என்னவன்
என்னவன் 24
‘எந்த ஒரு பெண்ணால் ஒரு ஆணின் கடந்த காலத்தை மறக்க வைக்க முடிகிறதோ.. அவள்தான் அந்த ஆணின் எதிர்காலம் ஆகிறாள்’
லலித் சந்திரன் – நம்ம கதையிலே ஆரம்பித்திலிருந்தே இவன் ஒரு புரியாத புதிர். நமது வீட்டில் அல்லது நடைமுறையில் பொதுவாக இப்படி புரிந்துகொள்ள முடியாத ஒரு ஆண் மகன் நம் வாழ்க்கையில் இருப்பாங்க. ஒரு அப்பா, மனைவியிடம் கோபக்காரரா, பெண் பிள்ளைகிட்டே நண்பனாய், ஆண் பிள்ளைகிட்டே கண்டிப்பானவரா அவரு என்ன கேரக்டர்னே புரிச்சிக்க முடியாம இருப்பாரு. ஒரு இளைஞன் நண்பர்களோடு விளையாட்டுதனமா இருத்தாலும் குடும்பத்தில ஒரு பொறுப்பானவனா இருப்பான். அவனுடைய உண்மை தேவை எதுன்னு நமக்கு புரியாது. நல்ல ஒரு திடமான தோற்றத்தோடு தெரியிற ஆண், மிக சாதாரணமா, இலகுவா கண்ணீர் வடிப்பாங்க. ரொம்ப சாந்தமானவனு நினைக்கும் ஆண், எப்போதாவது கோபம் வந்தால் இராவணன்னே தோற்று போய்டுவாரோனு தோணும். பொதுவா எல்லோருமே பொண்ணுங்க மனசிலே என்ன நினைக்கிறாங்கனு சொல்லுறது தான் கஷ்டம்னு சொல்லுவாங்க. என்னை கேட்டா ஒரு ஆணின் சுயம், சுபாவம் என்னனு சொல்லுறதும் கஷ்டம்தானு சொல்லுவேன்.
லலித்தும் அப்படித்தான்.. சின்ன வயதிலிருந்து போராடி தான் வாழ்க்கையிலே நல்ல நிலைமைக்கு வரணும்னுங்குறே தேவை அவனுக்கு இருந்ததில்லை. ஆனால் இருக்கும் நிலையை தற்கார்த்துக்கொண்டே மேலும் முன்னேறும் வெறி மட்டும் இருந்தது. அதற்காகவே படித்து தன்னிலையை முன்னிறுத்திக்கொண்டு வியாபார உலகத்தில் இளம்தொழிலதிபராக வலம்வந்தான். சில பணக்கார பிள்ளைகள்போல தரம்கெட்டுவிடாமல், முன்னேறி இருப்பதை நினைத்து அவன் தற்பெருமை கொண்டதுண்டு, காதலி என்று ஒருத்தி வந்து அவனை நிலைதடுமாற செய்யும்வரை. அதன் பின் ஒரு பெண்ணின் அன்பிற்கு தன்னை பலிகொடுக்கவும் பலியாகவும் அவன் தயாரில்லை. நிலாவின் கணவனாகும் வரை. அதை அவன் ராஜுவிடம் சொன்னபோது..
“சத்தியமா சொல்லுறேன் மச்சி, அன்னைக்கு தீணா வந்து அப்படி சாவல் விடும்போது நிலாவை அவன்கூட அனுப்பிவைக்குறே ஐடியாவே எனக்கு கொஞ்சம்கூட இல்லேடா”
“அப்புறம் என்ன டாஷ்க்குடா இப்போ அவளை பேக் பண்ணி அனுப்பிவச்சி இருக்கே?” என்று பொறுமையிழந்து பத்தாம்முறையாய் லலித்தை பார்த்து கேட்டான் ராஜு. காலையில் லலித்தும் ஆபீஸ் போகாமல் இவனையும் போக கூடாதென்று வீட்டிலையே இருக்க சொல்ல. மதியம் பீர் போத்தல்களோடு ராஜு வீட்டிற்கு வந்து தனது சாகச செயல்களை சொல்ல, ராஜுவிற்கு அதிர்ச்சியில் ஒரு போத்தல்ளோடு குடி நின்றுவிட்டது.
“இல்லடா இதுதான் சரி” என்று குவளை நிறைய இருந்த மதுவை ஒரே மூச்சில் முடித்துவைத்தான் லலித்.
“என் வாயிலே நல்ல வந்துடே போகுது. நீ சரியா இருந்து இருந்தா இந்த நிலைமையே வந்து இருக்காதுடா லலித். கொஞ்சமாச்சும் நிலா நிலைமையிலே இருந்து யோசிச்சு பார்த்தியா? நீ சரியான சுயநலம் புடிச்சவன்டா. உன் சுயநலத்துக்காக உன் பிசினஸ்காக அப்பா சொன்னாருன்னு புடிக்காமே அவளை கல்யாணம் பண்ணியே நீ தான் உலகத்துல..” இன்னும் என்ன என்னவோ பேச இருந்தவன் லலித் ஏதோ சொல்ல அமைதியானான்.
“..புடிச்சிதான் கல்யாணம்..” மெல்ல வாய் அசைத்தான் லலித். மது போதையில் அவன் உளறுவது போல் தோன்றியது.
“என்னடா.. சரியா விளங்கலே.. திரும்ப சொல்லு”
“எனக்கு புடிச்சிதான்டா கல்யாணம் பண்ணுனேன்” ராஜுவின் வீடே அதிர்ந்தது அவனின் குரலில். பின் மெதுவாக “எனக்கு அவள ரொம்ப பிடிக்கும் மச்சி.. ரொம்ப ரொம்ப புடிக்கும்.. இப்போ மட்டுமில்லே சின்ன வயசுலிருந்தே” போதையில் அவன் மனதிலிருந்தவற்றை வெளியே சொல்ல, அதை லலித் அறியாமல் காணொளி எடுத்தான் ராஜு.
“என்னடா சொல்லுறே தெளிவா சொல்லு”
“ஆமாடா.. எனக்கு சின்ன வயசுலிருந்தே நிலாவை ரொம்ப பிடிக்கும். கொலுசு போட்டு எங்க வீட்டையே சுத்தி சுத்தி வருவா பாரு.. பச்… எங்க அம்மாகிட்டே அவ கொஞ்சி கொஞ்சி பேசுவா, அப்படியே அள்ளி கொஞ்ச சொல்லும். அவள பார்க்கத்தான் அமைதி, ஆனா சரியான வாயாடி. எங்க கல்யாணத்துக்கு அப்புறம் அவ வாயடிக்கிறதா பார்க்கவே நான் அவள வம்பிழுப்பேன். முன்னவே அவ உன்கூட வம்சிகூட பழகுற மாதிரி என்கிட்டையும் பழகியிருந்தா நான் தான் அவளோடு பெஸ்ட் பிரண்டா இருந்து இருப்பேன் இப்போ. அந்த தீணா எல்லாம் கிட்டகூட வந்திருக்கமாட்டான்” லலித் எரிச்சலாய் கூறிட..
“அப்ப கூட பிரண்ட்ஸ்தான் ஆகி இருப்பிங்களா?” ராஜு அவனை உசுப்பேற்றினான்.
“நோ வேய்.. காலேஜிலே அவ அழகை பார்த்துமாடா இப்படி கேக்குறே? உனக்கு இந்த ஜென்மத்துலே கல்யாணம் ஆகாது மச்சி”
“எனக்கா.. நல்லது தான்.. உன்ன மாதிரி கல்யாணம் பண்ணி பொண்டாட்டியை அம்மா வீட்டுக்கு அனுப்பிவைக்குறே மாதிரி முன்னாள் காதலன் கூட அனுப்பி வைக்கிறதுக்கு.. இப்படி தனி ஆளாவே இருக்கலாம்”
“ஆமா அவ போயிட்டா.. நானே அவளை அனுப்பி வைச்சிட்டேன்” மீண்டும் லலித் மதுவை குடிக்க..
“சரி சொல்லுடா.. ஏன் நீ லவ் பண்ணுறதை காலேஜ் படிக்கும் போதே சொல்லலே?”
“இப்பவும் அதே சந்தேகமடா உனக்கு. அதன் நிலாவை அனுப்பிவைச்சிட்டியா?” விடாமல் கேட்டுகொண்டே இருந்தான் ராஜு.
“இல்லேடா இப்போ நான் அவளை ரொம்ப லவ் பண்ணுறதுனாலே அனுப்பிவைசேன்”
இவனுக்கு போதை ரொம்ப ஏகிறிடுசோ என்று அவனை உத்து பார்த்தான் ராஜு.
“அப்படி பார்க்காதேடா.. உண்மையை தான் சொல்லுறேன். உனக்கு தான் என்னை பத்தி எல்லாமே தெரியும். அதன் இன்னைக்கே எல்லாத்தையும் சொல்லிடுறேன். அப்போ தான் எனக்கு இந்த வலி இங்கே குறையும்” தன் நெஞ்சில் கையை வைத்து சொல்லும் நண்பனை பார்க்க பரிதாபமாக இருந்தது ராஜுவிற்கு.
“மகா விசயத்துல நான் அப்செட் ஆகி, என் கோபத்தை கட்டுப்படுத்த முடியாம பொண்ணுங்ககிட்டே சில்மிஷம் பண்ண ஆரம்பிச்சி அதுவே எனக்கு ஒரு ஹாபிட் ஆச்சு. நிலாவையும் அப்படி கஷ்டப்படுத்த..”
“டாமின்ட்.. லூசாடா நீ.. அதுக்கு தான் நீ சைகோலொஜிக்கலா டாக்டர்கிட்ட கல்யாணத்துக்கு முன்ன இருந்து டிரீட்மென்ட் எடுக்குறியே. இப்போ கூட நல்ல மனநிலையே இருக்கேனு சொன்னியேடா” ராஜு அதீத கோபத்தில் கேக்க..
“நானும் அப்படி தான்டா நினைசேன். நான் இன்னும் மாறவே இல்லைடா.. தீணா மறுபடியும் வந்தவுடன் தான் எனக்கே அது தெரிச்சதுடா.. அப்போ கூட நான் என் மைன்டை கண்ட்ரோல் பண்ணேன் ராஜு. தீணாவும் நிலாவும் நல்ல பிரண்ட்ஸ்னு என் மனசுலே புரியது. அதை.. அதையும் மீறி நான் அவ கூட இருக்கும் போது அவங்க.. அவங்க ரெண்டு பேரையும் தப்ப நினைச்சி அவளை… என்னையே அறியாம நிலாவை நான் ஹார்ட்டா… அவளுக்கு என்நிலைமை கூட புரியாம பொறுத்து போறா. எல்லாம் முடிச்சதும் தான் வலிக்குதுனு அவ சொல்லுறது கூட என் காதுலே விழுது. தீணா சொன்ன மாதிரி எனக்கு கோபம் வந்தா அவளை நான்…” உடைந்து அழுந்தான் லலித்.
தாங்க முடியாமல் லலித்தை வந்து ராஜு அணைத்துக்கொள்ள “நீ போ நிலா.. நீ போயிடு.. நான் உனக்கு வேணாம். என்னாலே உன்னை சந்தோசமா வைச்சிக்க முடியாது. நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேன். அதுனாலே தான் நீ இத்தனை நாள் கல்யாண வாழ்க்கையிலே என்னை பிடிக்கும்னு ஒரு தடவை கூட சொன்னதில்லை. உன் வாயாலே ஐ லவ் யு னு கேக்க எனக்குக் கொடுத்துவைக்கல. நீ போயிடு நிலா.. உனக்கு நான் வேணாம்” இதையே திரும்ப திரும்ப சொல்லி ராஜு கைகளிலே மயங்கி போனான் லலித்.
Info :
நாசீசிச ஆளுமைக் குறைபாடு (Narcissistic personality disorder) என்பது நீண்ட காலமாக மனிதருக்குள் நிகழக்கூடிய ஆளுமைச் சிதைவு ஆகும். இந்தக் குறைபாடு உள்ளவர்கள் தங்களின் சுய உணர்வுகளுக்கு (நம்ம லலித் மாதிரி சந்தேக உணர்வு) அதிக முக்கியத்துவம் தருபவர்களாகவும், அதிகமாக பாராட்டுகளை விரும்புபவர்களாகவும், மற்றவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யாமலும் இருப்பார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றியோ, வெற்றியை அடைவது பற்றியோ, அவர்களின் தோற்றத்தைப் பற்றியோ சிந்திப்பதில் நிறைய நேரம் செலவிடுவார்கள். அவர்கள் பெரும்பாலும் அவர்களைச் சுற்றியுள்ள மக்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவார்கள். இந்த நடத்தை பொதுவாக ஒருவரின் இளமைக்காலத்தில் ஆரம்பித்து பல்வேறு சமூக சூழ்நிலைகளின் காரணமாக வெளிப்படுகிறது.
நாசீசிச ஆளுமைக் குறைபாடிற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. குறைபாடு உள்ளவராகக் கருதப்படும் நபரை மருத்துவ நிபுணர்கள் நேர்காணல் செய்வது மூலம் பாதிகப்பட்டுள்ளாரா என்பது கண்டறியப்படுகிறது. குறைபாடு கொண்டிருக்கும் நபர்கள் தங்களிடம் ஒரு பிரச்சனை இருப்பதாக கருதிக் கொள்ளாததால், சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது. சுமார் ஒரு சதவீத மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் இந்த குறைபாட்டிற்கு பாதிக்கப்படுகின்றனர். இது பெண்களை விட ஆண்களில் அடிக்கடி வெளிப்படுகிறது மேலும் இது முதியவர்களைவிட இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது.
