மெய்நிகர் அழகியே
அத்தியாயம் 19
“பொண்ணை மணமேடைக்கு அழைச்சுண்டு வாங்கோ..” என்று ஐயர் கூற, வானக தாரகையாக தனது கொடையிடை அசைய, முகம் கொள்ளா வெட்கத்தில் தாமரை முகம் கவிழ்ந்திருக்க, கண்ணில் மிண்ணும் கனவோடு நடந்து வந்தாள் லயா. அழகில் ஜொலிக்கும் தேவதையை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சக்திவேல். மணப்பெண் தோழியாக லயாவோடு நடந்து கொண்டிருந்த லக்ஷாவின் முகத்தில் கலக்கம் அப்பட்டமாக தெரிந்தது. லக்ஷாவின் அருகே நடந்து வந்த பெண்மணி ஒருவர்,
“அக்காவுக்கும் கல்யாணம் நடக்கப் போகுது.. அடுத்து உனக்கும் நிச்சயமாக போகுது.. இப்பத்தான் மீனாட்சிக்கு நிம்மதியா இருக்கும்.. இந்த காலத்துல பொண்ணுங்கள படிக்க வைச்சு, அவங்கள ஒருத்தர் கையில் பிடிச்சு கொடுக்குறதுக்குள்ள வயித்துல நெருப்பை கட்டிட்டு இருக்க வேண்டியாயிருக்கு..” என்று கூற,
“உண்மை தான்.. இப்ப இருக்குற பொண்ணுங்க.. வீட்டுல இருக்கிற மாதிரியே வெளியேயும் இருப்பாங்கன்னு சொல்ல முடியுமா? நல்லா பொண்ணா அமையுறது எவ்வளவு கஷ்டம்.. அந்த விஷயத்துல நம்ம மீனாட்சி, அவப் பொண்ணுங்கள நெருப்பால வளர்த்துருக்கா..” என்று. மற்றொருவர் கூற, அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே நடந்த லக்ஷா, லயாவை மணமேடையில் அமர்த்தி விட்டு நிமிர்ந்து பார்க்க, அங்கே ராஜ் தோரணையுடன் மிடுக்காக நடந்து வந்து கொண்டிருந்தான் பிரபஞ்சன்.
‘அய்யோ இவரா? இவருக்கு நான் பத்திரிகை வைக்கலையே?!’ என்றவள் நினைக்க,
“நாங்க தான் அவருக்கு பத்திரிகை வைச்சோம்.. என்ன தான் இருந்தாலும்.. அவர் உன்னோட புருஷன்ல.. அதான்..” என்று லயா கூற, அவளை கண்கள் கலங்க பார்த்தாள் லக்ஷா.
“கெட்டி மேளம்.. கெட்டி மேளம்..” என்று கூறி, தன் கையால் மங்களநாணை ஐயர் கொடுக்க, அதனை முகம் கொள்ளா பூரிப்புடன் வாங்கிய சக்திவேல், அதனை லயாவின் கழுத்தில் கட்ட, அனைவரும் அட்சதை தூவி வாழ்த்தினர். திருமணம் முடிந்த சிறிது நேரத்தில், மணமக்களுக்கு வாழ்துக் கூறி, அனைவரும் பரிசுகளை வழங்க, கம்பீரமாக மணமேடைக்கு வந்த பிரபஞ்சன், சக்திவேலின் கையைப் பிடித்து குலுக்கி, வாழ்த்துக்கள் கூறிவிட்டு, லயாவின் கையில் பரிசுப் பொருளை கொடுக்க, புகைப்படக்கலைஞரோ, அவனை சக்திவேலுடன் நிற்க சொல்லி கேட்க, லயாவின் அருகே நின்ற லக்ஷாவோ விலகிச் செல்ல முயன்றாள். லக்ஷாவை நகர விடாது தடுத்த லயா, அவளை தங்கள் இருவருக்கும் இடையே நிறுத்த, சக்திவேலும் பிரபஞ்சனை தங்கள் இருவருக்கும் இடையே நிறுத்தினான். பிரபஞ்சனும் லக்ஷாவும் ஒருவரையொருவர் ஒட்டி உரசியபடி நிற்க, அவர்கள் அருகில் புன்னகையோடு லயாவும் சக்திவேலும் நிற்கும்படியாக, அழகாக விழுந்தது புகைப்படம். இதனை கீழே இருந்து பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சியோ, வேகமாக நிச்சயதார்த்தம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யத் தொடங்கினார். மணமக்கள் ஓய்வெடுக்கும் அறைக்குள் சென்றிருக்க, பிரபஞ்சனை தேடி பந்தி நடக்கும் இடத்திற்கு வந்தாள் லக்ஷா.
“சாப்பிட்டிங்கன்னா.. சீக்கிரம் கிளம்புங்க..” என்று பல்லைக் கடித்துக் கொண்டு லக்ஷா கூற, சாப்பிட்டுக் கொண்டிருந்தவன், சுற்றும் முற்றும் பார்க்க, அங்கிருந்த அனைவரும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர். அவனது பாடிகார்ட்ஸோ யாரும் அவனை நெருங்கவிடாது அளவிற்கு கேடயமாக நின்றிருக்க, தனது உயரம் தெரியாது, எடுத்தெறிந்து பேசும் லக்ஷாவை மிகவும் பிடித்தது பிரபஞ்சனுக்கு. பேசும் அவளது இதழ்களை சிறைபிடிக்க வேண்டும் என்ற ஆவல் எழ, அதனை தன் இதழ்களை கடித்து அடக்கிக் கொண்டவன்,
“சாரி மேடம்.. யார் நீங்க?” என்று கேட்க, தன் கண்களை அகலமாக விரித்து பார்த்தவளின் வாயில் லட்டை வைத்து திணித்தவன்,
“நான் என்னோட ப்ரெண்ட்ஸ் மேரேஜுக்கு வந்துருக்கேன்.. இப்படி சாப்பிட்ட கையோட, சொல்லாம போயிட்டா.. அவங்க ரொம்ப வரத்தப்படுவாங்க.. அதுவுமில்லாம இன்னைக்கு அவங்க தங்கச்சியோட என்கேஜ்மெண்ட் வேற.. கண்டிப்பா அதையும் பார்த்துட்டு போகணும்னு சொல்லிருக்காங்களே?! சோ.. நீங்க போய் உங்க வேலையைப் பாருங்க மேடம்..” என்றவன் சாப்பிடுவதில் கவனமாக இருக்க, இங்கே லக்ஷாவை தேடி வந்த மீனாட்சியோ அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியானவர், லக்ஷாவின் அருகே வேகமாக வந்து, அவளை அழைத்துக் கொண்டு மணமகள் அறைக்கு சென்றார்.
“சீக்கிரம் இந்த சேலையை மாத்திட்டு ரெடியாகு.. மாப்பிளை வீட்டாருக்கு வந்துட்டாங்க..” என்று புடவை மற்றும் நகைகளை எடுத்து அவளிடம் நீட்டியவரிடம் இருந்து அவைகளை அழுதுக் கொண்டே வாங்கிக் கொண்டாள் லக்ஷா.
“சும்மா அழுதுட்டு இருக்காத.. மேக்கப்பெல்லாம் கலைஞ்சுடும்.. சீக்கிரம் ரெடியாகு..” என்று கூறிவிட்டு சென்றவரைத் தொடர்ந்து, உள்ளே வந்த அழகுக்கலை நிபுணர், லக்ஷாவை அலங்கரிக்கத் தொடங்க, அவளது பின்னால் வந்து நின்றிருந்தாள் லயா.
“இப்படி நீ அழுகுறதுக்கு பதிலா அம்மாக்கிட்ட பேசு லக்சு.. உனக்கு பிரபஞ்சனை பிடிக்கும் தானே? அப்புறம் எதுக்குடி இப்படி நடந்துக்குற?”
“அது உனக்கு சொன்னாலும் புரியாது லயா..”
“முதல்ல என்னன்னு சொல்லு.. புரியுமா? புரியாதான்னு நான் சொல்றேன்..”
“அச்சோ.. லயா.. நீயும் ஏன் என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்குற? அவர் நீன்னு நினைச்சு தான்.. எங்கூட.. எங்கூட..”
“சரி.. அவருக்கு தான் உண்மை தெரியாது.. ஆனா உனக்கு தெரியும் தானே?! அப்போ நீ எதுக்குடி சம்மதிச்ச? அவரைப் பார்த்தா.. உன்னைய கட்டாயப்படுத்துற ஆள் மாதிரி தெரியல..”
“ஐ லவ் ஹிம் லக்சு.. என்னால அவரை லவ் பண்றதை ஸ்டாப் பண்ண முடியல.. எவ்ரி திங் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார்.. என்னால அவரை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாமத் தான்.. நான்.. நான்..”
“ஓகே.. ஓகே.. கூல்.. கூல்.. அதே லவ் இப்பவும் இருக்கா?”
“ம்ம்ம்ம்ம்..”
“அப்போ அதை அவர்கிட்ட சொல்லி வேண்டியது தானே?!”
“இப்ப வரைக்கும் அவர் நீ ஏன் என்னைய ஏமாத்துனன்னு தான் கேட்குறாரு.. ஒரு தடவை கூட நான் உன்னைய விரும்புறேன்னு சொல்லவேயில்லயே லயா?!”
“நீ சொன்னியா?”
“ஹுகும்..”
“அப்போ அவர் மட்டும் எப்படி சொல்வாரு? ஆனா எனக்கென்னமோ அவர் என்னைய இல்ல.. உன்னையத் தான் லவ் பண்றாருன்னு தோணுது..”
“…….”
“என்னப் பார்க்குற? நான் வேணா அவரோட ஃபர்ஸ்ட் க்ரஸா இருக்கலாம்.. ஆனா நீ அவரோட ஃபர்ட் அண்ட் லாஸ்ட் லவ்..”
“இல்ல.. இன்னும் கொஞ்ச நாள்ல அவருக்கு இலியானாங்குற பொண்ணு கூட கல்யாணமாகப் போகுது..”
“ஓ.. ரியலி? அப்போ நீயும் அம்மா சொல்ற பையனுக்கு கழுத்து தீட்டப் போறயில்ல?”
“இப்ப என்னைய என்ன தான் பண்ண சொல்?”
“அதை உன்னோட மனசாட்சிக்கிட்ட நீயே கேளு..” என்ற லயா, அங்கிருந்து செல்ல, வாசலில் நின்றிருந்த மீனாட்சியைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனாள். லயாவின் கையைப் பிடித்து தனியே அழைத்துச் சென்றவர்,
“எதுக்கு நீ குட்டைய கிளப்புற? நான் அவளை எவ்வளவு கண்வீன்ஸ் பண்ணி வைச்சுருக்கேன்னு தெரியுமா? வந்துருக்குற சொந்தத்காரங்க முன்னாடி என் மூச்சுத் கரியப்பூசு சொல்லிக் கொடுக்குறியா? இதை உன்கிட்ட இருந்து நான் எதிர்பார்க்கல லயா..” என்று படபடவென பொரிய,
“எதுக்கும்மா லக்ஷா மேல உங்களுக்கு இவ்வளவு குரோதம்? அவளுக்கு இந்த கல்யாணம் பிடிக்கலைன்னு தெரிஞ்சும் எதுக்கு அவளை ஃபோர்ஸ் பண்றீங்க?” என்று கத்தினாள் லயா. அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்த மீனாட்சி,
“என் குழந்தைங்க நல்லாருக்கணும்னு கோவில் கோவிலா போய் விளக்குப் போட்டுட்டு இருக்குற என்னைப் பார்த்து எ ன்ன வார்த்தை சொல்லிட்ட? அப்படி என்னடி பண்ணிட்டேன் நான்? ஒரு நடிகனுக்கு எப்படிடி என் பொண்ணை கொடுப்பேன்? நாளைக்கே என் பொண்ணு வேணாம்னு.. அவன் தூக்கி எறியமாட்டான்னு என்ன நிச்சயம்? என் பொண்ணு கோஹினூர் வைரம் டி.. மாசற்ற தங்கம்.. அவ வேணாம்னு சொன்ன அடுத்த நிமிடம் அவளை பூ மாதிரி கசக்கி தூக்கி எறிஞ்சுட்டானே?! அவன் எப்படி டி லைஃப் லாங்கா.. அவக்கூட வருவான்?” என்ற மீனாட்சியை முறைத்துப் பார்த்த லயா,
“அப்போ நீங்க பார்த்துருக்கீங்களே.. இந்த மாப்ளை மட்டும் நம்ம லக்ஷாவை நல்லாப் பார்த்துப்பான்னு என்ன கேரண்டி? நீங்க என்ன தான் கோடி கோடியா சீர் கொட்டி கொடுத்தாலும், நம்ம லக்ஷாவை செகண்ட் ஹாண்டா தானே பார்ப்பாங்க.. நாளைக்கு ஒரு சொல்லு அவளை தப்பா சொல்லிட்டான்னா.. நம்ம லக்ஷா தாங்குவாளா?” என்று கேட்க,
“எனக்கு அதெல்லாம் தெரியாது.. என் பொண்ணு.. என் பொண்ணாவே என்கிட்ட திரும்பி வந்துட்டா.. இனி அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்குறது.. என் பொறுப்பு.. தினம் தினம் நடிக்குறவனுக்கு என் பொண்ணை நான் கட்டிக் கொடுக்கமாட்டேன்..” என்ற மீனாட்சி, லயாவின் கன்னத்தில் கை வைத்து,
“என்னை மன்னிச்சுடுடா.. உன்னை அடிச்சுட்டேன்ல.. உங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா.. என்னால தாங்க முடியாது கண்ணா.. லக்ஷா வாழ்க்கை நல்லாருக்கும்.. நான் நல்லபடியா அமைச்சுத் தருவேன்.. நீ வேற எதையும் போட்டு மனசை குழப்பிக்கிட்டு உன்னை வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்துக்காத.. போ.. மாப்ளை தனியா இருப்பாரு.. கூட சேர்ந்து நில்லு.. நான் லக்ஷாவை மேடைக்கு கூட்டிட்டு வர்றேன்..” என்றவர் பிடிவாதமாக லயாவை அங்கிருந்து அனுப்பிவிட்டு, லக்ஷாவை அழைத்துக் கொண்டு, மணமேடைக்கு வந்தார். அங்கே முதல் வரிசையில் அமர்ந்திருந்த பிரபஞ்சன், நடப்பதனைத்தையும் வேடிக்கை பார்த்தப்படி அமர்ந்திருந்தான்.
நிச்சய தாம்பூலம் மாற்றிக் கொண்டவர்கள், அதனை லக்ஷாவின் கையில் கொடுத்து, நிச்சயப்புடவையை அணிந்து கொண்டு வரச்சொல்லி, அவளும் குனிந்த தலை நிமிராது எழுந்து சென்றாள். அவர்கள் அளித்த புடவையை அணிந்து கொண்டு மேடைக்கு வந்து லக்ஷா, நிமிர்ந்து அனைவருக்கும் வணக்கம் சொல்ல, அவள் கண்ணில் பட்டான் பிரபஞ்சன். அவளையே கேள்வியாகுப் பார்த்த பிரபஞ்சனிடம் இருந்து, தன் பார்வையை விலக்கிக் கொள்ள முயன்றவளின் கையைப் பிடித்து இழுத்த மீனாட்சி, அவள் கையில் நிச்சயதார்த்த மோதிரத்தை கொடுக்க, அதனை வாங்கியவள், தன் எதிரே இருந்த மாப்ளைக்கு அணிவிக்க செல்லும் போது, அப்படியே மயங்கி கீழே விழப் போக, மணமேடையை தன் உயரமான கால்காளால் இரண்டே எட்டில் அடைந்த பிரபஞ்சன், அவளை தன் மடியில் ஏந்திக் கொண்டான். மங்கையவளுக்கு வந்த மயக்கம் எதனாலோ?
