என்னவன்
5
“நம் வாழ்க்கையில் நம்மை நாமே செதுக்கிக் கொள்ள கிடைக்கும் உளி தான் இந்த அவமானம்”
வினாடி பொழுதில் கடந்த புயலில் தன்மானம் பறந்ததுப்போல் நின்றாள் கவிநிலா. ‘நான் என்ன வேணும்னா மேல விழுந்தேன்.. இவரே கையை புடிச்சி சே.. அத கேக்க கூட சான்ஸ் தராம..’ கண்ணை அரித்தது கண்ணீர். இதுநாள்வரை இப்படி ஒரு அவமானம் கண்டதில்லை கவிநிலா.
சின்னா வயசுயிலிருந்து அடக்கமாகவும் அமைதியாகவும் இருப்பவள் அவள். அவளின் சேட்டைகள் எல்லாம் சிறுவயதோடு நின்று போனது. 15 வயதில் பள்ளியில் ஒரு சக மாணவன் லவ் லெட்டர் தர அதுவரை குழந்தை தனமா அவளை வளர்த்த தந்தை, கண்டிப்போடு பல கண்டிஷன் போட்டு அவளை சிறையில் வளர்த்தார். அந்த லவ் லெட்டர் பார்ட்டி கால் கை உடைந்து ஹாஸ்பிடலில் இருந்தது பின்னொரு நாள் அறிந்த அவள் அதன் பிறகு தன்னிடம் பேச பழக வரும் ஆண்களையும் சில பெண்களையும் கூட தவிர்த்தாள். லலித் குடும்பம் மாதிரி அவர்கள் ஒன்றும் பரம்பரை பணக்காரர்கள் இல்லை. ஆனால் அவளின் அப்பாவும் அம்மாவும் புது பணக்கார பாணியில் வலம்வர, அஃது அவர்கள் தொழில் வடடாரத்திற்கு முக்கியமானதாக இருந்தது. தந்தையும் உன் பெயரில் தவறு ஏற்பட்டால் அஃது என் கௌரவ பிரச்னையாகும். காதல் கத்திரிக்காய் என்று ஒன்றும் இருக்க கூடாது. நண்பர்கள் கூட நமது தரத்திலையே இருக்கனும். பிசினஸ் லே தான் டிகிரி பண்ணனும். இந்த காலேஜ் தான் போகணும் இன்னும் நிறைய நிறைய கட்டுப்பாடோடு வளர்ந்தவள். இவற்றையெல்லாம் தனது அமைதி பண்பால் சாதுவாய் கடந்து சென்றாள். அதுவே அவள் சென்ற இடமெல்லாம் அவளுக்கு கௌரவத்தை தந்தது. யாரும் அவளை இப்படி அசிங்க படுத்தியது இல்லை. காதலன் தீணா கூட நீ பணக்காரியாக இருந்தாலும் பந்தா இல்லாமல் இருப்பது தான் பிடிக்கும் என்பான்.
“படிர்ர்ர்”
ரூம் கதவு அடித்து சாற்றப்பட்டது. தூக்கிவாரி போட்டது நிலாவிற்கு. குளித்து உடையணிந்து வெளியே சென்றுள்ளான் அவளின் கணவன். நாம நம்ம தரப்பு நியாயம் சொல்ல வழி கிடைக்காது போலையே என்று தலையில் அடித்து கொண்டாள் நிலா. நிமிடத்தில் மீண்டும் அறை அழைப்பு மணி ஒலிக்க கதவின் எதிரே லலிதின் தாயார் நின்றார். அவரின் சிரித்த முகம் அவளையும் புன்முறுவலுக்கு அழைத்தது.
“நல்ல தூங்கினீங்களா நீங்க ரெண்டு பேரும்?”
“ஆன் அத்தை உள்ளே வாங்க,”
‘ஐயோ உள்ளே இவங்களா நோ.. சோபால அவர் படுத்த தடம் சே..’ மனசுகுள்ளர் பேசி கொண்டாள்.
“இல்லம்மா நேரம் ஆகுது.. இந்தா இந்த புடவை கட்டிக்கிட்டு கிளம்பி வா டா.. அவனுக்கும் டிரஸ் இருக்கு.. கோவில் போகணும்.. ”
“அத்தை அவரு”
“ஆம் பாத்தேன் கீழ போனான்.. கொஞ்சம் நேரம் கழிச்சு வருவான்.. நீ போய் கிளம்பு.. டைம் ஆகுது சரியா மா..”
“ஓகே அத்தை”
“அம்மாடி அவன் உன்னே ஏதாவது… சொன்னானா மா”
உடனே தலையை இல்லை என்ன அசைத்தாள்.
“அம்மாடி அவன் உன்னே ஏதாச்சும் சொன்ன.. இல்ல அடிச்ச என்கிட்டே கண்டிப்பா சொல்லுமா சரியா.. சரி சரி போய் கிளம்பு வாடா”
சிரித்துக் கொண்டே கதவை மூடியவள், இவரின் அன்பில் என்றுமே குறை இல்லை. அப்போதும் சரி இப்போதும் சரி எனக்கு நல்ல தாயாகவே இருந்தார். எப்படியும் இவர் மனம் நோக்கும்படி நடக்க கூடாது என்று நினைத்துக்கொண்டாள்.
வெளியே வந்த லலித் உடனடியா தொலைபேசியில் ராஜுக்கு அழைக்க அவனின் கண் முன்னமே வந்தான் அந்த பாவப்படட தோழனும் அவனின் அசிஸ்டனுமாகிய ராஜூ.
“பசிக்குது வாடா”
“அதன் சாப்பாடே உன் ரூம்கே அனுப்புனேனே மாப்பிளே”
“டேய் அப்படி கூப்பிடாதே பசியிலே உன்ன கடிச்சி கோதரிருவேன்”
“நைட் ரொம்ப நேரம் வேலையோ இப்படி பசிக்குது உனக்கு மாப்பு” புது மாப்பிளையை கலய்த்து வாங்கி கட்டிக் கொண்டான் ராஜூ.
ராஜுவின் காது மடலில் கிள்ளி கொண்டே இழுத்து சென்று ஹோட்டலில் உள்ளே ரெஸ்டாரண்ட்லில் அமர்ந்தான் லலித். ஆர்டர் செய்து சாப்பாடு உள்ளே இறங்கியதும் தான் அவனுக்கு ஒரு அமைதி வந்தது. நண்பனின் முகம் எதோ சொல்ல ராஜூ அவனை “என்னடா என்ன ஆச்சு”
“ராஜு நம்ப கூட படிச்சா தீணா பற்றி விசாரிச்சு பார்த்தியா.. என்ன ஆச்சு”
“விசாரிச்சுட்டேன் மச்சி.. ஆஸ்திரேலியாலே அவன் யூனிவர்சிட்டிலே ஒரு ட்ரிப் போய்யிருங்காங்கே. அவங்க போன பஸ் அச்சிடேன்ட் ஆகி சில பேர் தான் உயிர் தப்பிச்சது.. இன்னும் சில பேருக்கு என்ன ஆச்சின்னு தெரியல.. அதுலே நம்ப தீணாவும் ஒன்னு.. விழுந்தது மலை உச்சினாலே கீழே உள்ளே பாறைக்கு போய் தேடலனு கேள்விப்பபட்டேன்.. என் பெரியம்மா வழி தம்பி ஒருத்தன் அங்கே இருக்கான் அவன் தான் இது எல்லாம் சொன்னது”
“ஓ.. ஆனா நிலா யூனிவர்சிட்டிலே கேட்டதுக்கு தெரியாது சொல்லி இருக்காங்க..”
“அது அவன் volunteerரா போய் இருக்கான்.. ரெகார்ட் லே இல்லே.. இது நான் போலீஸ் லே விசாரிச்சது.. விபத்துலே பொழைச்சி வந்த அப்புறம் யாரோ சொன்ன டீட்டைஸ்.. அவனும் கடைசில ட்ரிப் வந்தது…” அமைதியாத அவனின் வார்த்தைகளைக் கேட்டுகொண்டிருந்தான் லலித்.
நண்பனின் அமைதி பிடிகாதவன் “மச்சி தீணாவும் நிலாவும்…. ராஜூவிற்கு மேலே பேச முடியவில்லை.
“தலை மட்டுமே அசைத்தான்” லலித்.
“உனக்கு முன்னமே எப்படிடா.. சொல்லுடா”
“அவன் தான்.. இவளை தான் நான் காதலிக்கிறேன்.. நான் வரும்வரை கொஞ்சம் அவளே பார்த்துகொன்னு சொல்லிடு போனான்..”
“யாரு தீணா வா.. நீங்க ரெண்டு பேரும் காலேஜ்லே விக்ரம் வேதா வாசேடா.. அப்புறம் எப்படி உன்கிட்டே..”
“தெரியலே வந்து ஆபீஸ்லே சொல்லிடு போனான்.. இவளுக்கும் இன்னும் ஒன்னும் தெரியலே அவனே பத்தி.. சே காலைலே நா அவளே நல்ல திட்டி வேற விட்டிடேன்”
“என்னது திட்டுனியா” தண்ணீர் குடித்துக்கொண்டிருத்த ராஜுவிற்குப் புறை ஏறியது “என்னடா சொல்லுறே” உஹுயூஹ என்று தும்பி கொண்டே கேட்டான். தினமும் லலித்த்திடம் திட்டு வாங்கும் அவனுக்குத்தானே தெரியும் அது எவ்ளோ பெரிய வலின்னு.
“இல்லே டா அவ என் கிட்டே வந்து…”
“டேய் அவ உன் பொண்டாட்டி டா கிட்ட தானே வந்தா..”
“சே அப்படி சொல்லாதே இனிமே.. நான் அவள மலர் னு நினைச்சு திட்டிட்டேன்..”
“போடா டேய்” னு ராஜு தலையில் கையே வைத்துவிட்டான். அவனின் தொலைபேசி சினுங்க எடுத்தவன் சரிங்க மா இப்போ செய்றேன். ராஜூ கட் செய்யவும் லலித் எழுந்துகொள்ளவும்
“டேய் டேய் அம்மா”
“மூடு எனக்கும் கேட்டுச்சு”
“அவோலோ சத்தமாவா கேடுச்சு லலித்.. மச்சி நிலா கிட்ட..”
“சாரி எல்லாம் கேக்க முடியாது.. நீ போய் தீணா பற்றி விசாரி.. கோவிலே பார்க்கலாம்..” என்று லிப்ட் ஏறி சென்றவன் ரூமில் அவனது கி கொண்டு திறக்க பிங்க் கலர் சாரி தரையில் கிடக்க வெறும் பாவாடை ஜாக்கெட்டோடு அழகு சிற்பமாய் விழி அகல நின்றாள் அவன் மனைவி…
