என்னவன்

This entry is part 5 of 22 in the series என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன் – 6 

‘விதைகள் இன்றி முளைக்கும் காளான் போல மனித வாழ்க்கையில் காமம்’
லலித்தின் அம்மா கொடுத்த சாரீயை நிலாவால் பாத்ரூமில் அணிய முடியவில்லை. லலித் அறையில் இல்லாத தைரியத்தில் அசல்டாகவே உடுத்திக்கொண்டித்தவள், கதவை உள்ளிருந்து லாக் செய்ய மறந்துவிட, இப்போது தன் மேனி லலித்க்கு விருந்தாக காட்சி அளிக்கப்படுகிறது. எதை கொண்டு எதை மறைப்பதென நிலா தடுமாறியது சிறிது நேரம்தான். சிட்டென கீழே குனிந்து அவளின் புடவையை எடுத்து லலித்தின் கண் பார்வையிலிருந்து மறைந்து நின்றாள். 
ஏற்கனவே அரைகுறையோடு தெரிந்த அழகு அவள் குனிந்து புடவை எடுக்கிறேன் என்று கொஞ்சம் கூடுதலாகவே குலுங்க, லலித் கானல் நீராக அவள் மறையும் வரை தன்னிலையில் இல்லை. அடி வயிற்றில் எதோ செய்த்தது. இது ஒன்றும் நீ காணாத ஒன்றும் இல்லைடா.. வெளியே போடா கொரங்கு தன் மனசாட்சியின் குரலில் திரும்பி வெளியேறும் முன் ” நான் வெளியே இருக்கேன், நீ ரெடி ஆனோனே சொல்” திணறி அவளின் பதில் கேக்கும் முன் கதவரையை மூடி வெளியேறினான். 
‘சே அவ என்ன நினைச்சி இருப்பா.. அப்படியே காணாததைக் கண்டது மாதிரி நின்னேனே.. ஏன்டா…’ முதலில் இப்படி சங்கடப்பட்டவன், பின்பு 
 
‘சே என் மேல என்ன தப்பு.. லாக் போடாமே விட்டது அவ.. கொஞ்சமும் அறிவு இல்லே.. இந்த பொண்ணுங்க புத்தியே இப்படி தான்.. எவன் டா மசியுவாங்கேனு அலைவாளுங்க..’
அவனும் அவனின் சிந்தனையும்.
மீண்டும் கதவு திறக்க, மீண்டும் லலித் சுயம் இழந்தான். பிங்க் வண்ண தேவதையாக அளவான மேக் அப் அணிந்து கூந்தல் காற்றில் பறக்க வந்தவளை பார்த்து ‘இதுமாதிரி முன்னபின்ன கண்டதில்லை தான்’ அவனுக்குலேயே பதிலுரைத்தான். அவள் திரும்பி உள்ள செல்ல எத்தனிக்க அவளின் முந்தானையை பிடித்து இழுத்தான். அவனின் திடீர் செய்கையில் தடுமாறி போனவளின் கைகள் தன்னாலே அவனின் தோள்களைப் பற்ற, இடையின் ஓரம் லலித்தின் கரங்கள் ஆளுமை கொண்டன. திகைத்து அவனின் முகம் நோக்கியவளின் இதழ்கள் நொடிப்பொழுதில் கவ்வப்பட்டது. 
“லலித் உள்ள வாங்க” நிலாவின் குரல். 
“ஆங்”
“நான் ரெடி ஆகிட்டேன், நீங்க போய் சீக்கிரம் கிளம்பி வாங்க. எல்லோரும் நமக்காக தான் வைட்டிங்” 
திரு திருவென முழித்தவன் “ஹ்ம்ம் சரி சரி” என்று அசடு வலிய உள்ளே போனான். அவனின் தலையை ஒரு கையால் அடித்து கொண்டே சென்றவனை பகல் கனவோ என்று சரியாக கணித்தாள் நிலா.
10 நிமிடத்தில் அறையை காலி செய்து, புதுமணத்தம்பதிகள் ஒன்றாக லாபிக்கு வர, அவர்களின் அழகு பொருத்தம் இருவரின் பெற்றோர்களையும், பெருமைப்படுத்த வைத்தது. அங்கிருந்து கோவில் பரிகாரம், மதிய உணவு எல்லாம் முடித்து லலித் சந்திராவின் தந்தை கேசவன் வீட்டிற்கு வர மதியம் 3 க்கு மேல் ஆனது. லலித் நிலா இருவருக்கும் நேற்றை விட கொஞ்சம் தளர்த்த மனநிலை தான். அறையில் நிகழ்ந்தவை சற்று அவர்கள் முகத்தில் சிவப்பேற ஒருவரை ஒருவர் விழி நோக்குவதை தவிர்த்தனர். 
“வலது கால் வச்சு வாம்மா” வள்ளி மாமியாராய் சொல்ல.
“என்னமோ இது தான் அவங்க முதல் தடவை வர மாதிரி சொல்லுறீங்க மா” கேட்டது வம்சி சந்திரன், லலித் சந்திரன் தம்பி. லலித்தைவிட வம்சி நிலாவிடம் நிறைய பேசி பழகி இருந்தான்.
“டேய் இனி அவளை அண்ணினு கூப்பிடு பழகு. ரெண்டு பேரும் ஒரே வயசு ஈடு தான்” வள்ளி. 
வம்சி வாய் திறக்குமுன் “அம்மா இன்னும் என்ன என்ன தான் இருக்கு எனக்கு வேலை இருக்கு இதுக்கு மேல இங்கே இருக்க எல்லாம் சொல்லாதீங்க. நான் என் வீட்டுக்கு போய் தான் ஆகணும்” சொன்னவன் லலித். 
“இருடா.. இப்போ விளக்கே கொளுத்தி சாமி கும்பிட்ட இப்போதைக்கு ஒண்ணுமில்லை. ஆனா நைட் நிலா சமைச்சு நாம எல்லோருக்கும் விருந்து தரணும், இது எங்க குடும்பத்தோட வழக்கம் மருமகளே” 
நிலா அதற்கு ஒன்றும் அதிர்ச்சியாகவில்லை, ஆனா லலித் சொன்ன என் வீட்டுக்கு போகணும் தான் அதிர்ச்சியா இருந்தது. 
லலித் “அம்மா அதுவரைக்கு எல்லாம் இங்கே என்னாலே..” என்று தொடங்க.. கேசவன் “லலித் நைட் நிலா சமைச்சி விருந்து தந்த எல்லா சம்பிரதாயமும் முடிந்தது. அப்புறம் நீ அவள கூட்டிட்டு உன் வீட்டுக்கு போகலாம் இல்லை ஒரு நாள் தங்கிட்டு நாளைக்கு போங்க. எது உனக்கு வசதி?”
பூஜையறையில் விளக்கேற்றி வந்த நிலாவிடம் “உனக்கு சமைக்க தெரியுமா?” சத்தமாகவே கேட்டான் லலித். தெரியுமென தலையை மட்டுமே அசைத்த நிலாவை நோக்கி. “சரி எனக்கு வேலை இருக்கு நைட் வந்துடுவேன்.. நாம கிளம்பலாம்,” தந்தை மேலுள்ள எரிச்சலை குரல் வழியே அவளுக்கு காட்டி வெளியேறினான் லலித். 
“சம்பந்தி, அப்போ நாங்களும் கிளம்புறோம்.” இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த நிலாவின் அம்மா சொல்ல. “நீங்களும் இருந்து நைட் சாப்பிடு போங்க” வள்ளி சொல்லிக்கொண்டே நிலாவை பார்க்க, “அம்மா அப்பா இன்னும் கொஞ்சம் நேரம் இருங்களேன்”.
“சரி அம்மாடி. நீ போய் ரெஸ்ட் எடு அப்பா அங்கிள் கூட வெளியே போயிடு வரேன்” நிலா அப்பா.
“அதுவும் சரிதான் நானும் சிவகாமியும் பேச நிறைய இருக்கு. நீ வாம்மா லலித் ரூம் போலாம்”
“அம்மா நான் கூட்டிபோறேன் அண்ணீயை” அழுத்தி சொன்னான் வம்சி. எல்லோரும் அதுலையே சிரிக்க சற்று முன் உள்ள அழுத்தம் காணாமல் போனது.
மாடி ஏறி ஓர் அறைமுன் நின்ற வம்சி “அண்ணீ கதவு திறந்து தான் இருக்கு உள்ளே போங்க,”
“வம்சி நிலானே கூப்பிடு ப்ளீஸ்”
“எனக்கும் நல்ல இல்ல தான் அண்ணி என்ன செய்ய” சிரித்து வைத்தான் வம்சி. 
லலித்தும் இப்படி சிரிச்ச நல்ல இருக்கும்லே. முன்பெல்லாம் இப்படி நினைத்தது உண்டு. இன்று என்னோ அத்தியாவசியம் என்று தோன்றியது நிலாவிற்கு.   
“என்ன நிலா” 
“இல்லே வம்சி, அவருக்கு தனி வீடா? எங்கே இருக்கு?”
“உனக்கு தெரியாதா? ECR லே ஒரு தனி வீடு இருக்கு ஆனா அங்கே போறது குறைவு. அப்பா கல்யாணம் கண்டிப்பா பண்ணனும்னு சொன்னதும், கல்யாணம் முடிஞசு அங்கே போயிருவேன். என்ன தடுக்காதிங்கே சொல்லிட்டான்”
‘என்னமோ காதல் பண்ணி கல்யாணம் கட்டுனது மாதிரி தனி குடுத்தனமெல்லாம் கேட்டு இருக்கான்’ மனதில் பொறிந்தாள் நிலா.
❤️ Thank You So Much Readers ❤️ Keep on energies me with your comments and likes ❤️ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *