என்னவன்
என்னவன் – 8
‘ஏற்றுக்கொள்ளாத உண்மை பொய்யாவதில்லை!
உண்மையை ஏற்றுக்கொள்ளாதவர்களும் மெய்யாவதில்லை!’
முகத்தில் சிவப்பேரி வந்து நின்றவளை பார்த்த லலித் “என்னாச்சு” என்றான் எதுவுமே நடக்காதது போல்.
‘நீ என்னடா விஜய் சேதுபதியா கல்யாணம் நடந்து முத்தம் தந்தது வரை மறந்துபோக’ என்று மனசுக்குள்ளேயே திட்டிய நிலா, வெளியே “ஏன் இப்படி எல்லோர் முன்னாடியும் மானத்தை வாங்குறீங்க.. நல்லவா இருக்கு?”
“ஹாஹா.. அப்போ யாருக்கும் தெரியாமே மானத்தை வாங்கினால் ஓகேவா” கண்களால் அவளை அளவிட்டு லலித் கேக்க,
“பேச்சை மாத்தாதீங்க.. காலைல பக்கத்துலையே வரதேனு பெரிய கற்புக்கரசர் மாதிரி சீன் போடுறது.. நைட் எல்லோர் முன்னாடியும்….” சட்டென பேச்சை நிறுத்தி ‘ஐயோ மைண்ட் வாய்ஸ் நினைச்சி ஸ்பீக்கர் திறந்துட்டேனே இவன்வேற லவுட் ஸ்பீக்கர் திறப்பானே’ என்று முழித்து கொண்டு இருந்தாள்.
“எல்லோர் முன்னாடியும்.. ஹ்ம்ம்.. என்ன சொல்லு” என்றவாறே லலித் நிலாவை நெருங்கி வர, “இவ்வளவு நேரம் பேசுனே.. இப்போ ஏன் மேடம் அமைதியா இருக்கீங்க”. என்றவாறே வெகு அருகில் வந்தான்.
“லலித் ப்ளீஸ் விளையாடாதீங்க. இப்படி எல்லோர் முன்னாடியும் நடந்துகிட்ட என்ன நினைப்பாங்க” அவள் கண்கள் கோவத்திலிருந்து கெஞ்சலுக்கு மாறியது.
லலித் இன்னும் கண்இமைக்காமல் நெருங்கி வர, மூடிய கதவின் மேல் சாய்ந்துவிட்டாள். அவனை மீறி இடப்பக்கம் செல்ல எத்தனிக்க, அவன் வலப்பக்க கையை கதவில் அழுத்தினான். இவள் மாற்று வழி செல்ல முற்பட, லலித் இரண்டு கையையும் நடுவே அவளையும் வைக்க அவளின் வாசம் நாசி வரை சென்று வந்தது அவனுக்கு.
“லலித் என்ன இது”
“நீதானே எல்லோர் முன்னாடியும் தரக்கூடாதுனு வந்து தாண்டவம் ஆடுனே”
“நான் அப்படி மீண் பண்ணலே. நீங்க இப்படி எல்லாம் நடந்துக்குவீங்கனும் நினைக்கலேன்னு தான்..”
“அப்போ எப்படி நடந்துக்குவேன்னு நினைச்சீங்க மேடம்”
“ஷ்ஹ்ஹ்… இப்படி விதண்டாவாதம் பண்ண நாமே இப்போ கிளம்ப முடியாது”
“நீ முதலே நான் எப்படி நடந்துக்குவேன்னு நினைச்ச.. அதை சொல்லு”
“நீங்க என்ன கிட்ட வரவேணாம்னு சொன்னிங்க சோ நீங்களும் இப்படி எல்லாம்.. ப்ளீஸ் நகருங்க மூச்சி முட்டுது” நிலா கை வைத்து அவனை நகற்ற பார்க்க, அவன் அசைந்தானில்லை”
“நான் இப்பவும் அதேதான் சொல்லுறேன். நீ என் பக்கம் கூட வரக்கூடாது. இங்க மட்டுமில்ல அங்கே போனதுக்கு அப்புறமும். வீட்டுல கீழ் மாடிலே ஒரு ரூம் இருக்கு அதுதான் உன் ரூம். என் ரூம்க்கு வரது, என் கூட பொண்டாட்டியா வாழுறதுனு கனவு காணாதே” லலித் குரல் எச்சரித்தது.
“இங்கே யாரும் அதுக்காக வழிச்சிகிடைக்கலே” உதட்டை கடித்தாள்.
“உனக்கு வாய் ஜாஸ்திடி. நானும் ஒன்னும் உனக்காகெல்லாம் இப்படி செய்யல மேடம். இந்த கல்யாணமும் சரி அங்கே முத்தமும் சரி நம்ம அப்பா அம்மாகாக தான். உன் அப்பா health, என் அப்பா wealth ரெண்டுக்கும் நாமே சந்தோசமா இருக்கனும்.. இருக்குற மாதிரி நடிக்கணும்”
அவள் எதோ சொல்ல வாய் எடுக்க, அவன் ஆள்கட்டி விரலை அவளின் இதழின் மேல் வைத்து “நடிச்சுத்தான் ஆகணும். என் வியாபாரம் ப்ரோபெர்டிஸ் எல்லா என் கைல வர வரைக்கும்”.
லலித்தின் கையை தட்டி விட்டு “என்னாலே முடியாது. தீணா வந்தவுடன் டிவோர்ஸ் வேணும் எனக்கு” என்று கொஞ்சம் திக்கி திணறி வர வைத்த தைரியதோடு நிலா பேச, லலித் முழுவதாய் அவளிடமிருந்து அகன்று “அதற்கு அவன் உயிரோடே இருக்கணுமே” என்றான். ஒரு வகை இழிவு சிரிப்பை சிந்தி விட்டு லலித் திரும்பி நடக்க, வெம்பி வெம்பி அழும்குரல் கேட்டு திரும்பினான். நிலா தரையில் அமர்ந்து வாய் பொத்தி பொல பொலவென கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.
லலித்க்கு நிலா கொஞ்சமும் அசராமல் பதிலுக்கு பதில் பேசுவது பிடிக்கவில்லை. அவளை உசுப்பேற்றதான் கிட்டே நெருங்கி அவளிடம் இவ்வளவு நேரம் பேசியது. அப்போதும் தைரியமாய் பதில் சொன்னவளைக் கலங்கடிக்கவே தீணா இறந்ததாக இவன் சொன்னது, ஆனால் இப்போது அவளின் நிலைக்கண்டு இவனே கலங்கிபோனான். உடனே அவளருகே அமர்ந்து அவளின் முகத்தை தன் கைகளில் ஏந்த அவளோ, கண்களை மூடி வாய்விட்டு கதறி அழுந்தாள். அதை காண முடியாமல் அவளின் முகத்தை தன் நெஞ்சோடு அணைத்து,
“ஸுஷு அழாதே டி, தீணா போன பஸ் அசிஸிடெண்ட் ஆகிடுசு. அவனை பத்தி தகவல் எதுவும் கிடைக்கல பட் இறந்து போனவங்க LIST லே அவன் பெயர் இல்லே. சோ எங்கயோ உயிரோடே தான் இருக்கான். அழுறதே நிப்பாட்டு. சும்மா உன்ன கடுப்பேத்ததான் அப்படி சொன்னேன். நான் அவனே தேட ஆள் கூட அனுப்பிடடேன்.. நம்பு..” என்று அவளின் தலையை வருடிவிட, அவளின் தேகத்தில் உதறல் சிறிதாக குறைய கண்டு “அவன் கண்டிப்பா ஒருநாள் உன்னே தேடி வருவான், அவன் வந்தோனே நாமே என்ன செய்றதுன்னு அப்புறம் யோசிப்போம், போய் முகம் கழுவிட்டுவா.. கிளம்புவோம்”. அவனின் வார்த்தைகளில் மூழ்கி இருந்தவள், அவன் கிளம்ப சொல்ல சுயம் பெற்று அவனின் அணைப்பிலிருந்து விலகினாள்.
லலித் இல்லம்.
முன் கேட்டில் காவலாளி, நல்ல அழகான தோட்டமுள்ள முன் பகுதி ஆனால் சில செடிவகைகளே இருந்தது. அங்குள்ள விளக்கு ஒளியில் அழகு இன்னும் அதிகரித்து தெரிந்தது. விலாசமான வரவேற்பு அறை, தன் பெட்டி காவலாளியால் எடுத்துவரபட, “இங்கயே வைங்க முத்து அண்ணா,” என்ற லலித் அவர் செல்லும் வரை காத்திருந்து, “நீ அந்த ரூம் யூஸ் பண்ணிக்கோ”. கீழ் மாடியில் வரவேற்புக்கும் கிட்சேனுக்கும் நடுவே இருந்த ஒரு அறையை காட்டினான். “என் ரூம் மேல. வர ட்ரை பண்ணாதே. ஏதாவது வேணும்னா முத்து அண்ணே வைப் நாளைக்கு சமைக்க வருவாங்க. அவங்கள கேளு”.
மாடி படி ஏற எத்தனித்தவன், “நீ ஒன்னும் கவலை படாதே.. என் ஆளுங்க தீணாவை தேட ஆரம்பிச்சி இருக்காங்க, ஒர்ரி பண்ணாதே.. மறுபடியும் சொல்லுறேன் அம்மா அப்பாகிட்டே நாம சந்தோசமா இருக்குறதா காமிச்சிக்கணும். சமையலம்மாக்கிட்டே கூட கவனமா நடந்துக்கணும். நைட் அவங்க கெஸ்ட் ஹவுஸ் லே இருப்பாங்க சோ பிரச்சனை இல்லே. நீ ஒகே தானே?”
ஆம் என தலையாட்டினாள்.
“ஆர் யூ சூவார்”
“நான் சமாளிச்சுக்குவேன்.”
“குட். என் போன் நம்பர் இருக்குதானே. எங்கே போனாலும் ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிட்டு போ. மத்தபடி நான் உன்னே டிஸ்டர்ப் பண்ணே மாட்டேன். நீயும் என்னை ப்ளீஸ் டிஸ்டர்ப் பண்ணாதே.”
மீண்டும் தலையாட்டினாள்.
“ஓகே. குட் நைட் “
“குட் நைட்”
அவன் மாடியேறி சென்று மறையும் வரை அங்கேயே நின்றவள், மெதுவாய் அவளுக்கு அளிக்கப்பட்ட அறைக்குச் சென்றாள். பெரிய அறைதான். அவளுக்குப் பிடித்த நீல வண்ணம் அறை முழுவதும். இரண்டு பேர் படுக்கும் அளவு ஒரு கட்டில். அவளின் அப்பா வீட்டின் அறை போலவே எல்லாம் இருந்தது ஒரு வாசிப்பு மேஜையை தவிர. கை கால் அலம்பி உறங்க நினைத்தவள், பாத்ரூம் தேட அது வெளியே கிட்சேனின் அருகே இருந்தது. அவள் வீட்டில் அட்டாச் பாத்ரூம். தன்னிலை நினைத்து ஒன்றுமே செய்ய முடியாத அவள், கட்டிலில் சாய. தீணாவின் எண்ணங்களும் லலித்துடன் அவளின் இன்றைய பயணங்களும் அவளை தூங்கவிடாமல் செய்தது. தீனாவிற்கு எதுவும் ஆகி விட கூடாது என்று மனத்தில் கடவுளை வேண்டிக்கொண்டாள்.
இரவில் எத்தனை மணிக்கு கண் அயர்த்தாலோ, காலை சூரியன் ஜன்னல் வழி அவளை எழுப்பிவிட்டது. தலை லேசாய் கனத்து இருந்தது. புது இடம் அவளுக்கு பழக நாள் வேண்டும். மெல்ல எழுந்து ஜன்னலை திறக்க அங்கே தோட்டம் அழகாய் காட்சி அளித்தது. போர்ச்ல லலித்தின் கார் இல்லை. ‘இவ்ளோ சீக்கிரமா கிளம்பிடாரா’ என கடிகாரத்தை பார்க்க அது மணி 10 ஆக சில நிமிடக்கலே இருந்தது. ‘போச்சு போச்சு’ வெளியே சென்று பல் துலக்கி குளித்து வந்தாள். பூஜை அறை தேடும் போது அருகில் ஒரு வயதானவர் வர, “நான் பொன்னம்மா தாயி, சமையல் வேலைக்காரி”.
“ஓ அவர் சொன்னாரு மா.. முத்து அண்ணே பொண்டாட்டி. வணக்கம் மா நான் கவிநிலா”
“அழகா இருக்க தாயி பெயர்க்குத் தகுந்தாப்புல. என்ன மா தேடுற, உன் புருஷன் வேளைக்குக் கிளம்பிடானே”
“அது தெரியும்மா.. இங்கே பூஜை அறை எங்கே?”
“அவர் எங்கே பூஜை பண்ணுவாரு. வெளியே துளசி மாடத்துலே ஒரு விநாயகர் இருப்பாரு.. நான் அங்கே தான் கும்பிடுவேன்”
“ஓ”
“சரி தாயி நீ போய் கும்பிட்டு வா, நான் தோசை சுட்டு தரேன்.”
“அவர் சாப்பிடாறா மா?”
“அவர் எங்கே இங்கே சாப்பிடறது.. ரொம்ப குறைவு மா.. நீ சீக்கிரம் வாம்மா நான் சமைச்சு தரேன்”
‘இந்த வீட்டில் நிறைய மாத்த வேண்டி இருக்கே’ என எண்ணிக்கொண்டே துளசி மாடத்தைச் சுற்றி வந்தாள்.
மாலை லலித் வீட்டுக்கு வரும் போது நிலாவும் பொன்னம்மாவும் தோட்டத்தில் துப்புரவு செய்து கொண்டு இருந்தனர். ‘இவ சும்மா பொழுதை கழிக்கும் சோம்பேறி இல்லை’ என மனதில் பாராட்டியவன் வேகமாய் அவன் அறை நோக்கி சென்றான்.
“நிலா மா தம்பி சீக்கிரம் வந்துட்டாரு, நீங்க போங்க மா மீதி நான் பாத்துக்குறேன்”
“இல்ல மா நான் முடிச்சிட்டு போறேன் இருங்க” அவனிடமிருந்து தப்பசாலே போதுமென நினைத்தாள்.
“புதுசா கல்யாணம் பண்ணத்தாலே தான் ஐயா சீக்கிரம் வந்து இருக்காரு நீங்க போங்க மா”
“சரி ஆண்ட்டி.. இன்னும் கொஞ்சம் முடிச்சிட்டு போறேன்” என நேரத்தை தள்ளி போட்டவள்.. எல்லாம் முடித்து குளித்துவிட்டு லலித் அறை முன் நின்றாள்.
அறையை மெதுவாய் தட்ட”யாரு” என ஓசை வந்தது. அவளுக்கு குரல் மீண்டும் கொடுக்க பயம் ஆதலால் கதவை மட்டுமே தட்டினாள். 2 நொடியில் கதவு வேகமாய் திறக்க பட.. “நான் தான் நீ வர கூடாது” என்று ஆரம்பித்தவன் வாயை கைகளால் பொத்தி..
“ஸுயூ சமையலம்மா இன்னும் போகமே நீங்களும் நானும் ஒண்ணா சாப்பிடுவோம்னு காத்திருங்கங்கே.. நீங்க இப்படி சத்தம் போட்டா அத்தையும் மாமாவும் நாளைக்கு இங்கேயே வந்துருவாங்க. அந்த அம்மா வேற நான் ஏன் உங்க ரூம் போலன்னு ஆயிரம் கேள்வி கேக்குது. ப்ளீஸ் சாப்பிட மட்டும் வாங்க.. எல்லாம் ஒகே ஆகிடும்” விழிகளை அகல விரிந்து பக்கத்தில் நின்று அவள் கூறிய விதம் அவனை மெல்ல சுண்டி இழுத்தது.
பதிலேதும் கூறாமல் லலித் தன்னை பார்த்தபடியே நிற்க.. “சாரி” என்று கைகளை அகற்றி நகர்ந்தாள்.
“சரி போ வரேன்” என்று விலக முடியாமல் சொல்லி அனுப்பி வைத்தான் லலித்.
சாப்பிடும்போது நிலா மெல்ல “நான் இங்க ஒரு பூஜை அறை வைக்கட்டுமா?”
அவன் சாப்பிடுவதை நிறுத்தி அவளை பார்க்க,
“அங்கே படி அருகே சின்ன இடமிருக்கே அங்கே சில சாமி போட்டோ மட்டுமே வைச்சி”
“சரி உன் இஷ்டம் போல செய், இன்னும் தோட்டம், உன் ரூம்லே ஏதாவது செய்யறதா இருந்த சொல்லு நான் வாங்கி தரேன்”
“இல்லே அப்பா என் கார் கொண்டு வந்து விட சொல்லி டிரைவர் வந்து தந்துடு போய் இருக்காரு.. நானே பார்த்துக்குறேன்”
“குட்”
சாப்பிட்டு முடித்து “பொன்னம்மா எப்படி என் பொண்டாட்டி” என லலித் அவரை சீண்ட “நல்ல தங்கமான பொண்ணு ஐயா” என்றார் அவர்.
அவரின் முன்பே நிலவின் அருகே வந்து அவள் நெற்றியில் முத்தம் வைத்து மேலே ஏறி சென்றான் லலித்.
வெக்கம் பிச்சி திங்க நின்ற நிலாவிடம் “போய்ட்டுவரேன் தாயி நீ சீக்கிரம் மேல போ” என வெக்கத்தோடு கிளம்பி சென்றாள் பொன்னம்மா.
நிலா தன் நிலையை நினைத்து தலையில் அடித்து கொண்டாள்.
