என்னவன்
என்னவன் – 10
“நினைவெல்லாம் நீ இருப்பதால், என்னையே நான் மறந்தேனடா”
அறையுள்ளே வந்த நிலா அதுவரை மறைத்து வைத்த நடுக்கத்தை உடல் முழுவதும் உணர்த்தாள். நிலைகண்ணடியில் அவன் முத்தம் பதித்த இடத்தை தடவி பார்த்தாள். அந்த முத்தத்தின் கூச்சம் இன்னும் நிலவி கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருதால் என்ன என்ன நடந்திருக்கும் என்று நினைக்கவே உடல் அதிர்ந்து நின்றது. இதுவரை உணரபடாத உணரென்றை உணர்ந்தாள். அவளுக்கு அந்த உணர்வின் பெயர் தெரியவில்லை. கோபமிருதாலும் அது கோப உணர்வில்லை. பயம் கொஞ்சமிருந்தது, வெறுப்பு கடுகளவுமில்லை. இது எந்த வகை உணர்ச்சி என்பதை ஆராய்ந்து ஆராய்ந்து தடுமாறி போனாள். ‘இன்று என்ன நடந்தாலும் இந்த அறையை விட்டு வெளியே செல்ல கூடாது’ என்று முடிவெடுத்தாள். நாளை கருணை இல்லத்தில் கண்ணில்லா மாணவி ஒருவருக்கு தேர்வெழுத உதவி செய்ய செல்லவேண்டும் என்பதால் அவள் கவனத்தை கஷ்ட்டப்பட்டு இதில் தயாராவதற்கு செலுத்தலானாள்.
லலித் தனது அறைக்கு செல்லும் முன்பே நல்ல குளிர்ந்த நீரை பருகிவிட்டே சென்றான். இருந்தும் அவனுள் தீண்ட படட அணுக்கள் விழித்துக்கொண்டே இருந்தது. லலித் முன்பெல்லாம் பெண் சுகம் கொண்டவனில்லை. வியாபாரம் முழுவதும்தான் அவனின் கவனமெல்லாம். ஆனால் அது காதல் என்ற பெயரில் ஒருத்தி அவனை ஏமாற்றி செல்லும்வரைதான்.
மலர், முதல் நாள் பிஏ இன்டெர்வியூவின்போதே லலித்திடம் குழைந்து வளைந்து அப்பொய்ன்மெண்ட் ஆர்டர் வாங்கி, மெல்ல மெல்ல லலித்தின் மனதில் குடிப்புகுந்தாள். அவளால் நிறைய வியபார ஒப்பந்தங்கள் கிடைக்க, அவளின் வியாபார நுணுக்கங்களால் லலித்க்கு அவளை தன் காதலியாக வெளியே காட்டிகொள்வதில் பெருமையாக உணர்த்தான். சில காலங்களிளையே நண்பன் ராஜுவின் தயவால் அவளின் பொய் முகம் வெட்ட வெளிச்சமானது.
ராஜு லலித்தின் காலேஜ் நண்பன். லலித்தின் கஸ்டமர்களில் ஒருவரது தொழிற்சாலையில் வேலை செய்து லலித்துடன் வியாபாரத்தொடர்பிலும் இருந்தான். ஒரு புதிய ஒப்பந்தம் ராஜுவிடம் வர அதை லலித்க்கும் இதர நிறுவனங்களுக்கும் அனுப்பினான். மறுநாள் லலித் பிஏ ராஜுவிடம் தொடர்பு கொண்டு “இந்த ஒப்பந்தத்தை எங்கள் நிறுவனத்திற்கு தருவீர்கள் என்றால் நான் உங்களுக்காக என்ன வேணாலும் தருவதாக சொல்ல.. ராஜு உஷாராக என்ன என்ன தரப்படும் என்று கேட்க.. நாளை இரவு உங்க வீட்டுக்கு வேண்டுமானாலும் வர தயார் என்ன மலர் கூற.. ராஜு வீட்டில் வேண்டாம் ஹோட்டல் என்று தகவலை வாங்கி, அதை லலித்திடம் ஒப்புவித்தான்.
ராஜுவிக்கு பிஏ தான் லலித்தின் காதலி என்று தெரியாமல் சொல்ல போக, லலித் உண்மையை கண்டறிய தானே ஹோட்டலுக்கு செல்வதாக கூறி சென்றான். தான் ஒரு பெண்ணை நம்பி ஏமாந்து இருக்க மாட்டான் என்றே நம்பினான், அங்கு அறையை திறந்து மலரை காட்சி தரும் வரை. லலித்திற்கு அவனின் காதலி மாற்றான்க்கு முந்தானை விரிக்க காத்திருக்க கோபம் தலைக்கேரி அவளை அவ்வறையில் தள்ளி, அவளை முழுவதுமாய் நிர்வாணமாக்கி “ஏன் இப்படி செய்த்தாய்” என கேக்க “உன்னிடம் நல்ல பெயர் வாங்க.. உனக்கு வியாபார சிந்தனையுள்ள பெண் தான் பிடிக்கும். உன்னை கல்யாணம் செய்தால் தான் நான் பணக்காரியாக வலம்வர முடியும். உனக்கு நிறைய புதிய ஆர்டர் வர நான் என்னையே” என்று அவனிடம் காதல் வசனம் பேச நான்கு அறையை மேலும் சம்பாதித்தாள்.
“சீ வாயை மூடு. பணக்காரியாக என்ன வேண்டுமென்றாலும் செய்வியா” என்று அவளின் உடலை மேலும் துன்புறுத்த, அவள் ஆடையில்லாத மேனி இவனின் ஆண்மையை எழுப்பிவிட்டிருந்தது. ‘எனது ஆண்மைக்கு நீ தகுதியானவளில்லை’ என்று லலித் அவனின் நீண்ட பாகத்தை கைகளாலையே உயிர் கொடுத்து, ஒரு நீள பெருமூச்சியில் மலரின் மேல் முழுவதுமாய் வெள்ளை அபிசேகம் நடத்தி ‘நீயும் டாய்லெடும் எனக்கு ஒன்றுதான்’ என்று அவளை நீங்கி சென்றான்.
ஆனால் அதற்குப் பிறகு அவள் எங்கேயும் வேலைச் செய்ய முடியாதபடி செய்தான். மலர் போகுமிடமெல்லாம் அவளின் வாழ்க்கையே வெறுக்கும்படி நடந்தது. தாங்க முடியாமல் மலர் அவளின் உயிரை மாய்த்துக் கொண்டாள். தன்னை ஏமாற்றியவள் இவ்வுலகில் இல்லை என்பதே அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அதன்பின் லலித் பெண் இனத்தையே வெறுத்தான். தன்னை அணுக வரும் பெண்கள் பலரை தவிர்தாலும் அவனின் ஆசை துளிர்விடும் நேரங்களில், மலரிடம் நடந்துக் கொண்டதுபோலவே பணம் தந்து பெண்களை நடத்தினான், நிலாவுடனான திருமணதின் முன்புவரை.
நிலாவின் அருகாமை அவனின் மனதை சஞ்சலபட வைத்ததும் இப்போதெல்லாம் அவனின் ஆண்மையை சோதிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. அதுவும் இன்று நிலாவின் அறைகுறை மேனி லலித்தை ரெம்பவே தடுமாற செய்தது. நிலா அறைந்ததால் ஒன்றும் லலித் அவளை தீண்டாமல் விடவில்லை. தன்னால் அவளுக்குக் காயம் ஏற்பட்டு அவளின் அழுகையை பார்த்து தான் லலிதின் எண்ணம் மாறியது. இன்னும் வீட்டிலேயே இருந்தால் இரவில் என்னவானாலும் நடக்கலாம் என்றெண்ணி லலித் கார் கீ எடுத்துக்கொண்டு பார் நோக்கி புறப்பட்டான்.
லலித்தின் கார் புறப்படும் சத்தம் கேட்டதும் நிலாவிற்கு அப்பாடா என்றே தேன்றியது. ‘இனி நிம்மதியாக தூங்கலாம்’ என்றென்னியவள் ‘ஆனா இந்த நேரதுல எங்க.. ‘ பச் என தோலை குலுக்கி தூங்களானாள்.
மறுநாள் காலையில் எழுந்து பார்க்க லலிதின் கார் இருப்பின் மூலம் அவன் வீட்டிலே இருக்கிறானென உறுதிப்படுத்தி காலை சிற்றுண்டி, வீட்டு வேலைகளை முடித்து, அவளும் பரிட்சை எழுத கிளப்ப அயுதமானாள். கேப் புக் செய்து வாட்செப் மூலம் கணவனுக்குச் செல்லுமிடம் தெரியப்படுத்தி முடிக்கவும் வம்சியிடமிருந்து கால் வரவும் எடுத்து பேச..
“செல்லு வம்சி.. என்ன காலையே கால்?”
“அண்ணி கதவை திறங்க”
“கதவா? “
“ஆமா நாங்க வெளியில தான் இருக்கோம்.. முத்து அண்ணா இல்ல.. லலிதும் கால்லே எடுக்க மாட்றான்”
“நாங்களா?” என்றவாறே நிலா கதவை திறக்க லலிதின் குடும்பத்தினர் மூவரும் அங்கே நின்றனர்.
“ஹாப்பி பர்த்டே நிலா”
