என்னவன்

This entry is part 8 of 22 in the series என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன்

என்னவன் 9 
‘அணுவுக்குள் மின்னல் வெட்டி..  அங்கமெல்லாம் இடி இடித்து.. மழையாய்ப் பொழிவது போதாதா.. எனக்குள் நீ வந்த போது !’
மூன்று மாதங்கள் கழித்து..
கவிநிலா தன் அறையில் காலையில் எழுந்தவுடன் எப்போதும் போலவே முதலில் ஜன்னலை திறந்து தோட்டத்து மலர்களின் வாசத்தை சூரியகதிர்களோடு சுவாசித்தாள். தினமும் இப்படி எழுந்து சோம்பல் முறித்தால்தான் அவளுக்கு அன்றைய பொழுதே விடியும். இவளின் பராமரிப்பில் செடி கொடிகள் நன்றாக வளர்ந்துவிட்டு இருந்தது. இன்றைய பொழுது நல்ல பொழுதாக அமைய இறைவனை வேண்டி குளிக்க சென்றாள்.
பொன்னம்மாவும் முத்துவும் விடுமுறைக்கு ஊருக்கு சென்றதால், இவள் தான் சமைக்க வேண்டும். அவளுக்கு மட்டுமே என்பதால் ஒரு பிரட் சண்விச் மட்டுமே செய்தாள். ஆனால் லலித் மாடிப்படிகளில் இருந்து இறங்கி “குட் மோர்னிங், என்ன பிரேக்பாஸ்ட்” என்று கேக்க “மோர்னிங், சண்விச்” என்று அவளின் உணவை அவனுக்கு வைத்தாள். சில சமயங்களில் இவ்வாறு அவன் ஆபீஸ்க்கு தாமதமாக சென்றால் காலை உணவு வீட்டிலையே சாப்பிட்டு செல்வான். அல்லது மாலையில் சீக்கிரம் வந்தால் இரவு நிலாவோடு அமர்ந்து உண்பான். இருவரையும் சாப்பிடும்நேரம் மட்டும்தான் ஒன்றாக பார்க்க முடியும் அன்றி மற்ற நேரத்திலெல்லாம் அவர் அவர் வேலைகளில் மூழ்கிவிடுவார்கள். 
இந்த மூன்று மாதங்களில் முக்கிய பிரமுகர்களால் கொடுக்கப்பட்ட திருமண விருந்துகளுக்கும் பெற்றவர்களைச் சந்திக்க சில முறையும் சில நெருங்கிய நண்பர்களின் அழைப்புகளுக்கு மட்டுமே இருவரும் சென்று உள்ளனர். லலித்திற்கு வியாபார நட்பும் அவர்களின் பெற்றோரும் மட்டுமே முக்கியமானது. ஆதலால் மற்றவையை தவிர்த்து இருந்தான். நிலாவுடன் திருமணத்தைத் தனது சுயநலத்திற்குப் பயன்படுத்தி கொண்டாலும் அவளின் நடவடிக்கை, அவள் வீட்டில் ஏற்படுத்திய மாற்றங்கள், அவளின் அழகு என எல்லாம் அவனுள்ளும் மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தது அவனறியாமலயே. 
நிலா வீட்டில் செலவழிக்கும் நேரங்களைவிட கருணை இல்லத்தில் செலவழிக்கும் நேரமே அதிகம். ஒரு மாதம் வீட்டில் வேலைகளில் செலவழிக்க, செய்ய வேறு ஏதுமில்லாததால் கருணை இல்லத்திற்கு அவள் செல்ல ஆரம்பித்தது. முன்பு அப்பா வீட்டில் இருந்தபோதும் சென்று இருக்கிறாள், ஆனால் அப்பாவுக்கு அவள் தினமும் அங்கு செல்வது பிடிக்காததால் மாதம் இரண்டு முறைதான் செல்வாள். இப்போது கணவனின் எதிர்ப்பு இல்லாததால் தினமும் செல்கிறாள். கருணை இல்லத்து குழந்தைகள் நமது பிரச்சனைகளை மறக்கடிக்க வல்லவர்கள், அவர்களோடு பழகினால் அந்த இனிமை நம்மை விடாது.
அன்று மாலை அவன் வீட்டிற்கு வேலை முடிந்து வரும்வரை நிலாவின் கார் இன்னும் வரவில்லை. பலத்த மழை வேறு. தொலைபேசியில் அவளை தொடர்பு கொண்டால் அதுவும் ஆப் ஆகியிருந்தது. ‘இவளுக்கு வந்து இருக்கு’ என்று எண்ணி அவன் மாடிப்படி ஏற எத்தனிக்க, கிட்சன் பக்கம் ஏதோ ஓசை கேக்க, மெல்ல நடந்து யார் என்ன என பார்க்க சென்றான். ஏதோ ஓர் ஆளின் அசைவு உணரப்பட லலித் திருடன் என்று எண்ணி, அவனருகில் கையில் கிடைத்த ஏதோ ஒரு துணியை எடுத்து அவ்வுருவத்தின் முகத்தை மூட ஆயுதமானான். அவ்வுருவம் இருப்பது பாத்ரூம் பக்கம், திருடன் என்றால் அங்கு என்ன செய்வான் என்றெல்லாம் லலித் யோசிக்க மறந்த நிமிடங்களில் அவ்வுருவம் லலித் நிற்கும் சுவர் பக்கம் வர, லலித் துணியால் அவ்வுருவத்தின் முகத்தை மூடினான். 
“ஆஆஆ அம்மா.. ஐயோ யாரது” என்று நிலா குளித்து முடித்து வெறும் துண்டோடு உடலை சுற்றி வர, தன்னை யாரோ  கைகளோடு இறுக்கி அணைத்திருக்க, முகத்திலுள்ள துணி அவளை அனத்த கத்திக்கொண்டிருந்தாள். 
லலித் அவனின் வீர தீரத்தை காட்டிட திருடன் என்று எண்ணி அவளின் முகத்தை பின்னாலிருந்து மூடி, மற்றுமொரு கையால் அவளின் இடுப்பில் கை வைத்துக் கட்டிக்கொண்டான். திருடன் அசையாமல் இருக்கவே அவன் அப்படி அணைத்தது. ஆனால் அவனின் கை வலுமையால் நிலா மார்போடு சொருகிவிட்டுருந்த துண்டின் நுனி அவிழ்ந்து விட்டிருந்தது. அவளின் குரலில் இது நிலா தான் என்று அவன் உணரும் தருணம், அவளுடைய ஈர முடி இவன் முகத்தில் உரச, வெற்று தோளில் நீராடிய தண்ணீர்துளிகள் மீதமிருந்து, இவனை பருக அழைக்க செயலிழந்து நின்றான்.
அவளோ தன்னை அனைத்திருப்பவனிடம் தப்பிக்க மேலும் கீழும் துள்ள, அவனால் அவிழ்க்கப்பட்டிருந்த இரு மலைமேடுகளும் இடுப்பிலுள்ள அவன் கரத்தின்மேல் மோதி மோதி சென்றன. அவன் கையை விலகிக்கினால் துண்டு முழுதுமாய் அவிழ்ந்து கீழே விழுந்துவிடும். இவளின் அசைவில் பின் மேடு வேறு அவன் ஆண்மையை பரிசோதிக்க “நிலா நான்தான்” என்று குரல் எழுப்பினான். 
தன் கணவனின் குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தாள் நிலா. ‘இவர் எப்போ வந்தார்.. இவர் இல்ல நினைச்சு தானே நான் இந்த கோலத்தில வெளியே வந்தேன்,” அவளின் எண்ணத்தில் அவள் அரைகுறை ஆடையோடு வந்ததை பார்த்துதான் லலித் சபலபட்டானென நினைந்தாள்.  
நிலா அசையாமல் நிற்க, முகத்திலுள்ள துணியை அகற்றினான் லலித். முகத்திலுள்ள துணி அகன்றதும் தான் அவளின் மேனி நிலை கண்டாள் பெண். இவ்வளவு நேரம் முகத்திலுள்ள அந்த துணியை மட்டுமே அகற்ற பரபரத்த அவள் கைகளை, இப்போது மானத்தை காக்க வெடுக்கென்று அவணைப்பிலிருந்து விடுவித்து தன் மேனியை மறைத்திருந்த ஒற்றை துண்டை சரிசெய்த்தாள். வெக்கம், பயம் எல்லாம் மீறி கோவமே வந்தது நிலாவிற்கு. 
அப்போதும் அவளின் இடையிலிருந்து கைகளை அகற்றாமல், நிலாவின் கூந்தல் வாசத்தை நுகர்ந்தபடி லலித் மெய் மறந்தே நின்றான். வாசனை திறவியமேதுமில்லாமல் அவளின் இயற்கை மணம் அவனை கிறங்க வைத்தது. இப்படியே அவளை கட்டிக்கொண்டே இருக்க மெல்ல அவள் கழுத்தில் முத்தமிட்டான். 
நிலா மின்சாரம் பாய்ந்ததைபோல் உணர்ந்தாள். தன் முழு பலத்தையும் கொண்டு அவன் கரங்களை இடுப்பிலிருந்து அகற்றியவள், தன் இரு கைகளாளும் கழுத்தின் கீழ் துண்டால் மறைக்கப்படாத மேல் மார்பை மறைத்து, லலித்தை நோக்கி திரும்ப, அவளின் கோலம் கண்டு லலித் மோகத்தோடு மீண்டும் அருகில் செல்ல, நிலா தன் வல கரத்தால் லலித்தின் கன்னத்தில் அறைந்திருந்தாள். 
அவர்களை சுற்றி எல்லாம் ஒரு நொடி அசையாது உறைத்தது போல ஒரு திகைப்பு இருவருக்கும். எதுவுமே எண்ண முடியாமல் வேகமாய் அவனை தாண்டி தனது அறைக்கு ஓடிபோனவளை, கைநாடி பிடித்து இழுத்தான் லலித். அவனின் பிடியில் நிலாவின் கை வளையல் உடைந்து கீறி அவள் கையில் இரத்தம் வழிந்தது. “ஆஆஆ விடுங்க வலிக்குது” என நிலா கத்த.. “ஓ.. நீங்க அடிச்சது மட்டும் எனக்கு இனிச்சதாக்கும்” என்று கேட்டு அவளை அழவைத்தான். 
நிலா அறைந்த வேகமொன்றும் அவனுக்கு வலிக்கவில்லை ஆனா மோகத்தீயை சட்டென அனைத்திருந்தது. அந்த ஆத்திரத்தில் அவளை தவறுதாலாக பிடிக்க இரத்த கலவரமாகி போனது. அவளை அமர வைத்து முதலுதவி பெட்டியை எடுத்துவர செல்லுமுன் நிலாவின் மேல் அழகை ஓரக்கண்ணால் பார்த்து பெருமூச்சு விட்டு சென்றான்.  
அவன் பார்வை உதறலை தர, கீழே கிடந்த அவன் முக மூட பயன்படுத்திய துணியை எடுத்து மேலாடையாய் மூடிக்கொண்டாள் நிலா. முதலுதவி பெட்டியோடு வந்தவன் அவளை சாட்டை செய்யாது இரத்ததை சுத்தம் செய்து, காயத்தை plaster கொண்டு மூடிக்கொண்டே,  
“தேவையா இது உனக்கு.. பெரிய வீரமங்கைனு நினைப்பு.. அடிச்சிட்டு ஓடிபோறது.. இப்போ சின்ன காயத்திற்கு எல்லாம் அழுகுறது” 
“அடிகிற மாதிரி நடந்துகிட்டா.. அப்படிதான்.. உங்கள யாரு அப்படி நடந்துக்க சென்னா?” வெடுக்கென்றே கேட்டாள் நிலா. இருவருக்குமே நடுக்கம் உதறல் இருந்தாலும் சாதரணமாக பேச அழகாய் வழிவகுத்தது ஈகோ.  
“உன்ன யாரு திருடன் மாதிரி திருட்டுதனமா உள்ள நடமாட சொன்னா” லலித். 
“யாரு நானா.. திருடன் மாதிரியா வந்தேன்.. ஒரு பொண்ணு குளிக்கிறாலேனு மேனஸ் இல்ல.. பேச்ச மட்டும் பாருங்க” நிலா.
“ஏய் ரொம்ப பேசாதடி.. உன் கார் முன்னாடி porchலே இல்ல.. நீ வந்ததே எனக்கு தெரியாது. திடீர்ன்னு யாருமில்லாத வீட்டுல சத்தம் கேட்டா யாராயிருத்தலும் திருடன் தான் சொல்லுவாங்க,” 
“என் கார் இன்னைக்கு ரிப்பேர், நான் கேப் ஏறி, முத்து அண்ணே இல்லாததுனாலே வெளியவே இறங்கி கேட் திறந்து மழைலே நல்ல நினைச்சு, என் ரூம்க்கு போயிடு வந்தா ஈராமாகிடும்னு, குளிச்சி வேற வழி இல்லாம இப்படியே வெளியே வந்தா, உங்களுக்கு பொண்ணுக்கும் திருடனுக்குமா வித்தியாசம் தெரியாது” அவன் மேலுள்ள கோவத்தை வார்த்தைகளில் கொட்டினாள். 
“நான் கட்டிபிடிச்சதும் நீ திமிறும்போது தான் தெரிந்தது நீ பொண்ணுன்னு,” இதழில் நக்கல் சிரிப்போடு லலித் கூர, என்ன நடந்தது என்று நினைவுகூர்த்தாள் நிலா. மேலே வாய் பேச முடியாமல் அமைதியானாள்.
அவள் அமைதி கண்டு அவளை நிமிர்த்து பார்த்த லலித்தின் கைகளிலிருந்து தன் கையை உருவி, நாற்காலியை நகர்த்தி மெல்ல நகர்ந்து தன் அறை நோக்கி சென்றாள் நிலா. அவளின் கால் தொடைவரை தெரிய, “நிலா பசிக்குது.. நைட் சாப்பிடலாமா” என்று லலித் கேக்க. 
திரும்பி அவனை பார்த்து முறைத்துவிட்டு கோவமாய் உள்ளே சென்றாள் அவனின் பசி எழுப்பிய உணவு. தன் உணர்ச்சிகளை அடக்கி எழுந்து சென்றான் லலித். 
இருவருக்குமே நாளை பசி அடங்கும் என்று தெரியாமல் அவர் அவர் அறைகளுக்குள் அடைந்து கிடந்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *