உயிர் கோர்த்து வாழ வா
உயிர் கோர்த்து வாழ வா – 20
கதையை சொல்லி முடித்த விஜய், “இப்போ புரியுதா உனக்கு கணேஷோட வார்த்தைக்கெல்லாம் அர்த்தம்? அவன் பேசியது தப்பு தான். ஆனால் அவன் மேல கோபப்படாதே மா” என்றான்!
“அண்ணா இந்த கதையை கேட்ட எனக்கே அவர் லவ்வே பண்ணலை, சும்மா அந்த பொண்ணு கூட இருந்து இருக்கார்னு புரியுது! இத்தனை வருஷத்தில ஒரு தடவை கூடவா அது உங்க ப்ரண்ட்க்கு புரியலை!!??”
“அது அவனுக்கும் தெரியும் மா, அது இல்லை அவன் பிரச்சனை. ஏமாத்துட்டேன்…. முட்டாளா இருந்துட்டேன்…. இனி திரும்ப ஒரு பொண்ணு கிட்ட என் வாழ்க்கையை குடுக்க மாட்டேன் அப்படினே சொல்றான்!”
“இப்படி ஒரு ஆளை நான் எப்படி கரெக்ட் பண்ண போறேன்? நான் ஏதோ ரொம்ப அழகான லவ் ஸ்டோரி சொல்ல போறீங்க, நம்ம சின்ன இதயம் அதை தாங்காதுனு பயந்து கிட்டே இருந்தேன். கடைசியில், குரலை இறக்கியவள் இது அந்த பொண்ணோட மேட்டர் ஸ்டோரியால இருக்கு” என்று வாயை பொத்தி காட்டினாள்.
“ஹாஹா! நீ தான் மா அவனுக்கு ஏத்த ஆளு! இனி நீயாச்சு அவனாச்சு! உனக்கு என்ன ஹெல்ப் வேணுமோ சொல்லு! நான் செய்யுறேன். அவன் உன்னை விரும்புறான், ஆனால் அதை ஒத்துக்கவே மாட்டான். இல்லனா யாருக்கிட்டயும் பெரிசா ஒட்டாத ஆளு உன்கிட்ட மட்டும் ஏன் அவ்ளோ கோபப்படணும்? எப்படியாச்சும் சீக்கிரம் அவனை உனக்கு புருஷன் ஆக்கிடு மா” என்றான் விஜய்.
“கண்டிப்பா அண்ணா” என்றவளுக்கு அவன் வார்த்தைகளால் மிகுந்த கோபம் இருந்தது. யாரோ ஒருத்தி எதையோ பண்ணினத்துக்கு இவர் என்னை எதுக்கு அசிங்கமா கேட்டார்? அவ கிட்ட எதையும் கேட்காம இருந்துட்டு என் மேல் பாய்ஞ்சு இருக்கார். எனக்கு ஒரு நேரம் வரப்போ சும்மா விட மாட்டேன்! இதுக்கு எல்லாம் சேர்த்து இருக்கு என்று சொல்லிக் கொண்டாள்.
“அவனை போய் பார்ப்போமா? நிச்சயமா உன்னை திட்டிட்டு ஏதாவது தப்பா தான் யோசிப்பான்” என்றான் நண்பனை தெரிந்தவனாக விஜய்.
“இன்னைக்கு வேண்டாம் அண்ணா! மூணு நாள் நான் லீவ் போட்டு ஊருக்கு போக போறேன். வந்து உங்க பிரண்டை ஒரு வழி பண்றேன் பாருங்க” என்றாள் பாவை.
அருணிடம் மூன்று நாள் லீவு சொல்லிவிட்டு சனி ஞாயிறு சேர்த்து ஐந்து நாள் ஊரில் அம்மா அப்பாவுடன் செல்லம் கொஞ்சி விட்டு வந்தாள் பாவை.
ஊரில் இருந்த பொழுது எல்லாம் அவனை விட்டு தூரமாக இருந்ததாலோ என்னவோ மனதில் அவன் மீது இருந்த கோபம் போய் அவன் கொடுத்த முத்தம் தான் நினைவில் வந்தது. அப்போ நான் தான் என் ரசகுல்லாவுக்கு பர்ஸ்ட் லவ். பர்ஸ்ட் கிஸ்ஸும் என்கிட்ட தான் என்று சந்தோஷப் பட்டுக் கொண்டாள் பாவை.
அவளை திட்டிய அன்றிரவு முழுவதும் கணேஷால் தூங்கவே முடியவில்லை. அவனுடைய ஆத்திரம் எல்லாம் அடங்கிய பிறகு அவள் மேல் ஒன்றும் தப்பில்லை என்று புரிந்தது. நவீன் கேட்டத்திற்கு அவள் என்ன செய்வாள்! (ஹான் இப்போ சொல்ற மனசு அப்போ எங்க போச்சு! (தையா தையானு குதிச்சு முடிச்சு பொறுமையா யோசிச்சு நீங்க சொன்னா எப்படி டாக்டர்?)
ஆனால் அதே சமயம் இவ்ளோ விளையாட்டு பொண்ணா இருக்க அவகிட்ட போய் நான் சறுக்கி இருக்கேனே! இப்போ லவ்னு சொல்லி அப்புறம் இல்லைனு சொல்ல மாட்டானு என்ன நிச்சயம் என்று பயந்தான் கணேஷ். அவளை விரும்பும் ரகசியம் என்னோடு மட்டும் இருக்கட்டும். அவளிடம் சொல்லி அசிங்கப்பட்டு விடக் கூடாது என்று நினைத்தான்.
மறுநாள் காலையிலே எழுந்து சீக்கிரமாக ஹாஸ்பிடல் வந்தவன் மாடியில் நின்று வழி மேல் விழி வைத்து பாவை வருகிறாளா என்று ரோட்டில் கவனமாக இருந்தான். பாவை வரும் நேரம் தாண்டிட இருப்பு கொள்ளவில்லை அவனுக்கு. விஜய்யை அழைத்துக் கேட்கலாமா என்று நினைத்தவன், தன் ரகசியத்தை கண்டு பிடித்து விடுவான் என்று நினைத்து தவிர்த்தான்.
அவன் ரௌண்ட்ஸ் போக நேரம் ஆக, அருணை அழைத்து தன்னுடன் வருமாறு அழைத்தான். ரௌண்டஸ் எல்லாம் முடிந்து வரும் போது அருணே கணேஷிடம் சொன்னான்.
சார், பாவை த்ரீ டேஸ் லீவ். ப்ரோபேஷன் பீரியட் முடிஞ்சதால நான் இன்போர்ம் பண்ணிடுறேன் சொல்லிட்டேன்.
“ஓ! என்ன ரீசன்? ஐ மீன் எனி ஹெல்த் இஸ்யூ?” எதுவும் பீவரோ உள்ளுக்குள் பதறியது டாக்டருக்கு!
“இல்லை சார்! ஊருக்கு போறாங்களாம்!”
“ஓ! ஓக்கே! ஒபி மேனேஜ் பண்ணிடலாம் தானே?” கண்டிப்பா தன்னால் தான் ஊருக்கு போய்விட்டாள் என்று வருந்தினான் கணேஷ்.
“எஸ் சார். அதெல்லம் ஒன்னும் ப்ரோப்ளேம் இல்லை.”
மேனேஜ் பண்ணிடலாமா என்று கேட்டவனால் தான் மேனேஜ் பண்ண முடியவில்லை. எங்கு திரும்பினாலும் அவள் ஞாபகம் தான். வீட்டிற்கு சென்றால் அவளை முத்தமிட்ட நினைவு அவனை வாட்டியது. அவள் முகத்தை பார்க்காமல் அவன் நாள் ஓடாது என்று புரிந்தது.
கேடி சீக்கிரம் வாடி என்று மனதோடு சொல்லிக்கொண்டான். ஜம்புவை அவர்கள் ப்ரீ டைம் பத்தி பேச விட்டு பாவையை பற்றின பேச்சை கேட்டு சந்தோஷப்பட்டான்.
முதல் நாள் வருத்தம், இரண்டாம் நாள் சோகம், மூன்றாம் நாள் சோர்வு, நான்காம் நாள் எரிச்சல், ஐந்தாம் நாள் என்னை இப்படி படுத்துறாளே என்று மறுபடியும் கோபத்தில் வந்து நின்றான் கணேஷ்.
திங்கள் காலை, சாவகாசமாக நடந்து வந்து கொண்டிருந்தவளை மாடியில் இருந்து கண்ணை சிமிட்டாமல் பார்த்தான். ஒரு வேளை பிரமையா இருந்தால் போய் விடுவாளே!
மனம் அவளை கண்ட நொடி துள்ளி குதித்தது. வந்துட்டாளா என்ற ஆசுவாசம், ஒரு வழியா வந்தாளே என்ற சந்தோஷம், ஐந்து நாளா நான் நானாய் இருக்க விடாமல் செய்து விட்டாளே என்ற கோபம் என்று ரௌண்ட் கட்டி அடித்தது கணேஷை.
இதை எல்லாத்தையும் மீறி அவளிடம் ஓடி அவளை அணைத்துக் கொள்ள பரபரத்தது அவன் மனசு. கடவுளே! இந்த வேகத்தில் இருந்தால் என் ரகசியத்தை நான் எப்படி கட்டிக் காப்பாத்துவேன்? பயமாக இருந்தது கணேஷுக்கு. இனி யாரும் என்னை பார்த்து சிரிக்கும் நிலைக்கு என்னை கொண்டு வந்து விட்டுடாதே கடவுளே!
அவளை முடிந்த வரை நேராக பார்க்கும் சந்தர்ப்பத்தை தவிர்க்க வேண்டும் என்று அவன் இருக்க, இனி அவனை அடிக்கடி எப்படியாவது பார்க்க வேண்டும் என்று அவள் முடிவு எடுத்து இருந்தாள்.
அன்று மதியத்திற்கு மேல் அவனை பார்க்க வேண்டும் என்று அவன் கன்சல்டேஷன் அறைக்கு வந்து இருந்தாள் பாவை.
அவனை பார்த்து குட் ஆப்டர்நூன் சார் என்றவளின் குரலில் அவன் மீதான உரிமை தூக்கலாக இருந்தது.
அவளின் குரலில் இருந்த வித்தியாசத்தில் அவளை கூர்ந்து பார்த்தபடி தலையை மட்டும் அசைத்தான் கணேஷ்.
அவள் அமைதியாகவே நிற்கவும், “எஸ்?” என்றான் கேள்வியாய். என்ன விஷயமாக வந்தாய் என்பது போல்.
அவனுக்கு தானே ரகசியத்தை கட்டிக் காக்க வேண்டும் என்ற கட்டாயம் பாவைக்கு ஒன்னும் இல்லயே அதனால் சகஜமாக அவனிடம்,
“என் மேல கோபமா? எதுவும் பேச மாட்டேங்கிறீங்க?” கொஞ்சினாள்.
“வாட்? ஓய் ஷுட் ஐ? எதுக்கு வந்தியோ அதை சொல்லு பர்ஸ்ட்.” தோளை குலுக்கியவன் இது என்ன தேவையில்லாத பேச்சு என்பது போல் அவளை பார்த்தான்.
“ரொம்ப நடிக்காதீங்க! எனக்கு தெரியும்! நான் சொல்லாம ஊருக்கு போய்ட்டேன்னு உங்களுக்கு கோபம் தானே?”
“ஹே! திஸ் இஸ் தி லிமிட்! அன்னைக்கு உன்கிட்ட தேவையில்லாம பேசினதாலா கொஞ்சம் பொறுமையா இருக்கேன். அதனால் உன் இஷ்டத்துக்கு நீ என்ன வேணா பேசலாம்னு அர்த்தம் இல்லை. புரியுதா?”
இப்படி முறுக்கிட்டு இருக்கவனை என்ன பண்றது என்று யோசித்தபடி நின்றாள் பாவை.
“ஓ மை காட்! இப்போ என்ன வேணும் உனக்கு? டோன்ட் வேஸ்ட் மை டைம். உன்னோட டைம் பாஸ் பண்றதுக்கு நான் ஆள் இல்லை. இதே மாதிரி பிகேவ் பண்ணே, உன்னை வேலையை விட்டு தூக்கிடுவேன்” என்று குரலை உயர்த்தி பேச ஆரம்பித்தான் கணேஷ்.
ஷ்ஷ்…. கத்தாதீங்க சார் என்று சொல்லி பார்த்தவள் அவன் கேட்கவில்லை என்றதும் வேகமாக அவன் அருகில் போய் அவன் வாயை பொத்தி வலது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டு வேகமாக வெளியே ஓடி விட்டாள் பாவை.
அவளின் குறும்பில் புன்னகை பிறந்தது கணேஷிற்கு. கேடி என்று அவள் முத்தம் கொடுத்த கன்னத்தை தடவினான். ஒரு நொடியில் கிடைத்த கண்ணத்து முத்தம் எவ்வளவு பரவசம் தர முடியுமா? ஆச்சர்யமாக இருந்தது கணேஷுக்கு. அன்று கொடுத்த இதழ் முத்தம் நினைவு தான் இத்தனை நாள் அவள் இல்லாமல் இருக்க அவனுக்கு மனஅமைதி கொடுத்தது. ஆனால் இன்று இந்த கண்ணத்து முத்தம் அவனுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்தது. மலர்ந்த முகத்துடன் வேலையை தொடர்ந்தான் கணேஷ்.
அவள் உணர்வு மிகுதியில் இந்த முத்தத்தை கொடுக்க வில்லை அவனுக்கு. விளையாட்டாக, குறும்பாக அவனை தன் உரிமையாக எண்ணி தான் கொடுத்தாள்.
அதையே அவ்வளவு ரசித்தவன், அவளிடம் இருந்து எப்படி விலகி இருப்பான்? இருக்க விடுவாளா பாவை?
