என்னவன்
4
நிசப்தம், ஒரு
பேரமைதி
செவிப்பறைகளுக்குள்
ஊடுருவி
விளக்கிலிருந்து
ஒளிரும்
தீச்சுடர்போல்
உன்
வாழ்க்கையை
ஒளிரச்
செய்கிறது!
நிலைக்கண்ணாடியில்
தெரிந்த ஆறடி ஆணிடம் எப்போதும்
இரு அடர்த்த புருவங்களுக்கு நடுவே இருக்கும் சிந்தனை முடிச்சுகள் இல்லை. ஜெல் இல்லாமல் இருந்த
அவனின் அடர்த்த கேசம்,
நல்ல அகன்ற நெற்றி, வலுமையான கூர் மூக்கு, லேசாக
தாடி, சிரித்தால் கொள்ளை அழகாகும் அதே மீசையும் இதழ்களும்
இவற்றை அருகில் கண்டதால் அவன் வேறு மாதிரி இருப்பது
போல் தோன்றியது நிலவிற்கு. கிட்டத்தட்ட அதே நிலையில் அவளின்
விழிகளில் சிறை கொண்டதுபோல் மெய்
மறந்து நின்றான் லலித். விழி தாண்டி பார்த்திருத்தல்
(கதை முடிஞ்சு போய்
இருக்குமே).
பின்
அகற்றிய தாவணி கீழே சரிந்து விழுவதற்குள்
சுயம் பெற்ற நிலா அவசரமாக அதை
சரி செய்து நடப்பிற்கு வந்தாள். அவளின் அசைவிற்கு பிறகே லலித்தும் தன் தலையை சிலுப்பிக்
கொண்டு மீண்டும் லேப்டாப்பில் வேலையை தொடர சென்றான். இருவரும்
இப்போதுதான் மூச்சு
விடுவது போல் உணர்ந்தனர். “தேங்க்ஸ்”
என்று கூறிவிட்டு மடமடவென குளியலறையில் குளித்து பல் துவங்கி இரவு
உடைக்கு மாறிய பின்புதான் அவள் மீண்டும் அவன்
முன்னே வந்தது. நிலைக்கண்ணாடியில் இடுப்பு அளவு உள்ள கூந்தலை
சீவிக்கொண்டிருந்தாள்.
“நீ
கட்டிலில் தூங்கு நான் சோபாலே தூங்கிக்கிறேன்”
“இல்லை
இல்லை.. நான்
வேணுனா சோபாலே படுக்கறேன்.. நீங்க”
கை தூக்கி நிறுத்த சொல்லிய லலித் “ எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு நீ
போய் தூங்கு”
என்று
விட்டு நீ யாரோ நான்
யாரோ என்பது போல் சோபாவில் லேப்டாப்வுடன்
அமர்ந்து கொண்டான். அவளும் தாடையை சிலுப்பி கொண்டு கட்டிலில் படுத்ததும் உறங்கி போனாள்.
காலையில் எழுந்ததும்
நான் எங்கே இருக்கிறேன் என்றே அவளுக்கு தோன்றியது. நேற்றைய கல்யாணம் நினைவுக்கு வரவே
தூக்கி வாரி போட எழுந்தாள். எவ்ளோ அசதியில் இப்படி அச்சமில்லைமல் தூங்கி இருக்கோம்
என்று நினைத்தவள் எப்படி இவ்வளவு பாதுகாப்பாய் உறங்கினாள் என்பதை உணர மறந்தாள்.
மெல்ல எழுந்து பார்க்க சோபாவில்
லலித் தலையில் தலையணை இல்லாமல் கால்கள் வெளியே வந்து படுத்திருப்பதை பார்த்தவளுக்கு
பரிதாபமே வந்தது. ஒரு தலையணையை எடுத்துக் கொண்டு அவன் தலையை நேர்த்தியாக மெல்ல கை கொடுத்து
தூக்கி வைத்தாள். கீழே கிடந்த போர்வையை மெல்லமாக கிடத்திவிட்டு ஒரு நிமிடம் நின்று
அவனை பார்த்துவிட்டு கழிவறைக்கு சென்றாள்.
திரும்பி வந்தவள்
பால்கனி கதவை திறந்து காலை காற்றை மேல சுவாசித்து கீழே உள்ள தோட்டத்தில் உள்ள மலர்களை
ரசித்தாள். அவள் ஒரு இயற்கை விரும்பி கடவுளின் படைப்பை மிகவும் நேசிப்பாள். கதவு அழைப்பு
மணி கேக்க வேகமாய் சென்று திறந்து பார்க்க காலை உணவு வந்து இருந்தது. அதை பெற்று வந்தவள்
லலித் இன்னும் அசையாமல் இருக்கவும் காலையில் கோவிலுக்குச செல்ல வேண்டுமே என்று அவனை
எழுப்ப அருகில் சென்றாள்.
“லலித்… லலித்… “ஓர் அசைவுமில்லை.
மெல்ல தொட்டு
எழுப்ப அப்போதும் அசையவில்லை. மெல்ல அவன் ஒரு பக்க கையை பிடித்து குலுக்க.. அவன் அசைந்து
அவள் கையை இருக்கி அணைக்க.. கால் தடுமாறி நிலா மொத்தமாக அவனின் மேல் விழுந்தாள்.
சடடென எழுப்ப
முடியாமல் அவனின் கைகள் அவள் கையை இறுக்கி பிடித்து இருந்தது. பலம் எல்லாம் சேர்த்து
கொஞ்சம் வெறுப்போடு கை வலியோடு நிலா இழுக்க.. லலித் “ஹேய்” என்று கத்தவும் சரியாக இருந்தது.
அவசரமாக எழுந்து
நின்ற நிலாவை நோக்கி
“என் கிட்ட
வராதே. என்னை தொடர வேலை எல்லாம் வைச்சிக்காதே இதுதான் நான் தர LAST WARNING”
என்று விட்டு
எழுந்து குளிக்க போனான் லலித். அதிர்சசி பொங்க நின்றாள் நிலா.
