிக்கு கண் லேசா சொக்கத் தொடங்கியது.. ஏதோ வித்தியாசம் புரிய.. விழித்தவளின் இடுப்பில் கைகொடுத்து அலேக்காக கையில் எந்திக்கொண்டிருந்தான் வெங்கட்.. புரிந்து இவள் குரல் கொடுக்க முயல் வாயோடு வாய் பொருத்தி விட்டான்.. ஆஆஆ அதிர்ச்சி மாரி.. பின் சுதாரிச்சு கை கால்களை அடித்து திமிற திமிற.. திறந்திருந்த அவன் அறைக்குள் கொண்டு கட்டிலில் கிடத்த.. இவள் அந்த விடிகாலை பொழுதில் சத்தமெழுப்பி மித்த மூவரையும் கலவரப்படுத்த வேணாமே ..என்று அவனையே தள்ளி கதவு பக்கம் போக முயல, அவன் அறையாச்சே!!விடுவானா??.. மின்னல் வேகத்தில் வாச கதவை மூடி தாளிட்டு அதன் மேலேயே சாய்ந்து நிற்க..
“வெளியே விடு..”
“பேசிட்டு போலாம் மாரி.”
.ஒரு மார்க்கமாக .. வெங்கி
வெளியில் “மேடம்” “ங்க” இங்கு டி.. ச்சீ இவன் ஒரு பிராடு போல..
மாரி வம்புக்கே தன் வலிமை கொண்டு வெங்கட்டை உள்ளே இழுக்க.. அவனோ இந்த தள்ளு முள்ளை எதுக்கோ யூஸ் பண்ணிக்கிட்டான்.. வாகாய் திரும்ப உதடு மாட்டிய பொழுது அதனை பாடாய் படுத்தி மலர்ந்து விரிந்த இதழிலிருந்து கொம்புத்தேனை வழிய வழிய ருசிக்கத்துவங்க.. இவன் அதிரடி சேட்டைகள் தாளாது அதிர்ந்து பலகீனமானவளை திரும்ப அள்ளிக்கொண்டான்..
போற போக்கில் ஒளிவிளக்கையும் அணைத்து.. மஞ்சத்தில் மாரியோடு விழுந்து.. உதட்டுக்கு கொடுத்த முத்தங்கள் அவள் உடல் முழுமைக்கும்.. அவள் பேச வாயெடுத்த போதெல்லாம் இவன் உதட்டால் கவ்விக்கொள்ள.. மாரியால் ஒன்னும் பண்ண முடில.. முழுக்க முழுக்க ஆண்வாசம் தான் மாரியின் நாசியில்.. அவள் காட்டு வேலை செய்து பழகியவள் ரெண்டாம் அடுக்கு தோலாய் இறுக்கமான உடைகள் அணிகிறவள்.. அதனால் கிச்சென அங்கங்கள் கச்சிதமாக இருக்க.. இவனின் பலத்துக்கு இணையான அவளின் வலிமை அடக்கி…லேசா அவன் வசதிக்கு உடைகள் அகற்றி.. மெல்ல செய்து இவளின் பொறுமைகளின் எல்லைகளையெல்லாம் சோதித்து தடையற தொடங்கிட்டான் இல்லறத்தை.. பெண்மையின் இறுக்கம் அபரிதமான சுகத்தை அள்ளித் தர உச்சி வேர்த்து சொர்க்கத்தில் வெங்கட்.. அவளுள்அசையும் பொழுதில் காதில் தன் கோரிக்கையை மெல்ல வைத்தான்.. “இது கண்டிப்பா தினமும் வேணும்டி மாரி தரணும் ம்ம்ம்.. கெஞ்சல்.. ஒரு புறம்
“ஊருக்கு சும்மா சொன்னது பிள்ளைகளுக்காக என்று.. நிஜமாவே நீ வேணும் என்று பண்ணது தான் இந்த கல்யாணம்.. ரெண்டாம் கல்யாணம்டி வேறு எப்படி பிச்சை கேட்பது? நீ வேணும் என்று அடம் பண்ண முடியாதுல.. ஆமாம் தானே .. புரியுதா? சொல்லுடி” மாரியின் கன்னத்தில்
ரெண்டு சொட்டு கண்ணீர்
வெங்கட்டின் உருக்கம்..
மாரியின் மனத் தடைகள் மொத்தமும் இந்த வார்த்தையால் கண்ணீரால் ஆவியாக… “ப்ச் பேசாதே வெங்கட்..” மேலிருந்தவனின் முதுகை தடவி ஆறுதல்..
“வெளியில் உன்னை வாங்க போங்க கூப்பிடுவேன்.. உள்ளே டி மட்டும்தான்டி வேகம் குறைந்திருந்தவன்.. அசுர வேகம் எடுத்து..
மூச்சு வாங்க..
காரில் பாடிய பாட்டின் மிச்சம் மெல்ல மாரிக்கு காதில் பாடினான்..
குழம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
ஊதலான மார்கழி.. நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி..
முடிவில் இச்சு இச்சு இச்சு ஒலிகள் மட்டுமே. பேசவே இல்ல..
முதன்முறை ஆடைகள் கலைக்கவில்லை நெகிழ்த்தியிருந்தான்.. இம்முறை மாரியை தொட அவள் மவுனமாயிருக்க.. கூடலின் அடுத்த படிக்கு போய் இறுகி கிடந்த சோளியின் முதல் மூன்று கொக்கிகளை மட்டும் விடுவித்து.. இருட்டில் பழகியிருந்த மாரியின் கண்களை தன் கண்
கொண்டு கைது செய்து... கொழித்து சிறை பட்டிருந்த ரெண்டையும் வெளியில் எடுத்து ஒன்றாக்க முயன்றான்.. நேரடியா கொடுக்கப்பட்ட விரல்களின் அழுத்தம் வலியுடன் வேறு எதையோ கலந்து தர.. கிறங்கினாள் மாது
முனகல் வர பார்க்க மாரி உதடு கடித்து அடக்க.. அவ்வுதடுகளை தன் உதட்டால் பறித்து.. பாதுகாத்தான் அந்த பொக்கிஷகாதலன்.. விடிய இன்னும் சிறிது நேரமே இருக்க.. மூன்றாவது செய்ய ஆசைப்பட்டேன்டி.. மாரியிடம் குறைபட்டு அவளுக்கு மறந்தே போன நாணத்தை வரவழைத்தான்.
.
ஆனந்த சங்கமம் நிறைவு பெற்ற பொழுதில் “பொருத்தமே இல்லடா என்னை விட்டுறேன் வெங்கட்..” நேர்மையா மாரி முதன் முதல் அவன் நெற்றியில் அன்பாய் முத்தமிட்டு வேண்ட..
மாட்டேன் என்பதாய் அவன் தலையசைக்க.. இது அவர்களுக்கே அவர்களுக்கான அந்தரங்க அழகிய காவிய கவிதை..
“டா போட்டுட்டேன் தப்பு தப்பு.” எப்படி கூப்பிட தெரியாது மாரி … தவித்தது பேரழகு..
“அப்படி கூப்பிட்டுத்தான் என்னையே உனக்குள் சுருட்டுனே… இன்னும் கூட ஏதாகிலும் சொல்லுடி உன் அடிமை கேட்டுக்கும்.. உன் கிட்டே எனக்கு எந்த எல்லையும் இல்ல..”
வெங்கி இன்னும் அவளை இழுத்து தன் மேலே போட்டு.. கலைந்த முடியை தள்ளி கொடுத்து..
“ஆசையில் ஏதாச்சும் வன்மையா பண்ணிட்டேனா வலிக்குதா? சாரிடி மாரி..” அவன் கடித்த இடங்களை நினைவில் வைத்து .. இந்த முறை காமமில்லாது முத்தமிட.. தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள் மாரி..
எதுக்கு? எதெதுக்கோ? ஓர் இறந்த காலத்தின் சுவடுகளின் சூட்டு தழும்புகள் வலித்தது…
ஒரு நாள் காலையில்.. நேரம் கழித்தே எழுந்த தஷா கீழே இறங்கி வர.. முற்றிலும் எதிர்பார்க்காத நிகழ்வு..
அவர்கள் வீட்டில் ஹாலில் ஹரி அமர்ந்திருந்தான்.. முகம் கோபத்தின் சிவப்பில் ஜொலித்தது..
பிரதாப் எதிரில்தான் இருந்தான்.. புஷ்பா சமயலறையில் இருந்தாலும் வீடு புயல் வரும் எனும் நிலையில் இருந்தது..
மாரியின் மகனாய் கேள்வி கேட்க போகும் மருமகனுக்கு பிரதாப்பின் பதில் என்னவா இருக்கும்??
