என்னவன்

This entry is part 6 of 22 in the series என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்–
7

 

‘உன்னில் கலந்தவளைப்
பேணுதல்
நன்று
உடலுயிர்
தந்தார்க்க
டுத்து
!’

 

லலித்தின்
அறை.

சிறுவதிலிருந்து
இங்கு வந்து இருத்தாலும் இதுதான் முதல் முறை நிலா இவ்வறைக்கு  வருவது.
‘என் அறையை விட பெரிசு தான்‘
மனதிலே நினைத்து கொண்டாள். பெரிய கட்டில், அகன்ற பால்கனி என்று நேற்றைய ஹோட்டல் ரூமை விட நன்றாக
இருந்தது. இங்கு சோபா இல்லை. ‘நல்லவேளை
நைட் அவர் வீட்டுக்கு போறோம்
இல்லாட்டி இங்கே எப்படி ஒரே கட்டில்லே..’ என்று
பெருமூச்சை விட்டவள், ‘அங்கே போனா தனி ரூம்
இருக்குமா இல்லே வெளியவே படுக்க சொன்னா, சொன்னாலும் சொல்லுவாரு.. ஒரு கை பட்டதுக்கே
அந்த கதறல்.. இறைவா அவர் பக்கத்துலே கூட
போகமே இருக்கனும் இனிமே‘. (நாங்களும் பார்க்க தானே போறோம் பஞ்சும்
நெருப்பும் எப்படி இருப்பிங்கனு).

 

உடல்
சோர்வை நீக்க கட்டிலில் சாய்த்தவள் உடனே போன் எடுத்து
ஈமெயில் எதுவும் வந்துள்ளதா என்று பார்த்தாள். தீணா தொலைபேசி 6 
மாதமாக செயல் இழந்து போக அவன் ஈமெயில்
வராத என்று தான் தினமும் பார்ப்பாள்.
தீணாவும் நிலாவும் ஒரே காலேஜ். இவர்களோடு
சேர்த்து 10 ,15 பேர்கள் ஒன்றாகவே இருப்பார்கள். படிப்பிலும் கெட்டி, கொட்டம் அடிப்பதிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே. நிலாவின் அப்பா கொஞ்சம் கண்டிப்பு என்பதால் சில வேளைகளில் மட்டுமே
இவர்களோடு பழகுவாள் நிலா. அவளின் அடக்கமான குணம் எல்லோருக்கும் பிடிக்கும்.

 

காலேஜ்
முடிந்து சில மாதங்கள் சென்று
எல்லோரும் கேட் டு கெதர்
ஒன்றில் சந்திக்க, தீணா அவனின் காதலை
கண்களின் வழியே நிலாவிற்குக் கடத்தினான். எல்லோரும் அவர்களின் எதிர்கால திட்டத்தை தெரிவிக்க தீணா “நான் நாளை ஆஸ்திரேலியா
போகிறேன்” என்றான். எல்லோரும் வாழ்த்து கூறி அவனை மறுநாள்
ஏர்போர்ட்டில் வழியனுப்ப காத்திருந்தனர். அன்று பார்ட்டி முடிவில் நிலாவை தனியாக சந்திதவன், அவளை வெகு நாட்களாக
காதலிப்பதாகவும் அனாதையான அவனை அவளின் பணக்கார
ஈடுக்கு வளர்த்துக்கொள்ள  படிப்பும்
வேலையும் தேடி ஆஸ்திரேலியா செல்வதாகவும்
சொல்ல, நிலா அவனின் எதிர்பாரா அன்பில் திக்கு முக்காகி போனாள்.

 

அவளுக்கு
தீணாவை நண்பனாக மிகவும் பிடிக்கும். அனாதை ஆசிரமத்தில் வளர்த்து ஸ்கூலர்ஷிப்பில் படித்து இப்போது வெளிநாடு சென்று படிக்கும் அளவுக்கு முன்னேறியது எல்லாம் அவர்பால் ஒரு மரியாதையைக் கொடுத்தது.
ஆனால் இதுவரை காதல் இல்லை. இன்று தனக்காக அவன் வாழ்வு நிலையை
உயர்த்த எண்ணிய அவனின் அன்பு அவளை பாதித்தது. தீணாவும்
அதை புரிந்து “நான் வரும் வரை
நீ காத்து இருப்பேன்னு நம்புறேன். அடிக்கடி கால் மெசேஜ் செய்”
என்று அவளிடம் இருந்து பிரிந்து சென்றான்.

 

அதன்
பின் அடிக்கடி தொலைபேசியில் இருவரும் உரையாடுவார்கள். படிப்பு, குடும்பம், நாட்டு நடப்பு என்றே அவர்கள் உரையாடல் இருக்கும். இன்னும் சில மாதத்தில் படிப்பு
முடித்து வேலைக்கு சென்றவுடன் வந்து பெண் கேட்டு வர பிளான் எல்லாம்
நடந்தது. ஆனால் திடீரென அவனிடம் இருந்து தொடர்பு இல்லாமல் போக ஏதோ நெருடலாக
இருந்தது நிலாவிற்கு. அவனின் யூனிவர்சிட்டி மற்றும் வேலை செய்யும் இடங்களில்
அவனைப் பற்றி விசாரிக்க பதில் எதுவும் இல்லாமல் தவித்து போனாள். நண்பர்கள் யாரோடும் அவன் தொடர்ப்பில்லையென கைவிரித்தனர்.
ஏனெனின் இவர்கள் விரும்புவது அவர்களுக்குத் தெரியாது.  யாரோடும்
உதவி கேக்க முடியாமலும் செய்வதறியாமல் முடங்கி போனாள். இன்றுவரை அவனைப் பற்றி எதுவும் தெரியாமல், தந்தை உடல்நலத்திற்காக நேற்று திருமணம்.

 

லலித்
அறை கடிகாரம் இசைக்க எழுந்து முகம் அலுப்பியவள் சமைக்க ஆயுதமானாள். அம்மா மாமியார் மற்றும் சில சமையல் ஆட்கள்
இருக்க இவளுக்குத் தெரிந்ததை சமைத்தாள். எல்லாம் முடித்து எல்லோரும் குளித்து சாப்பிட ஒன்று கூடிய நேரம் லலித் வீட்டிற்கு வந்தான். “வாடா லலித்.. வந்து
உக்காரு.. உனக்காக தான் எல்லோரும் வைட்டிங்
மாப்பிள.. வா சாப்பிடலாம்” எல்லோரும் ஒன்றுசேர்த்து
அழைக்க அவனும் டேபிளில் அமர்த்தான். எல்லோருக்கும் தன் மருதாணி கையிலையே
பரிமாறியவளை,

 

“நிலா
நீயும் லலித் பக்கத்திலே உக்காரு மா. மீதி வேலையை
ஆட்கள்
பார்த்துப்பாங்க,”
நிலாவிற்கு நிறைய வேலைகள் செய்த்ததால் வந்த பசி பின்
வீடு வாசல் கதவு வழியே ஓடி
போனது. இவனுக்கு பக்கத்திலா என்று பார்க்க லலித் கைதொலைப்பேசியை நோண்டிக்கொண்டிருந்தான்.

 

“நிலா
வந்து உக்காரு” வம்சி.

 

“வம்சி
அண்ணி சொல்லி பழகு” வள்ளி.

 

“எனக்கு
வரலே மா. நிலாவும் பேர்
சொல்லி தான் கூப்பிட சொன்னா“

 

“வம்சி..
சொல்லுறதே கேளு” கேசவன் குரல் பலமாய் ஒலிக்க, நிலா தன்னாலே சென்று லலித் அருகே அமர்த்தாள்.

 

எல்லோரும்
சாப்பிட ஆரம்பிக்க “லலித் போன் அப்புறம் பார்க்கலாம்.
உன் பொண்டாட்டி அருமையா சமைச்சி இருக்கா. சாப்பிடு டா” அம்மாவின் குரலில் அருகேயுள்ள மனைவியை பார்க்க நான் பார்க்க மாட்டேனே
என்று குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டாள்
நிலா.

 

லலித்
உட்பட எல்லோரும் விரும்பி சாப்பிடுவதை பார்த்தவளுக்கு சந்தோசமே. ஒவ்வொருவரும் சாப்பிடு முடித்து அவளின் ஒரு ஒரு வகை
உணவும் அருமை என பாராட்டினார். “அண்ணா நீ
ஒண்ணுமே சொல்லலே” வம்சியை முறைத்துவிட்டு “எல்லாமே நல்ல இருக்கு,” என்பதோடு  முடித்தான்
லலித்
.

 

“அம்மா
நிலா, இது என் பரிசு.
எங்க முறைபடி முதல் முதல மருமகள் சமைச்ச
சாப்பாடுக்கு பரிசு தருவோம்” என்று நகை பெட்டி ஒன்றை
தந்தனர் கேசவன் வள்ளி. ஆசிர்வாதம் வாங்கி பெற்றுக்கொண்டாள்.

“உங்கே
ரெண்டு பேர் மேலையும் கண்ணாரு
அம்மாடி.. வா அப்பா உங்களை
சுத்திபோட்டு பணம் தரேன்” என்று
பணம் தந்தனர் குணசேகரன் சிவகாமி தம்பதியனர்.

“அண்ணி,
என்னுடைய பங்கு.. சாப்பாடு செம்ம” என்று தோட்டத்திலிருந்து ரோஜா ஒன்றை தந்தான்
வம்சி. இதழில் அகலாமல் சிரிப்பை ஒட்டிக் கொண்டே எல்லோருக்கும் நன்றி சொன்னாள் நிலா.

 

“அண்ணா
நீ என்ன தர போறே,”
கேள்வி கேட்ட வம்சி லலித்த்தின்
முறைப்பை மீண்டும் சம்பாதிக்க, நிலாவின் சிரிப்பும் ஓடி போனது.

 

“லலித்
உனக்கு இந்த சடங்கு பற்றி
தெரியும் தானே.. எங்கடா பரிசு?” வள்ளி எரியும் தீயில் பற்ற வைத்தார்.

 

“அம்மா
மறந்துட்டேன். நாளைக்கு நானே அவளுக்கு வாங்கி
தரேன்” லலித்.

 

“முடியாது
முடியாது. நானும் தான் மறந்தேன். இப்போ
ரோஜா கொடுத்து அழகா சமாளிக்கல” வம்சி
விடாமல் தொல்லை செய்ய.

 

“அவனே
ஏதாவது செய்ய சொல்லு வள்ளி, இது நம்ம குடும்ப பழக்கம்.
எது தான் ஐயா நாமே
சொல்லுறதே கேப்பாரு. சம்பதிங்கே முன்னே மானம் போகுது” கேசவன்.

 

“ஏன்பா
அவரை இப்படி திட்டுறே. அதன் நாளைக்கு தரேன்
சொல்லுறாரு லே. விட்டேன் கேசவா..”
குணசேகரன்.

 

“அண்ணா
இது முடியாது. பேசாமே நீ அண்ணிக்கு ஒரு
கிஸ் பண்ணி முடிச்சிவச்சிரு. இல்லே அப்பா உன்னே இன்று வீட்டுலையே தங்க சொல்ல போறாரு”
என்று யாருக்குமே தோன்றாத எண்ணங்களை வம்சி சொல்லி வைக்க.

 

“எல்லாமே
உன்னாலே தான் டா ஆரம்பிச்சது.
இப்பவும் நீயே அப்பாக்கு சொல்லி
தர பாரு,” என்று லலித் எழுந்து வந்து நிலா பக்கவாக்கில் நின்று
அவளின் தாடையில் கை வைத்து மேல்
தூக்கி, குனிந்து அவள் கன்னத்தில் அவனின் இதழை அழகாய் பதித்தான்.

 

இதுவரை
என்னமோ பேசுறாங்க என்று இருந்த நிலா தன் கன்னத்தில்
அவனின் குளிர்ந்த இதழ் பட இதயத்தில் oxygen பதிலாக  குளிர் காற்று
பரவி ரத்தமெல்லாம் பனிக்கட்டியாக உருகுவதை போல் உணர்த்தாள்.

 

“ஐயோ
அண்ணா நான் சொன்னது அண்ணியோடே
கையிலே முத்தம் தரச்சொல்லி. சே சின்ன பையனை
வைச்சிகிட்டு என்ன என்ன பண்ணுறான்
பாருங்க” என்று வம்சி எழுந்து அவ்விடதை காலி செய்தான்.

 

லலித்
நெகிழ்ந்து தலையை சொரிந்த படி செல்ல,பெற்றோர்தம்பதியனர்
மௌனமாக சிரிக்க, நிலா மெல்ல எழுந்து
கிட்சன் சென்றாள். அங்கேயும் சமையல்காரர்கள் புன்முறுவல் அளிக்க, வேகமாய் கை கழுவி மாடிபடி
ஏறிமாடிக்கு சென்றாள்.அங்கே லலித் கிளம்ப தயாராகி கொண்டிருந்தான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *